Pages - Menu

Showing posts with label Sunday Sermon. Show all posts
Showing posts with label Sunday Sermon. Show all posts

Friday, 4 May 2018

தூய ஆவியார் பெருவிழா

தூய ஆவியார் பெருவிழா

திப 2:1‡11, கலா 5: 16-25, யோவா 15:26-27, 16:12-15
20-05-2018
அருட்பணி. எல். ரெக்ஸ் அலெக்ஸ் சில்வஸ்டர்

  உயிர்ப்பு பெருவிழாவை கொண்டாடி முடித்த பிறகு ஐம்பதாவது நாளை பெந்தகோஸ்தே பெருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். அதாவது தூய ஆவியாரின் விழாவைக் கொண்டாடுகின்றோம். மூவொரு இறைவனில், மூன்றாம் ஆளாகிய தூய ஆவியாரின் விழா. 

திருவிவிலியம் நான்கு முக்கியமான பிறப்புக்களைக் கொண்டது. அவை:
 1. உலகின் பிறப்பு (படைப்பு) (தொநூ 1,2)
 2. தேர்ந்தெடுக்கப்பட்ட இனத்தின் பிறப்பு  (விப 19)
 3. இயேசுவின் பிறப்பு ( மத் 1: 18-25)
 4. திருச்சபையின் பிறப்பு (திப 2:1-11)

இந்த நான்கு பிறப்புகளும் நம்முடைய கிறிஸ்தவ நம்பிக்கைக்கு அடித்தளமாக அமைகின்றன. இந்த நான்கு பிறப்புகளுக்கும், ஓர் ஒற்றுமை உண்டு. பிறப்புக்கெல்லாம் மூல காரணமாய் இருந்தவர் தூய ஆவியார் என்பதே அந்த ஒற்றுமை.

 1. தூய ஆவியானவர் தண்ணீரின் மீது அசைவாடிக் கொண்டிருந்த வேளையில்தான், வெறுமையிலிருந்து ஒவ்வொன்றாக படைத்தார் இறைவன் என்கிறது திருவிவிலியம்.

2. யாக்கோபு முதலே - இறைவனுக்கும், இஸ்ராயேல் மக்களுக்கும் தொடர்பு இருந்தாலும், இவர்களுக்கிடையில் ஒப்பந்தம், உடன்படிக்கை நிகழ்ந்தது சீனாய் மலையில்தான். அங்கே ஆவியாரின் பிரசன்னம் இருந்ததை பேரிடி முழங்கியது (விப 19:6). ஆண்டவர் நெருப்பாக இறங்கி வந்தார் (விப 19:18) என்ற சொற்றொடர்கள் என்பிக்கின்றன.

 3. இயேசுவின் பிறப்பில், அன்னை மரியாள் கருவுற்றிருப்பது தூய ஆவியாரின் வல்லமையால் என்பதை நன்கறிவோம் (லூக் 1:35).

இறுதியாக திருச்சபையின் பிறப்பு, அதாவது இன்றைய நாளில் நாம் நினைவு கூறும் தூய ஆவியாரின் வருகை சிதறுண்டவர்களை, ஒரே திருஅவையாக இணைத்தது. தூய ஆவியானவர் நெருப்புப் பிளவு வழியாக இறங்கினார் என்று திப2:1-11 இல் வாசிக்கின்றோம்.

இந்த நான்கு பிறப்புகளும் நமக்கு வலியுறுத்துவது ஒன்றுதான். தூய ஆவியார் எங்கு இருக்கின்றாரோ, அங்கே புதுப்பிறப்பு உண்டு என்பதுதான் அந்த உண்மை.

அதோடு தூய ஆவியார் உடலளவிலும், உள்ளத்தளவிலும், செயலளவிலும், கொள்கையளவிலும் நம்மை ஒன்றிணைக்கும் பணிகளையும் செய்கின்றார். இதுவே அன்று திருத்தூதர்கள் வாழ்விலும் நடந்தது.

அது வரையிலும் யார் பெரியவர் என்று தங்களுக்குள், போட்டியிட்டவர்களும், இயேசுவின் அரியணையின் இடப் புறமும், வலப்புறமும் அமர வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களும், உயிருக்குப் பயந்து அவரை மறுதலித்தவரையும், அஞ்சி நடுங்கி கதவை தாழிட்டு கொண்டவர்களையும் இன்று தூய ஆவியார் ஒருங்கிணைக்கின்றார்.

இதுவரையில் சுபாவம், பதவிஆசை, உயிர்மேல் பயம் போன்ற கதவுகளால் பூட்டப்பட்டிருந்தவர்கள், தூய ஆவியாரை பெற்றுக் கொண்டபின் கதவுகளை உடைத்தெறிந்து விட்டு வெளியே வந்தார்கள். அந்த இயேசுவிற்கு சான்று பகர்ந்தார்கள். உயிர்ப்புக்கு சாட்சிகளானார்கள். இதுதான் பெந்தகோஸ்தே அனுபவம்.

இதே அனுபவத்தைப் பெறத்தான் நாமும் அழைக்கப்படுகின்றோம். நமக்குள் இருக்கின்ற அல்லது நம்மை பூட்டியிருக்கின்ற சாதி, இன, நிற, மொழி, பொருளாதார, பண்பாட்டு வேறுபாடுகளை, உடைத்தெறிந்துவிட்டு, உயிர்த்த இயேசுவின் சாட்சிகளாய் வாழ, அழைக்கப்படுகின்றோம். இதற்கு உந்துசக்தியாக, ஊக்குவிக்கும் சக்தியாக இருப்பது, திருமுழுக்கு மற்றும் உறுதிபூசுதலில் நாம் பெற்றுக் கொண்ட தூய ஆவியார்தான். அவரை நாம் நம்மில் செயலாற்ற அனுமதிப்போமா?
‘திரு அவையில் துVய ஆவியாரின் பிரசன்னத்தின் முக்கிய வெளிப்பாடு துணிவு’. - ஏ.பி. சிம்சன்

‘பணிவுதான் துVயஆவியார் நம்மை வழிநடத்த உதவுகிறது.’ - ஜான் ஹகி 

‘துVய ஆவியார் உன்னில் உறைவதை  உணரும் போது என்னால் முடியாது என்று உன்னால் சொல்ல முடியாது.’ - ஓஸ்வால்டு சாமபர்ஸ்

Tuesday, 1 May 2018

பாஸ்கா காலம் 6 ஆம் ஞாயிறு

பாஸ்கா காலம் 6 ஆம் ஞாயிறு

திப 10: 25,26,34,35,44-48; 1யோவான் 4:7-10;   யோவான் 15: 9-17
06-05-2018
பாளை ஜெமி
அன்பா? அறிவா?
உலகையே சிரிக்க வைத்தவர் சார்லி சாப்லின்! அவர் உண்மையான நண்பர் யாரென்பதற்கு இவ்வாறு விளக்கம் தருகிறார். ‘எவனொருவன் மழையிலே நனைந்தவாறு அழுகின்ற நண்பனின் கண்ணீரை மழை நீரிலிருந்து வித்தியாசப்படுத்தி, அத்துன்ப வேளையில் துணை நிற்பாரோ அவரே உண்மையான நண்பன்’ என்கிறார். நண்பகர்ளுக்கு மத்தியில் அன்பு இருத்தல் வேண்டும். அந்த அன்பு உள்ள இடத்தில் துன்பம் இருத்தல் வேண்டும். அப்போதுதான் அந்த அன்பு உண்மையானது எது என நீருபனமாகும். அத்தகைய உண்மை அன்பை வெளிப்படுத்திய உயிர்த்த ஆண்டவரைப் பற்றிய இன்றைய  இறைச்சிந்தனை, ‘இயேசுவின் அன்பில் நிலைத்திருக்க வேண்டும்’ என்பதாகும்.

அன்பிற்கு இலக்கணமாய் பெற்றத்தாயை விட வேறு யாரையும் ஒப்புமைப்படுத்த இயலாது. ஆனாலும் அத்தாயினும் மேலாக (எசாயா 49:15) நான் உன்னை அன்பு செய்கிறேன் என்று தன் உயிரை நமக்காக கொடுத்து வாழ்ந்துக் காட்டியவர் ஆண்டவர் இயேசுகிறிஸ்து. யோவான் 4:16இல் கடவுள் அன்பே உருவானவர் என்றுள்ளது. அதாவது இறைவன் அனைத்து விதமான அன்பின் வெளிப்பாடாக இருப்பதை அது சுட்டிக்காட்டுகிறது. இறைவன் ஒரு தந்தையின் நிலையில், ஒரு தாயின் நிலையில், நமக்கு மிகவும் நெருக்கமானவர்களின் நிலையில் பொருத்திக் காட்டினாலும் இன்றைய நற்செய்தியில், ஒரு நண்பனின் அன்பிற்கு தன் அன்பை இணைத்துக் காட்டுகிறார் இயேசு.

தத்துவவியல் அறிஞர் ஹராலிக்டஸ் என்பவர், ‘மாற்றம் என்பது உண்மையே, ஒவ்வொரு நொடிபொழுதும் மாறிக் கொண்டேயிருக்கின்றன’ என்ற கருத்தினை, ‘யாரும் ஓடுகின்ற ஒரே தண்ணீரில் கால் வைக்க இயலாது’ என்கிறார், (No one can step into the same water). மாற்றமும் என்பது நியதியாயினும் ஆண்டவர் இயேசு நம்மில் வைத்திருக்கின்ற அன்பிலே எந்த விதமான மாற்றம் இல்லை. ஆகவே தான் யோவா 15:9 இல் எனது அன்பில் நிலைத்திருங்கள் என்று அன்போடு கூறுகிறார். 
உண்மையான அன்பு விலை போகாது. 
போலியான அன்புக்கோ   சாயம் பொய்த்துப் போகும். 
அன்பு உள்ள இடத்தில் தியாகம் இரட்டைக்கிழவி. 
அத்தியாகம் இல்லா அன்பு முற்றும்  (ஒற்றை) பிழை ‡ இத்தகைய அன்பினை வெளிப்படுத்தவே இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘நான் உங்களைப் பணியாளன் என்று சொல்லமாட்டேன். காரணம் தலைவன் செய்வது இன்னதென்று பணியாளனுக்கு தெரியாது? அவர்கள் இருவருக்குமிடையே அன்பு என்ற பிணைப்பு இடம் பெறாத நிலை. நானோ உங்களை என் நண்பர்கள் என்றேன். இரு நண்பர்களுக்கிடையே அன்பு இருப்பது போல, நான் உங்கள் மீது கொண்ட அன்பினை என் உயிரை ஈந்து உறுதிப்படுத்தியுள்ளேன்.’ அதனைத்தான் வாழ்க்கை அனுபவத்தின் வாயிலாக யாரிடம் எப்படி பேசுவது என்று பெரியோர்கள் கூறுவதுண்டு. 
‘தாயிடம் அன்பாகவும், தந்தையிடம் பண்பாகவும், சகோதரியிடம் பாசத்தோடும், சகோதரனிடம் அளவோடும், குழந்தைகளிடம் செல்லமாகவும், கடவுளிடம் மெளனமாகவும், நண்பர்களிடம் மனம் விட்டும் பேச வேண்டும்’ என்று கூறுவார்கள். அவருடைய நண்பர்களாகிய நம்மிடத்தில் எதிர்பார்ப்பது, அவர் நம்மை அன்பு செய்வதுபோல, பிறரை நாம் அன்பு செய்ய வேண்டுமென்பதே. இதனையே புனித அன்னை தெரஸா, ‘கண்ணுக்கு தெரிந்த மனிதரை அன்பு செய்யாவிட்டால், ஊனக் கண்களுக்குத் தெரியாத கடவுளை அன்பு செய்தும் பயனில்லை’ என்று கூறுகிறார். 
இரண்டாம் வாசகமும் (1யோவா 4:7‡10) ‘அன்பு செய்பவர்கள் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்’ என்று குறிப்பிடுகிறது. இயேசுவும் நம்மிடத்தில் கூறுவது இதுதான். நீங்கள் என்னை அன்பு செய்கிறீர்கள் என்றால், என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள் இதிலேதான் அன்பிற்கும், அறிவிற்கும் இடையே உள்ள வேறுபாடு விளக்கம் பெறுகிறது. என் தாய் தந்தையை நான் அறிவேன் என்பது எனக்குள்ள அறிவு. ஆனால் அவர்களின் நிலையறிந்து, வயது முதிர்ந்த காலத்திலே அவர்களுக்கு உறுதுணையாய் இருந்து அவர்களை காப்பாற்றுதல் என்பது எனது கடமையும், அதனினும் மேலான அன்புமாகும். அதுபோன்று, இயேசுவை நான் அறிந்திருப்பது மற்றவர்களைப் போல நானும் பெற்றிருக்கின்ற அறிவு அது. ஆனால் அவர் சொல்கின்றவாறு அவரது கட்டளைகளைக் கடைபிடிப்பது அவர்மீது நாம் கொண்டுள்ள அன்பு.
  ஆக, இந்த அன்பு எங்கே ஆரம்பிக்கிறது? எப்படி தொடங்குகிறது என்ற கேள்விக்கு, புனித அன்னை தெரஸாவின் பதிலே, பொருத்தமாக அமையும்.அன்பானது நமது வீட்டிலே, குடும்பத்திலே ஆரம்பிக்கின்றது. நாம் ஒன்றாக கூடி செபிப்பதிலேதான் அன்பு வலுப்பெறுகின்றது என்று கூறுகிறார். மேலும் ‘அன்பு செலுத்து என்று யாரோ கட்டளை இட்டது போல் குரல் கேட்கிறது’ என்று 17 வயதான ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல், தனது குடும்பத்தால் திருமணத்திற்கு வற்புறுத்தப்பட்டபோது, ‘என் மனதில் ஒரு விதை விழுந்திருக்கிறது, அதற்கு விடை கிடைத்தப் பின்னரே, திருமணம்,  என்று கூறி செபத்தின் வழியாக, ‘அன்பு செலுத்துங்கள்... காலம் குறைவாகவே இருக்கிறது’, என்று தேவாலய சுவரில் இருந்த வாசகம் அவரை சிந்திக்க வைத்தது. 
வாழ்க்கையில் அன்பான உறவு கிடைப்பது முக்கியமல்ல, வாழ்நாள் முழுவதும் அன்பாக இருக்கிறதே முக்கியம். ஆக, நம்மில் அன்போடு நிலைத்துள்ள ஆண்டவர் இயேசுவின் அன்பில் நிலைத்திருக்க ஒருவரையயாருவர் அன்பு செய்வோம். 

