Pages - Menu

Showing posts with label Small story. Show all posts
Showing posts with label Small story. Show all posts

Sunday, 8 April 2018

இருள் விலகிய போது

இருள் விலகிய போது

ஒரு தலை காதலில் கொலையில் முடியும் இக்காலத்திற்கேற்ற சிறுகதை

கேத்தரீன் ஆரோக்கியசாமி, திருச்சி

Vர்கழி மாதத்து இருட்டு, இருட்டைப் பற்றி பல்வேறு விமர்சனங்களும், அர்த்தங்களும் எழுதப்பட்டாலும் அதன் முழு அர்த்தங்களும் மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத இருட்டுத்தான் அதன் முழு அர்த்தம். கருப்பு கம்பளிக்குள் கம்பளிப்பூச்சி ஒளிந்திருப்பது போல் இருட்டு என் மனமும் அப்படிதான் இருட்டாகிவிட்டது. எதிலும் தெளிவுள்ள எனது மனம் இந்த வி­யத்தில் சஞ்சலப்படுகிறது ஏன்? இந்த இருட்டு கொஞ்ச நேரத்தில் வெளிச்சமாகி விடுமே. இது நிரந்தரம் இல்லையே... ஒரு முடிவோடு வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிட்டேன். கோலம் கோணலாக இருந்தது. இருந்தாலும் குறுக்கு வழியில் அதை நேர்ப்படுத்தினேன். கோணல் நேர் படுத்த முடியும் என்ற எண்ணமே எனக்கு புத்துயிர் தந்தது. எப்படியும் இன்று சமாளித்து விடலாம் என்ற எண்ணம் மேலோங்க எழுந்து என் அறைக்கு சென்றேன். காலேஜிக்கு இன்று சீக்கிரமே கிளம்பினேன்.

இந்த இளம் வயதில் எல்லா பெண்களுக்கும் ஏற்படும் தடுமாற்றம் சரியான புரிதல் இல்லாததால் எடுக்கப்படும் முடிவுகள் விபரீதமாகிறது. அப்பாவிடம் சொல்லி உதவி கேட்கலாம் என்றால், அப்பாவின் முன் கோபம் எல்லாவற்றையும் சொதப்பிவிடும். அம்மா சரியான கட்டுப்பெட்டி, எதையும் பாஸிட்டிவாக எடுத்துக் கொள்ள தெரியாத சுபாவம். இருந்தாலும் சூட்சகமாக அம்மாவிடம் சொல்லி வைப்போம் என்ற எண்ணத்துடன்

‘அம்மா, அப்பாவுக்கு இன்னைக்கு நைட் டூட்டிதானே, மதியானம் ரெண்டு மணிக்கு காலேஜிக்கு வந்து பைக்ல கூட்டிக்கிட்டு வரச்சொல்லுமா, எனக்கு பாலகரையில ஒரு வேலை இருக்கு.’
‘சரிம்மா, அப்பா, ஏந்திரிச்ச பிறகு சொல்றேன். இந்தா டிபன் மறந்திட்டுப்போற.’

என் மனக் குழப்பத்தில் டிபனை எடுக்கக்கூட மறந்துவிட்டேன்.
நமது சந்தோ­த்தையும், துக்கத்தையும் கடவுளிடம் பகிர்ந்துக் கொள்ளும்போது ஒரு மனநிம்மதி கிடைக்கும் என்பது உண்மைதான். கடவுள் முன் நான் இன்று சந்திக்கப்போகும் முடிவுக்கு ஒரு  தீர்வும் கிடைக்க வேண்டும் என்று கண்மூடி பிராதித்தேன். ஆன்மீக உலகில் தேடல் ஒரு கண்ணாமூச்சி. நம்மை நாம் வெளியில் தேடுகிறோம். அதனால்தான் நமக்கு நாம் இருப்பது தெரிவதில்லை. எல்லைகளை தாண்டிய கருணைக் கடவுள் உதவுவார் என்ற நம்பிக்கையோடு என பேக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். உள்ளே இருந்து அம்மாவின் குரல்.

‘பார்த்துப்போ, காலேஜிக்கு போனோம்மா வந்தோம்மான்னு இருக்கனும்.’ இது தினமும் அம்மா சொல்லும் மந்திரம் தான். அதற்கு குந்தகம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வலுவிக்க வரும் வம்பை எப்படி சமாளிக்கப்போறேன்?

கல்லில் கால் தட்டி இரத்தம் வந்தது. இதை நான் கெட்ட சகுணம் எடுத்துக் கொள்ளவில்லை. கடவுள், ‘என்னை பார்த்துப்போ, கவனமாக இரு’ என்று சொல்வதாகத்தான் எடுத்துக் கொண்டேன்.

பாட்டிலில் இருந்த தண்ணீரை ஊற்றி கழுவிவிட்டு கர்ச்சீப்பை கிழித்து கட்டுக்கட்டிக் கொண் டேன். காலேஜ் பஸ் போய்விடும், ஓட்டமாக ஓடி பஜ்சில் ஏறினேன்.

வாழ்க்கை, ஓட்டமும் தடுமாற்றமும் தெளிவும் உள்ள கலவையான ஓட்டமான தாகத்தானே இருக்கிறது. தடுமாறி விழும்போது எழமுடியாமல் போனால், எழமால் சாய்ந்தால் என்ற பயம் வந்தாலும், வீழ்ந்த போதிலும் எழுந்து தெளிவோடு ஓடினால் வெற்றி பெறுகிறோம்.

வாழ்க்கை தத்துவங்களை சிறிது தெரிந்து கொண்ட எனது மனதில் உள்ள இருட்டு எப்போது விலகப்போகிறது?

கல்லூரிக்குள் பஸ்சை நிறுத்தியவுடன் எனது வகுப்பறையை நோக்கி ஓடினேன். இக்கல்லூரி ஒரு, இரு பாலர் கல்லூரி. எனக்கு வந்த தொல்லையே என் கல்லூரியில் படிக்கும் சீனியர் தியாகுவால்தான். மேடைப் பேச்சில் அவனை பாராட்டியபோது வந்த நட்பு இன்று என்னை நிம்மதியில்லாமல் பயமுறுத்தும் அளவுக்கு முன்னேறிவிட்டது.  

அம்மாவின் கண்டிப்பு இப்போதுதான் எனக்கு புரிந்தது. ‘ஆண்களிடம் நல்லதும் பேசாத, கெட்டதும் பேசாத,’ அனுபவபூர்வமான வார்த்தைகள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதுக்கு. சாதாரண பாராட்டு என்னை பாதாளத்தில் இறக்கிவிட்டு பாக்குது. தியாகு என் கிளாஸ் ரூம் அருகில் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்ப்பதை தவிர்க்க முயன்று தோற்றுப்போனேன். தியாகு என்னருகில் வந்து, 

‘மாலை கிளாஸ் முடிந்தவுடன் உன்  பதிலை சொல்லு’ என்று சொல்லிவிட்டு மாடி ஏறி அவனது கிளாசுக்கு போய்விட்டான். நான் அவனுக்கு அதிக இடம் கொடுத்து விட்டேனோ, என்ற எண்ம் என்னை ஆக்கிரமித்தது. அன்று முழுவதும் பாடத்தில் என் மனம் லயிக்கவில்லை. என்ன பதில் சொல்லலாம் என்ற எண்ணத்திலேயே என் மனம் ஆழ்ந்துவிட்டிருந்தது.

கல்லுVரி வகுப்புகள் முடியும் நேரம், அப்பா வாசலில் பைக்குடன் நிற்கிறார். எனக்கும் கிளாஸ் முடிந்துவிட்டதால், அப்பாவை நோக்கி நடந்தேன்.
என் வருகையை எதிர்பார்த்திருந்து காத்திருந்த தியாகு என் பின்னால் வந்தான். வாசலை தாண்டியதும் என்னை இடமறித்து, ‘சுமதி, என்ன உன்னோட இறுதியான முடிவு சொல்லு.’ கொஞ்சம் அதட்டும் தோரணையில் தியாகு கேட்க, சுமதி  பேசத் தொடங்கினாள். ‘தியாகு, உன்னோட திறமையையும், அறிவையும் பார்த்துதான் உங்கள பாராட்டினேன். வேற எந்த எண்ணமும் இல்லை. போகப்போக உங்க பேச்சில் தெரிஞ்ச வித்தியாசம் என் மனச சங்கடப்படுத்திருச்சி.’

‘என்ன? என்னோட நீ பேசினதுக்கு காரணம் இது மட்டும்தானா? என்னை நீ விரும்பலயா?’ ‘இல்லை தியாகு, உண்மை, இத  நம்பு!’ 
இருவரின் பேச்சையும் கேட்டுக்கொண்டு கதிர்வேல் முன்னேறி வந்து தியாகுவின் பின்னால் நின்றுகொண்டு அவன் கையில் ஏதும் ஆயுதம் இருக்கான்னு பார்த்துக் கொண்டு நின்றார். பேச்சு முத்தி போகும்போது தலையிடலாம். நல்லப் பையனா தெரியிறான். பேசிப் பார்ப்போம் என்ற தயார் நிலையிலேயே அவர் காத்திருந்தார்.

