Pages - Menu

Showing posts with label Auto biography. Show all posts
Showing posts with label Auto biography. Show all posts

Saturday, 7 October 2017

சைக்கிள் சென்ற பாதை

சைக்கிள் சென்ற பாதை

ச.இ.அ.

குடந்தையைச் சேர்ந்த பாதர் எஸ்.ஐ. அருள்சாமி என்றால், என்னை அவசியமாக சைக்கிள் பயணத்துடன் இணைத்துப் பார்ப்பர். பெங்களூரிலிருந்து, கோவையிலிருந்து குடந்தைக்கு சைக்கிலிலேயே வந்தார் என்று மூக்குவாய் எல்லாம் வைத்து பல கதைகள் கூறுவார்கள். எனவே எனது சைக்கிள் கதையை பல கட்டுரைகளாக வடித்து விடுவதே நல்லது என நினைக்கிறேன்.

1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 29, அந்நாள் ஆயர் மேதகு பவுல் அருள்சாமி என்னை கூவத்தூர் பங்குதந்தையாக நியமித்தபோது, அவரே ஹம்பர் சைக்கிளை ரூ 1100க்கு வாங்கித் தந்தார். பிறகு அதன் தொகையையும் பெற்றுக் கொண்டார்.

அந்த சைக்கிள் அப்போதைக்கு உயர்ந்த சைக்கிள். அதனை வைத்தே, கிளை கிராமங்கள், பட்டணங்குறிச்சி, மேலநெடுவாய், குப்பம், அருளனாந்தபுரம், அக்னேஸ்புரம், வடுகப்பாளையம் ஆகிய ஊர்களுக்கெல்லாம் சென்று பணிசெய்தேன்.

1984 ஆம் ஆண்டு கூவத்தூரிலிருந்து பணிமாற்றம் பெற்று பெங்களூர் பேதுரு குருமடத்தில் னி.வீஜு     என்ற மேற்படிப்பு படிக்கச் சென்றேன். அப்போது கூவத்தூரில் வைத்திருந்த சைக்கிளையும் இரயிலில் ஏற்றிக் கொண்டு  சென்றேன். இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது. பெங்களூர் எஸ்வந்தப்பூர் இரயில் நிலையத்திலிருந்து அங்கி போட்டுக் கொண்டு, சைக்கிள் பின்னால் இரண்டு பெட்டிகளைக் கட்டிக்கொண்டு, பேதுரு குருமடத்திற்கு  சைக்கிளைத் தள்ளிக் கொண்டே வந்தேன்.

அந்த சைக்கிளை பெங்களூரில் திருப்பலிக்கு  செல்வதற்குப் பயன்படுத்தி வந்தேன். இராயபுரம் பங்கில் ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியை ஒவ்வொரு வாரமும் நிறைவேற்றக் கூறினார்கள். அப்போது ஆட்டோவுக்குரியத் தொகையை பயணப்படியாகக் கொடுப்பார்கள். நான் அத்தொகைகளை சேர்த்து வைத்து, இராயபுரம் கோவிலுக்கு கீபோர்டுடன் இணையும் கியூபை நன்கொடையாக வாங்கிக் கொடுத்தேன்.

  நந்தி ஹில்ஸ் பயணம்:  குடிசைவாழ் பகுதிகளுக்கு ஞாயிறு மாலை சென்று குருமட மாணவர்கள் பணி செய்வார்கள். சைக்கிள்தான் அங்கு செல்ல வாகனம். அந்த மாணவர்கள் சேர்ந்து பெங்களூரிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள நந்தி ஹில்ஸிக்குச் சென்றோம். அந்த குன்றுக்கு செல்லும் சுமார் 2 கி.மீ தூரம், செங்குத்தான சாலையில் செல்ல வேண்டும். எல்லோரும் அப்படி  செல்வது கடினம் என்றனர். இருப்பினும் சவாலாக எடுத்துக் கொண்டு சைக்கிளிலேயே குன்றின் உயரத்திற்குச் சென்று கீழே இறங்கி வந்தோம்.

  பெங்களூர் பேதுரு குருமடத்தில்  M. Th.  படித்து முடித்த பிறகு கோவை நல்லாயன் கல்லூரி பேராசிரியராக நியமிக்கப்பட்டேன். அப்போது பெங்களூரிலிருந்து கோவை வரும்போது அந்த பழைய சைக்கிளையும் இரயிலில் எடுத்து வந்துவிட்டேன். கோவையில் 1986 முதல் 1995 வரை அச்சைக்கிளை பயணத்திற்குப் பயன்படுத்தி வந்தேன். மயிலேறிபாளையத்திலிருந்து, போத்தனூர், கோவை, புதூர், ஒண்டிபுதூர் ஆகிய இடங்களுக்கு சைக்கிளிலேயே சென்றிருக்கிறேன். அப்போதுதான் கோவையிலிருந்து குடந்தை வரை நீண்ட சைக்கிள் பயணத்தை மேற்கொண்டேன்.

  1987 மார்ச் 19  ஆம் தேதி கோவை நல்லாயன் கல்லூரியில் கோடை விடுமுறை ஆரம்பித்தது. காலை 10 மணியைப் போல் ஒரு வித்தியாசமான எண்ணம் எனக்குத் தோன்றியது. விடுமுறையில் ஏன் சைக்கிளிலேயே பயணம் செய்யக் கூடாது? என்ற எண்ணம். உடனே அந்த எண்ணத்தை செயல் வடிவமாக்கினேன். கோவை மயிலேறி பாளையத்திலிருந்து சைக்கிளை எடுத்து பல்லடம், கரூர், தோல்கேட், புள்ளம்பாடி, கீழமிக்கேல்பட்டி வழியாக குடந்தை செல்வது என்பது திட்டம்.

  சைக்கிள் பின்னால் கருப்பு நிறத்தினாலான சூட்கேஸ்  பெட்டியை கட்டிக் கொண்டு சென்றேன். வழியில் வினோதமாக சில பெண்கள் வழிமறித்தார்கள். சைக்கிளை நிறுத்தினேன். பெட்டியில் வளையல் தானே வைத்திருக்கிறீர்கள்? திறந்து காட்டுங்கள் என்று நான் வளையல் விற்பவன் என்று கேட்டார்கள். ‘ஐயோ, நான் வளையல் விற்பவனில்லை’ என்று கூறிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தேன்.  

 பல்லடம் சென்று கரூர் நோக்கி சைக்கிளை ஓட்டினேன். கரூர் அருகே வந்ததும், இருட்டாகி விட்டது. மழை வருவது போல் கருக்கலாகவும் இருந்தது. எனவே ஒரு லாரியில் சைக்கிளை ஏற்றிக் கொண்டு கரூர் வந்து, புனித குழந்தை இயேசு தெரசம்மாள் கோவிலுக்கு வந்து சேர்ந்தேன். பங்கு தந்தை இல்லை. எனவே களைப்பாக கோவிலின் முன்னால் துண்டு விரித்து போட்டு, சூட்கேஸை தலையில் வைத்து படுத்திருந்தேன். உபதேசியார் நான் பூசை உடுப்பு விற்பவர் என்று நினைத்து நல்ல பூசை உடுப்பு வைத்திருக்கிறீர்களா? என்று கேட்டார். நான் பங்குத்தந்தையை பார்க்க வேண்டும் என்றேன். சற்று நேரம் கழித்து பங்குத்தந்தை வந்தார். அவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர் மிகவும் வியந்து போய் பல அறிவுரைகள் சொன்னார். அங்கியில்லாமல் நீங்கள் வரவே கூடாது. இங்கிருந்து நாளை செல்லும் போது அங்கி போட்டுக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்றார். நான் வெயிலில் வந்திருந்ததால்  எழும்பிச்சைப்பழம் பிழிந்து குடிக்கக் கொடுத்தார்.

அவர் பெயர் மறந்துவிட்டது. அவர், கோவைபுலியகுளம் அந்தோணியார் திருத்தலம் பங்குகுருவாக இருந்தவர். நிறைய சுருட்டுக் குடிப்பார். அவரைப் பற்றி ஒருநகைச்சுவை சொல்வார்கள். ஒரு திருமணத்தில் அவர் இப்படி மறையுரை ஆற்றினாராம். இன்று இரவு நீங்கள் இருவரும் முக்கியமான வேலை செய்யப் போகிறீர்கள். எல்லோரும் ஆச்சரியமாக என்ன சொல்ல போகிறார் என்று வியப்பாக கேட்கத் தயாராயிருந்தார்கள். அவர் மணமக்களைப் பார்த்து, ‘இன்று இரவு, நீங்கள் இருவரும் சேர்ந்து முழந்தாளிலிருந்து செபமாலை சொல்லப் போகிறீர்கள்’ என்றாராம்.