‘ஒருவரிடம் உள்ள சிறந்த பண்புகளை வெளிக்கொணர உதவுபவனே சிறந்த நண்பன்’ ‡ யஹன்றி போர்டு

‘நீ நீயாகவே வாழ அதற்குறிய சுதந்திரத்தை தருபவரே உற்ற நண்பர்’ ‡ ஜிம்மோரின்

‘உன் தோல்விகளை பொருட்படுத்தாது உன் வெற்றிகளை தாங்கி நிற்பவர்தான் உயர்ந்த நண்பர்’ ‡ கடக் லார்சன்

Tuesday, 5 December 2017

பொதுக்காலம் 4ஆம் வாரம் B

பொதுக்காலம் 4ஆம் வாரம்
 அருள்பணி. மரிய அந்தோணி ஜேம்ஸ், குடந்தை.
 28-01-2018
இச 18: 15-20;1கொரி 7: 32-35; மாற்கு 1: 21 - 28
பணிவின் அர்த்தமே அதிகாரம்

அமெரிக்காவில், கருப்பின மக்கள், வெள்ளையின மக்கள் என இருபிரிவுகள் இருக்கின்றன. ஒரு நாள், வெள்ளையினத்தை சார்ந்த மனிதன் ஒரு உணவு விடுதிக்கு சென்றான். அங்கே, ஒரு கருப்பினத்தை சேர்ந்தவனும் அமர்ந்திருந்தான். ஆகவே, இந்த கருப்பினத்தை சார்ந்தவனை வெறுப்பூட்ட வேண்டும் என்பதற்காக, மற்றவன் அங்கிருந்த உணவு பரிமாறுபவரிடம் இன்று எனது பிறந்தநாள். உயர்தர உணவு வகைகளை, இந்த கருப்பின மனிதனைத் தவிர மற்றனைவருக்கும் கொடுங்கள் என்று பலமுறை கூறி வெறுப்பேற்றி கொண்டிருந்தான். ஆனால் அவன் எவற்றிற்கும் கலங்காமல் இருப்பதைக் கண்டு, உணவு பரிமாறுபவரிடம் அவன் யார் என்று கேட்ட பொழுது, அவர்தான் இந்த உணவு விடுதிக்கு சொந்தக்காரர், முதலாளி என்று கூறியதைக் கேட்டதும் வெள்ளையின் மனிதன் மிகவும் மனம் நொந்துப் போனான்.

பணிவில்தான் பெருமையும், அதிகாரமும் அடங்கியிருக்கிறது என்பதை மையமாக வைத்து சிந்திக்க பொதுக்காலத்தின் 4வது வாரமாகிய இன்றைய ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது. சிறப்பாக கடவுளாட்சியில் அதிகாரம் என்ற சொல்லிற்கு அர்த்தம் பணிவு என்பதே என்று இன்றைய வாசகங்கள் தெளிவுப்படுத்துகின்றன.

நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள் வந்து செல்கின்றன. யாரையேனும் யார் இந்த இயேசு என்று வினவினால், நமது பதில்கள் அவருடனான அனுபவங்களைப் பொறுத்தே அமையும். விவிலியத்திலும் கூட பவ்வேறு இடங்களில், மக்கள் தாங்கள் கண்ட புதுமைகளையும், பெற்ற நன்மைகளையும் அனுபவங்களின் வாயிலாக மற்றவர்களுக்கு எடுத்துரைக்கிறார்கள். உதாரணமாக, யோவான் 1:45இல் பிலிப்பு தான் கண்டு அனுபவித்த ஆண்டவரை நத்தனியேலுக்கு தெரிவித்து, நீரும் வந்து பாரும், பார்த்து அனுபவித்து மகிழும் என்றும் கூறுகிறார். அதுபோலவே, மத் 16: 13‡20, என்னை யாரென்று மக்கள் சொல்லுகிறார்கள்? என்று இயேசு கேட்டபோது, தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக இயேசுவை மக்கள் அறிந்து கொண்டர்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் மக்கள் வியந்து பார்ப்பது, இதுவரை நோயாளர்களை குணப்படுத்தியவர், ஏழைகளை அரவணைத்தவர் இன்று, பேய்களை அதிகாரத்தோடு விரட்டுகிறாரே என்பதுதான். எங்கிருந்து வந்தது இந்த  அதிகாரம். இயேசுவை பொறுத்த வரையில் அதிகாரம் என்பது பணிவோடு தொடர்புடையது.  இறைவிருப்பத்தை  ஏற்று நடக்க திருவுளமானதால், அந்த பணிவே அதிகாரம் என்ற தொணியில் பார்க்கிறார். இறையாட்சியில் அதிகாரமோ, பணிசெய்தலும், சுதந்திர உணர்வோடு  செயல்படுவதுமாகும். பணிசெய்தலே அதிகாரத்தின் உட்பொருளாக அமைகின்றது. ஆகவேதான் மத் 20: 16இல் முதலானனோர் கடைசியாவார், கடைசியாவோர் முதலாவார்  என்றும் உங்களுள் முதல்வராய் இருக்க விரும்புகிறவர் முதலில் தொண்டராய் இருக்கட்டும் என்கிறார். ஆக இந்த  அதிகாரத்தோடு இயேசு பேயினை ஓட்டியது மக்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. இதன் மூலம் அவர் மீது இருந்த இறைநம்பிக்கையும், இறைப்பற்றும் மக்களின் மனிதல் ஆழமாக பதிகிறது. மேலுமாக பேய்களும் கூட இயேசுவை யாரென்று அறிந்திருப்பதாக நற்செய்தி வாசகத்தின் மூலம் அறிகின்றோம். மாற் 1: 24இல் நாசரேத்தூர் இயேசுவே உமக்கு இங்கு என்ன வேலை? நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்  என்று தீய ஆவிகளும் அறிக்கையிட்டன. இதனால் மக்கள் வியப்புற்று இதென்ன புதிய போதனையாக இருக்கின்றது என்கின்றனர். அப்படிப்பட்ட  இயேசுவுடனான நமது அனுபவங்கள் என்ன? புனித ஜெரோம் அவர்கள், திருவிவிலியத்தை அறியாதவர்கள் இறைவனை அறியாதவர்கள் என்று கூறுகிறார். அதுபோல இறைவனை அறியாதவர்கள் தன்னையே முழுமையாக அறியாதவர்கள். இறைவனை அறிய வேண்டுமெனில், அவர் பாதம் அமர்ந்து அவரது விருப்பத்தின்படி, படிப்பினைகளின் படி வாழ முயற்சிக்க வேண்டும். அவ்வாறு நடக்கின்றபோது, நாமும் கூட இயேசுவின் பெயரால் பணிவு நிறைந்த அதிகாரத்தோடு எந்த வல்ல செயல்களையும் செய்ய முடியும். அதனை தான் யோவா 14: 12, என்னில் நம்பிக்கை கொள்வோர் நான் செய்யும் செயலை விட பெரியனவற்றையும் செய்வார் என்று இயேசு கூறுகிறார்.

ஆகவே, இயேசுவை பற்றிய நமது அனுபவங்கள் என்ன? அவரை அறிந்திருக்கிறோ மென்றால், பணிவில்தான் அதிகாரம் அமைந்தி ருக்கின்றது என்பதை ஆழமாக உணர்வோம்.
  

பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு B

பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு
 21 - 01 - 2018
யோனா 3: 1,5-10;  1 கொரி 7: 29 - 31;  மாற் 14-20;   
        
தொலைக்காட்சி நிகழ்ச்சியில், நீயா? நானா? என்ற தொடரில், ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். அமெரிக்காவில் கணினி பிரிவில், மாதத்திற்கு 4 லட்சம் சம்பாதித்த ஒருவர், அந்த வேலையை விட்டுவிட்டு, இந்தியாவிற்கு வந்து விவசாயம் செய்து, பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறார். ஏன் நல்ல வருமானம் தரும் வேலையை விட்டு  விட்டார் என்றால், பணம் நிறைய சேர சேர, ஆசைகள் பெருகுகின்றன. தேடுகிறோம், இறுதியில் உடல் நலத்தை இழந்து நிம்மதியற்ற நிலையில் வாழ்கிறோம். விவசாயத்தில் மனநிறைவு கிடைக்கிறது என்று அவர் விளக்கினார்.

இன்றைய நற்செய்தி ப் பகுதியில், இயேசு முதல் நான்கு சீடர்களை (சீமோன், அந்திரேயா, யாக்கோபு, யோவான்) அழைக்கும் நிகழ்ச்சியை வாசிக்கக் கேட்கிறோம். நால்வரும் மீனவர்கள். இயேசு அழைத்ததும் அவர்கள் தங்களின் படகுகளை, தங்களின்  தொழிலை விட்டுவிட்டு இயேசுவைப்  பின்தொடர்கின்றனர். இயேசுவை பின்தொடர்ந்த அந்த நால்வரும், மிக ஏழ்மை நிலையில் இருந்தவர்கள் அல்ல. அவர்களுக்கு படகுகள், வலைகள், வேலையாட்கள்  இருந்தன. எனவே அவர்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வந்தார்கள் என்றால் அவர்களின் அர்ப்பணத்தையும், தியாகத்தையும் அது குறிக்கிறது.  மீன் பிடிப்பவர்களை மனிதரை பிடிப்பவராக்குகின்றார் இயேசு. (எரே 16:16)  இல்  இது போன்ற குறிப்பு வருகிறது.

முதல் வாசகத்தில் கடவுளின் அழைப்பை முதலில் மறுத்து ஓடிச் சென்ற யோனா, இரண்டாவது முறை அழைத்தபோது, அந்த அழைப்பினை ஏற்று, நினிவே மக்கள் மனமாற போதிக்கிறார். அவரின் அறைக் கூவலை ஏற்று நினிவே மக்கள் மனந்திரும்புகின்றனர்.

பல காதல் திருமணங்கள் தோல்வி யடைகின்றன.  முதலில் காதல் மயக்கத்தில் ஒன்று சேருகின்றனர். ஆனால் ஒன்றித்து வாழும்போது அவர்களின் சுயநல உருவம் வெளிப்படுகிறது.  உன்அப்பா வீட்டில் அதை வாங்கிவா, இதை வாங்கி வா என்று கொடுமைபடுத்த மாப்பிள்ளை முற்படுகிறார். திருமணத்திற்கு முன்பாக. தாங்கள் நுழையப் போகும் குடும்ப வாழ்வின் பொறுப்பையும், தியாகத்தையும் உணர்ந்து அதில் நுழைவதில்லை.   
மனிதர் வாழ்வு, மற்றவருக்காக செய்யும் தியாகத்தில் நிறைவு பெறுகிறது. தியாகம், இறைவனிடம் அழைத்துச் செல்லும் படகாக விளங்குகிறது.

பொதுக்காலம் 2-ஆம் ஞாயிறு B

பொதுக்காலம் 2-ஆம் ஞாயிறு
  14 - 01 - 2018
1 சாமு 3: 3, 10-19;  1கொரி 6: 13-15; 17- 20;  யோவா 1: 35 - 42;

தேடுங்கள் கிடைக்கும் என்றார் இயேசு (மத் 7:7).
‘திரை கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று ஒளவையும் கூறுகிறார். நடைமுறை வாழ்க்கையிலும், நாம் தேடலில்தான் வாழ்கிறோம். நல்ல வேலைக்காக தேடுகிறோம். நல்ல வரனுக்காக தேடுகிறோம். நல்ல வீட்டிற்காக தேடுகிறோம்.

இன்றைய நற்செய்திப்  பகுதியில் இயேசுவை சிலர் தேடுகிறார்கள். அதனால் இயேசுவை கண்டுக்கொள்கிறார்கள். கண்டுகொள்ளலின் தொடர்ச்சியாக அவரோடு தங்குகிறார்கள். தாங்கள் பெற்ற இந்த காணலின் அனுபவத்தை மற்றவரும் காண செய்கிறார்கள்.

திருமுழுக்கு யோவான்,  திருமுழுக்கு யோவானின் சீடருக்கு ‘இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி’ என்று இயேசுவை அடையாளம் காட்டுகிறார். திருமுழுக்கு யோவானின் சீடர்கள் இருவர் இயேசுவை பின்தொடர்கின்றனர். இயேசு, அவர்களைப் பார்த்து என்ன தேடுகிறீர்கள்? என்று கேட்கிறார். தாங்கள் தேடியதை கண்டுகொண்டு விட்டோம் என்று சொல்லாமல் சொல்லி, தாங்கள் கண்டடைந்தவர் தங்களின் ஆசிரியர் (ரபி) என்று ஏற்றுக் கொண்டு, உங்களோடு தங்க விரும்புகிறோம் என்று எங்கே தங்கியிருக்கிறீர்? என்று கேட்கிறார்கள். யோவான் நற்செய்தியில் மெனோ (னிeஐலி) என்ற வார்த்தை தனித்த பொருள் கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ‘இருத்தல்’ என்னும் ஆழ்ந்த பொருளைத்  தரும். உதாரணமாக யோவா 14:10 இல் ‘நான் தந்தையினுள்ளம் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா?’ என்ற வாக்கியத்தில் குறிப்பிடப்படும் ‘இருத்தல்’ என்ற வார்த்தைதான் தங்கியிருத்தல் என்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தேடியவர் கண்டார்கள், அதிலே ஒன்றானார்கள். இந்த ஒப்பற்ற அனுபவத்தை இயேசுவை பின் சென்ற திருமுழுக்கு யோவானின் இரண்டு சீடர்களில் ஒருவர் அந்திரேயா, தன் சகோதரர் சீமோனை, நாங்கள் மெசியாவை (கடவுளால் அருள் பொழிவு பெற்றவரை) கண்டு கொண்டு விட்டோம். நீயும் வந்து கண்டு அந்த அற்புத அனுபவத்தில் இணைந்துக் கொள் என்று அழைத்து வருகிறார். இயேசுவும் அவரை வரவேற்று அவருக்கு ‘பாறை’ என்று பொருள்படும் ‘கேபா’ என்று அழைக்கப் படுவாய் என்கிறார்.

  முதல் வாசகத்தில் சிறுவன் சாமுவேல் கடவுளால் அழைக்கப்படுகிறார். முதலில் சாமுவேலால் அது கடவுளின் அழைத்தல் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. குரு ஏலி அவனுக்கு கற்றுக் கொடுக்கிறார். ‘ஆண்டவரே பேசும் அடியான் கேட்கிறேன்’ என்று பதில் மொழி கூற கற்று கொடுக்கிறார்.

இறைவன் தரும் அழைப்பினைக் கண்டுக் கொள்பவர்கள் விண்ணகத்தை மண்ணகத்திற்கு அழைத்து வருபவர்கள்.

ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா

ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா
 07 - 01 - 2018

Fr.  M.A. சூசைமாணிக்கம், திரு இருதய குருமடம்.
 எசா 60 : 1-6; எபே 3: 2- 3, 5-6;  மத் 2: 1 - 12;

ஒரு கிராமவாசி ஒரு முனிவரிடம் சென்று, இறைவனை அடைய என்ன வழி? என்று கேட்டார். அதற்கு முனிவர், இடைவிடாமல் தேடு என்றார். கேட்டவன் ஒரு சாதாரண மீனவன், எழுத்தறிவு, படிப்பறிவு மற்றும் உலக ஞானம் இல்லாதவன். அப்பாவி என்று கூட சொல்லலாம். இதைப்பற்றி அந்த கிராமவாசி மீண்டும் முனிவரிடம் கேட்டபோது, திணறி திணறித் தேடு என்ற பதில் கிடைத்தது. கிராமவாசிக்கு ஒன்றுமே புரியவில்லை. திணறி திணறி எப்படி தேடுவது என்றான். முனிவர் அவனை நதிக்கரையிலுள்ள படியில் இறங்கச் சொல்லி, தனது இரு கைகளாலும் அவனை நீரில் அமுக்கிப் பிடித்தார். பின் கையை விட்டார். இப்படித்தான் தேடவேண்டும் என்று சொல்லி,  நடையைக் கட்டினார்.

