Pages - Menu

Monday 7 December 2015

இயற்கை மருத்துவம், மூலிகைத் தாலாட்டு

இயற்கை மருத்துவம்
மூலிகைத் தாலாட்டு
இராசரெத்தினம், இயற்கை மருத்துவச் சங்கம், 
ஆடுதுறை..

சளி தொந்தரவு அடிக்கடி வருகிறதா? கண்ணே
துளசி சாறு, தூதுவலைச் சாறு, தேன், சுக்குத்தூள்
கலந்து காலை, மதியம், இரவு 5 அல்லது 10 மிலி சாப்பிட
மூச்சி இரைப்பு, சளி, தூக்கமின்மை சரியாகும் - கண்ணே

கழுத்து சுளுக்கிக் கொண்டதா? - கண்ணே
தலையை திருப்ப முடியவில்லையா?
முருங்கைக் கீரை சாற்றை கழுத்தில் தடவவும்
படியை கழுத்தில் வைத்து படுக்க குணமாகும் ‡ கண்ணே

சிறுநீருடன் விந்து அணு வெளியாகிறதா? - கண்ணே
ஜாதிக்காய்பொடி, பாதாம் பருப்பு பொடி, சீரகப் பொடி
சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து
குடிக்க விந்தைப் பெருக்கும் சிறுநீரில் வெளிவராது - கண்ணே

சாப்பிட்ட உணவு செரிமானமாகவில்லையா? கண்ணே
ஜாதிக்காய் பொடி, சுக்குப்பொடி, சீரகப் பொடி சேர்த்து
கொதிக்க வைத்து உணவுக்குமுன் குடிக்க
செரிமானம், தூக்கமின்மை, வலி, வாயு தொல்லை தீரும் - கண்ணே

குழந்தைக்கு வயிற்றுப் போக்கு வந்துவிட்டதா? - கண்ணே
இருசிட்டிகை மாதுளம்பூ பொடி, ஒரு சிட்டிகை மிளகாய்ப் பொடி
ஒரு ஸ்பூன் பசு நெய், வெல்லம் கலந்து
நெல்லிக்காய் அளவு கொடுக்க குணமாகும் - கண்ணே

வயிற்றுப்புண் ஆறவேண்டுமா? - கண்ணே
அகத்திக்கீரை, முருங்கைக்கீரை சேர்க்கலாம்
பூண்டு, வெங்காயம், அதிமதுரத்தூள் 10 கிராம் சீரகம்
கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க புண் ஆறும் - கண்ணே
(அகத்தி, முருங்கை இரவில் சாப்பிடக்கூடாது)

கண்ணில் நீர்வடிகிறதா? எரிச்சலா? கண்ணே
சோற்றுக் கற்றாழை 50 கிராம், புளித்த தயிர் 50 கிராம்
சேர்த்து சாப்பிட கண்ணில் நீர் வருவது சரியாகும்
பப்பாளிக்காய் கூட்டு சாப்பிடுவது நல்லது - கண்ணே

வாயுத் தொல்லை அதிகமாக இருக்கிறதா? கண்ணே
பூண்டு + ஓமம் நீரில் கொதிக்க வைத்து
குடிக்கலாம் ஐந்து நாளில் குணமாகும்
பூண்டு, ஓமம், கருப்பட்டி கலந்து சாப்பிடலாம் - கண்ணே

பூச்சிக்கடி, காணாங்கடியா, சிறுவண்டுகடியா? - கண்ணே
ஏழு மிளகு, இரு வெற்றிலை மென்று தின்றால் போதுமே
மிளகு பொடியும், சர்க்கரையும் கலந்து சாப்பிடலாம்
பத்து மிளகு சேர்ந்தால் பகையாளி வீட்டிலும் சாப்பிடலாம் - கண்ணே

