Pages - Menu

Showing posts with label Christmas. Show all posts
Showing posts with label Christmas. Show all posts

Tuesday, 5 December 2017

இயேசு, மனித பிறப்பில் உயிரானார், உறவானார்.

இயேசு, மனித பிறப்பில் உயிரானார், உறவானார்.

சகோ. விமலி FHIM. இதயா கல்லுVரி, குடந்தை

வானதூதர்கள் வாழ்த்துப் பாட
வாஞ்சையோடு வந்த நிலவே
எளிய வாழ்வை எடுத்தியம்ப
இடையர்கள் இதயம் நனைய
இனம்புரியா இன்பம் அடைய
மரியின் மடியில் தவழ்ந்தாயே
மாசேதும் இன்றி மிளிர்ந்தாயே

மகிழ்ச்சி பிறக்க, அமைதி பிறக்க, மனித இதயங்களின் இயேசு ஆண்டவர் நமது இல்லக் கோவிலுக்குள் பிறக்கப்போகிறேன் என்றார். வலிமை பிறக்கும் ‡ இறைவலிமை பிறக்கும் (எசா 9:6) அருள் பிறக்கும் ‡ மீட்பரின் அருள் பிறக்கும் என்று எத்தனை ஆண்டுகளாக நாம் இயேசு பிறப்பு விழாவைக் கொண்டாடி வருகிறோம். உலகில் பிறப்புகள் அத்தனையும் இறைவனின் கை வண்ணமாகத் திகழ்கின்றன. சிலரின் பிறப்பு  உலகிற்கு அழிவைத் தருகிறது. எனவேதான் நாம் சிலரைப் பார்த்து, ‘இம்மனிதர்  பிறவாமல் இருந்தால் நலமாய் இருக்குமே’ என்று சொல்கின்றோம் (கிட்லர், யூதாஸ், இன்றைய அரசியல் தலைவர்கள்).  சிலரது  பிறப்பு இவ்வுலகில் புதிய சகாப்தத்தை உருவாக்கியதால் ( ஆபிரகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா, புனித அன்னை தெரசா, அருளாளர் இராணி மரியா...) நாம்   “இவர்களைப் போல் எல்லோரும் இருந்தால் இவ்வுலகம் எவ்வளவு நலமாக இருந்திருக்கும்” என்றும் சொல்கிறோம். ஆக, மனிதரின் பிறப்பு அவர்கள் வாழும் வாழ்வின் அர்த்தத்தைக் கொண்டுதான் புகழவோ அல்லது இகழவோப்படுகிறது. இவ்வுலகில் கடவுளாக வணங்கப்படுகிறவர்களில், இயேசு பெருமானின் பிறப்பு மட்டுமே மனித  குலம் முழுவதும் அமைதியின் அரசரை எதிர்நோக்கியிருந்தது என்று விவிலியம் சுட்டுகிறது.

  உயிரானார்

காலம் காலமாய் இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்தில் உழல்வதை அறிந்த  இறைவன் அவர்களின் கூக்குரலுக்குச் செவிகொடுத்து, மனித உருவில் தோன்றினார் (பிலி 2:7).  நன்மையே நிறைந்த இறைவன் பாவிகளின் உடல் எடுத்தார். நம்மைப் போலவே வாழ்ந்தார். எனவே அவருக்கு மனிதரின் பசி தெரியும். மனிதர்களின் வேதனையும் துன்பமும் தெரியும். அன்புள்ள மனிதராக எப்போதும் வாழ்வது கடினம் என்று நினைக்கின்ற நமக்கு, அவர் வாழ்ந்து காட்டினார். பாவமில்லாமல் பிறந்து, பாவம் செய்யாமலே  வாழ்ந்து, பரிவோடு மனித உயிரானவர். உயிரை இழந்தவர்களுக்கு உயிரளித்தார். (லாசர், நயின் நகர் கைம்பெண் மகன்). இவ்வாறு மனிதர்களின் மாண்பை உயர்த்தினார். அனைத்திலும் நன்மையையே நிறைந்து அனைத்திலும் முழுமையாய் விளங்கிய கடவுள், மனித உயிரெடுப்பது இவ்வுலக மக்கள் அனைவரின் சிறப்பே. அவர்  மண்ணில் மனிதராக  உயிரெடுத்தது மனித குலத்திற்குப் பெருமை  சேர்த்தது.

 உணவானார்

முதல் ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் தங்களின் விழாக்காலங்களில் சிறப்பான உணவை நண்பர்களுக்கும், விருந்தினர்களுக்கும் மகிழ்வோடு பகிர்ந்து கொண்டாடுவதை விவிலிய வரலாறு நமக்கு எடுத்தியம்புகிறது. உணவு இஸ்ரயேல் மக்களின் பழக்க வழக்கத்தையும், விடுதலை வாழ்வையும் எடுத்தியம்புகிறது. இச்சூழலில் இயேசுவின் பிறப்பு இஸ்ரயேல் குலத்தில் நிகழ்ந்தேறுகிறது. அது மாட்டுக் கொட்டகையில் நிகழ்கிறது. மீட்பின் வரலாற்று நாயகனின் பிறப்பு விலங்குகளின் மத்தியில் நிகழ்கிறது (லூக் 2:12). ஆடு மாடுகள் தங்களுக்கான இரையை உட்கொள்ளும் தீவனத் தொட்டியில் இயேசு கிடத்தப்படுகின்றார். அவர் வாழ்ந்தபோதும் மக்களுக்கு உணவை வழங்கி பசியாற்றியிருக்கின்றார். இறைவார்த்தை கேட்க வந்த மக்கள் திரும்பிச் செல்லுகின்றபோது பசியோடு செல்வார்களே என்று அவர்கள் மீது பரிவு கொண்டு உணவு வழங்கினார் என்று நற்செய்தி நூல்கள் சுட்டிக் காட்டுகின்றன. அவர் ஆன்மீகப் பசியையும் ஆற்றினார். உடல் பசியையும் ஆற்றினார். இவ்வாறு எல்லோருக்கும் உணவானார். “மரம் கனியால் அறியப்படுவது போல ஓர் ஆள் அவருடைய செயல்களால் விளங்குவார்”. நல்ல செயல் எதுவும் வீணாகாது. நமது வாழ்வில் மனித நேயச் செயல்களால் பிறரின் வாழ்வு சிறப்படைய வேண்டும். இந்தியாவில் 30 கோடி மக்கள் ஒருவேளை உணவில்லாமல் அன்றாடம் உறங்கச் செல்கிறார்கள் என்பது தெரிவதில்லை. உடல் பசி கொண்டவர்களுக்கு உடல்பசியைப் போக்கும் கருவியாகவும், சாதியக் கொடுமைகளை அனுபவிக்கும் விளிம்புநிலை மக்களுக்கு விடுதலை பசி போக்கும் கருவியாகவும், உரிமைக்காகப் போராடும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிமை வழங்கும் கருவியாகவும், இயேசுவின் பிறப்பு என்ற இவ்வுணவு அமைய வேண்டும். எனவே உணவான இயேசுவை நம்பிக்கையையும், அமைதியையும், விடுதலையையும் வழங்கும் உணவாகப் பகிர்வோம். அப்போது இவ்வுலகில் இறைவன் பிறர் பசிப்போக்கும் உணவாவார்.

 உறவானார்

வரலாற்றின் தொடக்க காலத்தில் வலியோர் சிந்தனை ஓங்கிய காலக்கட்டத்தில் இயேசுவின் பிறப்பு, உறவும், உரிமையும், நீதியும் இல்லாமல் தவித்த மக்களுக்கு இயேசுவின் பிறப்பு நம்பிக்கையைக் கொடுத்தது. காரணம் அவரின் பிறப்பைக் கண்டு அரசர்களும், அரசியல் தலைவர்களும் அஞ்சினார்கள். அச்சூழலே ஒதுக்கப்பட்ட மக்களுக்கு விடியலாக இருந்தது. “எங்கள் சார்பாக எவரும் இல்லையே” என்று வாழ்வு கசந்து இருந்த  மக்களுக்கு அவரின்  பிறப்பு புதிய  உத்வேகத்தைக் கொடுத்தது. பாவிகளோடும், ஏழைகளோடும் உறவானார். யாரை உலகம் தேவையற்றவர்கள் என்று ஒதுக்கியதோ அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கக் கடவுளின் பிறப்பு, அவர் மகன் இயேசுவில் நிகழ்ந்தேறியது. அது உறவை முன்னிலைப்படுத்தியது. கிறிஸ்துவின் பிறப்பு நமக்கு ஒற்றுமையைத் தர வேண்டும். முழுமையான உறவு மாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும். நமது செயல்கள் உறவை உருவாக்க வேண்டும். பழைய உறவுகளைப் புதுப்பிக்க வேண்டும். பிளவுகளில் இருக்கும் உறவுகள் சரிசெய்யப்பட வேண்டும். அப்போது கிறிஸ்துவின் பிறப்பு இவ்வுலகிலும், நமது சமூகத்திலும், இல்லத்திலும் சிறப்பானதாக அமையும்.

மானிட வரலாறு முழுவதும் கடவுள் உடனிருப்பவராக, நெருக்கமானவராக, அருள்பவராக, தூயவராக, இரக்கமுடையவராக எப்பொழுதும் இருந்து வருகிறார். அந்த இயேசுவை நம் வாழ்விலே உள்ளத்திலே, இல்லத்திலே ஏற்கும்போதும் நம்முடைய வாழ்வும் மகிழ்ச்சியால் துள்ளும். அன்னை மரியா இயேசுவை ஈன்றெடுத்ததைப்போல, இயேசுவைப் பிறருக்கு ஒவ்வொருவரும் நமது மனித வாழ்வில் இப்புதிய (2018) ஆண்டில் பிறருக்கு அன்பின் உயிராய், உணவாய், உறவாகி நம்பிக்கையின் உரைவிடமாக இருப்போம்.

முடிவாக

மருத்துவமனைகளிலும், முதியோர் இல்லங்களிலும், அனாதை இல்லங்களிலும், பாலியல் பலவினமானவர்களிலும், நோயாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டோரிலும், சிறப்புப் பள்ளிகளிலும், சிறைச்சாலைகளிலும் ஏராளமான மக்கள் அன்பிற்காகத் தவிக்கின்றார்கள். மனிதரின் மாண்பை உயர்த்த அவர்களை அரவணைப்போம். உரையாட, கவலைகளை கண்ணீர்களைப் பகிர்ந்து கொள்ள, ஆறுதல் கூற மனிதர்கள் இல்லையே என்று ஏங்குகிறார்கள். அவர்களின் வாழ்வில் நாம் நம்பிக்கை ஒளியேற்றுகின்ற போது, அம்மக்கள் புது உயிர்பெறுகின்றார்கள். “நல்ல வார்த்தைகளால் நல்ல உறவு மாற்றங்களையும் ஏற்படுத்த முடியும்”. குழந்தை இயேசுவின் வழியாய் இவ்வாண்டு ஆண்டவரின் அன்பு, உங்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் என்றும் தங்குவதாக.

கிறிஸ்து பிறப்பு பெருவிழா,

கிறிஸ்து பிறப்பு பெருவிழா
அருட்பணி. எல். ரெக்ஸ் அலெக்ஸ் சில்வெஸ்டர் 
 வலுவின்மையே  வல்லமை

அப்பாடா! ஒரு வழியா எப்படா வரும்னு நாம் எதிர் பார்த்த கிறிஸ்துமஸ் வந்தாச்சு. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் விருந்து, வேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது. ஆனால் , இந்த விழா நமக்கு சொல்லும் செய்தி என்ன என்பதை மட்டும், எல்லோருமே மறந்து விடுகிறோம்.
    இந்த உலகம்  Promotion  உலகம்.  அதாவது பதவி உயர்வை மட்டுமே விரும்புகின்ற உலகம்.
சிறு விவசாயி - பண்ணைக்கு உரிமையாளராகவும்
கவுன்சிலர்      - MLA வாகவும்
MLA வுக்கு            -அமைச்சராகவும்
தொண்டனுக்கு - தலைவனாகவும்
மக்களுக்கு         - குருவாகவும் 
குருவுக்கு                 - ஆயராகவும்  ஆசை / விருப்பம்   

 இப்படி எல்லோரும் கீழிருந்து மேலே  மேலே செல்ல ஆசைப்பட, ஆண்டவருக்கு ஒரு விநோதமான விசித்திரமான ஆசை. மேலிருந்து கீழே வரனும்னு ஆசை. ஆம் கடவுளுக்கு மனிதனாக ஆசை. ஆம் கடவுள் தன்னையே தாழ்த்திக் கொண்ட தாழ்ச்சியின் விழாதான் கிறிஸ்துமஸ். இதைத்தான் திருத்தூதர் பவுல் பிலி 2:6‡9இல் சொல்லுகிறார். கடவுள் தன்மையில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். அவ்வளவுதான் கிறிஸ்துமஸ். அடிமையின் வடிவை ஏற்ற நாள்தான் கிறிஸ்துமஸ்.

