Pages - Menu

Sunday 13 December 2015

ஜெபமாலை ஜெபிக்கப்படும் விவிலிய வார்த்தைகள்


திருவிவிலியத்தில் ஜெபமாலையின் குறிப்புகள் இல்லை. 
ஆனால் திருவிவிலியத்தால்தான் ஜெபமாலை கோர்க்கப்பட்டிருக்கிறது.

ஜெபமாலை ஜெபிக்கப்படும் விவிலிய வார்த்தைகள்

மகிழ்ச்சி மறையுண்மைகள்

மங்கள வார்த்தை (லூக் 1 : 26 - 38)
2. அன்னை மரியா எலிசபெத்தம்மாளைச சந்தித்தல் லூக் (1 : 40 - 56)
3. இயேசு பிறந்தது (லூக் 2 : 6 - 20)
4. இயேசுவை கோவிலில் அர்ப்பணித்தல் (லூக் 2 : 21 - 29)
5. இயேசுவை ஆலயத்தில் கண்டுபிடித்தது (லூக் 2 : 41 - 51)

ஒளியின் மறையுண்மைகள்

1. இயேசு திருமுழுக்கு பெற்றது (மத் 3 : 13 - 17)
2. கானாவூர் திருமணத்தில் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியது (யோவா 2 : 1 ‡ 11)
3. இயேசுவின் மலை போதனை (மாற் 4 : 13 - 17)
4. இயேசு உருமாற்றமானது (மாற் 17 : 1 - 8)
5. இயேசு நற்கருணையை ஏற்படுத்தியது (லூக் 22 : 14 - 20)

துக்க மறையுண்மைகள்

1. கெத்சமனி தோட்டத்தில் இரத்த வியர்வை வியர்த்தது (மத் 26 : 38 - 48)
2. கல்தூணில் கட்டி அடித்தது (மத் 27 :26)
3. இயேசுவின் தலையில் முள்முடி சூட்டியது (மத் 27 : 29)
4. இயேசு சிலுவை சுமந்து சென்றது. (யோவா 19 : 17)
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்தது (லூக் 23 : 33 - 46)

மகிமை மறையுண்மைகள்
1. இயேசு உயிர்த்தது (லூக் 24 : 1 - 12)
2. இயேசு விண்ணகத்திற்கு சென்றது (லூக் 24 : 50 - 51)
3. தூய ஆவி பொழியப்பட்டது (தி. பா. 2 : 1 - 4)
4. அன்னை மரியா விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. (தி.வெ 12 : 1 -17)
5. விண்ணக, மண்ணக அரசியாக அன்னை மரியா முடிசூட்டப்பட்டது.

விவிலிய வார்த்தைகளாலான அருள்நிறைமரியே செபம்
விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே
அருள்மிக பெற்ற மரியே (லூக் 1 : 28)
ஆண்டவர் உம்முடனே (லூக் 1 : 28)
பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே (லூக் 1 : 41)
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே (லூக் 1 : 42)
தூய மரியே இறைவனின் தாயே (லூக் 1 : 43)
பாவிகளாயிருக்கின்ற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் 
வேளையிலும் வேண்டிக்கொள்ளும். ஆமென். (யாக் 5 : 16)

No comments:

Post a Comment

Ads Inside Post