Pages - Menu

Showing posts with label Meaningful Silver jubilee. Show all posts
Showing posts with label Meaningful Silver jubilee. Show all posts

Monday, 4 December 2017

பொருளுள்ள வெள்ளி விழா

பொருளுள்ள வெள்ளி விழா

கேரளாவில் சகோதரி ஜோஸ் ஆன்டோ ஆலப்புழை அருகே இரிஞ்சலக்குடாவில் சைக்கிள் கடை வைத்திருந்த திலகன் என்பவருக்கு தன் சிறுநீரகம் ஒன்றைத் தானமாகத் தந்துள்ளார். திலகனுக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்த  நிலையில் அவரின் குடும்பத்தவர் எவருக்கும் அவரின் சிறுநீரகத்திற்கு ஒத்து வரவில்லை. அவர் ஏழ்மையாய் இருந்ததால்  சிறுநீரகம் பெற்றுக் கொள்ள வழியில்லை. எனவே சகோதரி ஜோஸ் ஆன்டோ தன் சிறுநீரகத்தை தந்துள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால் தனது துறவறத்தின் வெள்ளிவிழா நினைவாக இத்தியாகத்தை செய்திருக்கிறார். இது சிறப்பான வெள்ளி விழா கொண்டாட்டம்.

Ads Inside Post