இயேசுவின் பிறப்பு கதையோ,கற்பனையோ இல்லை. மாறாக வரலாற்று நிகழ்ச்சி என்பதை வலியுறுத்தவே, இயேசு யாருடைய ஆட்சியில், எங்கு, எப்படி  பிறந்தார் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இயேசுவின் பிறப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு செய்தியும் இயேசுவின் எளிமையையும், அவரது தாழ்ச்சியையும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன.

முதலாவதாக, இயேசு பிறந்ததாகச் சொல்லப்படும் ஊர் பெத்லகேம் யூதாவின் ஊர்களில் சிறிய ஊராக இருந்தாலும், இவ்வுலகை படைத்த மாபரன் உதிக்க திருவுளம் கொண்ட ஊர். யாரும் எதிர்பார்க்காதவைகளை தமது விருப்பமாகக் கருதுபவர் இறைவன். மேலும் அப்பத்தின் வீடு என்னும் பொருளுடைய பெத்லகேமில் பிறப்பதால், இவ்வுலகிற்கு தன் உடலை உணவாக கொடுக்க உள்ளத்தை முன்னறிவிக்கிறார்.

இரண்டாவதாக, உலகத்தை உருவாக்கிய வருக்கு இவ்வுலகம் ஒதுக்கிய இடம் மாட்டுத் தொழுவம். இறைவனின் எளிமைக்கு இதை விடவா சான்று தேவை. பிறந்தவுடன் துணிகளில் சுற்றப்பட்டு தீவனத் தொட்டியில் கிடத்தப்பட்டார். இதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. தீவனத்தொட்டி என்பது மாடுகளுக்கு உணவிடும் இடம். இயேசுவும் இவ்வுலகிற்கு உணவாகப் போகிறார் என்பதற்கு முன் அடையாளமே இத்தீவனத் தொட்டி.

மூன்றாவதாக அவர் தாழ்ச்சிக்கு இன்னுமொரு உதாரணம், அவரின் பிறப்புச் செய்தி அறிவிக்கப்பட்ட இடையர்கள். இறைமகன் இயேசு தன்னை ஆயனென்று ‡ நல்லாயன் என்று அழைத்தவர். இன்று ஆயர்களின் தலைமகன் குடிலில் குழந்தையாகப் பிறந்துள்ளார். எருசலேமில், படித்தவர்கள், அரசர்கள், அறிஞர்கள், குருக்கள் என பல மேட்டுக்குடிகள் இருந்தும் படிப்பறிவற்ற, ஏழை, எளிய இடையர்களுக்கு  இயேசுவின் பிறப்பு முதன் முறையாக அறிவிக்கப்படுகிறது. இறை செய்தியை கேட்டதும், அவர்கள் கேள்விகள் கேட்கவில்லை. சென்றார்கள், கண்டார்கள் இறைவனை மகிமைப்படுத்தினர்.  

சுருக்கமாகச் சொன்னால், கிறிஸ்துமஸ் விழாவின் மையச் செய்தியே இதுதான். மனிதன் பலமற்றதாக கருதுவதை கடவுள் தன் பலமாகக் கொண்டார். மனித பிறப்பு பலவீனமானது, பாவ இயல்புடையது. ஆனால் கடவுள் அந்த பலவீனத்தை பலமாக மாற்றுகிறார்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? வல்லமையான கடவுள் தேடிச் சென்றது. வலிமையானதை அல்ல. மாறாக, சிறியது என எல்லோரும் நினைத்த பெத்லகேமும், ஆடு, மாடுகளின் தஞ்சமிடமான மாட்டுக் குடிலும், கந்தைத் துணியும், கிடத்தப்பட தீவனத் தொட்டியும், கண்டு மகிழ ஏழை இடையர்களும்தான். இறைவன் பலமற்றதை, ஞான சூனியங்களை தம் நற்பணி தூதுவர்களாக மாற்றினார் என்பதற்கு அவரின் பிறப்பு ஒரு சான்று. ஆக நம்முடைய கடவுள் கடந்து நிற்பவர் (Transscendent) அல்ல. நம்மில் ஒன்றோடு ஒன்றாக கலந்து நிற்பவர் (Immanent). அதாவது இம்மானுவேல்  இந்த கடவுள் சிறியவற்றை, தரித்திரம் என ஒதுக்கியவற்றை, ஏழை, எளிய  மக்களை, பாவிகளை தேர்ந்து கொண்டு, அவர்களோடு ஒன்றாக கலந்து நிற்பவர்.

எனவே, இந்த கிறிஸ்துமஸ் விழா நம்மில் மாற்றத்தைக் கொண்டு வரட்டும். எல்லாம் இழந்து நிற்கும் மனிதர்களில், சாதியால், மொழியால், சமூக பாகுப்பாட்டால் வெறுக்கப்பட்ட மனிதர்களைத் தேடிச் சென்று, அவர்களோடு நாம் உரையாடி, உறவாடும் போது அங்கே கிறிஸ்து பிறக்கின்றார், இருக்கின்றார்.

ஆம் கிறிஸ்து நம்மோடு இல்லாத கிறிஸ்துமஸ், கிறிஸ்துமஸ் ஆக இருக்க முடியாது. அந்த இயேசுவை நம்மோடு வாழ வைப்போம். நம் இல்லத்தில், நண்பர்கள், அயலாரின், அநாதைகளின், அந்நியர்களின் உள்ளங்களில் வாழ வைப்போம். அப்பொழுதுதான் ‘கடவுள் நம்மோடு’ என்பதற்கு பொருள் கிடைக்கும்.

வலுவற்றைவைகளில் வல்லமையுள்ள  தேவனைத் தேடுவோம். ஏனெனில் கிறிஸ்துவின் பார்வையில் பலகீனமே பலம்.

Monday, 4 December 2017

தேம்பாவணியில் இயேசு பிறப்பு

தேம்பாவணியில்  இயேசு  பிறப்பு

 பேராசிரியர் முனைவர் ச.சாமிமுத்து, திருச்சி

கற்புக்கு அரசராகிய தூய வளனாரும் புண்ணியத்தின் திருவுருவான கன்னிமரியும் இடையறாது வேண்டிய வேண்டுதலைக் கேட்ட இறைவன் இப்பூவுலகில், தாம் ஆதாம் ஏவாளுக்கு வாக்களித்தவாறு மனிதனாகப் பிறக்க விருப்பம் கொண்டார். எனவே வளனாரையும் கன்னி மரியாவையும் திருமணத்தில் ஈடுபடுத்தி, பழுதில்லா வகையில் பாரில் பிறந்து மனுக்குலத்தின் பாவத்தைப் போக்கத் திருவுளம் கொண்டார். ஆகவே, கன்னிமரியிடத்துக் கபிரியேல் தேவ தூதரை அனுப்பி தம் திருவுளத் திட்டத்தை எடுத்துரைக்கச் சொன்னார். அத்தேவதூதரும் ஜெருசலேம் தேவாலயத்துள் விரைந்து நுழைந்து, கன்னிமரிக்கு காட்சியளித்து, கடவுள் திருவுளத் திட்டத்தை எடுத்துரைத்தார். அந்நிகழ்ச்சியை வீரமாமுனிவர் தம் தேம்பாவணிக் காப்பியத்தில் இனிய தம் பாடல் மூலம் நமக்கு எடுத்துரைக்கின்றார். அப்பாடல்,

“வான்செய்த சுடர்ஏய்க்கும் வடிவொடு
வானவன் சடுதி வந்தக் கன்னி
கான் செய்த மலர்ப்பதத்தைக் கண்டிறைஞ்சிக்
கடவுள் அருள் கருதுந் தன்மை
தான்செய்த ஏவலெனத் தவறாதோர்
மணத்து அமைதல் தருமம் என்னத் 
தேன்செய்த கனிச்சொல்லால்  சீர்த்தபல
உறுதிகளும் செப்பினானே”   (பாடல் 317)

என்று நம் செவியில் இன்பத்தேன் பாய்ச்சுகின்றது.

கன்னிமரியிடம் சென்ற கபிரியேல் வானவர் வானத்தை அலங்கரிப்பதற்குரிய சூரியனது வடிவைப்போல் விளங்கினார் என்றும் மரியின் மணம் வீசும் தாமரைத் திருவடிகளை வணங்கினார் என்றும் வீரமாமுனிவர் தம் பாடலில் இலக்கியச்சுவை சொட்டச் சொல்லு கிறார். அவ்வாறு சென்ற தேவதூதர், தேனைப் பொழியும் இன்பமான சொற்களினால் இறைவனுடைய கருத்துப்படி நீங்கள் திருமணம் புரிந்து கொள்ள ஒப்ப வேண்டும் என்றார்! மேலும் உறுதி பயக்கும் நல்லுரைகள் பலவற்றை நவின்றார்.

மணம் என்ற வார்த்தையைக் கேட்கும் முன்னே கன்னிமரியாவின் முகம் வாடிற்று! கண்களில் துன்பநீர் குளமாகப் பெருக வழிய ஆரம்பித்தது. கன்னிமரியோ மூன்று வயது  முற்றுப்பெறா முன்னமேயே திருமணம் புரியாது எப்பொழுதும் கன்னியாய் இருந்து இறைவனுக்குப் பணிபுரியத் தம்மையே ஒப்புக் கொடுத்தவர்கள்.  மனம் கலங்கிய கன்னிமரிக்கு அத்தேவதூதர் இறைவனின் திருவுளத் திட்டத்தை உறுதிபட எடுத்துக் கூறவே, மரியும் மனம் தேறி கல்லினும் வலிய தம் கன்னித் தன்மை என்றும் அழியாத அத்திருமணத்திற்கு இசைவளித்தார். உடனே அவ்வானவர், இறைவனுடைய கட்டளையின்மேல், சமயத் தலைவராக இருந்த சிமியோனுக்குக் காட்சியளித்து மரியயன்னும் பெயர்பூண்ட கன்னிக்குரிய துணைவரை மரியின் குலத்திலேயே தேடித் திருமணம் செய்விப்பாயாக என்றார். அவ்வாறே, தாவீது அரச குலத்தினராகிய இளைஞர் வளனாருக்கும் அதே குலத்து இளம் பெண் மரியாவுக்கும் சமய முறைப்படி திருமணம் நிறைவேறிற்று, எருசலேம் தேவாலயத்தில் நடைபெற்ற இந்த வியத்தகு இல்லற ‡ துறவற திருமண விழாவிற்கு வந்திருந்த அனைவரும் வழுவிலாக் கன்னிமரியாவையும் பழுதிலா வளனாரையும் பலவாறு புகழ்ந்து வாழ்த்தினார் என்று வீரமாமுனிவர் பாடிப் பரவுகின்றார். அறத்தின் -- வேதத்தின் - செல்வத்தின் வடிவங்களைப் போன்றவர்களே வாழக் கடவீர்! எங்கள் உயிரையும், உலகத்தின் உயிரையும், உயிர்களின் உயிர்களையும் போன்றவர்களே! வாழக் கடவீர் என்று வாழ்த்தியதை, 

“வாழி அறவுரு வாழி மறையுரு
  வாழி திருவுரு மானுவீர்
வாழி எமதுயிர் வாழி உலகுயிர்
வாழி உயிருயிர் போலுவீர்”

 என்று இசைக்கின்றார் வீரமாமுனிவர்.