‘இல்லை, சுமதி அத என்னால நம்ப முடியில வீட்டில பெற்றோர்க்காக பயப்படுறீயா’

‘இல்லை தியாகு நான் சொல்றத கேளு. காதல்ன்றது புனிதமானது. அதை இப்ப உள்ள இளம் பெண்களும், பையன்களும் கொச்சப்படுத்துறாங்க. உனக்கு புரியாதது இல்ல. உன் பேச்சில் உள்ள தெளிவும் உயரிய கருத்துக்களும்தான் எனக்கு பிடிச்சிருந்தது.’ ‘நீ சொல்றது வேடிக்கையா இருக்கு சுமதி.’ ‘வேடிக்கை இல்ல தியாகு, வெறும்  Appreciation  காதலாகாது.’  ‘சரி உன்னோட இறுதி முடிவு என்ன?’
‘நாம நல்ல நண்பர்களாக இருப்போம். படிப்பு முடிஞ்சிட்டா என்ன?  நல்ல கருத்துகளை பரிமாறிக் கொள்ள எவ்வளவோ வழி இருக்கு. பழகுவோம் காலபோக்கில் மனம் ஒத்துப்போனால் மணம் முடிச்சிக்குவோம்.’

‘இது எல்லாம் நடைமுறையில சாத்தியம் இல்ல.’

‘சாத்தியமா மாத்தனும் தியாகு, நாம படிச்சவங்க. புரிதல் இருக்கனும், இப்ப இளைஞர்களும், இளம் பெண்களும் காதல தப்பா புரிஞ்ச்சிகிட்டு இருக்காங்க. இப்ப இவர்கள் சொல்ற காதல்  வெறும்  Sex Attraction தான். காதலின் ஆழத்தை புரிந்துக் கொள்ளாமல் மாயமான நினைவில் வாழ்ந்துக்கிட்டு இருக்கிறாங்க. அவுங்க நிஜத்துக்கு வரும்போது எல்லாம் புரியும்.’ 

‘என்ன நீ பெரிய லெக்சர் குடுக்கிற,’  ‘நான் உண்மையை சொல்றேன் தியாகு,’  சுமதியின் அப்பா கதிர்வேல் குறிக்கிட்டு பேச ஆரம்பித்தார். 

‘தம்பி நான் சுமதியோட அப்பா. நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்ததை கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். என் பொண்ணு சுமதி சொல்றது உண்மைதான். தியாகு தம்பி. நீங்க நிறைய படிச்சவங்க. மனசு சார்ந்ததுதான் காதல் வாழ்க்கை, உடல் சார்ந்தது காமம். இத சரியா புரிஞ்சிக்காம இப்ப உள்ள புள்ளைங்க தவறான முடிவெடுக்கிறாங்க. இதனால் உயிர் இழப்பும் சோகமும் தான் மிஞ்சுது. பழிவாங்கிறது உண்மையான அன்புக்கு அடையாளம் இல்லை. எதையும் பேசி நல்ல முடிவெடுக்கனும்.’

‘என்ன சொல்றீங்க சார், எனக்கு புரியில.’ 

‘சுமதி சொல்ற மாதிரி நல்ல நண்பர்களா இருங்க. உங்க திறமைகளை வளர்த்துங்க. உண்மையான நட்பு தவறான முடிவெடுக்காது. நட்பு  அன்பாக மாறின பிறகு நல்ல முடிவெடுப்போம். வாழ்க்கை பெரியது வாழ்ந்து காட்டனும்.’

‘ரொம்ப நன்றி சார், நான் தவறான முடிவெடுக்க பார்த்தேன். நீங்க என்னை தெளிவு படுத்திட்டீங்க. சுமதி தன்னோட முடிவையும் சொல்லிட்டா நல்ல முடிவு எடுப்பேன் சார்.

சுமதி நான் வரேன். ஊருக்கு போய் என்னோட முடிவை உனக்கு எழுதறேன். சார் நான் வரேன்.’

‘சரி தம்பி, ஊருக்கு போய் நல்லா யோசிச்சி, முடிவெடுங்க.’

விபரீதம் தடுக்கப்பட்ட சந்தோ­த்தில் கதிர்வேல் மனநிம்மதியுடன் புறப்பட்டார். இந்த வி­யத்தில் பெற்றோரின் துணையுடன் தீர்வு காண்பதுதான் எப்போதும் நல்லது. இப்போது ஒரு சிலரை தவிர பெற்றோர்கள் புரிதலோடும் தெளிவோடும் இருக்கிறார்கள். 

வாம்மா சுமதி வீட்டுக்கு கிளம்புவோம் என்று சொல்லிக் கொண்டே பைக்கை ஸடார்ட் செய்தார் கதிர்வேல்.

‘கடவுளே, நல்லபடியா பிரச்சினை யை சமாளிச்சாச்சு. உங்களுக்கு ரொம்ப நன்றி. என் மனதில் இருந்த இருள் 

Friday, 2 March 2018

மனமாற்றம் - சிறுகதை

மனமாற்றம் -  சிறுகதை

திருமதி. சந்தோ­ம் லியோ, விரகாலூர்

வினோத் மற்றும் பிரவீன் இருவரும் அவரது பெற்றோருக்கு செல்லப்பிள்ளைகள். எல்லா பெற்றோரையும் போலவே  தனது பிள்ளைகள் இருவருக்கும் தேவையான சொத்து, வீடு, நல்ல படிப்பு அனைத்தையும் நிறையவே கொடுத்தார்கள். வினோத் மற்றும் பிரவீன் தினமும் கோவிலுக்கு சென்று வருபவர்கள். கடவுளுக்கும், பெற்றோருக்கும் கீழ்ப்படிந்து வாழ்பவர்கள்.

அப்படி ஒரு சுகமான வாழ்க்கை வாழ்ந்த அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆசை ஆசையாய் பெற்றோர்கள் நடத்தி வைத்தனர். காலம் செல்ல செல்ல கூட்டுக்குடும்பத்துக்குள் விரிசல் எழ ஆரம்பித்தன. பாகம் பிரிக்கப்பட்டது. பிரிக்கப்பட்ட பாகத்தில் பிரச்சனை அதிகமாயின. திருமணத்திற்கு முன்பு அண்ணன் தம்பியாக இருந்தவர்கள் பிறகு விரோதிகளைப் போல் ஆனார்கள். பெற்றோர் மீது கொண்ட மதிப்பும் மரியாதையும் சொத்தின் மீது கொண்ட ஆசையினால் எல்லாம் மாயமாகிவிட்டன.அவர்களுடையப் பெற்றோர் தனித்து விடப்படுவார்கள் என்றுத் தெரிந்துதானோ என்னவோ அவர்களுக்கு என்றே  முதியோர் இல்லத்தின் வாசல் திறக்கப்பட்டபடியே இருந்தன. மனம் கசிந்து, அங்கு சென்று வாழ்ந்தனர். பிள்ளைகள் பெற்று கஷ்டப்பட்டு வளர்த்து, அவர்கள் ஒரு வாழ்வை வாழத் தொடங்கும் பொழுது அந்த வாழ்வின் அர்த்தத்தையும், உண்மையினையும் அறியாமல் பிள்ளைகள் வீணாவதை எண்ணி பெற்றோர் மனம் குமுறி இறைவனிடம் பிராத்தனை செய்கின்றனர். வயது முதிர்ந்தவர்கள் என்பதாலும், பிள்ளைகள் மீது கொண்ட பாசத்தினாலும் பிரிவைத் தாங்க முடியாமல் முதியோர் இல்லத்தில் அவர்கள் இறந்து விடுகின்றனர். செய்தி அறிந்த வினோத்தும் பிரவீனும் வருத்தப்பட்டார்கள். ஆனாலும் சொத்தின் மீது கொண்ட ஆசையினால் அவர்கள் மனம் மாறவில்லை. வினோத்தும் பிரவீனும் மனதில் வஞ்சனை உள்ளவர்கள் என்றாலும் தினமும் விவிலியம் வாசித்து ஜெபமாலை சொல்லும் வழக்கம் உண்டு. 

ஒருநாள் வினோத் கோவிலுக்கு செல்கிறான். மாலை திருப்பலி. வழியில் இருந்த பிச்சைக்காரர்கள் பேசிக்கொண்டது காதில் விழுந்தது.முதியோர் இல்லத்தில் இருப்பதைவிட இப்படி பிச்சையயடுப்பது சந்தோ­மாக இருக்கிறது. எப்படியும் நாலுபேர் உதவி செய்கின்றனர். நாலுபேர் அன்பான ஆறுதலான வார்த்தைகள் சொல்கிறார்கள் என்றனர். நம்மை வளர்த்த பெற்றோர்கள் பிச்சைக்காரரை விட கேவலமாக தானே இருந்திருப்பர் என்று வினோத் நெஞ்சில் குத்து விடுகிறது. 