அடுத்த நாள் காலையில் அவர் கேட்டுக் கொண்டபடியே அங்கிப் போட்டுக் கொண்டு சைக்கிளில் சென்றேன். கரூரைத் தாண்டி செல்கையில் ஓர்  இளம்பெண் என்னைப் பார்த்து, ‘ஓர் ஆள் பாவாடைக்கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டுகிறான் பாருங்கள்’ என்று கத்தினாள். மதியம் ஒரு மணியைப் போல டோல் கேட்டை வந்து சேர்ந்தேன். எனவே ஒரு சிறிய ஓட்டலுக்குச் சென்று உணவருந்த சென்றேன். சாப்பாடு சாப்பிட்டேன். அதற்கான பணத்தை முதலாளியிடம் கொடுக்கச்  சென்றேன். அங்கியிலேயே இருந்தேன். அப்போது ஒரு குடிகாரர் வந்து, ‘சுவாமி, நீங்கள் கொடுக்காதீர்கள். நான்தான் கொடுப்பேன்’ என்றார். அவர் நிலையைப் புரிந்து  கொண்டு பரவாயில்லை. ‘உங்கள் தாராள மனதிற்கு நன்றி. நானே பணம் கட்டிவிடுகிறேன்’ என்றேன்.  ‘இல்லையில்லை நான்தான் கொடுப்பேன்’ என்று  கூறினார். கடைமுதலாளி, ‘நீங்கள் போங்கள் பாதர். அவனிடம் பணம் வாங்கிக் கொள்கிறோம்’ என்றார். குருக்களுக்கு மக்களிடம் எவ்வளவு மரியாதை என்று மகிழ்ந்து அவ்விடம் விட்டு நகர்ந்தேன். அங்கிருந்து புள்ளம்பாடி நோக்கி பயணத்தைத் தொடர்ந்தேன்...... 
( பயணம் தொடரும்)

Friday, 29 September 2017

நான் எழுத்தாளன் ஆனேன்...

நான் எழுத்தாளன் ஆனேன்...

- லெயோ ஜோசப்,  திருச்சி

 Fr. சார்லஸ் ஒவ்வொரு பாடலுக்கும் பல்லவி எப்படி இருக்க வேண்டும்;  அனுபல்லவி எப்படி இருக்க வேண்டும்; சரணம் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கமாகச் சொன்னார். அவர் சொன்னத்தில் ஒரு கருத்து எனக்குப் பிடித்திருந்தது.
சீமோனைக்  கட்டாயப்படுத்தித்தானே இயேசுவுக்கு உதவி செய்ய வைத்தார்கள்? ‘அவன் வேண்டா வெறுப்பாகச் சிலுவையைத் தொட்டான், இயேசு அவனைத் தொட்டார்’ என்று அவர் சொன்னார். நான் இப்படி எழுதினேன்;

சிலுவையை சீமோன் மெல்லத் தொட்டான்
இறைவா அவனை நீர் தொட்டீர்
உதவிட மனமின்றி முன் வந்தான்
பிரிந்திட இயலா பேறு பெற்றான் !

            பாடல்களுக்கு இசையமைத்தவர் சென்னை வில்லியம்ஸ். அவருக்கு ட்ராக் பாட வந்தவர், திருச்சி லோகநாதன் மகன் தியாகராஜன். ஏற்கனவே இரண்டு மகன்கள் திரை இசைப்பாட, மூன்றாவது மகன் ட்ராக் பாட வந்தார். ட்ராக் என்பது, இசையமைத்தவுடன் ஒருவரை வைத்துப் பாட வைப்பது. பின்னர் பின்னணிப் பாடகரை வைத்து பாட வைத்து, அதே ட்ராக்கில் ஏற்றுவது.

‘ஒரு பாட்டுப்பாட வாய்ப்புக் குடுங்க ஃபாதர்’ என்று கேட்டார் தியாகராஜன் ‘நீ ட்ராக் பாடு. நல்லா இருந்தா அதையே வச்சுக்கிறேன்’ என்றார் Fr.ஜார்ஜ், அப்படி இடம்பிடித்த பாடல்தான், 

கருணை வள்ளலே இறைமகனே  - நீர்
காட்டிய கருணைக்கு அளவேது
கல்வாரிப் பயணம் முடிகின்றவரையில் - நீர்
காட்டிய பொறுமைக்கு ஈடேது !

கல்வாரி மலைமீது செல்கின்ற ஊர்வலம்
காண்கின்ற முகங்களிலே கண்ணீரின் தோரணம் !  என்றொரு பாடல்.

அதற்கு திருச்சி, வானொலி நிலையத்தில் பணியாற்றும் S.N.  இராமசந்திரன் இசையமைத்தார். அதை பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் பாடினார். சென்னையில் ஒரு ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு நடந்தது. வாணி ஜெயராம் மிக உருக்கத்தோடு அந்தப் பாடலைப் பாடினாராம். பாடல்  முடிந்தபின், ‘ரொம்ப நல்லாப் பாடினாங்கன்னு போய்ச் சொல்லு’ என்று உடன் வந்திருந்த வித்யாவிடம் Fr.ஜார்ஜ் கூறியிருக்கிறார். வித்யா போனபோது, வாணி ஜெயராம் அழுதுக் கொண்டு உட்கார்ந்திருந்தாராம்.  ‘ஏன் அழுகிறீர்கள்?’ என்று வித்யா கேட்டபோது ‘இல்ல, வார்த்தைகள் எல்லாம் ரொம்ப உருக்கமா இருந்தது. அழுகைய அடக்க முடியல’ என்றாராம் அவர்.

ஆடியோ கேசட்டின் பெயர் ‘சுகமாக்கும் சிலுவை’. இதில் விசே­ம் என்னவென்றால், திருச்சி மறைமாவட்டத்திலுள்ள பெரும்பாலான கோவில்களில் புனித வாரத்தில் பாதம் கழுவும் சடங்கின் போது,
பாதங்களைக் கழுவினார் ‡ இயேசு
பாதங்களைக் கழுவினார்  என்ற பாடலைத்தான் பாடற்குழுவினர் பாடுகிறார்கள் என்பதே !

  எனக்கு வயது 85 ஆகிறது. கிறிஸ்தவ எழுத்தாளர்கள் பலர் தங்கள் பேனாவை வைத்து விட்டார்கள். நான் வைக்கவில்லை.
இதுவரை 43 தொடர்கதைகள் எழுதியிருக்கிறேன். இதில் 6 கதைகள் நூல் வடிவம் பெற்றிருக்கிறது.  6 விருதுகள் பெற்றிருக்கிறேன். சாந்தோம் விருது, கலைக்காவிரி விருது, நம்வாழ்வு விருது, மதுரை, கத்தோலிக்க கிறிஸ்தவ கலை இலக்கிய மன்றம் விருது, திரு இருதய தூதன் 125 ‡ வது ஆண்டு விருது, ஜோய் ஆலுக்காஸ் விருது ஆகியன ஆகும்.

(எமது வேண்டுகோளிற்கு இணங்க, தன் வாழ்க்கை அனுபவத்தை உருகத்துடன் நம் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்ட உயர்திரு லெயோ ஜோசப் அவர்களுக்கு அன்னையின் அருட்சுடர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. வாழ்க்கை ஓட்டத்தின் மேடுபள்ளங்களி லெல்லாம் உறுதியாக நின்று பயணித்திருக்கிறார் லெயோ ஜோசப். இளம் உள்ளங்களுக்கு இவரின் வாழ்க்கை அனுபவம் சிறந்த முன்னோட்ட பாதையாகும். இந்த கட்டுரை அச்சாகும் நேரத்தில் இவரின் இறப்பு செய்தி இடியைப்போல் வந்து சேர்ந்தது. அவருடைய மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் எங்களின் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்)

Monday, 28 August 2017

நான் எழுத்தாளன் ஆனேன்

நான் எழுத்தாளன் ஆனேன்
- லெயோ ஜோசப்,  திருச்சி
21. கலையரங்கம் மேனேஜர் ஆனேன்

அச்சக உரிமையாளர், திரவியம் அண்ணனிடம் சொல்லியிருக்கிறார்; ‘அவர் வந்து இங்கே அரைமணிநேரம் தான் இருந்தார். அவர் ஒரு புத்திசாலி என்பதைக் கண்டு கொண்டேன். அவரெல்லாம் கலைக்காவிரியில் அவசியம் இருக்க வேண்டும். விட்டு விடாதீர்கள்’ என்று சொல்லியிருக்கிறார்.

 Fr. ஜார்ஜிடம் திரவியம் அண்ணன் கெஞ்சியிருக்கிறார். ‘அவருக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன். சேர்த்துக் கொள்ளலாம்’ என்று ய்r. ஜார்ஜ் சம்மதிக்கவில்லை. கலைக்காவிரி சொஸைட்டி என்று ஒன்று உண்டு. ஆயர் அதற்குத் தலைவர். நான் அதில் உறுப்பினன். ஒரு வாரத்தில் அதன் கூட்டம் நடைபெற விருந்தது. அதற்குப் போவதா?, வேண்டாமா? என்று ஒரே குழப்பம். 

எங்கள் கோவிலில் புனித வாரத்திற்காக பக்தியைத் தூண்டும் அளவுக்கு ஜோடிப்பது வழக்கம். நான் அதில் ஈடுபட்டிருந்தேன். அப்போது நண்பர் ஜேக்கப் வந்தார். ‘அப்பா உங்களை வரச் சொன்னார்’ என்றார். திரு அடைக்கல ராஜீக்கு ஓர் அலுவலகம் உண்டு. அதில் ஜேக்கப்பின் அப்பா மேனேஜர். அவரைப் போய்ப் பார்த்தேன்.

‘உங்களுக்கு மூன்று சான்ஸ் இருக்கிறது. சேலத்தில் சின்ன பையன்கள் சாராய பேக்டரிக்கு மேனேஜர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சரியில்லை. அவர்களை மாற்ற வேண்டும். காட்டூர் அலங்கார் தியேட்டர் மேனேஜர் சரியில்லை. கலையரங்கம் தியேட்டரை லீஸீக்கு எடுக்கப் போகிறார்கள். இது மூன்றில் உங்களுக்கு எது கிடைக்கிறதோ’ என்றார்.