திருமணம் நிறைவேறிய சில நாட்களுக்குப் பிறகு, சிமியோன் வளனாரை அழைத்து, உமது சொந்த ஊராகிய நாசரேத்திற்குச் செல்வீர் என்றார். இருவரும் இசைந்து இறைவனை வணங்கிப் புறப்பட்டார்கள்.

மரியம்மாள் மற்றைய கன்னி யர்களிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு, இல்லறத் துறவியாகிய வளனாருடன் நாசரேத்து நோக்கி நடந்தார். அச்சிற்றூருக்குச் சென்றபொழுது அங்கிருந்த அனைவரும் அன்புடன் அத்தெய்வ இணையரை வரவேற்றார்கள். அறம் தழைக்க, உலகமீட்பர் உதிக்க, இல்லறமாகிய நல்லறத்தை அக்கன்னியும் கற்பரசும் தொடங்கினர்!

இருவரும் இளமையிலேயே மேற்கொண்ட துறவற ஒழுக்கத்திற்குப் பழுது நேராவண்ணம் இல்லறத்தில் இணைக்கப்பட்டதால் இறைவனுடைய அருட்செயலை எண்ணி மகிழ்ந்தனர். கன்னிமரியின் கன்னித் தன்மை காப்பாற்றப்பட கற்பரசு காவலாயும், அவரின் கற்புக் காக்கப்பட கன்னியரசி காவலாகவும் அமைந்தார்கள் என்பதை வீரமாமுனிவர் கவின்மிக்க கவிதைகளில் பாடும் திறம் போற்றற்குரியது. துறவறம் மேற்கொண்டு இல்லறம் புரிந்த இருவரும் தூய வாழ்வு வாழ்ந்து வருங்கால், அவர்களின் உள்ளங்கள் பளிங்கிபோல் ஒளிர்ந்தன!. பொங்கி வழிந்த பேரார்வத்தால் வளனார் பலவாறு தந்தையாம் கடவுளை வணங்கி வாழ்த்திப் போற்றியதை,

“அறக்கடல் நீயே, அருட்கடல் நீயே,
அருங்கரு ணாகரன் நீயே,
திறக்கடல் நீயே, திருக்கடல் நீயே,
திருந்துளம் ஒளிபட ஞானம்
நிறக்கடல் நீயே, நிகர்கடந் துலகில்
நிலையும் நீ உயிரும் நீ, நிலை நான்
பெறக்கடல் நீயே, தாயும் நீ எனக்கு
பிதாவும் நீ யனைத்தும் நீ யன்றோ!”

என்னும் கன்னல் சுவைப்பாடலில் கவிஞர் பாடி இன்புறுகின்றார்.

இறைதிட்டம் ஈடேறும் நாள் நெருங்கிற்று. கன்னி மரியின் திருவயிற்றில் மீட்பர் கர்ப்பமாக உருப் பெற விரும்பி, அச்செய்தியைக் கன்னிமரியிடம் தெரிவிக்க கபிரியேல் தூதரை அனுப்பினார். வான் தூதரும் மாசில்லா மரியாவை அணுகி, தேவ வரங்கள் நிரம்ப பெற்றவர் என்றும் இறைவன் வாழும் எழில்மிக்க உளத்தை உடையவர் என்றும் பூவுலக மகளிர்களிலெல்லாம் அளவில்லாத இறையருளைப் பெற்றவர் என்றும் தேம்பாத் தெய்வீக அழகு பெற்றவர் என்றும் இன்னுரைகளால் அவரை வாழ்த்தினார். தேவதூதரின் புகழ்மொழிகளைக் கேட்ட பிதாமகள் நாணமுற்று சித்திரப்பாவை போல் தாழ்ச்சியுடன் இருந்த மாட்சி குறித்து வீரமாமுனிவர்

“தனக்கள வகன்ற ஆசி சாற்றிய சொல்லை ஆய்ந்த
மனக்கள வுளைந்து நாணி வரைந்த ஓவியமே யயாத்தாள்”

என்று பாடுகின்றார்.

தேவதூதர் மீண்டும் எக்காலத்தும் கன்னித் தன்மை கெடாது விளங்கும் மாதே! இவ்வுலகத்தில் உள்ள பொதுவான முறையினின்று மாறுபட்டு, வியப்புற்குரிய வழியில் இறையருளால் ஒப்பற்ற ஒரு கர்ப்பத்தைத் தாங்கி, பொன்னொளியைப் பழிக்க கூடிய உடலழகுபடைத்த ஒரு மகனைப் பெற்றெடுத்து அம்மகனுக்கு இயேசு என்னும் பெயரிடுவாய் என்றார். அதைக் கேட்டு மரியா பெரிதும் மனம் கலங்கி அழியாத கன்னித் தன்மையுள்ள ஒரு பெண் எவ்வாறு ஒரு பிள்ளையைப் பெறுதல் கூடும் என்று ஐயத்துடன் வினவினார். அதனை,

“மய்யலற் றழிவில் கன்னி
மைந்தனைப் பெறுத லேதென்(று)
ஐய்யமுற் றிவள் வினாவ” 

என்று முனிவர் பாடுகின்றார்.

உள்ளத்தைத் தெரிவிக்க வேண்டி, இறைவனுடைய பேராற்றலைத் தேவதூதர்க்கு விளக்கிக் கூறினார். ஒன்றுமில்லாமையிலிருந்து  இவ்வுலகத் தையும், இவ்வுலகில் உள்ள பொருட்களையும் உண்டா க்கிய இறைவனுக்கு இச்செயல் செய்ய முடியாததோ என்றார். மேலும் கன்னியயாருவர் துன்பமில்லாமல் ஒரு மகனைப் பெறுவார் என்று  இசையாசு இறைவாக்கினர் முன்னுரைத்தது உண்மையாகப் போகிறதென்றும், தூய ஆவியாருடைய அருளால் கருவுற்ற இரண்டாம் ஆளாகிய உலக மீட்பரைப் பெற்றெடுப்பாயாக வென்றும் சொல்லி கன்னிமரியைக் கபிரியேல் தேவதூதர் வணங்கினார். 

நாட்கள் மாதங்களாகி நகர்ந்தன. வளனாருக்கு ஏற்பட்ட உள்ளக்கலக்கங்களையயல்லாம் இறைவன் வானதூதர் மூலம் அகற்றவே, வளனாரும் தம் துணைவி இறைவனையே மனிதனாகப் பெற்றெடுக்கும் மேலான  இறையருள் வரத்தை எண்ணி நெஞ்சம் நெகிழ்ந்து இறைவனின் தாயை வீழ்ந்து வீழ்ந்து வணங்கி தாம் ஐயம் கொண்டவர்களாய் அழுது புலம்பினார்! அவருற்ற அளப்பரும் வேதனையைப் பல துன்பச் சுவைமிக்க பாடல்களில் பாடும் வீரமாமுனிவர் அன்னையின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி வேண்டியதை, 

“எழுந்திரு அடியை வேண்டினான்.
தொழுந்திரு அடிமிசை மழைக்கண் தூவியே,” 

என்று பக்திச் சுவை  நனி சொட்டப் பாடுகின்றார்.

இறைமகன் பிறப்பதற்கு முன்பு, உரோமைப் பேரரசன் அகஸ்டசு சீசர் என்பவரின் ஆட்சிக் காலத்தில், அரசக் கட்டளை ஏற்றுக் குடிக்கணக்குத் தர நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணாகிய கன்னிமரியும் இறைவனின் வரபலன்களால் நிரம்பப்பெற்ற மாதவ முனிவராகிய வளனாரும் நாசரேத்தூரிலிருந்து பெத்தலேகம் என்னும் தாவீதரசனின் பேரூருக்குப் புறப்பட்டுப் பயணம் போனார்கள்.

இன்ப துன்பங்கள் நிறைந்த இடங்கள் பலவற்றையும் கடந்து, நாசரேத்தைவிட்டுப் புறப்பட்ட ஐந்தாம் நாள் மாலைப் பொழுதில் வளனாரும், கன்னிமரியும் பெத்லேகம் நகர்போய்ச் சேர்ந்தார்கள். இரவில் தங்குவதற்கு அத்தாவீதன் நகரத்தில் இறைவனைத் தம் மாணிக்கத் திருவயிற்றில் தாங்கிச் சுமந்த நம் தாய்க்கு அங்கு இடம் இல்லை! நம் தவமா முனிவராம் வளனாருக்கு அங்கு இடமில்லை. இந்நிலையில், பெத்லேகம் நகர்க்கு வெளியில் இருந்த மாட்டுத் தொழுவம் அமைந்த குகையில் இருவரும் சென்று தங்கினர். அக்குகையில்தான், மார்கழிமாதம் 25 ஆம் நாள் நடுச்சாம வேளையில், மூன்று உலகங்களிலும் தமக்கு ஒப்பு யாரும் இல்லாத, மூன்று காலங்களிலும் அழிவில்லாத கன்னிகை, வல்லமையில் அளவில்லாத மூன்று ஆட்களில் இரண்டாம் ஆளாகிய திருச்சுதனை, மூன்று சுடர்களைப் பார்க்கிலும் மிகுந்து விளங்குமாறு பெற்றெடுத்தார்கள் என்கிறார் வீரமாமுனிவர்.

பேரருள் பிறந்தது! பேய்கள் மறைந்தன! பேரின்பம் பூமியில் பெருக்கெடுத்து ஓடிற்று! தேவதூதர்கள் இசைமுழங்கி, மண்ணில் பிறந்த மாதேவக் கொழுந்தைத் தேவதாயின் கரத்திலிட்டு வணங்கினர். கன்னிமரி அன்னையோ தாம் பெற்றெடுத்த கடவுள் மகனைப் பேரன்போடு அரவணைத்து, முத்தமாரி பொழிந்து வாழ்த்தி வணங்கினார்கள். கற்புக்கரசராகிய தூய வளனாரும் பேரின்பப் பெருக்கில் தேவபாலனின் திருவடிகளை வணங்கினார். மரியன்னை, தேவாதி தேவனைத் தம் செந்தாமரைக் கரங்களிலே தூக்கி அரவணைத்த நேரத்தில் கன்னி அன்னையின் கரங்களையே தேன் துளிர்க்கும் மலர்ப்படுக்கையாகக் கருதி உயிர்களின் தலைவர் உறங்கினார். அப்போது தாளாத ஆசையால் வளனார் தாலாட்டிய காட்சியை வீரமுனிவர் பின்வரும் பாடலால் உணர்த்துகின்றார்.

“களித்த நாளில் அரும்பும்தென் காலே
இனிதீங் கரும்புதியே,
துளித்த நானம் தேனரும்பத்துணர் நாள்
மலர்காள் அரும்புதிரே,
விளித்த நாகு மாங்குயில்காள் விளைதேன் 
பாவை அரும்புதிரே
அளித்த நாதன் நான்கனிய அன்பு
துயிலாத் துயில்கின்றான்.”

இவ்வாறு வளனார் இனிமையாகத் தாலாட்டவும், எல்லாவற்றையும் கேட்டு இன்புற்றார்போல் தேவபாலன் தன் திருவிழி மலர்ந்து அவரைப் பார்க்க, அவரும் எல்லையற்ற இன்பக்கடலில் மூழ்கினாராம்!.

Sunday, 3 December 2017

ஒளியின் விடிவு, இருளின் முடிவு, கிறிஸ்மஸ் சிறப்புக் கட்டுரை

ஒளியின் விடிவு, இருளின் முடிவு 
 கிறிஸ்மஸ் சிறப்புக் கட்டுரை 

ஒளி, இருள் இரண்டும் முரண்பட்டு நிற்பவை. படைப்பு முழுவதும் இருள் பரவியிருந்த வேளையில் ஒளி தோன்றுக (தொநூ 1:3) என்னும் சொல்லால் உருவமற்று வெறுமையாக இருந்த படைப்பு புத்துயிர் காணுகின்றது. இருளை விரட்டும் சக்தி ஒளிக்கு மட்டுமே உண்டு. ஒளியான இயேசு உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டானது (யோவான் 1:10) தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொண்டுள்ள எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார் (யோ 3:16).
அன்பே தகளியாக ஆர்வமே நெய்யாக
இன்புறு சிந்தை  இருதியாக - பூதத்தாழ்வார்.

