Pages - Menu

Showing posts with label Saints. Show all posts
Showing posts with label Saints. Show all posts

Saturday, 30 September 2017

அக்டோபர் மாத புனிதர்கள்

அக்டோபர் மாத புனிதர்கள்
 அருட்சகோதரி.G.  பவுலின்மேரி, FSAG

அக். 4  அசிசி நகர் புனித பிரான்சிஸ், (கி.பி. 1181 - 1226)

பிறப்பு    : இத்தாலி நாட்டில் அசிசி நகர் 1881.
இளமை : செல்வந்தர் குடும்பத்தல் பிறந்து வளர்ந்து பிறகு செல்வங்களைத் துறந்து துறவு பூண்டார்.
தனிவரம்: இயற்கையில் இறைவனைக் கண்டு போற்றினார். விலங்கினங்கள் தன் நண்பர்கள் என்று   அவைகளுடன் பழகினார். ஏழ்மையை தன் காதலி என்றார். மனிதரின் மாண்பினை உணர்த்த தொமுநோயாளைரை கட்டி அரவணைத்தார். தற்போதையை திருத்தந்தை இவரின் பெயரை தனதாக்கிக் கொண்டு இவரின் ஏழ்மையையும், எளிமையையும் பின்பற்றுகிறார். கிளாரம்மாளும் இவரின் வழியைப் பின்பற்றி தனி சபையை ஏற்படுத்தினார். இவரின் ஏழ்மை, எளிமை ஆயிரக்கணக்காக இளைஞர்களை ஈர்த்தது. அவர்கள் இவரின் சபையில் சேர்ந்தனர். மூன்றாம் சபை என்ற பிரிவிலும் மக்கள் சேர்ந்து இவரின் வழியைப் பின்பற்றினர்.
இறப்பு: தன் 44வது வயதில் இறந்தார். இயேசுவின் ஐந்து காயம் வரம் பெற்றவர்.

 அக். 7 - புனித ஜெபமாலை அன்னை

மக்களும், துறவிகளும் பக்தியோடு மாதாவின் ஜெபமாலையை செபிப்பத்ததன் பயனாக 1571 இல் கிறிஸ்தவர்கள் துருக்கியரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்கள். இதற்கு நன்றியாக வெற்றிகளின் அரசி என்னும் விழா கொண்டாடும்படி திருத்தந்தை 5 ஆம் பியுஸ் கி.பி. 1573 இல் ஏற்படுத்தினார். ஜெபமாலையை சொல்லும்போது ஆண்டவரது வாழ்வு, இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்பு இவற்றைப் பற்றி சிந்திக்கும் நாம் இயேசு, மாதாவை போல வாழ முயல வேண்டும். ஜெபமாலை நம்மை மரியாளுடன் ஒன்றிக்கிறது.

 அக். 9 புனித யோவான் லெயோனார்ட் 1541-1609

இவர் இத்தாலியில் தஸ்கனிப் பகுதியில் கி.பி. 1541இல் பிறந்தார். மருந்து செய்யும் கலையைக் கற்றார். ஆனால் அதைக் கைவிட்டுக் குருவாக விரும்பினார். போதிக்கும் திருப்பணி, சிறப்பாக சிறுவர்களுக்கு மறைக்கல்வி கற்றுக் கொடுத்தார். 1547இல் இறை அன்னையின் பெயரால் துறவற மறைப்பணியாளர்கள் சபை ஒன்றை நிறுவினார். இதனால் திருமறையை பரப்ப மறைப்பணியாளர்களின் குழு ஒன்றை நிறுவினார். திருத்தந்தையர்கள் பலரின் தீவிர முயற்சியால் இன்று அது வளர்ச்சி கண்டு, உரோமை நிறுவனத்திற்கு அடித்தளம் இட்டவர் என்று கருதப்பட்டார். திருச்சபையின் பற்பல சபைகள் மீண்டும் தங்கள் ஒழுங்கு முறைப்படி செயலாற்ற பரிவன்புடனும், முன்மதியுடனும் பாடுபட்டார். உரோமையில் 1609 இல் இறந்தார்.

 அக். 13 - புனித எட்வர்ட் (1004 - 1066)

இவர் இங்கிலாந்து நாட்டில் 40 வயதில் அரசராக முடி சூட்டப்பட்டார். செபித்து, பிறரன்பு செயல்கள் செய்து மக்களைச் சார்ந்து நீதி, விவேகத்துடன் ஆண்டு வந்தார். எனவே மக்கள் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ்ந்தார்கள். 23 ஆண்டுகளாக நாட்டை ஆண்டார். அநியாயமாக யாரும் தண்டிக்கப்பட்டதில்லை. மக்கள் இவரைத் தெய்வமாகக் கருதினார்கள். தம் நாட்டுக்கு வர இருந்த தீமைகளை இவர் முன்னறிவித்தார். பின்னர் அது நிறைவேறிற்று, திருச்சபையின் நாட்டின் தலைவர்களுக்கும் சாந்தகுணம். நீதி, விவேகம் ஆகிய தேவையான புண்ணியங்களை அருளும்படி மன்றாடுவோம்.

அக். 15 புனித அவிலா தெரசாள் (1515 - 1582)

இப்புனிதை ஸ்பெயினில் அவிலா நகரில் கி.பி. 1515 இல் பிறந்தார். கார்மேல் கன்னியர் சபையில் சேர்ந்து நிறைவுப் பாதையில் விரைந்து முன்னேறினார். தம் சொந்த சபையைச் சீர்த்திருத்த முற்பட்டுத் துன்பங்கள் பலவற்றைப் பொறுமையுடன் தாங்கிக் கொண்டார். இதில் புனித சிலுவை அருளப்பர் உதவியினால் ஆண்களின் கார்மேல் சபையையும் சீர்திருத்தினாள். இடைஞ்சல்கள் அனைத்தையும் வீரத்துணிவோடு மேற்கொண்டார். மிக ஆழ்ந்த போதனை நிறைந்த  நூல்களையும் எழுதினார். அந்நூல்கள் பயனுள்ளவை என தம் சொந்த அனுபவத்திலேயே கண்டறிந்தார். இவர் ஆல்பா நகரில் 1582 இல் இறைவனடி சேர்ந்தார்.

அக். 24 ‡ புனித அந்தோணி மரிய கிளாரட் 1807-1870

இவர் ஸ்பெயின் நாட்டில் சாலந்தில் கி.பி. 1807இல் பிறந்தார். திருநிலைப்பாடு அடைந்து பல ஆண்டுகள் கத்லோனியப் பகுதி எங்கும் சென்று மக்களுக்குப் போதித்தார். மறைபரப்பும் பணிக்கென்று சபை ஒன்று நிறுவினார். பின்பு கியுபா தீவின் ஆயரானார். மக்களின் மீட்புக்காக மிகத் திறம்பட உழைத்தார். இவர் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். செபமாலை பக்தியையும், மரியாவின் மாசற்ற இருதய பக்தியையும் இவர் பரப்பினார். ஸ்பெயினுக்கு திரும்பி வந்து தொடர்ந்து திருச்சபைக்காக பல துன்பங்களைப் பொறுமையுடன் ஏற்றார். பிரான்சிஸ் ஃபான்ப்ராய்ட் என்னுமிடத்தில் 1770இல் இறந்தார்.

அக் 26 புனித சிலுவை சின்னப்பர் (1694 - 1775)

இவர் சிலுவையில் அறையப்பட்ட இயேசு மீது, சிறு வயதிலிருந்தே மிகுந்த பக்தி கொண்டிருந்தார். வேதத்திற்காக உயிரை விட விரும்பிய இவர், துருக்கியரை எதிர்த்து போரிட இருந்த இராணுவத்தை விட்டு விலகி, ஒரு புதுசபையைத் தொடங்கினார். சபை உடையை ஒரு காட்சியில் கண்டார். சிலுவையில் உயிர்விட்ட இயேசு மீது பக்தியை எங்கும் பரப்புவதே சபையின் நோக்கம். 50 ஆண்டுகளாக இவர் கஷ்டங்களை பாராமல் இத்தாலிய நாடெங்கும் சென்று போதித்தார். கடவுள் இவருக்கு பல வரங்களை கொடுத்தார். எனினும் இவர் தம்மீது வெகு கண்டிப்பாக இருப்பார். ‘நான் பயனற்ற ஊழியன் நான் பாவி’ என்பார்.

அக் 28 புனித சீமோன், யூதா திருத்தூதர்கள்

சீமோனின் பெயர், திருத்தூதர் பட்டியலில் 11 ஆம் இடத்தில் உள்ளது. இவர் கானாவூரில் பிறந்தவர். தீவிரவாதி என்றழைக்கப்பட்டவர். கடவுளின் சட்டங்களை அனுசரிப்பதும், பாவத்தை எதிர்த்து போராடுவதிலும், கிறிஸ்துவிடம் மக்களை கொண்டு சேர்ப்பதிலும் இவர் ஆர்வத்துடன் உழைத்தார். பரிசுத்த ஆவியைப் பெற்றப்பின் பாரசீக நாட்டில் வேதம் போதித்து, வேதத்திற்காக உயிரைக் கொடுத்தார். புனித யூதாவுக்கு ‘ததேயுஸ்’ என்ற வேறு பெயரும் உண்டு. ‘ததேயுஸ்’ என்றால் ‘தைரியசாலி’ என்று பொருள். இவர் புனித சின்ன யாகப்பருடைய சகோதரர். இயேசுவின் உறவினர். பரிசுத்த ஆவியைப் பெற்றப்பின் யூதேயா, சமாரியா, இதுமேயா, சீரியா, மெசபத்தோமியா, லீபியா ஆகிய இடங்களில் வேதம் போதித்து ஆர்மேனியா நாட்டில் வேதத்துக்காக கொல்லப்பட்டார் என்பது பாரம்பரியம்.

Friday, 29 September 2017

செப்டம்பர் மாத புனிதர்கள் அருட்சகோதரி. G. பவுலின்மேரி,FSAG

செப்டம்பர் மாத புனிதர்கள்
 அருட்சகோதரி. G.  பவுலின்மேரி,FSAG

செப். 3 புனித பெரிய கிரகோரியார்

இவர்  உரோமையில் கி.பி 540 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது கல்வியறிவைக் கண்ட ஜஸ்டின் பேரரசர் உரோமை நகரின் பிரதம நீதிபதி ஆக்கினார். இவருடைய தந்தை இறந்தப்பின் சிசிலி நாட்டில் ஆறு துறவற மடங்களை அமைத்து, உரோமையில் உள்ள தமது வீட்டை ஏழாவது மடமாகக் கட்டி இவரும் அங்கு துறவியானார். 590ஆம் ஆண்டு செப் ‡ 3 ஆம் நாள் திருத்தந்தையாக உயர்த்தப்பெற்றார். ஏழை எளியவர்களுக்கு உதவினார். திருமறையை பரவச்செய்து அதனை உறுதிப்படுத்தினார். ஒழுக்க நெறி, இறையியல் சார்ந்த பல நூல்களை எழுதியுள்ளார். 604இல் இறைவனடி சேர்ந்தார்.

 செப்.  8 புனித கன்னிமரியாவின் பிறப்பு

கலிலேயா நாட்டில் உள்ள நாசரேத் என்னும் சிற்றூரில் சுவக்கின் ‡ அன்னம்மாள் என்ற வயது முதிர்ந்த தம்பதியருக்கு மரியா பிறந்தார். உலகிற்கு புதுவாழ்வு தந்தவர் இயேசு.அவரின் தாய் பிறந்த நாளின் விழா இது. மரியன்னைக்கு நாம் செய்யும் சிறந்த  அன்பளிப்பு அன்பு, தாழ்ச்சி, பொறுமை, கற்பு, கீழ்படிதல் முதலிய புண்ணியங்களை கடைப்பிடிப்பதே  7 ஆம் நூற்றாண்டு முதல் இவ்விழா சிறப்பிக்கப்படுகிறது. இன்று பெண் குழந்தைகள் தினம் என்றும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பெண் பிள்ளைகளை வரமாகப் பார்க்காமல், பாரமாக பார்க்கிறார்கள். இந்த தவறான வழக்கு அழிய வேண்டும்.

 செப்.  13 புனித கிறிசோஸ்தம் அருளப்பர் (344- 407)

அந்தியோக்கியாவில் கி.பி 349 இல் பிறந்தார். கல்வியை மிகச் சிறப்பாக கற்றுத் தேர்ந்தார். தவ வாழ்வை மேற்கொண்டு, மறைப்பணியாளர் பட்டம் பெற்றார். 397 இல் கொன்ஸ்தாந்தி நோபிளுக்கு ஆயராக தேர்ந்தெடுக்கப் பெற்று மிகச் சிறப்புடன் பணியாற்றினார். மறைப்பணியாளர்களின் பணிகளை அறநெறிப்படுத்த முயன்றார் ஆயர். மற்ற அனைவரின் வெறுப்புக்கு ஆளாகி செயலாற்ற முடியாதவரானார். இருமுறை நாட்டை விட்டுச் செல்ல வற்புறுத்தப்பட்டார். கிறிஸ்தவ வாழ்வை நெறிப்படுத்த நிறைய மறையுரையாற்றினார். புத்தகங்கள் எழுதினார். எனவே பொன் வாய் அருளப்பர் என அழைக்கப்பெற்றார். 407 இல் இப்புனிதர் இறந்தார்.

 செப். 15 புனித வியாகுல அன்னை 

              மரியாவின் ஏழு வியாகுலங்கள்:
 1. சிமியோன் இறைவாக்கு.  2.எகிப்துக்கு தப்பிச் சென்றது.   
3. காணாமற்போன இயேசுவை மூன்று  நாட்களாய் தேடியது.  4. கல்வாரிக்கு சிலுவை சுமந்து போன இயேசுவை வழியில் சந்தித்தது. 5. மரியாள் சிலுவையடியில் நின்றது. 6. இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கி  மடியில் வைத்திருந்தது. 7. இயேசுவை அடக்கம் செய்தது. இத்திருவிழா செப்டம்பர் 3 ஆம்  ஞாயிறு கொண்டாடப்பட வேண்டும் என உரோமை பட்டியலில் இடம் பெற்றது. ஆனால் 1913 ஆம் ஆண்டிலிருந்து செப்டம்பர் 15 ஆம் நாளுக்கென்று குறிக்கப்பட்டு அதனை சிறப்பித்து வருகிறோம்.

 செப்.  17 புனித இராபர்ட் பெல்லார்மின் (1542 - 1621)

  இவர் தஸ்கனி பகுதியில் மோன்தே புல்சியானோ நகரில் கி.பி 1542 இல்  பிறந்தார். உரோமையில் இயேசு சபையில் சேர்ந்து மறைப்பணியாளர் பட்டம் பெற்றார். கத்தோலிக்க மறையைப் பாதுகாக்கும்  வகையில்  எதிர்ப்பாளர்களுடன் தீவிரமாக விவாதங்கள் செய்து, உரோமைக் கல்லூரியில் இறையியல் கற்றுத்தந்தார். பிறகு, கர்தினாவாக உயர்வு பெற்று, காப்புவா மறைமாவட்ட ஆயரானார். அக்காலத்தில் எழுந்த ஐயப்பாடுகள் பலவற்றையும்  தெளிவுபடுத்த துணையாயிருந்தார். புனித கொன்சாகா ஞானப்பிரகாசியார் இவரின் ஆன்ம குரு. இவர் துறவிகளுக்கு பெரும் முன்மாதிரிகை. தூய்மை, தாழ்ச்சி, கீழ்படிதல் ஆகிய பண்புகளின் முன்னோடியாக விளங்கினார். ஆயரான இவர் தம் மந்தையை எல்லையற்ற அன்புடன் பராமரித்தார். 1621, செப்டம்பர் 17 இல் உரோமையில் இறந்தார். 

செப்.  21 புனித மத்தேயு

முதல் நற்செய்தி நூலை எழுதியவர். பன்னிரெண்டு திருத்தூதர்களில் ஒருவர். இவர் பாலஸ்தீனாவில் உள்ள கப்பர்நாகூமில் பிறந்தார். இயேசுவால் அழைக்கப்பெற்ற காலத்தில் சுங்கத் துறை பணியில் இருந்தார். எபிரேய மொழியில் நற்செய்தி நூலை எழுதினார் என்றும் இவர் கீழைநாடுகளில் திருமறையைப் போதித்தார் என்றும் பாரம்பரியம் கூறுகிறது. யூப்ரட்டீஸ் நதியின் அருகில் மரபு என்னுமிடத்தில் இவர் இறந்தார்.

 செப்.  27 புனித வின்சென்ட் தெ பால்

இவர் பிரான்சில் லாந்த் பகுதியில் பூயி என்னும் கிராமத்தில் 1581இல் பிறந்தார். பிரான்சிஸ்கன் குருக்களிடம் கல்வி பயின்று மறைப்பணியாளர் பட்டம் பெற்று பாரீஸ் நகரில் பணியாற்றினார். மறைப்பணியாளர்களைப் புனிதராக உருவாக்குவதற்கும், ஏழை எளியவர்களுக்கு உதவுவதற்கும் ஒரு மறைபோதகச் சபையையும் ஏற்படுத்தினார். இளம் பெண்களை கெடுக்கத் தேடிய இராணுவத்தினர் கையிலிருந்து காக்கும்படி, பலநூறு பெண்களுக்கு கன்னியர் மடங்களில் புகலிடம் கொடுத்தார். 1660 செப்டம்பர் 27 இல் பாரீஸ் நகரில் இவர் இறந்தார்.

