Pages - Menu

Showing posts with label Mary. Show all posts
Showing posts with label Mary. Show all posts

Monday, 30 April 2018

அன்னைக் காட்டும் வழி

அன்னைக் காட்டும் வழி

அருட்பணி. ச.இ. அருள்சாமி

மே மாதம் அன்னை மரியாவை சிறப்பாக நினைவு கூறுகின்ற மாதமாக அமைந்திருக்கிறது. பங்குகளில் மே மாதத்தில் சிறப்பான மாதா வணக்க வழிபாடுகள் உண்டு. குடந்தை மறைமாவட்டத்தில் இறையடியார்  லூர்து சேவியர் வளர்த்து தந்த அன்னை மரியாவின் வணக்கம், பூண்டி திருத்தலத்தில் தினமும் எதிரொலித்து வருகிறது. 
அன்னை மரியா திருஅவையின் முன் அடையாளமாகவும் திரு அவையின் முதல் அங்கத்தினராகவும் திருஅவையின் தாயாகவும் விளங்குகிறார்கள். 13ஆம்  நூற்றாண்டைச் சேர்ந்த புனித பெர்நாத்து அவர்கள் கூறுவார். விவிலியத்தில் திருஅவையைப் பற்றி கூறுவதெல்லாம் அன்னை மரியாவுக்கும் பொருந்தும் என்கிறார். திருஅவையும் அன்னை மரியாவும் தாயானவர்கள். ஏனென்றால் இருவரும் இறைவனுக்கு முழுமையாக அர்ப்பணமானவர்கள். இருவரும் தந்தையாகிய இறைவனுக்கு பிள்ளைகளைப் பெற்றுத்தருபவர்கள். அன்னை மரியா திருஅவையின் தலையான இயேசுவை பெற்றுத்தந்தவர்கள். அதேபோன்று திருஅவை திருஅவையின் உடலை பெற்று தருகிறது. 

திருவெளிபாடு 12 ஆம் இயலில் அரக்கபாம்பிற்கும் கருவுற்றிருந்த பெண்ணிற்கும் நடக்கும் போராட்டத்தைப் பார்க்கிறோம். அரக்கபாம்பு அப்பெண் தன் குழந்தையை பிறப்பிக்கும்போது அதனை விழுங்கிவிட காத்திருந்தது. (திவெ12.4). ஆனால் குழந்தை பிறந்ததும் குழந்தை கடவுளின் அரியணைக்குப் பறித்து செல்லப் பெற்றது. பெண் பாலைவனத்திற்கு ஓடி போனார். 260 நாள் அங்கு தங்கியிருந்தார். அங்கு கடவுள் அவரை பேணி பாதுகாத்தார் என்றும் பிறகு கடவுளின் தூதர் மிக்கேலுக்கும் அரக்கப் பாம்பின் துVதர்களுக்குமிடையே போர் உண்டானது. அதில் அரக்க பாம்பு தோல்விக் கண்டது (திவெ 12.4-8)

தமிழ்நாடு சென்ற மாதத்தில் போராட்டக் களமாகவே மாறிவிட்டது. உச்ச நீதிமன்றம் கட்டளையிட்ட‘ காவேரி மேலாண்மை வாரியத்தை’ மத்திய அரசு அமைக்காததை எதிர்த்து ஆளும் கட்சியும் எல்லா எதிர்கட்சிகளும் இணைந்து இரயில் மறியல் போராட்டம், அரசு அலுவலங்களில் முற்றுகையிடுதல் உண்ணா விரதப் போராட்டம் போன்ற போராட்டங்களை நடத்துகிறார்கள். இதனால் தமிழ்நாட்டிற்கு காவேரி நீர் உரிமையைத் தர வேண்டும் என்று உரத்தக் குரலெழுப்பி வருகிறார்கள். திருஅவையும் பல இடங்களில் இப்போராட்டத்தில் பங்குபெற்றிருக்கிறது.  கேட்டால்தான் கிடைக்கும். குரல் கொடுக்கவில்லையயன்றால் உள்ளதையும் கொத்திக் கொண்டு சென்றுவிடுவார்கள்.

தூத்துக்குடியில் தாமிரம் தயாரிக்கும் ஸ்ரலைட் ஆலை அப்பகுதி மக்களின் உடல்நலத்தை அழிக்கிறது என்று அந்த ஆலையை மூட  வேண்டும் என்ற  போராட்டம்.

தேனியில் அமைக்க போகின்ற நியூட்ரோன் ஆய்வுக்கூடமும் இயற்கையை அழித்துவிடும் என்று அதற்கு எதிர்ப்பான போராட்டம்.

காஷ்மீரில் பழங்குடி சிறுமி ஆசிஃபா கோவிலில் பல நபர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதில் மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க வைச் சேர்ந்தவர்கள் கைதானவர்களுக்கு ஆதரவாக ஊர்வலம் சென்றிருக்கிறார்கள். உத்தரபிரதேசம் மற்ற பல இடங்களில் இளம் சிறுமிகளை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். மோகமென்ற உணர்வு மிருக நிலையை அடைந்தது போல நிகழ்வுகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. உணர்வுகளை ஒழுக்கத்துடன் பயன்படுத்துவதுதான் நாகரீகம்.

கர்நாடகாவில் தேர்தல் நடக்கப் போகிற இவ்வேளையில் மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு, காவிரி நீர் பங்கீட்டு நீதியை செயல்படுத்தாமல் நாடகமாடி வருகிறது. காவிரியில் தண்ணீர் வரவில்லையயனில் தமிழ்நாடு பாலை வனமாகத் தான் மாறிவிடும். தமிழக மக்கள் ஒன்றிணைந்து உரிமையைப் பெற வேண்டும்.

அண்மையில் வாட்ஸ்அப்பில் குறிப்பிட்டி ருந்தார்கள். வருகிற மே 1 ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் நடக்கும். அப்போது அந்தந்த கிராமத்திற்கு கொடுக்கப்படும் திட்டங்கள் என்ன? உதவிகள் என்ன? என்று அறிவிப்பார்கள். கிராமத்திலிருந்து ஒரு நூறு பேராவது அதில் கலந்துக் கொண்டால் கிராமத்திற்கு அளிக்கப்படும் முன்னேற்றத் திட்டங்களை அறிந்துக் கொண்டு உரிமைகளைப் பெறலாம் என்றார்கள். மக்கள்  இதை போன்ற ஆக்கபூர்வமான நிகழ்வுகளில் பங்குபெற வேண்டும். மற்றொரு ஊக்கமளிக்கும் செய்தி. அரியலூர் மாவட்டம் விளாங்குடியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. தியாக ராஜன் அவர்கள்(69) அமெரிக்காவில் பணிபுரியும் தன் மகளின் உதவி கொண்டு சென்ற இரண்டு ஆண்டுகளாக இரண்டு ஏரிகளை 10 லட்ச ரூபாய் செலவு செய்து தூர் வாரியிருக்கிறார். இதனால் அவ்வூர் மக்கள் பெரிதும் பயனடைந்துள்ளனர். இவரைப் போன்று மக்கள் ஒன்றித்து பொதுப் பணிகளைச் செய்யலாம்.  ஊழல் நிறைந்த நம் நாட்டில் இத்தகைய ஒளிவிளக்குகள் நாட்டிற்கு உயிரைத் தருகின்றன. அன்னை மரியாவின் பணிவு, பிறரன்பு நம்மில் ஒளிமயமாகட்டும். 

Tuesday, 26 December 2017

இறைவனின் அன்னையாகிய துVய கன்னி மரியா

இறைவனின் அன்னையாகிய துVய கன்னி மரியா
புத்தாண்டு  விழா  ஜனவரி - 1, 2018
எண் 6:22-27, கலா 4,4-7, லுVக் 2,16-21

அருட்பணி.  பு. சிரில் ரிசர்ட் கிருபாகரன்

இன்று அன்னையாம் திருச்சபை கன்னிமரியாள் இறைவனின் தாய் என்கின்ற மறைப்பொருளையும், புத்தாண்டு தினத்தையும் சிறப்பிக்கின்றது. கன்னி மரியாள் இறைவனின் தாய் என்கின்ற நம்பிக்கைக் கோட்பாடு கி.பி.451 இல் எபேசு பொதுச்சங்கத்தில் கிறிஸ்துவின் மனித இயல்பிலும், இறையியல்பிலும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை களைவதற்காக கொடுக்கப்பட்டது. இந்த நம்பிக்கைக் கோட்பாட்டின் வழியாக தப்பறை கொள்கைகளை அகற்றி திருச்சபையின் வாழ்வை வளமையாக்கிய தினம் இன்று. ‘இலையுதிர் காலம் என்பது மரணமல்ல. இன்னொரு தயாரிப்புக்கான தொடக்கம்.  அஸ்தமனம் என்பது மறைவு அல்ல. இன்னொரு உதயத்திற்கான பதுக்கம்,’ என்ற வைரமுத்துவின் வார்த்தைகளைப் போல, இலையுதிர் காலம் போலவும், அஸ்தமனம் போலவும் 2017 ஆம் ஆண்டில் நடந்த நன்மை, தீமை அனைத்தும் மறைந்து, புதிதாக துளிர்த்துள்ள, புதிய உதயமாகிய 2018 ஆம் ஆண்டில் இறைவன் நமக்குக் கொடுக்கும் இன்னொரு வாய்ப்பை இரு கரத்தோடு வரவேற்போம்.

ஏவாள் என்கின்ற முதல் பெண்ணின் வழியாக பாவம் ஆட்சி செய்யத் தொடங்கினாலும், அன்னை மரியாள் என்கின்ற புதிய ஏவாள் வழியாக அருள் ஆட்சி செய்ய கடவுள் வழி வகுத்தார். இத்தகைய அளப்பெரிய அன்னையின் உதவியினால்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கலா 4.7இல் வாசிப்பது போல ‘நாம் அனைவரும் கடவுளுக்குரிய பிள்ளைகள் என்கின்ற அருள்நிலையை பெறுகிறோம்.’இத்தகைய பிள்ளைகளின் வாழ்வு எப்பொழுதும் பிறருக்கு வாழ்வு கொடுகின்ற, வெளிச்சம் கொடுக்கின்ற அற்புத ஜோதியாக மிளிர வேண்டும். நம் வாழ்நாளில் பல புத்தாண்டு கொண்டாட்டங்கள் வந்து போகலாம். பல சூளுரைகளுடனும், உறுதிமொழி களுடனும், உத்வேகத்துடனும் ஆரம்பிக்கும் புதுவருடம் சில  ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் தளரா மனத்துடன் ஓடினோம் என்கின்ற எண்ணம் மேலோங்கும் பொழுதுதான் வெற்றி பரிசை சுவைக்க முடியும்.

வாழ்க்கையில் மிக மோசமான சூழ்நிலைகளில் பல வெற்றியாளர்கள் சிக்கித் தவித்திருக்கின்றார்கள். அவற்றைத் தங்களுடைய அசாத்திய மனப்பாங்காலும், திடமான தன்னம்பிக் கையாலும் அயராத முயற்சியினாலும் தோல்விகளை முறியடித்து தடைகளைத் தகர்த்தெறிந்து வெற்றியை சுவைத்திருக்கிறார்கள். நிறைய சிந்தனை செய்து, குறைவாகப் பேசி, துல்லியமாகத் திட்டமிட்டு, கவனத்தோடு செயல்படுகின்ற மனப்பக்குவம் நமக்கு வேண்டும். தமிழருவி மணியன் அழகாக சொல்வார், ‘மரணமில்லா பெருவாழ்வு, நோயின் நிழல், தீண்டாத உடல் நலம், கட்டுப் பாடற்ற சுதந்திரம், துன்பமில்லாத இன்பம் முரணும் மோதலுமற்ற சமுகச்சூழல் அமைய வேண்டும் என்பது எல்லா மனிதர்களின் ஆசை. நினைத்தபடி எல்லாம் நடந்துவிட்டால் அதற்கு பெயர் வாழ்க்கை இல்லை.’ எந்த சூழ்நிலையிலும் நிறைவான மனம், கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை, பிறர் நலம் பேணும் செயல்கள் இவையே நம் சந்தோசத்தை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன. பூத்திருக்கும் புத்தாண்டில் புதிய முயற்சிகள், புதிய உறுதிமொழிகள், புதிய வாழ்க்கை, புதிய பயணம் மேற்கொள்ள வாழ்த்துகிறேன்.

Sunday, 1 October 2017

இயேசுவின் புனித முகம் காட்டும் திருச்செபமாலை

இயேசுவின் புனித முகம் காட்டும்  திருச்செபமாலை

 அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

கத்தோலிக்கத் திருச்சபையில் பல பக்தி முயற்சிகள் உள்ளன. இவற்றுள் காலத்தால் முந்தையதும், எளிதில் அனைவராலும் சொல்லக் கூடிய செபமாகவும் திகழ்வது செபமாலை. இதுவே இறை - மனித ஒன்றிப்பின் அடையாளமான அருள் மாலை. இது நமது பாரம்பரியச் சொத்து. பாமரர் முதல் படிக்காதவர் வரை அனைவரையும் ஒருங்கிணைக்கும் எளிய வழியிலான தியானமுறை. நமக்கே உரித்தான தனி அடையாளமே செபமாலைதான். 

 செபமாலையின் வரலாறும், வளர்ச்சியும்: 

இன்று நம் கரங்களில் தவழ்ந்து செபிக்கத் தூண்டும் செபமாலை தனக்கேயுரிய வரலாற்றுப் பின்னணியினைக் கொண்டதாகும்.