 ஒளியாம் கிறிஸ்துவின் பிறப்பு: 

யூதா நாட்டின் மலை நகர் பெத்லகேம். இங்குதான் சாமுவேல் இறைவாக்கினரால் தாவீது அரசனாக முடி சூட்டப் பெற்றார் (1 சாமு 16: 4‡13). விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு நானே ( யோவா 6:51)  என்றவர் அப்பத்தின் வீடு எனப் பொருள்படும் பெத்லகேம் என்னும் ஊரில் பிறக்கின்றார். சத்திரத்தில்  இடம் இல்லாத காரணத்தினால் மாட்டுத் தொழுவமே உலக மீட்பரின் பிறப்பிடமாகின்றது (லூக் 2: 1-7). நன்கு மக்கிய கழிவுகளாகிய தாவரக் கழிவுகள், கால்நடைக் கழிவுகள், கோமியம் கலந்த மண் மற்றும் தீவனக் கழிவுகள் நிறைந்த இடமே மாட்டுத் தொழுவம். ‘உலகின் ஒளி நானே’ என்றவரின் பிறப்பினால் மாட்டுத் தொழுவம் தெய்வக் குழந்தையின் இல்லமாக மாற்றம் பெறுகிறது.

ஒளியாகிய ஆண்டவரின் மாட்சி: 

நாளெல்லாம் உழைத்து களைத்து சோர்ந்து போய் உடலெங்கும்  அழுக்கடைந்து பஞ்சப் பரதேசிகளாய்த் திகழும் பாட்டாளி வர்க்கத்தின் சொந்தங்களாகிய இடையர்கள், தங்கள் கிடையைச் சாமக் காவல் காத்து வருகின்றனர். ஆண்டவரது பிறப்பின் செய்தி இவர்களுக்கே முன்னறி விக்கப்படுகின்றது. ஆண்டவரின் தூதர் இடையர் முன் வந்து நின்ற போது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது (லூக் 2:9). மேலும், ‘அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காக தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்’ (லூக் 2:10-12). என்ற செய்தியும் அறிவிக்கப்படுகிறது. ஏழ்மையில் உதயமான இயேசு, ஏழையரில்  ஏழையாக உள்ள இடையர்களுக்குத் தனது பிறப்பின் செய்தியை அறிவித்து ஏழைகள் மீது தனக்குள்ள பேரன்பினை வெளிப்படுத்துகின்றார்.

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே!
அன்பெனும் குடிபுகு அரசே!
அன்பெனும் வலைக்குப்படும் பரம்பொருளே!
அன்பெனும் காத்தமர் அமுதே!
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே!
அன்பெனும் உயிரொளிர் அறிவே!
அன்பெனும் அணுவுள் அமைந்த போரளியே! - திருவருட்பா.

மனிதர் வாழ்வில் ஒளியேற்றிட இறைமுகம் களைந்து மனித முகம் ஏற்ற தெய்வம்:

முகம் ஒரு மனிதரின் அடையாளம். முகவரி ஒரு மனிதரின் இருப்பிடத்தைச்  சுட்டிக் காட்டுவது. முகம் உணர்வை, உறவை வெளிப்படுத்துகிறது. மகிழ்ச்சி, சோகம், ஆனந்தம், அருள், பக்தி, பசி, வறுமை, வலி, வெற்றி, தோல்வி, இழப்பு போன்றவற்றினை ஒருவரின் முகத்தை வைத்தே நாம் அறிந்து கொள்கின்றோம்.          வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார் (யோவா 1:14) என்னும் இறைவார்த்தை தெய்வமுகம் களைந்து நமது முகமெடுத்து நம்மில்  ஒருவரானதையே சுட்டுகிறது. இன்றைய அறிவியல் தொழில் நுட்ப உலகில், மனிதர் தனது முகத்தைக் தொலைத்து முகவரியிழந்து நிற்பதனால் நமக்காக இயேசு  முகமானார். உணவு, அரசியல், பேச்சு, உறவு, மொழி வழக்கு எல்லாமே கலப்படம்தான். அசலை அதாவது ஒரிஜினலை மறைத்து நகலை அதாவது  வெளிவேடத்தையே மனித முகம் காட்டி நிற்கின்றது. சொகுசு வாழ்க்கைக்காக பிள்ளைகளைப் பாசத்தோடு வளர்க்க நேரமில்லாத பெற்றோர்கள். இதன் காரணமாக வன்முறை, மதுவுக்கு அடிமையாகும் வாலிப உள்ளங்கள். சமூக வலைத்தளங்களில் மூழ்கி  யயிற்e நிஜுழியிe போன்ற தீய இன்டர்நெட் விளையாட்டில் ஈடுபட்டு தங்களையே தொலைத்து நிற்கும் நிலை. கரங்களில் கத்தி, துப்பாக்கி, மதுபாட்டில்கள் ஏந்தி இருப்பதும் முகவரியிழந்த நிலையே. இப்படிப்பட்டோரின் வாழ்வில் ஒளியேற்றி சுய முகம் அளித்து வாழ்ந்திட அழைப்பதுவே கிறிஸ்து பிறப்பு விழா.
எல்லாருக்கும் இன்று  திருவிழா
ஏழை மக்களுக்குப் பெருவிழா 
பொல்லார்க்கும் நல்லார்க்கும்
பொழிகின்ற மழை போலவே
பொல்லார்க்கும் அருள் வழங்கும்
இயேசு பிறந்த திருவிழா.

முதல் துறவு இல்லம் திருக்குடும்பம்:

கிறிஸ்துமஸ் விழாவின் முக்கிய நாயகர்கள் குழந்தை இயேசு, அன்னை மரியா, புனித சூசையப்பர். இவர்கள் உருவாக்கி வாழ்ந்து வந்த குடும்பமே முதல் துறவு இல்லம். கற்பு, கீழ்ப்படிதல், ஏழ்மை போன்றவற்றினை அனுசரித்த முதல் துறவிகள் இவர்களே. ஏழ்மையின் உச்சம் திருக்குடும்பம். தாழ்ச்சியின் ஊற்று திருக்குடும்பம். கற்பு நெறி தவறாது வாழ்ந்த பெற்றோர் மரியாவும் வளனாரும். ஏழ்மை தவழ்ந்த மாட்டுத் தொழுவமே  இயேசுவின் பிறப்பிடம். விண்ணகத் தந்தையின் நிலையை விட்டிறங்கி மனித முகம் எடுத்த நிகழ்வு தாழ்ச்சி. விண்ணகத் தந்தையின் திருவுளம் நிறைவேறிட முழுமையாக தன்னையே முழுமையுமாக அர்ப்பணம் செய்தது கீழ்ப்படிதலின் வெளிப்பாடு. பல்வேறு தியாகங்களை அனுசரித்து வாழ்ந்த குடும்பமே திருக்குடும்பம்.

ஆனால் இன்று ஏழ்மை, கற்பு, கீழ்ப்படிதல் போன்ற சொற்கள் வெறும் வெளிப்பகட்டுக்கான விழாக்களாகி விட்டன. ஏழ்மை இல்லாவிட்டாலும் எளிமையாவது வேண்டும். எதிலும் ஆடம்பரம், பகட்டு, பந்தா, ஊதாரித்தனம், தற்பெருமை. துறவு இல்லங்கள் என்றழைக்கப்படும்இடங்களில்கூட மேற் கூறப்பட்டி ருப்பவற்றின் ஆக்கிரமிப்பே அதிகமாகத் தெரிகிறது. இயேசு என்னும் ஒளியின் வெளிச்சத்தில் நாம் வாழ விரும்பினால் தாழ்ச்சி, எளிமை, கிடைத்ததை ஏற்கும் தியாக உணர்வு மேலோங்கியிருக்க வேண்டும். அப்போதுதான் இயேசு நமது இல்லத்தில் பிறப்பார். ஒளி  உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியை விட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது (யோவா 3:19).

கிறிஸ்மஸ் விழாவை அர்த்தமுள்ளதாக்கிட ஒரு சில பரிந்துரைகள்:

 1. ஈகோவை விட்டொழிந்து வெறுக்கும் நபரைத் தேடிச் சென்று பிளவுபட்ட உறவினைப் புதுப்பித்துக் கொள்ளுதல்.

2. இறைவனை மையமாகக் கொண்ட மகிழ்ச்சி மிகுந்த நிகழ்ச்சிகளை நடத்துதல்.

3. முன்பின் அறிமுகம் இல்லாத பிற சமயத்தினரை அணுகி இயேசுவின் அன்பினை வெளிப்படுத்தும் அறச் செயல்கள் புரிதல்.

4. உங்கள் பெயரை முன்னிலைப்படுத்தாது முதியோர் இல்லம் அல்லது அனாதை இல்லம் சென்று இயேசுவை மட்டுமே முன்னிலைப்படுத்துதல்.

5. குடும்ப உறவுகளைப் பயன்படுத்தும் நாளாகக் கொண்டாடுதல்

6. விதவையின் காணிக்கையினை  ஆண்டவர் பாராட்டினார். குறைந்த விலையிலான பொருளே ஆகினும் ஆத்மார்ந்தமாக பரிசுகள் வழங்குதல்.

7. நாம் எவரிடமிருந்து  திரும்பப் பெற முடியாதோ அவர்களுக்கு உதவிகள் செய்தல்.

8. இயேசு உலகோர் அனைவரின் மீட்பர். எனவே இதனை சர்வ சமய விழாவாகக் கொண்டாடுதல்.

9. கோபம், பொறாமை, எரிச்சல், வெறுப்பு போன்ற தீய குணங்களை அகற்றி அன்பு, அமைதி, மகிழ்ச்சி, நிறைவு போன்றவற்றினைக் கடைப்பிடித்தல். 

10. பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் உண்டு. ஆனால் உயிர் வாழ உணவுப் பொருள்களை விளைவிக்கும் உழவுத் தொழிலே முதன்மையானது. வாழ்வுக்கு ஆதாரமானது என்பதனை உணர்ந்து, விவசாயத் தோழர்களின் நியாயமான போராட்டங்களுக்குத் தோளோடு தோள் கொடுத்து உறுதுணையாயிருத்தல்.

‘உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள்’ என்பது வெளியாகும் (யோ 3:21).

ஆண்டவரின் அருள் வழங்கும் புத்தாண்டு:

நிகழாண்டு தொடக்கத்திலிருந்து இந்த நாள் வரை நடந்த நிகழ்வுகளைப் பின்னோக்கிப் பார்ப்போம். ‘கடந்து வந்த பாதைகளைத் திரும்பிப் பார்க்கின்றேன். நன்றியோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன்’ என்று நன்றிப் பண் இசைப்போம். வாழ்வின் வெற்றிக் களிப்பில் மிதந்து விடாமல்  தோல்வியில் துவண்டு விடாமல் புத்தாண்டில் அடியயடுத்து வைப்போம்.

2018 ஆண்டவரின் அருள் வழங்கும் புத்தாண்டு. ஏனெனில் ஆண்டவர் ஆண்டு முழுவதும் தமது நலத்தால் முடிசூட்டுகின்றார். அவரது  வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன(திபா65:11). ‘உங்களுக்காக நான் வைத்திருக்கும் திட்டங்கள் வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல’ என்கிறார் ஆண்டவர் (எரே23:11). நல்லதே நடக்கும் என்று நம்புவோம். நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கியிருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை (எபி 11:1).