 செப் . 30 புனித எரோணிமுஸ்

இவர் கி.பி 340 இல்  தால்மேசியாப் பகுதியில் ஸ்திரிதோ என்னுமிடத்தில் பிறந்தார். உரோமையில் இலக்கியக் கலைகள் கற்றுத் தேர்ந்தார். அங்கேயே திருமுழுக்குப் பெற்றார். தவ வாழ்வை மேற்கொண்டு கீழைநாடுகளுக்கு வந்து தமாசுஸ் என்னும் திருத்தந்தைக்குக் செயலராகப் பணியாற்றினார். அப்போது திருவிவிலிய நூல்களை இலத்தினீல் மொழியாக்கம் செய்யத் தொடங்கினார். துறவு வாழ்வை ஊக்குவித்து வளர்த்தார். பின்பு பெத்லகேமில் வாழ்ந்து கொண்டு திருச்சபையின் தேவைகளில் வியப்புக்குரிய முறையில் உதவிடலானார். பல நூல்கள், முக்கியமாக திருவிவிலிய விளக்கவுரை நூல்கள் எழுதினார். பெத்லகேமில் 420 இல் செப்டம்பர் 30 ஆம் நாள் இறந்தார்.

Monday, 17 July 2017

ஜுலை மாதப் புனிதர்கள்

ஜுலை மாதப் புனிதர்கள்
 அருட்சகோதரி.G. பவுலின்மேரி FSAG  

ஜுலை -3 புனித தோமா - திருத்தூதர்


தோமாவின் நம்பிக்கைக் குறைவு உயிர்த்த கிறிஸ்துவின் முன் மறைந்து போனது. ‘என் ஆண்டவரே, என் கடவுளே’ என்று திருச்சபையின் பாஸ்கா நம்பிக்கையை அறிக்கையிட்டார். நற்செய்திகளில் உள்ள சில குறிப்புகளைத் தவிர, இவரின் வாழ்க்கையைப் பற்றி எதுவும் உறுதியாகத் தெரியவில்லை. தோமா இந்திய மக்களுக்கு நற்செய்தியைக் கொண்டு வந்தார் என்ற ஆழ்ந்த பாரம்பரியமுண்டு. ஜுலை 3இல் திருத்தூதரின் சடலம் எடெசாவுக்குக் கொண்டு வரப்பட்டதாக நினைவுகூர்ந்து கி.பி.6 ஆம் நூற்றாண்டு முதல் இவரை நினைத்து விழா கொண்டாடி வருகின்றனர்.

ஜுலை - 6 புனித மரியகொரற்றி - கன்னியர், மறைசாட்சி

இப்புனிதை இத்தாலியில் அன்கோனா என்னுமிடத்தில் கி.பி 1890 இல் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தம் இளமைப்பருவத்தை வறுமையில் கழித்தார். வீட்டு வேலைகளில் அன்னைக்கு உதவியாயிருந்தார். இயல்பாகவே இறைபற்றுடையவர். இறைவேண்டலில் விடாமுயற்சி உடையவர். 1902இல் ஜுலை 6 ஆம் நாள் தன்னைக் கெடுக்க வந்தவனிடமிருந்து தம் கன்னிமையைக் காத்துக் கொண்டார். பாவம் செய்வதிலும் சாவது மேல் எனத் துணிந்ததால், கத்தியால் பலமுறை குத்தப்பட்டு இறந்தார்.

 ஜுலை - 11 புனித ஆசீர்வாதப்பர் (480-542)

இத்தாலி நாட்டில் உம்பிரியாப் பகுதியில் நோர்சியா என்னும் இடத்தில் கி.பி.480இல் பிறந்தார். உரோமையில் கல்வி கற்றார். உலகத்தை துறந்து சுபியாக்கோ என்னும் மலையில் இருந்த ஒரு குகையில் தவம் செய்வதும், ஜெபித்தும் வாழ்வு நடத்தினார். இதைக்கண்டு பலர் சீடராயினர். அவர்களுக்கு ஒரு மடத்தை துவங்கி சட்டங்களையும் இயற்றித் தந்தார். மோந்தே கஸினோ என்னுமிடத்தில் ஒரு மடம் துவங்கினார். அவர் எழுதிய சட்டங்கள் புகழ் பெற்றன. 24 திருத்தந்தையர்களையும், 5000 க்கும் மேற்பட்ட புனிதர்களையும் இவரது சபை திருச்சபைக்கு தந்திருக்கிறது. இவர் நற்கருணை உட்கொண்டு பீடத்தின் முன்னின்று கரங்களை உயர்த்தி ஜெபித்துக் கொண்டிருந்த வேளையில் உயிர் துறந்தார். 

 ஜுலை - 16 புனித கார்மேல் அன்னை

கார்மேல் மலையிலே புனித கன்னிமரியாளின் நினைவாக முதல் ஆலயம் அர்ப்பணிக்கப்பட்டது. 1251இல் கார்மேல் சபையின் பெரிய தலைவரான புனித சீமோன்ஸ்தோக் என்பவருக்கு இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் என்னுமிடத்தில் மரியன்னை காட்சி கொடுத்ததாக பாரம்பரியம். அக்காட்சியில் நம் விண்ணக அன்னை உத்தரியத்தைக் காண்பித்தாள். இதை அணிபவர்களுக்கு விண்ணகக் கொடைகளையும், தனது பாதுகாப்பையும் அளிப்பதாக அன்னை உறுதி கூறினாள். ஒரு குரு உத்தரியத்தை மக்களுக்கு அளிக்க வேண்டும். உத்தரியத்தை வெறுமனே அணிந்தால் போதாது. உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழ வேண்டும். இன்று கார்மேல் சபையினரின் மிக முக்கியமான விழாவாகும்.

ஜுலை - 22 புனித மதலேன் மரியாள்

          கலிலேயா நாட்டிலுள்ள மக்தலா என்னும் ஊரைச் சேர்ந்தவள். நற்செய்தி யில் காணும் பாவியான பெண்ணும், இயேசுவின் சிலுவையின் அடியில் நின்றவளும் இவளே. இயேசு தனக்குச் செய்த உதவிகளுக்கு நன்றியாக, சாகும்வரை அவருக்கு சேவை செய்து வந்தாள். உயிர்த்த இயேசுவைக் காணும் வரை அவள் ஓய்வெடுக்க வில்லை. “அவரை எங்கே வைத்திருக்கிறீர்கள்? நான் அவரைத் தூக்கிக் கொண்டு செல்வேன்” என்ற வார்த்தைகள் அவளின் அன்பைக் காட்டுகிறது. இவளை யூதர்கள் நாடு கடத்தினார்கள். இவள் சில சீடர்களுடன் பிரான்ஸ் நாட்டை அடைந்தாள் என்று பாரம்பரியம் கூறுகின்றது.

ஜுலை - 25 புனித யாகப்பர் -திருத்தூதர் 

         கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா என்ற ஊரில் செபதேயு, சலோமே இவர்களின் மகனாகப் பிறந்தார். யாகப்பரையும் அவரின் தம்பி யோவான் இருவரையும் இயேசு அழைத்தார். வலைகளையும், தந்தையையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின் சென்றார்கள். பேதுருவுக்கு புதுமையாக ஏராளமான மீன்கள் அகப்பட்ட போதும்,  திருமுழுக்கு யோவானின் சீடரான போதும், பேதுருவுவின் மாமியாரை குணப்படுத்திய போதும், இன்னும் பல நேரங்களில் இயேசுவின் அருகிலிருந்தார். “இடியின் மக்கள்” என்று ஆண்டவர் இவர்கள் இருவருக்கும் பெயரிட்டிருந்தார். பரிசுத்த ஆவியை பெற்றப்பின் ஸ்பெயின் நாட்டில் நற்செய்தி அறிவித்து எருசலேமுக்குத் திரும்பினார். 44இல் ஏரோது அகிரிப்பாவால் தலை வெட்டப்பட்டு இறந்தார் என்பது பராம்பரியம்.

 ஜுலை - 26 புனித சுவக்கின் அன்னம்மாள் - தூய மரியாளின் பெற்றோர்

               புனித அன்னம்மாள் பெத்லகேமில் பிறந்து, நாசரேத்தில் வாழ்ந்த சுவக்கின் என்பவரை மணந்தாள். இருவரும்  தாவீது அரசரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நெடுங்காலமாக குழந்தை இல்லாமல் பின்பு மரியாள் பிறந்தாள். 3 வயது ஆனதும் தேவலாயத்திற்குச் செல்லும்படி அவளை கடவுள் அழைத்தார். தியாக குணம் படைத்த பெற்றோர் குழந்தையை அர்ப்பணம் செய்தார்கள். தொடக்கத்திலிருந்தே அன்னம்மாளுக்கு ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. 4 ஆம் நூற்றாண்டில் புனித சுவக்கீன் நினைவாக எருசலேமில் ஓர் ஆலயம் அமைக்கப்பட்டது. சுவக்கீன் என்றால் ஆண்டவரின் தயாரிப்பு என்றும், அன்னா என்றால் இறைவனது அருள் என்றும் பொருள்படும்.

ஜுலை - 31 புனித லொயோலா இஞ்ஞாசியார் (மறைப்பணியாளர்)

    இப்புனிதர் ஸ்பெயினில் கன்டாபிரியாப் பகுதியில் லொயோலா என்னுமிடத்தில் கி.பி.1491 ஆம் ஆண்டில் பிறந்தார். அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இராணுவத் திலும் பணியாற்றி னார். பின்பு சண்டையில் கால் உடைந்து போன வேளையில் இறைவனிடம் மனந்திரும்பி, பாரீஸ் நகரில் இறையியல் படித்து முடித்தார். தம்முடன் சில தோழர்களையும் கூட்டிச் சேர்த்தார். பின்பு உரோமையில் இவர்களை ஒரு சபையினராக (இயேசு சபை) அமைத்தார். இப்புனிதர், நூல்கள் எழுதியும் சீடர்களைப் பயிற்றுவித்தும் மிக நற்பயனுள்ள திருத்தூதுப்பணி புரிந்தார். திருச்சபையின் சீரமைப்பில் இவரின் சீடர்கள் சிறப்பான பங்கெடுத்தார்கள். 1556 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் நாள் இப்புனிதர் உரோமையில் உயிர் நீத்தார்.

Wednesday, 3 May 2017

மே மாத புனிதர்கள்

மே மாத புனிதர்கள்
சகோ.   G. பவுலின் மேரி FSAJ 

மே 3 புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு திருத்தூதர்கள்

           பிலிப்பு பெத்சாயிதாவில் பிறந்தவர். முதலில் திருமுழுக்கு யோவானின்  சீடராயிருந்து, பின்பு கிறிஸ்துவைப் பின்பற்றியவர். யாக்கோபு, ஆண்டவரின் உறவினர் அல்பேயுவின் மகன். எருசலேம் திருச்சபையை தலைமையேற்று நடத்தியவர். புதிய ஏற்பாட்டில் உள்ள திருமுகம் ஒன்றும் இவரால்  எழுதப்பட்டுள்ளது. கடுந்தவ  வாழ்வை மேற்கொண்டார். யூதர் பலரை திருமறைக்குக் கொண்டு வந்தார். கி.பி. 62‡ ஆம் ஆண்டில் மறைசாட்சியாக இறந்தார்.

மே 8 புனித குயின்டின் ( 287)

        இவர் இயேசுவை ஆழ்ந்து அன்பு செய்தார். அதனால் அவரது நற்செய்தியை எங்கும் பரப்ப விரும்பினார். எனவே நாட்டையும், உலக மகிமைகளையும் விட்டு பிரான்ஸ் சென்று மறைப்பணி செய்தார். ஜெபம், தவமுயற்சிகள், உழைப்பு ஆகியவற்றால் பலரை மனந்திருப்பினார். அரசு அதிகாரி ஒருவர் இவரைப் பிடித்து சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தினான். இவரோ நம்பிக்கையில் உறுதியாக இருந்தார். மரணதண்டனை இவருக்குக் கொடுக்கப்பட்டது. இவர்  துணிவுடனும் பொறுமையுடனும் வேதனைகளை சகித்து உயிர்  துறந்தார்.

மே 12 புனிதர்கள் நெரேயு, அக்கிலேயு, பங்கிராஸ் மறைசாட்சிகள்

          நெரேயு, அக்கிலேயு இருவரும் சகோதர்கள். இருவரையும் மனந்திருப்பியவர் புனித இராயப்பர். இருவரும் இராணுவ வீரர்கள். டொமிற்றில்லா   என்ற பெண்மணி கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து தன் கன்னிமையை கடவுளுக்கு அர்ப்பணித்தாள். அவுரேலியன் என்பவன் மூவரும் கிறிஸ்தவர்கள் என்று அதிகாரியின் முன் குற்றம் சாட்டினான். 100 ‡ ஆம் ஆண்டில் இவர்கள் இயேசுவுக்காக கொல்லப் பட்டனர். பங்கிராஸ் பிரீஜியா நாட்டில் அரசக் குடும்பத்தில் பிறந்தவர். 14 ‡ ஆம் வயதில் இவர் உரோமைக்கு வந்தார். இவரை கைது செய்து அதிகாரியின் முன் கொண்டு சென்றார்கள், பொய்த் தேவதைகளுக்கு இவர் பலியிட மறுத்தமையால்  இவரைக் கொன்றார்கள்.

மே 18 புனித முதலாம் யோவான் திருத்தந்தை, மறைசாட்சி

          இவர் இத்தாலியில் தங்கனிப் பகுதியில் பிறந்தவர். கி.பி. 523 ‡ இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பெற்றார். தியதோர் அரசரின் தூதுவராகக் கொன்ஸ்தாந்திநோபிளுக்கு மாமன்னர் யுஸ்தினிடம் சென்றார். அங்கிருந்து திரும்பியவர், தூது சென்றதின் விளைவைக் கண்டு, கடும்சினம் கொண்ட அரசரால் கைது செய்யப்பட்டு, இராவன்னா சிறையில் தள்ளப்பட்டு, அங்கேயே 526 ‡இல்  மே ‡ 18 ஆம் நாள் இறந்தார்.

மே  25 பாசிநகர் புனித மகதலா மரியா  கன்னியர் (கி.பி. 1566-1607)

        இவர் பிளாரன்சிஸ் கி.பி. 1566‡ ல் பிறந்தார். இறைப்பற்றுடன் கல்வி கற்று, கார்மேல் சபைக் கன்னியராகி இறைவேண்டலும், ஒறுத்தலும் நிறைந்த மறைந்த வாழ்வு நடத்தினார். திருச்சபையின் மறுமலர்ச்சிக்காக தளராது இறைவேண்டல் செய்து வந்தார். தன் உடன் கன்னியரை உத்தம நன்னெறியில் வழிநடத்தினார். இறைவனிடமிருந்து பல்வேறு கொடைகள் பெற்றுச் சிறப்பெய்தினார். 1607 ‡ ல் மே ‡ 25 ஆம் நாள் பிளாரன்ஸ் நகரத்திலேயே இறந்தார்.  

 மே 27 புனித கான்டர்பரி அகுஸ்தீன் ஆயர் 

           இவர் உரோமையில் பிறந்தார். முதல் கிரகோரியார் என்னும் பாப்பு திருச்சபையை வழி நடத்தி  வந்தார். பிரிட்டனில் வாழ்ந்த  மக்கள் கிறிஸ்தவ மறையை பின்பற்ற விரும்புவதாக பாப்பு அறிந்து, உரோமையில் உள்ள புனித அந்திரேயாவின் துறவு மடத்திலிருந்து அகுஸ்தீன், திருத்தந்தையால் கி.பி. 597‡இல் நற்செய்தி அறிவிப்பதற்காக, இங்கிலாந்து அனுப்பப் பெற்றார். கென்ட் பகுதிக்குத் தலைநகரான கான்றர்பரிக்கு ஆயராக்கப்பட்டு பலரை மனந்திருப்பினார். இலண்டன், மார்க், போன்ற ஒரு சில திருச்சபைகளை இவர் தொடங்கி வைத்தார். ஏறத்தாழ 605‡இல்  உயிர் துறந்தார்.

மே 30 புனித ஜோன் ஆப் ஆர்க் (1412  1431)

       இப்புனிதரை பிரான்ஸ் நாட்டில் தொமரெமி என்னும் கிராமத்தில் 1412 ‡ இல் பிறந்தார். சிறுவயதிலேயே புனித மிக்கேல், புனித கத்தரீன், புனித மார்கரீத் இவர்களது குரல்களைக் கேட்டாள். 1428‡ இல் அந்த குரல்கள் உடனே போய், பிரான்ஸ் நாட்டு மன்னருக்கு உதவி செய். அவர் தம் நாட்டை திரும்பப் பெற துணை செய் என்று கட்டளையிட்டன. பல எதிர்ப்பின் இடையிலும் ஒர் இராணுவத்தின் உதவியால் 1429-இல் ஆர்லியன்ஸ் நகரைக் காப்பாற்றினாள். இன்னொரு நகரைக் காக்க செய்த போரின் போது இவளைப்பிடித்து  ஆங்கிலேயரிடம் கையளித்தார்கள். இவள் தனது சொற்களால் நடுவர்களை திகைக்கச் செய்தாலும், இவளைச் சாவுக்கு தீர்ப்பிட்டு 1431‡ல்  சுட்டு எரித்தனர்.

மே  31 தூய கன்னிமரியா எலிசபெத்தைச் சந்தித்தல்

இவ்விழாவில் 4 நிகழ்ச்சிகளைக் கொண்டாடு கிறோம்.