 கொலோசியம் மறைசாட்சியர்: 

  உரோமைக்குச் செல்வோர் அனைவரின் சிந்தை கவர்வதும் இளந்திருச்சபை அனுபவித்த  கொடூரமான வேதனைகளை நம் கண்முன் கொண்டு வருவதன் சின்னமாகத் திகழ்வது கொலோசியம் என்ற விளையாட்டு  அரங்கம். சிறுவர், இளையோர், முதியோர் என எல்லாப் பருவத்தினரும் கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக வன விலங்குகளுக்கு இரையாக்கப்பட்டனர். இவர்களின் வேதனைகளைக் கண்டு இன்ப ரசனையில் ஈடுபட்டது அன்றைய ஆட்சியாளர் கூட்டம்.
இத்தகைய வேதனைகளை அனுபவித்து இயேசுவுக்காய் இன்னுயிரைத் தந்த இந்த மறைச்சாட்சியர் தங்களது தலைகளில் ரோசாக் கீரிடம் சூட்டிக் கொண்டு மகிழ்ச்சி கீதம் இசைத்துக் கொண்டு வன விலங்குகள் முன் வீரத்தோடு துள்ளிக் குதித்து மகிழ்ந்தனர். மரித்த இவர்களின் மலர்க்கிரீடங்களை பொறுக்கி வந்து விசுவாசிகள் மாலைகளாகக் கோர்த்து இறைப்புகழ்ச்சிப் பாடல்களைப் பாடினர். இதுவே செபமாலை தோற்றத்தின் முதல் படி எனலாம். 

பாலைவனத் தந்தையர்:

எகிப்தின் பாலைவனத்தில் தவ வாழ்வு வாழ்ந்து வந்த புனித வனத்து அந்தோணியார், புனித வனத்து சின்னப்பர் போன்ற பலரை நாம் பாலைவனத் தந்தையர் என்கிறோம். இவர்கள் தங்களுக்குக் கிடைத்த கூழாங்கற்கள் அல்லது தானியங்களை 150 எண்ணிக்கையில் சேர்த்து திருப்பாடல்களைப் பாடி வந்தனர். 

பாமரர் வாழ்வில் ...

இவர்களைத் தரிசித்து இவர்களின் ஆலோசனையின்படி படிப்பறியா பாமரர்களும் 150 முறை மிகவும் எளிமையாக மங்கள வார்த்தை செபம் சொல்லிச் செபித்து வந்தனர்.

 துறவிகள்: 

  9,10,11,12 ஆகிய நூற்றாண்டுகளில் ஆங்காங்கே உலக இன்பத்தினை வெறுத்து இறைவனையே தங்களது வாழ்வின்  ஒரே சொந்தமெனக் கருதிய பலர் பல குழுக்களாகத் துறவு மடங்களை நிறுவிச் செயல்பட்டனர். இவர்கள் 50 முறை கர்த்தர் கற்பித்த செபம், 50  முறை மங்கள வார்த்தை செபம் சொல்லிச் செபித்தனர். தங்களின் கவனம் சிதறாமல் இருப்பதற்காக கம்பி இழைகளில் மணிகள் போல் கோர்த்துப் பயன்படுத்தி வந்தனர்.

அல்பீஜியன்ஸ் தப்பறையாளர்களும், புனித தோமினிக்குவும்:

பிரான்ஸ் நாட்டின் தென் பகுதியில் அல்பி என்ற அல்பீஜியன்ஸ் என்னும் புதிய கொள்கை உருவாகிறது. அவர்களின் முக்கிய தவறான போதனைகள்: இயேசு உண்மையான மனித உடலில் தோன்றவில்லை. உலகில் கானும்படி மட்டும் தோன்றினார். எனவே உடலின் உயிர்ப்பு இல்லை. திருவருட்சாதனங்கள் இல்லை. திருமணம் செய்துக்கொள்வதை எதிர்த்தனர். 12,13 ஆம் நூற்றாண்டுகளில்  உருவான  இந்தத் தப்பறைக் கொள்கையினால் ஐரோப்பியத் திருச்சபை ஆட்டம் கண்டது. குருக்களும், துறவிகளும் பெரும் நெடிக்கடிக்கு உள்ளாயினர். எங்கும் கலகங்களும், குழப்பங்களுமே மிகுந்திருந்தன. கத்தோலிக்க  தேவாலயங்களும், பரிசுத்த பொருட்களும் அவசங்கைக்குள்ளாயின. திருச்சபை அழிக்கப்பட்டு வருமோ என்ற அச்சமும், கவலையும் எளிய நம்பிக்கையாளர்களின் மனதினை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. இந்த இக்கட்டான நேரத்தில்தான் ஆண்டவர் தோமினிக்கு என்னும் கர்த்தூசியன் சபைக் குருவை வல்லமையாகப் பயன்படுத்தினார். இவர் அன்பீஜென்ஸ் கொள்கை கொண்டோரை மனம் மாற்ற பத்தாண்டுகள் கடுமையாகக் போராடினார். இந்த இழிநிலை மாறிட அன்னை மரியாவை நோக்கிக் கண்ணீரோடு செபித்தார்.

செபமாலையினைக் கரங்களில் ஏந்திய மாதாக் காட்சி:
1208 ஆம் ஆண்டு அன்றொரு நாள் டோமினுக் ப்ருயில்லே என்னும் ஆலயத்தில் காதலாகி, கசிந்துருகி செபித்துக் கொண்டிருந்தார். இதோ! ஆங்கே கரங்களில் ஜெபமாலை ஏந்தியபடி கண்ணைப் பறிக்கும் அன்னை மரியா. ஒளியுடன் டோமினுக்குவை நோக்கி வந்தார். இந்த உலகின் எல்லாப் பாவங்களுக்கும் பரிகாரமாகக் கபிரியேல் வானத்தூதரின் வாழ்த்துச் செய்தியோடு செபியுங்கள். எனது மகனின் பிறப்பு, வாழ்வு, மரணம், உயிர்ப்பு என்னும் மறைபொருள்களைத் தியானியுங்கள் என்று சொல்லி மறைந்தார். இவ்வாறு செபமாலை பக்தி பரவுவதற்கு டோமினிக்குவே முதல் கருவியாகத் தெரிந்து கொள்ளப்பட்டார்.

அல்பீஜினியர்களின் மனமாற்றம்:

அன்னை மரியாவின் காட்சியினால் உற்சாகம் அடைந்த தோமினிக்கு துலூஸ் மாநகர் சென்றார். ஆலயக் கதவுகள்  தாமாகவே திறக்கின்றன. ஆலயமணிகள் தாமாகவே ஒலியயழுப்புகின்றன. மக்கள் கூட்டம் ஆலயத்துள் நிறைகின்றது. மாதாவின் காட்சி பற்றியும், அவர் தந்த செய்தி பற்றியும் எடுத்துரைக்கின்றார் தோமினுக்கு. ஆனால் இவரின் பேச்சினை நம்பாத அல்பீஜினியர்கள் ஆலயத்தினை விட்டு வெளியேற முனைகின்றனர். ஆனால் என்ன ஆச்சரியம். வானம் திறந்து இடி, மின்னலோடு கூடிய மழை, கடும் பனி போன்றவை திடீரென எழும்பி இவர்களைத் தடுத்து நிறுத்துகிறது. அக்கனமே மனம் மாறிச் செபமாலை செபிக்க ஆரம்பிக்கின்றனர். வாழ்விலும் மாற்றம் காணுகின்றனர்.

அக்டோபர் மாதம் செபமாலை மாதம் எனப்படுவதன் வரலாற்று நிகழ்வு:

16  ஆம் நூற்றாண்டில் முஸ்ஸீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் பெரும் போர் மூண்டது. திருத்தந்தை 5 ஆம் பத்திநாதர் ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய புனிதக் கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்கி போருக்கு ஆயத்தப்படுத்துகின்றார். கடும்போர் நடைபெறுகிறது. திருத்தந்தை மக்களோடு இணைந்து திருச்செபமாலையினைக் கரங்களில் ஏந்தி பக்திப் பரவசத்தோடு  செபிக்கின்றார். என்னே ஆச்சரியம். அன்னையின் பேருதவியினால் எதிரிப்படைகள் மீது கிறிஸ்தவர்கள் வெற்றிக் கொள்கின்றனர். அந்த நாள் 1571 ஆம் ஆண்டு அக்டோபர் 07. போரில் வெற்றிப் பெற்ற இடம் லெபாண்டோ. இறைமக்களோடு இணைந்து ஒரு நாள் முழுவதும்  திருத்தந்தை செபித்த ஆலயம் சாந்தா மரியா மஜியோரே. எனவேதான் இந்த நாள் செபமாலை மாதா திருவிழாவாகவும், அக்டோபர் மாதம் செபமாலை மாதா மாதமாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நற்செய்தியின் சாரம் ஜெபமாலை:

மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு நற்செய்தி நூல்களும் இயேசுவின் வாழ்வினைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இதனை மையமாகக் கொண்டே செபமாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு, பிறப்பு, வளர்ப்பு, புதுமைகள், போதனைகள், பாடுகள், மரணம், உயிர்ப்பு, போன்றவற்றினையே நாம் செபமாலையில்  தியானித்துச் செபிக்கின்றோம். மகிழ்வின் மறை உண்மைகள், ஒளியின் மறை உண்மைகள், துயரின் மறை உண்மைகள், மற்றும்  மகிமையின் மறை உண்மைகள்,  போன்ற நான்கு தலைப்புகளில் இருபது மறை உண்மைகளை தியானித்துச் செபிக்கின்றோம். எனவே செபமாலை என்பது நற்செய்தியின் சாரம் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

இயேசுவின் புனித முகம் காட்டும் திருச்ஜெபமாலை:

இயேசுவின் வாழ்க்கை வரலாற்றினையும், போதனைகளையும் மட்டும் தியானிக்கச் செய்வது ஜெபமாலை அல்ல. மாறாக இறைவனின் மீட்புத் திட்டத்தில் அன்னை மரியாவின் பங்களிப்பு, இறைமகன் இயேசுவின் மீட்புச் செயல் பங்களிப்பு, இறைமகன் இயேசுவின் மீட்புச்செயல்பாடுகள் ஆகியவற்றையும் நாம் தியானிக்கின்றோம். அன்னை மரியா தந்த ஜெபமாலை அமலன் இயேசுவின் புனித முகம் காட்டும் அருள்மாலை. எனவே தினமும் ஜெபமாலை செபிப்போம். இயேசுவின் முகம் காண்போம். இறை மீட்புத் திட்டத்தில் நம்மையும் இணைத்துக் கொண்டு உலகின் ஈடேற்றத்திற்காக உழைப்போம்

Saturday, 9 September 2017

நாசரேத்தூர் நல்லாளின் பிறப்பும், நலிந்தோரின் மகிழ்வும்

நாசரேத்தூர் நல்லாளின் பிறப்பும், நலிந்தோரின் மகிழ்வும்.

 அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

அனைத்து உறவுகளின் தலையாய உறவு தாய் உறவு. தாலிக் கொடி உறவில் உதயமாகும் குடும்ப உறவு தொப்புள் கொடி உறவில் முழுமை காண்கின்றது. எனவே தான் தாய் - சேய் உறவினைப் புனிதமான உறவு என்கிறோம். அம்மா உறவு பற்றிப் பல பாடல்கள் இருந்தாலும் அனைவரின் நெஞ்சைத் தொடும் சமீபத்திய பாடல் இதோ....

நூறு சாமிகள் இருந்தாலும் - அம்மா
உன்னைப் போல் ஆகிடுமா?
கோடி கோடியாய்க் கொடுத்தாலும் -நீ
தந்த அன்பிற் கீடாகுமா?

இரத்தத்தை நான் தந்தாலுமே - உன்
தியாகத்துக் கீடாகுமா? - நான்
  பட்டக் கடன் தீர்ப்பேன் என்றால்
  ஒரு ஜென்மம் போதாதம்மா
நடமாடும் தெய்வம் நீ தானே!...

மழைவெயில் பார்க்காமல் பார்ப்பாள் வேலை
குழந்தைதான் அவளின் கழுத்துக்கு மாலை
மெழுகாக உருகி தருவாளே ஒளியை
குழந்தையின் சிரிப்பில் மறப்பாளே வலியை
நடமாடும் தெய்வம் நீதானே!...

மலர்ந்தும், மலராத மரியா பற்றிய குறிப்பு :

முதல் பெற்றோர் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் புரிகின்றனர். இப்பாவம் மனிதருக்குத் தண்டனையினை வருவிக்கின்றது (தொநூ 3:14-19). இதன் விளைவுகளை கீழ்க்கண்டவாறு விவிலியத்தின் முதல் நூல் விவரிக்கின்றது.

அ. பாம்பு பெற்ற சாபம் : 

  1. தரையில் வயிற்றினால் ஊர்ந்து செல்வது. 2. புழுதியைத் தின்பது. 3. பகைமையைச் சந்திப்பது. 4. உனக்கும், பெண்ணுக்கும், உன் வித்துக்கும், அவள் வித்துக்கும் பகைமையை உண்டாக்குவேன். இது பாம்புக்கும் மனிதருக்கும் இடையேயுள்ள எதிரி உணர்வைக் காட்டுகிறது.

ஆ. பெண்ணுக்கு அளித்த தண்டனைகள் :

1. வேதனையோடு பிள்ளை பெறுதல். 2. கணவன் மேல் வேட்கைக் கொள்ளல். 3. கணவன் மனைவியை ஆள்வான்.

இ. உனக்கும், பெண்ணுக்கும்...

