Pages - Menu

Showing posts with label Satire. Show all posts
Showing posts with label Satire. Show all posts

Tuesday, 5 April 2016

ஆத்தாவும், தாத்தாவும்

ஆத்தாவும், தாத்தாவும்
‡ வாயாடி வண்ணக்கிளி

‡ என்னடியம்மா, ஏதோ பத்திரத்தை கொண்டு வந்து கொடுக்கிற.
‡ படிச்சு பாருய்யா, இனிமே என்ன ஏமாத்த முடியாது. இத்தனை வரு­மா ஏமாளியா நான் வாழ்ந்திட்டேன்.
‡ என்ன வி­யம் சொல்லு. மே மாசம், வெயில் காலம் இன்னும் வரல. நீ இப்பவே குழம்பி போனது போல தெரியுது.
‡ அதிகமா பேசாதீங்க, பேசினீங்க பின்னிப்பிடுவேன் பின்னிப்பிடுவேன்.
‡ என்ன பின்னி பிடுவியா? நான் என்ன சடையா?
‡ முதல்ல அந்த பத்திரத்த பாருய்யா.
‡ என்ன விவாகரத்து பத்திரமா? குழியில போற வயசில எப்படிடி இந்த எண்ணமெல்லாம் உனக்கு வருது?
‡ இதான்யா இன்றைக்கு டிரன்ட், மற்றவங்க உதவி எனக்கு தேவையில்லை. நான் தனியா நின்னு ஜெயிச்சு காட்டுறேன் 
   பாருங்க.
‡ இனிமே என்னத்தடி ஜெயிக்க போற?
‡ சொத்து, நகை, பாங்க் பணம் இதெல்லாம் என் கைவசம் கொண்டு வரப் போறேன்.
‡ தாராளமா எல்லாத்தையும் எடுத்துக்கடி. உன்னுடைய பிச்சுபிடுங்கள் இல்லாம வனவாசம் போறேன்.
‡ ஏன்யா, இன்றைய அரசியல் நிலவரம் தெரியாம உளருற.
‡ வாங்க, வாங்கன்னு, கால்லுல விழுந்து கும்பிடாதபடி சில கட்சிகள் கூட்டணிக்கு கூப்பிடுது. அட போய்யான்னு தனியா 
  நின்னு ஜெயிக்கிறேன்னு சில கட்சிகள் ஒதுங்குது.
‡ ஏண்டி, அரசியல நம் குடும்பத்தில இழுத்துக்கிட்டு வர? அது சாக்கடை. நல்லவனையும் கெட்டவனா மாத்திர பேய் 
   கூடம். அரசியல் கட்சிகாரங்க அப்படி, இப்படினா நாம அப்படி நடக்க வேண்டியதில்லை.
‡ என்னய்யா புரியாமா பேசுற. அரசு, அதிகாரமெல்லாம் ஆரம்பமாகிற இடம் குடும்பந்தான். உன்னை அடக்கி    
   வைச்சிருந்தா, எனக்குத் தெரியாம நேத்து சினிமாவுக்கு போயிருப்ப? இன்னைக்கு சொல்லி வைச்சு அதே 
   சினிமாவுக்கு போயிட்டு வரேன் பாரு.
‡ ‘விசாரணை’ என்ற படத்துக்குதான் போனேன். அய்யோ, போலீஸ் செய்ற அட்டூளியத்தை அப்படியே 
   படத்தில பிழிஞ்சு வைச்சிருக்காங்க,
‡ உங்களையும் அப்படி நான் சித்திரவத பண்ணாம போயிட்டேன். அவ்வளவு தூரம் உலகம் தெரியாத 
  பொம்பளையாயிட்டேன்.
‡ போதுமடியம்மா, உன் உணர்ச்சியையயல்லாம் மூட்டை கட்டி வை. உன்னை எனக்கு மனைவியா கொடுத்ததற்கு 
   கடவுளுக்கு தினமும் கோடான கோடி நன்றி செலுத்துகிறேன்.
‡ ரொம்ப ஐஸ் வைக்காதீங்க. வருகிற தேர்தல யாருக்கு ஓட்டு போடலாம்னு யோசிங்க. ஓட்டு உரிமை தீமைக்கு வேட்டு 
   வைக்கும் பெருமை.
‡ சரிடியம்மா, ஓட்டு உரிமை பூமாலையை போல. மணமக்கள் எப்படி பயன்படுத்துவாங்களோ அப்படி 
   பயன்படுத்துவோம்.
‡ பன்றிகளுக்குமுன் போடப்பட்ட முத்தினை போல, விபரம் தெரியாதவங்களா இல்லாம பாத்துக்குவோம்.
‡ இந்தா, விவாகரத்து பத்திரத்த நீயே கிழிச்சு போடு.