அன்று இரவு வினோத்தின் மனைவி மேரி, விவிலியத்தை எடுத்து வாசிக்கிறாள். அப்பொழுது தலைவர் ஒருவர் அவரிடம் “நல்ல போதகரே, நிலைவாழ்வை  உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?”  என்று கேட்டார். அதற்கு இயேசு அவரிடம், “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே! உமக்கு கட்டளைகள் தெரியும் அல்லவா? விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்ச் சான்று சொல்லாதே, உன் தாய் தந்தையை மதித்து நட”  (லூக் 18: 18 - 20). இப்படி வசனங்களை வாசிக்கும்போது வினோத்தின் இருதயம் சுக்கு நூறானது என் கடவுளின் கட்டளையை மீறி, என் தாய் தந்தையரை தனிமையில் விட்டு, அவர்கள் இறப்பிற்கும் நான் காரணமாகிவிட்டேன், இந்த சொத்திற்காகவும், பணத்திற்காகவும் என் நல்ல குணங்களையும் என் அன்பு சகோதரனின் அன்பினையும் நான் இழந்து நிற்கின்றேனே! என்று  மனம்  வருந்தி அழுகின்றான். அப்பொழுதுதான் அவனுக்கு ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது. உங்களுடைய சகோதரர் சகோதரரிகளுள் ஒருவர்  பாவம் செய்தால் அவரைக் கடிந்துக்கொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை  மன்னியுங்கள் ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, “ நான் மனம் மாறிவிட்டேன் என்று சொல்வாரானால் அவரை மன்னித்துவிடுங்கள்”  (லூக் 17: 3-4) .  என்ற வசனத்தின் மீது கொண்ட விசுவாசத்தினால் தனது தம்பி பிரவீனிடம் சென்று, தம்பி, சொத்துக்களை உன் விருப்பம் போல் எடுத்துக்கொள். நீ கொடுப்பதை நான் சந்தோ­மாக பெற்றுக்கொள்கின்றேன். இயேசு சொன்னதுபோல் நான் மனம் மாறி வந்துள்ளேன். என்னை மன்னித்து விடு பிரவீன் என்று முழுமனதோடு மன்னிப்பு கேட்கிறான். வசனம் புரிந்தவன் என்பதாலும் கடவுளை அறிந்தவன் என்பதாலும் இருவரும் ஒருவரை ஒருவர் மன்னித்து சமாதானமாய் சென்று தனது தாய் தந்தையின் இறப்பிற்கு நாமே காரணமாகிவிட்டோமே! என்று மனம் வருந்தி அழுகின்றனர்.

வருந்திய மனத்துடன் இந்த கல்லறைத் திருநாளில்,  ஒரு  முடிவு செய்கின்றனர். நம் தாய் தந்தையர் ஆசைப்பட்ட படி அவர்களிடம் உள்ள நல்ல குணங்களையும், விட்டுக்கொடுத்து வாழ்தலையும், சமாதானத்தையும், கடவுளுக்கு கீழ்ப்படிந்து வாழ்பவர்களாகவும் இனி நம் வாழ்வை மட்டுமல்ல நம் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் அவ்வழியே வளர்ப்போம். அவர்களுக்காக ஜெபிப்போம் என்று சந்தோ­மாய் வாழ்வை தொடர்கின்றனர்.

வடு - சிறுகதை

வடு
 சுந்தரி ஆசா, திருச்சி
 சிறுகதை
வாழ்க்கைக்காக வழக்கத்தை உடைக்க முடியாதா?

இது என் வீடு, என் சொந்த வீடு என்பதில் எனக்கு அளவில்லாத பெருமை. காம்பவுண்டு முதல் சர்வண்ட் குவார்ட்டர்ஸ் வரை பார்த்து, பார்த்து கட்டிய வீடு. காம்பவுண்டை ஒட்டி அழகான கிறிஸ்துமஸ் டிரீ இரண்டை உயரமாக வளர்த்து அதில், கிறிஸ்துமஸ் அன்று சீரியல் லைட் போட்டு அலங்கரிப்பதில் அலாதி பிரியம். நீங்கள் கிறிஸ்ட்டீனா என்று கேட்கும்போது, நான் சொல்லும் ஒரே பதில் நான் மதம், ஜாதிக்கு அப்பாற்பட்டவள். நான் நாத்திகன் இல்லை, மதவெறியனும் இல்லை. நம்மை மீறிய சக்தி ஒன்று உண்டு என்பதை நம்புபவள். அதை தெய்வம் என்று ஏற்றுக்கொண்டவள்.

முன்பக்க பூச்செடிகளும், கொல்லையில் காய்கறி தோட்டமும் அமைத்து என் தேவைகளை நானே பூர்த்தி செய்து கொள்கிறேன். என்னோடு இருக்கும் கமலம்மா சமையிலிருந்து, தோட்ட பராமரிப்பு வரை எனக்கு உறுதுணை அவர்தான். ஒருகால் ஊனம், அவளை முடங்கிப்போடவில்லை. என்னோடு சேர்ந்து அவளும் வீராங்கனையாகி விட்டாள்.

அவளுக்கு ஊன்றுகோல் நான், எனக்கு துணை அவள், பத்து வருடமாக என்னோடு அய்க்கியமாகிவிட்டவள். உறவென்று சொல்லிக் கொள்ள பெரிதாக யாரும் இல்லை என்றாலும் பெற்றவர்களை இழந்த பெரும் பாக்கியசாலி.

மன நல மருத்துவர் சுந்தரராஜன் கிளினிக்குக்கு அருகில் எனது வீடு. எம்.ஏ., எம்.பில்., சைகாலஜி முடிந்தவுடன் ஒரு தனியார் கல்லூரியில் மனநல பேராசிரியராக பணிபுரியும்  என்னிடம், டாக்டர் சில நோயாளிகளை கவுன்சிலிங்க்கு அனுப்புவது வழக்கம். பக்கத்திலேயே நான் இருப்பது ஒரு சவுகரியமாக இருக்கலாம். அல்லது எனது கவுன்சிலிங்கில் நம்பிக்கை இருந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் இந்த தொழில் மனமகிழ்ச்சியை தருகிறது என்பது உண்மை. 

மாலை நேரம் ரம்மியமானது. வீட்டின் முன் நான் வளர்த்து வரும் ரோஜாக்களின் அழகே தனி. படை வீரர்களைப் போல் வரிசைக் கட்டி சிமெண்ட் தொட்டிகளில் மலர்ந்திருக்கும் ரோஜாக்களை ரசித்து பார்த்துக் கொண்டே மல்லிகை கொடியிலிருந்து பூக்களை பறித்துக் கொண்டிருந்தேன். நானே பறித்து நானே தொடுப்பதுதான் எனக்கு பிடிக்கும். 

‘அம்மா, இரண்டு பெண்கள் உங்களை தேடி வந்து இருக்காங்க’. அவுங்க, பே­ண்ட்டாத் தான் இருக்கனும். ‘வாங்கம்மா’, என்று கமலம்மா கூப்பிட, திரும்பி பார்த்தேன். அழகான சிறுவயது பெண்.  அவளுடன் அவளது தாயாக இருக்க வேண்டும். ஒரு நடுத்தர வயது பெண்மணி. முகம் முழுவதும் சோகம் அப்பிக் கொண்டிருந்தது.

‘வாங்கம்மா, வாங்க’ என்றவுடன் நடுத்தர வயதுப்பெண்மணி, ‘அம்மா எங்களை டாக்டர் சுந்தர்ராஜ் அனுப்பினார்’. ரேவதி மேடத்தை பார்க்கனும். 

‘நான்தம்மா ரேவதி, வாங்க’.

‘கமலா, இவுங்கள கவுன்சிலிங் ரூம்ல உட்கார வை. நான் பூவை சாமிகிட்ட வெச்சிட்டு வந்திடுறேன்’. 

‘சரிம்மா, வாங்கம்மா, மேடம் வந்திருவாங்க ரூம்ல வந்து உட்காருங்க’ என்று சொல்லி கமலா அவர்களை சோபாவில் உட்கார வைத்தாள்.