உனக்கும், பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப் படுத்துவாய் (தொநூ 3:15). இங்கு நாம் காணும் அவள் என்ற சொல் மரியாவையே சுட்டிக் காட்டுகிறது என்பர் விவிலிய அறிஞர். விவிலியம் தனது வரலாற்றினை மலர்ந்தும் மலராத தொடக்க நிலையிலேயே மரியாவை உருவகமாகக் குறிப்பிடுகிறது. 

மீட்பின் நம்பிக்கை மரியா : 

நடைமுறையில் மனிதனிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள மனிதனும் போராடுகின்றனர். இது நன்மைக்கும் - தீமைக்கும் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே உள்ள போராட்டம். மனுக்குலத்தின் வித்தில் உருவான நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தீமையின் மீது வெற்றி கொண்டு மீட்பினை வழங்கினார்.

இயேசு கிறிஸ்து புதிய ஆதாம் (1கொரி 15:45-49). பழைய ஆதாமினால் பாவமும், புதிய ஆதாமினால் வாழ்வும் வந்தது (உரோ 5:12-15). அன்னை மரியா மீட்பர் இயேசுவிடம் கொண்டிருந்த நெருக்கமான உறவின் காரணமாகவும், மீட்புச் செயலில் அவர் அளித்த முழு ஒத்துழைப்பின் காரணமாகவும் அந்த மரியா பெற்றெடுத்த குழந்தை இயேசு அனைத்துத் தீமைகளையும் அழித்தொழித்து வெற்றி காண்பதனாலும் (தொநூ 3:15)இல் அன்னை மரியா மீட்பின் நம்பிக்கையாக முன்னுரைக்கப்படுகின்றனர்.

திருச்சபையின் வரலாற்றில் நாம் காணும்  மரியா வணக்கம் :

இயேசுவும், திருத்தூதர்களும் அவர்தம் சீடர்களும், இவர்களைப் பின்பற்றி ஆதிக்கிறிஸ்தவர்களும் மரியாவின் பால் அதிகப் பாசமும், பற்றும் கொண்டிருந்தனர். இளந்திருச்சபையின் வளர்ச்சிக்கு மரியாவின் பங்கேற்பு அளப்பரியது. இதன் பின்னணியிலேயே மரியா வணக்கம் தொடங்கி இன்றும் தொடர் கதையாகிக் கொண்டிருக்கின்றது.

திருமுறைப் புறநூல்கள் கூறும் மரியாவின் பிறப்பு, வளர்ப்பு பற்றிய குறிப்புகள்:

தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர்கள் கடவுள் அருளியதை உரைத்ததே இறைவாக்கு (2 பேதுரு 1:21). மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும், சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது ( 2 திமொ 3:16). இவற்றைத் தவிர்த்து விவிலிய நூல்கள் போன்றே மரியாவுக்குப் புகழ் சேர்க்கும் விதமாகப் பல நூல்கள் எழுதப்பட்டன. அவை விவிலிய அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்படாதவை. இவற்றினையே நாம் திருமுறைப் புறநூல்கள் என்கிறோம்.

அவற்றுள் மரியா வணக்கம், மரியியல் சிந்தனைகள் போன்றவற்றை அதிகம் பாதிப்பவை யாக்கோபுவின் துவக்க நற்செய்தி  (Infancy gospel of James)  போலி மத்தேயுவின் நற்செய்தி  (Gospel of proto Mathew), பிலிப்புவின்   நற்செய்தி  (Gospel of Philip), தோமாவின் துவக்க நற்செய்தி  (Infancy gospel of Thomas),  பிலாத்துவின் பணிகள் (Acts of Pilate), மற்றும் மரியாவின் இறப்பு (Death of Maria)  போன்றவையாகும்.

யாக்கோபுவின் நற்செய்திப்படி மரியாவின் பிறப்பு, வளர்ப்பு:

அன்னா, யோவாக்கிம் ஆகிய இருவரும் முதிர் வயதில் குழந்தைப் பேறடைகின்றனர். அந்தக் குழந்தையே மரியா. பழைய ஏற்பாட்டின் சாமுவேல் போன்று தங்களின் பெண் குழந்தையினை யயருசலேம் ஆலயத்தில் அர்ப்பணித்து ஆலயத்  திருப்பணியில் ஈடுபடுத்துகின்றனர். மரியா என்னும் இவரே தனது 12 ஆம் வயதில் யோசேப்புவைத் தனது கணவராகத்  தேர்ந்து கொள்கின்றார்.

மரியாவின் இறைமைப் பிறப்பு :

அருள் மிகப் பெற்றவரே வாழ்க ! ஆண்டவர் உம்மோடு இருக்கின்றார் (லூக் 1:26) என்ற வாழ்த்தொலி மூலம் மரியா இறைமைப் பிறப்பெய்துகின்றார். உடல் ரீதியினாலான  மரியாவின் பிறப்பு பற்றிய சான்று நமக்குத் தெளிவாகக் கிடைக்காவிட்டாலும் இறைமைக்குள்ளான மரியாவின் பிறப்பிற்கான சான்றாக இது அமைகின்றது.

மரியாவின் காட்சிகளுள் மாறுபட்டு நிற்கும் வேளை நகர் காட்சி:

உலகின் பல்வேறு நாடுகளில் இக்கட்டான காலக் கட்டங்களில் மாதா காட்சிதந்து இறை செய்தியினைத் தந்து கொண்டிருக்கின்றார்கள். தென் அமெரிக்காவின் மெக்சிகோவில் குவாதலூப்பே, பிரான்ஸ் நாட்டில் லாசலேத் மற்றும் லூர்து, போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா நகர் போன்ற இடங்களில் மாதா காட்சி தந்திருக்கின்றார். இந்தியாவின் தென் தமிழகமாம் வேளை நகரிலும் மாதா காட்சி தந்துள்ளார். மற்ற காட்சிகளுள் இல்லாத ஒரு வேற்றுமை இங்குண்டு. அது என்ன? குழந்தை இயேசுவைக் கரத்தில் தாங்கியிருப்பதுவே. இது அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் என்று சுட்டிக்காட்டுவது போல் இல்லையா?

மரியா ஓர் அன்னை தெய்வமா ?

கிரேக்க நாட்டு  எடமற்றார், உரோமையில் சிபில், எபேசு நகரத்து டயானா, எகிப்தியரின் ஐசிஸ் போன்றவை பெண் தெய்வங்களாகும். உரோமையரின் அரசு சமயமாக, கிறிஸ்தவம் மலர்ந்ததும் மேற்கூறப்பட்ட பெண் தெய்வ ஆலயங்கள் அனைத்தும் அன்னை மரியாவின் ஆலயங்களாக மாற்றம் பெற்றன. நெஸ்டேரியஸ் என்பவரது போதனையைக் கண்டித்தே இயேசுவின் இறைத்தன்மையும், ஒரே ஆளுமையையும் நிலைநாட்டும் வகையில் எபேசு திருச்சங்கம், மரியா இறைவனின் அன்னை என அறிக்கையிட்டது. எனவே மரியா இறைமகன் இயேசுவின் தாய் என்பதுதான் நமது திருமறைக் கோட்பாடு. மரியா ஒரு பெண் தெய்வம் அல்ல.

தகுதியுடையத் தத்துவக் கோட்பாடு :

18, 19, 20 ஆகிய நூற்றாண்டுகளில் மரியா வணக்கமும், மரியியல் சிந்தனைகளும் மாபெரும் வளர்ச்சி கண்டன.
 இதற்குக் காரணம் கீழ்க்காணும் மூன்று முக்கிய கொள்கைகளாகும். அவை முறையே...

1. தகுதியுடைமை :

இறைவனின் தாய் என்ற முறையில் இறைத் திருவுளத்தினுக்கு முற்றுமாகத் தன்னைக் கையளித்து வாழ்வின் இறுதிவரை வாழ்ந்து மரியா தன்னைத் தகுதியாக்கிக் கொண்டது.

2. தனித்தன்மை :

  மரியா கறைப்பட்ட மனித குலத்தின் தனியயாரு பெருமை, ஊனமுற்ற மக்களினத்தின் ஒப்பற்ற ஒரு முழுமை. பெண்டிருள் பேறுபெற்றவராக வாழ்ந்து தனித்தன்மை மிகுந்து காணப்படுகின்றார் மரியா.

3. இணை ஒப்புமை :

இயேசுவின் பணிகள், பண்புகள், சிறப்புகள், பெருமைகள் ஆகிய அனைத்தும் அன்னை மரியாவுக்கு உரியவையே. எனவே இயேசு மீட்பர் என்றால் மரியா துணை மீட்பர். இயேசு இறைவனுக்கும், மனிதருக்கும் இடைநிலையாளர். இயேசுவுக்கு விண்யேற்றம். மரியாவுக்கு விண்ணேற்பு. இயேசு அரசர் என்றால் மரியா அரசி. ஆக மரியாவின்  தகுதியுடைமை, தனித்தன்மை மற்றும் இணை ஒப்புமை ஆகியவையே தகுதியுடைய தத்துவக் கோட்பாடு எனப்படுகின்றது.

மரியாவின் பிறப்புவிழா, நலிந்தோரின் மகிழ்வு விழா :

சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டு, ஒதுக்கப்பட்டு புறம்பாகி நிற்கும் விளிம்பு நிலை மக்களின் அடையாளமாகத் திகழ்கின்றாள் மரியா. வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருவிழா என்றாலே சாதி, சமய, இன வேறுபாடின்றி தங்களின் உடல் உபாதைகளைப் பெரிது படுத்தாமல் பாதயாத்திரை செல்லக் கூடிய ஏழை மக்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு பெருகிக்கொண்டே வருகின்றது. தங்களின் இன்னல்கள், இடுக்கண்கள், துயரங்கள் போன்றவற்றினை நீக்கும்  சக்தி கொண்ட தாயாக மக்கள் மரியாவைப் பார்க்கின்றனர். எனவேதான் இயேசுவிடம் செல்வதை அதிக உரிமையுடனும், உறவு நெருக்கத்துடனும் மாதாவை அண்டிச் சென்று வாழ்வில் மகிழ்கின்றனர். நாசரேத்தூர் நல்லாளின் பிறப்பு விழா நலிந்தோரின் மகிழ்வு விழா என்பது உண்மையே. நலிந்தோர் மகிழட்டும். நானிலம் தழைக்கட்டும்

Friday, 18 August 2017

அன்னை மரியாவின் விண்ணேற்பும், நமது விடுதலை வாழ்வும் - அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

அன்னை மரியாவின் விண்ணேற்பும், நமது விடுதலை வாழ்வும்

- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

நாசரேத்தூர் நல்லாள் மரியாள். உலக மீட்பரின் தாய். இறைவனின் அன்னை. எனவே மரியாள் ஒரு போதும் மரியாள். எனவேதான் மரியா என்பது மாதா பக்தர்களின் ழுழக்கமாகியது.

 அன்னை மரியா மரித்தாரா?

ஆம். இயேசுவைப் போன்றும்  எல்லா மனிதரைப் போன்றும் மரியா மரித்தார். அழிவுக்குரிய இவரின் உடல் அழியாமை பெற்று நிலையான வீடுபேறு நோக்கி எடுத்துக் கொள்ளப்பெற்றது. இதுவே மரியாவின் விண்ணேற்பு எனப்படுகின்றது.

 அன்னை மரியா பற்றிய நம்பிக்கைக் கோட்பாடுகள்:

மரியா இயேசுவின் தாய் என்ற நிலையில் மிகவும் உயர்ந்த நிலையிலேயே திருச்சபையின் தொடக்கக் காலத்திலிருந்து கருதி வணங்கப்பட்டு வந்தார். மரியா பற்றிய புரிதல்களின் வரலாறு மிகவும் நீண்ட நெடியதொன்றாகும். பல்வேறு சர்ச்சைகள், கருத்து மோதல்களுக்குப் பின்னரே கீழ்க்காணும் நம்பிக்கைக் கோட்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
 1. கி.பி. 431 எபேசு திருச்சங்கம் ‡ இறைவனின் அன்னை மரியா
 2. கி.பி. 649 லாத்தரன் திருச்சங்கம் ‡ என்றும் கன்னியான மரியா
 3. கி.பி. 1854 திருத்தந்தை 9 ஆம் பயஸ் ‡ அமல உற்பவியான மரியா
4. கி.பி. 1954 திருத்தந்தை 12 ஆம் பயஸ் ‡ விண்ணேற்படைந்த அரசியாம் மரியா

மரியாவின் விண்ணேற்பு பற்றிய நம்பிக்கைக் கோட்பாடு அறிக்கை:

மரியா இயேசுவின் தாயாக மட்டுமன்று,  இயேசுவின் முதன்மைச் சீடத்தியாகவும், மீட்கப்பட்டோரின் கூட்டத்தில்  தலைப்பேறாகவும் திகழ்கின்றார். எனவே இவர் பிறக்கும் பொழுதும் இவ்வுலகில் வாழ்ந்த நாட்களிலும், இறப்பிற்குப் பின்னரும், பாவ மாசின்றித் திகழ்ந்தார். இவரின் மரணத்திற்குப் பின்னரும் இவரின் உடல் அழியாது ஆன்மாவோடு விண்ணிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதனை திருச்சபையின் நம்பிக்கைக் கோட்பாடாக அறிவிக்க வேண்டும் என்று 1869 - 1870களில் நடைபெற்ற முதல் வத்திக்கான் திருச்சங்கத்தில் பங்கேற்ற 200 ஆயர்கள் வலியுறுத்தினர். 1922 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாடு  விண்ணேற்பு அன்னையின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின் 1895 ஆம் ஆண்டு தனது தனிப்பட்ட  கடிதத்தின் மூலம் அன்னையின் விண்ணேற்பு பற்றிய கருத்தினை அறிந்து கொள்ள முற்பட்டார். 95 விழுக்காடு ஆயர்கள் இதற்கு ஒப்புதல் வழங்கினார்கள். பல்வேறு தேதிகளில் விண்ணேற்பு விழா கொண்டாடப்பட்டாலும் ஆகஸ்ட் 15 உரிய நாளாகக் கருதப்பட்டது.