Sunday, 31 January 2016

ஆத்தாவும், தாத்தாவும்

ஆத்தாவும்,  தாத்தாவும்

 என்னடியம்மா இந்த வேசம்? நீ ஒரு பொம்பளை, வயசானவ, இரண்டு பிள்ளைகளுக்கு தாயானவ, இப்படி கால்சட்டையும், பனியனும் போட்டுக்கிட்டு வந்திருக்க. என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா?
‡ தமிழ் நாட்டுக்கே பிடிச்சிருக்க பைத்தியம்தான் எனக்கும் பிடிச்சிருக்கு. உங்களுக்கு புரியல?
‡ என்னடி எல்லாத்தையும் புதிரா பேசுற? வயசான காலத்தில புரிஞ்சிக்கிறதும் குறைஞ்சு போச்சு.
இப்ப காட்டுரேன் பாருங்க (தாத்தா நெஞ்சில பாட்டி தலையால முட்டுகிறாள்)
‡ புரிஞ்சுதடி, ஜல்லிகட்டு பிரச்சயைத்தான் இப்படி கால்சட்டை, பனியனுடன் காட்டுறியா? பயங்கரமான ஆளுடிநீ.
‡ அரசியல் கட்சிகள் போட்ட சீனெல்லாம் பியூசா போயிடுச்சு. மக்கள் மேலே உண்மையில அக்கறையிருந்தா, இந்த அரசியல் கட்சிகள் இப்படி நாடகமாடியிருக்க மாட்டாங்க.
‡ அரசியல் கட்சிகளெல்லாம் ஏமாத்திர கம்பெனிகள் என்று தெரியாதா?
‡ அடி, உனக்கு ஒன்று தெரியுமா? தமிழ் நாட்டில மாடு வளர்க்கிறதே குறைஞ்சு போச்சு. கிராமத்திலகூட அப்படித்தான். டவுன்ல, சாணி பவுடர் வாங்கி வீட்டுக்கு முன்னால தெளிக்கிறாங்க தெரியுமா?
‡ நம்ப பாரம்பரிய ஜல்லிக்கட்ட அப்படியே விட்டிருக்கலாம், என்ன சொல்றீங்க?
‡ ஜல்லிகட்டு, மிருகங்கள் வதை என்று சொல்றாங்க. மனிதர்கள் அரசாங்கத்தாலேயே வதைக்கப்படுகிறாங்களே.
‡ ஆமாங்க, குழியும் குட்டையுமா இருக்கிற நம் ரோட்டில பயணம் செய்யும் பல பேருக்கு முதுகுவலி வந்திருக்கும், தண்டுவடம் பாதிக்கப்பட்டிருக்கும். நம்ப அரசு மருத்துவ மனைகள், பேருந்து நிலையங்களில் இருக்கும் அசுத்த சூழ்நிலைகள், மக்களுக்கு வியாதியை வாரி வழங்கி வதைத்துக் கொண்டிருக்கு. தமிழ்நாட்டு சாலைகள், அரசு பேருந்துகளை பார்ககும்போது வாந்தியயடுக்கத்தான் வருது. கர்நாடகா பஸ் தேர் மாதிரி பளிச்சினு வருது. அதுல டிக்கட் கிடைக்க மாட்டேங்குது.
‡ இது இப்படி இருக்கும்போது, பி. ஜே. பி.காரங்க அயோத்தி ராமர் கோவில கட்ட அங்கு கட்டிட பொருள்களையயல்லாம் சேர்த்து வராங்களாம்.
‡ 1992ல நடந்தது மாதிரி மீண்டும் ரத்த கலரிய கொண்டுவர பார்க்கிறாங்க. வன்முறைக்கு அவங்க கை அரிச்சிட்டு இருக்கும் போல இருக்கு. வரலாற்று அறிஞர்கள், 1992ல செய்தது பெரிய தப்பு. இப்ப மீண்டும் ராமர் கோவில கட்டனுங்கிறது பெரிய தப்புன்னு சொல்லியிருக்கிறாங்க. இந்த பகீர் செய்திய படிச்சீங்களா?
‡ பஞ்சாபில பதான்கோட் இடத்தில பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருக்கிறாங்க. தீவிரவாதிகளை தாக்க வேண்டியவர்களையே திவிரவாதிகள் தாக்கியிருக்கிVர்கள். சுடவேண்டிய துப்பாக்கியையே சுட்டிருக்கிறாங்க.
‡ ஆமாடியம்மா, இதெல்லாம் நம்ம கையாலாகாத தனம். தீவிரவாதிகளுக்கு நம்ம படைவீரர்கள் விளக்கு புடிச்சிருக்காங்கன்னு சந்தேகப்படுறாங்க.
‡ இந்தியாகாரங்கனா, பொய் புரட்டு பித்தலாட்டக்காரங்க, காட்டி கொடுக்கிறவங்கன்னு பெயராயிடுச்சு.
‡ சரிடியம்மா, இதெல்லாம் பார்த்து நம்ம பிறரிடம் ஏமாறாம பார்த்துக்குவோம்.
‡ ஆனா ஆறுதலான, நெகிழ்ச்சியான நிகழ்ச்சியும் தமிழ்நாட்டில நடந்திருக்கே, கவனிச்சிங்களா?
‡ சென்னை வெள்ளத்திலே மக்கள் உதவியதை தானே சொல்ற. ஆமான்டியம்மா, உண்மையான தமிழ் மணம் இப்பத்தான் வீசுச்சு. சரி நேரமாயிடுச்சு, நம்வயித்த கொஞ்சம் கவனிப்போம், வா!

