Pages - Menu

Friday 4 December 2015

ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா 10/01/2016

ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா
10/01/2016
எசா 40 : 1-5 , 9 - 11
தீத்து 2 : 11 -14 , 3 : 4 - 7
லூக் 3 : 15 - 16 , 21 - 22
கீரியும், அரணையும் புதிய நண்பர்கள். ஒருநாள் கீரியானது அரணையிடம், “நான் என் பழைய நண்பனைக் காணப் போகிறேன். நீயும் வருகிறாயா?” என்று வினவியது. அரணையும் இசைவு தெரிவிக்கவே இரண்டும் சென்றன. அந்த நண்பனைப் பார்த்ததும் அரணைக்குத் தூக்கிவாரிப் போட்டது. இவனா உன் நண்பன்? எப்படி வெகுதூரம் போயிட்டிங்க? என்று தன் கண்களைப் பொத்தியது கீரி. அது எல்லாம் ஒரு பெரிய காரியம் அல்ல. ஒருநாள் அவன் ஒரு வலையில் சிக்கிக் கொண்டான். அவனைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது. விரைந்து சென்று அந்த வலையைச் சுக்கு நூறாக அறுத்துப் போட்டேன். அவனைத் தப்பிக்கச் செய்தேன். அன்றுமுதல் அவன் தன் இயல்பை மாற்றிக் கொண்டான். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களானோம். பழகும் விதத்தில் பழகிப் பாசத்தைப் பொழிந்தால் பகைவனும் நண்பன் ஆவான் அல்லவா? ஒருநாள் நானும் கால் ஒடிந்து கடும் வெயிலில் கிடந்தேன். சற்று நேரத்தில் வெயில் என்னைச் சுட்டெரித்திருக்கும். அவன் படமெடுத்து எனக்கு நிழல் கொடுத்து என்னைக் காப்பாற்றினான். அன்றுமுதல் நானும் என் இயல்பை மாற்றிக் கொண்டு நண்பன் ஆனேன் என்று விளக்கம் தந்தது. (அந்த நண்பன் யார் என உங்களால் சொல்ல முடியுமா?) எனவேதான் தமிழக மக்கள் அனைவரும் என் நண்பனை நல்லப் பாம்பு என்று அழைக்கின்றனர் என முடித்தது.
கிறித்தவர்களுக்கு திருமுழுக்குப் புதிய வாழ்வைக் குறிக்கிறது. மனமாற்றம் திருமுழுக்கிலே நிறைவு பெறுகிறது. பழைய பாவ வாழ்விற்கு மூடுவிழாவும், புதிய ற்குத் திறப்பு விழாவும் திருமுழுக்குத்தான். இக்கருத்தை இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் விரிவாக விவரிக்கிறார். இயேசு மனிதராகப் பிறந்ததே அவருக்கு ஒரு புது வாழ்வு இறை இயல்பில் விளங்கிய அவர் மனித இயல்பில் வர இசைந்தது ஒரு புதிய வரலாறு. இந்த மனித அவதாரம் ஒரு புதிய சகாப்தம் இது இயேசுவின் திருமுழுக்கிலும் வெளிப்பட்டது. அவரின் திருமுழுக்கு அவருடைய பாடுகளையும், மரணத்தையும், உயிர்ப்பையும் அறிவிக்கிறது.
இயேசுவின் திருமுழுக்கு அன்று, பரமத்தந்தை இவரே என் அன்பார்ந்த மகன் என்று யூதர்களுக்கு வெளிப்படுத்தினார். எனவே இது யூதர்களுக்கான ஒரு திருவெளிப்பாடு ஆகும். முதல் வாசகத்தில் இஸ்ராயேல் மக்களுக்கு பாபிலோனிய அடிமைத்தனம் முடிவடைய இருந்த காலத்தில் அவர்களைப் புதுவாழ்வு வாழ அழைத்தார். எசாயா இறைவாக்கினர் நம்முடைய வாழ்வு எப்படி? என்றும், நாம் திருமுழுக்குப் பெற்றவர்களாக இருப்பதால் புதிய வாழ்வுக்கு அழைக்கப் பெற்றிருக்கிறோம். புதுவாழ்வு என்பது நம்முடைய பெருமை நம்முடைய கடமையும் ஆகும் என்பதை உணர்ந்து வாழ்வோம்.


1 comment:

Ads Inside Post