பிரபாத் டாக்கீஸ் மேனேஜர் அருமைராஜ் வேலையை விட்டு விட்டு திரு. அடைக்கலராஜிடம் ஜெனரல் மேனேஜராக இருந்தார். அவர் என்னை அழைத்துக் கொண்டு திரு. அடைக்கலராஜைப் பார்த்தார். ‘நம்ம கலையரங்க  மேனேஜராகப் போடலாம்’ என்றார். ‘இவரை எனக்குத் தெரியுமே! போட்டுக்கலாமே!’ என்றார் அவர். நான் கலையரங்கம் மேனேஜர் ஆனேன். கலையரங்கம் புளீ தியேட்டர்களிலே, தமிழ்நாட்டிலேயே பெரியது. உடனே அருமைராஜீம் நானும் அதே அச்சகத்துக்குப் போனோம். அருமைராஜ் என்னை கலையரங்க மேனேஜர் என்று அச்சக முதலாளிக்கு அறிமுகம் செய்து வைத்தார். டிக்கட்டுகள் அடிக்க ஆர்டர் கொடுத்துவிட்டு வந்தோம். அச்சக  முதலாளி, திரவியம் அண்ணனிடம், ‘அவர் இனிமேல் உங்களுக்குக் கிடைக்க மாட்டார். அவர் கலையரங்க மேனேஜர் ஆகி விட்டார்’ என்று சொல்லியிருக்கிறார்.
Fr. ஜார்ஜும் நானும் சமாதானமாகி விட்டோம். அதன்பிறகு வழக்கம் போல் பாடல்கள், ஒலி‡ஒளி நாடகங்களும் எழுதிக் கொடுத்தேன்; சில கலை நிகழ்ச்சிகளில் நடித்தும் கொடுத்தேன்.

தஞ்சாவூரிலிருந்து சில குருக்கள் வந்தார்கள். ஏதோ நிகழ்ச்சிக்காக எழுத வேண்டுமென்றார்கள். எழுதிக் கொடுத்தேன். அதில் அவர்களுக்கு திருப்தி இல்லை. அவர்களாகவே எழுதிக் கொண்டு கலைக்காவிரிக்குப் போனார்கள்.

 Fr. ஜார்ஜ் ஸ்க்ரிப்டைப் படித்துப் பார்த்தார். அவர்களையும் அழைத்துக் கொண்டு நேரே என்னிடம் வந்தார். ‘சார், திருச்சபையின் வளர்ச்சி பற்றி ஒரு ப்ரொக்ராம் தயார் செய்தோம் அல்லவா?அதில் எழுதி இருந்தீர்களே’ நதியின் நோக்கம் கடலில் கலப்பதுதான். அதற்காக மணல் மேடுகளைக் கரைத்துக் கொண்டு, கற்பாரைகளுக்கு ஒதுங்கிப் போய்க் கொண்டு தனது லட்சியத்தை அடைகிறது’ன்னு. அது மாதிரி எழுதிக் குடுங்க’ என்றார். நானும் அப்படியே எழுதிக் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு போனார்.

தவக்காலத்திற்காக ஓர் ஆடியோ கேசட் போட Fr.ஜார்ஜ் விரும்பினார். அப்போது Fr.சார்லஸ் அஸிஸ்டெண்ட் இயக்குநராக இருந்தார். ஃபாதர் ஜார்ஜ் என்னைக் கூப்பிட்டனுப்பினார். ‘தவக்காலத்திற்காக ஒரு கேசட் போட வேண்டும். அது வழக்கமான பாணியில் இல்லாமல் புதுமையாக இருக்க வேண்டும். ஃபாதர் சார்லஸிடம் ஐடியா கேட்டுக் கொள்ளுங்கள்’ என்றார்.

Fr. சார்லஸிடம் போனேன். அவர் தவக்காலம் என்றால் என்ன? எது, எது தவம் என்று விளக்கிச் சொன்னார். முதல் பாட்டு ஆயிற்று. அடுத்துப் பாடுகளை பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.
(இன்னும் சொல்வேன்)...

Wednesday, 28 June 2017

நான் எழுத்தாளன் ஆனேன்...

நான் எழுத்தாளன் ஆனேன்...

19. இயேசு காவியம்  வெளியீட்டு விழா!

அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். இயேசு காவியத்தை வெளியிட வேண்டும் என்பது கண்ணதாசனின் விருப்பம். ய்r.ஜார்ஜ் சென்னைக்குப் போய், எம்.ஜி.ஆரைச் சந்தித்து, கண்ணதாசனின் விருப்பத்தைச் சொன்னார். எம்.ஜி.ஆர். வர சம்மதித்தார்.

       அப்போது  எம்.ஜி.ஆருக்கு எதிர்ப்பு இருந்தது. அவர் திண்டுக்கல் வழியாக திருச்சிக்கு வருவதாகப் பேச்சு. ஆனால், அவர் பிளேன் ஏறி திருச்சிக்கு வந்து விட்டார். உறையூர் வழியாக செயின்ட் ஜோசப்ஸ் காலேஜிக்கு வருவதாக வதந்தி. ஆனால், அவர் சர்க்யூட் ஹவுசிலிருந்து காரில் ஜோசப் கல்லூரிக்கு ஆளுக்கு முன்னால் வந்து உட்கார்ந்திருந்தார்.

       வெளியீட்டு விழா ஆரம்பமானது. எம்.ஜி.ஆர். பக்கம் பக்கமாக வாசித்து விமர்சனம் செய்தார். மெமெண்டோ பெற்றவர்களில் நானும் ஒருவன். நான் எம்.ஜி.ஆரைத் தாண்டி அந்தப் பக்கம் போய் நின்றேன். இந்தப் பக்கம் வந்து நில்லுங்க. உங்கள எல்லோரும் பார்க்க வேண்டாமா? என்று சொல்லி எம்.ஜி.ஆர். என்னை இந்தப் பக்கம் நிற்க வைத்து மெமெண்டோவைக் கொடுத்தார். விழாவில் வலம்புரிஜான் போன்றோர் வாழ்த்திப் பேசினார்கள்.

      நான் மாலை முரசில் இருக்கும்போது ஒரு வேடிக்கை நடந்தது. எம்.ஜி.ஆர். நடித்த ரிக்ஷாக்காரன் என்ற படத்தின் சிறப்பு மலர் ஒன்று வெளியிட்டோம். சிறப்பு மலர் வெளியிடும்போது கவிதை ஒன்று வெளியிடுவோம். கருணைதாசன் என்றொருவர் இருந்தார். அவர் மரபுக் கவிதைகள் எழுதுவார். அவரைக் கூப்பிட்டு ஆசிரியர் கவிதை ஒன்று எழுதச் சொன்னார். அவர் மரபுக் கவிதைகளாக எழுதிக் கொண்டு போய் காண்பித்தார்.

       இது இல்லிங்க... இப்படி இல்லிங்க என்று சொன்னாரே தவிர ய்லியிவவிலிஐஆ என்று சொல்ல வரவில்லை. நான் சும்மா இருக்கக் கூடாதா?
   வண்டியிலே ஏறுவாரு நம்ம வாத்தியாரு
  கிண்டி குதிரப் போல அது பறந்து போகும் பாரு
  வாயுவேகம் மனோ வேகம் என்பதெல்லாம் வேறு
  வாத்தியாரு ஓட்டுறத பார்க்கிறதே ஜோரு...

 என்று எழுதிக் கொண்டு போய் காண்பித்தேன்.
இதுதாங்க, இப்படித்தாங்க இருக்கணும். நீங்க எழுதுங்க’ என்றார். நான் அதுவரை ரிக்ஷாக்காரன் படத்தைப் பார்க்கவில்லை. பார்த்த பையன்கள் சொன்னதை வைத்து எழுதினேன்.

         பாரட்டு காப்பிக்கு மேல் காப்பியாக வருகிறதே பார்க்கலாம். எல்லோரும் எம்.ஜி.ஆர். ரசிகர்கள். முதலாளி திரு.இராமச்சந்திர ஆதித்தன் கூட கேட்டாராம், கவிதை யார் எழுதியது? என்று.

         ஆரம்பத்தில் ‘சாந்தோம் கம்யூனிகே­ன்’,  இறையியல் எப்படி எழுதுவது என்பது பற்றி கொடைக்கானல் சென்பகனுVர் செமினரியில் எழுத்தாளர்களுக்குப் பயிற்சிப் பாசறை நடத்தியது. மதுரைப் பேராயர் ஆரோக்கியசாமி அவர்களிடம் பேசி, பணம் வாங்கி கவிஞர் அமலன் எங்களை அழைத்து வந்தார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

 நாகர் கோவிலைச் சேர்ந்த குருவானவர் ஒருவர் சொன்னார்: 
இந்தப் பக்கம் லெயோ ஜோசப், அந்தப் பக்கம் முல்லை பெர்க்மான்ஸ். நான் என்னத்தச் சொல்றது? என்றார். ஒரே சிரிப்பு!

         அந்தப் பயிற்சிப் பாசறை முடிந்ததும் வேளாங்கண்ணியில் மூன்று நாள் மாநாடு. அதற்கும் அமலன்தான் செலவு செய்தார். அதில் ஊட்டி ய்r. மாத்யூ, மதுரை ய்r. தம்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அங்குதான் வாரப்பத்திரிக்கை தொடர்பாகப் பேசப்பட்டது. கவிஞர் அமலனும் தம்பி கபிஸ்தலம் ஆசாவும் ஆயர் பேரவையில் பேசி நம் வாழ்வு பத்திரிக்கை உருவானது. மரியஅருள் தம்புராஜ் முதல் ஆசிரியரானார்.

         அதன் பிறகு புனித சின்னப்பர் குருத்துவக் கல்லூரியில் மாநாடு நடைபெற்றது. எழுத்தாளர் மன்றம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு என்னைத் தலைவனாக்கினார்கள். பின்னர் பேராசிரியர் ஆல்பர்ட் வந்தார்.   அமுதனை ஆணைப் பேராளராக நியமித்தார். நல்லாயன் நிலையத்தில் கூட்டம் நடந்தது.