சிறுவயது பெண்ணை அழைத்து வந்திருக்கிறார்கள் என்றால் ஒன்று காதல் விவகாரமான இருக்கும். அல்லது திருமண பந்தத்தில் சிக்கலாக இருக்கும் என்ற எண்ணத்துடன் கவுன்சிலிங் அறைக்குள் நுழைந்தேன். ரோஜா கொத்தை கையில் ஏந்திக் கொண்டு, சிரிக்கும் அழகான குழந்தையின் படத்தை கண்கொட்டாமல் அந்த இளம்பெண் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘குழந்தைகள் உனக்கு ரொம்ப பிடிக்குமா?’  என்று அந்த பெண்ணை கேட்டவுடன் ஓ வென்று அழுதுக் கொண்டு எழுந்து ஓட ஆரம்பித்தாள். உடனே அவளது தாயார் பிடித்து இழுத்து வந்து உட்கார வைத்தாள். இதன் காரணம் என்னவாக இருக்கும். அவள் அழுது முடிக்கும் வரை பேசாமல் இருந்தேன். அவளது மனப்பாரம் இறங்கட்டும். வாய்விட்டு சிரிக்கும் போது மன அழுத்தம் குறைகிறது என்றால் வாய்விட்டு அழுது முடிக்கும்போது மனப்பாரம் குறையும் என்பதுதான் கணக்கு. தலை நிறைய பூச்சூட்டி பெரிய குங்குமம் பொட்டும், திருநீறும் பூசி, பட்டுப் புடவையுடன் நகைகளையும் அணிந்து கொண்டு யாரும் டாக்டர் வீட்டுக்கு வரமாட்டார்கள். ஆனால் அலங்காரத்துடன் வித்தியாசமாக வந்திருக்கும் அந்த பெண்ணின் தோற்றம் என்னை சிந்திக்க வைத்தது. இவளது கதைதான் என்ன? என்பது போல் அவரது தாயரை பார்த்தேன். கண்ணைத் துடைத்துக் கொண்டே அவர் ஆரம்பித்தார். ‘மேடம், இவ எங்களோட ஒரே பெண். இஞ்சினியரான பையனுக்கு கல்யாணம் செஞ்சிக் கொடுத்தோம். நாலு வரு­த்துக்கு பிறகு, இப்பத்தான் இவ கர்ப்பமான அந்த சந்தோசத்தை கொண்டாட மாப்பிள்ளையும் இவளும் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு போயிட்டு ஹோட்டலுக்கு போயிருக்காங்க. போற வழியில பாலக்கரை மேம்பாலம் கிட்ட வரு மாப்பிள்ளை பைக்ல வரும்போது பஸ் மோதி அந்த இடத்திலேயே மாப்பிள்ளை இறந்திட்டாரு. இவ மயக்கமாயிட்டதால, ஆஸ்பத்திரியில சேர்த்தோம். காரியங்கள் எல்லாம் முடிஞ்சோன இவகிட்ட மெதுவா சொன்னோம். இவ அத நம்ப மாட்டேங்கிறா’. ‘நீங்க அவசர பட்டிருக்கக் கூடாது’. ‘எப்படிம்மா முடியும், எங்க குடும்பம் பராம்பரிய பழக்கமுள்ள குடும்பம். மாப்பிள்ளையோட இறப்புக்கு பிறகு, செய்ய வேண்டிய சடங்கை எல்லாம் செய்யில்லனா குடும்பத்துக்கு கேடாச்சேம்மா’.

‘அம்மா நீங்க இந்த காலத்துல சடங்கு செய்யிலன்னா குடும்பத்துக்கு கஷ்டம் வரும்ன்னு சொல்றது  சரியில்ல. சின்ன பொண்ணு சடங்கு சம்பிரதாயங்கல ஒதுக்கி வைக்கலாமே. நிறைய சடங்குகளை ஒதுக்கிட்டோம். முக்கியமாக செய்ய வேண்டியதை செஞ்சுதானே ஆகனும்’. ‘என்ன முக்கியமானது?’ ‘மாங்கலியத்தை கழட்டனுமே, இன்னமும் போட்டுக்க முடியாதே’. அந்த இளம்பெண்ணை திரும்பி பார்த்தேன். அவள் மாங்கலியத்தை டாலர் செயினைப் போடுவது போல் போட்டிருந்தாள். மிரட்சியுடன் அதை இருக்கி பிடித்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் நீர், நான் அதை எடுத்து விடுவேனோ என்ற பயத்தில், ‘அம்மா, இதை எடுக்காதீங்க, மாமா இன்னும் உயிரோடுதான் இருக்காரு. வெளியூர் போயிருக்காரு வந்திடுவாரு, என்னை ஏன் இங்க கூட்டிக்கிட்டு வந்தீங்க? வீட்டில் மாமா வந்தார்ன என்னை தேடுவாரு, வாங்க போகலாம்’. என்று தாயாரை பிடித்து இழுத்து கொண்டு ஓட முயன்றாள். ‘பெண்ணோட பேரென்னமா?’ ரேவதி மேடம்.   ‘ரேவதி நீ பயப்படாதே நீ அதை கழட்ட வேண்டாம். மாமா நல்லாதான் இருக்காரு’. ‘நீங்க அம்மாகிட்ட எடுத்துச் சொல்லுங்க.  அவுங்க புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க’. ‘கவலைப்படாதே ரேவதி, நான் உங்க அம்மாவுக்கு புரிய வைக்கிறேன்’.

‘என்ன மேடம் நீங்க அவளுக்கு சாதகமா பேசுறீங்க. அவ இப்படித்தான் மாமா உயிரோட இருக்காரு. நான் கழட்டமாட்டேன். மாமா ஊருக்கு போயிருக்காங்க. அவங்களுக்கு நான் பூ, பொட்டு வைச்சு நகையயல்லாம் போட்டிருந்தாத்தான் பிடிக்கும். அவுங்க வந்தார்ன என்னை கூட்டிக்கிட்டு வெளியே போவங்க. எனக்கு சின்ன குட்டிப்பாப்பா பொறக்கப் போவுது, நாங்க கொண்டானும்னு சொல்லிக்கிட்டே இருக்கா. எப்பவும் ரூம் கதவ திறக்கிறது இல்லை. இப்பவும் அவுங்க அப்பாவும் மாமனாரும்தான் டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டு வந்தாங்க. அவுங்க இரண்டு பேரும் காருல உட்கார்ந்து இருக்காங்க. அவுங்க எதையும் இவக்கிட்ட சொல்லாததால அமைதியா இருக்கா’ ‘கொஞ்ச நாளைக்கு எதையும் கட்டாயப் படுத்தாதீங்க. அவுங்க இயல்பு நிலைக்கு வரலை. யதார்த்தத்தை அவ புரிஞ்சிக்க கொஞ்சம் நாளாகும். அது வரைக்கும் பொறுமையா இருங்க. கொஞ்ச நாளைக்கு இங்க கூட்டிக்கிட்டு வாங்க, அவுங்கள சரிபடுத்திடலாம். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ரேவதி குழந்தை போட்டோவுக்கு எதிரில் நின்று கொண்டு மெளவுனமாக பேசிக் கொண்டிருந்தாள். ‘மேடம் இன்னொரு வி­யம், எங்க குடும்பத்துல எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்து இருக்கிறோம்’. ‘என்ன முடிவு?’ ‘ரேவதி இப்ப இரண்டு மாசமா இருக்க இப்ப அவளுக்கு  வயது 25 ஆகுது. குழந்தை பிறந்தால் அவளுடைய எதிர்காலம் பாழாயிடும். அவ படிச்சவ. ஒரு வேலைக்கு அனுப்பலாம்ன்னு இருக்கோம். எதிர்காலத்தில் அவ வாழ்க்கையில ஒரு முடிவு எடுக்கும்போது குழந்தை ஒரு தடையாய் இருக்கும். அதனால அதை அழிக்க முடிவு செஞ்சிட்டோம். அவங்க மாமனார், மாமியாரும் ஏத்துக்கிட்டாங்க. நீங்கதான் அவளுக்கு புரிய வைச்சி அவளோட சம்மதத்தோட செய்ய ஆசைப்படுகிறோம்.நீங்க தான் சீக்கிரம் அவளுக்கு புரிய வைக்கனும்’. ‘குழந்தை எப்படி தடையா இருக்கும்மா?’

‘உங்களுக்கு தெரியாதது இல்ல, நடைமுறையில உள்ள சிக்கல்களை நீங்களும் தெரிஞ்சிரிப்பீங்க, நாங்களும் பார்த்து உணர்ந்திருக்கிறோம். பெண்ணோட குழந்தையையும் ஏத்துகிற தெய்வ மனசு எல்லாருக்கும் இல்லை’.

அந்த அம்மா சொல்ல சொல்ல என்னோட கடந்த காலம்தான் என் மனக்கண் முன்னாடி நின்னுச்சி. இந்த அம்மா சொன்ன வார்த்தைகளைதான் என்னோட அம்மாவும், அப்பாவும், உறவுகளும் எனக்குச் சொன்னாங்க. என் கணவர் ரவியை இழந்த நேரத்தில் எனக்கு எதுவும் புரியல. வாழ்க்கையே அஸ்தமிச்சிடுச் சின்னுதான் நினைச்சேன். என்னுடைய எதிர்காலத்துக் காக, ‘நல்ல வாழ்க்கை அமையனும், யதார்த்தத்தை நான் புரிஞ்சிக்கனும்ன்னு, என்னிடம் தினிக்கப்பட்ட முடிவுகள் என் விருப்பத்தோடு நடப்பதாக அரங்கேறியது. ரவியின் வாரிசை பறிக்கொடுத்தேன். எல்லாம் சுயநலம். எல்லோரும் சொன்னார்கள் என்ற கருத்து எத்தனை பொய்,  எவ்வளவு சுயநலமானது என்று புரியும்போது நான் எடுத்த முடிவுதான் இந்த உறவுகள் இல்லாத வாழ்க்கை. ரவியின் இறப்பிற்கு பின் அவரது அலுவலகத்தில் இருந்து கிடைத்த பணம், பென்­ன் ஆகியவற்றை வைத்துக் கொண்டு மேலும் படித்தேன். எனது பெற்றோர் உறவுகளை பிரிந்து ஹாஸ்டலில் சேர்ந்ததற்காக அவர்கள் நடத்திய கண்ணீர் போராட்டத்தை வென்று எனது வாழ்க்கை படியில் ஏறி மேலே நின்று ஒரு பேராசிரியராக அவர்களை திரும்பிப் பார்க்கிறேன்.