Wednesday, 16 December 2015

ஆத்தாவும், தாத்தாவும். 2

ஆத்தாவும், தாத்தாவும். 2
வாயாடி வண்ணக்கிளி

என்னடியம்மா இவ்வளவு சீக்கிரமா, மகவீட்டிலிருந்து திரும்பிட்ட?
வயசானபிறகு வாய பொத்திக்கிட்டு நம்ம இடத்திலேயே இருக்கிறதுதான் மரியாதங்க. பெத்த மனசு பித்துனு மகள பாக்க அப்படி கஷ்டப்பட்டு சென்னைக்கு ஓடுன, உன்முகமே சரியில்லையே என்ன ஆச்சு?

அத ஏன் கேக்கிறிங்க. நான் போனதும், நம்ம மகள் துள்ளிகுதுச்சு ரொம்ப சந்தோ­மா கவனிச்சிக்கிட்டா. சும்மா சொல்லக்கூடாதுங்க. பொம்பள பிள்ளைகளை பெத்துகிட்டது கடவுள் தந்த பெரிய வரம்ங்கிறது இப்பத்தான் புரியுது. ஆனா, நம்ப மக காட்டிய ஆர்வம் அரைநாளிலேயே முடிஞ்சுபோச்சு.
என்ன ஆச்சு, மகளுக்கு ஏதாவது குணமில்லாம போயிடுச்சா?

அது இல்லைங்க, மாப்பிள்ளையினுடைய அப்பாவும், அம்மாவும் திடீர்னு, பிள்ளைய பார்க்குனும்னு வந்திட்டாங்க. சம்மந்திகள பார்த்ததும் ரொம்ப சந்தோ­மா இருந்திருக்குமே?