           ‘கிறிஸ்தவ எழுத்தாளர் பேரவை’  என்று பெயர் வைத்து விட்டு, பிற சமய எழுத்தாளர்களும் எழுத அனுமதிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. தலைவர் பதவியையும், உறுப்பினர்  பதவியையும் ராஜினாமா செய்தேன்.
 ( இன்னும் சொல்வேன்)  

Tuesday, 2 May 2017

நான் எழுத்தாளன் ஆனேன்...

நான் எழுத்தாளன் ஆனேன்... 
- லெயோ ஜோசப் 


கச்சேரி  தயார் செய்து வைத்திருந்தோம். ய்r. ஜார்ஜ் வந்தார். கூடவே ஜெர்மனியிலிருந்து ஒருவரும் வந்திருந்தார். ஃபாதர் ஞானப்பிரகாசத்தைக் கூப்பிட்டு, “பக்கத்திலிருக்கும் ஊர் எதிலாவது  நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்” என்று கூறினார். 
         
 அவர் மலையடிப்பட்டியில்  ஏற்பாடு செய்தார். மாலையில் எல்லாரும் வேனில் புறப்பட்டோம். ஒவ்வொரு நடனத்துக்கும் இடையில் நகைச்சுவையாக பேசுவேன்.  மக்கள்  எல்லோரும் சிரிப்பபார்கள்.
“ஏன் எல்லோரும் சிரிக்கிறார்கள்?” என்று ஜெர்மன்காரர் கேட்பார்.  Fr. ஜார்ஜ் நான் பேசியதற்கு விளக்கம் சொல்லுவார். அப்படியானால் எங்கள் நாட்டிலும் இந்நிகழ்ச்சியை நடத்துங்களேன். முக்கிய பகுதிகளில்  நான் ஏற்பாடு செய்கிறேன்”  என்றார்.  இன்னொரு அம்மையார் வந்தார்கள். அவர்கள், “மற்ற பகுதிகளையும் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார்கள். முடிந்தது, ஜெர்மனிக்கு கலைக் காவிரி நடனக்குழு போவது உறுதியாயிற்று.    இப்போது நான்  குழுவுடன் போவதா, வேண்டாமா என்பதில் பிரச்சனை எழுந்தது. நான் நன்றாக நடிப்பேன் என்பதால், 

நான்  குழுவுடன் போக வேண்டுமென்பது பலரது விருப்பம். ஆனால், அச்சகத்திலும் ஒருவர் இருக்க வேண்டும். ஃபாதர்  Fr. . ஜார்ஜ் சொன்னார். “லீமாவை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால், ஒவ்வொரு சந்தேகத்தையும் ய்r.  ஸ்தனிஸ்லாசைக் கேட்டுச்  செய்ய வேண்டும். அவர் சற்று தூரத்தில் இருக்கிறார். ஆனால், லியோ ஜோசப் என்றால் கவலையே இல்லை. இயேசு காவியம் முழுவதும் அவருக்குத் தெரியும். எதிலாவது சந்தேகம் என்றால் அவரே சரி செய்துக் கொள்வார். 2 வாரத்துக்கு ஒரு தடவை அவர் குடும்பத்தை வந்து  பார்த்து விட்டுப் போகட்டும்” என்றார். அப்படியே முடிவாயிற்று. அவர்கள் ஜெர்மனிக்குப் போனார்கள். நான் அச்சகத்துக்குப் போனேன்.
 
கண்ணதாசன் அமெரிக்காவுக்குப் போனார் ஜெனரல் செக்அப்புக்காக. அவரது குழந்தை விசாலி அப்போது ஐந்து வயது சிறுமி. அவரது போட்டோவைப் பாக்கெட்டில் வைத்து, கண்ணதாசன் அடிக்கடி பார்த்துக் கொள்வாராம்.    யார் அந்தச் சிறுமி? உடனே வரவழையுங்கள் என்று டாக்டர்கள் கூறி விட்டார்களாம். 3- வது மனைவியும் உடனே புறப்பட்டுப்  போனார்களாம். Fr.  ஜார்ஜ் அமெரிக்காவுக்குப் போனார். இயேசு காவியத்தில் அதுவரை அச்சாகியிருந்த பாரங்களை ஒரு புத்தகமாக எடுத்துப்  போனார். கண்ணதாசனைப்  பார்த்துத் அச்சாகி யிருந்த பாரங்களைக் காண்பித்தாராம். கண்ணதாசன் 
தலையசைத்தாராம். “ஹிந்தியில்மொழிபெயர்க்கிறேன் என்கிறார்கள். அனுமதிக்கலாமா?” என்று  Fr. ஜார்ஜ் கூறியிருக்கிறார். கண்ணதாசன் தலையை ஆட்டினாராம். தமிழ்நாட்டைச் சேர்ந்த குருவானவர் ஒருவர் நோயாளியுடன் பேசுவதை மருத்துவமனை யின் தலைமை சகோதரி   கவனித்திருக்கிறார். அவர் Fr. ஜார்ஜிடம் விசாரித்திருக்கிறார்.
       
 “அவர் தமிழ்நாட்டின் பெரிய பொயட். இயேசுவின் வரலாற்றைக் கவிதையாக எழுதியிருக்கிறார்” என்று Fr.  ஜார்ஜ் கூறியிருக்கிறார். உடனே ஒரு சிலுவையை தலைமாட்டில் மாட்டியிருக்கிறார் சகோதரி.  அதன் பிறகு அவரைக் கவனிக்கும் பொறுப்பை சகோதரி ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

 கண்ணதாசன்  திடீரென்று மரணமடைந்தார். அங்குள்ள டாக்டர்களே சொன்னார்களாம், “இப்படி திடீரென்று போவார் என்று தெரிந்திருந்தால் கொஞ்ச நேரம் பேச வைத்திருக்கலாம்”என்று.  தமிழகமே துயரத்தில் ஆழ்ந்தது.

      Fr. ஸ்தனிஸ்லாசும், சந்திரமோகனும், நானும், டிராயிங் மாஸ்டரின் துணையுடன் ஒரு மலர் வளையத்தின் நடுவே, “இயேசு   காவியம்” என்றெழுதி, கண்ணதாசனின் காலடியில் வைத்தோம்.

அமெரிக்காவிலிருந்து கேபிள் வந்தது, பாடி மேல் கெமிக்கல் அப்ளை செய்திருக்கிறோம். பல மாதங்களுக்குக் கெடாது. யாராவது தொட்டு விட்டால் உடனே சோப்புப் போட்டு கையைக் கழுவி விடுங்கள் என்று.
( இன்னும் சொல்வேன் )   

Monday, 27 February 2017

நான் எழுத்தாளன் ஆனேன்..

நான் எழுத்தாளன் ஆனேன்...

16. ஆயர் தாமஸிடம் ஒப்படைத்தார்

- லெயோ ஜோசப், 
திருச்சி
எழுத்துப் பிரதியை கவியரசு கண்ணதாசன் தாமஸ் ஆயரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புனித சின்னப்பர் குருத்துவக் கல்லூரியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், குருக்கள், கன்னியர்கள் குழுமி இருந்தனர்.

உரிய நேரம் வந்ததும் கவியரசு கண்ணதாசன் எழுத்துப்பிரதியை ஆயரிடம் கொடுத்துப் பேசினார் : இந்த இயேசு காவியத்தைக் கண்ணதாசன் எழுதலாமா என்று  உங்கள் பக்கமும் எதிர்ப்பு எங்கள் பக்கமும்  எதிர்ப்பு. அவன் குடிகாரன் என்று  உங்கள் பக்கத்தில். அர்த்தமுள்ள இந்து மதம் பற்றி எழுதிய கண்ணதாசன் இயேசுவைப் பற்றி எழுதலாமா என்று எங்கள் பக்கத்தில்!

‘மரிய மதலேனாளைப் பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். அவள் எவ்வளவு பெரிய பாவி என்பதும் தெரியும். அவளை மன்னித்த இயேசு இந்த கண்ணதாசனை மன்னிக்க மாட்டாரா?’

கைதட்டல் வானைப் பிளந்தது. அதன் பிறகு 2 மணி நேரம் பேசினார். அதன் பிறகுதான் பிழைத்திருத்தம் எல்லாம். கடைசி அமர்வை கொடைக்கானலில் வைத்துக் கொண்டோம். இயேசு சபைக்குச் சொந்தமான மிக  உயர்ந்த இடத்தில் இறுதி அமர்வை முடித்தோம்.

இறுதி ஸ்கிரிப்ட், அசை சேர்த்தல் எல்லாம் முடிந்தது. ஃபாதர்.ஸ்தனிஸ்லாஸ் உப தலைப்புகள் எல்லாம் எழுதினார். ஸ்க்ரிப்ட் ரெடி. கண்ணதாசனிடம் படித்துக் காட்டிவிட்டு அச்சகத்துக்குப் போக வேண்டியதுதான். கண்ணதாசனிடம் படித்துக் காட்டவேண்டும். யார்  போவது? ஃபாதர்.ஜார்ஜ், ஃபாதர்.அமுதனையும், என்னையும்  தேர்வு செய்தார்.

ஒரு குழுவாக சென்னை சென்றோம். கண்ணதாசன் கவிதா ஹோட்டலுக்கு வந்து விடுவார். அவர் ‘போதும்’ என்று சொல்கிற வரையில் ஃபாதர் அமுதனும், நானும் மாறி, மாறி படிப்போம். அவர் ‘போதும்’ என்று சொன்னதும் நிறுத்தி விடுவோம். இனி மறுநாள்தான்.

