Pages - Menu

Sunday 13 December 2015

குற்றம் புரிந்தவன், சிறுகதை

சிறுகதை
குற்றம் புரிந்தவன்
- மகிழம்பாடி அந்தோணிசாமி

அந்த வீட்டில் ஒரே கூட்டம். எல்லாரும் அழுதுகொண்டிருந்தனர். அந்த வீட்டின் சொந்தக்காரர் உலகநாதன் சற்று நேரத்திற்கு முன்புதான் இறந்து போனார். அவசர அவசரமாக அடுத்தடுத்த வேலைகளில் அங்கிருந்தவர்கள் ஈடுபடத் தொடங்கினார். கட்டிலில் கிடந்த அந்த சடலத்தை சரிபடுத்தும் போது, தலையணையின் உறை உள்ளிருந்து ஒரு கடித கவர் கீழே விழுந்தது. அது என்னவாக இருக்கும் என்று அதனைப் பிரித்துப் படிக்கும் பொழுது, அந்தக் கடிதத்தில் இவ்வாறு எழுதியிருந்தது.
‘நோயுடன் போராடும் நான் ஒருவேளை சாக நேர்ந்தால் அதற்காக யாரும் அழக்கூடாது. நான் சாக வேண்டியவந்தான். இந்த நோய் கடவுள் எனக்குக் கொடுத்த தண்டனை. அந்தத் தண்டனையை நான் வேண்டியவந்தான். இந்த நோய் கடவுள் எனக்குக் கொடுத்த தண்டனை. அந்தத் தண்டனையை நான் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.
எனது மகன் சேகர் ஒரு நல்ல அரசு வேலையில் இருக்கிறான். தக்கத் தருணத்தில் அவனுக்குத் திருமணம் செய்விக்கக் கடவுளிடம் வரம் கேட்டேன். அவரும் என் குடும்பத்துக்கு ஏற்ற குணவதியை மருமகளாகக் கொடுத்தார். பெயர் அமுதா!
குடும்பத்தை நடத்துவதற்கு ஏற்ப எங்களுக்குப் போதிய வசதிகள் இருந்தும், ஏனோ என் மனைவி ‘காசு’ ‘காசு’ என்று அலைந்தவண்ணமே இருந்தாள். என் மகனும், மருமகளும் நல்ல அரசு வேலையில் இருந்ததனால் மாதந்தோறும் அவர்களின் ஊதியத்திலேயே குறியாய் இருந்தாள்.
அம்மா எது சொன்னாலும் மறுபேச்சே பேச மாட்டான் என் மகன். மகனைக் கைக்குள் போட்டுக் கொண்டு தன் மருமகளை அடிமைபோல் ஆட்டிப்படைப்பாள்.
அமுதாவுக்குத் தலைப்பிரசவம். அழகான ஆண் குழந்தை. அதில் என் மனைவிக்கு கொஞ்சம்கூட சந்தோ­மே இல்லை. அமுதா, வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்துவிட்டு, குழந்தையையும் பராமரித்து விட்டுத்தான். அலுவலகம் புறப்படுவாள். பம்பரமாய்ச் சுழலும் அவளுக்கு என் மனைவி ஓர் ஒத்தாசைகூட செய்யமாட்டாள்.
அலுவலகம் சென்றபிறகு, என் மனைவி என் பேரக்குழந்தையைக் கண்டு கொள்ளவே மாட்டாள். அது பசிக்காக அழுதாலும் சரி, மலம் கழித்தாலும் சரி. சண்டைக்காரர்களிடம் பேசுவதைப் போலவே அந்த பச்சிலங் குழந்தையையும் பேசி பாவத்தை சுமந்து கொள்வாள்.
எனக்கு மகள் ஒருத்தியும் இருந்தாள். அவள் உள்ளூரிலேயே ஒருவனோடு ஓடிப்போனாள். அது எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. என் வீட்டுச் சொத்துக்களை எனக்குத் தெரிந்தும், தெரியாமலும் திருட்டுத்தனமாக மகளுக்குச் சேர்த்து வந்தாள். என் மனைவி என் மகளுக்கு அடுத்தடுத்து ஆண் ஒன்றும், பெண் ஒன்றும் இறந்தே பிறந்தது.
அமுதாவைப் பற்றி என் மகனிடம், என் மனைவி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி கோள் மூட்டி வந்தாள். ஒருநாள் அமுதாவை, என் மனைவி விளக்குமாற்றால் அடித்ததைக்கூட நான் தடுக்காத கோழையாய் இருந்தேன்.
இப்படி வீட்டில் அடிக்கடி சண்டை நடக்கும். ஒருநாள் ......பைசா கூட பொறாத காரணத்துக்காக அமுதாவை என் மகன் நடத்தை கெட்டவள் என முத்திரை குத்தி வீட்டை விட்டே துரத்தி விட்டான்.