  Munificient Tissimus Deus என்னும் திருத்தூது மடல் மூலம் 1954 நவம்பர் 1 ஆம் நாள் திருத்தந்தை 12 ஆம் பயஸ் மரியாவின் விண்ணேற்பினை திருச்சபையின் நம்பிக்கைக் கோட்பாடாக அறிவித்தார். அமல உற்பவியான கன்னி மரியாவின் உடல் அழியாது ஆன்மாவோடு விண்ணகத் தந்தையினால் விண்ணிற்கு எடுத்துக் கொள்ளப் பெற்றது என்பதுவே இம்மடலின் மையக் கருத்தாகும். எனவே ஆகஸ்ட் 15 பெருவிழாவாகவும், கடன்திருநாளாகவும் விண்ணேற்றப் பெருவிழா கொண்டாப்பட்டு வருகிறது.

 மரியாவின் விண்ணேற்பும், இந்தியாவின் விடுதலையும்:

இவ்வுலக தீயசக்திகளிலிருந்து விடுதலை பெற்றவரே மரியா. இந்தியா ஆங்கிலேயரின் அடிமைத்தனத்திலிருந்து 1947 ஆகஸ்ட் 15ஆம் நாள் விடுதலைப் பெற்றது போன்று அனைத்து தீய அடிமைத் தனங்களிலிருந்தும் விடுதலை பெற்றிடுவோம் என்னும் நோக்கில் இந்தியா தனது 70 ஆம் ஆண்டு விடுதலை விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தியாகிகளை எண்ணித் தலை வணங்குகின்றது.

 அகிம்சையயனும் தத்துவமும் அதன் விளைவுகளும்: 

1857 ஆம் ஆண்டு தொடங்கியது இந்திய விடுதலைப்போர். சத்தியாக்கிரகம் மற்றும் அகிம்சை இரண்டையும் இரு கண்களாகப் போற்றிச் செயல்படுத்திக் காட்டிய மகாத்மா காந்தியின் தலைமையில் விடுதலைப் போர் நடந்தது. கத்தியின்றி, இரத்தமின்றி யுத்தமொன்றை  நடத்தி எமது சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதில்லை என்ற ஆணவம், கர்வம் நிறைந்த பிரிட்டிஷாரை  விரட்டியடித்தோம். கண்ணீரும், செந்நீரும் சிந்தி செக்கிழுத்தும், உயிரை இழந்தும் சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகச் செம்மல்களின் கனவுகள் இன்றைய பாரத நாட்டில் நனவாகிறதா என்பதனை எண்ணிப் பார்க்கும்  நாளே இந்த நாள்.

 விடுதலை பெற்ற இந்தியாவின் தனித்துவப் பயணம்:

பல்வேறு  இனம், மொழி, மதம், கலாச்சாரம், பாரம்பரியம் கொண்ட இந்தியா தனக்குள் சண்டையிட்டுக் கொண்டு பிளவுபட்டு விழும் என்ற வெள்ளையரின்  அவலாசையைப் பொய்யாக்கி ஒரே இந்தியா என்பதில் நாம் பெருமை கொள்கின்றோம். உலகுக்கே வழிகாட்டும் மக்களாட்சி தத்துவத்தின்படி ஐந்தாண்டுக்கொருமுறை தேர்தல் நடத்தி உலகின் தலை சிறந்த மக்களாட்சி நாடாகத் திகழ்ந்து வருகின்றது. நமக்குள் ஆயிரம் பிரச்சினைகள், பங்காளிச் சண்டைகள். இவைகள் மத்தியிலும் வேற்றுமையில் ஒற்றுமை. எல்லோரும் ஓரினம். அதுவே எமது இந்தியா என்பதனை உலகுக்குப் பறைசாற்றி வருகிறோம்.

முதல் பிரதமர் நேரு முதல் இன்று வரையில் தனக்கென தனிக்கொள்கையை வகுத்துக் கொண்டு எந்நாட்டினருக்கும் அதாவது பீடு நடைபோட்டு வருகின்றோம் நாம். ஆண்டு 70 ஆயினும் இளமை உள்ளங்கொண்டு இந்தியா திகழ்கின்றது. எனினும் நமது விடுதலைப் பயணம் முழு நிறைவடைந்ததாகச் சொல்ல முடியவில்லை. மக்களைக் கொண்டு மக்களுக்காக, மக்களாலே உருவாக்கப்படும் அரசு மக்கள் நலனில் முழுமையான ஈடுபாட்டோடு செயல்படுகிறதா என்பது கேள்விக்குறியே.

விடுதலை இந்தியாவின் வளர்ச்சியும், தளர்ச்சியும்:

பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி போன்றவற்றின் மூலம் உணவு தானியப் பெருக்கம், பால் உற்பத்திப் பெருக்கம் மக்களின் தேவையை நிறைவு செய்தது. 1990 வரை யe ணூஐdஷ்ழிஐ யற்தீ ணூஐdஷ்ழிஐ என்ற கொள்கை மூலம் தனது உள்நாட்டுப் பெருக்கத்தில் மட்டுமே இந்தியா முழுக் கவனம் செலுத்தியது. 1990 ஆம் ஆண்டு முதல் உலகமயமாதல், தாராளமயமாதல் என்னும் இரு கொள்கைகளைச் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் உலகச் சந்தையில் கிடைக்கும் எல்லாப் பொருள்களும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. மக்கள் சுதந்திரமாக தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கி அனுபவிக்கின்றனர். குறிப்பாக எலக்ட்ரானிக் பொருள்கள் மூலம் கணிணியுகத்தில் நாம் பயணிக்கின்றோம். 10,15 ஆண்டுகளுக்குள்ளாக ஊடகப் புரட்சி (ளீலிதுதுற்ஐஷ்உழிமிஷ்லிஐ யூeஸலியிற்மிஷ்லிஐ)  ஏற்பட்டு  உலகின் மூலை முடுக்கில் நடைபெறும் நிகழ்ச்சிகள் உடனுக்குடன் எல்லா மக்களாலும் அறியப்பட்டு வருகிறது. இந்திய இளம் விஞ்ஞானிகள் பலர் உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் பணியாற்றி வருகின்றனர். நமது கரங்களில் தவழும் செல்போன்கள் ஊடகப் புரட்சியினுக்குச் சான்றாகத் திகழ்கின்றன.

கிராமங்களே இந்தியாவின் இதயம் என்றார் மகாத்மா காந்தியடிகள். கிராமியப் பொருளாதாரமே இந்தியப் பொருளாதாரம். நமது நாடு விவசாயம் சார்ந்த நாடு. கிராமியப் பண்பாடு, கிராமியக்கலை, கலாச்சாரம் போன்றவை நவீன வளர்ச்சி என்ற அரக்கனின் கரத்தால் அழிக்கப்பட்டு  வருகின்றன. ஒருபுறம் பகட்டான அற வளர்ச்சி. மறுபுறம் குழி விழுந்த கன்னங்கள் ஒட்டிய ஏழைக் கிராமத்தினர். தனது சுயத்தை இழந்து பாரம்பரிய விவசாய முறையை கைவிட்டு வேலை தேடி நகரங்கள் நோக்கி நகரும் நிலை பாராட்டுதற்குரியதொன்றல்ல. உலகச் செல்வந்தர் வரிசையில் இந்தியர் இடம் பெறுவது மகிழ்ச்சிக்குரியதே. அதே வேளையில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு விவசாயிகளைப் பிச்சைக்காரர்களாக்கி வருவது எந்த விதத்தில் நியாயம்?

 அந்நிய முதலீடும் அதன் விளைவுகளும்:

எல்லா இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்டிருப்பதுவே இந்தியா. அந்நிய முதலீடு என்ற பெயரில் பன்னாட்டுப் பண முதலைகளுக்கு இந்திய வளங்கள் கொள்ளையடிக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

 நமது கிராமத்து இளைஞர்களின் திறமைகள் சிறுமைப்படுத்தப்பட்டு அயலவரிடம் கையேந்தி வேலை தேடிச் செல்ல வைப்பதுதான் விடுதலைக் கனியா? அந்நிய முதலீடு என்பதன் மூலம் இன்னொரு காலனி ஆதிக்கத்திற்கு  இந்தியா தன்னை உட்படுத்தி வருவது மிகவும் வேதனையும், வெட்கமும் கலந்த செயல்பாடாகும்.

 விடுதலை வாழ்வா? விடுதலை தேடும் வாழ்வா?

சுயாட்சி பெற்ற தன்னிறைவு நோக்கிப் பயணிப்பதே உண்மையான விடுதலை வாழ்வு. அனைவரும் அனைத்து  வசதிகளையும் சமமாகப் பெற்று வாழச் செய்வதுவே நிதர்சனமான விடுதலையின் வெளிப்பாடுகள்.  ஆனால் இன்றைய நிலையில் விடுதலை முழக்கங்களைக் கேட்கும் நிலையில்தானே நாம் உள்ளோம். அரசின் நலத்திட்டங்கள் என்ற பெயரில் கோடிகோடியாய் கொள்ளையடிக்கும் கூட்டத்தின் நடுவே இந்திய விடுதலை சின்னா பின்னமாகித் தொலைந்து போய்க் கொண்டிருக்கின்றதே!

விடுதலையின் பன்முகப் பரிமாணங்கள்:

அன்பர் பணிச்செய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால் 
இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே -தாயுமானவர்.
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு. ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டு ஏழையரில் ஒருவராகச் செயல்பட்டுச் சுதந்திரம் பெற்றுத் தந்தனர் தியாக சீலர்கள். இன்றையக் காலத்தில் விடுதலைப் பற்றிய கருத்தும் அதன் பரிமாணமும் பெருகிக் கொண்டே செல்கிறது. அரசியல் விடுதலை, சமூக விடுதலை, பொருளாதார விடுதலை, சமய விடுதலை, அநீதிக் கெதிரான விடுதலை மற்றும் மக்களின் வாழ்வாதாரம் காக்கும் விடுதலை போன்றவையே அவை.

 மக்களின் வாழ்வாதாரம் காக்கும் விடுதலைப்போர்:

உலகுக்கெல்லாம் சோறிடுவோர் உழவர். எனவே தான் உழவுத்தொழில் அனைத்துத் தொழில்களிலும் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. மீத்தேன் எரிவாயு திட்டம், நுஹிறூளீ யின் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டங்களினால் காவிரி டெல்டா மாவட்டங்கள் இன்று பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற பகுதி மக்கள் தங்களின் வாழ்வாதாரம் காக்க வேண்டிப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் உரிமை முழக்கங்கள் நமதாகி ஒலித்திடல் வேண்டும். பற்றி எரிந்த எரிவாயு குழாயை அடைக்கக் கோரிய கதிராமங்கலத்தில் போலீஸ் தடியடி, 10 பேர் கைது என்ற செய்தி கொள்ளையடிப்போர் சார்பான  அரசின் செயல்பாடுதானே? இது மக்கள் நலன் பேணும் அரசா? இல்லை மக்களை அழிக்கும் அரசா?

தீமையையும், திணிப்பையும் எதிர்த்துத் திராணியுடன் போராடிய எலியா போல்..

இன்றைய மத்திய அரசு காவிமயமாக்கும் கல்விக் கொள்கையைத் திணிக்கிறது. சமஸ்கிருத, இந்தி மொழிகளைத் திணிக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையைத் திணித்து பொது மக்களை வாட்டி வதைத்தது.  தமிழ்க்  கலாச்சாரப் பண்பாட்டினை அழிக்க ஜல்லிக்கட்டு ஒழித்தல், மாடுகள் விற்றல், வாங்கல் போன்றவற்றைத் தடுத்து அந்நிய நாட்டுக் கால்நடைகளைக் கொண்டு வந்து திணிக்கிறது. பாரம்பரிய வீரிய விதைப் பேணுதலை விடுத்து மாண்டேப் போன்ற அயல்நாட்டு விதைகளைத் திணிக்கிறது. ஜி.எஸ்.டி வரியைத் திணிக்கிறது. இவற்றினை எதிர்த்து நாம் திராணியோடு போராட வேண்டும்.

தீமைகளை எதிர்த்துப் போராடிய விவிலியத் தலைவர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான் இறைவாக்கினர் எலியா. இவர் திராணியோடு போராடியவை...

1. ஆணவத் திணிப்பின் அடையாளமாகத் திகழ்ந்த  ஈசபேல் (1 அரசர் 16:29- 22). தீர், சீதோனின் பாகலின் தெய்வ வழிப்பாட்டைத் திணித்த ஈசபேலைத் திராணியோடு எதிர்த்து வெற்றிக் கொள்கிறார் எலியா (1 அரசர் 18)

2. தம் ஆணவ அரக்தனத்தால் ஏழை நாபோத்தைக் கொன்ற ஈசபேலைக் கடுமையாகச் சாடுகின்றார். நாபோத்தின் இரத்தத்தை நக்கிய நாய்கள் ஈசபேலின் இரத்தத்தை நக்கி, தின்றழிக்கும் என வெஞ்சினம் உரைக்கின்றார்
 (2அரசர் 21 ).