சில சமயங்களில் சில சுவையான வி­யங்களைப் பற்றிப் பேசுவார். நான் எற்கனவே எழுத்தாளர் கூட்டங்களில் அவர் பேச்சைக் கேட்டிருக்கிறேன். மிகவும் நகைச்சுவையாகப் பேசுவார்.

‘ஒரு புலவன் அரசனைப் பார்க்கப் புறப்பட்டான். நெடுந்தொலைவு நடந்து வந்த களைப்பு, தூக்கம் வந்தது. அரசனின் மஞ்சத்தின் மீதே படுத்து  உறங்கிவிட்டான். அரசன் வந்தான். தனது மஞ்சத்தில் புலவர் படுத்து உறங்குவதைக் கண்டான். புலவர் எழுந்திருக்கும்வரை விசிறியால் விசிறி விட்டான்’. இதை எழுதி வைத்தவன் ஒரு புலவன்தான்.

‘இன்னொரு புலவன் அரசனைப் புகழ்ந்து பாடினான். மகிழ்ந்த அரசன், என்ன வேண்டும்?’ என்று கேட்டான். அதற்கு புலவன் ‘யானைக் கன்றும், வளநாடும் வேண்டும்’ என்றான். ‘ஏன் புலவரே, உமக்கே, சாப்பாட்டுக்கு வழியில்லை. இதில் யானைக் கன்றை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்?’ என்று அரசன் கேட்டான். அதற்குப் புலவன், ‘நான் இன்னொருவருக்குத் தருவதாக வாக்களித்திருக்கிறேன்’ என்றான்.

‘வேறொரு புலவன் அரசனைப் புகழ்ந்து பாடினான். மகிழ்ந்த அரசன் பொற்கிழி கொடுக்க விரும்பினான். பொற்கிழியை சும்மா நீட்டினால் அவ்வளவு மரியாதையாக இருக்காதே என்பதால் ஒரு தட்டு கொண்டுவரச் சொன்னான்’. தங்கத்தட்டு ஒன்று வந்தது. பொற்கிழியைத் தட்டில் வைத்து நீட்டினான். புலவனுக்குத் தங்கத்தட்டுமேல் ஆசை வந்துவிட்டது.

‘மன்னா, பணத்தட்டு உனக்கா? எனக்கா?’ என்று கேட்டான்.
‘பணத்தட்டு’ என்ற வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு. ‘பணத்தட்டு’ என்று ஓர் அர்த்தம். ‘பணத்துக்குத் தட்டுப்பாடு’ என்று ஓர் அர்த்தம்.
அரசன் பார்த்தான். ‘பணத்தட்டு  உனக்கே இருக்கட்டும்’ என்றான்.

கண்ணதாசனுக்கு மூன்று மனைவிகள். முதல் இரண்டு முறையான திருமணம். மூன்றாவது திருமணம் காதல் திருமணம். அவர் தமது முதலிரவு பற்றிக் கூறினார். அவர் பேசிக் கொண்டே இருந்தாராம். அவர் மனைவி ஒன்றும் பேசவில்லையாம். அவர் பேசுவதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே இருந்தாராம். கண்ணதாசன் நினைத்தாராம், தமக்கு நல்ல மனைவி அமைந்திருக்கிறார் என்று. காலையில்தான் தெரிந்ததாம், அவர் டமாரச் செவிடென்று. 
(இன்னும் சொல்வேன்)

Saturday, 4 February 2017

நான் எழுத்தாளன் ஆனேன், 15. கவியரசு கண்ணதாசன் அறிமுகம்

நான் எழுத்தாளன் ஆனேன்

- லெயோ ஜோசப், திருச்சி

15. கவியரசு கண்ணதாசன் அறிமுகம்

29 காஸட்டுகள் போட்டோம். சென்னை அடையாறில், மான்போர்ட் சகோதரர்கள், வாய்ப் பேசா இளைஞர்களுக்காக ஓர் அச்சகம் நடத்துகிறார்கள். அங்குதான் பாடல் புத்தகம் அச்சானது. அயனாவரத்தில் உள்ள அக்காள் வீட்டிலிருந்து சாப்பாடு கட்டிக் கொண்டு, தினசரி காலை பேருந்தில் அடையாறு போவேன். பிழைதிருத்தம் செய்வேன். மாலையில் வீடு திரும்புவேன்.

ஆறு மாதங்கள் ஓடியது. அழகிய ‘இறைப்பணி பாடல்கள்’ என்ற புத்தகம் உருவானது. பாடல், பிழைதிருத்தம் எல்லாம் நான்தான். சகோதரர் ஜெபமாலை, ஒரு புத்தகத்தை ஃபாதர் ஜார்ஜிடம் கொண்டு போய் காண்பித்தார். ‘ஒரு பிழைகூட இல்லாமல் பார்த்திருக்கிறார்’ என்று கூறினார்.

கண்ணதாசன் குற்றாலத்தில் ‘இயேசு காவியம்’ எழுதத் தொடங்கியிருந்தார். அப்போது என்னை அழைத்துச் செல்லவில்லை. ஃபாதர் ஸ்தனிஸ்லாசும், ஃபாதர் ஜார்ஜ்‡ம் விவிலியத்தைப் படித்துச் சொல்ல, கண்ணதாசன் கூற, கண்ணப்பன் எழுதுவார். இப்படியாக இயேசு காவியம் 9 நாளில் உருவானது.

கண்ணதாசன் கவிதை சொல்லும்போது மடமடவென்று சொல்லுவார். வார்த்தைகள் சரளமாக வந்து விழும். சமயத்தில் தவறாக இருக்கும். அவர் சொல்லும் சரளம் கெட்டு விடுமே என்பதால், தவறாக இருந்தாலும் விட்டு விடுவார்கள். ஊருக்குத் திரும்பியதும் 8 குருக்கள் (எல்லோரும் இறையிலில் முனைவர் பட்டம் பெற்றவர்கள்) அமர்ந்து குறைகளைக் கண்டுபிடிப்பார்கள்.

நான் குமாஸ்தா. குருக்கள் கூறும் குறைகளைக் குறித்துக் கொண்டு, மீண்டும் நகலெடுத்து, செயின்ட் ஜோசப்ஸ் கல்லூரிக்குச் சென்று, புரொபசர் சாமிமுத்து  ஐயாவைப் பார்த்து, நகலெடுத்தவைக்கு அசை பிரித்து வாங்கி வந்து நகலெடுத்து, மீண்டும் படிக்கத் தயாராக வைக்க வேண்டும். இதற்காக எனக்கு ஒரு தனி அறை, ஒரு டைப்பிஸ்ட்.

இது வரை டிஸ்யூ பேப்பர் வைத்து நகலெடுத்து, ஜெம் கிளிப் குத்தி வைத்து விடுவார்கள். அதைத்தான் படித்துப் பார்க்க வேண்டும்.

நான் ஒரு காரியம் செய்தேன். சார்ட் அட்டை வாங்கி வந்து, 10 தனித் தனி புத்தகமாகத் தயாரித்தேன். அதைப் பார்த்ததும் குருக்கள், ‘இது யார் செய்தது?’ என்று கேட்டார்கள். ஃபாதர் ஜார்ஜ் என்னைக் காண்பித்தார். ‘வெரிகுட்’ என்றார்கள்.

நான் பாமரத்தனமாக விவிலியத்திலிருந்து சில சந்தேகங்களை எழுப்பினேன். ‘அட, இவர் நல்ல சந்தேகங்களை கேட்கிறாரே! நீங்க ஏன் தனியாக அங்க உட்காந்திருக்கீங்க? நாற்காலிய தூக்கிக்கிட்டு இங்க வாங்க’, என்று என்னையும் குழுவோடு சேர்த்துக் கொண்டார்கள். (இயேசு காவியத்தைப் பார்த்தீர்களானால், ஃபாதர்.ஸ்தனிஸ்லாஸ் எழுதிய முன்னுரையில், அறிஞர் வரிசையில் என் பெயர் இருக்கும்).

பிழை திருத்தினோம். கண்ணதாசனை அழைத்து, ஆனந்த் ஹோட்டலில் ரூம் போட்டு திருத்தும் பணியை மேற்கொண்டோம். கண்ணதாசன் கூடியவரையில் தத்துவங்களைக் கையாள்வார். யூத சட்டப்படி கசையடி என்றால் 40 அடிதான் அடிக்க வேண்டும். மேற்கொண்டு  ஓர் அடி அடித்தால், அடித்தவனுக்குக் கசையடி விழும். இதனால் 39  அடியுடன் நிறுத்திக் கொள்வார்கள். ஆனால், இயேசுவைப் பொருத்தவரை, அடித்துக் கொல்ல வேண்டும் என்ற நோக்கில் கணக்கின்றி அடித்தார்கள்.

இதைச் சொன்னோம். 8 வரிகளை மாற்ற வேண்டுமே என்று சற்றுத் தயங்கினார். பிறகு சொல்லத் தொடங்கினார்.