‘என்ன மேடம், நாங்க எடுத்த முடிவு சரிதானே?’  சீக்கிரம் நாங்கள் சொன்னதை அவகிட்ட சொல்லி புரிய  வெச்சி சீக்கிரமே ஒரு முடிவ எடுக்கிற மாதிரி செய்யுங்கம்மா. இவளோட வாழ்க்கை வீணாப் போறத எங்களால் பார்க்க முடியிலம்மா. ‘நான் இன்னும் கவுன்சிலிங்கை ஆரம்பிக்கவே இல்லை அம்மா. ரேவதிகிட்ட பேசி புரிய வைக்கிறேன்’. நாளைக்கு இதே நேரத்துக்கு வாங்கம்மா. ‘சரிம்மா’. ரேவதி வா. நம்ப வீட்டுக்கு போகலாம். 

‘மாமா உன்னத் தேடுவாரு’ என்று ரேவதியின் கையப் பிடித்து அழைத்துக் கொண்டு போனார். இந்த சமுதாயம் மாறவே மாறாதா? மனைவியை இழந்தவர்களுக்கு குழந்தைகள் இருந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்ள பெண்கள் முன்வருகிறார்கள். ஆனால் குழந்தையோடு ஒரு கைம்பெண்ணை ஏற்றுக் கொள்ள எந்த ஆண்மகனும் ஏன் முன் வருவதில்லை. வந்தாலும் விரைவிலேயே சோகத்தில்தானே முடிவடைகிறது. இது ஆணாதிக்க சமுதாயம் பெண்களுக்கென்றே விருப்பு, வெறுப்பு அமுக்கப்படுகிறது. என் குடும்பம், என்னில் எடுத்த முடிவு, என் மனதில் ஏற்படுத்திய புண். நடைமுறையில் ஆறிவிட்டாலும் அது மாறாத வடுவாகத்தானே என் மனதில் பதிந்து விட்டது. 

சுயம் இழந்த பெண், இந்தப்பெண் ரேவதியின் வாழ்க்கையில் நான் என்ன முடிவெடுப்பது? எல்லாம் தெரிந்தே, புரிந்தே என் வாழ்க்கையில் வலுக்கட்டாயமாக எடுத்த முடிவு ரேவதியிடம் சாத்தியமா. அவளிடமும் இந்த மாறாத வடு உருவாகத்தானே செய்யும். இதுதான் எதார்த்தமா? இதுதான் எதிர்காலத்தை நோக்கிய நகர்வா?.

Tuesday, 5 December 2017

விடியும் நேரம், (இன்றைய சூழலை பிரதிபலிக்கும் சிறுகதை)

விடியும் நேரம்

கேத்தரீன் ஆரோக்கியசாமி. திருச்சி 

(இன்றைய சூழலை பிரதிபலிக்கும் சிறுகதை)

‘தாமு, விரசா பார்சலை எல்லாம் லாரியில் ஏத்து, மழை தூறிக்கிட்டு இருக்கு, வேகமா வர்றத்துக்குள்ளார பார்சலை ஏத்திட்டு தார்பாயை போட்டிடு, விடியிறதுக்குள்ளார விழுப்புரம் போகனும்,’
சரி அண்ணே...
‘ஒரு வாரமா செம மழை பேஞ்சதால அங்க தண்ணி தேங்கிட்டு வெள்ளம் மாதிரி லாரி போக முடியாம தத்தளிச்சிக்கிட்டு இருந்தது. இந்த ஜனங்க வேற புரளியை கிளப்பிவிட்டு, ஏரி உடைஞ்சிடுச்சி, ஊர்  மூழ்கப்போவுது, அப்படி இப்படின்னு சொல்லி கலங்கடிச்சி க்கிட்டு இருக்காங்க. ஒரு வாரமா மழை பேஞ்சதால லோடு ஏத்துற வேலை இல்லை. லாரிகளும் ஓடல இன்னைக்குத்தான் கொஞ்சம் பரவாயில்லை. விழுப்புரம் இசக்கி அண்ணாச்சி வீட்டு கல்யாணத்துக்கு போற சீர் சாமான் பார்சல் விடியரதுக்குள்ளார போயிடனும். மழை வராம இருக்கனும், பெரிய இடம், சரக்கு போலனா பொல்லாப்பா ஆயிடும்’ என்று லாரி டிரைவர் புலம்பிக் கொண்டே கடிகாரத்தை பார்த்தார்.

‘அண்ணன் பார்சலை எல்லாம் ஏத்தியாச்சி. தார்பாயும் போட்டாச்சி, மணி பத்துதான் ஆச்சி. ஆறுமுகம் அண்ணன் கடையில புரோட்டாவும் டீயும் சாப்பிட்டு கிளம்பினா இரண்டாம் சாமத்துக்கே போயிடலாம்.’

‘சரி, தாமு நான் கிளம்புறேன் போற வழியில நீயும் ஏங்கூட சாப்பிட்டு இறங்கி வீட்டுக்கு போ. நாளையிலேயிருந்து குமரன் பர்னிச்சர் கடைக்கு வேலைக்குப் போயிடு, மாதம் பத்தாயிரம் கிடைக்கும், ரொம்ப வரு­த்துக்கு அப்புறம் உன்னை பார்த்தேன். நம்ப ஊர் பையன் கஷ்டப்படுறத பார்க்க சங்கடமா இருந்திச்சு. நல்லவேலை கிடைக்காம லோடு ஏத்திக்கிட்டு நிக்கிறது படிச்ச புள்ளைக்கு அழகில்ல. முதலாளி நல்லவரு, இந்த கடைக்குத்தான் பத்து வரு­மா லாரி ஓட்டிக்கிட்டு இருக்கேன். விழுப்புரம் போயிட்டு வந்தப்பிறகு முதலாளிக்கிட்ட சொல்லி கொஞ்சம் முன்பணம் வாங்கித்தரேன். நீ வாங்கின கடனை அடைச்சிட்டு, இனிமே கந்து வட்டிக்கு பணம் வாங்கிற வேலையை விட்டுடிடு, அது நம்ம வாழ்க்கையையே அழிச்சிடும். சரி லாரியில ஏறு வழியில இறக்கிவிடுறேன்.’

டிரைவர் சொன்னத கேட்டப்ப எனக்கு புது தெம்பு வந்த மாதிரி இருந்தது. நேற்று கந்து வட்டி வேலுஅண்ணன் திட்டின வார்த்தைகளை நினைச்சி பார்த்தேன். இப்படி கீழ்த்தரமா பேசுறவங்க முன்னால டிரைவர் அண்ணன் மாதிரி கணிவா ஆதரவா பேசுறவங்களும் இருக்கிறதுனாலத்தான் இந்த உலகம் அழியாம இருக்கு போல, மனசுக்குள் பேசிக் கொண்டிருக்கும் போதே டிரைவர் அண்ணன்,

‘தாமு, இறங்கு வேளச்சேரியிலதானே உன் வீடு இருக்கு, பக்கம்தான் இறங்கி போ. தண்ணி நிக்கிது பார்த்துப்போ,’ டிரைவர் அண்ணன் சொன்னவுடன் இறங்கி தண்ணீரில் நடக்க ஆரம்பித்தேன்.

நானும் செல்வியும் ஊரை பகைச்சிகிட்டு சாதிமறுப்பு திருமணம் செஞ்சிக்கிட்டு சென்னைக்கு ஓடிவந்து கஷ்டப்படுற கதைய கேட்ட டிரைவர் எனக்கு ஒரு வேலைக்கு வழி  செஞ்சிட்டாரு. நான் இனி கவலைப்பட வேண்டியது இல்லை. இந்த வி­யத்தை உடனே செல்விகிட்ட சொல்லுனும். ஓட்டமும் நடையும்மா வீட்டைத் தேடி ஓடினேன் என்று சொல்ல முடியாது தண்ணீரில் நீஞ்சி கரைச்சேர்ந்தேன்னு சொல்லலாம்.

இது என்ன? ஏன் வீட்டுக்கிட்ட ஒரே கும்பல்?, என்ன ஆச்சி செல்விக்கு? நான் ஓட முற்பட எதிர்வீட்டு காளியக்கா என்னை நோக்கி ஓடி வந்தாங்க.

‘தாமு, சீக்கிரம் வாப்பா, நம்ப செல்வி மருந்து குடிச்சிட்டாப்பா, உன் வீட்டுக்கு வந்து செல்விக்கிட்ட பேசலாம்ன்னு வந்தப்ப. அவ மயங்கி கிடந்தாப்பா. எலி மருந்த குடிச்சியிருக்கா, ரொம்ப பயம் ஒண்ணும் இல்ல. வாந்தி எடுக்க வெச்சிட்டோம், இருந்தாலும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டுப்போலாம். விரசா வா’ என்று என்னை இழுத்துக் கொண்டு ஓடினார் காளியக்கா.

இது என்ன விபரீதம்? நல்லநேரம் கூடி வர்ரப்ப, இது என்ன சோதனை? செல்வி ஏன் இப்படி செஞ்சா? ஆயிரம் கேள்விகளுடன் செல்வியை நெருங்கினான் தாமு.