அங்கதான் பிரச்சனை. அதென்னடியம்மா பிரச்சனை? அவங்கள பார்த்ததும் மகளுக்கு அப்படியே முகம் செத்து போச்சு. மாமனார், மாமியார பார்த்ததும் இந்த பிசாசுகள் ஏன் இன்னைக்கு வந்துச்சுனு என் காதுபடவே சொல்றா. அதில்லாம, உடனே புறப்படுங்கன்னு என்ன அனுப்பி வைச்சுட்டா.

இது மோசந்தாண்டி. அவள நாம பெத்த மாதிரி தானே மாப்பிள்ளையையும் பெத்து, வளர்த்து படிக்க வைச்சு அவளுக்கு வாழ்க்கை கொடுக்க வைச்சிருக்காங்க. பொம்பள பிள்ளைகளுக்கிட்ட இருக்கிற பெரிய கெட்ட குணம் இதாண்டியம்மா. நம்ம மக, என்ன போக சொல்றதுக்கு முன்னாலேயே எனக்கு இரண்டு நாளிலேயே சென்னை சளிச்சு போச்சு.

என்னடியம்மா, சிங்கார சென்னைனு எல்லாரும் சொல்றாங்க, நீ வேறு மாதிரி சொல்ற? கூவம், கூவம்னு சொல்றாங்களே, கருப்பு நதி, என்ன நாத்தம்? குடல பிடிங்கிகிட்டு வருது. வாந்தி எடுத்துட்டேன். கொசு, குருவி அளவுள நம்ம கொத்துது. பாரீஸ் பக்கம் என்னை அழைச்சிட்டு போனா என்ன அசிங்கம். குப்பையும், சகதியுமா இருக்கு. சுத்தங்கிறத பற்றியே நம்ம மக்கள் கவலைப்படுகிறதே இல்லை. இப்படியிருந்தா எப்படி வெளிநாட்டுக்காரங்க நம்ம இடத்துக்கு வருவாங்க? ஒரு வெளிநாட்டு வெள்ளைகாரங்கள பார்த்தேன். துணியால மூக்கபிடிச்சிட்டு போறாங்க. பாரிஸ்ல இருக்கிற அந்தோணியார் கோவிலுக்கு போனேன். செப்டம்பர் எட்டாம் தேதி, அப்பா! அவ்வளவு கூட்டம். பிச்சையயடுப்பவர் கூட்டமும் ஏராளம். மக்களிடம் தெய்வீகபக்தி நிறைய  இருக்கு. நாம எந்த நிலையில் வாழ்ந்தாலும், கடவுள் உதவி கொடுக்குனும்னுதான் மக்கள் நினைக்கிறாங்க. நம் வாழ்வை பற்றியும், முயற்சியை பற்றியும் கவலைபடுருதில்லை. 

நமது கத்தோலிக்கர், சகாயம், இறைவாக்கினரை போலவே செயல்பட்டிருக்காரு. அதெல்லாம் படிச்சியா?

டிவி சீரியல்தான் நான் பார்கிறதுன்னு உங்களுக்குத் தெரியாதா? மதுரையில நரபலி கொடுத்திருகிறாங்க ஒருவர் புகார் கொடுத்திருக்காரு. கிரணைட் கல் சம்மந்தமா நடந்த ஊழலைப் பற்றி சகாயம் தீவிரமா விசாரிச்சுகிட்டு இருக்காரு. அதுல, நரபலி செய்திருக்காங்க என்ற புகார் வந்திருக்கு. அத விசாரிக்க போகும்போது, போலீஸ் பெரிய அதிகாரி எஸ்.பியே ஒத்துழைப்பு கொடுக்கலையாம். அதனால சுடுகாட்டிலேயே கட்டில் போட்டு போர்வை தலையணையயல்லாம் இல்லாம அங்கே படுத்திருக்காரு. இடத்தை தோண்டி பார்த்ததில நாலு எலம்புக்கூடு இருந்திருக்கு.