நாற்பதில் ஒன்றுகு றைத்துத்தான் - அடி
நல்குவ ராம்அந்த நாளிலே - வெற்று
ஆர்ப்பரிக் கும்அந்தக் கூட்டமோ - எண்ணி
ஆயிரம் நூறென ஆடிட்றாம் - முற்றும்
தோற்பவர் இப்படி ஆடுதல் - இந்தக்
தொல்புவி யில்உள்ள வேதமே - அதை
ஏற்றது நாயகன் மேனியே - இரத்தம்
இன்னொரு யூதர்கள் கேணியே
!
உடம்பு சிலிர்த்துப் போயிற்று. கவியரசு கண்ணதாசன் பற்றி நிறைய செய்திகள் உண்டு. 
(இன்னும் சொல்வேன்)

Friday, 2 December 2016

நான் எழுத்தாளன் ஆனேன்

நான் எழுத்தாளன் ஆனேன்

- லெயோ ஜோசப், திருச்சி

14. எழுத்தாளனாக கலைக்காவிரிக்குள் நுழைந்தேன்; கவிஞனாக

நீங்க இங்க வந்துடுங்களேன் என்றார் ஃபாதர் ஜார்ஜ் ஒரு நாள். எனக்கும் ஆசைதான். அன்றிரவே சென்னைக்குப் புறப்பட்டேன். மறு நாள் மாலை முரசு அலுவலகத்தில் இருந்தேன். திரு.இராமச்சந்திர ஆதித்தனைச் சந்தித்தேன். நீங்க நல்ல இடத்துக்கு போவது எனக்கு சந்தோ­ம்தான். போங்க, மேனேஜர்கிட்ட சொல்றேன் என்றார்.
மாலை முரசுக்கு வந்தேன். ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். 1998‡இல் கலைக்காவிரியில் சேர்ந்தேன். அப்போதிருந்து அங்கு நான் வேலை பார்த்த 6 ஆண்டுகளும் வானொலிக்காக பாடல் எழுதுவது நான்தான். நான் பாடல் எழுதும்போது, ஒரு சஸ்பென்ஸ் வைத்து பாடலின் கடைசியில் சஸ்பென்ஸை உடைப்பேன். பாடல்களை எழுதி ஃபாதர் ஜார்ஜ் இல்லாத நேரமாகப் பார்த்து அவரது மேஜைமேல் வைத்துவிட்டு வந்து விடுவேன். ஒரு நாள் என்னைக் கூப்பிட்டனுப்பினார். என்ன பாட்டு எழுதியிருக்கீங்க? பல்லவி முடிஞ்சு அனுபல்லவி வரும்போது, பாட்டைக் கேட்கிறவன் பல்லவியை மறந்து விடுவான். சரணம் வரும்போது அனுபல்லவியை மறந்து விடுவான். அப்புறம் எப்படி உங்க பாட்டு மனசில நிற்கும்?
ஒரு கருத்தை எடுத்துக்கிட்டா அதையே டெவலப் பண்ணிக்கிட்டுப் போகனும். பல்லவியிலிருந்து அனுபல்லவி; அனுபல்லவியிலிருந்து சரணம் இப்படி டெவலப் பண்ணிக்கிட்டே போவனும் என்றார். அவர் பாட்டெழுத மாட்டார். ஆனால், ஒரு பாடல் எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார். அதுதான் தலைமைப் பண்பு.
அதன் பிறகு மெஸேஜுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடல் எழுதத் தொடங்கினேன். யாருக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பது என்ற பிரச்சனை எழுந்தது. அதற்காக ஒரு மீட்டிங் போடப்பட்டது. அட்மினிஸ்டேசனைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். வெளியில் நாலு இடங்களுக்குப் போகறவன் என்பதால் சம்பள விகிதங்களைத் தெரிந்து வைத்திருப்பேன் என்பதால் என்னையும் சேர்த்துக் கொண்டார்கள்.
ஃபாதர். ஜார்ஜ்தான் சம்பளங்களை முடிவு செய்தார். டெக்னீ´யனுக்கு 1000 ரூபாய், அவரவர் வேலைக்கு ஏற்றபடி சம்பளங்களை முடிவு செய்தார். என்னை ஒன்றும் கேட்கவே இல்லை. கடைசியில் லியோ ஜோசப்புக்கு 600 ரூபாய் என்று கூறிவிட்டு எழுந்து விட்டார். அது மிகவும் குறைச்சல் என்பது எனக்குத் தெரியும். ஆனால், ஒன்றும் பேசவில்லை.
அதற்குக் காரணம் உண்டு. சிறிது நாட்களுக்கு முன்பு, அவர் எதிர்பார்ததபடி நான் வேலை செய்யவில்லையயன்று ரூபாய்.5000 கொடுத்து என்னை நிறுத்தி விட்டார். ஒரு சலுகையளித்தார். என்னை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு ஒரு நாளைக்கு ரூபாய்.15 சம்பளம். இப்போது சம்பளத்தை  உயர்த்தி விட்டார்.

அப்போது அமாபெல் என்னும் ஹோலி கிராஸைச் சேர்ந்த சகோதரி, ஆங்கிலோ இந்திய மாணவிகளுக்கு பத்திரிகை நடத்துவது எப்படி என்று வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். அவர் என்னை பயன்படுத்திக் கொண்டார். நானும் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் விளக்கங்கள் அளித்தேன். யrலிவeஐ சிஐஆயிஷ்விஜு என்றாலும் அவர்கள் புரிந்துக் கொண்டார்கள். பின்னொரு நாள் மாலை முரசு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, தினத்தாள் அச்சாகும் முறையை விளக்கினேன். சகோதரிக்கு மிக்க மகிழ்ச்சி!

அப்போது தான் திருச்சபைக்கு ஒரு பொதுப்பாடல் புத்தகம் தேவை என்று முடிவு செய்திருந்தார்கள். பழைய பாடல்களின் ஆசிரியர்களின் அனுமதி பெற்றும் புதுப் பாடல்களுக்கு இசையமைத்தும் புத்தகம் தயாரிப்பது என்று திட்டம். கோவை ஆயர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

பாடல்களை கலைக்காவிரியில் ஒலிப்பதிவு செய்வது என்று ஏற்பாடு. அதற்காக இசைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதன் பொறுப்பாளராக மான்போர்டு சபையைச் சேர்ந்த சகோததர் ஜெபமாலை நியமிக்கப்பட்டார். அவர் என்னை அழைத்துக் கொண்டார். (இன்னும் சொல்வேன்)

Wednesday, 5 October 2016

நான் எழுத்தாளன் ஆனேன்

நான் எழுத்தாளன் ஆனேன்

- லெயோ ஜோசப்
12. பெயர் மாற்றம் பொன்விழா

நாடகம் எழுத ஆரம்பித்தேன். சகோதரர் யஹன்றி மாலை நாலு மணியளவில் அறைக்கே காபி கொண்டு வந்துவிடுவார். இரவு சாப்பாட்டுக்கு என்னை அழைத்துப் போய்விடுவார். சகோதரர்களுடன் சாப்பாடு, எனக்கு மட்டும் பால்.

ரெக்டர் அவ்வப்போது நாடகத்தைப் படித்துப் பார்ப்பார். திருத்தங்கள் சொல்வார். அவர் சொல்லும் திருத்ததங்கள் அத்துணை பொருத்தமாக இருக்கும். மூன்று நாட்களில் நாடகத்தை எழுதி முடித்து விட்டேன். நாடகத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கிராண்ட் ரிகர்சல், என்னையும் அழைத்திருந்தார்கள். ஒரு பேடும், பேப்பர்களும் கொடுத்து விட்டார்கள். நான் குறைகளை சொல்ல வேண்டும். நடிகர்கள் திருத்திக் கொள்வார்கள்.

நாடகம் முழு வெற்றி பெற்றது. சகோதரர் யஹன்றி எனக்கு 50 ரூபாய் கொடுத்தார். நாடகத்துக்காக 100 ரூபாய் கொடுப்பதாக முடிவு செய்திருந்தார்களாம். நாடக ஆசிரியரையும், என்னையும் மேடையில் ஏற்றி கெளரவிப்பதாக இருந்தார்களாம். முழு நாடகத்தையும் சைக்ளோஸ்டைல் செய்து விற்பனைக்கு வைத்திருந்தார்களாம். அவர் அதை ஆட்சேபித்திருக்கிறார். இதனால் இருவரையும் மேடையேற்றவில்லை.

நான் புனித சின்னப்பர் குருத்துவக் கல்லூரியின் ஆஸ்தான நாடக ஆசிரியர் ஆகிவிட்டேன். அதன்பிறகு நாலைந்து ஆண்டுகளுக்கு நான்தான் நாடகம் எழுதிக் கொடுத்தேன்.

பிலோமினாள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சிஸ்டர் பெல்லா போனில் அழைத்தார்கள். போனேன் ‘எங்க சபை ஆரம்பத்துல ‘வியாகுல மாதா சபை’ என்ற பெயரில்தான் தொடங்கியது. திருச்சி, எடத் தெருவைச் சேர்ந்த 5 பெண்களால் ஆரம்பிக்கப்பட்டது. நாளடைவில் ‘மரியின் ஊழியர் சபை’ எனப் பெயர் மாற்றம் அடைந்தது. இப்போது பெயர் மாற்றப் பொன்விழா கொண்டாடப் போகிறோம்’.

‘அதுக்கு ஒரு நாடகம் வேணும். நீங்கதான் நல்லா நாடகம் எழுதுவீங்களே! இங்க சிஸ்டர் கொரோனா, சபை வரலாறு ஒன்று எழுதியிருக்காங்க. அது புத்தகமா எங்ககிட்ட இருக்கு. அத உங்ககிட்ட தரோம். நீங்க அத நாடகமாக எழுதித் தரணும்’ என்றார்.

‘ஆமா, நான் நாடகம் எழுதுவேன்னு யாரு உங்ககிட்ட சொன்னது?’ என்று கேட்டேன்.
‘நாங்கதான் செமினரி நாடகத்துக்கு வந்தோம்ல!’ என்று சிரித்தார்.
‘சரி சிஸ்டர், யாரு நடிக்கப் போறாங்க?’
‘எங்க நாவிஸ்ங்கதான். நீங்கதான் பயிற்சியளிக்கணும். எங்க நோவி´யேட் காஜா பேட்டையில இருக்கு. தினமும் போய் பயிற்சி குடுக்கணும். முடியுமா?’ என்று கேட்டார்.