1. கன்னிமரியாள் தன் உறவினளான எலிசபெத்தை சந்திக்கச் சென்றது.
2. திருமுழுக்கு யேவான் கன்னிமரியாவின் வாழ்த்தினைக் கேட்டு, அன்னை வயிற்றில் துள்ளியது 
3. துய ஆவியால் ஏவப்பட்டு, எலிசபெத் பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே என பாராட்டியது. ஏறக்குறையை 3 மாதத்திற்குப் பின் மரியா வீடு திரும்பியது.
4. என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப்போற்றுகின்றது என்னும் உயரிய பாடலை மரியாள் இசைத்தது.

Thursday, 6 April 2017

ஏப்ரல் மாத புனிதர்கள்

ஏப்ரல் மாத புனிதர்கள்  

 அருட்சகோ.G.பவுலின்மேரி , FSAG
கும்பகோணம்
ஏப் . 5  புனித வின்சென்ட் பெரர் - மறைபணியாளர் (1350 - 1419)

இவர் ஸ்பெயினில் வலன்சியா நகரில் கி.பி 1350 இல் பிறந்தார். புனித தோமினிக் சபைத் துறவிகளுள் ஒருவராகி,  இறையியல் கற்றுக் கொடுத்தார். பல மாவட்டங்களுக்கும் சென்று , மறையுறைகள் நிகழ்த்தி , மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தினார். தவறான கொள்கைகளுக்கு எதிராக உறுதியுடன் வாதாடினார். இவர் கடுந்தவ முயற்சிகள் மேற்கொண்டார். ஒவ்வொரு நாளும் 4 மறையுறைகள் நிகழ்த்துவார்.சில நேரங்களில் 3 மணி நேரம் தொடர்ந்து உரையாற்றுவார். மறையுறைகளுக்கு நன்கு தயார் செய்வார். 1419 ‡ ல் ஏப்ரல் 5 - ஆம் நாள் பிரான்சு நாட்டில் வான் என்னும் இடத்தில் போதிக்கும் போது இறந்தார்.

ஏப் . 7  புனித ஜான் பாப்டிஸ்ட் ‡ மறைபணியாளர் (1651 - 1719)

  பிரான்சு நாட்டில் ரெய்ம்ஸ் நகரில் கி.பி. 1651 இல் பிறந்தார். மறைபணியாளராகிய பின், முக்கியமாக இளைஞர்களுக்குக்  கிறிஸ்தவ கல்வி புகட்டுவதற்கென்றும்,  ஏழைச் சிறுவர்களுக்காகப் பள்ளிகளை நிறுவதற்கென்றும்,  தம்மை முழுவதும் அர்ப்பணித்தார். தம்முடன் உழைத்த தோழர்களையயல்லாம் துறவற சபையினராக ஒன்றுசேர்த்தார். இச்சபையை ஏற்படுத்துவதற்காக பல்வேறு இன்னல்களைச் சந்தித்தார். இவரின் சபை உலகெங்கும் சபை பரவியது. நம் நாட்டிலும் இச்சபை பணியாற்றுகிறது.1719‡ல் பிரான்சில் ரூவான் என்ற இடத்தில் இறந்தார்.

 ஏப் . 11  புனித தனிஸ்லாஸ் ‡ ஆயர் , மறையாட்சி (1030 - 1079)

   போலாந்து நாட்டில் ஜெசப்பனாவில் கி.பி 1030 இல் பிறந்தார். பாரீஸ் நகர் சென்று படித்தார். பெற்றோர் இறந்ததும்  உடமைகளை விற்று  ஏழைகளுக்கு வழங்கிவிட்டு குருப்பட்டம் பெற்று ஊர் ஊராகச் சென்று நற்செய்தியை அறிவித்தார். 1071 இல் ஆயரானார். ஒரு நல்ல ஆயராய் இருந்து , திருச்சபையை வழிநடத்தினார். ஏழைகளுக்கு உதவினார். தம்மால் கண்டிக்கப்பட்ட போலஸ்ஸால் மன்னரால் 1079 இல் இவர் கொலை செய்யப்பட்டார்.

ஏப் . 13  புனித மார்ட்டின்  ‡ திருத்தந்தை, மறைசாட்சி (656)

இத்தாலியில் உம்பிரியா மாவட்டத்தில் உள்ள டோடி என்னுமிடத்தில் பிறந்தார். உரோமையின் மறைப்பணியாளர்களுள் ஒருவராகி , திருதந்தையாக கி.பி.649‡ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதே ஆண்டில் உரோமையில் ஒரு திருசங்கத்தைக் கூட்டி இயேசுவிடம் மனித இயல்பு இல்லை என்ற தவறான கொள்கையை கண்டித்தார். அதனால் இவரின் மன்னரால் 653 இல் சிறைப்படுத்தப்பட்டார். பின்பு கிரிமியாத் தீவில் உள்ள கெர்சோனுக்கு  நாடுகடத்தப்பட்டு அங்கு 656 இல் இறந்தார்.

ஏப் . 20 புனித ஒன்பதாம் சிங்கராயர் (1002 - 1059)

 இவர் தம் 25- ஆம் வயதில் ஆயராகி 20 ஆண்டுகள் மறைமாவட்டத்தை வழிநடத்தும் போது பல சவால்களை சந்தித்தார். தற்செயலாக திருயாத்திரையாக உரோமைக்குச் சென்ற போது, இவரை பாப்புவாக தேர்ந்தெடுத்தார்கள். திருச்சபையின் நலனுக்காக பல நாடுகளுக்குச் சென்று கிறிஸ்துவுக்கு எதிரான தவறான கருத்துகளை மறுத்து உண்மை கொள்கைகளை நிலைநாட்டினார். தகுதியற்ற குருக்களை பணியிலிருந்து நீக்கினார். பல நாடுகளின் ஆயர்களை ஒன்று சேர்த்து ஒரு திருசங்கத்தைக் கூட்டினார். அவரின் உரையை மக்கள் ஆர்வமுடன் கேட்டனர். எதிரிகள் இத்தாலி நாட்டின் மீது  படையயடுத்து வந்த வேளையில் இவரையும் கைது செய்து 9 மாதங்கள் சிறையில் வைத்தார்கள். விடுதலைப் பெற்றபின் பலர் இறந்திருப்பதை எண்ணி மிகவும் வருந்தினார். புனித இராயப்பர் பேராலயத்தின் நடுப்பீடத்தின் முன் உயிர் நீத்தார்.

ஏப் . 25  புனித மாற்கு - நற்செய்தியாளர்:

 இவர் பர்னபாவுக்கு நெருங்கிய உறவினர். திருத்தூதரான புனித பவுலின் முதல் மறை பயணத்தில் அவரோடு கூடச் சென்றவர். அவரின் மூன்றாம் பயணத்திலும் உரோமை வரையிலும் சென்றிருக்கின்றார். இவர் பேதுருவின் சீடர் என்ற பாரம்பரியம் உண்டு. எகிப்தில் உள்ள அலெக்ஸாந்திரியா நகர் திருச்சபையை இவர் நிறுவினார் என்ற பாரம்பரியமும் உண்டு. காப்டிக் தல திருச்சபையும் புனித மாற்குவின் விழாவை இன்று கொண்டாடுகின்றது.

ஏப். 29 புனித சியான்னா கேத்தரின் ‡ கன்னியர், மறைவல்லுனர் (1347-1380)

  இப்புனிதை இத்தாலியில் சியான்னா நகரில் கி.பி 1341 இல் பிறந்தார். சிறுவயதிலேயே பக்தி முயற்சிகளில் ஆர்வம் கொண்டிருந்தார். புனித தோமினிக்கின் 3‡ ஆம் சபையில் சேர்ந்து இறையன்பு, பிறரன்பு ஆகியவைகளில் சிறந்து விளங்கினார்.  
திருச்சபையின் ஒற்றுமைக்காக பெரிதும் உழைத்தார். திருத்தந்தையின் தலைமையை அனைவரும் ஏற்று வழிநடக்க வலியுறுத்தினார். இவரின் ஆன்மீகக் கருத்துகளை இவர் வாய்ப்பட சொல்லி , பிறகு அவை நூலாக அச்சிடப்பட்டன. இவரின் ஆழ்ந்த இறையியல் கருத்துகளுக்காக மறைவல்லுநர் என்ற பட்டம் இவருக்குத் தரப் பட்டது.1380 இல் உரோமையில் இவர் இறந்தார்.

ஏப்.30  புனித ஐந்தாம் பயஸ் ‡ திருத்தந்தை (1504-1572)

           இவர் இத்தாலியில் அலெக்சாந்திரியாவுக்கு அருகில் கி.பி. 1504இல் பிறந்தார். புனித தோமினிக்கன் சபையில் சேர்ந்து இறையியல் கற்றுக்கொடுத்தார். ஆயராகவும், கர்தினாலாகவும் 1566 இல் திருத்தந்தையாகவும் உயர்த்தப் பெற்றார். திரிதெந்தின் திருசங்க திருச்சபையில் தொடங்கிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தினார். மறைபரப்புப் பணியை ஊக்குவித்து, திருவழிபாட்டு முறைகளை சீர்படுத்தினார். 1572 இல் இப்புனிதர் இறந்தார். 

Monday, 27 February 2017

மார்ச் மாத புனிதர்கள்

மார்ச் மாத புனிதர்கள்

-அருட்சகோ.G. பவுலின்மேரி FSAG, கும்பகோணம்



மார்ச்-4 புனித கசிமீர்  (1458 - 1484)

இவர் போலந்து நாட்டு மன்னரின் மகன். 1458இல் பிறந்தார். கற்பு நெறியிலும், ஏழை எளியவருக்கு இரங்கி  அன்பு செய்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். திருமறையைப் பரப்புவதிலும் ஆர்வம் காட்டினார். நற்கருணை மீது பக்தியும், கன்னிமரியாள் மீது பற்றுதலும் கொண்டு வாழ்ந்தார். 1484இல் மார்ச் 4ஆம் நாள் குரோடுவானா என்ற இடத்தில் காசநோயால் நலிவுற்று இறந்தார். 1521இல் இவருக்கப் புனிதப் பட்டம் வழங்கப்பட்டு  இவரின் விழா உரோமைப் பட்டியலில் 1621ஆம் ஆண்டு இடம்பெற்றது.

மார்ச்-7 புனித பெர்பெத்துவா- புனித பெலிசித்தாள் : மறைசாVட்சியர்

பெர்ப்பெத்துவா உயர்குலத்தைச் சேர்ந்த பெண். பெலிசித்தாள் அவளுடைய பணிப்பெண். இருவரும் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவர்களாகி, பலவித கொடுமைகளுக்கு உள்ளானார்கள். பெலிசித்தாளுக்கு 8 மாதக் குழந்தை வயிற்றில் இருந்தது. கர்ப்பிணி பெண்களை கொல்லக்கூடாது என்ற சட்டமும் இருந்தது. கிறிஸ்தவர்கள் அவளுக்காக மன்றாடவும் குழந்தை சீக்கிரம் பிறந்துவிட்டது. இருவரும் கி.பி.203இல் தலைவெட்டி கொல்லப்பட்டனர்.  இவர்களின் இறப்பு பற்றிய வரலாறு எழுதப்பட்டுள்ளது.

மார்ச்-8 புனித இறையோவான்துறவி (1495 - 1550)

இவர் கி.பி.495இல் போர்த்துக்கல் நாட்டில் பிறந்தார். படைவீரராக பணிபுரிந்தபின், நோயாளிகளின் ஊழியத்திற்காக தம்மை முழுவதும் அர்ப்பணித்தார். தம்மோடு தன் நண்பர்களை சேர்த்துக்கொண்டு ,இறையோவான் ‘மருத்துவமனை சகோதரர்கள்’ என்ற ஒரு துறவறச் சபையையும், ஸ்பெயினில் ஒரு மருத்துமனையும் நிறுவினார். புனிதர், சிறப்பாக ஏழை எளியவர், நோயுற்றோருக்கான பிறரன்புப் பணியில் சிறந்து விளங்கினார். 1550இல் மார்ச் 8இல் கிரனாடா நகரிலேயே இவர் காலமானார்.

மார்ச்-14 புனித யுப்ராசியா (380 - 420)

இவள் தன் பெற்றோருக்கு ஒரே மகள். தாய், தன் மகளுடன் எகிப்து நாட்டுக்குச் சென்று கன்னியர் மடத்தினருகில் வாழ்ந்தார். ஏழு வயது ஆனதும் கன்னியர் மடத்தில் சேர ஆசைப்பட்டதால் தாயோ பெரும் தியாக சிந்தனையுடன் மகளை மடத்தின் தலைவியிடம் ஒப்படைத்தாள். தாய் தன் மகளிடம் ‘நீ அரச குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதை மறந்துவிட்டு, தாழ்ச்சியுடன் கடவுளுக்கு சேவை செய்து வா’ என்றாள். தாயிடம், பேரரசர், ஒரு அரச குடும்ப வாலிபருக்கு அவளை மணமுடித்துத் தருவதாக வாக்களித்திருந்தார். யுப்ராசியா தன் கைப்பட அரசருக்கு கடிதம் எழுதி மணமுடிக்க நான் விரும்பவில்லை. என் உடைமைகள் எல்லாம் ஏழைகள், அகதிகள், கோயில்களுக்கும், அடிமைகளுக்கும் கொடுத்துவிடுங்கள் என்று எழுதியிருந்தாள். பேரரசர் சாகுமுன் அவள் விருப்பங்களை நிறைவேற்றினார்.

மார்ச் 17 புனித பேட்ரிக் ஆயர் (385 - 461)

இவர் இங்கிலாந்தில் கி.பி.385இல் பிறந்தார். சிறுவயதில் அடிமையாகி அயர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அடிமை வேலையாளாக ஆடுகளை மேய்த்து வந்தார். பிறகு சற்று வசதி அடைந்தபின் மறைப்பணியாளரானார். பின்னர் அயர்லாந்துக்கு ஆயராகி அத்தீவின் மக்களிடையே மிகுந்த ஆர்வத்துடன் நற்செய்தியைப் போதித்தார். பலரை திருமறைக்கு மனந்திருப்பினார். அயர்லாந்து திருச்சபையை ஒழுங்குபடுத்தினார். டவுன்பாட்ரிக் என்ற நகரில் 461இல் இறந்தார். அயர்லாந்து நாட்டிற்கு இவர்தான் பாதுகாவலர்.

மார்ச்-19  புனித யோசேப்பு

தூய கன்னிமரியாவின் கணவர், இயேசுவின் வளர்ப்பு தந்தை இவர். தாவீது அரசரின் குலத்தைச் சேர்ந்தவர். இவர் நீதிமான் (தூய உள்ளம்) உள்ளவர். கற்பை நேசித்தவர். தாழ்ச்சி, பொறுமை, ஏழ்மை, துணிவு ஆகிய பண்புகளுடன் வாழ்வு நடத்தினார். திருக்குடும்பத்தின் தலைவர். இவர் நல்மரணத்தின் பாதுகாவலர். ‘நம்பிக்கையுடன் மக்கள் இவரது  உதவியைத் தேடினால் அதனை அடையாமல் போனதில்லை’ என புனித அவிலாதெரசம்மாள் கூறுகிறாள். இத்திருவிழா மார்ச் 19இல் சிறப்பிக்க வேண்டுமென்று 1479இல் உரோமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எப்போதும் இவ்விழா தவக்காலத்தில் வருவதால் நாளினை மாற்றி வைத்து திருவிழா கொண்டாட ஆயர் குழுக்களுக்கு அதிகாரம் உண்டு.


மார்ச்-24 புனித தோமினிக் சாவியோ (1842 - 1857)

இவரின் பெற்றோர் கல்வி அறிவையும், ஆன்மீக அறிவையும் ஊட்டி வளர்த்தார்கள். இவரின் பங்குத்தந்தை இவரை கடவுள்பக்தியிலும், அன்னைமரியாள் மீது அன்பிலும் வளர ஊக்குவித்தார். இவர் காலை 5 மணி முதல் எந்த நேரத்திலும், எந்த சூழலிலும் கோவிலில் இருந்து ஜெபிப்பார். மக்களுக்கு உதவி செய்வார். ‘கடவுளுக்கு சேவை செய்வது நமக்கு மகிழ்ச்சி தரும் என்றும், கடவுளை மக்கள் நேசிக்கச் செய்வது, வல்லமையுள்ள நற்செய்தி பணியாகும்’ என்ற கருத்துக்களை, புனிதர் ஜான்போஸ்கோவிடமிருந்து கற்றுக்கொண்டார். “தோமினிக்கை போன்று திருமுழுக்கில் பெற்றுக்கொண்ட தூய்மையை சாகும்வரை காப்பாற்ற வீரத்துடன் போர்புரிந்தால் அவன் உண்மையாகவே புனிதன்” என்று திருத்தந்தை 10ஆம் பத்திநாதர் கூறினார்.

மார்ச்-31 புனித பெஞ்சமின்  (-424)

பாரசீக நாட்டில் அப்தாஸ் என்னும் ஆயர் அக்கினி தேவதையின் ஆலயத்தை தீயிட்டு எரித்து விட்டார். இதைக் கண்ட அரசன், “மீண்டும் அவ்வாலயத்தை கட்டிக் கொடுக்க வேண்டும். இல்லையயனில் கிறிஸ்தவ கோயில்கள் அனைத்தையும் அழிப்பேன்” என்றான். ஆயர் மறுத்ததால் கிறிஸ்தவர்களின் கோவில்கள் அழிக்கப்பட்டு, ஆயர் கொல்லப்பட்டார். கொடிய கலாபனை தொடங்கியது. துன்புற்றவர்களில் ஒருவர் பெஞ்சமின் என்னும் திருத்தொண்டர். இவரையும் சிறையில் அடைத்தார்கள். ‘கிறிஸ்தவ சமயத்தைப் பற்றி பேசக்கூடாது’ என்று நிபந்தனையுடன் விடுதலை பெற்றார். ஆனால் கிறிஸ்துவைப் பற்றி பேசவது என் கடமை. நான் மெளனமாக இருக்க முடியாது என்று கூறினார். இதனால் இவரைப் பிடித்து வதைத்துக் கொன்றார்கள்.