லேசான மயக்கத்தோடு செல்வி முனுமுனுப்பது அவனது காதில் விழுந்தது. ‘பணம் இல்லன்னா வாழ்க்கை இல்லை. கடன் வாங்கக் கூடாது, அதவிட கந்து வட்டிக்கு கடன் வாங்கக்கூடாது. கடனை திருப்பி கொடுக்க முடியாதவங்க, கடன் வாங்கக்கூடாது. மானம்தான் பெரிசு, மாமா என்னை மன்னிச்சிடுங்க....’

‘என்ன செல்வி என்ன என்னம்மோ சொல்ற? நான்தான் வேலு அண்ணன்கிட்ட அடுத்த வாரம் வட்டியும் முதலுமா கொடுத்திடுறேன்னு சொன்னேனே. அதுக்குள்ள என்ன நடந்துச்சின்னு தெரியலியே? காளியக்கா காலையில வேலு அண்ணன் வந்தாரா?’

‘தெரியிலப்பா... பக்கத்து வீட்டு தனத்தை கேட்டாத் தெரியும் அவதான்  வேலைக்கு போவாம வீட்டுல இருந்தா, தனம் காலையில வேலு அண்ணன் செல்வி வீட்டுக்கு வந்தாங்களா?’

‘ஆமாம்க்கா... வேலு அண்ணன் தாமு போனதுக்கு அப்புறம் மழையோட வந்துச்சி. எனக்கு ரொம்ப முடையா இருக்கு பணத்தை நாளைக்கு குடுத்திடுங்க, வாங்கும்போது சந்தோ­மா வாங்குறீங்க, குடுக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு உங்களுக்கு. பத்து வட்டின்னாலும் பரவாயில்ல குடுங்கண்ணேன்னு கெஞ்சி வாங்குறீங்க. அப்புறம் கந்துவட்டி வாங்குறேன். முதலுக்கு மேல வட்டி குடுத்துட்தோம்ன்னு போலீஸ்ல சொல்லி எங்கள ஜெயில்ல போட வைப்பீங்க. இந்த அல்லதொல்லையே வேண்டாம். காலம் கெட்டு கிடக்குது. வாங்கின பணத்தை திரும்பகுடுக்க முடியிலன்னா, ஏன் கடன் வாங்குறீங்க?. நாங்க என்ன முட்டாளா?, இளிச்ச வாயன்னு முகத்துல எழுதி ஒட்டிருக்கா?, அப்டீன்னு கத்துனாருக்கா.’

‘அப்படியா... நீ ஏன் ஏங்கிட்ட சொல்லல’

‘நீதான் வேலைக்கு போயிட்டு, இப்பத்தான வந்த அக்கா. அது மட்டும் இல்லக்கா மானம் ரோசம் இருந்த , நாளைக்குள்ளார எம் பணத்தை கீழே வைங்கன்னு சொன்னாரு, உடனே செல்வி அழுதுகிட்டே உள்ளுக்குப்போய் கதவை சாத்திடுச்சி.’

‘சரி... இதை எல்லாம் நீ வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருந்தியா?’

‘வேற என்ன பேச முடியும்?, நானும் கடன் வாங்கியிருக்கேன் நேத்துதான் வட்டியைக் கொடுத்தேன். என்னையும் ஏடாகோடமா பேசியிருந்தா, என் வீட்டுக்காரன் அறுவாள தூக்குவான். தேவையா இது?.’
‘எல்லாரும் சுயநலமாகத்தான் இருக்கீங்க, இப்பபார் செல்வி, மருந்த குடிச்சிட்டா. ஏதாச்சி ஒண்ணுன்னா நம்ம எல்லாரையும்தான் போலீஸ் கேள்வி கேட்கும்.’

‘ஆமாம்..... இந்த போலீஸ்காரங்களே திருடனை விட்டிடுவாங்க ஏமாளியை புடிச்சி உதைப் பாங்க.’

‘போதும் உங்க பேச்சு, உடனே செல்வியை தூக்கிக்கிட்டு ஆஸ்பத்திரி போற வழியப்பாருங்க.’

‘காளியக்கா, தனம் அக்கா செல்வியை ஒரு கை புடிங்க, முருகன் அண்ணாச்சி தட்டு வண்டியில ஏத்தி பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவோம். நீங்க ரெண்டு பேரும் கூட வாங்கக்கா, எனக்கு பதருது.’

‘சரி தம்பி தட்டு வண்டியலயே நாங்களும் வர்ரோம். இந்த முழங்கால் தண்ணியில ஆட்டோ வராது. ஓட்டவும் முடியாது, நீ முன்னாடி உக்காந்துக்கிட்டு வா.’

‘சரிக்கா, சீக்கிரம் முருகன் அண்ணே விரசா ஓட்டுங்க.’ தம்பி விரசா ஓட்ட முடியாது. தண்ணியில தடமாறிடும் நிதானம்மத்தான்  போக முடியும்.

‘அக்கா, செல்விய பார்த்துக்குங்க ஸ்டெச்சர எடுத்துக்கிட்டு வந்திடுறேன்’ தாமு, ஆஸ்பத்திரி உள்ளேப் போய் ஸ்டெச்சரை தேட, வார்ட்பாயும், ஆயா அம்மாக்களும் ஸ்டெச்சர்ல டெங்கு காய்ச்சல் பே­ண்டுக்களை தூக்கிக் கொண்டு பரபரப்புடன் பறந்து கொண்டிருந்தனர். தாமுக்கு ஸ்டெச்சரும் கிடைக்கவில்லை. வீல் சேரும் கிடைக்கல. என்ன செய்யிறது தாமதிக்கக்கூடாதுன்னு செல்வியை தன்னுடைய தோள்ளேயே தூக்கிக்கிட்டு கேஸ்வாலி யட்டிக்குள் ஓடினான்.

தாமு செல்வியை தூக்கிக் கொண்டு ஓடுவதை பார்த்த எல்லோரும் இது என்ன கொடுமை. பெரிய ஆஸ்பத்திரின்னாலே இப்படித்தான் கவனிப்பு கிடையாது. காசு குடுத்தாதான் ஸ்டெக்சர் கிடைக்கும், கவனிப்பு கிடைக்கும். இவுங்கள சொல்லி குத்தம் இல்ல. கீழே இருந்து மேல்மட்டம் வரைக்கும் லஞ்சம்தான் பேசுது.  நம்ம மந்திரிங்களையும், எம்.ஏல்.ஏக்களையும் பத்தி சொல்லத் தேவையில்லை. கோடியிலத்தான் மிதக்குராங்க.  நம்மள காம்பிச்சு ஏழ்மையை சாதகமாக்கிக்கிட்டு எப்படி சம்பாதிக்கலாம்ன்னு திட்டம் போடுறதுல கில்லாடியா இருக்காங்க.

அம்மா டாக்டரம்மா, எம் பொண்டாட்டி எலி மருந்த சாப்பிட்டுட்டா அவளை காப்பாத்துங்க அம்மா. தாமு கதற, சாகாவாசமா டாக்டரம்மா வந்து செக் பண்ணிட்டு நர்சம்மாவை கூப்பிட்டு இவுங்க வயித்துல இருக்கற வி­த்தை வெளியில எடுத்துட்டு டிரிப்ஸ் ஏத்துங்க. பிரச்சினை ஏதும் இருந்தா, ஐசிவுக்கு அனுப்பிடுங்கன்னு சொல்லிட்டு அவுங்க டெங்கு காய்ச்சல் பே­ண்டுக்களை பார்க்க வந்த துஷ்ஐஷ்விமிer ஸஷ்விஷ்மி க்கு கிளம்பிட்டாங்க.

நர்சம்மா டாக்டர் சொன்னதை எல்லாம் செஞ்சிட்டு தாமுவை கூப்பிட்டு மேஜையில இருக்கிற பிளாஸ்க்கை எடுத்துட்டுப் போய் நாலு காப்பி, நாலு வடை வாங்கிட்டு வரச்சொன்னப்ப செல்விக்கா காப்பியும், வடையும், என்ற எண்ணத்தோடு டீக்கடைக்கு ஓடினாள்.

  லஞ்சம் காப்பியிலும் வடையிலும் ஆரம்பிப்பது தாமுவுக்கு தெரியாது. ஆனால், ஆஸ்பத்திரிலுள்ள பே­ண்டுகளின் சொந்தங் களுக்கு நன்றாகவே தெரியும்.

லஞ்சம் இதோட நின்னா சரி, மேல காசு கேட்டா அவன் எங்கப்போவான்.

செல்வியோட தற்கொலை முயற்சியை கேள்விப்பட்டு கந்துவட்டி வேலு அண்ணன் பெரிய ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்து விட்டார்.

‘தாமு, கேள்விப்பட்டேன். என்னை இதுல சிக்க வெக்காத. போலீஸ்ல காரணம் கேட்டா குடும்ப சண்டைன்னு சொல்லிவிடு.

ஐயோ! போலீஸ் வருதே, நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும். நான் கேண்டீன்ல உட்கார்ந்து இருக்கிறேன். போலீஸ் போனோன்ன வந்து பார்க்கிறேன்.’