அடேங்கப்பா, என்ன துணிச்சல் அந்த ஆளக்கு? மனிதன்னு பிறந்தா இதே போலதான் உண்டையுடன் வாழனும். நீங்களும், நானும் ஏதோ இரண்டு பிள்ளைகளை பெத்திட்டு, வாழ்க்கையை முடிச்சிட்டோம். 

உலக செய்திகள்ல முக்கியமா வரது சிரியா நாட்டுல, மக்கள் அகதிகளா வேறு நாடுகளுக்கு ஓடுறதுதான். ஐரோப்பிய நாடுகள்ல இவங்ள ஏத்துக்காம, கப்பல் கவிழ்ந்து நிறைய பேர் இறந்திட்டாங்க. ஒரு இரண்டு வயது குழந்தை இறந்து கடல் கறையில் ஒதுங்கினதுதான் பெரிய மாற்றத்தை கொண்டு வந்திடுச்சு.
நம் திருத்தந்தை, இம்மக்களை ஏற்று கொண்டு உதவுங்கள் என்று வேண்டுகோள் கொடுக்க, பல நாடுகளும் உதவ முன் வந்திருச்சு. நம் திருத்தந்தை பிரான்சிஸ் புரட்சிகாரருனு உலகமே பாராட்டுது. நம்ம தமிழ்நாட்டுல, அடுத்த வருடம் தேர்தல் வர போகுதில்ல. ஆமா.. ஓட்டுக்கு நோட்டு என்ற தத்துவம்தான் தமிழ்நாட்டில ஜெயிச்சுகிட்டு இருக்கு.
எல்லா கட்சிகாரங்களும், மக்களை எப்படி ஏமாத்தி ஓட்டுவாங்கலாம் என்று ஊர் ஊரா சுத்தி வாராங்க. ஏமாற்றும் காலம் ஓடுது. ஏமாறும் காலம் பின்னால் கூரும்.

இன்னொருவி­யம் தெரியுமா? தன் கண்ணாடியை மாத்தரத்துக்கு கண்ணாடி கடைக்கு திருத்தந்தை சென்றிருக்கிறார். எவ்வளவு எளிமை. ஏன் பிரதமர் மோடி நம் அம்மாவை சந்திக்க அவரு வீட்டுக்கே போகலையா?

ஆதாயமில்லாமலா செட்டி ஆத்துல போவான்?

அதைபற்றி காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் ஏடாகூடமா பேச, விளக்கமாறு, செருப்பெல்லாம் இளங்கோவன் படத்துமேல பூஜை போட்டுகிட்டு இருக்கு.

ஊழல் செய்த அதிகாரிகள், அரசியல்வாதிகள் மேலே இப்படிப்பட்ட பூஜை நடத்தினால் ஊழல் பிசாசு ஓடிடும். அதை நம்ம மக்கள் செய்ய மாட்டாங்க.

திருச்சபை செய்தியை கொஞ்சம் சொல்லுங்க.
செப்டம்பர் மாதம்னா வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா திருநாள்தான் பிரபல்லியம்.

இந்த வரு­மும் ஏராளமான மக்கள் வேளாங்கண்ணிக்கு குவிந்திருக்கிறார்கள். அரசும், வேளை நகர் தந்தையர்களும் சிறப்பாக ஏற்பாடுகளையும் வசதிகளையும் செய்திருக்கிறார்கள். மாதா மழையை கொடுத்து வாழ வைக்கனும். கர்நாடகாவிலும் மழையில்லையாம். கர்நாடக்காவில் அப்படியயாரு மின்வெட்டாம். தமிழ்நாட்டிலிருந்து மின்சாரம் கேட்கிறார்களாம்.