மங்கலம் பொங்கும் பொங்கல் விழா: 

உலகில் முதன்மையான தொழில் உழவுத்தொழில். அதுவே தமிழரின் தொழில். எனவேதான்

 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழதுண்டு பின் செல்பவர் (குறள் 1033)

என்று வள்ளுவர் கூறுகின்றார். படைப்பிற்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் தமிழரின் பாரம்பரியம் மிக்க பண்பாட்டுப் பெருவிழா. இதுவே பொங்கல் விழா. பருவமழை பொய்த்துப் போனதாலும், மீத்தேன் எரிவாயு திட்டம் போன்றவற்றாலும் சாகுபடி நிலங்கள் குறுகிக் கொண்டே வருகிறது. ஊருக்கெல்லாம் சோறிடும் உழவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிக் கொண்டே வருகிறது. தை மகளின் வருகையினாலே விவசாயிகளின் வாழ்வில் ஒளி தீபம் ஏற்றப்படட்டும்.
தை பிறந்தால் வழி பிறக்கும்
தரணியிலே ஒளி பிறக்கும்
தை மகளின் வருகையிலே
பரணி சொல்லும் வழி பிறக்கும்

இருள் எரித்து ஒளி வளர்ப்போம்:

‘கடவுள் ஒளியாய் இருக்கிறார். அவரிடம் இருள் என்பதே இல்லை. நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம். உண்மைக்கேற்ப வாழாதவராவோம். மாறாக, அவர் ஒளியில் இருப்பது போல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் நம்மை எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும்.’
(1 யோவா 1: 5-7).

அனைவருக்கும் இனிய இயேசு பிறப்பு, புத்தாண்டு, பொங்கல் நல் வாழ்த்துக்கள்.... 

Friday, 2 December 2016

புது விடியலே வா

 புது விடியலே வா


விடியலின் பிறப்பே வா!
மாட மாளிகை விடுத்து
மாட்டுத் தொழுவத்திலே பிறந்த
எளிமையின் பிறப்பிடம் நீ!

ஏழ்மையின் புகலிடம் கொண்டு
வாய்மையின் மைந்தனாய் வருகைதந்த
வசந்தத்தின் விடிவெள்ளி நீ!

தாழ்ச்சியில் தனித்துவம் கண்டு
தன்னிகரில்லா கன்னிகையின்
வயிற்றில் உதித்த மாபரன் நீ!

இறைநிலை விடுத்து மனிதராய் பிறந்து
இவ்வுலகின் பாவ இருளினை அகற்ற வந்த
விடுதலையின் ஆதவன் நீ

மனித மாண்புகள் மதிப்புற
சீடத்துவத்தை செயலாற்றிய
மாட்சிமை பொருந்திய செம்மறிக்குட்டி நீ!

மன்னிப்பு அகுடம் அளித்து
மறுவாழ்வு உண்டு என்றுரைத்த
மனுமகன் நீ!

தன்னையே வெறுமையாக்கி,
தன்னிகரில்லா சேவகனாகி
தன் குருதியையே அர்ப்பணமாக்கிய
அன்பின் அடையாளம் நீ!

எம்மையாள வந்த
விடியலின் பிறப்பே வா!

மண்ணாக இருக்கும் இருதயங்களை மனங்களாக்க வா!
குழந்தை வடிவிலே வந்த
விடியலே வா!

எம்மை புது விடியலாக்க வா!
விடியலின் பிறப்பே வா!

கிறிஸ்து பிறப்பு விழா

கிறிஸ்து பிறப்பு விழா

- அருள்பணி. ச. இ. அருள்சாமி,

ஒருவர் படித்துவிட்டு பல ஆண்டுகள் வேலை தேடிவந்தார். ஆசிரியர் வேலைக்குப் படித்துவிட்டு கூலி வேலைக்கு சென்றுக் கொண்டிருந்தார். இறுதியாக அரசு வேலைக் கிடைத்தது. மிக்க மிகிழ்ச்சியடைந்தார். அவர் வாழ்வில் புதிய ஒளிக் கிடைத்தாக உணர்ந்தார். புதிய வேலையினால் கிடைத்த நல்ல ஊதியத்தை பொறுப்புடன் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்தார். இயேசுவின் பிறப்பு மானிடத்திற்கு புதிய ஒளியைத் தந்தது என்பதுதான் கிறிஸ்து பிறப்பு விழாவின் பொருள்.

இயேசுவின் பிறப்பு விழாவை மகிழ்வுடன் கொண்டாடுகிறோம். மேல் நாடுகளில் பாரம்பரியம் ஆடம்பர நாளாக ஆகிவிட்டது. புத்தாடைகள், பரிசுகள், கொண்டாட்ட விருந்துகள், கேளிக்கைகள் என்றாகிவிட்டது. இயேசுவின் பிறப்பு விழாவைத் தொடர்ந்து புத்தாண்டு 2017இன் தொடக்கத்தையும் கொண்டாட இருக்கிறோம்.
கிறிஸ்து பிறப்பு விழா நமக்கு அளிக்கும் பெரிய பாடம். இறைப்பண்பில் பொதிந்திருக்கும் எளிமை. ரிச்சர்ட் பாக் என்பவர் கூறுகிறார், எளிமையில்தான் உண்மைகள் புதைந்திருக்கின்றன என்கிறார். The Simplest things are truest’ எளிமை என்பது நம்மை பகிர்தலுக்கு இழுத்துச் செல்லும் கருவி. வீட்டுக்கு மேல் வீடு, ஆடம்பரத்திற்கு மேல் ஆடம்பரம். உயிருள்ள மனிதர் உயிரற்ற பொருள்களுடன் இணைந்து, இதயமற்ற மனிதர்களாக மாறுகிறார். கிறிஸ்து பிறப்பு பொருளிலல்ல, ஆடம்பரத்திலல்ல. எளிமையில் நுழைந்து பகிர்தலில் வாழ்வை காண்க என்கிறது.

அன்மையில் நவம்பர் 8இல் நமது மத்திய அரசு எடுத்த பொருளாதார நடவடிக்கையில், சாமானியர்கள் பல சங்கடங்களுக்கு ஆளாகிவிட்டார்கள். பயணம் செய்ய சில்லறையில்லை, திருமணத்திற்கும், முக்கிய செலவுகளுக்கும் சேர்த்துவைத்த பணத்தை முறைபடுத்த பல குட்டிகரணங்கள் போட வேண்டியதாயிற்று. கருப்புப் பணத்தையும், ஊழலையும் அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்று மத்திய அரசு கூறுகிறது. எந்த அளவிற்கு இந்த செயல்பாடு, கருப்பு பணத்தை அழிக்கப் பயன்பட்டுள்ளது என்பது கேள்வியாகிறது. பெரும் கோடீஸ்வர்களில் விளையாட்டும் கருப்பு பணத்தைப் பிடிக்க சாமானியர்கள் வீண் சுமைகளைத் தாங்க வேண்டியிருந்தது. இன்னும் சற்று கவனமாக இத்திட்டத்தில் இறங்கியிருக்க வேண்டும் என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள்.

மத்திய பாஜக அரசு, தங்களின் பழமைவாத கொள்கைகளை செயல்படுத்துவதிலேயே தந்திரமாக செயல்பட்டு வருகிறது. மத சுதந்திரத்தை அழிப்பது, பொது அரசியல் சட்டம் என்று சிறுபான்மையினரின் உரிமைகளை அழிப்பது, புதிய கல்வி கொள்கை என்று இந்துத்துவ கொள்கைகளை திணிப்பது போன்ற செயல்களில் ஆர்வம் காட்டி வருகிறது. இப்போது 500, 1000 ரூபாய் நோட்டுகளை சரியாக முறைபடுத்தாமல் முடக்கி, பல இன்னல்களுக்கு மக்களை ஆளாக்கியிருக்கிறது.

இப்போது காவிரி பிரச்சனை அடங்கி போய்விட்டது. ஆனால் காவிரி ஆற்றின் கடைமடை பகுதியில், பயிர்கள் காயும் நிலைமையைப் பார்த்து விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் அம்மா அவர்கள் மருத்துவம் பெற்று வரும் வேளையில் அரசு பணிகள் அடங்கி போயிருக்கின்றன. தலைமைத்துவம் ஒருவர மையப்படுத்தி இல்லாமல், பரவலாக்கப்பட்டு பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். பள்ளிகளில் மறைக்கல்வி, நன்னெறி வகுப்புகளை ஆய்வு செய்யும் வேளையில், குழந்தைகளை (10 - 12 வகுப்பு) ‘நம் நாட்டில் உயிருள்ள நல்ல தலைவர்கள் யார்?’ என்று கேட்டால், ‘ஒருவருமில்லை’ என்று பதில் தருகிறார்கள். ‘இதனை மாற்ற என்ன செய்யலாம்?’ என்றால் ‘நாமே நல்ல தலைவர்களாக வளர வேண்டும்’ என்றார்கள்.

புதிய ஆண்டில் எல்லா நலன்களும் எல்லாருக்கும் கிடைக்க, அன்னையின் அருட்சுடர் வாழ்த்துகிறது. நல்ல மழை பொழிந்து விவசாயம் செழிக்க, கல்வி  உயர்ந்து, தொழில் வளம் பெருக இறைவன் ஆசீர் வழங்கி நம்மை வழிநடத்தட்டும்.

பட்டிமன்றம் பொருள் : மக்கள், கிறிஸ்துமஸ் கொண்டாடுவதில் மிகுதியாக வெளிப்படுவது ஆடம்பரங்களே - ஆன்மீகக் காரியங்களே

பட்டிமன்றம்

பொருள் : மக்கள், கிறிஸ்துமஸ் கொண்டாடுவதில் மிகுதியாக வெளிப்படுவது 

ஆடம்பரங்களே - ஆன்மீகக் காரியங்களே

நடுவர் : பேராசிரியர் எஸ் சாமிமுத்து

சொற்போர் தொடுப்போர் : பேராசிரியர் எஸ்.பி. பெஞ்சமின் இளங்கோ, பேராசிரியர் ஜி. இரவீந்திரன்

நடுவர் முன்னுரை

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கூறி, வணங்கி மகிழ்கின்றேன்.

மக்கள், கிறிஸ்துமஸ் விழாவினைக் கொண்டாடுவதில் ஆடம்பர நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்களா? அல்லது ஆன்மீகக் காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்களா? என்று விவாதித்து, உண்மை காணும் நோக்கத்தில் அன்னையின் அருட்சுடர் இதழ் மூலம் இப்பட்டிமன்றம் நடக்கின்றது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்நில உலகத்தில், குறிப்பாக பாலஸ்தீன் நாட்டில், பெத்லேகம் என்னும் தாவீது அரசன் நகரில், எல்லாம் வல்ல இறைவனின் திருமகனாகிய இயேசுகிறிஸ்து மனித உடலெடுத்து, தூய கன்னிமரியின் திருவயிற்றினின்று பிறந்த நாளை நினைத்துக் கொண்டாடி மகிழ்வதுதான் கிறிஸ்துமஸ் விழா என்பது. அனைத்து உலகிலும் உள்ள மக்கள், குறிப்பாகக் கிறித்தவர்கள் இவ்விழாவினை ஆண்டுதோறும் மிகப் பெரிய புனித விழாவாகக் கொண்டாடுகிறார்கள். இவ்விழா நிகழ்ச்சிகளில் மிகுதியும் இடம்பெறுவன ஆடம்பரங்களே என்று பேராசிரியர் எஸ்.பி.பெஞ்சமின் இளங்கோ அவர்கள் முதலில் தம் ஆழமான அறிவும் அனுபவ முதிர்வும் பளிச்சிட, சொற்போர் தொடுக்கின்றார்கள்.

பேரா. எஸ்.பி. பெஞ்சமின் இளங்கோ

சான்றாண்மைமிக்க நடுவர் அவர்களே, மதிப்பிற்குரிய சகோதர சகோதரிகளே,  இன்றைய உலகமே ஆடம்பர  உலகமாக இருக்கின்றது. எந்த நாட்டினராயினும், எந்த சமயத்தவராயினும் விழாக்கள் கொண்டாடுகின்றபொழுது, எவ்வளவு வெளி ஆடம்பரத்தோடு கொண்டாட முடியுமோ அவ்வளவு வெளி ஆடம்பரத்தோடுதான் கொண்டாடுகின்றார்கள். கிறிஸ்துமஸ் விழா மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல.