இடுப்பு வலி, மூட்டு வலி தாங்க முடியவில்லையா? - கண்ணே
சுரைக்காய் சேர்த்துக் கொள் உப்பைக் குறைக்கும்
மூட்டு வலி, முடக்கு வாதம் வராது தினம் ஒரு கீரை சாப்பிடு
பிரண்டை, மிளகு, சீரகம், புளி சேர்த்து துவையல் சாப்பிடு - கண்ணே

அடிக்கடி பய உணர்வு, பிரசவ பயமா? கண்ணே
ஐந்து எருக்கன்பூ, ஐந்து மிளகு, கொஞ்சம் சீரகம்
அரைத்து பட்டாணி அளவு எடுத்து தேன் கலந்து உண்ண
பயம் போய்விடும் தைரியம் வரும் - கண்ணே
(எருக்கன்பூவின் நடுவில் நட்சத்திரம் போல் உள்ள பகுதியை நீக்க வேண்டும்)
ஓடும் திரி தோ­ம் ஓங்காது வெள்ளை ஆடை அணிந்தால் - கண்ணே
கூடும் திரு அழகு வியர்வை விலகும்
ஆயுசுவிருத்தியாகும் வனப்பு, மகிழ்ச்சி
அறிவு, பலம், ஆரோக்கியம் உண்டாகும் - கண்ணே

தவமிருந்து பெற்ற குழந்தையா? - கண்ணே
கோரைப்பாயில் படுக்கவை
கோரைப் பாயினால் அக்கினி மந்த சுரம் நீங்கும்
தேகம் குளிர்ச்சியும், சுக நித்திரையும் உண்டாகும் - கண்ணே

பெற்ற குழந்தைக்கு பட்டாடை உடுத்திபார் - கண்ணே
பித்தம், கபம் அகலும். மகிழ்ச்சி தரும்
புத்தியும் மிகும். வியர்வை அகலும்
சாந்தியது உண்டாகும் வனப்பு பெருகும் - கண்ணே

மேகப்படை, கண்டு கண்டாக தடிக்கிறதா? - கண்ணே
சொறிந்தால் தூள் சிந்துகிறதா?
பொன் ஆவாரை இலையை அரைத்து தடவு
நமச்சல், காணாக்கடி, சொறி யாவும் தீரும் - கண்ணே

உடல் மினுமினுப்பாக இருக்க வேண்டுமா? கண்ணே
இரவில் படுக்க போகும் முன்
தேன், குங்குமப்பூ, மஞ்சள் அரைத்து பட்டாணி
அளவு மண்டலம் சாப்பிட்டு வரலாம் - கண்ணே

உடல் வனப்பாக, நிறம் பளப்பளப்பாக வேண்டுமா? - கண்ணே
அவுரி இலையை தூளாக்கி தினம் 5 கிராம்
காலை உணவுக்கு முன் சாப்பிடலாம், முருங்கை பிசின் பொடி
அரை ஸ்பூன் பாலில் கலந்து குடிக்கலாம் - கண்ணே

இல்லற வாழ்க்கை திருப்தி இல்லையா? - கண்ணே
கொல்லை ஒன்றும் போகவில்லை
அத்திப்பழம் சாப்பிடு அப்பழம் காம பெருக்கியாகும்
பத்து நாள் சாப்பிட்டு பார் நலம் பெறுவாய் கண்ணே

குழந்தைகளுக்கு 6 முதல் 12 மாதம் வரையில் - கண்ணே
தாய்ப்பாலுடன் ஆட்டுப்பால் பழச்சாறு கொடு
குழந்தைகளின் தாழ்வு மனப்பான்மையை நீக்கும்
அப்துல்கலாம் ஐந்து வயது வரை பால் குடித்தாராம் - கண்ணே

இந்தாண்டு வெயில் அதிகமாக இருக்கிறதா? - கண்ணே
அக்கி வந்து விடாமல் பார்த்துக் கொள்
ஆலம் விழுதை சாம்பாலாக்கி நல்லெண்ணெயில்
குழைத்து தடவி வந்தால் அக்கி குணமாகும் - கண்ணே



No comments:

Post a Comment

Ads Inside Post