Sunday, 30 October 2016

நவம்பர் மாதத்தின் புனிதர்கள்

நவம்பர்  மாதத்தின் புனிதர்கள்

- அருட்சகோ. G. பவுலின்மேரி FSAG, 
கும்பகோணம்
நவம்பர் 3   புனித மார்ட்டின் தெ போரஸ்

இவர் பெரு நாட்டில் லீமா நகரில் கி.பி. 1579‡இல் ஸ்பெயினிய தந்தைக்கும், கருப்பின தாய்க்கும் பிறந்தவர். இவர் பிறந்ததும், இவரின் தந்தை தன் மனைவியையும் மகனையும் கைவிட்டுவிட்டுச் சென்றார். எனவே மார்ட்டின் ஏழைகள், துன்புற்றோர் ஆகியோரின் துயர அனுபவங்களை தன்னில் தாங்கி அதனால் ஏழைகள்மீது எல்லையற்ற அன்பு கொண்டு வளர்ந்தார். சிறுவயதில் மருந்து தயாரிக்கும் கலைபயின்றார். பின்பு தோமினிக் சபைத் துணைச் சகோதரருள் ஒருவராகி, இம்மருத்துவக் கலையை ஏழை, எளியவர்களுக்கு பெரிதும் பயன்படுத்தினார். தவமும் தாழ்ச்சியும் நிறைந்த வாழ்வு நடத்தினார். நற்கருணைமீது மிகுந்த பக்திகொண்டு விளங்கினார். இவர் லீமா நகரில் 1639இல் இறந்தார்.

நவம்பர் 4        புனித சார்லஸ் பொரோமியோ

இவர் இத்தாலியில் லம்பார்டிப் பகுதியில் அரோனா என்னுமிடத்தில் கிபி 1538இல் பிறந்தார். உரோமைய சட்டமும், திருச்சபைச் சட்டமும் படித்து பட்டம் பெற்றார். தன் தாய்மாமனான திருத்தந்தை 4ஆம் பயஸால் கர்தினாலாகவும், மிலான் நகர ஆயராகவும் நியமிக்கப்பட்டார். மந்தைக்கு ஓர் உண்மையான ஆயராகி, தம் மறைமாவட்டம் முழுவதற்கும் பலமுறை பயணம் செய்தார். குருக்களைப் பன்முறை கூட்டி ஆய்வு மன்றங்கள் நடத்தினார். மக்களின் மேய்ப்புப் பணி சார்ந்த நடைமுறைகளை முழுமையாக ஊக்குவித்து வளர்த்து 1584‡இல் இறந்தார்.

நவம்பர்9 இலாத்தரைன்   பேராலய நேர்ந்தளிப்பு

மாமன்னர் கொன்ஸ்தாந்தீன் கட்டியயழுப்பிய இலாத்தரைன் பேராலய நேர்ந்தளிப்பு ஆண்டுவிழாவை கிபி 12ஆம் நூற்றாண்டிலிருந்து இந்நாளில் கொண்டாடி வந்ததாகப் பாரம்பரியம் உள்ளது. இவ்விழா முதலில் உரோமை நகர்த் திருவிழாவாக இருந்தது. பின்பு இந்தப் பேராலயம் உரோமை நகரிலும், அனைத்து உலகிலும் உள்ள ஆலயங்களுக்கெல்லாம் தாயும், தலைமையுமாகும் என அழைக்கப்பட்டது. உரோமை திருவழிபாட்டு முறையைச் சார்ந்த அனைவருக்கும் இவ்விழா பொதுவானது. புனித அந்தியோக்கிய இஞ்ஞாசியார் எழுதியுள்ளபடி பேதுருவின் அரியணை பரம அன்பு திருக்கூட்டமனைத்திற்கும் தலைமை தாங்குகிறது.

நவம்பர் 15   புனித பெரிய ஆல்பர்ட் : ஆயர் மறைவல்லுநர்

இவர் ஜெர்மனியில் தானியூப் நதிப் பகுதியில் உள்ள லாவிங்கனில் ஏறத்தாழ கிபி 1206இல் பிறந்தார். பதுவாவிலும், பாரீஸ் நகரிலும் கல்வி பயின்றார். தோமினிக்கன் சபையில் சேர்ந்து, பல்வேறு இடங்களில் கற்றுக்கொடுக்கும் பணியைச் சிறப்புற ஆற்றினார். ரேகன்ஸ்புர்க் நகர் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பெற்று, மக்களின் நடுவிலும், நகரங்களுக்கு இடையிலும் அமைதியை நிலைநாட்ட அயராது உழைத்தார்.அறிவு, வளர்ச்சிக்கான பல அரிய நூல்களைப் படைத்தார். இப்புனிதர் 1280இல் காலமானார்.

நவம்பர் 16             புனித மர்கரீத் (1045 - 1093) :

இவர் இங்கிலாந்து நாட்டின் அரச குடும்பத்தில் பிறந்தார். அப்பொழுது அவர் தந்தை அங்கு நாடு கடத்தப்பட்டவராய் வாழ்ந்து வந்தார். ஸ்காட்லாந்து அரசரான மால்கோம் என்பவரைத் திருமணம்   புரிந்து, எட்டு குழ்தைகளுக்கு அன்னையானார். மிகச் சிறந்த மாதிரியான தாயாகவும், அரசியாகவும் விளங்கினார். கோவில்கள், துறவற மடங்களையும் இவரே கட்டினார். “அகதிகளின் அன்னை”, “ஏழைகளுக்கு வாரி வழங்குபவர்” என்றும் அழைக்கப்பெற்றாள். இவருடைய கணவர் போரில் இறந்தார். இவர் எடின்பரோவில் 1093இல் இறந்தார்.

நவம்பர் 30           புனித அந்திரேயா - திருத்தூதர்

இவர் பாலஸ்தீனாவில் பெத்சாயிதா ஊரில் பிறந்தவர். முதலில் திருமுழுக்கு யோவானின் சீடராயிருந்தவர். பின்பு கிறிஸ்துவைப் பின்பற்றினார். கிறிஸ்துவிடம் தம் சகோதரர் பேதுருவையும் அழைத்து வந்தார். (யோவா 1 : 40 ‡ 42). பிலிப்புவோடு சேர்ந்து சில கிரேக்கரைக் கிறிஸ்துவிடம் கூட்டிவந்தார் (யோவா 12 : 21 ‡ 22). தவிர, மீனும் அப்பமும் வைத்திருந்த  சிறுவனை இயேசுவிடம் இப்புனிதர் சுட்டிக் காட்டினார். பெந்தகோஸ்து நிகழ்விற்குப் பின் இவர் உலகின் பல பகுதிகளிலும் நற்செய்தியைப் போதித்ததாகவும், இறுதியில் அக்கேயாப் பகுதியில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டதாகவும் பாரம்பரியம் கூறுகின்றது.

Friday, 30 September 2016

அக்டோபர் மாத புனிதர்கள்

அக்டோபர் மாத புனிதர்கள்

- அருள்சகோ.G.பவுலின் மேரி FASG
கும்பகோணம்

அக்டோபர் 4     அசிசி நகர்  புனித பிரான்சிஸ் (கி. பி 1181 - 1226)

பிறப்பு : இத்தாலி நாட்டில் அசிசி நகர், 1881

இளமை : செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பிறகு செல்வங்களைத் துறந்து துறவு பூண்டார்.

தனிவரம் : இயற்கையில் இறைவனைக் கண்டு போற்றினார். விலங்கினங்கள் தன் நண்பர்கள் என்று அவைகளுடன் பழகினார். ஏழ்மையை தன் காதலி என்றார். மனிதரின் மாண்பினை உணர்த்த தொழுநோயாளரை கட்டி அரவணைத்தார். தற்போதைய திருத்தந்தை, இவரின் பெயரை தனதாக்கிக் கொண்டு இவரின் ஏழ்மையையும், எளிமையையும் பின்பற்றுகிறார். கிளாராம்மாளும் இவரின் வழியைப் பின்பற்றி தனி சபையை ஏற்படுத்தினார். இவரின் ஏழ்மை எளிமை ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்த்தது. அவர்கள் இவரின் சபையில் சேர்ந்தனர். மூன்றாம் சபை என்ற பிரிவிலும் மக்கள் சேர்ந்து இவரின் வழியைப் பின்பற்றினர்.
இறப்பு : தன் 44வது வயதில் இறந்தார். இயேசுவின் ஐந்து காயம் வரம் பெற்றவர். 
 
அக்டோபர் 7    புனித ஜெபமாலை அன்னை

மக்களும், துறவிகளும் பக்தியோடு மாதாவின் ஜெபமாலையை செபித்ததன் பயனாக 1571இல் கிறிஸ்தவர்கள் துருக்கியரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்கள். இதற்கு நன்றியாக வெற்றிகளின் அரசி என்னும் விழா கொண்டாடும்படி திருத்தந்தை 5‡ஆம் பியுஸ் கி.பி.1573இல் ஏற்படுத்தினார். ஜெபமாலையை சொல்லும்போது ஆண்டவரது வாழ்வு, இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்பு இவற்றைப்பற்றி சிந்திக்கிறோம். ஜெபமாலையின் தேவ இரகசியங்களைப்பற்றி சிந்திக்கும் நாம் இயேசு, மாதாவைப் போல வாழ முயலவேண்டும். ஜெபமாலையானது நம்மை மரியாளுடன் ஒன்றிக்கிறது.

அக்டோபர் : 9  புனித யோவான் லெயோனார்ட் (1541 - 1609)

இவர் இத்தாலியில் தஸ்கனிப் பகுதியில் கி.பி.1541இல் பிறந்தார். மருந்து செய்யும் கலையைத் கற்றார். ஆனால், அதைக் கைவிட்டுக் குருவாக விரும்பினார். போதிக்கும் திருப்பணி, சிறப்பாக சிறுவர்களுக்கு மறைக்கல்வி கற்றுக்கொடுத்தார். 1547இல் இறை அன்னையின் பெயரால், துறவற மறைபபணியாளர்கள் சபை ஒன்றை நிறுவினார். இதனால் துன்பங்கள் பல அடைந்தார். பின்பு திருமறையை பரப்ப மறைப்பணியாளர்களின் குழு ஒன்றை ஏற்படுத்தினார். திருத்தந்தையர் பலரின் தீவிர முயற்சியால் இன்று அது வளர்ச்சி கண்டு, உரோமை நிறுவனத்திற்கு அடித்தளம் இட்டவர் என்று கருதப்பட்டார். திருச்சபையின் பற்பல சபைகள் மீண்டும் தங்கள் ஒழுங்கு முறைப்படி செயலாற்ற பரிவன்புடனும், முன்மதியுடனும் பாடுபட்டார். உரோமையில் 1609இல் இறந்தார்.

அக்டோபர் 13  புனித எட்வர்ட் (1004 - 1066)

இவர் இங்கிலாந்து நாட்டில் 40 வயதில் அரசராக முடிசூட்டப்பட்டார். செபித்து, பிறரன்பு செயல்கள் செய்து மக்களைச் சார்ந்து, நீதி, விவேகத்துடன் ஆண்டு வந்தார். எனவே மக்கள் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ்ந்தார்கள். 23 ஆண்டுகளாக நாட்டை ஆண்டார். அநியாயமாக யாரும் தண்டிக்கப்பட்டதில்லை. மக்கள் இவரைத் தெய்வமாகக் கருதினார்கள். தம் நாட்டுக்கு வர இருந்த தீமைகளை இவர் முன்னறிவித்தார். பின்னர் நிறைவேறிற்று. திருச்சபையின், நாட்டின் தலைவர்களுக்கும் சாந்தகுணம். நீதி, விவேகம் ஆகிய தேவையான புண்ணியங்களை அருளும்படி மன்றாடுவோம்.

அக்டோபர் 15               புனித அவிலா தெரசாள் (1515 - 1582)

இப்புனிதை ஸ்பெயினில்  அவிலா நகரில் கி.பி.1515இல் பிறந்தார். கர்மேல் கன்னியர் சபையில் சேர்ந்து நிறைவுப் பாதையில் விரைந்து முன்னேறினார். தம் சொந்த சபையைச் சீர்திருத்த முற்பட்டுத் துன்பங்கள் பலவற்றைப் பொறுமையுடன் தாங்கிக் கொண்டார். இதில் புனித சிலுவை அருளப்பர் உதவியினால் ஆண்களின் கார்மேல் சபையையும் சீர்திருத்தினாள். இடைஞ்சல்கள் அனைத்தையும் வீரத்துணிவோடு மேற்கொண்டார். மிக ஆழ்ந்த போதனை நிறைந்த நூல்களையும் எழுதினார். அந்நூல்கள் பயனுள்ளவை எனத் தம் சொந்த அனுபவத்திலேயே கண்டறிந்தார். இவர் ஆல்பா நகரில் 1582இல் இறைவனடி சேர்ந்தார்.

அக்டோபர் 18 புனித லூக்கா நற்செய்தியாளர்

இவர் சிரியாவில் உள்ள அந்தியோக்கியா நகரில் யூதரல்லாதார் குடும்பத்தில் பிறந்தார். திருமறையை முதலில் தழுவியவர்களில் இவரும் ஒருவர். இவர் எழுதிய நற்செய்தியில், எல்லையற்ற இரக்கத்தைக் காட்டும். ஊதாரிப் பிள்ளையின் உவமையை நமக்குத் தருகிறார். இவரின் நற்செய்தியில், சமத்துவம், பெண்களின் சிறப்பு, மன்னிப்பு, ஏழ்மை போன்ற சிறந்த கருத்துக்களைக் காணலாம். திருதூதர் பணிகள் நூலையும் இவர்தான் எழுதினார் என்பது அறிஞர்களின் கருத்து. இவர் ஒரு சிறந்த ஓவியர் என்றும் நம்பப்படுகிறது.

அக்டோபர் 24   புனித அந்தோணி மரிய கிளாரட் (1807 - 1870)

இவர் ஸ்பெயின் நாட்டில் சாலந்தில் கி.பி.1807இல் பிறந்தார். திருநிலைப்பாடு அடைந்து, பல ஆண்டுகள் கத்லோனியப் பகுதி எங்கும் சென்று மக்களுக்குப் போதித்தார். மறைபரப்பும் பணிக்கென்று சபை ஒன்று நிறுவினார். பின்பு கியுபா தீவின் ஆயரானார். மக்களின் மீட்புக்காக மிகத் திறம்பட உழைத்தார். இவர் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். செபமாலை பக்தியையும், மரியாயின் மாசற்ற இருதய பக்தியையும் இவர் பரப்பினார். ஸ்பெயினுக்குத் திரும்பி வந்து, தொடர்ந்து திருச்சபைக்காகப் பல துன்பங்களைப் பொறுமையுடன் ஏற்றார். பிரான்சிஸ் ஃபான்ப்ராய்ட் என்னுமிடத்தில் 1770இல் இறந்தார்.

அக்டோபர் 26           புனித சிலுவை சின்னப்பர் (1694 - 1775)

இவர் சிலுவையில் அறையப்பட்ட இயேசு மீது சிறு வயதிலிருந்தே மிகுந்த பக்தி கொண்டிருந்தார். வேதத்திற்காக உயிரைவிட விரும்பிய இவர் துருக்கியரை எதிர்த்து போரிட இருந்த இராணுவத்தை விட்டுவிலகி, ஒரு புதுசபையைத் தொடங்கினார். சபை உடையை ஒரு காட்சியில் கண்டார். சிலுவையில் உயிர்விட்ட இயேசு மீது பக்தியை எங்கும் பரப்புவதே சபையின் நோக்கம். 50 ஆண்டுகளாக, இவர் கஷ்டங்களைப் பாராமல் இத்தாலிய நாடெங்கும் சென்று போதித்தார். கடவுள் இவருக்கு பல வரங்களைக் கொடுத்தார். எனினும் இவர் தம்மீது வெகு கண்டிப்பாக இருப்பார். ‘நான் பயனற்ற ஊழியன் நான் பாவி’ என்பார்.

அக்டோபர் 28 புனித சீமோன், யூதா ‡ திருத்தூதர்கள்

திருத்தூதர் பட்டியலில் 11ஆம் இடத்தில் உள்ளது சீமோனின் பெயர். இவர் கானாவூரில் பிறந்தவர். தீவிரவாதி என்றழைக்கப்பட்டவர். கடவுளின் சட்டங்களை அனுசரிப்பதிலும், பாவத்தை எதிர்த்துப் போராடுவதிலும், கிறிஸ்துவிடம் மக்களைக் கொண்டு சேர்ப்பதிலும் இவர் ஆர்வத்துடன் உழைத்தார். பரிசுத்த ஆவியைப் பெற்றப்பின் பாரசீக நாட்டில் வேதம் போதித்து, வேதத்திற்காக உயிரைக் கொடுத்தார். புனித யூதாவுக்கு ‘ததேயுஸ்’ என்ற வேறு பெயரும் உண்டு. ‘ததேயுஸ்’ என்றால் ‘தைரியசாலி’ என்று பொருள். இவர் புனித சின்ன யாகப்பருடைய சகோதரர். இயேசுவின் உறவினர். பரிசுத்த ஆவியைப் பெற்றப்பின் யூதேயா, சமாரியா, இதுமேயா, சிரியா, மெசபத்தோமியா, லீபியா ஆகிய இடங்களில் வேதம் போதித்து, ஆர்மேனியா நாட்டில் வேதத்துக்காக கொல்லப்பட்டார் என்பது பாரம்பரியம்.