கிறிஸ்துமஸ் விழாவிற்காக மக்கள், தங்கள் தங்கள் வீடுகளை அவரவர்களுடைய வசதிக்கேற்ப மலர், மணிமாலைச் சரங்களாலும், வண்ணமின் விளக்குகளாலும் அலங்கரிக்கின்றார்கள். இயேசுகிறிஸ்து  பிறந்தது வறுமையில்; மாடுகள் தங்கும் மாட்டு கொட்டகையில். அந்தச் சிந்தனை பெரும்பாலான மக்களுக்கு வருவதில்லை. மக்கள், தங்களுடைய செல்வச் செழிப்பையும், வசதியான வாழ்வையும், தங்களுடைய கெளரவத்தையும் பிறர் அறியக்காட்டுவதற்காக ஏராளமான பொருட்செலவில் வீட்டையும், அலுவலகங்களையும் அலங்கரிக்கின்றார்கள். வீட்டை ஓரளவிற்கு அழகுபடுத்துவதில் குறையில்லை. பெரும் பொருளை அதில் செலவிடுவதற்குப் பதிலாக, ஏழை எளிய மக்களுக்கும், வசதியில்லாமல் வறுமையில் வாடுபவர்களுக்கும் பணமாக, புத்தாடைகளாக, உணவுப்பண்டங்களாகக் கொடுத்து உதவினால், அதுவே உண்மையான கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சியாக அமையும். இயேசுகிறிஸ்து மனிதர்களின் தூய உள்ளங்களில் பிறக்க வேண்டும். அதாவது, கிறிஸ்து உலகிற்குக் கொண்டுவந்த சமாதானம் மனிதர்களை ஆட்கொள்ள வேண்டும். அச்சமாதானத்தை மக்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். தான் படைத்த மனிதனை அதிகமாக நேசித்ததினால்தான் இறைவன் மனிதனாகப் பிறப்பெடுத்து, அவனோடு வாழ்ந்து, அவனை எல்லா அடிமைத்தனங்களிலிருந்தும் மீட்டார். எனவே, ஆடம்பரத்திற்கல்ல கிறிஸ்மஸ் விழா. இது அன்பின் விழா! சமாதானத்தின் விழா! மனித நேயத்தின் விழா! இறை அனுபவத்தின் விழா! இக்கூறுபாடுகளை மறந்த நிலையில் வீட்டை அலங்கரிப்பதிலும், கிறிஸ்துமஸ் குடில் அமைப்பதிலும், பல நட்சத்திரங்களைத் தொங்கவிடுவதிலும், புதிய துணிமணிகள் அணிவதிலும், கேக்குகள் பலகாரங்கள் செய்வதிலும், பிரியாணி விருந்துகள் நடத்துவதிலும், விலையுயர்ந்த வாழ்த்து கார்டுகள் அனுப்புவதிலும், கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்குவதிலும், பட்டாசு, மின்விளக்குகளிலும் மக்கள் கவனம் செலுத்தி, கிறிஸ்துமஸ் விழாவின் உண்மைத் தன்மையை மறந்து விடுகின்றார்கள். கிறிஸ்துமஸ் விழாவில் மக்கள் ஆன்மீக நோக்கத்திற்கு மதிப்பளிக்கின்றார்களா என்பதுவே இன்றைய வாழ்க்கையில் ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது நடுவர் அவர்களே!

நடுவர்

பேராசிரியர் ஜி. இரவீந்திரன் அவர்களே! இதற்கு உங்கள் வலுவான, நடைமுறை வாழ்வில் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய பதிலை இந்த மன்றம் எதிர்பார்க்கின்றது.

பேராசிரியர் ஜி. இரவீந்திரன்

மதிப்பிற்குரிய நடுவர் அவர்களே, உங்கள் முன்னிலையிலேயே, பேராசிரியர்  எஸ்.பி. பெஞ்சமின் இளங்கோ அவர்கள் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் வைத்து மறைக்கப்பார்க்கிறார். கிறிஸ்துமஸ் விழாவில் மக்கள் ஆன்மீகத்திற்குச் சிறப்பிடம் அளிப்பதில்லை, ஆடம்பரத்திற்குத்தான் முக்கியத்துவம் அளிக்கின்றார்கள் என்பதை நான் மறுக்கின்றேன்.

எத்தனையோ மக்கள், கிறிஸ்துமஸ் விழா சமயத்தில் பக்திமுயற்சிகளில் ஈடுபடுவதை நாம் பார்க்கின்றோம். விரதம் இருக்கின்றார்கள், தியானம் செய்கின்றார்கள், திருத்தலங்களுக்குத் திருப்பயணம் மேற்கொள்கின்றார்கள், கோவில் திருவழிபாடுகளில் கலந்துகொண்டு மனத்தூய்மை பெறுகின்றார்கள். கிறிஸ்துமஸ் பாடல் குழுவினர் பக்திப்பாடல்கள் பாடி, மக்களைக் கிறிஸ்துமஸ் விழாவிற்கு ஆன்மீக முறையில் தயார் பண்ணுகின்றார்கள். நன்கொடை வசூலித்து ஏழை, எளிய மக்களுக்கு உணவுக்கும் உடைக்கும் பொருளுதவி செய்கின்றார்கள். பொதுநலப்பணிக் குழுக்கள், பக்த சபைகள் வசதி படைத்தவர்களிடமிருந்து அன்பளிப்புகள் வாங்கி ஆதரவற்றோர், ஊனமுற்றோர், நோயாளிகள், முதியோர்கள், குழந்தைகள் முதலியோர்களுக்கு அவரவர்கள் தேவைக்கேற்ப  உதவுகின்றார்கள். இன்னும் சிலர் சிறை கைதிகளைச் சந்தித்து ஆறுதல் கூறி அன்பளிப்புத் தந்து சமாதானம் அளிக்கின்றார்கள். கலைநிகழ்ச்சிகள் மூலமும், விளையாட்டு நிகழ்ச்சிகள் மூலமும், பக்திச் சொற்பொழிவுகளின் மூலமும் பல்வேறு மக்களை ஒன்று திரட்டுகின்றார்கள். சகோதர பாசத்தோடு பழகி, ஒருவருக்கொருவர் உறவு பாராட்டி அன்பு செலுத்துகின்றார்கள். இவையும், இவை போன்ற பிறவும் மக்கள் உள்ளங்களில் இறை நேயத்தையும், மனிதநேயத்தையும் சாதி, சமயம், மொழி கடந்து வளர்க்கின்றன என்பதை நாம் மறுக்க முடியுமா?

மக்கள் கிறிஸ்துமஸ் விழா எடுக்கும்போது, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக, வீட்டை அலங்கரிப்பதும், புத்தாடை உடுத்துவதும், உணவுப்பண்டங்கள் தயாரிப்பதும் ஆடம்பரம் என்றால், குடும்ப உறவுகளில், சமுதாய வாழ்க்கை முறைகளால் வேறு எப்படித்தான் கிறிஸ்துமஸ் விழாவை மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடுவது? இவற்றையயல்லாம் மறந்துவிட்டு, பேராசிரியர் பெஞ்சமின் அவர்கள் உண்மைக்குப் புறம்பாகப் பேசுகிறார். கிறிஸ்துமஸ் விழாவில் மக்கள் முறையாகச் செய்வதைக்கூட குறைகண்டு பேசுவதை நான் மறுக்கின்றேன்.

கிறிஸ்துமஸ் குடில் அமைப்பதும், நட்சத்திரம் கட்டுவதும், கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி அனுப்புவதும் கிறிஸ்து பிறப்பு விழாவை நினைவுபடுத்துவதற்குரிய தேவையான வெளி அடையாளங்கள் ஆகும். ஆகவே, மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதில் ஆடம்பரங்களே மிகுதியாக வெளிப்படுகின்றன என்றும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதுவும் சரியில்லை என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானதாகும். ஊன்றி நோக்கினால் கிறிஸ்துமஸ் விழாக் கொண்டாட்டங்களில் ஆன்மீகக் காரியங்களே மிகுதியாக வெளிப்படுகின்றன என்பதுவே மறுக்கமுடியாத உண்மையும் என் கருத்துமாகும்.

பேரா. எஸ்.பி. பெஞ்சமின் இளங்கோ

நீங்கள் கூறுவது, என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாதது இன்றைய வாழ்க்கையில் மக்களின் போக்கைப் புரியாமல் பேசுவதாக, உண்மைக்குப் புறம்பான செய்தியாக இருக்கிறது. கிறிஸ்துமஸ் விழாவில் ஆன்மீகக் காரியங்கள் மிகுதியும் வெளிப்படுகின்றனவென்றால், குடித்ததுக் கும்மாளம் போடுவதும் ஆன்மீகக் காரியமா? செல்வம் இருக்கிறது என்பதற்காக, தங்களோடு வாழ்கின்ற ஏழை, எளிய மக்களை அவர்களின் வறுமையை, வாட்டத்தை இம்மியளவும் எண்ணிப் பார்க்காமல் கொடுங்கள், கொடுக்கப்படும் என்னும் கிறிஸ்துவின் நற்செய்தியையும் நினைத்துப் பார்க்காமல், பட்டாடைகள் பளபளக்க, நகை நட்டுகள் ஜொலி, ஜொலிக்க, செல்வந்தர்கள் பலர் கோலாகலமாக கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுகின்றார்களே, இதற்கு என்ன பதில் சொல்லுகின்றீர்கள்?

பேரா. ஜி.இரவீந்திரன்

குடித்துக் கும்மாளம் போட்டு கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுவது அறிவீனம் என்று நானும் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால், இப்படிப்பட்டவர்கள் ஒரு சிலரே, மேலும், செல்வந்தர்கள் பலர் ஏழைகளை முற்றிலும் மறந்துவிட்டுக் கிறிஸ்துமஸ் விழாவைத் தங்கள் குடும்பப் பெருமைக்காக ஆடம்பரத்துடன் கொண்டாடுகின்றார்கள் என்பதிலும் ஓரளவு உண்மையே இருக்கின்றது. பணக்காரர்களிலும் ஈவு, இரக்கம் கொண்டவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். வறுமையில் உள்ளவர்களுக்கு நேரடியாகவும், பிறர் மூலமாகவும் கிறிஸ்துமஸ் விழா சமயத்தில் பல உதவிகள் செய்வதை நாம் பார்க்கின்றோம். எனவே, கிறிஸ்துமஸ் விழா மனித நேய விழாவாகவும் கொண்டாடப்படுவதை நாம் மறுக்க முடியாது.

நடுவர் முடிவுரை

அன்பர்களே, இப்பட்டிமன்றத்தில், பேராசிரியர்கள் இருவரும் மிகச் சிறந்த முறையில் கிறிஸ்துமஸ் விழா பற்றிய சிந்தனைகள் பலவற்றையும் நாம் அறிந்து பயனடையுமாறு வழங்கியுள்ளார்கள்.
மக்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழாவில் மிகுதியும் வெளிப்படுவது ஆடம்பரமா? ஆன்மீகமா? என்று ஆராய்ந்து பார்க்கும்போது ஒரு புறத்தில் ஆடம்பரம் பளிச்சிடுகின்றது. மற்றொரு புறத்தில் ஆன்மீகம் தலைதூக்கி நிற்கின்றது.
கிறிஸ்து பிறப்பு விழாவை  ஏன் நாம் இன்று கொண்டாடுகிறோம்? அன்று, பெத்லேகம் மாடடைகுடிலில் இயேசுகிறிஸ்து பிறந்தபோது அங்கே தேவதூதர்கள் சூழ்ந்து, ‘உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக, உலகிலே அவர் தயவு பெற்றவர்க்கு அமைதி ஆகுக’  என்று பாடி மகிழ்ந்தனர். கிறிஸ்து பிறப்பிலே விண்ணகத் தந்தையாகிய இறைவனுக்குப் பெருமையும் அவர் அருள்பெற்ற மண்ணக மனிதர்களுக்கு அமைதியும் உண்டாகின்றன. இந்த  உண்மை அன்றோடு முடிந்த ஒன்றல்ல. இது ஒரு தொடர்கதை. தூய அருளப்பர் சொல்லுகின்றார், வாக்கு மனுவுருவானார், நம்மிடையே குடிகொண்டார். ஆம், ஆதியிலே வாக்காக  ‡ வார்த்தையாக இருந்த இறைவன்தான், காலம் கனிந்து வந்தபோது, மனித உருவெடுத்து, இவ்வுலகில் பிறந்து, நம்மோடு குடிகொண்டிருக்கின்றார். இறைவனின் அருளும் உண்மையும் இயேசுகிறிஸ்து வழியாக இவ்வுகிற்கு வந்தன, வந்துகொண்டே இருக்கின்றன.