3. ஆகாபின் வழித்தோன்றல் அகசியா அரசர் எக்ரோனின் தெய்வமாகிய பாகால் செயூரின் வழிப்பாட்டைத் திணித்ததைத் திராணியோடு எதிர்த்து வெற்றி காண்கின்றார் (2அரசர்1)                                                           
வேண்டும் இன்னொரு விடுதலைப் போர்: 

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜல்லிக்கட்டு மற்றும் பல்வேறு பிரச்சனைகளை முன் வைத்து தன்னுணர்வோடு  மெரினாவிலும், தமிழகமெங்கும் ஒன்று திரண்டது இளைஞர் எழுச்சி. துருப்பிடித்த அரசியல் எந்திரம் சரி செய்யப்படல் வேண்டும். பாழாக்கும் விவசாய நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஊழலில் மலிந்து போன பழம் பெருச்சாளிகள் தூக்கியயறியப் படவேண்டும். எழுச்சிக் கொண்ட இளைஞர் படை புதிய பாரதம் படைத்திட திராணியோடு செயல்படட்டும். எனவே நமக்கு வேண்டும் இன்னொரு விடுதலைப்போர்.

இனியயாரு விதிசெய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்.
தனியயாருவனுக்கு உணவில்லை யயனில் 
ஜகத்தினை அழித்திடுவோம்.      ‡ சுப்ரமணிய பாரதி.

Sunday, 30 April 2017

இளம் உள்ளங்களின் மரியாள் ஆன்மீகம்

இளம் உள்ளங்களின் மரியாள் ஆன்மீகம்

அருட் சகோ. முனைவர் விமலி, FIHM   
தமிழ்த்துறைப் பேராசிரியர்,இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம். 

இன்றைய உலகிலும் இளம் உள்ளங்கள் தங்களின் அனுதின வாழ்வில் அன்னை மரியாவின் உடனிருப்பையும், உயர்வான மகத்துவத்தையும் அனுபவமாக உணர்கின்றனர். கல்லூரி மாணவி கள் சிலரின்  மரியாவின் துணையின் சாட்சியத்தை இங்கு பதிவு செய்கிறோம். 

       ‘இந்த அகிலத்தில் இறைவனின் குரலுக்கு உடனே செவிசாய்த்து, தன்னை முழுவதும் அர்ப்பணித்த முதல் பெண் மரியா. ஒரு பெண் எப்படியயல்லாம் வாழவேண்டும் என்று இறைவன் விரும்பியதை தன் வாழ்வால் வாழ்ந்து காட்டிய முதல் சரித்திரப் பெண். இவளின் புனிதமிகு வாழ்வு பல துறவிகளைப் புனித வாழ்வுக்கு உயர்த்த வேண்டும். ஒரு குழந்தை கேட்டவுடன் தாயானவள் வாரி வழங்குவது போல் இவள் என் வாழ்வில் பல புதுமைகளைச் செய்து என்னைக் காத்துவருகிறாள். எனவே அவளைப் பின்பற்றி அவளின் அன்பு பிள்ளையாய்  என்றும் வாழ்வேன்’. ( ர. இலாவண்யா, கெங்கவல்லி, கன்னியர் பயிற்சி, விருப்பநிலை).

     ‘அள்ளி கொடுப்பவள் அன்னை அல்ல அனைத்தையும் அப்படியே கொடுப்பவள்தான் அன்னை’ என்பதற்கேற்ப தன்னிடம் உள்ள அனைத்தையுமே அதுவும் தன் மகன் இயேசுவையும் முழுமையாக தந்துவிட்டார். நான் எட்டாம் வகுப்பு படித்தேன். அப்போது எனது தாய், மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தார்கள். ஒரு நாள் திடீரென்று காணாமல் போய்விட்டார்கள். நான் அன்னை மரியாவிடம் கண்ணீரோடு வேண்டிக் கொண்டேன்.எனது அம்மாவையும் கண்டுபிடித்தேன். அவருக்கு பூரண சுகம் தந்து காத்தார். இத்தகைய பெரும் அற்புதங்களைச் செய்து வருகின்ற எனது இரக்க அன்னை என்றும் வாழ்க. ( செ. எலிசபெத் ராணி, கடலூர், கன்னியர் பயிற்சி, விருப்பநிலை)

  மாதா என் வாழ்வின் நம்பிக்கையின் உரு என்று சொல்லலாம். என் குடும்பத்தினர் குடியிருக்க ஓரு வீட்டைக் கட்ட உதவியவர் அவர். அத்தோடு திடீர் விபத்திலிருந்து என்னையும், என் குடும்பத்தில் உள்ளவர்களையும் காப்பாற்றியவர். எந்த ஒரு செயலையும் நம்பி கேட்குற போது  வெற்றியாக செய்து முடித்துள்ளார்கள். என்றும் அவருக்கு நன்றி உள்ளவளாக இருப்பேன். (அ. ஸ்டேசிதெபோரா, வெங்கமேடு, முதுகலை கணிதவியல் படிக்கும் மாணவி)  

எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட துன்பமான, தோல்வியான சூழலில்தான், எங்களோடு அன்னை நடந்தார்கள். அனைத்து  உறவுகளும் கைவிட்ட தருணத்தில்தான் அன்னை மரியாள் எங்களுக்கு ஆறுதலையும், உறுதுணையும் அளித்து  காத்து வருகின்றார்கள்.  எனவே என்றும் அவள் புகழ் சிறக்க, தொடர்ந்து  வாழ்த்தி செபிக்கின்றேன். (எஸ். ஜீலி ஜென்சியா, விரியூர், தமிழ் இளநிலை முதலாமாண்டு மாணவி)
அன்னை மரியாள் பெண்களுக்குள் சிறந்தவர், பாவமாசு அற்றவர், உலக மீட்பரின் தாய். எங்கள் குடும்பத்திற்கு  தந்தையின் இறப்பால் ஏற்பட்ட தனிமையை, என் தாய் உணராத வகையில், ஆறுதலும், ஆற்றலும், பாதுகாப்பும் தந்து, என் தாய்க்கு அரசு வேலையில் நிரந்தரத்தைத் கொடுத்து  காத்து வருகின்றார். ( சூ.ரேமிஜியுஸ் மேரி, காட்டுக்கூனங்குறிச்சி, இயற்பியல் இளநிலை  முதலாமாண்டு மாணவி)
திருமணத்திற்குப் பிறகு பத்து ஆண்டுகளுக்குப் பின் குழந்தை பாக்கியத்தை அளித்து எனது தாய்க்கு தாய்மையை அளித்தவர். நன்றி அன்னையே! நீவீர் வாழ்க. ( ஏ. பிரின்சியா, கனிணி முதுகலை இரண்டாமாண்டு மாணவி)

இந்த மனித சமூகத்திற்கு நாம் ஏதாவது தர வேண்டும் என்று நினைத்தால் அது நம்பிக்கையாகத்தான்  இருக்க வேண்டும்.இவ்வாறுதான் நமது அன்னை மரியாளும் இவ்வுள்ளங்களுக்கு பரிசாகப் பல நன்மைகளை அளித்துள்ளாள் என்பதை இவண் கண்டோம். எனவே இந்த மனுக்குலத்தை வாழ்வின் பாதைக்கு அழைத்து வரும் மாபெரும் திட்டத்திலே அன்னை மரியாள்  அற்புதமாய்த் தன் பங்கை முழுமையாக செய்து வருகின்றாள். தாய்மை தாங்கிக்கொள்ளும். இதுதான் உண்மையான தாய்மை. இத்தாயானவள் தன்னுடைய துன்பத்தை மட்டும் சுமப்பவள் அல்ல. மாறாக தன் துன்பத்தோடு தன் பிள்ளைகளின் துன்பத்தையும் சேர்த்தே சுமப்பவள். அதைத்தான் நமது அன்னை கன்னிமரியும் நமக்கு நாள்தோறும் செய்து கொண்டே வருகின்றாள். 

கார்மேல் சகோதரி மரிதோமினிக் பிலய் கூறுகிறார்,

‘ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்ற மனித ஆன்மா எது? தனது ஆன்மீக ஆற்றல் அனைத்தையும் இறைவனின்  தொண்டுக்காகவும், அவரது புகழ்ச்சிக்காகவும் அர்ப்பணிக்கின்ற ஆன்மாதான். எனவே அத்தகைய ஆன்மா இறை கட்டளை  அனைத்தையும் உறுதியுடன் கடைபிடித்து இறைவனின் மகத்துவத்தையும் அவரது வல்லமையையும் எப்போதும் கண்முன் நிறுத்தும்.  இவ்வகையில் மரியன்னையும் வாழ்ந்தாள். தமக்கு வரும் மேன்மையும், அனைத்து ஆற்றல்களும் வல்லமையே உருவான இயேசுவின்  வழியாக வருகின்றது என்று உணர்ந்திருந்தாள்’ என்கிறார்

 கன்னி மரியாவின் இதயம் இறைவனின் வளம் நிறைந்த இறை அன்பைக் கொண்டுள்ளது. கடவுள் மனிதனோடு செய்து கொள்ள விரும்பிய உடன்படிக்கையின் நிறைவே மரியாவின் தெய்வீகத் தாய்மையாகும். மனித மீட்பின் ஊற்றாக, தெய்வீக தாய்மை விளங்குகிறது.  ஒரு குழந்தை யின் உயிருக்கு ஊற்றாக விளங்குபவர் தாய்தான். பல நேரங்களில் புண்ணிய வாழ்வு வாழ இயலாத பாவப்பட்ட மனிதர்கள் அருகிலும் மரியா இருப்பது நமக்கு வியப்பூட்டுகிறது. அன்னை மரியாள் வரங்களின்  இடை நிலையாளராக இருக்கின்றார். இடைநின்றுப் பரிந்துரைக்கும் தமது பணியில் மரியா, தூய ஆவியோடு மிகவும் நெருக்கமாய் இணைந்திருக்கின்றார்.

மனிதர்களின் துன்பங்களை மரியாள் புரிந்துகொண்டு, அவற்றைத் தன் இதயத்தில் ஏற்று, இறைவனிடம் ஒப்படைப்பதே மரியாவின் இடைநிலையாளர்ப் பணியாகும். மரியா உயிர் தரும் தாயாக விளங்குவதே அவரது இடைநிலையாளர் பணியின் இரண்டாவது அம்சமாகும். மூன்றாவதாக, மரியா போராடும் தாயாக இருக்கின்றார்.  மரியா தன் வாழ்வு முழுவதும் மிக ஆபத்தானதும், வேதனைக்குரியதும், கடுமை யானதுமான சூழ்நிலைகளையே ஏற்றுக் கொண்டார். ஏனெனில், மாபெரும் போராட்டத்தின் மத்தியில்தான்  மரியா நம்மை ஈன்றெடுத்தார். மிக உச்சக் கட்ட போராட்டம் சிலுவைப் போராட்டமாகும். ஒப்புயர்வற்ற இரக்கத்தாலும், அன்பாலும் இடைநிலையாளராதல் அவரது, அன்பின் மனநிலையை வெளிப்படுத்து கிறது. கிறிஸ்தவ வாழ்வின் இன்பங்களையும், துன்பங்களையும், போராட்டங்களையும், மகிமை யையும் முழுமையாக வாழ அவர் எப்பொழுதும் நம்முடன் இருக்கிறார்.     
யாரேனும்ஒருவர் என்னிடம் உதவி கேட்கிறார் என்று சொன்னால், இன்னும் நான் இந்த உலகத்திற்கு பயன்படுகிறவனாக இருக்கிறேன் என்று பொருள்.
 (பெளலோ  கோயயல்லோ)
      
  நான் தோற்றால் நாம் வாழ்வோம். என்பதை அன்னை வாழ்வாக்கியவர். அன்பு வாழ்வில் தோற்கத் தெரிந்த இதயம்தான் ஜெயிக்கத் தெரிந்த இதயம். அதுதான் நம் அன்னை மரியாள். தான் தோற்றத்தின் ( தன் மகனை இழந்து) மூலம் இவ்வுலகையே வெற்றி காணச் செய்தவள். நாமும் இவ்வுலக வாழ்வில் தோற்று பிறர் வாழ்வை வெற்றி காணச்செய்வோம்.

விண்ணுலகின் தேவதையாய்
மண்ணுலகின் அரசியாய்
மலரும் பூக்களின் இதழாய்
வானில் ஒளிரும் நிலவாய்
அன்றும் இன்றும் என்றும் அன்னையாய்
விளங்குவாள் என் அன்னை மரியாள்.   

Friday, 28 April 2017

பெண்ணியம் போற்றும் பாத்திமாக் காட்சிகள்

பெண்ணியம் போற்றும் பாத்திமாக் காட்சிகள்

(நாசரேத்தூர் நல்லாள் பாத்திமாவில் காட்சி தந்ததன் நூற்றாண்டு சிறப்புக் கட்டுரை)

- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

‘ஆகட்டும் ஆண்டவரே’ என்று சொல்லி  இறைத் திருவுளத்தினுக்கு முற்றும் பணிந்து வாழ்ந்தனாலேயே பெண்குலத்தோருள்  மாணிக்க மாகத் திகழ்கின்றார் மரியா. விண்நோக்கிப் பயணித்தன் விளைவாக இவரின் அனைத்துச் செயல்பாடுகளும் இறைச் செயல்பாடுகளாகத் திகழ்ந்தன. பாவச் சேற்றில் உழன்று கொண்டிருந்த  உலகோரினை விண்நோக்கி நடத்திச் செல்ல வேளாங்கண்ணி, லூர்து, லா சலேத்,   கோதலுப்பே போன்ற பல இடங்களில் காட்சி தந்து இறைத் திட்டத்தினைச் செயல்படுத்தி வருபவர் இறை அன்னை மரியா.