நல்லாயிருக்கு. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராமல், மின்சாரத்தை தமிழ்நாட்டிலிருந்து கேடகும் கர்நாடகா தந்திரசாலிதான். நமது அலசல் போதும். நம்ம கச்சேரிய வாசகர்கள் கேட்கிறது குறைவு போல இருக்கு. யாரும் இதுபற்றி விமர்சனம் எழுத காணோமே. பரவாயில்லை. கச்சேரியை தொடர்வோம்.

Thursday, 3 December 2015

ஆத்தாவும், தாத்தாவும் வாயாடி வண்ணக்கிளி

ஆத்தாவும், தாத்தாவும்
வாயாடி வண்ணக்கிளி
என்னடியம்மா தலையயல்லாம்விரிச்சு போட்டுக்கிட்டு இப்படி வந்து நிக்கிற? என்ன ஆச்சு உனக்கு? அதிகமா பேசினீங்க, உங்கள உரிச்சு போட்டுவேன். இப்பல்லாம் மனு­னுக்கு காலமில்ல, பேய்க்குத்தான் காலம்.
அடியம்மா, பேயா வந்திருக்க, உனக்கு என்ன வேணும்? சொல்லி தொலை. நாலு பேய் படம் வேணும். இப்பத்தான் பக்கத்து வீட்டில ஒரு பேய் படம் பார்த்திட்டு வரேன். பேய்னா, நல்லா ஜாலி!
எத்தனை பேயயல்லாம் பார்த்திருக்கிறேன். இந்த வே­ம் போடாமலேயே நீ, பல நேரத்தில பேயாட்டம் ஆடியிருக்கிறியே!
ம்... உடனே போய் நாலு பேய் படம் சிடி வாங்கிட்டு வா. இல்லைனா உன்ன “செஞ்சிடுவேன்”.
என்னடி, புது வார்த்தையா இருக்கு. செஞ்சிடுவேன்னா என்னா அர்த்தம்?
பெறந்த சின்ன பிள்ளைக்குக்கூட இந்த வார்த்தை தெரியுது. உங்களுக்கு தெரியலையா? செஞ்சிடுவேனா, உங்கள முடிச்சிடுவேன்னு அர்த்தம்.
அடி பாவி, இந்த அளவுக்கு வந்திட்டியா? இப்பவே போன் போட்டு நீ கேக்கிறத வாங்கிட்டு வரச்சொல்றேன்.
ஏன்டியம்மா, ஊரெல்லாம் மழைபேஞ்சு, மக்கள் தண்ணியில மிதக்கிறாங்க. அதபத்தியயல்லாம் உனக்கு °ன்டியம்மா, ஊரெல்லாம் மழைபேஞ்சு, மக்கள் தண்ணியில மிதக்கிறாங்க. அதபத்தியயல்லாம் உனக்கு கவலையில்லையா?
வயித்தெரிச்சல கொட்டிக்காதேயா?
கடவுள் கொடுக்கிற மழைய தேக்கி வைக்க கதியில்லாம போயிருச்சு. இலவசம் இலவசம்னு அரசாங்கம் மக்களுக்கு அல்வா கொடுத்துகிட்டு இருக்கு.
ஆமாடியம்மா, பேனு, மிக்சியயல்லாம் பேருக்கு தானாம். ஓட்டை ஒடசலா இருக்காம். கேரளா அரசாங்கத்தில வேலை செஞ்ச ஒரு அதிகாரி சொன்னாராம். தமிழ்நாட்டில வேண்டிய ஏரி, குளம் வெட்டி, இருக்கிற ஏரிகளெல்லாம் பல்லகாட்டி, தண்ணிய பிச்சை வாங்க வேண்டியதில்லைனு சொன்னாராம்.
ஆந்திராவில சந்திரபாபு நாயுடு 2000 கோடி செலவு செய்து கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளை இணைச்சிருக்காராம். இந்த மழையில, 5 டிஎம்சி தண்ணீர் சென்னையில மட்டும் கடலில் கலந்திருக்காம்.
இதுமாதிரி ஆக்கபூர்வமான ஐடியால்லாம் நம்ம ஆளுகளுக்கு தோணாது. விஜய், அஜய்ன்னாத்தான் பைத்தியமாயிடு வாங்க.
டெல்லியில, கேரளா அரசு பங்களாவில, மாட்டுக்கறி சமைச்சாங்கன்னு, போலீஸ் ரெயிடு போச்சுதாம். கேரளாகாரங்க சும்மா விடுவாங்களா? தர்ணா நடத்தினாங்க. மத்திய அரசு ஆடிபோயிடுச்சாம். மாட்டுக்கறி, பசுவதைன்னு கொடி பிடிக்கிறவங்க, நதிகளை இணைச்சு நாட்டின் வளத்தை பெருக்கக் காணாம்.
சத்தம் போட்டு பேசாதீங்க, எலி கடவுளின் வாகனம். எலியை அடிக்கக் கூடாது. கொசுவும் பசுவை போல. கொசுவைக் கூட அடிக்கக் கூடாதானு சொன்னாலும் சொல்லுவாங்க.  துவரம் பருப்ப, துயரம் பருப்புனு சொல்ல வைச்சிருக்கே. தெரியுமாடியம்மா, தமிழ்நாடு, நாட்டின் வளர்ச்சியல 20வது மாநிலமா இருக்குதாம்.
அம்மா ஆட்சியில எது நடந்தாலும், மக்கள் கண்டுக்க மாட்டாங்க. மக்களுக்கு அவ்வளவு விழிப்புணர்வு.. பீகார் தேர்தல மோடி தன்மாய வித்தையயல்லாம் காண்பித்தாரு. ஒன்னும் எடுபடல. மக்கள் எல்லாம் தெளிவாக இருக்கிறாங்க.
சரிடியம்மா, வெள்ளத்தில குதிச்சு, ஒரு அலசு அலசியதுபோல, ஒரு அலசு அலசிட்டோம். இந்தா பேய் சிடி வந்திருச்சு.
போய் பேயோடு உல்லாசம் இடு.
பேய்க்குத்தான் காலம். அடுத்த வாரம் ஒரு கலக்கு கலக்குவோம்.