நாட்கள் உருண்டோடின. அவனது தேடல் மிக வேகமாக இருந்தது. இறைவனையும் கண்டான். மகிழ்ந்தான். தனது தேடலின் விளைவாக கிடைத்த தெய்வதரிசனம் பற்றி சொல்ல முனிவரை தேடிச் சென்று சொன்னான். இதைக் கேட்ட துறவி உனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? நம்மைப்போன்ற சாதாராண மனிதர்களுக்கெல்லாம் கடவுள், அவ்வளவு சுலபத்தில் காட்சி தந்துவிடமாட்டார். அதை முதலில் புரிந்துகொள் என்றார்.

ஆன்மீகவாதிகளின் ஆன்மீக தேடலின் இலட்சணம் இதுதான். எனது தெய்வீகத்தின் வெளிப்பாட்டை சுட்டிக்காட்டும் திருக்காட்சி விழாவை திருச்சபைக் கொண்டாடுகிறது. கீழ்த்திசை ஞானிகள் மூவர் தங்களின் தேடலாக இறைமகன் இயேசுவைக் கண்டு கொள்கின்றனர். பிற இனத்தாரின் பிரதிநிதிகளாக இந்த மூன்று ஞானிகளின் வருகை அமைந்தது. பிறந்த மண்ணில் ஞானிகள், அரசர்கள், குடிமக்கள் என எவ்வளவோ பேர் இருந்தும் அவர்களுக்கெல்லாம் கிடைக்காத தெய்வ தரிசனம் ஊர், பெயர் தெரியாத ஞானிகள் மூவருக்கு கிடைக்கின்றது.

மெசியாவைக் காண்பதே வாழ்வின் நிறைவு என்று நினைத்த இந்த மூன்று அரசர்களின் தேடலில் ஏரோதுடைய தேடல் வித்தியாசமானது. யூதர்களுடைய அரசன் பிறந்திருக்கின்றார் என்ற செய்தியை கேட்டு மனக்கலக்கம் அடைந்த ஏரோதும் இயேசுவைக் காணத் துடிக்கின்றான். இது இவனுடைய அன்பின் தேடல் அல்ல. மெசியாவைக் கொல்ல வேண்டும் என்ற நயவஞ்சகத் தேடல். தனது ஆட்சிக்கு போட்டி வந்துவிட்டது. சுயநலத்தோடு மக்களை சுரண்டி வாழ இனி வாழ முடியாது என்ற தீய சிந்தனையோடு ஏரோது கலக்கம் அடைகிறான்.

இறைவனின் திட்டத்தின்படி, வாழ்வின் நிலையறியாது, இருளாகிய பாவத்தில் வீழ்ந்து உலன்று கொண்டிருக்கும் மனிதர்களை காக்க, மனித அவதாரம் எடுத்த மெசியாவின் இறைவெளிப்பாடு தீயவனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் விண்மீன் மறைந்து போனது. இந்நிகழ்வு தீமையைக் கண்டு ஒவ்வொரு மனிதனும் விலக வேண்டும் என்ற அடையாளத்தைக் குறிக்கின்றது. நன்மைகளுக்கு தீமை வழிவிட்டது. மூன்று அரசர்கள் மெசியாவைக் கண்டனர். மகிழ்ச்சி கொண்டனர். அவர்கள் தேடிய மெசியா தனிப்பட்ட இனத்துக்கோ, மதத்திற்கோ, அமைப்பிற்கோ உரியவர் அல்ல. இவ்வுலகத்திற்கே உரித்தானவர். மெசியாவின் பிறப்பு எல்லோருக்கும் சொந்தமானது என்பதை ஞானிகளின் வருகை குறித்துக் காட்டுகிறது.

புலர்ந்திருக்கின்ற புதிய ஆண்டில் பிறந்திருக்கின்ற மெசியாவை, நம்மோடு வாழும் சக மனிதர்களில் தினம் கண்டுகொள்ளும் தேடலில் இறங்குவோம். 

கிறிஸ்து பிறப்பு பெருவிழா,

கிறிஸ்து பிறப்பு பெருவிழா
அருட்பணி. எல். ரெக்ஸ் அலெக்ஸ் சில்வெஸ்டர் 
 வலுவின்மையே  வல்லமை

அப்பாடா! ஒரு வழியா எப்படா வரும்னு நாம் எதிர் பார்த்த கிறிஸ்துமஸ் வந்தாச்சு. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் விருந்து, வேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது. ஆனால் , இந்த விழா நமக்கு சொல்லும் செய்தி என்ன என்பதை மட்டும், எல்லோருமே மறந்து விடுகிறோம்.
    இந்த உலகம்  Promotion  உலகம்.  அதாவது பதவி உயர்வை மட்டுமே விரும்புகின்ற உலகம்.
சிறு விவசாயி - பண்ணைக்கு உரிமையாளராகவும்
கவுன்சிலர்      - MLA வாகவும்
MLA வுக்கு            -அமைச்சராகவும்
தொண்டனுக்கு - தலைவனாகவும்
மக்களுக்கு         - குருவாகவும் 
குருவுக்கு                 - ஆயராகவும்  ஆசை / விருப்பம்   

 இப்படி எல்லோரும் கீழிருந்து மேலே  மேலே செல்ல ஆசைப்பட, ஆண்டவருக்கு ஒரு விநோதமான விசித்திரமான ஆசை. மேலிருந்து கீழே வரனும்னு ஆசை. ஆம் கடவுளுக்கு மனிதனாக ஆசை. ஆம் கடவுள் தன்னையே தாழ்த்திக் கொண்ட தாழ்ச்சியின் விழாதான் கிறிஸ்துமஸ். இதைத்தான் திருத்தூதர் பவுல் பிலி 2:6‡9இல் சொல்லுகிறார். கடவுள் தன்மையில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். அவ்வளவுதான் கிறிஸ்துமஸ். அடிமையின் வடிவை ஏற்ற நாள்தான் கிறிஸ்துமஸ்.

இயேசுவின் பிறப்பு கதையோ,கற்பனையோ இல்லை. மாறாக வரலாற்று நிகழ்ச்சி என்பதை வலியுறுத்தவே, இயேசு யாருடைய ஆட்சியில், எங்கு, எப்படி  பிறந்தார் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இயேசுவின் பிறப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு செய்தியும் இயேசுவின் எளிமையையும், அவரது தாழ்ச்சியையும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன.

முதலாவதாக, இயேசு பிறந்ததாகச் சொல்லப்படும் ஊர் பெத்லகேம் யூதாவின் ஊர்களில் சிறிய ஊராக இருந்தாலும், இவ்வுலகை படைத்த மாபரன் உதிக்க திருவுளம் கொண்ட ஊர். யாரும் எதிர்பார்க்காதவைகளை தமது விருப்பமாகக் கருதுபவர் இறைவன். மேலும் அப்பத்தின் வீடு என்னும் பொருளுடைய பெத்லகேமில் பிறப்பதால், இவ்வுலகிற்கு தன் உடலை உணவாக கொடுக்க உள்ளத்தை முன்னறிவிக்கிறார்.

இரண்டாவதாக, உலகத்தை உருவாக்கிய வருக்கு இவ்வுலகம் ஒதுக்கிய இடம் மாட்டுத் தொழுவம். இறைவனின் எளிமைக்கு இதை விடவா சான்று தேவை. பிறந்தவுடன் துணிகளில் சுற்றப்பட்டு தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டார். இதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. தீவனத்தொட்டி என்பது மாடுகளுக்கு உணவிடும் இடம். இயேசுவும் இவ்வுலகிற்கு உணவாகப் போகிறார் என்பதற்கு முன் அடையாளமே இத்தீவனத் தொட்டி.

மூன்றாவதாக அவர் தாழ்ச்சிக்கு இன்னுமொரு உதாரணம், அவரின் பிறப்புச் செய்தி அறிவிக்கப்பட்ட இடையர்கள். இறைமகன் இயேசு தன்னை ஆயனென்று ‡ நல்லாயன் என்று அழைத்தவர். இன்று ஆயர்களின் தலைமகன் குடிலில் குழந்தையாகப் பிறந்துள்ளார். எருசலேமில், படித்தவர்கள், அரசர்கள், அறிஞர்கள், குருக்கள் என பல மேட்டுக்குடிகள் இருந்தும் படிப்பறிவற்ற, ஏழை, எளிய இடையர்களுக்கு  இயேசுவின் பிறப்பு முதன் முறையாக அறிவிக்கப்படுகிறது. இறை செய்தியை கேட்டதும், அவர்கள் கேள்விகள் கேட்கவில்லை. சென்றார்கள், கண்டார்கள் இறைவனை மகிமைப்படுத்தினர்.  

சுருக்கமாகச் சொன்னால், கிறிஸ்துமஸ் விழாவின் மையச் செய்தியே இதுதான். மனிதன் பலமற்றதாக கருதுவதை கடவுள் தன் பலமாகக் கொண்டார். மனித பிறப்பு பலவீனமானது, பாவ இயல்புடையது. ஆனால் கடவுள் அந்த பலவீனத்தை பலமாக மாற்றுகிறார்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? வல்லமையான கடவுள் தேடிச் சென்றது. வலிமையானதை அல்ல. மாறாக, சிறியது என எல்லோரும் நினைத்த பெத்லகேமும், ஆடு, மாடுகளின் தஞ்சமிடமான மாட்டுக் குடிலும், கந்தைத் துணியும், கிடத்தப்பட தீவனத் தொட்டியும், கண்டு மகிழ ஏழை இடையர்களும்தான். இறைவன் பலமற்றதை, ஞான சூனியங்களை தம் நற்பணி தூதுவர்களாக மாற்றினார் என்பதற்கு அவரின் பிறப்பு ஒரு சான்று. ஆக நம்முடைய கடவுள் கடந்து நிற்பவர் (Transscendent) அல்ல. நம்மில் ஒன்றோடு ஒன்றாக கலந்து நிற்பவர் (Immanent). அதாவது இம்மானுவேல்  இந்த கடவுள் சிறியவற்றை, தரித்திரம் என ஒதுக்கியவற்றை, ஏழை, எளிய  மக்களை, பாவிகளை தேர்ந்து கொண்டு, அவர்களோடு ஒன்றாக கலந்து நிற்பவர்.

எனவே, இந்த கிறிஸ்துமஸ் விழா நம்மில் மாற்றத்தைக் கொண்டு வரட்டும். எல்லாம் இழந்து நிற்கும் மனிதர்களில், சாதியால், மொழியால், சமூக பாகுப்பாட்டால் வெறுக்கப்பட்ட மனிதர்களைத் தேடிச் சென்று, அவர்களோடு நாம் உரையாடி, உறவாடும் போது அங்கே கிறிஸ்து பிறக்கின்றார், இருக்கின்றார்.

ஆம் கிறிஸ்து நம்மோடு இல்லாத கிறிஸ்துமஸ், கிறிஸ்துமஸ் ஆக இருக்க முடியாது. அந்த இயேசுவை நம்மோடு வாழ வைப்போம். நம் இல்லத்தில், நண்பர்கள், அயலாரின், அநாதைகளின், அந்நியர்களின் உள்ளங்களில் வாழ வைப்போம். அப்பொழுதுதான் ‘கடவுள் நம்மோடு’ என்பதற்கு பொருள் கிடைக்கும்.

வலுவற்றைவைகளில் வல்லமையுள்ள  தேவனைத் தேடுவோம். ஏனெனில் கிறிஸ்துவின் பார்வையில் பலகீனமே பலம்.

Monday, 4 December 2017

திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு

திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு
 17 - 12 - 2017
எசா 61: 1-2, 10-11; 1தெச 5:  16-24; யோவா 1: 6-8, 19 - 28;

திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறாகிய இன்று,  அருள்வாக்குகள், திருமுழுக்கு யோவானைப் போல, நாமும் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் நிலையினை ஏற்றுக் கொண்டு வாழ அழைக்கின்றன.

சென்ற வாரம், திருமுழுக்கு யோவான் இயேசுவிற்காக எவ்வாறு பாலைவனத்தில், மக்களை மனமாற்றத்திற்கு அழைத்தார்.  எவ்வாறு வழியை தயார் செய்தார் என்ற கருத்து  நம்முன் வைக்கப்பட்டது. இன்றைய நற்செய்தியில், திருமுழுக்கு யோவான் தன் நிலையைப் பற்றி சாட்சியம் அளித்து, அதே நேரத்தில், மக்களின் நடுவில் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் இயேசுவைச் சுட்டிக் காட்டுகின்றார்.

இயேசுவே, தான் யார் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்று சீடர்களிடம் கேட்டு, தன்னைப் பற்றிய புரிதலை சீடர்களுக்கு வெளிப்படுத்துகிறார் (மத் 16: 13 ‡ 20). ஆனால் இங்கு, யூதர்கள் திருமுழுக்கு யோவானை, நீர் யார்? என்று கேட்க, யோவான் தன் நிலையை பணிவுடன் விளக்குவதை இன்றைய நற்செய்திப் பகுதியில் பார்க்கின்றோம். யோவான் நற்செய்தியில் யூதர்கள், இயேசுவின் எதிரிகளாகவே முன் நிற்கிறார்கள் (யோவா 5: 10-15,16-18;  7:1-13;  8: 48 - 52 -57;   9: 18 - 22;  10: 24-31,33;   11:8;  18:12,14,31,36,38;   19: 7-12,14;    31:38;    20: 19).  அத்தகைய யூதர்கள் திருமுழுக்கு யோவானையும் சுற்றி வலைக்கின்றார்கள். எருசலேமிலுள்ள யூதர்கள் என்றும் (1:19), பரிசேயர் என்றும் (1:24) அவர்கள் விளக்கப் படுகிறார்கள். அவர்கள் ‘நீர்  யார்?’ என்ற அடிப்படையான கேள்வியைக் கேட்கின்றார்கள், தான் மெசியா அல்ல என்றும், எலியா அல்லது இறைவாக்கினர் என்பவரும் நானல்ல என்கிறார்.

ஆண்டவருக்காக வழியை செம்மை யாக்குங்கள் என்று பாலைவனத்தில் ஒலிக்கும் ஒலி என்ற எசா 40:3 குறிப்பினைக் கூறி, தன்னைப் பற்றி பணிவாக விளக்குகிறார். (லூக் 3:15) இல் திருமுழுக்கு யோவானை, மெசியா என்றே மக்கள் கருதியதாக கூறப்பட்டுள்ளது. அத்தகைய நிலையில், தன்னை வழியைக் காட்டும் வெறும் ஒளி என்று விளக்குகிறார்.

வழி என்பது விவிலியத்தில் காணப்படும் ஒரு முக்கியமான கருத்துக் கோட்பாடு. கடவுளின் வழி என்றும் (இச 32:4; விப 18:25), ஆண்டவரின் வழி என்றும் (மாற் 1:3) இயேசுவே, தானே வழி என்றும் (யோவா 14:6), கிறிஸ்தவ மறை தனிவழி என்றும் (திப 9:2;    19: 9‡23) நெறி குறிப்புகளைப் பார்க்கிறோம். திருமுழுக்கு யோவான் இயேசுவின் வழிக்கு வழி செய்கிறார். தன்னை பாலைவனத்தில் ஒலிக்கும் ஒலி என பணிவாகக் கூறுகிறார்.