முதல் உலகப் போர் முழக்கம்:

1914 முதல் 1918 வரை உலக நாடுகள் இரு பிரிவாகப் பிரிந்து தங்களுக்குள் போரிட்டுக் கொண்டன. அழிவுச் சக்தியினை  உணவாக உட்கொண்டு மரணத்தினை நோக்கிப் பயணித்திட்ட இருள் சூழ்காலம் அது. இப்போரட்ட காலத்தில்தான் தன்னிலை விட்டெழுந்து தரணியர்  தழைத்திட பாத்திமா நகரில் காட்சி தந்து பல தந்த வாழ்வினாக்கி வழிகாட்டினார் நம் மரியன்னை.

பாத்திமா ஒரு வரலாற்றுப்  பின்னணி:

                    போர்த்துக்கல் நாட்டினருக்கும், இஸ்லாமியருக்கும் 12 ஆம் நூற்றாண்டில் பெரும்போர் ஒன்று நடைபெற்றது. போர்த்துக்கீசியர் வெற்றிக்கனியினை ஈட்டினர். இஸ்லாமியப் படைத்தளபதியின் மகள் பாத்திமா. போர்த்துக்கீசியரின் படைத்தளபதி கொன்சாலோ. இவர்கள் இருவருக்குமிடையே திருமணம் நடைபெறுகிறது. இவர்கள் வாழ்ந்திட்ட நிலப் பகுதி அவ்ராணா அவ்ரம்.  இவர்களுக்குப் பின் இந்த இடமே பாத்திமா நகராயிற்று. இப்பட்டணம் இன்று போர்த்துக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனிலிருந்து 144 கி.மீ. தொலைவில் உள்ளது. இதிலிருந்து 2 கி.மீ மேற்கே கோவாதா ஈரிய என்னும் மலைப் பாங்கான சமவெளிப் பகுதியே மாதா காட்சியளித்த மாண்புமிகு இடமாகும்.

காட்சி பெற்றோர்:

                லூசியா, பிரான்சிஸ், ஜெசிந்தா ஆகிய மூவரும் நெருங்கிய உறவினர். இவர்கள் முறையே 10,9,7 வயதினர். பக்திமிக்க பெற்றோரின் அரவணைப்பில் வாழ்ந்த இவர்கள் ஆன்மீகச் சிந்தை கொண்டோராவர். ஏழை, எளிய  மனங்கொண்ட இவர்களே மரியாவின் காட்சி காணும் பாக்கியம் பெற்றனர்.

அன்னையின் காட்சிகள்:
                முதல் உலகப் போரினால் மிரண்டிருந்த மக்களுக்கு ஆறுதலாக திருத்தந்தை 15‡ஆம் பெனடிக்ட் அமைதி காக்க வேண்டி உலகோருக்கு வேண்டுகோள் விடுத்தார். 1917 ஆம் ஆண்டு மே திங்கள் 13ஆம் நாள் நண்பகல் வேளை லூசியா, பிரான்சிஸ், ஜெசிந்தா என்னும் இவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டே மூவேளை செபம் சொல்கின்றனர். என்ன ஆச்சரியம். அதோ அங்கே அசின்ஹோர் மரத்தின் உச்சியில் ஓர் ஒளிமணடலம். அதன் நடுவில் வெண்ணிற ஆடை அணிந்து, புன்னகை தவழ்ந்திடும் முகத்தோடு குவிந்த  கரங்களில் செபமாலை ஏந்தி ஓர் அழகான பெண்மணி.

                 சிறு  குழந்தைகள் பயம் சூழ்ந்து விழிகள் கலங்கி நிற்கின்றனர். ‘ பிள்ளைகளே அஞ்சாதீர்கள் நான்தான் விண்ணிலிருந்து மண்ணகம் வந்துள்ள இயேசுவின் தாய். பாவத்தில்  ஊன்றி, பாவிகள் வெகுவாகி கடவுளை வேதனைப் படுத்துகின்றனர். பாவிகள் மனத்திரும்பிட உங்களின் துன்பங்களைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுங்கள். உலகில்  போர் நீங்கி, அமைதி நிலவிட தினசரி செபமாலை செபியுங்கள்’ எனறாள் அப்பெண்மளி..

              தாங்கள் காண்பது காட்சியா? பகல் கனவா? இல்லை. இல்லை. மாதா காட்சிதான் என்றறிந்து அவர்கள் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி ததும்புகின்றது. வீட்டிற்குச் சென்று இதனைப் பகிர்ந்து கொண்ட போதோ. ஏளனம், பரிகாசம், எகத்தாளம். பெற்றோரே அந்த இடத்திற்குச் செல்லக் கூடாது எனத் தடை செய்தனர்.

தொடர் காட்சிகள்: 

               தொடர்ந்து வந்த  ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் காட்சிகள் நம்பத்தக்கதாகத் தோன்றிட மக்கள் எண்ணிக்கை பெருகியது. மாதாவின் காட்சியினை இம்மூவர் மட்டுமே பிரதிமாதம் 13 ஆம் நாள் காண முடிந்தது. இச்சகமாக பேச்சுகள், சக வயதினரின் கேலி, கிண்டல் ஆகியவை இந்த இளம் பிஞ்சுகளின் உள்ளத்தில் வேதனைகளை உருவாக்கின. ஆனால்  அவையனைத்தையும் இறைவனுக்கு ஒப்புக் கொடுத்தனர். மனத்திடம் பெற்று மரியன்னையின் பிள்ளைகளாக வீறு கொண்டு எழுந்தனர்.

காட்சிகளின் செய்தி:

               ‘ கேழ்வரகில் தேன் ஒழுகுகின்ற தென்றால் கேட்பவனுக்கு மதி எங்கே போச்சு?’ என்ற விவாதங்கள் ஆங்காங்கே எழுந்தன. ஆனால்  உண்மையினை உறங்க வைக்க முடியுமா? 

  இக்காட்சிகள் தந்த  செய்திகளில் முக்கியமானைவ:
 1. போர் முடிவுக்கு வந்து  உலகில் அமைதி நிலவிடல் வேண்டும்.
 2. ரஷ்யா மரியாவின் மாசற்ற திரு இருதயத்திற்கு அர்ப்பணிக்கப்படல் வேண்டும்.
 3. கிறிஸ்தவர்கள் அதிக வேதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக திருத்தந்தை ஒருவர்  கொடூரமாகத்  தாக்கப்படுவார்.
 4. பிரான்சிஸ், ஜெசிந்தா ஆகிய இருவரும் விரைவில் விண்ணகம் செல்வர். பாத்திமா ரகசியங்கள்  உலகெங்கும் பரவிட லூசியா நீண்ட காலம் வாழ்வார்.
      
 திருச்சபையின் பதில்:

மனிதர் எப்போதெல்லாம் தடம் மாறித் தவறுகளில் வீழ்ந்து செயல்படுகின்றார்களோ அப்போதெல்லாம் தடுமாற்றம் போக்கிட  மாதா பல்வேறு இடங்களில் காட்சி மூலம் இறைத் திருவுளத்தினை வெளிப்படுத்தியதனை வரலாறு பதிவு செய்துள்ளது. பாத்திமாக் காட்சிகளும் அப்படியே. ஆனால் விசுவாசக் கண் கொண்டு மட்டும் இவற்றினை நோக்காது. அறிவியல் ரீதியாகவும்  திருச்சபை இதனை அணுகியுள்ளது.

இறைவெளிப்பாட்டுக் கூறுகள்:

அன்பின் வெளிப்பாட்டு சமூக அமைப்பினை உருவாக்குதலே திருச்சபையின் முக்கியப் பணி. எனவே கிறிஸ்தவம் அன்பினை அடித்தளமாகக் கொண்ட சமயம். இச்சமயம் தழைத்திட விவிலிய நூல்களிலும் பல இறை வெளிப்பாட்டு நிகழ்ச்சிகளைக் காணுகின்றோம். இவை பொது வெளிப்பாடு ( Pற்ணுயிஷ்உ யூeஸeயிழிமிஷ்லிஐ), தனி வெளிப்பாடு ( Prஷ்ஸழிமிe யூeஸeயிழிமிஷ்லிஐ), எனப்படுகின்றன.

இந்த  வெளிப்பாடு, மனித மீட்பின் வெளிப்பாடாக  விவிலிய நூல்களில் துவங்கி, கிறிஸ்துவில் முழுமையடைந்து திருச்சபையின் திருவருட்சாதனங்களின் வழியாக மக்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. மேலும் மனிதர் கிறிஸ்து அளித்த மீட்பினை  உணர்ந்து, அனுபவித்து ஏற்றுக் கொள்ள திருச்சபையின் அருளடையாளங் களோடு  அவரைப் பயிற்றுவித்து, விசுவாசத்தில் உறுதியோடு நிலைத்து நிற்கச் செய்யப் பாத்திமாக் காட்சிகளும் அவை தரும் செய்திகளும் உதவியாகத் திகழ்கின்றன.

பாத்திமா இரகசியங்கள்:

பாத்திமாவில் நடைபெற்ற பொதுக் காட்சிகள் மூலம் வெளிப்பட்டவை ஒரு சிலவே. தனிக்காட்சிகள் மூலம் இம்மூவராலும்  பெற்ற வெளிப்பாடுகள் இரகசியமாகக் காக்கப்பட்டன. அவை மூன்று  இரகசியங்கள் எனப்படுகின்றன.

 அ. நரகம்:

           1941 ஆம் ஆண்டு லூசியா எழுதிய ‘தனது நினைவுகள்’ என்னும் குறிப்பேட்டில் 1917 ஜீலை 13‡இல் மாதா கீழ்க்கண்ட காட்சியினை தங்களுக்கு வெளிப்படுத்தியதாகக் குறிப்பிடுகின்றார். பூமிக்கடியில் தீச்சூளையில் வெந்து மடியும் மனித ஆன்மாக்களைக் கண்டோம். அதில் கொத்துக் கொத்தாக மனிதர்கள் விழுந்து கொண்டிருந்தார்கள்.

 ஆ. இரண்டாம் உலகப்போர்:

              உலகப் போரினால் சீரழிக்கப்பட்டிருந்தாலும், உலகம் இன்னொரு அழிவினைச் சந்திக்கும். அதுவே இரண்டாம் உலகப் போர்.  இது ஒரு பகுதியாகும். இரண்டாம் பகுதியில் கம்யூனிசக் கொள்கையினால் கடவுள் மறுப்புத் தத்துவம் கொண்டுள்ள ரஷ்யா மனம் திரும்பிட வேண்டும். இதற்காக மரியாவின் மாசற்ற திரு இருதயத்தினுக்கு ரஷ்யா அர்ப்பணிக்கப்பட வேண்டும்.

 இ. கிறிஸ்தவர்களின் வேதனை:

இந்த மூன்றாவது இரகசியத்தினை  லூசியா வெளிப்படுத்த விரும்பவில்லை. தனது மறைமாவட்ட ஆயர் சில்வா அவர்களின்  ஆணையின் படியே வெளியிட்டார். இதன்படி கிறிஸ்தவர்கள் அதிகத் துன்பத்தினுக்கு உட்படுத்தப்படுவர். ரஷ்யாவிலும், பிறநாடுகளிலும் கடவுள் மறுப்புக் கொள்கை வேரூன்றும். திருத்தந்தை ஒருவர் மரணவாயில் வரை சென்று  திரும்புவார். முதல் சனிக்கிழமை பக்தி அவசியம் அனுச்சரிக்கப்பட வேண்டும்.

பாத்திமாக் காட்சிகளின் உண்மைத் தன்மை:

பாத்திமாக் காட்சிகள் அனைத்தும் இறைவெளிப்பாட்டின்  அடையாளங்களே. இவற்றிற்கான  வரலாற்று நிகழ்வுகளின் ஆதாரங்கள்.
   1. இரண்டாம் காட்சியில் கூறப்பட்டுள்ளவாறு பிரான்சிஸ், ஜெசிந்தா இருவரும் முறையே 1919, 1920 இல் விண்ணகம் சென்றனர்.
   2. லூசியா கார்மேல் சபையின் துறவு வாழ்வு  பூண்டு தனது 97 ஆம் வயதில் விண்ணகம் சென்றார்.
   3. திருத்தந்தை ஜான்பால் 1981 மே 13ல் அலி அக்கார் என்னும் இளைஞரால் சுடப்பட்டார். தனக்கு மறுபிறவி கிடைத்ததும் 
       தனது நன்றிக் காணிக்கையாக தன் உடலில் பாய்ந்த இரவைக் குண்டினை பாத்திமா மாதாவின் கீரிடத்தில் பதித்து வைத்தார்.      

   4. 1991 ல் சோவியத் யூனியன் பிளவுப்பட்டு ரஷ்யா என்ற தனி நாடாகியது.
  5. ‘ஓ  என் இயேசுவே எங்கள் பாவங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும். சகல ஆத்துமாக்களையும் 
       சிறப்பாக  உமது இரக்கம் யார், யாருக்குத் தேவையோ அவர்களையும் மோட்சத்தில் சேர்த்தருளும்’ என்னும் செபம் செபமாலையோடு
       இணைந்து செபிக்கும் பழக்கம் நடைமுறையாகியது.
  6. முதல் சனிக்கிழமை பக்தி பாத்திமா மாதா பக்தியாக வளர்ச்சி கண்டு கொண்டிருக்கிறது.