இயேசுகிறிஸ்து நம்மோடு இருக்கின்றார், இருக்கின்ற கிறிஸ்துவை - அருளும் உண்மையுமாக இருக்கின்ற கிறிஸ்துவை ‡ உலகத்தின் ஒளியும் வாழ்க்கையின் வழியுமாக இருக்கின்ற கிறிஸ்துவை கிறிஸ்துமஸ் விழாவிலே, ஊனக் கண்ணால் முடியாவிட்டாலும் ஞானக்கண்ணால் பார்க்க வேண்டும். உருவில்லான் உருவாகி ஒப்பற்ற கன்னிமரியின் திருவயிற்றில் கருவாகி இவ்வுலகில் உதித்த  உண்மையைக் காணவேண்டும்.

கிறிஸ்துவுக்காக வீட்டை அலங்கரிப்பது, கிறிஸ்துவுக்காக குடில் அமைத்து, நட்சத்திரம் வைத்து, புத்தாடைகள் உடுத்தி மகிழ்வது போன்றவையயல்லாம் நாம் கிறிஸ்துவின்பால் கொண்ட அன்பை வெளிப்படுத்திக் காட்டுபைவதாம். அனால், குளிக்கப்போன ஒருவன், சேற்றைப் பூசிக்கொண்டு திரும்பிய கதையாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இருந்துவிடக்கூடாது.

கிறிஸ்துமஸ் விழாவில் செய்கின்ற ஒவ்வொரு செயலும் நம்முடைய கெளரவத்தை வெளிப்படுத்துவதற்காகவோ, நம்முடைய செல்வச் செருக்கையும் பெருமையையும் பிறர் அறியவேண்டும் என்பதற்காகவோ இருந்தால் அது வெற்று ஆடம்பரந்தான். அதற்கு மாறாக, இயேசு கிறிஸ்துவின்மீது ‡ இறைவன்மீது நாம் கொண்டுள்ள ஆழ்ந்த பற்று வெளிப்படுவதற்காக, நம்மோடு வாழ்கின்ற பிற மக்கள்மீது நாம் கொண்டுள்ள பிறர் சிநேகம் - மனித நேயம் தெற்றெனப் புலப்படுவதற்காக கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகள் பயன்படும் என்றால் அவை போற்றத்தக்கன.

கனிக்குச் சுவையும், மலருக்கு மணமும் இருந்தால்தான் அவற்றிற்குச் சிறப்புண்டு. அவ்வாறே கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் மனிதனின் ஆன்மீக வாழ்வைத் தொடவில்லை என்றால், அந்த நிகழ்ச்சிகளுக்கு சிறப்பில்லை.

கிறிஸ்துமஸ் விழாவில் நாம் ஒருவரையயாருவர் சந்தித்து, வாழ்த்துக் கூறுவதில் உண்மையான மனிதநேயம் வெளிப்படவேண்டும். அவ்வாறே, நாம் பிறர்க்குச் செய்யும் உதவிகளில் உண்மையான பிறர்நலத் தொண்டு ‡ பிறர்சிநேகம் வெளிப்பட வேண்டும். இல்லையயன்றால் அவையயல்லாம் வீணான ஆடம்பரங்களே.

எனவே, மக்கள் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவதில் ஆடம்பரங்கள் அர்த்தமுள்ளவையாக, இறையன்பையும் பிறரன்பையும் வெளிப்படுத்துவனவாக அமைந்து, அவையனைத்தும் மனிதனுடைய ஆன்மீக வாழ்வை வளர்ப்பனவாக, வளப்படுத்துவனவாக இருக்கவேண்டும். அவ்வாறு அமையும் கிறிஸ்துவின் விழா நிகழ்ச்சிகளே வரவேற்கத்தக்கனவென்று கூறி, அனைவர்க்கும் மீண்டும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்து தெரிவித்து முடிக்கின்றேன். நன்றி வணக்கம்.

Tuesday, 29 November 2016

இயற்கையை நேசிக்கும் கிறிஸ்மஸ்

இயற்கையை நேசிக்கும் கிறிஸ்மஸ்

- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

சோதிமணிப் பெட்டகமே சுடரொளியே - யூதருக்கு
ஆதி மகனாய்ப் பிறந்த அருந்தவமே தாலேலோ
மாணிக்கத் தொட்டிலுக்கு வாய்க்காத பெருமையயல்லாம்
ஆநிரைத் தொழுவினுக்கு ஆரளித்தார் எங்கோவே!

- இயேசு காவியம் எண் : 9

வையகம் மீட்க வந்திட்ட வானவன் இயேசு பிறந்ததுவோ மாட்டுத் தொழுவத்தில். பழைய கந்தல் துணிகளால் சுற்றப்பட்டு கிடத்தப்பட்ட இடமோ தீவனத்தொட்டியில். இவரின் பிறப்புச் செய்தி ஒலித்திட்ட இடம் வெட்டவெளி. வயல்வெளி. மீட்பர் பிறந்திட்ட மகிழ்ச்சியின் செய்தியினை வானவர் அறிவித்தார். ஆடுகளை சாமக்காவல் காத்திட்ட இடையருக்கு எல்லாமே இயற்கைச் சூழலில் நிகழ்ந்திட்ட வரலாற்றுப் பதிவுகள் (காண் லூக்கா 2 : 1 - 16)

கடும்குளிர் நிறைந்த நடுச்சாம வேளையில் ஆடு, மாடுகள் தின்னும் புல், வைக்கோல் நிறைந்த தீவனத் தொட்டியில் தவழ்கின்றது தெய்வக் குழந்தை. காட்டை, மேட்டைப் பண்படுத்தி சேற்றில் உழன்று வியர்வை சிந்தி உலகோருக்கு உணவளிப்பவர் உழவர். உலகின் முதன்மைத் தொழிலாகிய உழவுத் தொழிலாளருக்கு உற்ற தோழராய் இருப்பவை கால்நடைகள். இயற்கையைப் பேணி உழைப்போருள் ஒருவராக இயேசு பிறப்பெடுக்கின்றார்.

எல்லாம் நன்றாயிருந்தன :

நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியன பிரபஞ்சம் எனப்படுகின்றன. வாய்ச் சொல்லால் உலகினைப் படைக்கின்றார் இறைவன். தனது  உருவிலும், சாயலிலும் மண்ணால் மனிதரை  உருவாக்கி, அவர் நாசிகளில் உயிர்மூச்சை ஊதி உயிரளிக்கின்றார். தனியாயிருந்த  முதல் மனிதனாகிய ஆதாமுக்குத் துணையாகப் பெண்ணாகிய ஏவாளைத் தந்து ஏதேன் தோட்டத்தைப் பண்படுத்தவும், பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு குடியிருக்கச் செய்கின்றார் (காண் தொநூ 1 ‡ 2 பிரிவுகள்). இறுதியில் தாம் படைத்த அனைத்தும் நன்றாயிருக்கின்றது என்று இறைவன் மகிழ்கின்றார் (தொநூ 1 : 31).

இறைவா, உமக்கே புகழ் :

புத்துலகச் சிற்பியாம் இறைவனின் மாபெரும் கொடையாகத் திகழும் பிரான்சிஸ் திருத்தந்தை இயற்கை பற்றிய தனது கொள்கைகளை, ‘இறைவா, உமக்கே புகழ்’ என்னும் கொள்கைத் திரட்டு மூலம் மக்களோடு உறவாடுகின்றார். படைப்பெங்கும் நிறைந்திருப்பவர் இறைவன். படைப்பின் அழகினை ரசித்து அனுபவிக்கும்போது நாம் கடவுளைக் கண்ணாரக் காணுகின்றோம். எங்கணும் நீக்கமற நிறைந்திட்ட இறைவனின் உடனிருப்பினை உணர்ந்து வாழ அழைக்கப்படுகின்றோம்.

மேலும் சுற்றுச் சூழலைப் பேணி வாழ்கின்ற போது இயற்கை புதுப்பொலிவடைகின்றது. இயற்கையில் உறையும் தெய்வத்தின் சாயல் சீர்குலையாது வாழ்வதுவே உண்மையான விசுவாச வாழ்வு என்று திருத்தந்தை தெளிவுபடுத்துகின்றார்.

நிலத்தின் உரிமையாளர் :

‘நிலத்தை அறுதியாய் விற்றுவிட வேண்டாம், ஏனெனில் நிலம் என்னுடையது. நீங்களோ என்னைப் பொறுத்த மட்டில் அன்னியரும், இரவற்குடிகளுமே’ (லேவியர் 25 : 23). ஆக, ஆண்டவரே நிலத்தின் உரிமையாளர். கால்நடைகள் மனித உழைப்பின் தோழர்கள் மட்டுமல்ல, இயற்கையின் கொடைகள். எனவே நல்லார் தம் கால்நடைகளைப் பாதுகாப்பர் (நீ மொ 12 : 10) என்று விவிலியம் கூறுகிறது.

இயேசுவும் இயற்கையும் :

இயற்கையோடு ஒன்றித்து வாழும் ஏழையரின் ஏழ்மையில் பங்காளியாகப் பிறந்தார் இயேசு. இவரின் போதனைகள் அனைத்தும் இயற்கையில் நாம் காண்பவற்றையே உவமைகளாக்குகின்றார். எடுத்துக்காட்டாக விதைப்பவர் உவமை (மத் 13 : 4 - 9, 18 - 23), திராட்சைக் கொடி (யோவான் 15 : 1 - 17), காணாமற் போன ஆடு (லூக் 15 : 4 - 7), கடுகு விதை (மத். 13 : 31 - 33), வயலில் தோன்றிய களைகள் (மத். 13 : 36 - 43).

மேலும் வானத்துப் பறவைகள் (மத். 6 : 26). காட்டு மலர்ச் செடிகள் (மத். 6 ; 28). அத்திமரம் (மாற்கு 11 : 12 - 14, 20 - 24) போன்றவை. அது மட்டுமன்று திராட்சைக் கனிகளை முட்செடிகளிலும், அத்திப் பழங்களை முட்பூண்டுகளிலும் பறிக்க முடியாது. நல்ல மரம் நல்ல கனிகளைக் கொடுக்கும். நச்சு மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும் (மத். 7 : 16, 17). இவையனைத்தும் நமது அன்றாட வாழ்வின் எதார்த்தங்களை இயற்கையிலிருந்து கற்றுக் கொள்ள இறைவன் நமக்கு விடுக்கும் அழைப்பாகும்.

தாயாகும் இயற்கை :

நாம் நம்மை ஈன்றெடுத்த தாயை அதிகம் நேசிக்கின்றோம். காரணம் தாயின் கருவறைதான் உயிரை வரவேற்று, பாதுகாத்து, உணவளித்து, உருதந்து உலகிற்குக் கொண்டு வருகிறது. அதே போன்றே இயற்கை அன்னையும் நம்மை வரவேற்று, பாதுகாத்து, உணவளித்து, இறுதியாக நமது உடல்தனை அவளோடு இணைத்து விண்ணகப் பேரின்ப வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றாள்.

இயற்கை இறையியல் : 

படைப்பினில் இறைவனைக் கண்டதனால்தான் அசிசி நகர் புனித பிரான்சிஸ் சூரியனை தன் சகோதரன் என்றும் சந்திரனை தன் சகோதரி என்றும் அழைத்தார். முண்டாசு மீசைக்கவிஞர் பாரதி படைப்பனைத்தும் இறைவனின் சாயலே என்றுணர்ந்து கீழ்க்காணும் வரிகளில் பாடுகின்றார். 

காக்கைச் சிறகினிலே நந்தலாலா! நின்றன்
கரிய நிறந் தோன்றுதைய்யா நந்தலாலா ...