‘சரி!’ என்றேன். தினசரி வேலை முடிந்ததும் நோவி´யேட்டுக்குப் போவேன். எந்தெந்த கேரக்டர்களில், யார் யாரைப் போடுவது என்று அவர்களே முடிவு செய்து வைத்திருந்தார்கள். அதனால், என் வேலை சுலபமாகி விட்டது. பயிற்சியளிப்பேன். இரவு சாப்பாடு அங்கு தான். வீட்டுக்கு வந்து விடுவேன்.

ஒரு மாதம் ஓடிவிட்டது. எல்லோரும் நன்றாகப் பயிற்சியடைந்து விட்டார்கள். செமினரியன்களுக்காக ஒரு நாளும், பொது மக்களுக்காக ஒருநாளும் ஆக இரண்டு நாட்கள் நாடகம் நடைபெற்றது. நாடகத்தில் சில புதிய முயற்சிகளைக் கையாண்டிருந்தோம்.

மாடியில் சில பேர் பேசுவதாக ஒரு காட்சி. மாடிக்குப் படிகள் ஏதும் கிடையாது. கைப்பிடிச் சுவர் மாதிரி ஒரு செட்டப் செய்திருந்தோம். சிலர் பேசிக் கொண்டிருப்பார்கள்; கதாநாயகி வந்து பேச்சில் கலந்து கொள்வார். நான் ஏற்கனவே கதாநாயகியாக நடிக்கும் பெண்ணிடம் சொல்லியிருந்தேன். உட்கார்ந்து, கொஞ்சங் கொஞ்சமாக எழுந்து வரவேண்டும் என்று. அவரும் அப்படியே செய்தார்.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு, மாடிப் படியில் ஏறி வருவது போன்றே இருந்தது.                              
 (இன்னும் சொல்வேன்

Tuesday, 26 July 2016

10. நான் எழுத்தாளன் ஆனேன்

10. நான் எழுத்தாளன் ஆனேன்
- லெயோ ஜோசப்,திருச்சி

   டெலிபிரிண்டர் ஆபரேட்டர் ஆனேன்

நான் ராமகிருஷ்ணா தியேட்டரில் மேலாளராக இருந்தபோது மாலை முரசு நாளிதழில் பிழை திருத்தும் வேலை காலியாக இருப்பதை, அங்கு வேலை பார்க்கும் நண்பன் ஒருவன் மூலம் கேள்விப்பட்டேன். எழுத்துத் தொடர்பான வேலை ஆயிற்றே! விடுவேனா?

மாலை முரசு மேலாளரைப் போய்ப் பார்த்தேன். அவர் என் படிப்பைப் பற்றி கேட்டு விட்டு, மறுநாள் மாலை முரசின் முதலாளி திரு.இராமச்சந்திர ஆதித்தன் வருவதாகவும், அவரிடம் கேட்டு விட்டு சேர்த்துக் கொள்வதாகவும் சொன்னார். மறுநாள் முதலாளி வந்தார். மேலாளர் என்னை அவரிடம் அறிமுகம் செய்தார்.

சினிமா வேலை நல்ல வேலைதானே! அதை ஏன் விடுகிறீர்கள்? என்று கேட்டார் திரு.இராமச்சந்திர ஆதித்தன். அதில் எதிர்காலம் இல்லை ஐயா என்றேன். வேலையில் சேர்த்துக் கொண்டார். நான் பிழை திருத்துபவன்தான் என்றாலும், நிருபர்கள் இல்லாதபோது சில நிகழ்ச்சிகளுக்கு ஆசிரியர் என்னை அனுப்புவார்.

ஒரு சமயம் தஞ்சையில் நடந்த மெடிக்கல் காலேஜ் ஆண்டு விழாவிற்கு ஆசிரியர் என்னை அனுப்பினார். அங்கே துளசிராமன் என்றறொரு நிருபர் இருந்தார். அவரைப் போய் சந்தித்தேன். இருவரும் பேருந்தில் மெடிக்கல் கல்லூரிக்குப் போனோம். விழா முடிய நடுச்சாமம் ஆகிவிட்டது. இருவரும் நடந்தே வந்து தஞ்சை பஸ் நிலையம் அடைந்தோம். நான் திருச்சிக்கு வந்தேன்.

மாலை முரசு அலுவலகத்தில், ஓர் இடத்துக்கு நிருபரை அனுப்பினால் செலவுக்குப் பணம் கொடுப்பார்கள். போய் வந்த பிறகு கணக்குக் கொடுக்க வேண்டும். தஞ்சாவூரில் மெடிக்கல் கல்லூரிக்குப் போகும்போது, துளசிராமனே பேருந்துக்கு டிக்கட் எடுத்தார். ஓட்டலில் உணவு வாங்கிக் கொடுத்தார். ஆக, எனக்கு தஞ்சாவூருக்குப் போக வர பேருந்து செலவுதான்.

அதை ஒரு பேப்பரில் எழுதி ஆசிரியரிடம் காண்பிக்க வேண்டும். அவர் கையயாப்பமிடுவார். அதை நிர்வாகியிடம் காண்பிக்க வேண்டும். அவர் கையயாப்பம் இட்ட பிறகு, காசாளரிடம் கணக்கு கொடுக்க வேண்டும். நான் கணக்கு எழுதி ஆசிரியரிடம் கொண்டு போனேன்.

இரவு சாப்பிடவில்லையா? என்று அவர் கேட்டார். துளசிராமன் வாங்கிக் கொடுத்தார் என்று சொன்னேன். டவுன் பஸ்சுக்கு? என்று கேட்டார். அதையும் அவரே கொடுத்தார் என்று சொன்னேன். நான் கணக்கு எழுதிய தாளில் மேலும் அனுமதிக்கலாம் என்றெழுதி கையயாப்பமிட்டார். நிர்வாகி மேலும் சில ரூபாய்கள் எழுதி கையயாப்பமிட்டார். அதிலிருந்து நிருபர்கள் இருந்தாலும் சில முக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஆசிரியர் என்னை அனுப்புவார்.

அப்படி, சிவாஜி கணேசன், ஜெயலலிதா, நாகேஷ், ரவிச்சந்திரன், சச்சு, சந்திரகாந்தா, பிரமிளா, பத்மினி, ஜெய்சங்கர், மனோகர் போன்றோரை பேட்டி கண்டு எழுதியிருக்கிறேன். தி.மு.க. மாநாட்டில் எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்திருக்கிறேன். நடிகர்களும் சரி, அரசியல் தலைவர்களும் சரி, பத்திரிக்கை நிருபர்கள் என்றால் காக்க வைக்க மாட்டார்கள். உடனே சந்தித்து விடுவார்கள். கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது பலமுறை சந்தித்திருக்கிறேன்.

உதவி ஆசிரியர் ஒருவர் மாற்றலாகிப் போனார். அவருக்குப் பதிலாக டெலிபிரிண்டர் ஆபரேட்டர் சந்திரசேகரை நியமித்தார்கள். எனக்கு ஃபிங்கரிங் தெரியும் ஆதலால், என்னை டெலிபிரிண்டர் ஆபரேட்டர் ஆக்கினார்கள். டெலிபிரிண்டர் என்பது பத்திரிக்கை அலுவலகங்களில் இருக்கும். டைப்ரைட்டர் போன்று சற்றுப் பெரிதாக இருக்கும். எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்கும். செய்திகளைத் தமிழில் டைப் செய்ய வேண்டும். அதற்கு சில இலக்கணங்கள் உண்டு. ற என்றால் யூய என்று டைப் செய்ய வேண்டும். ண என்றால் ஹிய என்று டைப் செய்ய வேண்டும். சென்னையில் செய்தி அனுப்பினால் அது திருச்சிக்கும், திருநெல்வேலிக்கும் கிடைக்கும். அதே போல் நாங்கள் செய்தி அனுப்பினாலும் எல்லா ஊர்களுக்கும் கிடைக்கும்.

சித்ரா வெளியீட்டின்போது ஃபாதர் ஜார்ஜ் வந்திருந்தார். தன்னை அறிமுகம் செய்துக்கொண்டார். கலைக்காவிரியைத் தோற்றுவித்தவர் இவர்தான். எனக்கு அழைப்பு விடுத்தார். கலைக்காவிரி தனிக் கட்டிடத்தில் செயல்படும் முன், ஆயர் இல்லத்தில் ஓர் அறையில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. ஹோலிகிராஸ் மடத்தைச் சேர்ந்த அருள்சகோதரி ஒருவரும், செர்வைட் கான்வென்ட்டைச் சேர்ந்த ஓர் அருள்சகோதரியும், முருகேசன் என்றொரு எழுத்தாளரும் அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.         (இன்னும் சொல்வேன்)

Sunday, 31 January 2016

நான் எழுத்தாளன் ஆனேன் - திரு. லெயோ ஜோசப்

நான் எழுத்தாளன் ஆனேன்
- திரு. லெயோ ஜோசப்
(திரு. லெயோ ஜோசப் சிறந்த பழம்பெரும் எழுத்தாளர். தற்போது அவருக்கு வயது 84. தனது வாழ்க்கை அனுபவங்களை இங்கு பகிர்ந்துக் கொள்கிறர் இது நான்காவது பகுதி)