 பெண்ணியத்தின் மேன்மை:

              ஆணாதிக்கச் சமூகத்தில், பெண்களுக்கு அளிக்கப்பட்ட காட்சிகள் அவனியயங்கும் பரவி பெருமை படுத்தப்படுகின்றது. பெண்ணியலை ஐந்து பிரிவுகளாகப் பார்க்கலாம்.
 1. ஏற்பு நிலைப் பெண்ணியல்
 2. ஒதுக்கு நிலைப் பெண்ணியல்
 3. மறுபார்வைப் பெண்ணியல்
 4. பெண்தன்மையை உணர்த்தும் பெண்ணியல் 
 5. விடுதலைப் பெண்ணியல்

               பெண்மையின் தூய்மையே தாய்மை. தன்னலங் கருதாது பிள்ளை நலம் பேணுதலே தாய்ம்மை போற்றின்  சீரிய பண்பு. இப்பண்பின் வெளிப்பாடுகளே பாத்திமாக் காட்சிகள். இக்காட்சிகள் கூறும் செய்தியினை வாழ்வாக்கினால் வையகம் வாழ்வாங்கு வாழ்ந்திடும்.

மாதாவின் நேசம்

மாதாவின் நேசம்

அருட்பணி.ச.இ. அருள்சாமி

 திருத்தலங்களுக்கு மக்கள் வந்து வேண்டுதல் செய்வது, நன்றி சொல்வது, நம் மனதை உருக்கும் காட்சியாகும். முடியயடுப்பது அல்லது மொட்டையடிப்பது என்பது அவமானச் செயல். எதிரிகளை மொட்டையடிக்கும் வழக்கம் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது (1குறி 19:4). 

எனக்குசிறுவயதாயிருக்கும் போது எழுநீர் என்ற வியாதி இருந்தது.இந்த  வியாதியால் திடிரென்று முச்சடைத்து, கைகால் வலிப்பு வந்தது போல் இழுக்கும். அப்பொழுதெல்லாம் சரியான  மருத்துவம் இல்லை. என் அம்மா வேளாங்கன்னி மாதாவிடம் நேர்த்திக்கடன் வைத்துக் கொண்டு ஜெபித்தார்கள்.  எனது நோய் குணமானால் மும்மொட்டை அடித்து நன்றி செலுத்துகின்றேன் என்று, மும்மொட்டை என்றால் தாய், தந்தை , பிள்ளை முவரும் முடியயடுத்து கொள்ளுதல், எனக்கு முற்றிலும் நீங்கியது. 

எனக்கு19 வயது  நடந்த போது என் அன்னை எனக்கு நினைவூட்டி, நேர்த்திகடனை நிறைவு செய்தார்கள். இப்போது நினைத்துப் பார்க்கிறேன். 35 வயதுள்ள பெண். என் அன்னை  தன் பிள்ளைக்காக  மொட்டை அடித்துக் கொண்டார்கள் என்றால், மாதாவின் கருணையை எவ்வளவு ஆழ்ந்து உணர்ந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. திருத்தலங்களில் முடியயடுப்பது, முழங்காலில் சென்று செபிப்பது போன்ற நேர்த்தி செயல்கள் ஒவ்வொன்றும் ஒரு பெரிய கதையை சுமந்து நிற்கும்.

            மாதா, நம் செபங்களை ஆண்டவர் முன்பாக, நம் சார்பாக வைக்கிறாள். இதுதான் இறையியல் விளக்கம். நம் தேவைகளுக்காகத்தான் மாதாவை நோக்கி ஜெபிக்கிறோம். ஆனால் மரியாவின் முதல் செபம், மரியா எலிசபெத்தை சந்தித்து பாடிய புகழ் பாடல், நன்றி  செபம். இந்த புகழ்ச்சி செபத்தில் நம்மை கலந்துக் கொள்ளத்தான் மரியன்னை நம்மை அழைக்கிறார்கள். இந்த புகழ்ச்சி, நன்றி செபம் கடவுளின் பிள்ளைகளின் நாவிலிருந்து அகலக் கூடாது என்கிறார் இரேனியுஸ் என்ற அறிஞர். 

               மரியன்னை இயேசுவின் முழுமையான முதல் சீடர். எனவே அவர் நமக்கு முன்னோடி.

               குடந்தை மறைமாவட்டத்தில் 3 முக்கிய மாதா திருத்தலங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

 பூண்டி திருத்தலம்,  இறையடியார் லூர்து சேவியர் அவர்களின் பெரும் முயற்சியால், அவரது புனித வாழ்வினால், மாதாவின் உதவிகள் வழிந்து வரும் தலமாக விளங்கி வருவதைப் பார்க்கிறோம்.

17ஆம் நூற்றாண்டில், வீராமமுனிவர், ஏலாக்குறிச்சி என்ற உள்ளாந்திர கிராமத்தில், தஞ்சை மன்னரால், கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களை தங்க செய்து அவர்களை பாதுபாத்தார்.மரியன்னை¼, கிறிஸ்தவ மக்களுக்கும், மற்றவர்களுக்கும் அடைக்கலமாக விளங்குபவர் என்று மக்கள் அறிய செய்தார். இங்கும்  ஏராளமான மக்கள் சென்று அடைக்கல அன்னையின் உதவியைப் பெற்று  வருகிறார்கள்.

 17ஆம் நூற்றாண்டிலிருந்து ( 1674) பல பெயர் பெற்ற மறைப்பணியாளர்கள், வீரமாமுனிவர், அருளானந்தர் போன்றவர்கள் பணி செய்த இடம் வடுகர்பேட்டை. இங்கு ஆரோக்கிய மாதா திருத்தலம் வளர்ந்து வருகிறது. 
             
தூய மரிய வியானி அருளப்பர் கூறுவார், மரியன்னைக்கு உலக முடிவுரை ஓய்வென்பதில்லை. ஏனென்றால் எப்போதும் தன் பிள்ளைகளைப் பற்றியே கவலை உள்ளவளாய் இருக்கிறார். 

மரியாவின் வழி  செல்லாது. இயேசுவின் பணியாளராய் விளங்க முடியாது என்கிறார், ஆயர் தேகோன்சஸ் மாசற்ற மரியன்னை இறைவனின் இதயத்திற்கு உகந்த அரசியாக விளங்குகிறார். எனவே அவளின் பரிந்துரையுடன் செய்கின்ற செபம் எல்லையில்லா வல்லமையுள்ளது. என்கிறார் தூய மாக்ஸ்மில்லியன் கோல்பே. 
தமிழகம் வரட்சியால் காய்ந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் வருகிற ஆண்டில் பருவமழை சீராக இருக்கும் என்று வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது. வான் பொழியும் நீரை தகுந்த முறையில் சேமிக்க அரசு ஆவன செய்ய வேண்டும. குளங்களை துர்ர்எடுத்தல், துVர்க்கப்பட்ட குளங்களை மீட்டெடுத்தல், தடுப்பணைகள் கட்டுதல், ஆறுகளை இணைத்தல் போன்ற செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். 

தமிழக விவசாயிகள் டெல்லியில் பல விதமான முறையில் கடந்த 45 நாட்களாக போராடி வருகிறார்கள். ஏழையின் குரல் அம்பலம் ஏறுமா என்பதைப் போன்று அரசு தன் முகத்தை திருப்பிக்கொண்டிருக்கிறது. 

சென்னை ஆர். கே. நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. பணம. பட்டுவாடாக் காரணமாக இது செய்யப்பட்டிருக்கிறது. கொடுக்கும் போது வாங்கினால் என்ன என்ற தவறான எண்ண போக்கு நம் மக்களிடையே உள்ளது. இது மாற வேண்டும். பணம் வாங்குதல் ஊழலடின் முதலெழுத்து. நேர்மை என்ற நேர்க்கோடுதான் உயர்வின் சிறந்த வழி. 
                

Saturday, 3 September 2016

ஆரோக்கியம் நல்கிடும் அன்னை மரியாவின் பிறப்பு

ஆரோக்கியம் நல்கிடும் அன்னை மரியாவின் பிறப்பு 

“அம்மா என்றழைக்காத  உயிரில்லையே
அம்மாவை வணங்காது  உயர்வில்லையே ....
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது????” 

இந்த வரிகள் ஒவ்வொருவரின் மனதையும் ஆழமாகத் தைக்கக் கூடியவை. அம்மா இன்றேல் அகிலமே இல்லை. 
தாயின் மடிதான் உலகம், அவள் தாளை வணங்கிடுவோம்.

தாய் தமிழில், அம்மா என்ற சொல்லுக்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. தமிழகத் திருக்கோயில்களில் முதன்மை இடத்தைப் பிடித்திருப்பவை மாதா கோயில்கள், அம்மன் கோயில்கள். தமிழர்கள் அனைவராலும் சாதி, மத, இன வேறுபாடின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் ஒரே மாதா ஆரோக்கிய மாதா. அந்த மாதா தான் உலக மீட்பர் இயேசுவை மண்ணிற்குக் கொணர்ந்த மாதா.

செப்டம்பர், 8, திருவழிபாட்டில் புனித கன்னி மரியாவின் பிறப்புப் பெருவிழா. திருவிவிலிய நூல்கள் இவரின் பிறப்பு பற்றி எந்தவொரு பதிவும் செய்யவில்லை. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் புனித யாக்கோபின் நற்செய்தி  (Proto evangelium of James) 5 : 2-ல் மட்டுமே மரியாவின் பிறப்பு பற்றிய குறிப்பினை நாம் காணலாம்.

உலக மீட்பராம் இயேசுவை உதிரத்தில் சுமந்து உலகிற்குக் கொணர்ந்ததன் காரணமாகவே மரியாவின் பிறப்பு மாண்புறுகின்றது. எசாயா 7 : 14, “இதோ கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் (கன்னி) ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார்”. மத் 1 : 21, “அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார்; அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர்” என்னும் விவிலியக் குறிப்புகளே மரியா பற்றிய இயேசு பிறப்பின் குறிப்புகளாகும்.

இயேசு பிறப்பின் ஆதவனாகத்  தோன்றியவர் அன்னை மரியா. எனவே இவரின் பிறப்பு மனுக்குலம் முழுமைக்குமான புனித சமூகத்தின் உதயம். ஏவையின் வழியாக விண்ணக வாயில் அடைபட்டு பாவம், சாவு என்னும் அடிமைச் சங்கிலியால் பூட்டப்பட்டது. மரியாவின் பிறப்பினால் இந்த அடிமைச் சங்கிலி அறுபட்டு விண்ணக வாயில் திறந்தது. இதுவே நோயற்ற வாழ்வுக்கான ஆரோக்கியத்தின் வாயில். நோய், பிணி போக்கும் மருத்துவத் தாயல்லவோ இவர். எனவே தான் அவரின் பிறப்பு விழா ஆரோக்கியம் நல்கிடும் விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆரோக்கியம், சுகம், நலன் போன்ற மூன்று வார்த்தைகளும் நோய், நொடி நீங்கிய பிணியில்லா வாழ்வினையே சுட்டிக் காட்டுகின்றன. இன்றைய நாட்களில் வாழ்க்கை நலம் என்பது பல்வேறு பரிமானங்களைக் கொண்டது. இவற்றில் ஏழு பண்புக் கூறுகள் முக்கியமானவை.

1. சமூக நலன் : 
மனிதன் ஒரு சமூக உயிரி. தனித்தனியாகப் பிறக்கின்ற மனிதன் சமூகமாகவே வாழத் துடிக்கின்றான். எனவே சமூகத்தில் அன்றாடம் நடைபெறும் சம்பவங்கள் ஒரு தனி மனிதனின் வளர்ச்சிக்கோ, வீழ்ச்சிக்கோ காரணமாக அமைகின்றது.

2. உணர்வு நலன்:
மனிதன் உணர்வுகளால் ஆளப்படுகின்றான். உள்ளததில் எழும் நற்சிந்தனைககள், நல்லுணர்வுகளின் ஊற்றாகி நற்செயல்களாகப் பிரசவிக்கின்றன. தீய சிந்தனைகளோ தீய உணர்வுகளை உருவாக்கி தீமைகளைப் பெற்றெடுக்கின்றன.

3. ஆன்மீக நலன் : 
உடல் அழிவுக்குரியது; ஆன்மா அழிவில்லாதது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறை உணர்வு (யூeயிஷ்ஆஷ்லிற்வி ளீலிஐவிஉஷ்லிற்விஐeவிவி) ஆழமாகப் பதிந்துள்ளது. இந்த ஆன்மீக உணர்விலிருந்துதான் வாழ்க்கை நெறிமுறைகள் உருவாகிச் செயலாக்கம் பெறுகின்றன.

4. சுற்றுச் சூழல் நலன் : 
மனிதர் தான் வாழும் சுற்றுப்புறச் சூழலின் படைப்பு. மனிதர் சுவாசிக்கும் காற்று, பருகும் நீர் போன்றவை அவரை வெகுவாகப் பாதிக்கின்றன. மரம், செடி, கொடிகள் போன்ற தாவரங்களும், ஏரி, குளம், குட்டை, கண்மாய் போன்ற நீர் நிலைகளும் மனித வாழ்வின் நலனின் ஆதார அமைப்புகளாகும்.

5. கடமை நலன் : 
மனிதர் தனக்கென்றுள்ள கடமையில் கருத்தாய் தன்னலம் மறந்து பொதுநலம் பேணி செயல்படுகின்ற வேளையில் கடமை வீரராகின்றார். சமூகப் பாதுகாவலாகின்றார்.