Saturday, 3 September 2016

இம்மாதத்தின் புனிதர்கள், செப்டம்பர்

இம்மாதத்தின் புனிதர்கள்
- அருட்சகோதரி G. பவுலின் மேரி,FSAJ,  
கும்பகோணம்.
செப்டம்பர்-  3                    புனித பெரிய கிரகோரியார்

இவர் உரோமையில் கி.பி.540ஆம் ஆண்டு பிறந்தார். இவரது கல்வியறிவைக் கண்ட ஜஸ்டின் பேரரசர் உரோமை நகரின் பிரதம நீதிபதி ஆக்கினார். இவருடைய தந்தை இறந்தபின் சிசிலி நாட்டில் ஆறு துறவற மடங்களை அமைத்து, உரோமையில் உள்ள தமது வீட்டை ஏழாவது மடமாகக் கட்டி, இவரும் அங்கு துறவியானார். 590ஆம் ஆண்டு செப்டம்பர்‡3 ஆம் நாள் திருத்தந்தையாக உயர்த்தப்பெற்றார். ஏழை எளியவர்களுக்கு உதவினார். திருமறையை பரவச்செய்து அதனை உறுதிப்படுத்தினார். ஒழுக்க நெறி, இறையியல் சார்ந்த பல நூல்களை எழுதியுள்ளார். 604‡இல் இறைவனடி சேர்ந்தார்.


செப்டம்பர் - 8               புனித கன்னிமரியின் பிறப்பு

கலிலேயா நாட்டில் உள்ள நாசரேத் என்னும் சிற்றூரில் சுவக்கின் ‡ அன்னம்மாள் என்ற வயது முதிர்ந்த தம்பதியருக்கு மரியாள் பிறந்தார். உலகத்தை மீட்டு இரட்சிக்கும்படி குழந்தையாகப் பிறந்த இயேசுவின் தாய் இவளே. மரியன்னைக்கு நாம் செய்யும் சிறந்த அன்பளிப்பு அன்பு, தாழ்ச்சி, பொறுமை, கற்பு, கீழ்ப்படிதல் முதலிய புண்ணியங்களை கடைபிடிப்பதே. 7‡ஆம் நூற்றாண்டு முதல் இவ்விழா சிறப்பிக்கப்படுகிறது. இன்று பெண் குழந்தைகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பெண் பிள்ளைகளை வரமாகப் பார்க்காமல், பாரமாக பார்க்கிறார்கள். இந்த தவறான வழக்கு அழியவேண்டும்.

செப்டம்பர் - 13                  புனித கிறிசோஸ்தம் அருளப்பர்        (344 - 407)

அந்தியோக்கியாவில் கி.பி. 349 இல் பிறந்தார். கல்வியை மிகச்சிறப்பாக கற்றுத் தேர்ந்தார். தவ வாழ்வை மேற்கொண்டு, மறைப்பணியாளர் பட்டம் பெற்றார். 397‡இல் கொன்ஸ்தாந்தி நோபிளுக்கு ஆயராக தேர்ந்தெடுக்கப் பெற்று மிகச் சிறப்புடன் பணியாற்றினார். மறைப்பணியாளர்களின் பணிகளை அறநெறிப்படுத்த முயன்றார் அரசர். மற்ற அனைவரின் வெறுப்புக்கு ஆளாகி, செயலாற்ற முடியாதவரானார். இருமுறை நாட்டைவிட்டுச் செல்ல வற்புறுத்தப்பட்டார். கிறிஸ்தவ வாழ்வை நெறிப்படுத்த நிறைய மறையுரையாற்றினார், புத்தகங்கள் எழுதினார். எனவே ‘பொன்வாயர்’ என்று அழைக்கப்பெற்றார். 407‡இல் இப்புனிதர் இறந்தார்.

செப்டம்பர் - 14      திருச்சிலுவை மகிமை

640 இல் பாரசீக (தற்போதைய ஈரான்) மன்னன், சிரியா, பாலஸ்தீன் நாட்டின் மீது படையயடுத்தான். வெற்றி பெற்ற அவன் விலையுயர்ந்த பொருட்களோடு திருச்சிலுவையையும் எடுத்துச் சென்றான். இதனால் கான்ஸ்தாந்திநோபிள் பேரரசரான எராக்ளியுஸ் பெரிய இராணுவத்துடன் பாரசீகத்தின் மீது படையயடுத்தார். 629‡இல் அரசர் கான்ஸ்தாந்திநோபிள் அரசர் வெற்றி பெற்று பக்தியுடன் திருச்சிலுவையை தோளில் சுமந்து எருசலேமுக்கு சென்றார். விலையுயர்ந்த அரச ஆடைகள், கற்கள் பதித்த ஆபரணங்கள் அணிந்திருந்தார். அப்போது கல்வாரி மலையில் நுழைய முயன்று முடியவில்லை. எருசலேம் ஆயரான சக்கரியாஸ் “பேரரசே இயேசு சிலுவை சுமந்து செல்லும்போது இவ்வித ஆடை, ஆபரணங்களை அணிந்திருக்கவில்லையே” என்றார். உடனே அரசர் தவ உடைகளை அணிந்துக் கொண்டு கல்வாரியில் ஏறி திருச்சிலுவையை கல்லறையில் வைத்தார். இவ்விழாவை இன்று நாமும் சிறப்பிக்கிறோம்.

செப்டம்பர் - 15           புனித வியாகுல அன்னை

மரியாளின் ஏழு வியாகுலங்கள் : 1. சிமியோனின் இறைவாக்கு, 2. எகிப்துக்கு ஓடிப்போனது, 3. காணாமற் போன இயேசுவை மூன்று நாட்களாய் தேடியது, 4. கல்வாரிக்கு சிலுவை சுமந்து போன இயேசுவை வழியில் சந்தித்தது, 5. மரியாள் சிலுவையடியில் நின்றது, 6. இயேசுவை சிலுவையிலிருந்து இறக்கி மடியில் வைத்திருந்தது, 7. இயேசுவை அடக்கம் செய்தது

இத்திருவிழா 1814, செப்டம்பர் 3ஆம் ஞாயிறு கொண்டாடப்பட வேண்டும் என உரோமைப் பட்டியலில் இடம் பெற்றது. ஆனால், 1913ஆம் ஆண்டிலிருந்து செப்டம்பர் 15ஆம் நாளுக்கென்று குறிக்கப்பட்டு அதனை சிறப்பித்து வருகிறோம்.

செப்டம்பர் - 17                        புனித இராபர்ட் பெல்லார்மின்  (1542 - 1621)

இவர் தஸ்கனி பகுதியில் மோன்தே புல்சியானோ நகரில் கி.பி.1542‡இல் பிறந்தார். உரோமையில் இயேசு சபையில் சேர்ந்து மறைப்பணியாளர் பட்டம் பெற்றார். கத்தோலிக்க மறையைப் பாதுகாக்கும் வகையில் எதிர்ப்பாளர்களுடன் விவாதங்கள் நடத்தினார். உரோமைக் கல்லூரியில் இறையியல் கற்றுத்தந்து, கர்தினாலாக உயர்வு பெற்று, காப்புவா மறைமாவட்ட ஆயராக நியமனம் பெற்றார். அக்காலத்தில் எழுந்த ஐயப்பாடுகள் பலவற்றையும் தெளிவுபடுத்த துணையாயிருந்தார். புனித கொன்சாகா ஞானப்பிரகாசியார் இவரின் ஆன்ம குரு. இவர் துறவிகளுக்கு பெரும் முன்மாதிரிகை. தூய்மை, தாழ்ச்சி, கீழ்ப்படிதல் ஆகிய பண்புகளின் முன்னோடியாக விளங்கினார். ஆயரான இவர் தம் மந்தையை எல்லையற்ற அன்புடன் பராமரித்தார். 1621, செப்டம்பர் 17‡இல் உரோமையில் இறந்தார்.

செப்டம்பர் - 21                     புனித மத்தேயு

முதல் நற்செய்தி நூலை எழுதிய பன்னிரெண்டு திருத்தூதர்களில் ஒருவர். இவர் பாலஸ்தீனாவில் உள்ள கப்பர்நாகூமில் பிறந்தார். இயேசுவால் அழைக்கப்பெற்ற காலத்தில் சுங்கத் துறை பணியில் இருந்தார். எபிரேய மொழியில் நற்செய்தி நூலை எழுதினார் என்றும் இவர் கீழைநாடுகளில் திருமறையைப் போதித்தார் என்றும் பாரம்பரியம் கூறுகிறது. புனித மத்தேயு கல்லால் எறியப்பட்டு இறந்ததாகவும் பாரம்பரியம் கூறுகிறது. யூப்ரட்டிஸ் நதியின் அருகில் மரபுக் என்னுமிடத்தில் இவர் இறந்தார்.

செப்டம்பர் - 27                     புனித வின்சென்ட் தெ பால் (1581 - 1660)

இவர் பிரான்சில் லாந்த் பகுதியில் பூயி என்னும் கிராமத்தில் கி.பி. 1581இல் பிறந்தார். பிரான்சிஸ்கன் குருக்களிடம் கல்வி பயின்று மறைப்பணியாளர் பட்டம் பெற்று பாரீஸ் நகரில் பணியாற்றினார். மறைப்பணியாளர்களைப் புனிதராக உருவாக்குவதற்கும், ஏழை எளியவர்களுக்கு உதவுவதற்கும் ஒரு மறைபோதகச் சபையையும், பிறரன்புச் செவிலியர் என்னும் மகளிர் துறவற சபையையும் ஏற்படுத்தினார். இளம் பெண்களை கெடுக்கத் தேடிய இராணுவத்தினர் கையிலிருந்து காக்கும்படி பல நூறு பெண்களுக்கு கன்னியர் மடங்களில் உறைவிடம் பெற்றுக் கொடுத்தார். 1660 செப்டம்பர் 27இல் பாரீஸ் நகரில் இவர் இறந்தார்.

செப்டம்பர் - 30                            புனித எரோணிமுஸ்

இவர் கி.பி. 340‡இல் தால்மேசியாப் பகுதியில் ஸ்திரிதோ என்னுமிடத்தில் பிறந்தார். உரோமையில் இலக்கியக் கலைகள் கற்றுத் தேர்ந்தார். அங்கேயே திருமுழுக்கும் பெற்றார். தவ வாழ்வை மேற்கொண்டு கீழைநாடுகளுக்கு வந்து மறைப்பணியாளர் பட்டம் பெற்றார். உரோமைக்குத் திரும்பி வந்து தமாசுஸ் என்னும் திருத்தந்தைக்குச் செயலராகப் பணியாற்றினார். அப்போது திருவிவிலிய நூல்களை இலத்தினீல் மொழியாக்கம் செய்யத் தொடங்கினார். துறவு வாழ்வை ஊக்குவித்து வளர்த்தார். பின்பு பெத்லகேமில் வாழ்ந்து கொண்டு, திருச்சபையின் தேவைகளில் வியப்புக்குரிய முறையில் உதவிடலானார். பல நூல்கள், முக்கியமாக திருவிவிலிய விளக்கவுரை நூல்கள் எழுதினார். பெத்லகேமில் 420‡இல் செப்டம்பர் 30ஆம் நாள் இறந்தார்.


Wednesday, 27 July 2016

ஆகஸ்ட் மாத புனிதர்கள்

ஆகஸ்ட் மாத புனிதர்கள்

-அருள்சகோ. றூ. பவுலின் மேரி FSAG, கும்பகோணம்

ஆகஸ்ட்- 4, தூய மரிய வியான்னி (மறைப்பணியாளர்)

இப்புனிதர் பிரான்சு நாட்டில் லயன்ஸ்  நகருக்கருகில் கிபி 1786இல் பிறந்தார். இவர் கல்வி கற்பதில் திறமையற்றிருந்தார்.  ஆனால்  இவரின் ஆழ்ந்த பக்தி வாழ்வினால் குருவாகி பிறகு ஆர்ஸ் நகரின் பங்குதந்தையானார். மக்களை ஒப்புரவு  அருட்சாதனத்தின் வழியாக  ஆற்றுபடுத்தினார். ஒவ்வொரு நாளும் 14 மணிநேரம்  பாவசங்கீர்த்தனம் கேட்பார். ஏழைகள் மீது இரக்கம்  உள்ளவர். தேவபராமரிப்பு என்ற விடுதியை தொடங்கி  80 பேருக்கு ஒவ்வொரு நாளும்  உணவு  கொடுத்து வந்தார். வெகு குறைவாக உணவு அருந்தி, குறைந்த நேரமே உறங்குவார். இவர் 1859இல் ஆகஸ்ட் 14ஆம் நாள் இறந்தார். இவர் பங்கு குருக்களின் பாதுகாவலராகத் திகழ்கிறார்.

ஆகஸ்ட்- 6  ஆண்டவரின் உருமாற்றம்

இயேசு பாடுபடுவதற்கு முன் கலிலேயாவிலிருந்து இராயப்பர், யாகப்பர், அருளப்பர் மூவரையும் அழைத்துக் கொண்டு தாபோர் மலைக்குச் சென்று உருமாறினார். இயேசுவின் முகம் சூரியனைப் போல் பிரகாசமாகவும், உடைகள் பனிக்கட்டியைப் போல் வெண்மையாயும் இருந்தன. மோயீசனும், எலியாசும் இயேசுவோடு பேசிக் கொண்டிருந்தபோது இராயப்பர் மூன்று கூடாரங்கள் அமைக்கலாம் என்றார். அப்போது ‘இவரே நம் அன்புக்குமாரன், இவருக்கு செவிசாயுங்கள்’ என்ற குரல் ஒலித்தது. தாபோர் மலையில் ஆண்டவரின்  மகிமையைக் கண்ட இவர்கள், ஒலிவ தோட்டத்தில் ஆண்டவர் பட்ட ஆன்மீக போராட்டத்திலும் உடனிருந்தார்கள். துன்பத்தை இவற்றை பொறுமையுடன் சகித்தால் பின்னர் நித்திய காலத்துக்கும் இயேசுவின் அழகைப் பார்த்து மகிழலாம் என்ற நினைவு அவர்களுக்கு துன்பத்தைச் சகிக்க திடன் அளித்தது. இவ்விழா 11ஆம் நூற்றாண்டில் மேற்றிசை நாடுகளில் பரவத் தொடங்கி கிபி 1457இல் உரோமை விழா பட்டியலில் இடம் பெற்றது.

ஆகஸ்ட் - 8,  தூய தோமினிக் - மறைப்பணியாளர்

ஸ்பெயின் ஓஸ்மா மறைமாவட்டத்தில் இலரூகாவில் கிபி 1170இல் பிறந்தார். பலேன்சியாவில் இறையியல் கற்றார். ஓஸ்மா நகரத் திருக்கோவிலில் பணிபுரிந்த மறைப்பணியாளர்களில் இவரும் ஒருவரானார். ஆல்பி ஜென்சியருக்கு எதிராகப் போராடினார். தம் மறையுரைகளாலும், வாழ்க்கைச் சான்றாலும் நற்பெயர் பெற்றார். இப்பணியைத் தொடர்ந்து செய்ய தம்மோடு தோழர்களை இணைத்து போதகர்களின் சபையை நிறுவினார். இத்தாலியில் பொலோஞ்ஞோ என்ற இடத்தில் 1221இல் ஆகஸ்ட் 8ஆம் நாள் இறந்தார்.

ஆகஸ்ட் - 10    புனித லாரன்ஸ்       - திருத்தொண்டர், மறைசாட்சி - 258.

இவர் உரோமைத் திருச்சபையின் திருத்தொண்டர். மன்னன் வலேரியன் கிறிஸ்தவர்களை அடக்கி ஒடுக்கிய காலத்தில் திருத்தந்தையை பிடித்து கொலைகளத்திற்கு கொண்டு போகும் போது, லாரன்சும் அழுது கொண்டு பின்சென்றார். அக்காலத்தில் உரோமை அரசன் ‘திருச்சபையின் திரவியங்களையயல்லாம் எனக்கு காட்டு’ என்றான். ‘மூன்று நாட்களுக்குள்ளாக காட்டுகிறேன்’ என்று  ஏழைகளைத்  திருச்சபையின் திரவியங்களாகக் காட்டினார். உடனே அதிகாரி கடும் கோபத்துடன் அவரை இரும்பு அடுப்பில் வைத்து எரித்துக் கொல்லும்படி உத்தரவிட்டான். இறையருளால் இவர் வேதனையை வீரத்தோடு சகித்து மகிழ்ச்சியுடன் இருந்தார். மக்கள் மனத்திரும்பவும் கிறிஸ்தவ விசுவாசம் உலகமெங்கும் பரவவும், கடைசி மூச்சு விடும்வரை ஜெபித்து 258இல் உயிர் துறந்தார். இவரது சாவைக் கண்ட பல அதிகாரிகள் திருமறையை ஏற்றுக் கொண்டனர்.