எப்போதும் போல போலீஸ்காரர்கள் தடாலடி விசாரிப்பில் இறங்கினர். ‘இங்க யார்யா தாமு? செல்வியோட வீட்டுக்காரன்?‘நான்தான்சார், ’‘என்ன பிரச்சனை? தண்ணி போட்டு கலாட்டா பண்ணி பொண்டாட்டிய அடிச்சியா?.. இல்ல வரதட்சணை கொடுமையா?’

‘இல்ல சார், செல்விக்கு அடிக்கடி வயித்துவலி வரும். வயித்துல கட்டி வரும். அதான் தாங்காம தப்பு செஞ்சிடுச்சி. நான் நைட்  வீட்டுக்கு வந்தப்பதான் தெரியும் சார்.’

‘சரி... சரி... நர்சம்மா செல்வி முழிச்சிட்டாங்களா? இல்லை சார்.... மயக்கமா இருக்கு, கொஞ்ச நேரத்துல முழிச்சிடும். சரி வாய்யா, நீ எந்த  ஊரு? அந்தப்பொண்ணு எந்த ஊரு? விவரம் முழுசா சொல்லு.’

தாமு விவரம் முழுவதும் சொல்ல போலீஸ் ஏட்டு, எல்லாவற்றையும் குறித்துக்கொண்டு, ‘ஓடி வந்த கேசா? எதுக்குய்யா இப்படி பண்றீங்க? ஒரு வேகத்துல வந்திடுறீங்க. காசில்லாம கஷ்டப்படும்போது இந்த மாதிரி முடிவெடுக்குறீங்க. பெத்தவங்க பேச்சகேட்டிருந்தா இந்த கதி இல்லீல்ல.. சரி நர்சம்மா அந்த பொண்ணு முழிச்சிடுச்சா, ஏன் வி­ம் சாப்பிட்டிருக்கு? ’

‘வயிர சுத்தம் பண்ணதுல ஒண்ணும் இல்ல, பித்தமாத்தான் வருது.’

என்னப்பா உன்ன பயமுறுத்த பொய் சொல்லியிருக்குப்போல. வி­ம் இல்லேன்னா நான் என்ன கேஸ் எழுதுறது. முழிச்சோன பொண்டாட்டிய கூப்பிப்பிட்டுப் போ.’

‘அப்புறம் ஏட்டய்யா, இந்த பொண்ணு மாசமா இருக்கிற அறிகுறிதான் டெஸ்ட்ல இருக்கு, வாந்தி எடுத்து மயக்கமானதும் பயந்திட்டாங்க போல இருக்கு. நல்ல சேதிதாப்பா உனக்கு, சரி எனக்கு வேலை இருக்கு கிளம்புறேன்.’

‘செல்வி நல்லா இருக்கியா? எங்களை பயமுறுத்திட்டீயேம்மா. காளியக்கா, எலி வி­ம் குடிச்சிட்டன்னு சொன்னதால பயந்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு வந்துட்டேன். வேலு அண்ணன் திட்டினாருன்னு தனம் அக்கா சொன்னாங்க. அதனாலதான் இப்படி செஞ்சிட்டியோன்னு நினைச்சோம். காளியக்கா தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க’
‘காளியக்கா, தனம் அக்கா, உள்ளே வாங்க செல்வி நல்லா இருக்கு,’ தாமு அழைக்க இருவரும் உள்ளே ஓடி வந்தனர். ‘செல்வி நல்லா இருக்கியா? இப்ப ஒண்ணும் ஆபத்து இல்லியே.’ 

‘ஒண்ணும் இல்லக்கா, நான் ஒண்ணும் வி­ம் சாப்பிடல. அப்ப வாசல்ல எலி மருந்து டப்பா இருந்துதே?’

‘அக்கா அவ நல்லா இருக்கா  உங்களுக்கு நல்ல செய்திதான் செல்வி மாசமா இருக்கா, அதுக்குத்தான் இந்த வாந்தியும் மயக்கமும்.’

‘செல்வி ரொம்ப சந்தோ­ம்’ என்று உரக்க கத்த, நர்ஸ் இருவரையும் வெளியே அனுப்பிவிட்டு தாமுவை மட்டும் உள்ளே இருக்க சொல்லிவிட்டு வேற பே­ண்டை பார்க்க போய்விட்டார்.

‘செல்வி நம்ம கஷ்டம் எல்லாம் போயிடுச்சி. நம்ம ஊர் லாரி டிரைவர் அண்ணன், என்ன பர்னிச்சர் கடையில பத்தாயிரம் ரூபாய்க்கு சம்பளத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டார். டெய்லி பேட்டாவும் கிடைக்குமாம். அட்வான்ஸ்சும் வாங்கித்தரேன்னு சொல்லியிருக்கார். நம்ம கடனை அடைச்சிட்டு சந்தோ­மா வாழலாம். எல்லாம் பிறக்கப்போற குழந்தையோட யோகம். நம்ம கஷ்டத்திற்கு விடியும் நேரம் வந்திடுச்சி.’

  இதோ கந்து வட்டி வேலு அண்ணன் பயந்து போய் வர்ரார். ‘அண்ணன் ஒண்ணும் பிரச்சனை இல்லன்னே, போலீசு கேஸ் பதிவு பண்ணல. சந்தோ­மா போங்கண்ணே.’

‘அப்பா, இப்பத்தான் எனக்கு உயிரே வந்துச்சி. நீ வட்டியே இனிமே தரவேண்டாம். முதல மட்டும் மூணு மாசத்துல குடுக்கப்பாரு.’

  ‘அண்ணே உங்க கடனை அடைச்சிடுவேன், எனக்கு வேலை கிடைச்சிடுச்சி.’

‘அப்பாடா நான் வர்ரேன், தாமு வர்ரேன், செல்வி தங்கச்சி. நான் பேசுனத மனசுல வெச்சிக்காத.’ தப்பித்த தைரியத்துல பாசத்தோட தங்கச்சின்னு அழைச்சிட்டுப் போனாரு வேலு.

‘இப்ப ஒண்ணு நல்லா புரியுதுங்க, இனிமே கடனே வாங்கக் கூடாது. அதுவும் கந்து வட்டிக்கு வாங்கவே கூடாது. கஷ்ட நேரத்துல யோசிக்காம அதிக வட்டிக்கு கடன்  வாங்கிட்டு நாமலும் திண்டாடுறோம். குடுத்தவங்களுக்கு பொல்லப்பா ஆகிடுரோம். அதிக வட்டிக்கு வாங்கக் கூடாது, தப்புன்னு அவுங்க உணர்ந்து வேலு அண்ணன் மாதிரி நடந்துக்கிட்டா, பிரச்சினையே வராது.’

பிரச்சனைகளை சுமூகமா முடிக்க உதவுனது காற்றில் எங்கிருந்தோ பறந்துவந்த எலி வி­ டப்பாதான் என்று காளியக்காவுக்கு தெரியவும் வேண்டாம், வேலு அண்ணனுக்கும் தெரிய வேண்டாம். தாமுவுக்கும் செல்விக்கும் விடியலை தந்ததும் எது என்று தெரிய வேண்டாம், விடியும் நேரம் அவர்களுக்கு வந்துவிட்டது.

Friday, 3 November 2017

புனிதர்களின் தினம்

புனிதர்களின் தினம்

கேத்தரீன் ஆரோக்கியசாமி. திருச்சி

கற்பனை சிறுகதை

நவம்பர் மாதம் என்றாலே சகல ஆன்மாக்களின் தினம் ஞாபகத்துக்கு வரும். கிறிஸ்துவர்கள் எல்லோரும் கல்லறை தோட்டத்திற்கு சுற்றுலா சென்று தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களுக்கு பூ, சாம்பிராணி போடுவது வழக்கம். பணக்காரர்கள் செய்யும் அலங்காரம் இருக்கே அது அவர்களின் பெருமையின் தம்பட்டம். போட்டிப்போட்டுக் கொண்டு அலங்காரம் இவர்கள் செய்வதன் அர்த்தம்தான் என்ன?, அடுத்த நாளே வாடி வதங்கிவிழும் பூவுக்கா, இந்த செலவு?, வாடி வதங்கி நிற்கும் ஏழைகளுக்கு இவர்கள் செய்யும் தானமும் போலிதானே... ஒவ்வொரு வருடமும் இதைப் பார்த்து அலுத்தவிட்டது. 

இந்த வருடம் சகல புனிதர்களின் தினத்தை எப்படி கொண்டாடலாம் என்ற எண்ணத்தோடு, நவம்பர் முதல் தேதியன்று கோவிலுக்குப் போனேன். சகல புனிதர்களின் திருநாள் பூசை நடந்து கொண்டிருந்தது. சர்ச்சில் அதிகம் கும்பலை காணோம். சாமியாரும், கன்னியர்களும் மட்டும் ஒருவருக்கொருவர்  “HAPPY FEAST”  சொல்வார்கள் என்று பார்த்தேன். அதுவும் நடக்கவில்லை.