முதல் வாசகத்தில், இயேசு தன் பணியை ஆரம்பிக்கும்போது, நாசரேத்தூர் தொழுகைக் கூடத்தில் வாசித்த அப்பகுதி கொடுக்கப்பட்டுள்ளது (எசா 61). இதில், ‘அருள்பொழிவு செய்துள்ளார்’ என்ற வார்த்தை  தனிப்பட்ட பொருள் கொண்டதாகும். அருள்பொழிவு என்பது இறைவன் செயல். அதனால் மக்களின் உள்ளம் ஒளிர்விக்கப்படுகிறது. இதன் துணைக் கொண்டு, மனிதர் இறைவனின் செயல், அதனால் மக்களின் உள்ளம் ஒளிர்விக்கப்படுகிறது. இதன் துணை கொண்டு, மனிதர் இறைவனின் வார்த்தையைக் கேட்டு, அதனை வாழ்வாக்கும் வல்லமையைப் பெறுகிறார்கள். 

திருமுழுக்கு யோவான் இயேசுவுக்கான வழியை தயார் செய்யும் பணியினை முழுமையாக உணர்ந்துக் கொண்டு அதற்காக தம்மையே அர்ப்பணிக்கிறார். பலர் அவர் பணியை ஏற்றுக் கொண்டனர். பலர் அவரை சந்தேகக் கண்கொண்டு பார்த்தனர். இறுதியில் அவர் தலையே துண்டிக்கப்படும் சாட்சிய வாழ்வுக்கு தன்னை உட்படுத்தினார்.

இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார், தூய ஆவியின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டாம். இறைவாக்குகளை புறக்கணிக்க வேண்டாம் (1 தெச 5: 19-20) என்று தெசலோனிக்கருக்கு அறிவுறுத்துகிறார்.

திருவருகைக் காலம் இரண்டாம் வாரம்

திருவருகைக் காலம் இரண்டாம் வாரம்
10 - 12 - 2017
எசா 40: 1-5, 9-1 1,  2 பேது 3: 8 - 14;   மாற் 1: 1-8

பெரிய அரசியல் தலைவர்கள் ஓர் இடத்திற்கு செல்கிறார்கள் என்றால் பல மாதங்களுக்கு முன்பே உளவுத்துறை மற்றும் காவல்துறை, வருவாய் துறை போன்றோர், அவ்விடத்தைப் பார்வையிட்டு, தலைவரின் வருகைக்குத் தயார் செய்வார்கள். இயேசுவும்  தான் செல்ல விருந்த இடங்களுக்கு, தன் சீடர்களை  அனுப்பி வைக்கிறார் என்று பார்க்கிறோம். ‘தமக்கு முன்  தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய் சேர்ந்தார்கள்’  (லூக் 9:52) . 

இயேசுவின் முன்னோடியாய் திருமுழுக்கு யோவான், இறைவனால் அனுப்பப்படுகிறார். இயேசுவும், திருமுழுக்கு யோவானும் அவரவர் தாயின் வயிற்றில் இருக்கும் போதே சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இன்றைய நற்செய்திப்  பகுதியில் பாலைவனத்தில் திருமுழுக்கு யோவானின் பணியைப் பற்றி பார்க்கிறோம். ஏசாய  நூலில் எழுதியுள்ளபடி, ‘ஆண்டவருக்கான வழியை ஆயத்தம் செய்வார்’....  என்பது  (விப 23:20) (மலா3: 1) (ஏசா 40:3) ஆகிய குறிப்புகளின் தொகுப்பாகக் காணப்படுகிறது. பாவ மன்னிப்படைய மனமாறி திருமுழுக்குப் பெறுங்கள் என்று திருமுழுக்கு யோவான் போதிக்கின்றார். ‘யூதேயாவில் அனைவரும், எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்’ (மாற் 1:5) என்று கூறப்பட்டுள்ளது.  ‘இதோ எனக்குப் பின்வருகிறவரின் மிதியடி வாரை அவிழ்க்கக் கூட தகுதியற்றவன்’ என்று தன் நிலையை பணிவோடு கூறுகிறார். ‘எனக்கு பின்னால் வருகிறவர் தூய  ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்’ என்கிறார். திருமுழுக்கின் பொருள் என்னவென்றால்,  ‘என்னை மாற்றிக் கொள்ள முன் வருகிறேன் என்பதும் அதே நேரத்தில் இறைவன் என் பாவங்களை மன்னிக்க முன் வருகிறார்’ என்பதாகும்.  முதல் வாசகத்தில் பாபிலோனிய அடிமை தனத்தினால் மனம் ஒடிந்து போயிருந்த மக்களுக்கு நம்பிக்கையான வார்த்தைகளை ஏசாயா கூறுகிறார். ‘கனிமொழி கூறுங்கள் என் மக்களுக்கு கனிமொழி கூறுங்கள். புதிய வழியை தயார் செய்யுங்கள். ஆண்டவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய வருகின்றார். ஆயனைப் போல் தம் மந்தையை மேய்ப்பார்’.

ஆக ஒரு பக்கம் நமது மனமாற்றம், இறைவனை நெருங்கி செல்வது, மற்றொரு பக்கம், கடவுள் நம்மை நெருங்கி வருவது. இந்த அனுபவங்கள் இன்றைய வாசகங்களால்  எடுத்துச் சொல்லப்படு கின்றன.

இந்த  அனுபவம்தான்  திருவருகைக்  காலத்தின்   இரண்டாம்   வாரத்திலும்   நம்மிடம்   இடம்  பெற  வேண்டும். மனமாற்றத்தினால்  கடவுளின் ஆற்றலினுள் நாம் நுழைகிறோம். மனமாற்றத்தின் இனிமையை பலர் உணராது இருக்கின்றனர். மதுபானங்களின் விலையை அரசு அண்மையில் உயர்த்திய போது, குடிமகன்கள் வேதனைப்பட்டார்கள். ‘எங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை. எங்களுக்காக பேச யாரும் இல்லை’ என்று புலம்பினர்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், பேதுரு, ‘அவர் உங்களை மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய் காணும் வகையில் முழு முயற்சி செய்யுங்கள்’ என்று அறிவுரை வழங்குகிறார்.

இத்திருவகைக் காலத்தில், நம்மை இன்னும் தூய்மையாக்க முயற்சி செய்வோம். நம்மிடமுள்ள பள்ளத்தாக்குகள், குன்றுகள், கோணலானவை, கரடுமுரடானவை ஆகியவைகளை சீர் செய்வோம். வாகனத்தில் ஒருபாகம் கெட்டுப் போனாலும் வாகனம் ஓடாது. அதேபோல சிறு குறைகளும் இறைவனின் உறவை நிறைவு செய்யாது. 

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு B

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு
03 - 12 - 2017

எசா 63: 16 - 17; 64: 1,3 - 8; 1 கொரி 1: 3-9;   மாற் 13: 33-38

தூங்காமை கல்வி துணிவுடைமை  இம்மூன்றும்
நீங்காமை நிலனாள் பலருக்கு  (குறள் 383)

‘விழித்திருக்கும் போதே விழியை பிடுங்குவது’ என்பர். பெரும் தலைவர்களுக்கு வரும் பாதுகாவலர்கள், கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு, சுற்றிலும் கவனித்துக் கொண்டேயிருப்பர். விழிப்பாயிருந்தால் ஆபத்து களிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். கொடுக்கப்பட்ட பணிகளை நிறைவாகவும் சிறப்பாகவும் செய்யலாம்.

திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு இன்று, இறைவன் நம்மை சந்திக்கும் நேரம் நமக்குத் தெரியாத நிலையில் சோர்வுக்கும், சொகுசுக்கும் இடம் கொடுக்காது நம் சாட்சிய வாழ்வை தொடர்ந்து  கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் இன்றைய நற்செய்திப்பகுதி கூறுகிறது. நெடும் பயணம் செல்லவிருக்கும் ஒருவர் பணியாளர்களைப் பார்த்து  ‘விழிப்பாயிருந்து  உங்கள் பணியை செய்யுங்கள்’ என்று அறிவுறுத்தி செல்கிறார். எந்த நேரத்தில் அவர் வருவாரென்று தெரியாது. அவர் வரும்போது நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கக் கூடாது என்ற அறிவுரையுடன் முடியும் அந்த உவமையின் பொருளாக, இயேசுவும், ‘விழிப்பாயிருங்கள்’ என்று அறிவுறுத்துகிறார். விழிப்பாயிருங்கள் என்ற வார்த்தை நான்கு முறை இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. சிலருக்கு கிரகரி என்ற பெயர் உண்டு. விழித்திருங்கள் என்ற வார்த்தைக்கு பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை கிரகோரேயா (Gregoreo) என்பதாகும்.

‘மனதில சுருக்குனு இருந்தா தூக்கமே வராது’ என்பர். என் மகளுக்கு வேலை கிடைக்காத நிலையில் எனக்குத் தூக்கமே வரமாட்டேங்குது என்றார் ஒருவர். இறைவனுக்காக நம் பணிகளை செய்கிறோம் என்ற கருத்து நம் மனதில் நின்றால் விழிப்பாயிருக்கும் நிலை ஏற்படும். பொதுவாக தனது பணி என்றால் பொறுப்பாக செய்வார்கள். மற்றவர் பணி என்றால் ஏனோதானோ என்று செய்வர். அலுவலகங்களில் ஏதாவது சான்றிதழ் பெற வேண்டுமென்றால், பல காரணங்கள் கூறி உடனடியாக தரமாட்டார்கள். பணம் கொஞ்சம் கொடுத்து விட்டால் எல்லாம் விரைவாக நடக்கும்.

பத்து கன்னியர் உவமையும் (மத் 25: 1- 13) ‘விழிப்பாயிருங்கள் ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது’ (மத் 25:13) என்று விழிப்பாயிருந்து ஆண்டவருக்காக காத்திருக்கும் கருத்தை தெரிவிக்கிறது.

முதல் வாசகத்தில், ‘பாவியான மக்களை திருத்திட இறைவனே உதவி செய்ய வேண்டும்’ என்ற கருத்து இடம் பெறுகிறது. ‘ஆண்டவரே, நீர்தான் எங்கள் தந்தை. உம் ஊழியர்களை முன்னிட்டும், உம் உரிமை சொத்தாகிய குலங்களை முன்னிட்டும் திரும்பி வாரும்... நாங்கள் களிமண். நீர் எங்கள் குயவன்’. (ஏசா 63: 16-17; 64:8)

இரண்டாம் வாசகத்தில் பவுல், கொரிந்து மக்களுக்கு இறைவன் அளித்துள்ள கொடைகளுக்காக நன்றி கூறுகின்றார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்காக காத்திருக்கும் உங்களுக்கு அருள்கொடை எதிலும் குறையே இல்லை (1 கொரி 1:7).
   
மூன்று வயது பையனுக்கு பிறந்த நாள். அவரின் மாமா, ஒரு கையில் 500 ரூபாயை வைத்துக் கொண்டு, மற்றொரு கையில் தங்க மோதிரத்தை வைத்துக் கொண்டு, ஏதாவது ஒன்றை மட்டும் நீ எடுத்துக் கொள்ளலாம் என்றார். அப்பையன் விழிப்பாக, ‘மோதிரத்தை ரூபாய் நோட்டில் மடித்து ஒன்றாக கொடுங்கள்’ என்றான் விபரமான பையன்.
நிரந்தர விழிப்புணர்வு தான் நிரந்தர வளர்ச்சியை தரும்.                                  -  ஹோம்டோன் ஹிங்கிலி.

சுதந்திரத்தினை காப்பதில் நாம் விழிப்புணர்வுடன் இல்லை யயன்றால் பெரும்பான்மையானவரின் அதிகாரம் ஒரு சிலர் கைகளில் சென்றுவிடும். -  எவன்டெல் பிலிப்ஸ்

போர், அமைதி ஆகியவைகளின் விதைகள் மற்றவர் களிடத்தில் விதைக்கப்பட்டுள்ளன. எனவே விழிப்பாயி ருங்கள்.  - கிரிபோர்ட் கோகன்

Thursday, 2 November 2017

பொதுக்காலம் 33ம் ஞாயிறு

பொதுக்காலம் 33ம் ஞாயிறு
அருட்பணி. மரிய அந்தோணி ஜேம்ஸ்,
                                                                    குடந்தை. 
 நீ.மொ 31: 10-13, 19-20,30-31;  1 தெச 5: 1 - 6;      மத் 25: 14-30

உழைப்பின்  உயர்வு

  வாழ்க்கை வாழ்வதற்கே! வெற்றி நிச்சயம் நமக்கே! என்று சில ஆண்டுகளுக்கு முன்பு தொலைகாட்சிப் பெட்டியிலே ஒளிப்பரப்பபட்ட  விளம்பரங்களின் பாடல் நினைவுக்கு வருகிறது. வாழ்வை வாழ வேண்டுமென்றால், அவ்வாழ்விலே  ஆர்வமும், பிடிப்பும் இருக்க வேண்டும். அப்பிடிப்பு இருக்க வேண்டுமெனில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற ஆசை வேண்டும். அவ்வாசையானது  உழைப்பாக உருவெடுக்கையிலே உயர்வு தானாகவே தேடி வந்துவிடும். திருவழிபாட்டின் பொதுகாலத்தின் 33‡ம் ஞாயிறில், இறைவன் நம்மை சிந்திக்க அழைப்பு விடுப்பது யாதெனில், உழைப்பே ஒருவரின் உயர்வுக்கு அஸ்திவரமாக அமைகிறது.

சிறுவயதிலே, பள்ளிப்பருவங்களில், நீ என்னவாக எதிர்காலத்தில் உருவாக விரும்புகிறாய் என்றால் பவ்வேறு விதமான பதில்களை மாணவர்கள் கூறுவார்கள். அவ்வார்த்தைகள் அனைத்தும் முழுமையடைந்து வெற்றிப் பெருநல் என்பது  அவர்களது எண்ணத்திலும், உழைப்பிலுமே அடங்கியுள்ளது.

பட்டுப்புழு ஒன்று தனது பட்டுநூலை கட்டிக்கொண்டிருந்தது அதைக் கண்ட சிலந்தி பூச்சி சொன்னது, நீ மட்டும்தான் நூல் கட்டுவாயா நானும் கட்டுவேன் என்று விறுவிறுவென, தனது சிலந்தி கூட்டினை கட்டியதும், அந்த கூட்டிற்கு  வீட்டின் விலாசத்தையும் சேர்த்து எழுதியது. பின்பு நக்கலாக, என்ன பட்டு புழுவாரே  நான் எனது கூட்டை கட்டி முடித்துவிட்டேன். நீ எப்போது  முடிப்பாய் என்றது. அதற்கு பட்டு பூச்சி சொன்னது. உன் வலையும், என் வலையும் ஒன்றல்ல, உன் கூடானது பூச்சிகளை பிடிக்கவே, மக்களும் உன்னை நூலாம்படை எனச்சொல்லி விளக்கமாத்தால் அடித்துக் களைப்பார்கள் ஆனால் என் நூலையோ பத்திரப்படுத்தி வைத்து அணிந்துக்கொள்வார்கள். நூல் ஒன்றாக இருப்பது போல் தோன்றினாலும், என் உழைப்பே எனக்கு உயர்வையும் மதிப்பையும் கொண்டு வருகிறது என்றதாம்.