ஆகஸ்ட் - 11          புனித கிளாரா - 1194 - 1253

புனித கிளாரா இத்தாலியில் அசிசி நகரில் கிபி 1193இல் பிறந்தார். 1212இல் தவக்காலத்தில் புனித அசிசி பிரான்சிஸ் இவரது ஊர்க்கோவிலில் மறையுரைகள் நிகழ்த்தினார். துறவியாக வேண்டுமென்று தீர்மானித்து, குருத்து ஞாயிறன்று இரவில் பெற்றோருக்குத் தெரியாமல் புனித பிரான்ஸிசிடம் அடைக்கலம் புகுந்தாள். அவர் இவருக்குத் துறவற உடை அளித்தார். பெற்றோர் தேடி வருகையில் (பல போராட்டத்தின் மத்தியில்) ‘என்னை கடவுள் தமது சேவைக்கு அழைத்திருக்கிறார். இயேசுவைத் தவிர வேறு எவரும் வேண்டாம்’ என்று கூறிவிட்டாள். இவரைக் கொண்டு புனித பிரான்சிஸ் ஒரு புதிய கன்னியர் சபையைத் தொடங்கினார். மிக எளிமை வாழ்வு நடத்தினார். எனினும் பிறரன்பு பணிகளிலும், இறையன்பு செயல்களிலும் சிறந்து விளங்கினார். 1253இல் ஆகஸ்ட் 11ஆம் நாள் இத்தாலியில் அசிசி நகரிலேயே இவர் இறந்தார்.

ஆகஸ்ட் - 15          தூய கன்னி மரியின் விண்ணேற்பு

1954ஆம் ஆண்டு திருத்தந்தை 12ஆம் பத்திநாதர், கன்னி மரியாள் விண்ணகத்திற்கு ஆன்மாவோடும், உடலோடும் எடுத்து செல்லப்பட்டார் என்ற உண்மையை விசுவாச சத்தியமாக அறிவித்தார். இவ்விழா ஆரம்பத்திலிருந்து பலவித பெயர்களைக் கொண்டிருந்திருக்கின்றது. ‘விண்ணக பிறந்த நாள்’, ‘துயில் கொள்ளல்’, ‘சென்று விட்டார்’, ‘விண்ணேற்பு’ என்று பலநாடுகளில் கொண்டாடப்பட்டு கிபி 690இல் இங்கிலாந்து நாட்டில் அன்னையின் விண்ணகப்பிறப்பு விழா என்று கொண்டாடப்பட்டதாக ஆல்டெம் என்பவர் கூறுகிறார். ‘படைத்தவரைக் குழந்தை வடிவில் தம் உடலில் தாங்கிக் கொண்டவர், உடலோடு கூட இறைவனின் வீட்டில் இடம் பெறுவதும் பொருத்தமானதே’ என்று விளக்குகிறார் புனித ஜான் தமசீன்.

ஆகஸ்ட் - 20     தூய பெர்நார்து - 1093 -1153

பிரான்ஸ் நாட்டில் திஜோன் நகருக்கருகில் கிபி 1090இல் பிறந்தார். கடவுள் பற்றோடு கல்வி கற்றார். உலகிலிருந்தால் ஆன்மாவுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சி துறவியானார். சிறிது காலத்திற்குள் ஒரு மடத்தை நிறுவி தலைவராக இருந்தார். 30 பேர் இவரைப் பின்பற்றி துறவியானார்கள். உடன் துறவிகளை போதனையாலும், மாதிரியாலும் மிகச் சிறப்பாக வழிநடத்தினார். திருச்சபையில் பிரிவினைகள் தோன்றியதால் அமைதியையும், ஒற்றுமையையும், நிலைநாட்டுவதற்காக ஐரோப்பா முழுவதும் பயணம் செய்தார். இறையியல், தவவாழ்வு பற்றிய நூல்கள் பல எழுதினார். அவர் க்ளேர்வோ ஆதினத்தில் 1153இல் ஆகஸ்ட் ‡ 20ஆம் நாள் இறந்தார்.

ஆகஸ்ட் - 25          தூய லூயிஸ் - 1215 - 1270

கிபி 1214இல் பிறந்தார். தம் 22ஆம் வயதில் பிரான்ஸ் நாட்டின் மன்னரானார். தன் திருமண வாழ்வில் 11 குழந்தைகளுக்குத் தந்தையாகி, தாமே சிறந்த முறçயில் பேணி வளர்த்து பயிற்றுவித்தார். தவத்திலும், ஜெபத்திலும், ஏரழ, எளியவர் மீது கொண்ட அன்பிலும் சிறந்து விளங்கினார். மக்களிடையே அமைதியை உருவாக்குவதிலும், ஆன்மீடீக நலத்திலும் அக்கறைக் கொண்டு தம் ஆட்சிப் பொறுப்பை நிறைவேற்றினார். கிறிஸ்துவின் கல்லறையை விடுவிக்குமாறு சிலுவைப்போர்களை மேற்கொண்டார். 1270இல் ஆகஸ்ட் 25ஆம் நாள் வட ஆப்பிரிக்காவில் இறுதி திரு அருட்சாதனங்களைப் பெற்று இறந்தார்.

ஆகஸ்ட் - 28       தூய அகுஸ்தீன் - 354 - 430

இவர் வடஆப்பிரிக்காவில் தகாஸ்தே என்னுமிடத்தில் கிபி 354இல் புனித மோனிக்கம்மாளிக் மகனாகப் பிறந்தார். இளமைப் பருவத்தைத் தவறான போதனையிலும், ஒழுக்கமற்ற நடத்தையிலும் அமைதியின்றிக் கழித்தார். பின்பு மிலானில் ஆயர் அம்புரோசின் மறையுரைக் கேட்டு 387இல் ஆயர் அம்புரோசியாரிடம் திருமுழுக்குப் பெற்றார். 390இல் குருப்பட்டம் பெற்று ஹிப்போவுக்கு ஆயராக தேர்ந்தெடுக்கப் பெற்று 34 ஆண்டுகள் குருத்துவ வாழ்வு வாழ்ந்து தம் மந்தைக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார். சிறந்த இறையியலார் இவர் மறையுரைகளாலும், நூல்களாலும் மக்களைப் பயிற்றுவித்தார். அவர் காலத்தில் நிலவிய தவறான கருத்துகளுக்கு எதிராகப் போராடி திருமறையை தெளிவுபட எடுத்துரைத்தார். இன்றும் இவருடைய இறையியல் விளக்கங்கள் வியப்புடன் படிக்கப்படுகின்றன. 430இல் ஆகஸ்ட் 28 ஆம் இறந்தார்.

ஆகஸ்ட் - 29            தூய திருமுழுக்கு யோவான்

இவர்  தம் 30ஆம் வயதில் யோர்தான் நதிக்கரைக்கு வந்து மக்களை மனம்மாற அழைத்தார். இவர் கிறிஸ்துவின் முன்னோடி. கிறிஸ்துவுக்கு ஞானஸ்நானம் அளிக்கும் பேறுபெற்றவர். இவரே இறைவனின் செம்மறி என மக்களுக்குச் சுட்க்காட்டியவர். மாசில்லா குழந்தைகளைக் கொன்ற ஏரோது இறந்ததும் அவரின் மகன் ஏரோது அந்திபாஸ் நாட்டை ஆண்டு வந்தான். தன் சகோதரன் மனைவி ஏரோதியாளை தன் மனைவி ஆக்கிக் கொண்டதை யோவான் அச்சமின்றி கண்டித்ததால் சிறையில் அடைக்கப்பட்டார். ஏரோதியாளின் வேண்டுகோளின்படி தலையை வெட்டி யோவான் கொல்லப்பட்டார்.

Sunday, 21 February 2016

பிப்ரவரி திங்களில் கொண்டாடப்படும் முக்கியப் புனிதர்கள்

தொகுப்பு : சகோ. பிளவர் மேரி.

பிப்ரவரி 2 : இயேசுவை காணிக்கையாக்கும் விழா
மெழுகுவர்த்தி திருநாள்

கிறிஸ்து பிறந்த 40 ஆம் நாள் கன்னித்தாயும், சூசையும் குழந்தை இயேசுவை கோயிலில் அர்ப்பணித்து மீண்டும் பெற்றுக் கொண்டனர்.
சிறப்பு :
இன்று மெகுழுதிரிகளை பிடித்தபடி மக்கள் பவனி வருவார்கள். குரு பிடித்திருக்கும் ஒளி உலகின் இருளை நீக்க வந்த உலகின் ஒளியான கிறிஸ்துவை குறிக்கிறது. நாம் வைத்திருக்கும் எரிகின்ற திரி வாழ்வின் இறுதியில் கிறிஸ்துவை எதிர்கொள்ளும் போது, நற்செயல்கள் மூலம் ஒளிமயமாய் இருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது.
மீட்பு வரலாற்றின் முதல் அறிவிப்பு : மங்கள வார்த்தை (லூக் 1 : 31) 
2 வது அறிவிப்பு : சிமியோன் கன்னி மரியாயிடம் கூறியது, ‘உமது உள்ளத்தையும் ஒருவாள் ஊடுருவிப் பாயும்’ (லூக் 2 : 35)
ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்ட போது சிமியோன் கூறியது கல்வாரி மலையில் நிறைவேறியது.

சிந்தனை : நாம் இறைமகன் இயேசுவின் ஒளியில் உலகம் எழுச்சி பெற நம்மையே அர்ப்பணிப்போம்.

பிப்ரவரி 3 : புனித பிளாசியுஸ்

பிறப்பு : துருக்கி கி.பி. 316

சூழல் : வேத கலாபனை காலம்
தவ முனிவராக குகையில் செலவழித்த நாட்களில் இவரை வன விலங்குகள் காத்தன. காயப்பட்ட உடல் நலமற்ற விலங்குகளை குணப்படுத்தவே அவைகள் அவருடைய ஆசீருக்காக காத்திருந்தனவாம். விலங்குகளை பிடிக்க வந்த அரசு சர்க்கஸ் அதிகாரிகள், புனிதரையும் விலங்கிட்டு அரசனிடம் கொண்டு சென்றனர். போகும் வழியில்  தாய் மகளின் தொண்டையில் சிக்கி இருந்த மீன் முள்ளை எடுக்கச் சொன்னார். தொண்டையில் கை வைத்து தொட்டு செபித்தவுடன் முள் தூரத்தில் போய் விழுந்தது.

துன்பம் : சிலைகளுக்கு ஆராதனை செலுத்த பணிக்க மறுத்ததும் நைய புடைத்து மரத்தில் கட்டித் தொங்கவிட்டு,  கருமையான ஆணிகள் வாய்ந்த ஆயுதத்தால் குத்தியும் இரத்தம் பீறிட்ட போதும் உயிர் பிரியவில்லை.

இறப்பு : தலைவெட்டி கொல்லப்பட்டார்.

சிறப்பு : தொண்டை வியாதி நலம் பெற இவரிடம் செபிப்பது வழக்கம்.

பிப்ரவரி 4 : புனித அருளானந்தர் சே.ச.

பிறப்பு : போர்ச்சுகல் நாடு, லிஸ்பன் நகர். உயர்குலத்தில் பிறந்தவர். சிறுவயதில் தந்தையை இழந்தார்.
அழைப்பு : 1662இல் இயேசுசபையில் சேர்ந்து குருப்பட்டம் பெற்றார்.

பணி : இந்தியாவிற்கு கிறிஸ்துவின் ஒளியை கொண்டு வந்தவர். தமிழ் கற்றுக் கொண்டு தாயகமாக்குதல், பண்பாட்டு மயமாக்குதல் என்ற முறைகளை செயல்படுத்தினார்.

சிறப்பு : இந்திய துறவிபோல் காவி உடை அணிந்து, இந்தியராக வாழ்ந்து மக்களின் அன்பையும், வணக்கத்தையும் பெற்றவர். பலர் மெய்மறையைத் தழுவினர். புதுமை வரம் பெற்றார். பலரின் கொடிய நோய் குணமானது. மாமன்னர் தடியதேவன் இவரால் குணம் பெற்று திருமுழுக்குப் பெற்றார். 5 மனைவிகளை வைத்திருந்த அவர், இவரின் அறிவுரையின்படி ஒரு மனைவியை வைத்துக் கொண்டு, மற்ற நால்வரையும் அனுப்பி விட்டார். அவளில் ஒருவரின் தூண்டுதலால் உடையதேவர் கொல்ல ஆணையிட்டான். 
இறப்பு : ஓரியூரில் தலைவெட்டப்பட்டு, 4.2.1693ல் இறந்தார்.

பிப்ரவரி 5 : புனித ஆகத்தம்மாள், கி.பி.251 

பிறப்பு : உயர்குலத்தில் பிறந்தவர். பெற்றோர் இறைவனிடம் அர்ப்பணித்தனர்.

சிறப்பு : கிரேக்க மொழியில் (ஆகத்தா என்றால் நல்லது என்று பொருள்) அலகை, அரக்கர்கள், அரசர்களால் 
கற்புக்கு ஏற்பட்ட சோதனைகளை மனவலிமையுடன் வென்றார். அரசன் மணம் செய்து கொள்ள விரும்பி, அது  இயலாததால் கிறிஸ்தவர் என குற்றம்சாட்டி தீய பெண்ணை ஏவிவிட்டார், அசையவில்லை. கடுமையாக அடிக்கப்பட்டு, சிறைப்படுத்தப்பட்ட பின்பு மார்பு அறுக்கப்பட்டார், அன்று இரவு பேதுருவின் காட்சியைக் கண்டார். நெருப்பில் போடப்பட்டு காயமடைந்தார்.

இறப்பு : நெருப்பு காயங்களால் தன் தூய ஆன்மாவை 5.2.251ல் இறைவனிடம் அர்ப்பணித்தார்.

பிப்ரவரி 6 : புனிதர்களான பால் மீக்கி, கொன்சாலோ கார்சியா தோழர்கள். 

பால், ஜான், ஜேம்ஸ் ஆகிய மூவர் மற்றும் 6 பேர் பிரான்சிஸ்கன் சபையினர்.

இடம் : ஜப்பான் நாட்டில் நாகசாகி 1592ஆம் ஆண்டு  17 பேர் புதிதாக கிறித்துவ மறையில் சேர்ந்தார்கள். இவர்களை சிலுவையில் கொல்ல முடிவானது.
நாகசாகி குன்றின் மேல் 26 சிலுவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. சிலுவையின் பக்கத்தில் குழிகளும் வெட்டப்பட்டிருந்தன.
சிறப்பு : குன்றிற்கு ‘தேதேயும்’ என்ற நன்றி பாடலை பாடிக் கொண்டு வந்தனர். ஒவ்வொருவரும் சிலுவையில் கட்டப்பட்டனர். ‘இயேசு சபை குரு மாணவர் நான் சாவதற்கு காரணம் கிறிஸ்துவின் கொள்கைகளைப் போதித்தது.  நன்றி கூறுகிறேன் இறைவனுக்கு’ என்று அறிக்கையிட்டனர். 

கிறிஸ்துவை போல மன்னிக்கிறேன். எனது குருதி சிந்தப்படும்போது அது என் நாட்டு மக்களுக்கு பயன்தரும்  பனிமழையாக அமையும் என்பது எனது துணிவு என்று கூறினார். கடைசியில் ஈட்டியால் குத்தப்பட்டு இறந்தனர்.
இறப்பு : பிப்ரவரி 6, 1597இல் இறந்தார்.

பிப்ரவரி 7 : புனித மிக்கேல் கோர்டரோ (புதிய புனிதர்)

பிறப்பு : 7/11/1854, ஈவெடார் நாடு, குவென்கா நகர். பிறப்பில் கால் ஊனம்.
வார்த்தைப்பாடு : இலத்தீன் அமெரிக்காவில் மூவித வார்த்தைப்பாடு கொடுத்த முதல் நபர்.

பணி : மொழிகள் கற்பிக்கும் பணி, பின் பாடப்புத்தகங்கள் தயாரிக்கும் பணி, மறைக்கல்வி, புது நன்மைக்கு தயாரிப்பு, நவ துறவிகளைப் பயிற்றுவிக்கும் பணி.

சிறப்பு : திருச்சபைக்கும், குருக்களுக்கும் ஏற்பட்ட போராட்டத்தில் நற்கருணை பேழையை பாதுகாக்க ஊனமுற்ற பாதத்தை பொருட்படுத்தாது 8 மைல் நடந்து வந்தார். நவ கன்னியருக்கு கற்பித்தார். போர் சூழலில் ஆலயங்கள் எரிக்கப்பட்டன. படகுகளின் வழியே வெளியேறினர்.

இறப்பு : 1910ல் பிப்ரவரி 10ஆம் நாள் நிமோனியா காய்ச்சலால் உயிர்நீத்தார்.
முக்தி பேறு பட்டம் : 1977, அக் 30. தி. த. 2ஆம் ஜான்பால்.
புனிதர் பட்டம் : 1984, அக் 21. தி. த. 2ஆம் ஜான்பால்.

சிந்தனை : ‘நான் எழுதும் எழுத்து ஒவ்வொன்றும், வாசிக்கும் ஒவ்வொரு எழுத்தும், செய்யும் ஒவ்வொரு பணியும் அனைத்தும் அவரது அதி மிக புகழுக்கே’ (புனித கார்டரே).

பிப்ரவரி 8 : புனித ஜெரோம் எமிலியானி

பிறப்பு : பிரபு குலம்

சிறப்பு : போரில் கைதியாக்கப்பட்டு, விலங்கிடப்பட்டார். இன்னல்களை பொறுமையுடன் ஏற்றார். செப, தியானத்தில் ஈடுபட்டார். அன்னை மரியாவின் பரிந்துரையால் விலங்குகள் உடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
பணி : துறவற சபை நிறுவியது. வருந்துவோருக்கு உதவி செய்தல். கொள்ளை நோயால் இறந்த பெற்றோரின் ஆதரவற்ற பிள்ளைகளை ஒன்று சேர்த்து பேணி காப்பது.

இறப்பு : 1537, பிப்ரவரி 8இல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

பிப்ரவரி 10 : புனித ஸ்கொலாஸ்திகா
காலம் : 480 ‡ 547

பிறப்பு : இத்தாலி நாடு, புனித ஆசீர்வாதப்பர் ஸ்கொலாஸ்திக்காவின் சகோதரர், இரட்டையர்.