ஒன்றும் சுவாரசியமாக இல்லையே என்று நினைத்துக் கொண்டே சர்ச் வாசலில் புதிய பங்கு சாமியார் “ புனிதர்களின் தோட்டம்”  என்று ஒரு இடத்தில் பூச்சட்டிகளை வைத்து கார்டன் போல் அமைத்து புனிதர்களின் சில சிலைகளை வைத்து அழகு  படுத்தி இருந்தார். ரம்யான இடம். சோலையின் மூலையில் சவுகரியமாக அமர்ந்து கொண்டேன். வேப்ப மரக்காற்று ஜில்லென்று என் மேலே பட என்னை மறந்து சில நிமிடங்கள் அயர்ந்தேன்.

தேவலோகம் செல்லும் வழி எல்லாம் விதவிதமான பூச்செடிகள், கொடிகள் வாசம் நிறைந்த பூக்களை கொண்ட மரங்கள் இனிமையான மணத்துடன் காற்றில் கலந்து என்னை தொட்டது. திடீரென்று எனக்கு ஒரு சந்தேகம், சின்ன வயதில் ளீழிமிeஉஜுஷ்விது   கிளாஸ்சில் சிஸ்டர் நரகத்தைப் பற்றியும், மோட்சத்தைப் பற்றியும் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. மோட்சத்துக்கு போகும் வழி கரடு முரடாகவும், துன்பங்கள் நிறைந்ததாகவும் இருக்கும் என்று சொன்னார்களே?, நரகத்துக்கு போகும் வழிதான் சோலைகளும், மலர்களும், கேளிக்கைகளும் நிறைந்த இடமாக இருக்கும் என்று சொன்னார்களே?, டிராக் மாறி வந்து விட்டேனோ?

என்ன தொல்லை இது? எப்படி புனிதர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பது ஒரு ஸிழிஐd னிழிrவ  இல்லை. ஒரு மைல் ஸ்டோன் இல்லை.  சகல புனிதர்களின் கொண்டாட்டத்திற்கான எந்த அறிகுறியும் இல்லையே...

சிறுவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கான விளக்கமாக சிஸ்ட்டர் அப்படி சொல்லி இருப்பார்களா?  அப்படி என்றால்  உண்மை தான் என்ன? உலக காரியங்களில் மூழ்கி கடவுளை மறந்து தப்பாக வாழ்வது தப்பு, அந்த இன்பம் நிலையானது அல்ல என்று சொல்வதற்காக  அப்படி சொல்லி இருப்பார்களா?

கரடு முரடான பாதையில் கஷ்டப்பட்டு நடந்தால், நேர்மையாக வாழ்ந்தால் ( அது எல்லோருக்கும்  எளிதல்ல) கடவுளின் வழியில் நடந்தால் தான் மோட்சத்துக்கு போக முடியுமோ? அங்கே ஒரு அமைதியான சுத்தமான பாதை தெரிகிறதே அதுதான் உண்மையான வழியாக இருக்குமோ?, சென்று பார்ப்போம். வாவ்.. அழகான வாசல்... வாசலில் வாட்ச்மேனை காணோமே?, ஏதாவது Tips  குடுத்து உள்ளே நுழைந்து விடலாம். பூலோக புத்தி இது. என்ன செய்ய?, பழக்க தோசம், லஞ்சம் குடுத்து காரியம் சாதித்தே பழக்கம். ஆனால், லஞ்சம் குடுப்பதும், வாங்குவதும் சட்டப்படி குற்றம், சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். இது எங்கள் ஸ்லோகம். வாட்ச்மேன்தான் இல்லை, காலிங் பெல்லாவது இருக்குமே என்று தேடினேன். ஒன்றையும் காணோம். என்ன செய்யலாம்? கதவை தட்டலாமா? என்று நினைத்துக் கொண்டு இருக்கும்போதே இரண்டு இறக்கைகளுடன் அழகான ஒரு சம்மனசு என் முன்னே தோன்றினார்.

ஆஹா... என்ன அழகு... இதுதான் தெய்வீக அழகோ.. என்னைப்பார்த்து புன்னகித்தார். எனக்கு ரொம்ப சந்தோ­மாக இருந்தது. கோவிலில் உள்ள சம்மனசு சுரூபத்தைவிட அழகாக இருந்தார். தேவதூதர்களுக்குத்தான் எல்லா மொழியும் தெரியுமே என்று தமிழில் பேசினேன்.

‘அழகான தேவதூதரே, நான் உள்ளே வந்து சகல புனிதர்களையும் சந்திக்க வேண்டும்’ என்று கூறினேன். தேவதூதர் ‘நல்லது.... ஆனால் நீங்கள் சாதாரணமாக உள்ளே நுழைய முடியாது. அதற்கான  ID Proof   வேண்டும்.

‘அய்யோ... இங்கேயும்  ID Proof,  ஆதார் அட்டை,  Pan card,  ரே­ன்கார்டு கேட்பார்கள் போலிருக்கிறதே. இங்கேயும் மோடி  Formula  வரி?, என்ன  ID Proof ?, தேவதூதரே...

‘நீங்கள் தேவனும் புனிதர்களும், நல்ல ஆத்மாவும் வாழும் இந்த இடத்திற்குள் நுழைய தகுதி பெற்றவர் என்ன சான்றிதழுடன் உங்களது ஒரிஜினல்  ID Proof  வேண்டும்.

‘அப்படியா..  என்னிடம் எதுவும் இல்லையே... வேணுமென்றால் எங்கள் ஆடுயு வை போனில் சிபாரிசு  செய்ய சொல்லட்டுமா?’
‘என்ன சொல்கிறீர்கள்?, எனக்கு ஒன்றும் புரியவில்லை’.

‘சரி ... எங்க மினிஸ்டரைவிட்டே Phone பண்ண சொல்கிறேன்’.
‘என்னப்பா... தப்புதப்பா பேசுகிறீர்கள், நீங்கள் பேசுவது சரியல்ல.

‘என்ன இவருக்கு சிபாரிசு பிடிக்காது போல, பணம் ஏதும் எதிர்பார்ப்பாரோ?, லஞ்சம் கொடுத்த பழக்கதோ­ம், பணம்தான் பாதாளம் மட்டும் பாயும் என்கிறார்களே.. தேவலோகத்திலும் பாயலாம் இல்லையா?, என் பையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்ப்போம்’ எனது பேண்ட் பாக்கட்டை துழவினேன்.

ரொம்ப எதுவும் இல்லை, மோடியின் பண மதிப்பு குறைப்புக்குப்பின் வெளிவந்த புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் மூன்று இருக்கிறது, ரூபாய் ஐயாயிரம் கொடுப்போம். எப்படி கொடுப்பது? ஆறாயிரம் இல்ல இருக்கிறது, எப்படியும் அவரிடம் ஏற்கனவே பலரிடம் வாங்கிய பணம் இருக்கும், அதில் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டு வாங்கிக்கலாம்.

‘சரி உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்?, சொல்லுங்க’

‘எனக்கு விளங்காத பொருளில் பேசுகிறீர்கள், நான் சொன்னது உங்களுக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். நான் கேட்பது, நீங்கள் கடவுளின் வார்த்தையின்படி நல்லவராக, ஒழுக்கமுள்ளவராக, கடவுளின் கட்டளைகளின்படி வாழ்ந்து மரித்து, புனிதர்கள் வாழும் இடத்திற்கு வரும் தகுதி பெற்றவர் என்ற சான்றிதழ் வழங்கபட்டிருந்தால் அதை பார்த்து உங்களை உள்ளே அனுமதிப்பேன் என்றுதான் தங்களிடம்; ID Proof கேட்டேன். ஆனால், நீங்கள் எனக்கு விளங்காத, இந்த இடத்தில் இல்லாத நடைமுறைகளைப் பற்றி பேசுகிறீர்கள் என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்”, தேவதூதர் அவ்விடத்தைவிட்டு மறைந்து விட்டார். தேவதூதர் மறைஞ்சிட்டாரே, இப்ப என்ன பண்றது? நம்ப கிரிமினல் வேலை எல்லாம் இங்க ஒத்துவராது போல, தப்பு பண்ணிட்டோம், திரும்ப போக வேண்டியதுதான். புனிதர்களை பார்க்கனும்ன்னா நாம முதல்ல கல்லறைக்கு போணும், அப்புறம் தான் நமக்கு சிஐமிrழிஐஉe கிடைக்கும். அதுக்கும் முன்னால நான் பாவம் செய்யாம,  நல்லவனா, கடவுளோட அன்புக்குரியவனா மாறுனாத்தான் Entrance ID  கிடைக்கும். முதல்ல என் கெட்டபழக்கத்த எல்லாம் விடனும்.

வேப்பம் மரம் என் முகத்தில் விழுந்தோன படார்னு முழிச்சேன்.
“நான் இப்ப எங்க இருக்கேன்?, இப்ப நான் பார்த்தது எல்லாம் கனவா? பகல் கனவு கண்டிருக்கேன்.

சரி, முதல்ல கல்லறைக்குப் போனத்தானே, பரலோகம் போக முடியும், அப்ப ஏன் புனிதர்கள் தினத்தை முதல்லைçயும், கல்லறைத் திருநாள இரண்டவதா வெச்சிருக்காங்க, நம்மள  கேட்டிருந்தா சொல்லியிருக்கலாம்.

சகல புனிதர்களோட கொண்டாட்டத்த நாம அங்க போகும்போது பார்த்துக்கலாம்.

Ads Inside Post