ஆம், அன்பு மக்களே, நாமும் நமது வாழ்விலே பல்லேறு விதங்களில் தேவையின் அர்த்தம்  அறியாமல் உழைக்கின்றோம். இன்றைய நற்செய்தியிலும் இயேசு கூறுகின்ற உவமைகளில் நாம் காண்பதும் அதுவே. வெளியே பயணம் மேற்கொண்ட தலைவர், தன் பணியாட்களுக்கு ஐந்து, மூன்று, ஒன்றென தாலந்துகளை கொடுக்க, அவர்களுள் சிலர் அந்த தாலந்துகளின் மதிப்பினை கூட்டுகின்றனர். சிலர் உழைக்கின்றனர். ஆனால் உழைப்பின் பயனேதும் இல்லாமல் சிலந்தி  தான் எடுத்த வாந்தியால் கட்டிய கூட்டை போன்று ,  வெளிப்புறத் தோற்றம் அழகு நிறைந்திருப்பினும்  தன் வாழ்வால் உயர்வு பெறாமல் அழிந்து,  பிறர் வாழ்வு அழிகின்ற பணியாளனின்  நிலையை நாம் வாசகத்தின் வழியாக கேட்டறிகின்றோம்.

இங்கே தாலந்து என்று குறிப்பிடப்படுவது இறைவன் நமக்கு கொடுத்திருக்கும் திறமைகளும் கொடைகளும் 1கொரி 12:4‡11 புனித பவுல் அடிகளார் குறிப்பிடுவது போன்று  நமக்கு இறைவன் பல்வேறு விதமான கொடைகளையும், திறமைகளையும் வழங்கியுள்ளார். சிலருக்கு நல்ல ஞானத்தையும், சிலருக்கு நன்கு பேசும் திறமையும் என தூய ஆவியாரின் சிறப்பு கொடைகளான தனது கடிதத்தில் பட்டியலிடுகிறார்.

நற்செய்தியில் ஐந்து தாலந்து பெற்ற மனிதர் தாலந்தின் மதிப்பை உணர்ந்து,  தனக்கு கொடுத்த வாய்ப்பினை பயன்படுத்தி தன் தலைவரிடம் மதிப்பு பெற வேண்டுமென உணர்ந்து,  அதற்கு உழைப்பே சிறந்ததென்று மேலும் ஐந்து தாலந்தை சம்பாதித்தான். மூன்று தாலந்து வாங்கியவனும் அவ்வாறே செய்தான். ஆனால் ஒரு தாலந்து வாங்கியவனோ,  எப்படியயன்றால், சில நண்பர்கள் நடு இரவு வரை நன்றாக குடித்து கும்மாளமிட்டுவிட்டு நதியின் அக்கரையில் இருந்து துடுப்பு போடுகிறார்கள். அதிகாலை வந்துவிட்டது காலை வெளிச்சத்தில் பார்க்கிறார்கள் படகு அதே நங்கூரத்தில் கட்டிய கயிற்றை அவர்கள் அவிழ்க்கவில்லை. இரவு முழுவதும் துடுப்பு போட்டும் ஒரு பயனும் இல்லை, எல்லாம் வீண் அநேகர் நிலைமை இவ்வாறே உள்ளது. பத்து வருடம் கழித்து நண்பர் பார்த்து, எப்படி இருக்கிறாய்? என்றால் அப்படியே இருக்கிறேன் என்பார். அதாவது அதே இடத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல், வயது மட்டும்தான் கூடுதலாகும். அதுபோன்று தான் அவனுடைய செயல்பாடுகளும் தனக்குக் கொடுத்த வாய்ப்பினை பயன்படுத்தாமல் எதற்கும் பயனில்லாமல் நேரத்தையும் வீணடித்து தன் தலைவரின் குணம் இவ்வாறு எனத் தெரிந்தும் உழைத்து முன்னேறாமல் சோம்பேறியாய் இருக்கின்றான்.

உலக வாழ்விலே உழைத்து முன்னேறிய தலைவர்கள் பலர். ஆங்கில இலக்கியம் போற்றும் ஷேக்ஸ்பியர் குதிரை லாயத்தில் குதிரை சாணம் அள்ளிக் கொண்டிருந்தவர். அமெரிக்காவின் 16வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் சட்டம் படிக்க புத்தகங்களை வாங்க பணமில்லாமல் கடன் வாங்கி படித்தவர். புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்த நியூட்டன் சிறுவயதில் மாடு மேய்த்தவர். இவ்வாறாக நாம் வியக்கின்ற மாபெரும் மனிதர்கள் தங்கள் உழைப்பினால் உயர்ந்து வரலாற்றில் தடம் பதித்துள்ளார்கள் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

இன்றைய திருவழிபாடும் நமக்கு உணர்த்துவதும் அதனையே. தாலந்து என்னும் திறமை எல்லோருக்கும் புதைந்திருக்கிறது. திறமைகளில்லாத மனிதர்கள் இல்லை. ஒவ்வொருவருக்குள்ளும் உள்ள தன் திறமையை பயன்படுத்தி உழைத்து தனது முன்னேற்றத்தை தீர்மானிக்கவும்,  தாலந்து ஒப்படைத்து சென்று மீண்டும் திரும்பி வந்து கேட்ட நேரத்தில் எதிர்பார்க்காத பணியாளனைப் போல் அல்லாமல்,  எந்த நேரத்திலும் இறைவனை சந்திக்க தயாரோடு  நாம் இருக்கவும், திருமுழுக்கினால் பெற்ற இறைவிசுவாசத்தை தனது திறமைகளையும், கொடைகளையும் பயன்படுத்தி, உழைப்பினால் உயர்வு பெறவுமே நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

இறைவன் தனக்கு அளித்துள்ள சிறப்பு கொடைகள் யாது, அவற்றின் மூலம் எனது பயன் என்ன என்றெல்லாம் அறிந்து, நமது உழைப்பால் நாமும்  உயர்ந்து, பிறரையும் வாழ வைக்கின்ற மனிதர்களாய் வாழ்ந்திட  இறைவனின் அருள் வேண்டுவோம். உழைப்பால் உயர்வு பெற்றிட நம்மையே இறைவன் பாதத்தில் அர்ப்பணிப்போம்.

பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 32ஆம் ஞாயிறு
12 - 11 - 2017
சா ஞா 6: 12 - 16; 1 தெச 4: 13 - 18;  மத் 25: 1 - 13;

தற்போது வாகனங்கள் பெருகி விட்டன. விரைவாக செல்வதற்காக உண்டான இவ்வாகனங்கள், நேரத்திற்கு செல்ல முடியாத நிலையில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் அதிகமாகி விட்டன. 22.6.2017 ஆங்கில இந்து நாளிதழில் வெளியான செய்தி. இந்தியாவில் இரயில் விபத்துக்கள் 55 - 60 வயத்துக்குட்பட்ட ஓட்டுனர்களின் கவனமின்மையால் நடந்துள்ளன. 74 சதவிகித விபத்துக்குள் இந்த கவனமின்மையால் நடந்துள்ளன. இன்னும் அதிர்ச்சியான செய்தி. இந்த விபத்துக்கள் பயணிகளின் இரயிலில் நடந்துள்ளன.

ஆண்டவரின் வருகைக்காக எப்போதும் ஆயத்தமாயிருக்க வேண்டும். நம் நற்செயல்கள்தான் இறைவன் முன் வெகுமதியைக் கொடுக்கும். மற்றவர்களின் நற்செயல்களால் நாம் பயனடைய முடியாது. பத்துகன்னியர் உவமை மேற்கண்ட கருத்çத்தான் தெரிவிக்கிறது. மத் 24:45-51 இல் தன் வீட்டு உடமைகளுக்குப் பொறுப்பான அதிகாரியை நியமித்த  தலைவர், அவர் வரும் நேரத்தில் பணி செய்துக் கொண்டிருப்பவர் பாராட்டும்,  பதவி உயர்வும் பெறுகிறார் என்ற உவமையும்,  பத்துக் கன்னியர் உவமையும்  ஒத்து செல்கிறது எனலாம். லூக் 12: 35-38 இல் திருமண விருந்திற்குச் சென்ற தலைவருக்காக விழித்திருந்து காத்திருக்கும் பணியாளர் உவமையும் பத்துக் கன்னியர் உவமை ஒத்ததாக காண முடியும்.

விழிப்பாயிருப்பதற்குமேல், ஆயத்தமாயிருக்க வேண்டும் என்ற கருத்து இங்கு, அழுத்தமாக கூறப்படுகிறது. முதல்வாசகத்தில் நாம் ஞானத்தைத் தேடினால், ஞானம் நம்மைத் தேடி வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இரண்டாம் வாசகத்தில் பவுல் அடிகளார் உயிர்ப்பினைப் பற்றி விளக்குகிறார். உலக முடிவில், முன்பே இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர்,  பிறகு உயிரோடிருப்பவர் வானத்திற்கு எடுத்துச் செல்லப்படுவர் என்று விளக்குகிறார்.

சொகுசு தேடும் பண்பினால் சோம்பல் உண்டாகிறது. சோம்பலினால் விழிப்புணர்வு தளர்ந்துபோய் விடுகிறது. நம் நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று தற்போதைய மத்திய அரசு போர்க்  கொடி உயர்த்தியிருக்கிறது. ஆனால் அடிமட்ட அளவில் இந்த ஊழல் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. எந்த அலுவலகத்திலும் காசை காட்டினால்தான் காரியம் நடக்கிறது.

ரேசன் கார்ட்டில் ஒருவரின் புகைப்படத்திற்குப் பதிலாக செருப்பு இடம் பெற்றிருக்கிறது. இன்னுமொரு ரே­ன் கார்டில் ஒரு நடிகையின் போட்டோ இடம் பெற்றிருக்கிறது. தயாரிக்க வேண்டிய அலுவலர்கள் சொற்ப சம்பளத்திற்கு ஆள்களை நியமித்து, அவர்கள் செய்ய வேண்டிய வேலையை இவர்கள் செய்ய கூறுவார்கள். சொற்ப ஊதியம் பெற்றவர்  சோர்வான நிலையில் வேலை செய்வர். எனவேதான் இத்தகைய கேவலமான தவறுகள் நடைபெறுகின்றன.

ஆயத்தமாயிருந்தால் எதிர்பாராத நேரத்தில் வரும் இறைவனை சந்திக்கலாம். ஆயத்தமாயிருந்து கருமமே கண்ணாயினராக நாம் இருந்தால், வெற்றிகள் நம்மை தேடி வரும். கேரளாவிலிருந்து பீடம் செய்ய ஆள்கள் குடந்தை வந்திருந்தார்கள். குடந்தை பங்கு குரு சொன்னார். கேரளாகாரர்கள் வேலை செய்யும் போது பேசுவதேயில்லை. நம் ஆள்கள் ஊர்கதை உலகத்துக் கதைகளையயல்லாம் வேலை நேரத்தில்தான் பேசுவார்கள். பெரிய மருத்துவமனை அது. அங்கு பரிசோதனைக்காக இரத்தம் எடுத்த போது, அங்குள்ள செவிலியர் பிள்ளைகள் சிரித்து விளையாடிக் கொண்டு செய்தார்கள்.

நம் நாட்டிற்கு விழிப்புக் கலாச்சாரம் மிக அவசியம். விழிப்பின் வழியாகத்தான் உயர்ந்து நாம் நிற்க முடியும்.

பொதுக்காலம் 31 ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 31 ஆம் ஞாயிறு 
 ( 05 - 11 - 2017)
மலாக் 1:14 -2: 1-2, 3-10;  1 தெச 2: 7-9, 13;   மத் 23: 1 - 12

ஒரு நடிகையை  பெரிய நகைக் கடைத் திறப்பு விழாவிற்கு அழைத்திருந்தார்களாம். விமானத்தில் நடிகை வந்து விட்டார். ஆனால் விமான நிலையத்திலிருந்து கடைக்கு அழைத்துவர ஏ.சி. கார் வந்தால்தான் வருவேன் என்று அடம்பிடித்தார் நடிகை.  புதிதாக ஏ.சி. கார் ஏற்பாடு செய்ய சில மணி நேரங்கள் ஆனதாம். இப்போது பந்தாவிற்குதான்  மரியாதை. எளிமைக்கு அவமரியாதை தான். பந்தா என்ற மதிப்பினைப்  பயன்படுத்தி பலர் மக்களை ஏமாற்றி விடுகின்றனர். வருமான வரி அலுவலர் என்று ஆடம்பரமாக வந்து, வீட்டினை சோதனை செய்யும் நேரத்தில், வீட்டினருக்கு சந்தேகம் எழ, அதிகாரிகளுக்குத் தெரிவிக்க, அவர்களின் வெளிவேடம் தெரிய வர, வேடமிட்டு வந்தவர்கள் பயங்கரமாக அடி வாங்கினார்கள்.

விழாக்களில் போட்டிப் போட்டுக் கொண்டு ஆடம்பர அலங்காரங்கள், வேடிக்கைகள், கேளிக்கைகள் நடைபெறுகின்றன. ஒரு பெரிய பணக்கார வீட்டுத் திருமணம். பல அருள்பணியாளர்கள் திருப்பலியில் பங்குப் பெற்றனர். பிரபலப்  பாடகரின் கச்சேரி, குதிரை சரட்டு வண்டியில் ஊர்வலம், ஒருவருக்கு 1000 ரூபாய் மதிப்புள்ள உணவின் விருந்து. இப்படியாக எல்லோரும் வியக்கும் வண்ணம் பெருமையுடன் திருமணம்  நடந்தது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு ஒரே வாரத்தில் மணமக்கள் பிரிந்து விட்டனர். வரதட்சணைப் பொருள்களையயல்லாம் எடுத்து சென்று விட்டனர். ஆடம்பரத்தின் பயன் என்ன?

பரிசேயரும் மறைநூல் அறிஞரும் கற்றறிந்த சமயத்  தலைவர்களும்  மக்களுக்கு அறநெறிகளைப் போதிப்பவர்கள். சிறப்பாக அவர்கள் போதிக்கும் பணியை செய்து வந்தார்கள். இயேசு, திருமுழுக்கு யோவனைப் போல பயப்படாமல், அந்த தலைவர்களின் வெளிவேட வாழ்க்கையை கண்டித்துப் பேசுகிறார். அவர்கள் போதித்ததைப் போல வாழ்வதில்லை. இறைவனின் சவாலான வழியை மக்களுக்குக் காட்டிவிட்டு,  அதிலிருந்து  ஒதுங்கிக் கொள்கிறார்கள். மக்கள்மீது சுமைகளை கட்டி விடுகிறார்கள். விரலால் கூடத் தொட முன் வரமாட்டார்கள் என்கிறார் இயேசு. இரண்டாவது, மனிதர்களின் கவனத்தைப் பெற நெற்றியிலும் கையிலும் கட்டிக் கொள்கின்ற பட்டயங்களையும், அங்கிகளின் இறுதியில் சேர்க்கப்படும் குஞ்சங்களையும், மக்களின் கண்களில் நன்கு படும்படி பெரிதாக்கிக் கொள்கிறார்கள். மூன்றாவதாக, மனிதர் தரும் பெருமையை, பொது இடங்களில் (விருந்து, தொழுகைக் கூடங்கள்) விரும்பிப்  பெறுகிறார்கள். நான்காவதாக, தங்களைப் பெருமையுடன் மற்றவர்கள், ரபி, தந்தை, ஆசிரியர் என்று அழைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தாங்கள் செய்ய வேண்டியத் தொண்டினை மறந்து  பெருமையை மட்டும் விரும்பி தேடினார்கள்.