பெற்றோர் : செல்வந்தர்கள்.

அழைப்பு : பெற்றோரின் செல்வங்களை குப்பை என மதித்தனர். ஒரு துறவற சபையை ஏற்படுத்தினர்.

சிறப்பு : ஆசீர்வாதப்பர் மடத்தில் பெண்கள் நுழைய அனுமதியில்லை. அருகில் இருந்த வீட்டில் சந்தித்து ஆன்மீக காரியங்கள் பற்றி பேசுவார்கள். கடவுளுடைய நன்மைத்தனத்தையும், மோட்சவாசிகளின் ஆனந்தம் பற்றியும் பேசினார்கள்.

கடைசி சந்திப்பு : இரவு மழை காரணமாக தங்கினார். இரவு முழுவதும் ஜெபிப்பதில் ஈடுபட்டனர். 3 நாட்களுக்குப் பிறகு இறந்தார். தன் தங்கையின் ஆன்மா விண்ணில் வெண்புறா வடிவில் விண்ணில் பறந்து செல்வதாக காட்சி கண்டார் ஆசீர்வாதப்பர்.

இறப்பு : 10.2.457இல் இறந்தார்.

பிப்ரவரி 11 : லூர்து அன்னையின் காட்சிகள்

தொடக்கம் : 1858, பிப்ரவரி 11, பிரனீஸ் மலையடி வாரம், பிரான்ஸ் நாடு. லூர்து என்னும் இடம்.

சிறப்பு : 1859இல், பிப்ரவரி 11 லிருந்து ஜீலை 11 வரை, 18 தடவை அன்னை ஜெபமாலையுடன் பெர்நதத்திற்கு  காட்சியளித்தார். அற்புதமான நீருற்று அங்கு தோன்றியது.

அன்னையின் வேண்டுகோள் : பாவிகளுக்காகச் செபிப்பது, தவம் செய்வது, அற்புத  அன்னையின் பெயரை பெர்நதெத் திரும்ப திரும்ப கேட்டார். அதற்கு அன்னை புன்சிரிப்புடன் “நாமே அமல உற்பவம்” என்றார்.

பிப்ரவரி 26 : புனித மெக்டில்ட்

காலம் : 1240 - 1298

பிறப்பு : சாக்சனி, எய்ஸ் எல்பன் நகர், யஹரிஃபா அரண்மனை
அழைப்பு : துறவியரானார், மடத்திற்குச் சென்றார்.
பணி : தாழ்ச்சி, ஞானம், ஆன்ம ஆர்வம் கொண்டவர். நவகன்னியர் பொறுப்பு. பாடல் குழு பொறுப்பு. 

சிறப்பு ; நோயினால் கடுமையாய் தாக்கப்பட்டார். துறவிகள் திருப்புகழ் மாலை பாடும்போது பரவசமாகி விடுவார். பாடலின் ரசனையைக் கேட்டு ஆண்டவரே அவரிடம் நீ ஒரு குயில் என்றார். இறைவன் அளித்த ஊட்டச்சத்தின் காரணமாக டொமினிக்கன் சபை அறிவுக் களஞ்சியம் என்பர். திரு இருதய பக்திக்கு ஊற்றுக்கண்.

இறப்பு : 19. 11. 1298

சிந்தனை : தினமும் காலையில் நீ துயில் எழும்போது எனது இதயத்திற்கு வணக்கம் செலுத்து. உன் இதயத்தைக் கொடு. திரு இருதய ஆண்டவர் காட்சி இது.

பிப்ரவரி 27 : வியாகுல அன்னையின் புனித கபிரியேல்

காலம் : 1838 - 1862
பிறப்பு : இத்தாலி நாடு, அசிசி
தந்தை : சான்றோ, அசிசி நகர் ஆளுநர், கத்தோலிக்க விசுவாசி. திருப்பலிக்கு முன் 1 மணி நேரம் அமைதியாக செபிப்பார். இரவுக்கு முன் திவ்ய நற்கருணையை சந்தித்து விட்டு இல்லம் திரும்புவார்.
தாய் : ஆக்னஸ் இவர் 11வது பிள்ளை.

அழைப்பு : பகட்டான உரை, நாடக கச்சேரி, நடனம் இவற்றில் பற்று கொண்ட இவர் நோய்வாய்ப்பட்டார். நோய் நீங்கினால் துறவற வாழ்வை மேற்கொள்வேன் என்று வாக்கு கொடுப்பார், செய்யமாட்டார். மரியன்னை இவரை கூர்ந்து நோக்கி விரைந்து துறவியாக மாறு என்ற கடினக் குரலை கேட்டதும் திருப்பாடுகளின் துறவு சபைக்கு சென்றார்.

சிறப்பு : திருப்பாடுகள் மீது சிறப்பு பக்தி. மரியன்னை பக்தி, நற்கருணை நாதரின் மீது பக்தி, நிறை ஆறுதல் தந்தது. 1861இல் குருப்பட்டத்திற்கு முன் பெற வேண்டிய 4 பட்டங்கள் பெற தயார் நிலையில் இருந்தபோது மதக்கலவரம், மாபெரும் குழப்பம், குருப்பட்டம் பெறுவது ஆபத்து என்று தடுத்தனர்.

இறப்பு : 27. 2 . 1862. இறந்தபின் மனமாற்றங்கள், புதுமைகள் ஏராளம்.
புனிதர் பட்டம் : 13. 5. 1920

சிந்தனை : என் இதயத்தில் இறையன்புக்கு முரசு கொட்டாமல் இருக்கும் நரம்பை உடனடியாக பிடுங்கி எறிந்து விடுவேன் - புனித கபிரியேல்.

Sunday, 13 December 2015

அக்டோபர் மாத புனிதர்கள் வரலாறு

புனிதர்கள் வரலாறு

அக்டோபர் 1 : குழந்தை இயேசுவின் புனித தெரசாள்.
பிறப்பு : பிரான்சு நாடு, அலென்சோவில் 1873 ஜன 2 பிறந்தார்.
பெற்றோர் மற்றும் குடும்பம் : தந்தை லூயிஸ் ஜோசப், தாய் செலீகெரின். 9வது கடைக்குட்டி பிள்ளை. அனைவரின் அன்பைப் பெற்று வளர்ந்தவர் சிறு வயதிலேயே சிறு தவறுக்கும் மன்னிப்பு கேட்பார்.
வாழ்வில் வந்த சோதனை : அன்னையின் இறப்பு 1877 ஆகஸ்ட் 28. அக்கா பெளலின் துறவறம் சென்றதால் பாதிப்பு. 1882 அக்டோபர் 15, கடும் நோயால் தாக்கப்பட்டார். 1884இல் புன்னகை அன்னையின் காட்சியால் புத்துயிர் பெற்றார்.
புதுநன்மை : 1884 மே 8, இயேசுவின் முதல் முத்தம் என்கிறார்.
துறவற அழைப்பு : 16 வயதில் திருத்தந்தையின் சிறப்பு அனுமதியுடன் கர்மேல் மடம் சென்றார்.
திருவுளம் : 1889 ஜன 10 ; துறவற வார்த்தைப்பாடு 1890 செப் 8.
கிறிஸ்துவே என் அன்பு ; அவரே என் நிறை வாழ்வு என்று வாழ்ந்தார்.
சிறப்பு குணங்கள் : எளிதில் வளைந்து இறைவனிடம் தன்னை முழுவதும் கையளித்தார்
இறப்பு : 1897 செப் 30இல் இறைவா உம்மை அன்பு செய்கிறேன் என்று கூறி இறந்தார்.

அக்டோபர் 2 : காவல் துVதர்கள்
விழா : 1582 பிப்ரவர் முதல் கொண்டாடப்படுகிறது.
பணி : 1. இறைவனை துதிப்பது (தூயவர, தூயவர்)
2. இறைவனின் செய்தி தொடர்பாளர்கள் வி. ப. 23: 20, 21.
3. மனிதர்களை கண்காணிப்பது மத் 18 : 10
தி.பா. 91 : 11
நமது பணி : தூதர்களை மதிப்புடன் காண்பது, நம்பிக்கை வை, அன்பு செய், ஆபத்து, துன்பம், சோதனை நேரம் பாதுகாப்பு வேண்டி அவர்பக்கம் திரும்பு ‡ புனித பெர்னார்து. 
  
அக்டோபர் 4 : புனித பிரான்சிஸ் அசிசி
பிறப்பு : இத்தாலி அசிசி நகர். தந்தை : பீட்டர் பெர்னார்டோன், துணி வியாபாரி. தாய் : பீக்கா.
இளமைப்பருவம் : ஆடம்பர வாழ்வு, நடை உடை பாவனையில் பெருமிதம். ஆனால் ஏழை எளியவர்கள்மீது பரிவு காட்டினார். கையேந்தி கேட்ட பிச்சைகாரருக்கு, தந்தை உதவி செய்யாததால் தேடி சென்று அன்றைய 
வருமானம் முழுவதும் கொடுத்தார். மக்கள் பாராட்டினர். பெற்றோர் திட்டினர்.
1201இல் போர் வீரரானார். கைதியாகி சிறையில் அடைக்கப்பட்டு, பின் விடுதலை. 1204இல் நோயுற்றார்.
துறவற அழைப்பு : உள்ளத்தில் ஆன்மீக தேடலினால் தனிமையை நாடினார். செபித்தார். காட்சியில் என் ஆலயத்தைப் பழுதுபார் என்று இயேசு கூறினார்.
மத் 10 : 9 மறையுரையில் தெளிவு பெற்று, பிச்சை எடுத்து, ஏழைகளுக்கு உதவினார்.
புதிய சபை உருவாக்கம் : இடிந்து விழும் ஆலயத்தை தாங்கி நிற்பது போன்று கனவுக்கண்டார். ஒரு சபையை நிறுவி திருத்தந்தை 3ஆம் இன்சென்ட்டால் அனுமதி பெற்றார்.
அசிசியில் பிரான்சிஸ் ஆற்றிய உரையால் கவரப்பட்டு பின்தொடர்ந்த கிளாராம்மாள் துணையுடன் கிளாரம்மாள் ஏழை மகளிர் சபையை பெண்களுக்குத் தொடங்கினார். அவர் செபித்த முறையை பார்த்த அநேகர் பின்பற்றினர்.
இறப்பு : தொடர்ந்து ஏழையாக  வாழ்ந்து எளிமையை போதித்து, இயற்கையை நேசித்து 1226 அக் 3 இல் இறந்தார்.
புனிதர் நிலை : 1228, ஜீலை 16இல் திருத்தந்தை 9ஆம் கிரகோரி புனிதராக்கினார்.

அக்டோபர் 5 : புனித பவுஸ்தினா கோவாஸ்கா
பிறப்பு : போலந்து 1905, ஆகஸ்ட் 25.
பெற்றோர் : ஸ்தனிஸ்லாஸ், மரியன்னா.
தொழில் : தச்சுத் தொழில், விவசாயி, அன்பும், பக்தியும் , இரண்டு கண்கள்.
அழைப்பு : 7 வயதில் நற்கருணை ஆண்டவர் அழைப்பதை உணர்ந்தார். 16 வயதிலும் அனுமதி கிடைக்கவில்லை. இயேசு, காட்சியில் மடத்தில் சேருமாறு கட்டளையிட்டார். தெரியாமல் தொடர்வண்டி ஏறி வார்சா வந்தார். போதிய கல்வியறிவு இல்லை. நிபந்தனையின் அடிப்படையில் சேர்க்கப்பட்டார்.
பணி : சமைப்பது, தூய்மைப்படுத்துவது, தோட்டங்களைப் பராமரிப்பது.
திருவுடை : 1926 , ஏப்ரல் 30.
பெயர் மாற்றம் : பவுஸ்தினா ‡ ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று பொருள்.
சிறப்பு : 1931, பிப்ரவரி 22இல் இயேசு இறை இரக்கத்தின் அரசராக காட்சி அளித்தார். வெள்ளை உடை இதயத்திலிருந்து வெள்ளை, சிவப்பு நிற ஒளி பாய்ந்து வந்தது.
இறப்பு : 1938 அக்டோபர் 5இல் இறந்தார். 2000 ஏப்ரல் 30இல் புனிதர் பட்டம் 21ஆம் நூற்றாண்டின் முதல் புனிதர்.

அக்டோபர் 6 : புனித புருனோ
பிறப்பு : ஜெர்மனி கோலோன் நகர். சிறுவயதில் அன்பு செயலில் ஈடுபட்டு இறைவனின் மகனாக வாழ்ந்தார்.
அழைப்பு : 25 வயதில் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். தனது பேச்சாற்றலால், மெய்யியல் கருத்துக்கள், இறையியல் கருத்துகளால் மாணவர்கள் மனதை கவர்ந்தார்.
பணி : நீம்ஸ் மறைமாவட்டத்தின் தலைமை செயலராக செயல்பட்டார்.
இவர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு ஒரு சிறிய வீடு அமைத்து தங்களை எந்நேரமும் செபத்தில் ஈடுபடுத்தி எளிமையாக வாழ்ந்தவர். இவரது மாணவர் 2ஆம் அர்பன் என்ற பெயரில் திருத்தந்தையானார். அவருக்கு ஆலோசகராகவும், திருப்பாடல், பவுலின் கடிதங்களுக்கு விளக்கவுரை எழுதினார்.
இறப்பு : 1101 அக்டோபர் 6இல் இணைவனில் இணைந்தார்.
புனிதர் பட்டம் : 1621 பிப்ரவரி 7 திருத்தந்தை 15ஆம் கிரகோரியால் கொடுக்கப்பட்டது.

அக்டோபர் 7 : தூய செபமாலை அன்னை
கூடி செபிக்கும் வழக்கம் தொடக்கத் திருச்சபையில் இருந்தது. திருப்பாடல்கள் ஒருபகுதி ஒருவர், மற்றொரு பகுதி மற்றொருவர் என மாறி மாறி சொல்லி செபித்தார்கள். இறந்தவர்களுக்காக 150 திருப்பாடல்கள், படிக்காத துறவிகள் 50 முறை பரலோக மந்திரம் செபித்தார்கள்.
அன்னையை போற்ற, இடையிடையே விண்ணப்ப இணைப்புடன், கபிரியேல் தூதர் மங்கள வார்த்தை சொன்னதை ஒரு செபமாலையாக செபித்தனர்.
செபமாலையின் திருத்தந்தை என்று 13ஆம் சிங்கராயர் அழைக்கப்படுகிறார்.
பாவிகள் மனம் திரும்புதல், பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மீது இரக்கம் காட்டுதல்,
மீட்பு வரலாற்றை மூன்று கட்டமாக பிரித்தார். இஸ்ராயல் மக்கள் காலம், இயேசுவின் காலம், திருச்சபையின் காலம்.
இறப்பு : கி.பி.74.

அக்டோபர் 19 : புனித சிலுவை பவுல்
பிறப்பு : இத்தாலி, ஓவாதாவில் 1694 ஜனவரி 3இல் பிறந்தார்.
தந்தை, தாய் : லூக் டேனனி, அன்னா மரியா மாசாரி.
சிறப்பு : சிலுவையே புத்தகம், சிலுவையே முன்மாதிரியாக வைத்து வாழ்வது. அதிக நேரம் நற்கருணை ஆண்டவர் முன் அமர்ந்து செபித்தல்.
துறவற சபை உருவாக்குதல் : இயேசுவின் பாடுகள் மூலமே இறைவன் அன்பை முழுமையாக சுவைக்க முடியும் என்றுணர்ந்து புதிய சபையை உருவாக்கினார்.
இறப்பு : 1775இல் அக்டோபர் 18.

அக்டோபர் 22 : புனித இரண்டாம் யோவான் பவுல்.
பிறப்பு : போலந்து நாடு வோடா நகர் 1920, மே 18.
பெற்றோர் : கரோல், எமிலியா.
இளமைப்பருவம் : அன்னை மரியாள் பக்தி நற்கருணை மீது பக்தி அதிகம்.
1929, ஏப்ரல் 13இல் தாயின் இறப்பு.அண்ணன் மருத்துவம் படித்தார். தொற்றுநோயால் உயிர் நீத்தார்.
படிப்பு மற்றும் திறமைகள் : 1938இல் மெய்யியல் படித்தார். கிரேக்கம், இலத்தீன், ஜெர்மனி மொழிகளை கற்றார். சிறந்த அறிவுடையவராய் இருந்தார். கால்பந்தாட்டம், பனிசறுக்கு, நீச்சல், நாடகம் எழுதுதல், நடிப்பில் சிறந்து விளங்கினார். இறைவனால் ஈர்க்கப்பட்டு குருமடம் சென்றார்.
குருத்துவ அழைப்பு : 1942இல்
அருட்பொழிவு : 1946, நவம்பர் 1
முனைவர் பட்டம் : 1948இல்
சிறந்த மறையுரையால் மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தார்.
துணை ஆயர்நிலை : 1958, செப் 28இல்
திருத்தந்தை பட்டம் : 1978, அக்டோபர் 16
1985, மே 13இல் சுடப்பட்டார். பிழைத்துக் கொண்டார்.இறப்பு : 2005,, ஏப்ரல் 2இல் இறந்தார்.

