Pages - Menu

Thursday 3 December 2015

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர் நமக்கு கூறும் அறிவுரை

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான வாரன் பலேட் நமக்கு கூறும் அறிவுரை :

1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.
(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மைக் காப்பாற்றும்)
2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால் விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.
(ஆடம்பரத்தை தவிருங்கள், தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியை தெருவில் நிறுத்திவிடும்)
3. சேமித்த பிறகு மீதத்தைத்தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தைச் சேமிக்கக் கூடாது)
4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிட கூடாது.
(எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம்)
5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே.
(நஷ்டம் ஏற்பட்டாலும் வாழ்க்கையை இழக்கும் அளவுக்கு இருக்கக் கூடாது)
6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்ப்பார்க்காதீர்கள். மிக அவசியமான ஒன்று எல்லோரையும் முழுமையாக நம்பி விடக்கூடாது.
முத்தமிட்டவளை மறக்கவே முடியாது என்கிறார்கள்.
பிறகு ஏன் அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார்கள்?
கவலையை நினைத்து கண்ணீர் சிந்துவதைவிட, இலட்சியத்தை நினைத்து வியர்வை சிந்துங்கள், உங்களால் சாதிக்க முடியும்.

No comments:

Post a Comment

Ads Inside Post