மத் 23: 1-36 என்ற பகுதி இயேசு பரிசேயர்களைக் கண்டிப்பதைக் காட்டுகிறது. பரிசேயர்கள், ரபி, தந்தை, ஆசிரியர் என்று அழைக்க விரும்பினர். ஆனால் அவர்கள் வெளிவேடக்காரர் (5 முறை), குருட்டு வழிக்காட்டிகள் (2 முறை), குருடர், குருட்டுமடையர், வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள், பாம்புகள், விரியன் பாம்புக் குட்டிகள் என்று மிகக் கடினமாக அவர்களைச் சாடுகிறார்.

முதல் வாசகத்தில், ‘நீங்கள் செவிசாய்க்காவிடில் உங்கள்மேல் சாபத்தை அனுப்புவேன். நான் செய்த உடன்படிக்கையை பாழாக்கி விட்டீர்கள். ஆதலால் நானும் உங்களை மக்கள் அனைவர் முன்னிலையில் இழிவுக்கும் தாழ்வுக்கும் ஆளாக்குவேன்’ என்ற வாக்கியங்களைக் கூறியிருப்பதைப் பார்க்கிறோம்.

இரண்டாம் வாசகத்தில், ‘நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக் கொண்டீர்கள்’ என்று பவுல் தெசலோனிக்க மக்களைப் பாராட்டுகிறார். 1 சாமு16:7இல் ‘மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர். ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்’ என்று கூறப்பட்டுள்ளது. மனிதர் முன், பெருமையை, மனிதரை ஏமாற்றும் கருவியாக  மனிதர் பயன்படுத்துகின்றனர். மனிதர் தரும் பெருமை கானல் நீர் போன்றது. தற்போது, வெளித்தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேல்நாட்டு நாகரீகத்தைப் பின்பற்றி, விதவிதமான ஆடைகளை அணிகிறார்கள். பெண்களுக்கு நகையின் மீது மோகம், உள்ளாந்திர உறவுகள் குறைகின்றன. நாகரீகம் வளர வளர, உள்ளந்திறந்த உரையாடல்கள், பகிர்தல் ஆகியவை குறைகின்றன. தங்களின் வாழ்வை இரகசியமாக வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். நம் குடும்ப சிக்கல்கள் மற்றவர்களுக்குத் தெரிந்தால் நம் மானம் மரியாதை என்னாவது? என்று மிகவும் கவனமாயிருப்பார்கள். ஒரு நகைச்சுவையில், பெண் பார்க்கப்  போகிறார்கள். பெண் நன்கு அலங்கரித்து வருகிறாள்.  மாப்பிள்ளையின் நண்பன் கூறுகிறான். இப்போது டபுள்கோட் அடித்து வந்திருப்பாள், மேக்கப்பை களைந்து வழக்கமான நைட்டியுடன் வரச்சொல் என்கிறான். மாப்பிள்ளையும் அப்படியே கூறுகிறான். பெண்பார்க்கும் நிகழ்வு சண்டையின் நிகழ்வாக மாறுகிறது.

  நகைச் சுவையின் உணவு வெளிவேடம்          - மோரோக்கா.

Tuesday, 3 October 2017

பொதுக் காலம் 29ஆம் ஞாயிறு A

அன்பே கடவுளுக்குரியது
பொதுக் காலம் 29ஆம் ஞாயிறு A
29 - 10 - 2017.  
எசா 45 : 1,4-6; 1 தெச 1: 1 -5; மத் 22: 15 - 21 
- அருட்பணி. மரிய அந்தோணி ஜேம்ஸ்  

இன்றைய திருவழிபாடு நமக்கு கூறுகின்ற செய்தி, இறைவனுக்குரியதை இறைவனுக்கும், மனிதருக்குரியவற்றை மனிதருக்கும் கொடுப்போம் என்பதாகும்.

முதல் வாசகத்தில் யாவே இறைவன் தான் தேர்ந்து கொண்ட மக்களை வழிநடத்த, பிற இனத்தவரையும் பயன்படுத்துகிறார் என்பதைப் பார்க்கிறோம். இறைவன் அவர்களை அன்பு செய்வதன் வெளிபாடாக பிற இனத்தவரான சைரஸ் என்ற அசீரிய மன்னன் வழியாக பாபிலோனிய அடிமைத் தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்களை விடுவித்தார். அதே அன்பு, இரண்டாம் வாசகத்தில் விளக்கப்படுகிறது. கிறிஸ்துவ வாழ்வு  கிறிஸ்துக்குள் வாழ்கின்ற வாழ்வாக, அன்பினை மையமாக வைத்து வாழப்படுகின்ற வாழ்வாக அமைய வேண்டுமென்று, தெசலோனிய மக்களுக்கு பவுல் அடிகளார் எடுத்து கூறுகிறார். ஆக, இந்த மண்ணக அரசு அன்பினை மையமாய் வைத்து யசு இம்மண்ணிலே நிலை நாட்டப்படுகிறது. ஆனால் அன்பினை செயல்படுத்த தாமதித்த, சதுசேயர்கள் மற்றும் பரிசேயர்களை, இயேசு பல்வேறு இடங்களில் வெளிவேடக்காரர்கள் என்றெல்லாம் கண்டிக்கிறார். இதில் ஆத்திரமடைந்த, வெறுப்புற்ற பரிசேயர்கள், எல்லா மக்களாலும் போற்றப்பட்டும், தன்னை இறைவனின் மகன் என்று உறுதிப்படுத்திய இயேசுவை, எவற்றிலாவது சிக்க வைத்து சரியான தண்டனை வாங்கி தர வேண்டுமென்று திட்டமிடுகிறார்கள். ஆனால் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவராக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இயேசுவின் போதனைகள் அமைந்ததால் அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை.

ஆனாலும் எல்லாவற்றிலும் நீதியோடும், நேர்மையோடும் செயல்படுகின்ற இயேசுவிடம் சிக்கலான கேள்விகளை கேட்கின்றபொழுது, எந்த வகையிலாவது அவர் சிக்கி விடுவார் என்று எதிர்ப்பார்த்தனர். பின்வரும் மூன்று முக்கிய பிரச்சனைகளை தேர்ந்தெடுத்து முன் வைத்தனர். (மத் 22: 15 - 22) யாருக்கு வரி செலுத்துவது, (மத் 22: 23‡33) மறுமணம் செய்தவர் விண்ணகத்தில் யாருடைய மனைவியாவார், (மத் 22:34-40) எது சிறந்த கட்டளை ஆகியவையாகும். செசாருக்கு வரி செலுத்த வேண்டுமா? என்பது ஆபத்தான கேள்வி. பாலஸ்தீன் நாடு உரோமை அரசின் எல்லைக்கு உட்பட்டதாக இருந்தது. அந்த பகுதியை சார்ந்த மக்கள் மூன்று விதமான வரிகளை செலுத்த வேண்டியிருந்தது. நிலவரி, வருமான வரி மற்றும் குடிமக்கள் வரி ஆகியவை. இவ்வகை வரிகளில் இன்றைய நற்செய்தி வாசகத்தில் குறிப்பிடப்படுவது குடிமக்கள் வரி. உரோமை ஆட்சியுரிமைக்கு உட்பட்ட மக்கள் என்பதால் உரோமை மன்னரின் முகம் பதித்த நாணயத்தை அவர்கள் வரி செலுத்துப் பயன்படுத்த வேண்டும். ஆகவே பரிசேயர்களும் ஏரோதியர்களும், இக்கேள்வியை கேட்கின்றனர். இயேசுவும், அவர்கள் குறை காணமுடியாத வகையில் சீசருக்குரியதை சீசருக்கும், கடவுளுக்குரியதை கடவுளுக்கும் என்று கூறுகிறார்.

கல்லூரி நூலகங்களில் உள்ள புத்தகங்களை அதனதன் கருத்தியல்களுக்கேற்ப அதற்கென்ற உள்ள பிரிவுகளில் வைக்குமாறு ஆசிரியர் கூறுவர். இயேசுவும் சீசரின் உருவம் பதித்த நாணயத்தை சீசருக்கு கொடுங்கள் என்கிறார். பொன், பொருள் எதுவாக இருந்தாலும் இந்த மண்ணுலக அரசிடம் வரியாகவோ அல்லது வேறுவகையிலோ  செலுத்தலாம். காரணம் அரசாட்சிக்குட்பட்ட மக்கள்மீது அரசுக்கு அதிகாரம் உண்டு. கடவுளுக்குரியது என்பதை பலவாறு விளக்குவர். எல்லாமே கடவுளின் ஆட்சிக்கு உட்பட்டது என்றும் அனைத்தும் இறைவனை முன் வைத்து செயல்பட வேண்டும் என்பது ஒரு விளக்கம். அடுத்து இறைவனின் சாயலை கொண்ட மனிதரை அன்பு செய்து வாழ்வதும் இறைவனுக்குரியதாகும். 

  அதனைத்தான் பத்துக்கட்டளைகளிலும் கூறப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உலகில் நாம் கடவுளுக்குரியதை கொடுக்க வேண்டுமென்றால் பணமோ? வேறு பொருளோ? அல்ல. மாறாக அன்பு நிறைந்த உள்ளங்களே, கடவுள் விரும்புவதாகும். கிறிஸ்துவ மதிப்பீடுகளான இரக்கம், தாழ்ச்சி, பணிவு, பொறுமை போன்ற பண்புகளை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பிறர்நலனுக்காக, இறைசாயலில் உள்ள நம்மை போன்ற மனிதர்களிடத்தில் காண்பிக்கின்ற பொழுது, இறைவனை எல்லாவற்றிற்கும் மேலாக முதன்மைப்படுத்துவோம். கடவுளுக்குரியதை கடவுளுக்கு கொடுக்கின்றோம். ஆகவே அன்பே உருவான இறைவனைப் போன்று நாமும் ஒருவரையயாருவர் அன்பு செய்து நாமனைவரும் இறைவனின் சாயல்கள் என்பதை எடுத்துரைப்போம்.

பொதுக்காலம் 27 ஆம் ஞாயிறு A

பொதுக்காலம் 27 ஆம் ஞாயிறு A
08 - 10 -2017
 எசா 5:1-7; பிலி 4:6-9; மத் 21: 33-43;

கொடுக்கப்படவே நலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன

வாட்ஸ் அப்பில் அண்மையில்  ஒரு நிகழ்ச்சி சொல்லப்பட்டிருந்தது. ஒரு பூங்காவில் ஓரிடத்தில் ஒருவர் மிகவும் சோகமாக அமர்ந்திருந்தார். அப்போது ஒருவர் அவரிடம் வந்து, ‘ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். ‘நான் ஒரு தொழிற்சாலை நடத்தி வருகிறேன். இவ்வருடம் 50 கோடி ரூபாய் நஷ்டமாகி  விட்டது. என்ன செய்வது என்று  தெரியவில்லை’ என்றார். ‘கவலைப்பட வேண்டாம். நான் உனக்கு உதவி செய்கிறேன். இதோ ரூ150/‡ கோடிக்கான காசோலை. இதை வைத்து மகிழ்ச்சியாக தொழில் செய். ஆனால் அடுத்த வருடம் இதே நாளில் இங்கு வருவேன். அப்பணத்தை திருப்பி தந்திட வேண்டும்’ என்று ரூ150/‡ கோடிக்கான காசோலையைத் தந்துவிட்டு சென்றார். இவர் புத்துணர்ச்சி பெற்று வீடு திரும்பினார். அந்த காசோலையை பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு, அடுத்த நாள் தன் தொழிலாளர்களை அழைத்து, இந்த ஆண்டு 50 கோடி ரூபாய் நஷ்டமாகி விட்டது. இவ்வாண்டு நாம் கடினமாக உழைத்து,  நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என்றார். எனவே அந்த ஆண்டு பெரு முயற்சி எடுத்து உழைத்தனர். 155 கோடி லாபம் கிடைத்தது. எனவே பூங்காவிற்கு பெற்ற காசோலையைத் திருப்பி கொடுக்க சென்றார். அப்போது ஒரு பெண்ணுடன் அவர் வந்தார். ஆனால் திடீரென்று அங்கிருந்து ஓடிவிட்டார். அந்த பெண் மட்டும் வந்தார். அப்பெண்ணிடம், அவர் எங்கே சென்றார்? என்று கேட்டார். அப்பெண், ‘ஏன் அவர் எதுவும் தொந்தரவு கொடுத்து விட்டாரா? அவர் ஒரு பைத்தியம். பார்ப்பவர்களிடம் பழைய காசோலையை கொடுத்து விடுவார்’ என்றார். பணம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் முயற்சியால் வெற்றி பெற்றார்.

இன்றைய நற்செய்தியில், இயேசு, கடவுள் கொடுக்கும் வரங்களிலிருந்து நாம் பலன்தர வேண்டும் என்கிறார்.  பலன் தராதவர்கள் வெறுமைக்கு ஆளாவார்கள் என்ற கருத்தையும் தருகிறார். எல்லா வசதியும் நிறைந்த  திராட்சைத் தோட்டத்தை குத்தகைக்கு விடுகிறார். பலன்தர வேண்டிய காலத்தில் பலன் பெற்று வர தலைவர் தம் பணியாளர்களை அனுப்புகிறார். குத்தகைகாரர்கள் பலன்தர மறுத்ததோடு, தலைவர் தன் பதிலாளிகளாக அனுப்பிய பணியாளர்களை அவமானப்படுத்தி துன்புறுத்துகின்றனர். கடைசியாக தலைவர் அனுப்பிய அவரின்  மகனையே  கொலை செய்கின்றனர். இஸ்ரயேல் மக்கள், எவ்வாறு கடவுள் தந்த நலன்களை புறக்கணித்தனர், கடவுள் அனுப்பிய இறைவாக்கினர்களையும் அவமதித்தனர். கடைசியாக இறைமகனாகிய இயேசுவையும் கொன்றனர் என்ற இயேசுவின் காலத்தின் நிலவிய சூழலை சுட்டிக் காட்டும் விதமாக இந்த உவமை அமைந்திருந்தது. முதல் வாசகத்தில் இஸ்ரயேல் குலத்தாரே, அவர்களிடமிருந்து நீதி, நேர்மை விளையுமென்று இறைவன் எதிர்பார்த்திருந்தார். ஆனால் விளைந்ததோ, இரத்தப்பழி முறைப்பாடு என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது.

வாய்ப்புகள் என்ற நதியில்தான் நம் வாழ்க்கைப் படகை செலுத்த வேண்டும். வாய்ப்புகளைக் கண்டு கொள்ளாதவர் வளர முடியாது. உயர முடியாது. தாலந்து உவமையும் (மத் 25:14 - 30). இன்றைய நற்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள திராட்சைத் தோட்ட உவமைக்கு ஒத்தது என்று சொல்லலாம். கொடுக்கும் தாலந்தை பெருக்கியவர் பாராட்டும் பரிசும் பெறுகின்றனர். பெற்ற தாலந்தை முடக்கி வைத்தவர் கண்டனத்திற்கு ஆளாகின்றார்.