அக்டோபர் 24 : புனித மரிய கிளாரட்
பிறப்பு : ஸ்பெயின், கட்ட போனியா என்ற இடம். 1807 டிசம்பர் 23இல் பிறந்தார். நெசவு தொழிலாளியின் மகன்.
அழைப்பு : 1829இல் விக் என்ற இடத்தில் இருந்த மடத்தில் சேர்ந்தார்.
அருட்பொழிவு : 1835
இறையியல் பட்டம் : 1839
சிறப்பு : ஏழைகளின் மனம் கவர்ந்தவர்.
பணி : 1849இல் கிளரிசியன் சபையை தொடங்கினார்.
சமயம் சார்ந்த நூலகம் அமைத்தார். ஸ்பெயின் அரசியின் பரிந்துரையால் பேராயரானார். குருமடத்தை சீர்செய்தார். குருக்களின் ஒழுக்க முறைமைகளை சரிசெய்தார்.
இறப்பு : 1915இல் அக்டோபர் 24இல்.


Thursday, 3 December 2015

புனிதர்கள் வரலாறு, டிசம்பர்

புனிதர்கள் வரலாறு
அருட்சகோ. பிளவர் மேரி,  குடந்தை
டிசம்பர் 2                       புனித பிபியானா
பிறப்பு : உரோமை, 3ஆம் நூற்றாண்டு
தந்தை : ஃபிளேவியஸ் (நகரின் முன்னாள் ஆளுநர்)
தாய் : டஃப்ரோஸ், தங்கை டெமிட்ரியா, வேதகலகம் நடந்த காலம். தந்தை முகத்தில் இரும்பால் சுடப்பட்டும், தாய் தலைவெட்டியும் கொல்லப்பட்டனர்.
டெமிட்ரியா பிபியானா வறுமையிலும் நோன்புடன் மக்கள் மீட்புற செபித்தனர். டெமிட்ரியா ஆளநர் முன் விசுவாசத்தை அறிக்கையிட துன்புறுத்தப்பட்டு இறந்தார். பிபியானாவை கெட்ட பெண்களிடம் கையளித்தும் பயனில்லை. இரும்பு குண்டுகள் கட்டப்பட்ட சாட்டையால் சதை கிழிய அடித்தனர்.
இறப்பு : குருதி இழக்க உயிர் துறந்தார். 363இல் உடல் நொறுக்கப்பட்டது.


டிசம்பர் 3         புனித பிரான்சிஸ் சவேரியார்
பிறப்பு : ஸ்பெயின் நாடு, நவரா மாநிலம். 7.4.1506இல்
தந்தை : யூவான் தேயாசு
தாய் : டோனா மரியா
செல்வ சீமான் மகன். 9 வயதில் தந்தையை இழந்தார்.
செல்வ சீமான் மகன். 9 வயதில் தந்தையை இழந்தார்.
அழைப்பு : கல்வி கற்க பாரிஸ் சென்றவர் புனித இஞ்ஞாசியார், “ஒருவர் உலகமெல்லாம் ஆதாயமாக்கினாலும் தம் வாழ்வை இழப்பாரெனில் அவருக்கு கிடைக்கும் பயன் என்ன?” (மத் 16 : 26) என்று அடிக்கடி கூற மனம் மாறினார்.
1534, ஆக.15இல் வாழ்வை அர்ப்பணித்தார். ஆசிரியராக சிலகாலம் பணியாற்றிய பின் 1537, ஜீன் 24இல் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.
மறைப்பணி : 1546, ஏப். 4இல் கோவா வந்து ஐந்து மாதம் போதிப்பது மற்றும் மருத்துவப்பணி செய்தார்.
சிறப்பு : சிறுமணி ஒன்றை அடித்தபடி தெருவில் நடந்து சிறுவர்களை ஈர்த்தார். பின் மறைக்கல்வி கற்பித்தார். 1542இல் தென்னிந்திய கடற்கரை, 1545 மலாக்கா, 1546இல் அம்மோயினா தீவுகளுக்கு சென்று போதித்தார்.
இறப்பு : நற்செய்தி அறிவிக்க போகும் வழியில் 1532, டிச 2இல் சான்சியன் தீவில் இறந்தார்.

டிசம்பர் 6                  புனித நிக்கோலாஸ்
பிறப்பு : துருக்கி, பவித்ரா என்ற இடம் கி.பி.280இல்.
பெற்றோர் : பக்தி மற்றும் நற்பண்புடையவர்கள்.
சிறப்பு : 15 வயதில் பெற்றோர் இறக்க துறவுமடம் சேர விரும்பினார்.
அழைப்பு : ஆயரால் அருட்பொழிவு பெற்றதும்துறவு மடத் தலைவராக்கப்பட்டு கப்பலில் செல்ல புயல்காற்று மூலம் கரை சேர்ந்தார். சரக்கு கப்பல் கோதுமையுடன் கடலில் நின்றது. மாலுமியிடம் மக்களை காப்பாற்ற கேட்டார். அரசனுக்கு பயந்து மறுக்க, உனக்கு ஒன்றும் குறைவுபடாது என்றார். அதன்படி எடுத்தும் குறையவில்லை.
இறப்பு : கி.பி. 342இல் இறந்தார்.

டிசம்பர் 7                         புனித அம்புரோஸ்
பிறப்பு : கி.பி. 339இல் பிறந்தார்.
தந்தை : பிரான்சு, அவிரோலியன் அம்புரோஸ், பேரரசின் ஆளுநர்.
கல்வி : உரோமை சென்று இலக்கியம், சட்டப்படிப்புப் பயின்றார். 372இல் ஆளுநர் பதவி பெற்றார்.
ஆயர் நிலை : ஆளுநராக இருந்தபோது நீதியுடன் ஆட்சி செய்த அவர், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற புதிய ஆயரை தேர்வுசெய்யும் இடத்திற்குச் சென்றார். அம்புரோஸ் ஆயர், அம்புரோஸ் ஆயர் என்ற ஒரு குழந்தையின் குரலொலி கேட்க ஆளுநர் ஆயராக்கப்பட்டார். மறைபயிற்சிப் பெற்று ஒருவாரத்தில் திருமுழுக்குப் பெற்று குருவாக, ஆயராக 374இல் திருநிலைப்படுத்தப்பட்டார்.
சிறப்பு : கடமையுணர்வு மற்றும் உண்மையுடன் ஆயர், மறைவல்லுநராக ஆரியுசின் தப்பறைக் கொள்கைகளுக்கு எதிராக நேரிய போதனை, நூல்கள் மூலம் திருச்சபையை அதன் உரிமைகளை பாதுகாத்தார்.
இறப்பு : கி.பி.397இல் ஏப்ரல் 4இல் இறந்தார்.

டிசம்பர் 8                 தூய அமல அன்னை பெருவிழா

ஆரம்பம் : கீழைத் திருச்சபை 7ஆம் நூற்றாண்டு. மேலைத் திருச்சபை 9ஆம் நூற்றாண்டு
சிறப்பு : மூவொரு இறைவனாக எக்காலமும் வாழும் இயேசுவுக்கு மட்டுமே தன் தாயை பிறக்குமுன்பே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தொ நூ 3 : 15 உனக்கும் ...காயப்படுத்துவாய் (தொ நூ 3 : 15)
மிகவும் பேறுபெற்ற அன்னை கன்னி மரியா கருவான முதல் நொடியிலிருந்தே இறைவனின் தனிப்பட்ட சிறப்பு அருளால் சென்ம பாவத்தின் எல்லா பாவக் கறையினின்றும் பாதுகாக்கப்பட்டார்.
1854, டிசம்பர் 8இல் திருத்தந்தை 9ஆம் பத்திநாதர் கன்னிமரி அமல உற்பவி என்பது விசுவாச சத்தியமென வரையறுத்துக் கூறினார்.

டிசம்பர் 12                          புனித ஜேன் பிரான்செஸ் தே சாந்தால்

பிறப்பு : பிரான்ஸ் நாட்டில் டிஜோன்ஸ் 1572 ஜனவரி 28இல்
தந்தை : பெனிக்னேஃபிரேமியாட் (பாராளுமன்றத் தலைவர்)
தாய் : மார்கிரேட் பெர்பிசே
18 மாதத்தில் தாயை இழந்தார். திருமணத்திற்குப் பின் கணவனை இழந்தார்.
அழைப்பு : பிரான்சிஸ் சலேசியாரின் மறையுரையால் கவரப்பட்டு தன் தந்தை, மூன்று பிள்ளைகளை சகோதரரின் பொறுப்பில் விட்டு விட்டு, 1610, ஜீனில் பிரான்சிஸ் சலேசியரிடமிருந்து விதிமுறைகளை பெற்று விசிட்டேசன் சபையை உருவாக்கினார்.
சிறப்பு : கனிவு, தாழ்ச்சி, எளிமை, இடைவிடா செபம், போதனைகளை வாழ்வாக்குதல், நோயாளிகளை கவனித்தல்.
இறப்பு : 1645, டிசம்பர் 3.
புனிதர் பட்டம் : 1767, ஜீலை 16இல் திருத்தந்தை 13ஆம் கிளமெண்ட்.

டிசம்பர் 14                    புனித சிலுவை யோவான்

பிறப்பு : அவிலா அருகில் ஹோந்தே வேரஸ் 1542 ஜீன் 24
தந்தை : கொன்சாலோ தே எப்பஸ்
தாய் : கேத்தரின் அல்வாரைஸ்
தந்தை 7 வயதில் இறந்தார்.
அழைப்பு : 1563 பிப்ரவரி 24இல் கர்மேல் சபையில் சேர்ந்து துறவற ஆடை அணிந்தார்.
1567இல் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். துன்பத்திலும் பொறுமை. குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 9 மாதங்கள் யாரையும் பார்க்க இயலாத நிலையில் தன் அனுபவங்களை எழுத்தில் வடித்தார்.
எழுதிய நூல்கள் : கார்மேல் மலை ஏற்றம், ஆன்மாவின் இருண்ட இரவு, ஆன்மீக சங்கீதம், அன்பின் உயிர்ச்சுடர்.
சிறப்பு : சிலுவையை அனுபவித்த அவர், நூல்கள் எழுதினார். இறைவனுடன் இடைவிடா தொடர்பு, துன்பத்தை விரும்பி ஏற்பது.
இறப்பு : பாடுபட்ட சுரூபத்தை மார்போடு அணைத்து “ஆண்டவரே என் ஆவியை, உம் கையில் ஒப்படைக்கிறேன்” என்று உயிர் துறந்தார். 1926இல் இறை ஞானத்துக்கான மறைவல்லுநர்  பட்டம் அளிக்கப்பட்டது.

டிசம்பர் 21                   புனித பேதுரு கனிசியுஸ்

பிறப்பு : டச்சு நகர் நிஸ்மேன்ல் 1521, மே 8.ல் பிறந்தார்.
பெற்றோர் : ஜேக்கப் கனிஸ் (மேயர்)
எஜிடிலாவான் ஹவ்வேனிகன், சிறுவயதில் தாய் இறந்ததால் தந்தையின் அரவணைப்பு.
கல்வி : 19 வயதில் சட்டவியல் பட்டம் பெற்றார்.
அழைப்பு : இறைவனின் அழைப்பை உணர்ந்த அவர் இயேசு சபையில் 1546இல் குருத்துவ அருள்பொழிவு பெற்றார்.

டிசம்பர் 25         கிறிஸ்து பிறப்பு பெருவிழா
உலகம் நிறைவாழ்வு பெற முவொரு இறைவனின் இரண்டாம் நபர் இரத்தமும், உடலுமாக மனுவுருவான மாண்புமிகு நாள்.
கிறிஸ்துவின் பிறப்பு : அகஸ்துஸ் சீசரின் 28ஆம் ஆண்டு இயேசு பிறந்தார். உரோமை பேரரசு முதல் அடையாளமாக சூரியனை வைத்திருந்தது. டிசம்பர் 25 சூரியனுக்கு வணக்கம் செலுத்தி வெற்றி கொள்ள முடியாத சூரியனின் பிறப்பு என்று விழா கொண்டாடினார்.
சிறப்பு : திருச்சபை இத்தேதியை உள்வாங்கியது. உண்மை ஒளியாம் இயேசுவின் பிறந்த நாளாக கொண்டாடுகிறது.
நீதியின் சூரியன் இயேசு. முதன்முதலில் 1223இல் பிரான்சிஸ் அசிசி கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடக் கருதி ஒரு குகையை வைக்கோலால் நிரப்பி மாடு, கழுதையை அதில் கட்டி பெத்லகேமை நினைவுப்படுத்தினார். அங்கு மக்களுக்கு இறைவனின் எல்லையில்லா அன்பை போதித்தார். மக்கள் மனதில் புத்துணர்வு ஏற்பட்டது. இத்தாலியில் கிறிஸ்துமஸ் கேரல்ஸ் துவங்கியது. ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் பழக்கம் துவங்கியது. அந்தமரம் ஏதேன் தோட்டத்தில் இருந்த வாழ்வின் மரத்தை காட்டுகிறது. மீட்பின் தொடக்கம் இயேசுவின் பிறப்பில் தொடங்கி நம் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது.

டிசம்பர் 26                      புனித முடியப்பர்
முடி என்றால் கிரீடம் என்று பொருள்படும்.
சிதறிய யூதர் நகரின் மத்தியில் தொழுகைக்கூடம் அமைத்து செபித்தனர்.
மொழி - கிரேக்கம்.
பாலஸ்தீனத்தில் - அரமேயம்
எபிரேய திருநூலை வைத்து செபித்தனர். எருசலேமில் மட்டுமே இறைவனின் உறைவிடம் என்றனர். கிரேக்கம்,, அரமேயம் பேசிய யூதர்கள் இயேசுவின் அன்பில் திருமுழுக்குப் பெற்றனர். தூய ஆவி அருளும் வல்லமை ஞானம் நிறைந்த எழுவரில் ஒருவர் ஸ்தேவான். திருத்தூதருக்கு பணியில் உதவியாக இருந்தார். ஸ்தேவான், தம் மதிப்பை இழந்த ஆலயத்தை விட்டு கிறிஸ்துவிடம் வர அழைத்தார். மோசேக்குக்கும், கடவுளுக்கும் எதிராக பேசுவதாக குற்றம்சாட்டினர். துணிந்து  உரைத்தார். தி ப.7 : 51 ‡ 53
இறப்பு : கி.பி.34 / 35 இல் கல்லெறியப்பட்டு மறைசாட்சியானார்.

டிசம்பர் 27                 புனித யோவான்
பொருள் : கடவுளின் கொடை
தந்தை : செபதேயு
தந்தைக்கு உதவியாக மீன்பிடித்து வந்தார். வசதி படைத்தவர்கள். இவரின் தாய் தமது உடைமையில் இருந்து உதவி செய்தார். மாற்கு 15 : 40.
சிறப்பு : திருமுழுக்கு யோவானின் சீடர். இயேசு அழைத்தவுடன் தந்தையை கூலியாட்களுடன் விட்டுவிட்டு பின்தொடர்ந்தார். இயேசுவின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் உரியவர். இயேசுவின் புதுமை, இயேசுவின் துன்பத்தில் கடைசி மட்டும் பின்தொடர்ந்த அன்புக்குரியவர். தம் அன்புத்தாயை அன்பு சீடரிடம் ஒப்படைத்துவிட்டு உயிர் விடுகிறார்.
தோழமை உணர்வு : பேதுருவுக்குத் துணை.
சாவிலிருந்து மீட்பு : நெருப்புக்கு இரையான 200 பேரை செபித்து உயிர்கொடுத்தார். பேயை விரட்டி அடித்தார். கைது செய்யப்பட்டார்.
இறப்பு : கொதிக்கும் எண்ணெயில் போட்டும், வி­ம்; கொடுத்தும் சாகாமல் 100ஆம் ஆண்டில் இயற்கை முறையில் இறந்தார்.

டிசம்பர் 28                   மாசில்லா குழந்தைகள் விழா
வரலாற்று பதிவில் குறிக்கப்பட்டுள்ள கொடூர அரசர்களுள் ஒருவன் ஏரோது. பதவிக்காய் குடும்பத்தில் மனைவி, மைத்துனன், சகோதரன், தாய், மகன் ஒருவர் பின் ஒருவராய் கொன்றான். இவன் ஆட்சியில் இயேசு பிறந்தார். இச்செய்தியை ஞானியர் வழியாக தெரிந்தவுடன் அவரை தேடி ஏமாற்றம் அடைந்ததும், சீற்றம் கொண்டு இரண்டு வயதும் அதற்குட்பட்டதுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொலை செய்தான்.
சிறப்பு : மடிந்த மொட்டுக்களை கிறிஸ்துவுக்காக இரத்தம் சிந்தியவர்கள் என்று திருச்சபை பெருமையுடன் வணங்குகிறது.

டிசம்பர் 31           புனித சில்வெஸ்டர்
பிறப்பு : உரோமை
தந்தை : ருஃபினுஸ்
தாய் : ஜஸ்தா.
பெற்றோரின் ஞானத்திலும், அறிவிலும் சிறந்து விளங்கினார்.
அழைப்பு : மர்செல்லினுஸ் என்பவரின் கரங்களால் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.
சிறப்பு : 313இல் மிலான் சாசனம் வெளியிடப்பட்டது. முழு சமய உரிமை அளிக்கப்பட்டது; ஆலயம் எழுப்ப, ஞாயிறு விடுமுறை சலுகை, குற்றவாளிகள் சிலுவையில் அறைந்து கொல்வது நிறுத்தப்பட்டது.
அருட்பொழிவு : 314, ஜனவரி 31இல் திருத்தந்தையாக.
பணி : உரோமை திருச்சபையை மறுசீரமைத்தார். நிசேயா பொதுச்சங்கத்தை கூட்டினார். இச்சங்கம் இயேசு மெய்யங்க கடவுளின்று மெய்யங் கடவுளாக செனித்தவர். உண்டாக்கப்பட்டவர் அல்லர. தந்தையோடு ஒரே பொருளானவர் என்று அறிக்கையிட்டது.
இறப்பு : 333இல் இறந்தார்.

Ads Inside Post