சென்னையில் வசித்த என் அண்ணன் வீட்டுக்குப் போயிருந்தேன். சில மாதங்கள் அங்கு தங்கியிருந்தேன். அண்ணன் வீடு அயனாவரத்தில். குமுதம் அலுவலகம் கெல்ஸியில் இருந்தது. அதன் ஒரு பகுதியாகக் கல்கண்டு அலுவலகம் இருந்தது. நான் எப்போது கல்கண்டு அலுவலகத்துக்குப் போனாலும் தமிழ்வாணன் எனக்கு டிபன் வரவழைத்துத் தருவார்.
ஒரு சமயம் தமிழ்வாணனைப் பார்க்கப் போயிருந்தேன். டிபன் வரவழைத்துத் தந்தார். நான் சாப்பிட்டு முடித்த பின் அவர் சொன்னார் : ‘நீ இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி.க்குப் பாடமாக இருக்கும் ஆங்கிலத்தில் இருந்து ஒரு கதையை தமிழாக்கம் செய்து கல்கண்டில் எழுதியிருக்கிறாய். ஏராளமான கடிதங்கள் அதுபற்றி வருகின்றன. வருத்தம் தெரிவிக்க வேண்டியுள்ளது. அதனால், 6 மாதத்துக்கு உன் கதையைப் போடமாட்டேன்’ என்றார்.
அதே போல் 6 மாதங்கள் என் கதை கல்கண்டில் வரவே இல்லை. அதன் பிறகுதான் என் கதை வந்தது. நான் எழுதிய கதைகளில் ஒன்று கூட திரும்பி வரவில்லை. எல்லாக் கதைகளையும் போடுவார். ஒரு சமயம் கிறிஸ்தவக் கதை ஒன்றை எழுதி அனுப்பினேன். அதையும் பிரசுரித்தார். சொன்னது போலவே என்னை உற்சாகப்படுத்தியவர் தமிழ்வாணன்தான்.
மீண்டும் திருச்சிக்கு வந்தேன். வழக்கம் போல் கல்கண்டில் கதைகள் எழுதி வந்தேன். ஒரு சமயம் பூஞ்சோலை என்ற குழந்தைகள் பத்திரிக்கைக்கு சிறுகதை ஒன்று எழுதினேன். அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. அவர் என் கதையை அட்டைப் படக் கதையாக வெளியிட்டார்.
அது குறித்து தமிழ்வாணனுக்கு பெருமையோடு ஒரு கடிதம் எழுதினேன். எப்போதும் நான் எழுதும் கடிதங்களுக்கு தமிழ்வாணன், தன் கைப்பட பதில் எழுதுவார். இந்த என் கடிதத்துக்கு தமிழ்வாணன் பதில் எழுதவில்லை. அவருக்குப் பதிலாக அந்த அலுவலகத்தில் பணியாற்றும் திரு. சண்முக சுந்தரம் (பெரிய பையன் என்ற பெயரில் கதைகள் எழுதுவார்) பதில் எழுதினார்.
அன்புள்ள தம்பிக்கு, கல்கண்டுக்கென்று பாரம்பரியம் ஒன்றுண்டு. அது பிற பத்திரிக்கைகளில் கதை எழுதுபவர்களைக் கல்கண்டில் எழுத அனுமதிக்காததுதான். நீ நெடுக வந்து போகும் பத்திரிக்கைகளில் எல்லாம் எழுத விரும்பினால் கல்கண்டில் எழுதுவதை நிறுத்திக் கொள்.
அதன் பிறகு நான் மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுதினேன். தொடர்ந்து கதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். கொஞ்ச நாள் கழித்து, கல்கண்டில் அட்டை டு அட்டை தமிழ்வாணனே எழுதத் தொடங்கிய பிறகு நான் எழுதுவதை நிறுத்திக் கொண்டேன்.
இங்கே என் ஆருயிர் நண்பர் கவிஞர். அமலனைப் பற்றிக் கூறி விட வேண்டும். குடத்திலிட்ட விளக்காக இருந்த என்னை, குன்றின் மேல் ஏற்றி வைத்தவர் அவர். அவருக்கு கலைமகள் அலுவலகத்தில் நல்ல செல்வாக்கு இருந்தது. ‘கண்ணன்’ கலைமகளின் துணைப் பத்திரிக்கை. ஆர்வி (ஆர். வெங்கட்ராமன்) என்பவரை ஆசிரியராகக் கொண்டு நடத்தப்பட்ட குழந்தைகள் பத்திரிக்கை அது.
அதில் ஆரம்ப எழுத்தாளர்களைப் பற்றிய அறிமுகம் வந்துக் கொண்டிருந்தது. கவிஞர் அமலன், என்னைப் பற்றிய அறிமுகம் வரச் செய்தார். அதுமுதல் கண்ணனில் நான் சிறுகதைகள் எழுதத் தொடங்கினேன்.

Wednesday, 11 November 2015

நான் எழுத்தாளன் ஆனேன்

    ஸ்டாலுக்கு ஒரு புதிய கிளார்க் வந்திருந்தார். அவர் அருகில் அமர்ந்து, அப்போதுதான் வந்திருந்த ‘குமுதம்’ கட்டை பிரித்துக் கொண்டிருந்தேன். ‘கல்கண்டு’ம், குமுதம் கட்டுடன் சேர்ந்துதான் வசூல். கட்டை பிரித்துக் கொண்டிருந்த நான் அவரிடம் சொன்னேன், “தமிழ்வாணன் ரொம்ப நல்லா எழுதுறான் சார்” என்று.
    “அவரோட மச்சினன்தான் நான்” என்றார் அவர். நான் திடுக்கிட்டேன். என்னுடைய திகைப்பை அதிகமாக்குவது போல், அவர் சொன்னார் : “அதோ, பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறாரே, அவர்தான் அவரோட அண்ணன்” என வைரவன் செட்டியாரைக் காண்பித்தார்.
    திரு. வைரவன் செட்டியாரைப் பற்றி  சொல்லி விடுகிறேன். வைரவன் செட்டியார் திரு. இராமச்சந்திரனுடைய நண்பர். ஸி.ணூ.ளீ - யின் பிராவிடெண்ட் பகுதியில் உயர் அதிகாரியாக இருந்தார். தினசரி மாலையில் வருவார். திரு. இராமச்சந்திரனுடன் பேசிக் கொண்டிருப்பார். பத்திரிக்கைகளை உரிமையுடன் புரட்டுவார். வீட்டுக்குப் போகும்போது நான் துணைக்குப் போவேன்.
    அவர் வீடு கல்லுக்குழியில் இருந்தது. என்னைத் துணைக்கு அவர் தேர்ந்தெடுத்ததன் காரணம், நான் கொஞ்சம் டீயஸண்ட்டாக இருப்பேன் என்பதுதான். திருச்சி ஜங்­னில் 8 பிளாட்பாரங்கள் உண்டு. ஏராளமான தண்டவாளங்கள். இரவு நேரத்தில் ஒரு துணையுடன் போவது நல்லதல்லவா? இதுதான் என்னை அவர் தேர்வு செய்ததற்குக் காரணம்.
    அப்படி ஒருநாள் அவர் வீட்டுக்குப் போகும்போது, நான் ஒரு கதை எழுதித் தரேன். கல்கண்டுல போடச் சொல்றீங்களா சார்? என்று கேட்டேன்.
    நீ கதைகூட எழுதுவியாடா? என்று அவர் கேட்டார்.
    எழுதுவேன் சார். ஆனா, பத்திரிக்கைகளில் வந்ததில்லை என்றேன்.
    சரிடா, நான் அடுத்த வாரம் மெட்ராசுக்குப் போவேன். எழுதிக் குடு. போட சொல்றேன் என்றார். உடனே ஒரு கதை எழுதி, தபால் தலை வைத்து (கதை பிரசுரத்துக்கு ஏற்றதாக இல்லை என்றால், ஸ்டாம்ப் வைத்தால்தான் திருப்பி அனுப்புவார்கள் என்று படித்திருந்தேன்) அவரிடம் கொடுத்தேன்.
சென்னை சென்று திரும்பிய அவர், போட சொல்லி, சொல்லியிருக்கேண்டா என்றார். மேலும் அவர் ஆமா, கதை எழுதி என்கிட்டத் தானே குடுத்தே! அப்புறம் ஏண்டா ஸ்டாம்பு வச்சே? என்று கேட்டார். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.
    1951ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 15ஆம் நாள் எனது முதல் சிறுகதை கல்கண்டில் அட்டைப் படக்கதையாக வெளியானது. நான் எழுத்தாளன் ஆனேன்.
    ஒருதடவை தமிழ்வாணன் திருச்சிக்கு வந்தார். அப்போது அவரது அண்ணன் வைரவன் செட்டியார், ரொம்ப ஏழைப் பையன், பார்த்துக் கொள் என்று சொன்னார். அதற்கு தமிழ்வாணன் இவன் நல்லா முன்னுக்கு வருவான் என்று சொன்னதோடு, அப்போது வெளியாகியிருந்த ஒரு சிறுகதையின் ஒரு பாராவைப் படித்துக் காண்பித்தார்.
    அன்று அவர் சொன்ன வாக்குப் பலித்தது. இன்று நான் ஒரு குறிப்பிடத்தக்க கத்தோலிக்க எழுத்தாளனாக இருக்கிறேன்.
    ஹிக்கின்பாதம்ஸ் புக் ஸ்டாலுக்கு அகிலன், சுகி, சுப்பிரமணியன், ராகவன், தாமரை மணாளன் போன்ற பிரபல எழுத்தாளர்கள் வருவார்கள். நான் கதை எழுதுகிறேன் என்று தெரிந்ததும், சிறுகதை எழுதுவதற்கான உத்திகளைச் சொல்லித் தருவார்கள். கதை எழுத வி­யம் கிடைத்ததோ இல்லையோ, நான் ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டேன்.
(இன்னும் சொல்வேன்)
‡ திரு. லெயோ ஜோசப்

Ads Inside Post