Pages - Menu

Monday 7 December 2015

சின்னஞ்சிறு கதை, என் எளிய சகோதரனுக்கு செய்ததெல்லாம் ..

சின்னஞ்சிறு கதை
என் எளிய சகோதரனுக்கு செய்ததெல்லாம் ..
- லியோ ஜோசப்
திரு லியோ ஜோசப் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. இவர் சிறந்த கதை எழுத்தாளர். மீண்டும் அன்னையின் அருட்சுடரில் அவரை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.   
வழக்கமாக திருப்பலி தொடங்குவதற்கு 5 நிமிடங்கள் இருக்கும் போது கோவிலுக்கு வரும் லூர்துசாமி , சற்று முன்னதாகவே கோவிலுக்கு வந்து விட்டார். கோவிலுக்குள் வந்ததும் அவர் கண்ணில் பட்ட முதல் காட்ச, புனிதா மண்டியிட்டபடி மாதா சுரூபத்தை நோக்கி நடந்து போவது தான். மாதா சுரூபத்தை நெருங்கிவிட்ட அவள் கால் வலித்ததோ என்னவோ, விழுந்து விட்டாள்.
லூர்துசாமி அவளிடம் போனார். ‘என்னம்மா செய்யிற? ’ என்று கேட்Vர்.
 ‘வேண்டுதல் ஐயா’ என்றாள் புனிதா.
 ‘என்ன வேண்டுதல்?’
 ‘எனக்கு மூணு பெண் பிள்ளை இருக்கு. ஆண் குழந்தை ஒன்னு கூட இல்ல. அதுக்காகத் தான் வேண்டுதல்.’
 ‘செய்வது பாவம். அப்புறம் வேண்டுதல் எப்படி பலிக்கும்?’
 ‘நான் என்ன பாவம் செய்தேன்?’
 ‘அந்த அன்னம்மா நெலத்த எழுதி வாங்கிக் கிட்டியே, அது பாவம் இல்லையா?’
 ‘அது .... வட்டிக்குப் பணம் குடுத்திருந்தேன். வட்டியும் குடுக்கல, முதலும் குடுக்கல. அதான் நெலத்த எழுதி வாங்கினேன். இது எப்படி பாவமாகும்?’
 ‘அந்தம்மா பாவம் ! அந்த நெலத்த வச்சுத்தான் அது பிழைச்சுக்கிட்டு இருந்தது. அது பொழப்புல மண்ணப் போட்டுட்ட. அது பாவம் இல்லையா?’
 ‘அப்பறம் குடுத்த காசை எப்படிங்க வசூல் பண்றது?’
 ‘இயேசு என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?’  ‘என் எளிய சகோதரனுக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தாய்’ னு சொல்லியிருக்கார். அந்த அன்னம்மா பாவம் ஏழை ! அந்தம்மா வயித்துல அடிச்சுட்டு நீ வேண்டுதல் வச்சா, கிடைக்குமா?  ‘எந்த அளவையால் அளப்பீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்’னும் சொல்லியிருக்கார். பாத்துக்கோ!
 ‘நான் யோசனப் பண்றேங்க ஐயா !’
தன் அறிவுரை வேலை செய்யும் என்பது லூர்துசாமிக்குத் தெரியும்.

No comments:

Post a Comment

Ads Inside Post