6. அறிவுசார் நலன் : 
உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல் என்னும் நவீன பொருளாதாரச் சித்தாந்தங்களில் நாம் சிக்கித் தவிக்கின்றோம். எந்தவொரு காரியத்திலும் செயல்பாட்டில் இறங்குவதற்கு முன்பாக  குறிப்பிட்ட பொருள் அல்லது தொழில் பற்றிய முழுமையான அறிவினைச் சேர்த்து, நன்கு தெரிந்து, தெளிந்த தீர்க்க முடிவோடு செயல்படுதல் பாராட்டினுக்குரியது.

7. உடல் நலன் : 
மேற்கூறப்பட்ட ஆறு வித நலன்களும் சிறப்பு மிக்கதாய் செயல்பட்டால் உடல் நலனும் சிறப்பாகத் திகழும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். உடல் நலன் என்பது பல்வேறுபட்ட காரணிகளின் கூடடுத் தொகுப்பே.

முழு ஆரோக்கியம் என்பது இந்த ஏழு வாழ்க்கைப் பரிமாணங்களையும் உள்ளடக்கியது. நாம் விரும்பும் சமுதாயம் நோய், பிணியற்ற ஆரோக்கியமிகு சமுதாயமே.

இரக்கம் மிகு தந்தையே, விண்ணிலிருந்து  உமது மக்களுக்கு உதவியையும், வலிமையையும் பொழிந்தருளும். கன்னிமரி மகனின் பிறப்பு எங்களது  மீட்பின் விடிவெள்ளியாய் அமைந்தது. இந்த  விண்ணக தாயின் பிறப்பு விழா முழுமையான ஆரோக்கிய வாழ்வினுக்கு எங்களை இட்டுச் செல்வதாக. ஆமென்.

Monday, 16 May 2016

மாதாவின் வணக்கம்

ஆசிரியர் பேனா

ஒருவர் சொற்பொழிவாளர் கூறினார். ஒரு தாயைப் பார்த்து ‘ஏன் உன் பிள்ளைகள் மீது இவ்வளவு அன்பு செய்கிறாய்?’ என்று கேட்டால், ‘அவன் பிற்காலத்தில் எனக்கு பெருமைதரும் விதத்தில் வாழ்வான்’ என்றோ, ‘பிற்காலத்தில் என்னை வைத்து காப்பான்’ என்றோ கூறமாட்டாள். மாறாக, ‘அவன் / அவள் எனது பிள்ளை அதுதான் ஒரே காரணம்’ என்பாள். எனவேதான் பாசம், பற்று, அன்பு ஆகியவை இயல்பாக தாயிடம் எழுந்து வருகிறது. ஒரு புதுக்கவிதையில், ‘வயோதிகர் இல்லத்திலிருந்து, தன் மகனுக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்களை அனுப்பினாள்’ என்று எழுதியிருந்தார்கள்.

இயேசு உலகில் புதிய ஒளியையும், வழியையும் காண்பித்தவர். அவர் காட்டிய வழி 2000 ஆண்டுகளாக உலகிற்கு வாழ்வு தந்திருக்கிறது. அவரின் தாய் மரியா. இயேசுவை உலகிற்கு தந்தவர். அவரது பணியில் பங்குபெற்றவர். இறைவனின் தனி அருளைப் பெற்றவர். எனவேதான், வானத்தூதர், ‘அருள் மிகப் பெற்றவரே’ என்றும், ‘கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்’ என்றும் மரியாவை வாழ்த்துகிறார் (லூக் 1 : 28, 30). வானதூதர் என்பவர் இறைவனின் மறுபெயர் எனலாம்.

மாதாவின் வணக்கம், திருச்சபை வரலாற்றில் தொடக்கத்திலிருந்தே இடம் பெற்றிருக்கிறது. மாதாவின் திருத்தலங்கள் இறைவனின் அருளை பெற்றுதரும் சாட்சியங்களாக விளங்குகின்றன. கிறிஸ்துவ மதத்தை சாராத மற்ற சமயத்தாரும், மாதாவின் திருத்தலங்களுக்கு திரண்டு செல்வதை பார்க்கிறோம்.

குடந்தை மறைமாவட்டத்தில் 92 பங்குகளில் 34 பங்குகள், மாதாவின் பாதுகாவலில் குறிக்கப்பட்டுள்ளன. இதில் 6 பங்குகள் ‘அடைக்கல அன்னை’ பாதுகாவலை பெற்றிருக்கின்றன.

ஏலாக்குறிச்சியில் உள்ள அடைக்கல அன்னைக்கு பல வரலாறுகள் உண்டு. 1716 முதல் 1739 வரை வீரமாமுனிவர் ஏலாக்குறிச்சியில் தங்கி பணியாற்றியிருக்கிறார். ஏலாக்குறிச்சியில் மாதாவின் பெயர் பெரிய நாயகி என்றுதான் இருந்திருக்கிறது. 1739 ஆண்டு மயிலை ஆயரின் உத்தரவு பெற்று அடைக்கல அன்னை என்று வீரமாமுனிவர் மாற்றியிருக்கிறார். அக்காலத்தில் லூத்தரன் சபையினர் திருச்சபையில் குழப்பம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அச்சூழலில் மாதாவின் துணைவேண்டி அடைக்கலமாதா என்று மாதாவிற்கு பெயர் சூட்டியிருக்கிறார்.

அண்மையில் ஏமனில், நான்கு, அன்னை தெரசா சகோதரிகளைத் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். அவர்கள் இன்றைய மறைசாட்சிகள் என்று திருத்தந்தை அறிவித்துள்ளார். அவர்கள் போன்று, திருச்சபை வரலாறு முழுவதும் கோடிக்கணக்கான புனிதர்களும், மறைசாட்சியரும் வாழ்ந்துள்ளனர்.

மாதாவின் வணக்கம், இருவிதங்களில் நமக்குப் பயனளிக்கிறது. ஒன்று மாதாவின் வல்லமையுள்ள பரிந்துரை, இரண்டு, நமக்கு சிறந்த கிறிஸ்துவின் முன்னோடி. மரியா இரக்கத்தின் அரசி என்ற கட்டுரையும், திருச்சபை வரலாற்றில் , மாதாவின் வணக்கம் எப்படி பதிலாயிருக்கிறது என்ற கட்டுரையும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. மாதா வணக்கத்தை பொருளுள்ள முறையில் செயல்படுத்துவோம். தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து, அதன் முடிவுகளும் இம்மாதத்தில் வெளிவந்துவிடும். தமிழர்கள் அதிகமாக அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும். சினிமா மோகம் அழிய வேண்டும். மக்களுக்காக பாசம், பற்று, அன்பு ஆகியவை இயல்பாக தாயிடம் எழுந்து வருகிறது. ஒரு புதுக்கவிதையில், ‘வயோதிகர் இல்லத்திலிருந்து, தன் மகனுக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்களை அனுப்பினாள்’ என்று எழுதியிருந்தார்கள்.

 இம்மாதத்தில் வெளிவந்துவிடும். தமிழர்கள் அதிகமாக அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும். சினிமா மோகம் அழிய வேண்டும். மக்களுக்காக உழைக்கும் தலைவர்கள் உருவாக வேண்டும். மரியன்னை நம் தமிழகம் சிறந்து வளர, நமக்காக இறைவனிடம் பரிந்து பேசுவாராக. மரியே வாழ்க!

Wednesday, 4 May 2016

மரியன்னை வணக்கத்திற்கு வரலாற்றின் சாட்சி

மரியன்னை வணக்கத்திற்கு வரலாற்றின் சாட்சி

- சியா

இறைநம்பிக்கை ஓர் ஆன்மீக அனுபவம். இந்த அனுபவத்தின் அடித்தளம், நாம் பின்பற்றும் சமயங்களின் பாரம்பரியம். கிறிஸ்தவம் இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரவி வளர்ந்து வருகிறது. ஆனால் கிறிஸ்துவத்தில் பிரிவினை சபைகள் உள்ளன. தற்போது பெந்தகோஸ்தே கபையினர், உரோமன் கத்தோலிக்க சபையினரை, சிலை வழிபாடு, மாதா வழிபாடு என்றெல்லாம் சொல்லி குழப்பி வருகின்றனர். மாதாவின் வணக்கம் திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே  இருந்து வந்திருக்கிறது. இதனை, முதல் ஆறு நூற்றாண்டு வரை இருந்த மாதா வழிபாட்டு பாரம்பரியத்தை கீழே தருகிறோம். தொடர்ந்து அடுத்த நூற்றாண்டுகளில் மாதா வணக்கம் எப்படி இடம் பெற்றிருந்தது என்பதை வரும் இதழ்களில் காணலாம். எனவே மாதா வணக்கம் ஆழ்ந்த கிறித்துவ பாரம்பரியத்தில் புதைந்தது என்பதை அறியலாம்.

இரண்டாம் நூற்றாண்டில் :

லியோன் நகரை சேர்ந்த இரேனியுஸ் மரியாவை இரண்டாவது ஏவாள் என்று விளக்கினார். முதல் ஏவாள் கடவுளின் வார்த்தையை மீறி தடைசெய்யப்பட்ட கனியைத் தின்று இறைவனிடமிருந்து பிரிந்தாள். அந்த பிரிவு மானிடத்தையே பாதித்தது. ஆனால் மரியா இரண்டாம் ஏவாள் கடவுளுடைய வார்த்தைக்கு பணிந்ததால், கடவுளிடமிருந்து பிரிந்த மானிடத்தை  மீண்டும் இறைவனிடம் இணைத்தார் என்று விளக்குகிறார்.

நான்காம் நூற்றாண்டில் :

இந்நூற்றாண்டில் வாழ்ந்த  புனித அம்புரோஸ் மரியாவை திருச்சபையின் தாய் என்றார். அவ்விளக்கத்தை இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடும் பதிவு செய்தது. (திருச்சபை எண். 8)

ஐந்தாம் நூற்றாண்டில் :

மூன்றாவது திருச்சங்கம், மரியா, ‘இறைவனின் தாய்’ என்று அறிக்கையிட்டது. நெஸ்டோரியஸ் என்பவர் ‘இறைவனின் தாய்’ என்பதற்கும் ‘கிறிஸ்துவின் தாய்’ என்பதற்கும் வேறுபடுத்தி விளக்கினார். இறைவனின் தாய் என்பதை அவர் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் இறைவார்த்தை உலகம் உருவாகும் முன்னரே இருந்தது. எனவே  உலகில் பிறந்த இயேசுவின் தாய்க்கு ‘இறைவனின் தாய்’ என்பதைவிட, ‘கிறிஸ்துவின் தாய்’ என்பது பொருந்தும் என்றார். ஆனால் திருச்சங்கம், இயேசு, கடவுளும் மனிதரும் ஆனவர். அதனை உறுதிபடுத்தும் வகையில் மரியா இறைவனின் தாய் என்பதே பொருந்தும் என்று அறிவித்தது. இன்றும் கிழகத்திய ஆர்த்தோடாக்ஸ் சபை, லூத்தரன் சபை, ஆங்கிலிக்கன் சபையினர். மரியா இறைவனின் தாய் என்ற நம்பிக்கை கோட்பாட்டினை ஏற்றுக்கொள்கின்றனர்.

ஆறாவது நூற்றாண்டில் :

இந்நூற்றாண்டில் மரியா ஆன்ம, சரீரத்துடன் விண்ணகம் எடுத்துக் கொள்ளப்பட்டாள் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இடம் பெற்றிருந்தது.

Monday, 2 May 2016

மரியன்னையைப் பற்றி புனிதர்கள்

மரியன்னையைப் பற்றி புனிதர்கள்

1. ‘கடைசி தீர்ப்பு நாள் வரை அன்னை மரியாவிற்கு ஓய்வு இல்லை. ஏனென்றால் இப்போதும் எப்போதும் தம் பிள்ளைகளுக்காக பணியாற்றி கொண்டிருக்கிறார் மரியன்னை’ ‡ புனித மரிய வியான்னி.

2. ‘மரியா இன்றி கடவுளின் அருளை பெற விரும்புகிறவர் சிறகுகள் இன்றி பறக்க விரும்பும் பறவையை போன்றவர்’
‡ திருத்தந்தை 12ஆம் பியுஸ்.

3. ‘மரியாவை தன் தாயாக ஏற்று கொள்ளாதவர், இயேசுவை தன் சகோதரராக பெற்று கொள்ள முடியாது’
‡ புனித மாக்ஸ் மில்லியன் கோல்பே.

4. ‘இவ்வுலகம் தன்மகனை நேரடியாக பெற்று கொள்ள தகுதியில்லாத காரணத்தால்தான், மரியா வழியாக தன் மகனை உலகம் பெற்று கொள்ள ஏற்பாடு செய்தார் விண்ணகத் தந்தை’ ‡ புனித அகுஸ்தினார்.

5. ‘உலகம் இன்னும் இயேசுவை அறிந்து கொள்ளவில்லை. ஏனென்றால் இயேசுவின் தாயை இன்னும் அறிந்து கொள்ளவில்லை’ ‡ கர்தினால் 



Wednesday, 11 November 2015

நவம்பர் 21 : தூய கன்னி மரியா ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டது

கி.பி.543இல் எருசலேமில் யூதர்களின் பழைய ஆலயம் இருந்து மறைந்த இடத்தருகில் புதிய ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. தூய மரியாவின் அர்ப்பணத்தை கீழ்த்திசை மக்களோடு கொண்டாடுகிறோம்.
சிறப்பு : அன்னை மரியா அமல உற்பவியாக கருவானபோதே ஆவியானவரால் நிரப்பப்பட்டார். அதே ஆவியாரின் தூண்டுதலால் குழந்தை பருவத்திலேயே இறைவனுக்குத் தன்னை அர்ப்பணமாக்கிக் கொண்டார்.

Ads Inside Post