நம் ஒவ்வொருவருக்கும்  பல நலன்கள், திறமைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்நலன்களைக் கொண்டு பல நலன்களைப் பெருக்க வேண்டும். பெற்ற நலன்களிலிருந்து மற்றவர்களுக்கு நலன்கள் கொடுக்கப்பட வேண்டும். இன்றைய நற்செய்திப்பகுதியில் கூறப்பட்டுள்ளது போல, பலன்களை குத்தகையைப் போல் தர வேண்டும். பெற்ற நலன்களை நமக்குள்ளே முக்கிக் கொள்ளும் இயல்பு நம்மிடையே உள்ளது.

திறமைகளை எப்படி பயன்படுத்துகிறோம்  என்பதில்தான் மகிழ்ச்சி பிறக்கிறது.      - ஹர்மன் ஹஸ்ஸே.

எல்லோரிடமும் திறமைகள் உள்ளன. ஆனால் ஒரு சிலர்தான் வீரத்தோடு அது காட்டும் சவாலான வழியில் நுழைகிறார்கள்  
- எரிகாயுங்.                                      

Saturday, 30 September 2017

பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு A

பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு
01 - 10 - 2017  ச.இ.அ. 
எசே 18: 25-28; பிலி 2: 1 -11; மத் 21: 28 32;

‘நடித்தவன் நாட்டை ஆள்கிறான். படித்தவன் மாடு மேய்க்கிறான்’ என்று நகைச் சுவையாகக் கூறுவதிலும் ஓர் உண்மை இருக்கிறது. உண்மையில்லாததை உண்மையயன்று, அதன் வெளிபகட்டினால் நம்புகிற இயல்பு மனிதரிடத்தில் புதைந்திருக்கிறது. அந்த இயல்பிற்கு உரம்போட்டு பலர் பயன்பெறுகின்றனர். தமிழ்நாட்டில் பெயர் பெற்ற நடிகைக்கு ஒரு படத்திற்கு 4 கோடி ரூபாய் சம்பளம். முன்னணியில் நிற்கும் நடிகருக்கு 100 கோடி ரூபாய் சம்பளம். கனவு உலகத்தை நனவு உலகமென்று குறிப்பாக நம் தமிழக மக்கள் நினைக்கிறார்கள்.

இயேசுவுக்குப் பிடிக்காத மிகவும் கசப்பான ஒன்று, வெளிவேடம் போடுவது. முக்கியமாக, சமய சமுதாயத் தலைவர்கள் தாங்கள் போதிப்பதை வாழாமல் வெளி ஆடம்பரத்தின் வழியாக மக்களின் மதிப்பினைப் பெற்று வாழ்ந்தார்கள். அவர்கள் சமுதாயத்தில் முக்கியமானவர்கள். அதையயல்லாம் பொருட்படுத்தாது துணிந்து, இயேசு அவர்களின் செயல்பாடுகளைக் கண்டித்தார். எனவே பரிசேயர் மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியவர்களுக்கும் இயேசுவுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. மணமுறிவு (மத் 19: 3 -9), அரசுக்கு வரிகட்டுதல், பாவ மன்னிப்பு (மத் 9: 3-6), நோன்பு இருத்தல்  (மத் 9:14 -17),  பாவிகளை வரவேற்றல், ஓய்வுநாளை அனுசரித்தல் (மத் 12:1 -14), உயிர்த்தெழுதல் (மத் 22: 23-33)  ஆகியவைகளில் அவர்கள் கருத்து  வேறுபட்டு, அவர்மீது குற்றம் காணமுற்பட்டார்கள். அத்தோடு நில்லாமல் இயேசுவை அழிக்கவும் படிப்படியாக திட்டமிட்டனர். பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராக சூழ்ச்சி செய்தனர் (மத் 12:14; 22:15), (யோவா 5:18; 7: 1 - 19,25,30; 8: 37 - 40; 11: 53).

இன்றைய நற்செய்திப் பகுதியில், ஒருவர் மூத்தமகனிடம், ‘திராட்சைத் தோட்டத்திற்குச்  சென்று வேலை செய்’ என்கிறார்.  ‘நான் போக விரும்பவில்லை’ என்று முதலில் கூறிவிட்டு பிறகு மனமாறி வேலைக்கு செல்கிறான். அடுத்த மகனிடம் சென்று ‘திராட்சை தோட்டத்திற்கு செல்’ என்கிறார். அவன், ‘வாயினிக்க போகிறேன் ஐயா’ என்கிறான். கிரேக்க மூலத்தில் ஐயா என்பது கூரியே, ஆண்டவரே என்று கூறப்பட்டுள்ளது. மலைப் பொழிவில் இயேசு ஓரிடத்தில் கூறும், ‘ஆண்டவரே, ஆண்டவரே என சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளப்படி செயல்படுபவரே செல்வர்’ (மத் 7:21) என்ற வாக்கியம் இங்கு பொறுத்தமாக நிற்கிறது எனலாம். மனந்திரும்பி தந்தையிடம் திரும்பிய ஊதாரி மகனையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

விலைமாதரும், வரி தண்டுவோரும் பாவிகளாக, கடவுளின் எதிரிகளாகக் கருதப்பட்டவர்கள் மனமாறினார்கள். இறையாட்சியில் இடம் பெற்றார்கள். இயேசுவுக்காக தயார் செய்ய வந்த யோவானின் போதனையைக் கேட்டு விலைமகளிரும் வரிதண்டுவோரும் மனந்திரும்பினர். ஆனால் நீங்கள் மனந்திரும்பவுமில்லை, நம்பவுமில்லை என்கிறார் இயேசு.

  வாயினிக்க பேசிய மகன் தந்தையை மகிழ்ச்சிப்படுத்தியதாக நினைத்து கபடு எண்ணத்துடன் நடந்துக் கொண்டான். ஆனால் தந்தையின் இதயத்தில் அவன் இடம் பெறவில்லை. வெளி ஆடம்பரங்களால் மக்களிடம் பெருமையை வாங்கலாம், நாம் கடவுளின் மக்கள் என்று அவர்களை நம்ப வைக்கலாம் என்று எண்ணுகிறார்கள்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சி வாட்ஸ் அப்பில் வந்தது. அர்னால்டு ஷ்வார்ஸ்நேகர் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர். அவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் கவர்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் பதவியிலிருந்த போது அவர் நினைவாக ஒரு வெங்கலச் சிலையை ஒரு பெரிய  ஓட்டல் நிறுவியது. அத்துடன் அவரிடம் உங்களுக்காக ஓர் அறை நிரந்தரமாக ஒதுக்கப்பட்டுள்ளது. எப்போது வேண்டு மானாலும் நீங்கள் இங்கு வந்து தங்கலாம் என்றது. அவரின் பதவிக்காலம்  முடிந்து அண்மையில்  அங்குசென்று அறை கேட்டபோது, ‘உங்களுக்காக ஒன்றும் தனியாக அறையில்லை. அறைகள் நிரம்பி விட்டன. உங்களுக்கு இடமில்லை’ என்று கூறிவிட்டார்கள். எனவே அர்னால்டு அந்த ஓட்டலின் முன் அமைக்கப்பட்டிருந்த  தன் சிலைக்குக் கீழ் படுக்கை விரித்து படுத்துக் கொண்டார். 

பதவி என்பது சோளக் காட்டு பொம்மை போல சில பறவைகள் பார்த்துப் பயப்படும் ‡ மனிதருக்கு அவை  வேடிக்கை பொம்மைகள்.
புகழ்ச்சி பைத்தியகாரர்களின் கவர்ச்சி    - எல்டன் ஜான்.

வீண்பெருமைகளுக்கு பைத்தியமாக வேண்டாம்
வீண்பெருமைகள் பொய்மையின் கருவிகள். 

Saturday, 9 September 2017

பொதுக்காலம் 24 ஆம் ஞாயிறு A

பொதுக்காலம் 24 ஆம் ஞாயிறு
17-09-2017
சீஞா 27:30, 28:7;   உரோ 14: 7-9;  மத் 18: 21-35

அண்மையில் மாடுகள் பிளாஸ்டிக் பேப்பரை சாப்பிட்டுவதை நேராகப்  பார்த்தேன். ஒருவர் கட்டி சோர் சாப்பிட்டு விட்டு கட்டி சோர் கட்டி வந்த பிளாஸ்டிக் பேப்பரை வெளியே போட்டார். அப்போது அங்கு வந்த பசுமாடு, பிளாஸ்டிக் பேப்பரிலுள்ள சாப்பாட்டையும், பிளாஸ்டிக் பேப்பரையும் சேர்த்து சாப்பிட்டது. எனக்கு பெரிய அதிர்ச்சி. பிளாஸ்டிக் பேப்பரை சாப்பிடும் விலங்குகள் விரைவில் இறந்து விடும் என்பதுத் தின்னம். சிறுபிள்ளைகள் சிலர் மண்ணை அள்ளி தின்று விடுகின்றனர்.

தீயவை தீய பயத்தலால் தீயவை
  தீயினும் அஞ்சப் படும்.
என்கிறார் வள்ளுவர். 
இறைவன் இனிமையானவர். மன்னிப்பவர். ஆனால் அவரின் பண்புகளைப் பின்பற்றாதவர்.  அவரின் பண்புகளைப் பின்பற்றாதவர். அவர் அவர்களின் தீயப்பண்புகளின் விளைவினை சந்திக்க வேண்டும். அந்தக் கருத்தினைத்தான் இன்றைய நற்செய்தி பகுதி எடுத்துக் கூறுகிறது.

  ஓர் அரசன், அவரின் பணியாளருக்கு 10 ஆயிரம் தாலந்து கடன் கொடுத்திருக்கிறான். ஒரு வெள்ளி தாலந்து என்பது 10 ஆயிரம் டாலருக்கு சமம்.(சுமார் 7.5 லட்ச ரூபாய்). பத்தாயிரம் தாலந்து என்பது,  ஒரு பெரும் தொகை என்பதைத் தான் குறிப்பிடும். அந்த பணியாளரிடம் அரசன் கடனைத் திருப்பி தர கேட்கிறான். பணியாளருக்கு உள்ளதையயல்லாம் விற்று கடனை அடைக்க ஆணையிடுகிறான் அரசன். ஆனால் பணியாளர், தன்னால் இயலாத நிலையைத் தெரிவிக்கிறான். அரசன் அவன் மேல் பரிவு கொண்டு, அவன் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்கிறான். ஆனால் பெருந்தொகையிலிருந்து விடுபட்ட அந்த பணியாளர், தன்னிடம் 100 தெனாரியம் கடன்பட்டிருந்த உடன்பணியாளரிடம் கடிந்து கடனைக் கேட்கிறார். ஒரு தெனாரியம் என்பது ஒரு நாள் கூலி. (தற்போதைய மதிப்பிற்கு ரூ500/‡ என்று சொல்லலாம்) பல கோடி கடனை தள்ளுபடி வாங்கிக் கொண்டு, சில ஆயிரம் ரூபாய் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறான் அந்த  பணியாள். தன் தலைவரின் பரிவு பண்பினை உள்வாங்க மறந்து விட்டான். அதனால் அரசனின் சினத்திற்கு ஆளாகி, வாழ்வையே இழந்து விடுகிறான்.

இந்த உவமையின் பொருள் கடைசியாக தரப்பட்டுள்ளது. ‘உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் மன்னிக்கமாட்டார்’. இயேசு கற்று கொடுத்த செபத்தில் எங்களுக்கு எதிராக குற்றம் செய்தோரை, நாங்கள் மன்னிப்பது போல என்று சொல்கிறோம். ஆனால் கிரேக்க மூலத்தில், எங்கள் கடன்காரர்களை நாங்கள் மன்னிப்பதுபோல் என்றுதான் உள்ளது.

முதல் வாசகத்தில் சீராக்கின் முதுமொழி, ‘பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்கு பழியே பெறுவர்’ என்று கூறுகிறது. மீண்டும், ‘உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு. அவ்வாறெனில் நீ மன்றாடும் போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும்’ என்ற வாக்கியத்தையும் கேட்கிறோம்.

  இத்தகைய பரந்த மனநிலை எப்படி சாத்தியமாகும்? இன்றைய இரண்டாம் வாசகத்தில் காணப்படும் பவுல் அடிகளாரின் மனநிலையை நாமும் பெற்றால் இந்தப் பண்பு நம்மில் குடியேறும். ‘வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம். இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம்’. (உரோ 14 : 8)

பரிவு, நம்மை விட உயரச் செய்கிறது. -மேசன் கூலி.

பரிவு, பாவ காயங்களை குணப்படுத்தும்
பழிவாங்குதல் காயங்களை ஆழப்படுத்தும். - யஹன்றி வார்ட் பீச்சர்.

பரிவு ஒரு கலையைப் போன்றது. அதனை தினமும் பயிற்சி செய்தால்தான் அது வளரும்.  - காரன் ஆம்ஸ்ட்ராங்.

பொதுக்காலம் 23 ஆம் ஞாயிறு A

பொதுக்காலம் 23 ஆம் ஞாயிறு
 10 - 09 - 2017
 எசே 33: 7-9;  உரோ 13: 8-10; மத் 18: 15-20

  உறவில் வாழ வேண்டியவர் மனிதர். உறவில்தான் மனிதர் நிறைவைக் காண்கின்றார். மன ஒன்றிப்பில் வருவதுதான் உறவு. ஆனால் மன ஒன்றிப்பு பல நேரங்களில் உடைகிறது. சிதைக்கிறது. பொருள்கள், வீண்பெருமைகள் அடிப்படையில்தான் இந்த உறவு உடைகிறது. இறைவன் தந்தை, மகன், தூய ஆவியார் என்ற உறவின் கூட்டில் வாழ்கிறார் என்று இயேசு தன் வாழ்வின் இரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதே உறவின் தாக்கம்தான் மனிதரில் புதைந்திருக்கிறது. மனிதரின் ஒற்றுமையில்தான் இருப்பதாகவும் இயேசு கூறியுள்ளார் (மத் 18:20)

உடைந்தப் பானையை ஒட்ட வைப்பது அரிது. கரந்தப் பாலை மீண்டும் மடியில் ஏற்றுவதும் இயலாதது. ஆனால் அறுந்த உறவு மீண்டும் இணைந்திட முடியும். உறவில் ஏற்படும் முடிச்சுக்களை எப்படி அவிழ்க்க முடியும் என்று இயேசு வழி சொல்கிறார். மூன்று வழிகள்: முதலில் தனியாக சென்று, உறவு பிறழ்ந்தவருடன் உரையாடுங்கள். இதில் உறவு சீரடைந்தால், நீங்கள் உங்கள் சகோதரை மீண்டும் பெற்றுக் கொண்டுவிட்டீர்கள். அவரை மனமாற்றி விட்டீர்கள். சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம். ஒரு நீதிபதி, குற்றவாளியைக் கேட்டாராம். உண்மையாகவே அவரை கொலை செய்தாயா? என்றாராம். அதற்கு குற்றவாளி, சற்று இருங்கள் சார். என் சாட்சியைக் கேட்டு சொல்கிறேன் என்றாராம். தனித்து சென்று சமாதானம் செய்யும் முயற்சியில் வெற்றி பெறா விட்டால், இரண்டு அல்லது மூன்று பேருடன் சென்று உறவுக்கு அழைப்புக் கொடுங்கள். நம் நாட்டில் கட்டை பஞ்சாயத்துக்கள் உண்டு. சிலருக்கு போலீஸ் ஸ்டேசன், கோர்ட் இவற்றிற்கு சென்று பணத்தை இரைத்த பிறகுதான் புத்தி வரும். இதற்கும் இணக்கம் இல்லையயனில் திருச்சபையிடம் கூறுங்கள். அதாவது நம்பிக்கையாளர் களின் திருக்கூட்டம். அங்கும் உறவுக்கு வழி  ஏற்படவில்லையயனில் விட்டுவிடுங்கள். இனி அவர் தன்னையே தனித்துக் கொண்டார் என்று விளக்கம் அளிக்கிறார் இயேசு.   ஆனால் இறுதியில் பெரிய உண்மையை இயேசு நினைவுப்படுத்துகிறார். எங்கு ஒற்றுமை உண்டோ அங்கு என் உறவு உண்டு என்கிறார்.   
  