நாம் வாழும் இக்காலத்தின் சுற்றுச்சூழல் அறிஞர்களுள் முதன்மையாளராகத் திகழ்பவர் சால்லி மைக்பேக் (றீழியியிஷ்e னிஷ்உக்ஷூழிஆற்e) என்னும் பெண்மணி. னிலிdeயிவி லிக்ஷூ றூலிd: வீஜுeலியிலிஆதீ க்ஷூலிr ழிஐ சிஉலியிலிஆஷ்உழியி ஹிற்உயிeழிr புஆe என்னும் தனது கட்டுரையில் காணப்படும் கருத்துக்கள் நமது சிந்தனையைக் கூர்மைப்படுத்துவதாக உள்ளது.

1. இயற்கை இறைவனின் உடல்
2. இயற்கை நமது தாய்
3. இயற்கை நமது காதலி
4. இயற்கை நமது தோழி
5. இயற்கை இறைவனின் பிரசன்னம்

இருவகை இறப்புக்கள் :

அ. மனித வாழ்வின் அழிவு
ஆ. இயற்கையின் அழிவு
முந்தையது தனி மனிதரோடு முடிந்துவிடுவது.
பிந்தையது நாளைய சந்ததியினை அழிப்பது.

இயற்கையை அழிக்கும் ஏரோதுக்கள் : 

தனக்குப் போட்டியாக எவரும் உருவெடுக்கக் கூடாது என்பதற்காக ஏரோது மன்னன் பச்சிளங் குழந்தைகளைக் கொன்றதாக மத். 2 : 1 - 18 பதிவு செய்கின்றது.

இயற்கையை அழிக்கும்போது எழும் ஓசை மாசில்லாக் குழந்தைகளின் மரண ஓலங்களே. இயற்கையை அழிக்கும் எவரும் நவீன ஏரோதுவே. உலக  மயமாக்கல், நவீனத் தொழில் நுட்பம், வணிகம் மற்றும்  உற்பத்தி  என்னும்  பெயரில் நடைபெறும் செயல்பாடுகள் மூலம் ஒவ்வோராண்டும் ஆயிரக்கணக்கான தாவர மற்றும் விலங்கின உயிர்கள் மறைந்து வருகின்றன. 2050க்குள் நமது  சுயநலச்  செயல்களால்  ஆயிரக்கணக்கான தாவர மற்றும் விலங்கின  உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது (புகழ் அனைத்தும் உமதே , 32 - 42). இன்னும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் மூலம் மனித குலச் சீரழிவு நடைபெறுகிறது. இந்நிலை தொடர்ந்தால் உறவு நிலைகள் குறைந்து நாம் வாழும் பூமி ஒரு பெரிய சாவுக்குழியாக மாறும். எனவே இயற்கையைப் பாதுகாப்போம். சுற்றுச் சூழலை நேசிப்போம். வளமான வாழ்வைப் பெறுவோம். இதுவே இன்றைய சூழலில் உண்மையான கிறிஸ்மஸ் கொண்டாட்டம்.

Monday, 21 December 2015

இயேசுவின் குடில்களாவோம்!

ஆசிரியர் பேனா

இயேசுவின் குடில்களாவோம்!

இயேசுவின் பிறப்பு, அது பாவத்திற்கும், சாபத்திற்கும் மறுப்பானது. ஒவ்வொரு பிறப்பும் அற்புதமாகும். பல ஆண்டுகள் கழித்து பிள்ளை பெரும் பெண்களின் உள்ள மகிழ்ச்சிக்கு ஒப்புவமை சொல்லமுடியாது. தாய்மை மானிடத்தின் விளை நிலம். ஒவ்வொரு குழந்தையையும் அவ்வளவு கவனத்துடன் வளர்த்து உலகிற்கு தருகிறார். அவ்வளவு அவள் செய்யவில்லையயனில் அவளுக்கு உள்ளம் நிறைவதில்லை. பிள்ளை தரும் சங்கடங்கள் அவளுக்கு மகிழ்வின் விதைகள். ஒரு தாயை போலவே மக்களுக்கு புதிய வாழ்வை பெற்று தருவதில் இறைவன் மிக்க ஆர்வம் கொண்டார். எனவேதான் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். நம் மக்களிடத்தில் செய்வினை, மாந்தரீகம் ஆகியவற்றில் அவ்வளவு நம்பிக்கை. குடித்து குடித்து குடல் வெந்தவனின் துயரம், செய்வினையால் வந்தது என்றுகூட நம்புகிறார்கள். இந்த சாபமான அவநம்பிக்கையை மாற்ற, மாற்று மருந்து கொடுக்கிறது இயேசுவின் பிறப்பு. தம்மையே வெறுமையாக்கினார், அடிமையின் வடிவை ஏற்றார். மனிதருக்கு ஒப்பானார் (பிலி 2 : 7). இதுதான் இயேசுவின் பிறப்பு நமக்கு கொடுக்கும் மாற்று மருந்து. தியாகம், பணிவு ஆகியவைதான், சாபத்தின் மாற்று மருந்து. நம் தீய பழக்கமெல்லாம் தியாகம், பணிவு ஆகியவைகள் வழியாக அகலும். மறைக்கல்வி பணிக்குழுவிலிருந்து குடந்தை, மறைமாவட்ட கிறிஸ்துவ பள்ளிகளை வேதியர்களும், நானும் சந்தித்து வருகிறோம். அங்குதான் கிறிஸ்துவர் எவ்வளவு சிறுபான்மையினர் என்பதை உணரமுடிகிறது. 3000 பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் சுமார் 100 பிள்ளைகள்கூட கிறிஸ்துவ பிள்ளைகள் இல்லை. இயேசுவின் வார்த்தைகள் எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது. சிறுமந்தையாகிய நீங்கள் அஞ்சவேண்டாம்; உங்கள் தந்தை உங்களை தங்கள் ஆட்சிக்கு உட்படுத்த திருவுளம் கொண்டுள்ளார் (லூக் 12 : 32). எளியவர்களில் தான் இறைவன் செயல்படுகிறார். எளியவர்கள் வலிமை பெற முடியும், இயேசுவின் எளிமையில் ஒன்றிணைந்தால் குடந்தை மறைமாவட்ட பல பங்குகளில் தங்கள் ஆலயங்களை சீர்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதை காணமுடிகிறது. மிகவும் பாராட்டுக்குரியது. கோவில் கட்டப்பட வேண்டும் என்ற ஆர்வம் சமுதாயம் கட்டப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் இருப்பதில்லை. கொண்டாட்டத்தில் காட்டும் ஆர்வம் பண்புகளைக் காட்டுவதில் கொஞ்சமும் இருப்பதில்லை. தற்பெருமை, பெயர், புகழ் ஆகிய அழுகிய பண்புகளிலிருந்து விடுபட வேண்டும். எளிமை, இரக்கம் பகிர்வில் வளர வேண்டும். இதுதான் கிறிஸ்து பிறப்பு காட்டும் அழைப்பு.

மத்தியில் அமைந்திருக்கும் பா.ஜ.க.அரசு, பல விதங்களில் தங்களின் அடிப்படைவாத இந்துத்துவ கொள்கைகளை திணிக்கப்பார்க்கிறது. சென்ற ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழாவன்று அரசு விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்தது. தலித்து குழந்தைகள் ஹரியானாவில் எரிக்கப்பட்ட போது, ஏதோ தற்செயலாக நடந்த செயலாக வர்ணித்தார் பா.ஜ.க. அமைச்சர். மாட்டுக்கறி சாப்பிட்டவர்களை கொலை செய்திருக்கிறார்கள். 

சிறுபான்மையினரான கிறிஸ்தவர்கள் சற்று பயத்துடன் வாழ வேண்டிய சூழல் சூழ்ந்திருக்கிறது. தமிழ்நாட்டு ஆயர் பேரவையின் தலைமை ஆயர் பேரருள்திரு. பீட்டர் ரெமிஜியுஸ் ஆண்டகை பா.ஜ.க. அரசின் போக்கினைக் கண்டித்து  அறிக்கை விட்டிருக்கிறார். இயேசு தீய உலகில் பிறந்து, தீமைகளை அழிக்கும் வழியை காண்பித்தார். குடியின் கெடுதலுக்கு கிறிஸ்தவர்களும் விதிவிலக்கல்ல, துணிவும், தியாக சிந்தனையும் கொண்டு வாழுவோம். இயேசுவின் விழுமியங்கள் உலகில் பிறக்க, நாம் இயேசுவின் குடில்களாவோம்.

Thursday, 3 December 2015

கிறிஸ்து பிறப்பு விழாவைப் பற்றிய சில சில்லறை தகவல்கள்

கிறிஸ்து பிறப்பு விழாவைப் பற்றிய சில சில்லறை தகவல்கள்
- அமெரிக்காவில் மட்டும் ஓர் ஆண்டில் 300 கோடி கிறிஸ்மஸ் வாழ்த்து மடல்கள் அனுப்பப்படுகின்றன.

- கி.பி.350இல் திருத்தந்தை முதலாம் ஜீலியஸ், டிசம்பர் 25 ஐ கிறிஸ்து பிறப்பு விழா நாளாக அறிவித்தார்.
கின்னஸ் புத்தகம் : உயர்ந்த கிறிஸ்மஸ் மரம், வா´ங்டன் நகரில் 1950இல் நடப்பட்டது. உயரம் 221 அடி.

-கிறிஸ்மஸ் மரம் கீழ்க்காணும் கலர்களில் வர்ணமிடப்படுகிறது.
பச்சை, சிகப்பு, தங்கநிறம்
பச்சை 

வாழ்வினையும், சிகப்பு ‡ இயேசுவின் இரத்தத்தையும், தங்கம் ‡ செல்வம், விசுவாசத்தையும் குறிக்கும்.

- கிறிஸ்மஸ் விழாவன்று உலக தற்கொலைகள் நிகழ்வது மிக குறைவு.

-பொலிவியா நாட்டில் கிறிஸ்மஸ் நாளுக்கு முந்திய நாள் மாலை, சேவல்

திருப்பலி நடைபெறும். சிலர் சேவல் கோழியை இரவு திருப்பலிக்கு கொண்டு வருவர். சேவல் தான் இயேசுவின் பிறப்பை முதலில் அறிவித்தது என்பது அவர்களின் நம்பிக்கை.

-கிறிஸ்மஸ் தாத்தாவிற்கு ஆங்கிலத்தில் சாந்தாககிளாஸ் என்று பெயர். புனித நிக்கோலாசை தான் சந்தாகிளாஸ் என்கிறார்கள். இவர் ஸ்மிர்னா என்ற நகரத்தின் ஆயர் எனவும், பாரி என்ற ஊரில் இருந்தவர் என்பது வழக்கு.

‡ 1649 - 1660 வரை இங்கிலாந்து அரசர் கிராம்வெல், கிறிஸ்மஸ் ஆடம்பரமாக கொண்டாட கூடாது என்று தடை செய்தார்.


‡ கிறிஸ்மஸ் மரத்தை அலங்கரிக்கும் வழக்கத்தை மார்ட்டின் லூத்தர் (1483 ‡ 1543) ஆரம்பித்து வைத்தார் என்பது வழக்கு.

‡ ஆங்கிலத்தில் கிறிஸ்து பிறப்பு விழாவை “யீ-னிழிவி” என்று எழுதுவது 1500 லிருந்து துவங்கியிருக்கிறது. யீ என்பது கிரேக்க மொழியில் கிறிஸ்து என்ற பெயரின் முதல் எழுத்தாகும். னிழிவிவி என்பது திருப்பலியைக் குறிக்கும்.

‡ 1962இல் அமெரிக்காவில் முதன்முதலாக கிறிஸ்மஸ் தபால்தலை வெளியிடப்பட்டது.

‡ பழங்காலத்தில் ஜெர்மனி நாட்டில், டிசம்பர் 24 மாலை புனிதமான நாள் என்றும், இந்நேரத்தில் மிருகங்கள் பேசுவதை நாம் கேட்க முடியும் என்றும் கருதினார்கள்.

‡ 1843இல் தான் கிறிஸ்மஸ் வாழ்த்து கடிதங்கள் வடிவமைக்கப்பட்டன. வடிவமைத்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் கால்கட் கோர்ஸ்லி 

‡ அமெரிக்காவில் பொருள்களின் ஆண்டு மொத்த விற்பனையில் 1/6 பங்கு கிறிஸ்மஸ் விழா நாள்களில் நடைபெறுகின்றது.

Ads Inside Post