புகலிடமில்லா அவள், தன் தாய்வீடு சென்று விட்டாள். அடுத்த இரண்டொரு நாள் கழித்து என் மருமகளின் பெற்றோர்கள் என் வீடு வந்து வம்பு ஒன்றும் பேசாது “சந்தோ­மாக இருங்கள்” எனச் சொல்லி தன் மகளை என் வீட்டில் விட்டுச் சென்றார்கள்.
அன்றிரவே அவளைக் காயம்பட அடித்துத் துன்புறுத்தி, என் மகன் மீண்டும் விரட்டி விட்டான். அடுத்த நாளிலேயே அவளுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டொரு நாள் கழித்து என் சம்மந்தி எங்கள் வீட்டுக்கு வந்து, ஏன் இப்படி என கண் கலங்கிப் போனார்.
அடுத்த ஒரு வாரத்திற்குள், “நான் என் கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும்” என்று அமுதாவிடமிருந்து எங்களுக்கு பதில் நோட்டீஸ் வந்தது.
மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பை எங்கள் குடும்பம் மதிக்கவில்லை. இதுதான் தலைவிதி என தன் பெற்றோருடனேயே தன் பிள்ளையுடன் வாழத் தலைப்பட்டால் அமுதா.
கடந்த மாதத்தோடு என் மகனுக்குத் திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகிவிட்டன. என் பேரனுக்கு 22 வயது என நினைக்கிறேன். அவன் னி.ய.ய.றீ.இரண்டாமாண்டு படிப்பதாகக் கோள்வி.
என் மருமகள் ஒரு உத்தமி. அவளை மகளைப் போல் காத்து வரவேண்டிய நான், அந்தக் கடமையிலிருந்து தவறிய குற்ற உணர்வு என்னை இப்போது உறுத்துகிறது. ஒரு நல்ல மருமகளாக வைத்துப் பராமரிக்கக் கூடிய நிலையிலிருந்து நழுவிய தன்மை, என்னைக் கண் கலங்க வைக்கிறது. ஒரு நாளிலாவது மருமகள், பேரனுக்கு பரிந்து பேச இயலாத, மனைவிக்குப் பயந்தவனாக, தைரியமும் துணிச்சலுமில்லாதவனாக நான் இருந்தேன். ஒருநாளாவது நான் போய் என் பேரனை எட்டி நின்று பார்த்திருக்கிறேனா? ஆசையாக பேசி வேண்டியதை வாங்கிக் கொடுத்திருக்கிறேனா? அவனை அஞ்சாதே! பயப்படாதே! என ஆறுதல் சொல்லி இருக்கிறேனா?
கடவுள் எவ்வளவு தான் பொறுப்பார்?
அன்றொரு நாள் ...
வயலைச் சுற்றிப் பார்க்கச் சென்ற நான் பள்ளம் எனத் தெரியாது தடுமாறி கீழே விழுந்தது தான். இடுப்பின் பின்பக்கம் படக்கென்றது. வலியால் புழுபோல் துடித்த என்னை கட்டிலில் வீட்டிற்குத் தூக்கி வந்தனர்.
நல்ல மருத்துவர்களைப் பார்த்தோம். தண்டுவடம் முறிந்து விட்டது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் கை விரித்து விட்டனர். அன்று இந்தக் கட்டிலில் மல்லாந்து படுத்தவன் தான். அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திரும்பமுடியாது.
வீட்டிலுள்ள என் மனைவி உட்பட எவரும் என்னை கண்டு கொள்ளவில்லை. நாளடைவில் படுக்கைப் புண் ஏற்பட்டு புழுக்கள் நெளியத் தொடங்கின. சகிக்க முடியாத துர்நாற்றம். நான் இப்போது அழுது என்ன பயன்? இவ்வாறு அவனது மகன் கடிதத்தை படித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவர்களது வீட்டின்முன் கார் நிற்கும் சத்தம் கேட்டது. அனைவரும் வாசலையே திரும்பிப் பார்த்தனர்.
காரிலிருந்து ஒரு குருவானவரும், அவரையடுத்து ஒரு நடுத்தர வயதுடைய பெண்மணியும் , கூடவே ஒரு பையனும் இறங்கி அந்த வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இதுதான் அவுங்க மருமக.. இந்தப் பையன்தான் பேரனாய் இருக்குமென்று ஜனங்ள் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர். வீட்டிற்குள் நுழைந்த அவர்கள் அங்குள்ள நிலைமையை ஒருவாறு யூகித்துக் கொண்டனர்.
முடிவு? ( அவரவர் மனநிலைக்கே விட்டுவிடுகிறேன் )

No comments:

Post a Comment

Ads Inside Post