நமது நாட்டில் 2 கோடியே 81 லட்சம் கேஸ்கள் நீதிமன்றத்தில் தீர்க்கப்படாமல் உள்ளன என்கிறது ஒரு கணக்கெடுப்பு. விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவில் 48 சதவிகித திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன என்கிறது ஒரு கணக்கெடுப்பு. ஆனால் இந்தியாவில் அத்தகைய பாதாளநிலை இல்லை யயன்றாலும், மேல் நாட்டு நாகரீக மோகம் வேகமாக நம் நாட்டில் படையயடுத்து வருகிறது.

  இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எல்லை தகராறு முற்றி வருகிறது. அண்மையில் நியூலீடர் என்ற பத்திரிக்கையில் மோனம்பரம்பில் என்ற பேராயர், இந்த போர் மூட்டத்தை சுட்டிகாட்டி, முதல் இரண்டு உலக போர்கள். எப்படி முரட்டுத்தனமான தலைவர்களால் ஏற்பட்டன என்று சுட்டிகாட்டியுள்ளார்.   வளர்ந்துவரும் இந்தியாவில் தலையில் மண்ணை வாரி கொட்டிக் கொள்ளவே தலைவர்களாகிய வீராப்பு பேச்சுக்கள் மிதந்து வருகின்றன என்கிறார்.

ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும்.              (குறள் 214).   

பொதுக்காலம் 22 ஆம் ஞாயிறு A

பொதுக்காலம் 22 ஆம் ஞாயிறு
 03 - 09 - 2017
எரே 20 : 7 - 9; உரோ 12 : 1-2; மத் 16 :  21 - 27
ச.இ.அ.
இளைஞர்களுக்கான ஒரு பட்டிமன்றத்தில், சொற்பொழிவாளர், பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். பிள்ளைகளுக்கு பணத்தின் அருமை தெரியும் விதத்தில் வளருங்கள். பணத்திற்குப் பின்னால் உழைப்பு இருப்பதை அவர்கள் உணரும் விதமாக வளருங்கள் என்று கூறினார். வியர்வை இல்லாமல் வளர்ச்சியில்லை. உழைப்பில்லாமல் பிழைப்பில்லை என்பதுதான் எதார்த்தம்.

முட்கள் நடுவில் விழுந்த விதை முட்களால் முடக்கி விடப்படுகிறது. ஆனால் முட்களையும் தாண்டி நாம் வாழ வேண்டும். தன்னலம் துறக்க வேண்டும். தம் சிலுவையை சுமக்க வேண்டும். அதன் வழியாகத்தான் இயேசுவைப் பின் செல்ல முடியும். இயேசு சந்தித்த அதே அனுபவத்தை சீடர்களும் சந்திக்க வேண்டும். இயேசு மூப்பர்கள் தலைமைக் குருக்கள் மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் வேண்டும். ஆனால் துன்பத்திலிருந்து வெற்றி கிடைத்தது. ஒருவர் வாழ்வின் பயனைப் பெற எதிர்மறையான வழியைக் கூறுகிறார். இழந்தால் பெறுவீர்கள், ‘உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் என்றால் உலக செல்வங்களை நிறையவே பெற்றிருந்தாலும்’ என்பதுதான் பொருள்.

இயேசுவின் தியாக வழி, பேதுருவுக்கே ஏற்புடையதாக இல்லை. எனவே அதனை விட்டுவிட கேட்கிறார் பேதுரு. இயேசுவின் தியாக வழிதான் இறைவனின் வழி. தன்னல வழி. சாத்தானின் வழி. இறைவனுக்கு எதிரான வழி. ‘கடினமான உழைப்பினால் தான் வளர்ச்சி உண்டாகும் தியாகம் இல்லாத வாழ்க்கையில் வெறும் களைகள்தான் நம் வாழ்க்கையில் வளரும்’ என்கிறார் கோர்டன் ஹின்க்லி.

‘கடினமான உழைப்புத்தான் அறிவினில் ஏற்படும் முதுமைக் கோடுகளை அகற்றும்’ என்கிறார் யஹலினா ரூபின் ஸ்டெலின் என்பவர்.

முதல்வாசகத்தில் எரேமியா இறைவாக்கினர். தனது அர்ப்பண வாழ்வு மற்றவர்களின் நகைப்பிற்கு உள்ளாகியிருக்கிறது என்று நொந்துக் கொள்கிறார். ஆனால் இறைவனுக்கு தனது அர்ப்பணத்தை மறுக்க முடியாது என்று போராடுகிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், உலக போக்கின்படி ஒழுகாதீர்கள். தியாக வாழ்விற்கு உங்களை அர்ப்பணிக்க தயங்க வேண்டாம். அப்போதுதான், கடவுளின் திருவுளத்தை நீங்கள் தெளிவாக தெரிந்துக் கொள்ள முடியும் என்கிறார்.
தியாக ஒளிதான் உலகின் தீய இருளை நீக்கும்.
பொன்னை மாதரை பூமியை நாடிடேன்
என்னை நாடிய என்னுயிர் நாதனே
  உன்னை நாடுவேன் உன்னருள் தூவெளி
தன்னை நாடுவேன் தன்னந் தனியனே
‡ தாயுமானவர் பாடல்.

Sunday, 20 August 2017

ஆண்டின் பொதுக்காலம் 21 ஆம் ஞாயிறு, அருட்பணி. மரிய அந்தோனி ஜேம்ஸ், குடந்தை

ஆண்டின் பொதுக்காலம் 21 ஆம் ஞாயிறு
27-08-2017
  எசா 22:19-23;   உரோ 11: 33-36; மத் 16: 13-20

அருட்பணி. மரிய அந்தோனி ஜேம்ஸ், குடந்தை 


இன்றைய அருள் வாக்குகள் நமக்கு கொடுக்கும் செய்தி ‘அறிவின் செயல்பாடுகளை விட அனுபவங்களின் வெளிப்பாடே சிறந்தது’ என்பதாகும். நற்செய்தி வாசகத்தின் மூலமாக இயேசு கூறுகிறார்.
“நான் யார்?”  என்ற கேள்விக்கு  எத்தனை ஆண்டுகள், யுகங்கள் ஆனாலும் தன்னையே முழுமையாக ஒருவர் அறிந்துள்ளார்  என்பது உறுதியாக கூற இயலாத ஒன்று.  தான் எங்கு சென்றாலும் தன்னோடு அழைத்துச் சென்று, இறையரசின் பணிகளை செய்து, அனைத்து தருணங்களிலும், தன் பணியை தொடர்ந்து ஆற்ற தன் சீடர்களை அழைத்த  இயேசு கேட்டது. “நான் யார்?”  என்று. (விப 3:14) ‘நாமே இருக்கிறவர்’ என்று எக்காலத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று பழைய ஏற்பாட்டிலே இஸ்ராயேல் மக்களுக்கு உணர்த்தப்பட்ட இறைவன், புதிய ஏற்பாட்டிலே. ‘நானே உலகின் ஒளி’ (யோவா 8:12), ‘நானே நல்ல ஆயன்’ (யோவா 10:11), ‘உயிர்ப்பும், உயிரும் நானே’ (யோவா 3:35), என்று இயேசு வெளிப்படுத்தினார், தன்னை முழுமையாக அறிந்திருந்த  இயேசு, தன் சீடர்களிடம் கேட்டது “நான் யார்?” என்று . ஆனால் இன்றைய கால உளவியல் தத்துவத்தின்படி, எந்தவொரு செயலிலும் தன்னை முதன்மைப்படுத்தாதவர்  மனநோய்   (ணூdeஐdஷ்மிதீ உrஷ்விஷ்வி) உள்ளவரோ என்று இயேசுவை நினைத்துப் பார்க்கவும், மற்றவர்களின்  விமர்சனங்களை கண்டு அஞ்சி, மனம்  வருந்துபவர் போன்று, மக்கள் என்னை யாரென்று கூறுகிறார்கள் என்று இயேசு கேட்டறிகிறார்.

 இறைவாக்கினர்களுக்கெல்லாம் மேலானவர்:

மக்களின் எதிர்பார்ப்பெல்லாம் தங்களை துன்பங்களிலிருந்து விடுவிக்க ஒரு மெசியா வருவார் என்பது  (தானி 7: 13). வானத்தின் மேகங்களிலிருந்து மானிட மகன் வருவார் என்று எசாயாவும்  கூறினார். நம்பிக்கையிலும், (எசா42:53) மற்ற இறைவாக்கினர்களும் மெசியா வருகையைப் பற்றிக் கூறினார்.ஆனால், இயேசு இறைவாக்கினர்க் களியயல்லாம் மேலான இறைமகன் என்பதை உணர்த்தவே, இயேசு இக்கேள்விகளை எழுப்பினார் எனவும் விவிலிய அறிஞர்கள் கூறுவர். மக்கள் கூறுவதை அறிந்திருந்த  சீடர்கள் அறிவின் வெளிப்பாடுகள் அல்லாமல் நீங்கள் அனுபவபூர்வமாக  என்னை யாரென்று கூறுகிறீர்கள் என்று சீடர்களிடம் இயேசு கேட்டதற்கு, பேதுரு இயேசுவோடு தான் பெற்ற அனுபவங்களின் வாயிலாக “ நீர் மெசியா வாழும் கடவுளின் மகன்” என்று  அனுபவ அறிக்கையிடுகிறார்
.
 அனுபவங்களின் பிரதிபலிப்பே கடவுள்:

ஒரு இளைஞனுக்கு கடவுள் நல்லவரா? கெட்டவரா? என்று அறிவுப்பூர்வமாக அறிய ஆவல். ஒரு முனிவரை அணுகினான். முனிவர் அவனைப் பார்த்து, நீ  பார்க்கின்ற மனிதர்கள், விலங்குகள் அனைவரிடமும் இக்கேள்வியை கேட்டுப் பார் என்றார். முதலில் சந்தித்த பூனை என் பல் நல்லதா? கெட்டதா? என்று கூறினால், கடவுளைப் பற்றி கூறுவேன் என்றது. அவனுக்கு பதில்  கூற முடியவில்லை. ஆகவே, பூனை நீ சென்று என் குட்டியிடமும், எலியிடமும் இதே கேள்வியை கேட்டு வா என்றது, பூனைக்குட்டியை அவன்  அனுகியபோது, என் தாயின் பல் பஞ்சு போன்றது. காரணம் என்னை தூக்கி செல்கையில் வலி தெரியாது தூக்கிச் செல்லும் என்றது. எலியிடம் சென்று கேட்டபோது, பூனையின் பல் பசாசு போன்றது. என்னைக் கண்டால் குதறிவிடும் என்றது. ஆக, இதிலிருந்து அவன் தெரிந்து கொண்டது  கடவுள் நல்லவரா, கெட்டவரா என்பது அறிவினால் அன்று அனுபவங்களாலே அறிய இயலும் என்பது தான். 

        அதுபோன்று, இரண்டாம் வாசகத்தில் தூய பவுல்  ‘அனைத்தையும் அறிந்த, உலகம் உருவாகக் காரணமான. அறிவிற்கெல்லாம் ஊற்றாகிய இறைவன்’ , என்கிறார்.  இயேசு, பேதுருவிடம் கேட்டபோது அவரும் அனுபவ ரீதியாக பதில் கூறுகின்றார். காரணம், யாயிர் மகள் உயிர்பெற்றபோது (மாற் 5:37), இயேசுவின் உருமாற்றம் (மாற் 9:2), நிறைவுகாலப் பொழிவு (மத் 24: 1‡2), மற்றும் கெத்சமெனியில் இயேசு இரத்த  வியர்வை வியர்த்தல் (மாற் 14:33‡37) போன்ற முக்கிய நிகழ்வுகளிலெல்லாம் பேதுரு இயேசுவை அனுபவப்பூர்வமாக சந்தித்திருந்தார் . அந்த அனுபவத்தின் பிரதிபலிப்பாகத்தான், ‘நீர் மெசியா, என்றும் வாழும் கடவுளின் மகன்’  என்றும் எடுத்துரைக்கிறார். அந்த அனுபவத்தின் பரிசாக இயேசு, இந்த அனுபவப்  பாறை மீது தன் திருச்சபையை எழுப்பி, விண்ணகத்தின்  திறவுகோல் வழங்கி, திருச்சபையை வழிநடத்த பொறுப்பு தந்தார். இதனை முதல் வாசகப் பகுதி பிரதிபலிக்கிறது.   தூய பேதுருவை மாதிரிகையாய் முன்வைத்து, இவ்வாரத்தின் திருவழிபாடுகள் நமக்கு உணர்த்தும் செய்தி, உலகம் நம்மை என்ன தான் விமர்சனங்கள் செய்தாலும், நம்மை புரிந்து கொள்ளாவிட்டாலும், நான் யார் என்பதை அறிந்து, நான் கிறிஸ்துவை சார்ந்தவன், இயேசு என்னோடு இருக்கிறார் (நிஜுலி ணூ ழிது?  நிஜுலிவிe ழிது ணூ?)  நான் ஏதோ இந்த உலகத்தில் தவறுதலாகப் பிறந்து விடவில்லை, மாறாக இறைதிட்டத்தால் இயேசுவால் அறியப்பட்டு முன்குறிக்கப்பட்டு  இந்த உலகத்தில் பிறந்திருக்கிறேன் என்றும், இயேசுவை அனுபவித்து மற்றவர்களுக்கு அந்த அனுபவத்தை வழங்கக் கூடியவர்களாய் வாழ அழைப்பு விடுக்கிறது. 

(2 சாமு 7:18)  இல் தாவீது அரசர், ஆண்டவரின் சந்நிதியில் அமர்ந்து, ஆண்டவரே உம்மால் நினைவுகூறப்படுவதற்கு நான் யார்? என்று ஆண்டவரின் அருளை நினைத்துப் போற்றுவது போல் , இயேசுவைப்பற்றிய நமது உண்மையான தனிப்பட்ட அனுபவ அறிவு யாதென கண்டுணர்ந்து, நாளும் நம்மைக் காத்து வரும் தேவனிடத்தில் நமது முழு நம்பிக்கையை வைத்து,  அவரைப் போற்றுவோம். இறை அனுபவம் பெற்று, இயேசுவின் ஆசிர்வாதங்களை நம் குடும்பங்களுக்கும் நம்மை சந்திப்பவர்களுக்கும் பெற்றுத் தருவோம்.

Ads Inside Post