Wednesday, 11 November 2015

ஆத்தாவும், தாத்தாவும்

என்ன ஆத்தா, காலை 9 மணியாச்சு, டிபன் தயார் செய்யலையா? என்ன உம்னு இருக்க?
நாம டயாபடிக் பே­ன்ட்னு உனக்குத் தெரியாதா?
இன்னைக்கு உங்களுக்கு பட்டினிதான்.
நான் என்ன செஞ்சேன்? அதுக்கு இப்படி ஏன் சாகடிக்கிற?
உங்கமேல கோபமில்ல, நம்ம நாட்டில நடக்கிற அக்கிரமத்த நினைக்கும்போது, சாப்பிடாம சாகலாம் போலிருக்கு.
புரியும்படியா சொல்லடியம்மா, இப்படி உயிர வாங்காத?
என்ன புரியும்படியா சொல்றது? பேப்பரெல்லாம் படிக்கிறதில்லையா?
நமக்குதான் வேலையில்ல. வரிக்கு வரி படிக்கிறேன். என்னானு சொல்லி தொலை.
ஏங்க, உத்திரபிரதேச மாநிலத்தில தாத்ரி என்ற ஊர்ல மாட்டு இறைச்சிய சாப்பிட்டாருனு முகமது இக்லாக என்பவனை அடிச்சி, அவங்க குடும்பத்தையே நாசம்பண்ணியிருக்காங்களே, நாம சுதந்திர நாட்டில வாழறமா? அல்லது ஆடு, மாடுகளா வாழறமானு தெரியலை?
ஆமாடியம்மா, மத்தியில ஆட்சியில இருக்கிற நம்ம பி.ஜே.சி கட்சி ஆளுங்க இப்படி அராஜகம் செய்திருக்காங்க.
இதவிட அநியாயம் தெரியுமா, அந்த கட்சி தலைவர், அது ஒரு திடீரென்று ஏற்பட்ட விபத்துனு, சொல்லியிருக்காரு.
தடியயடுத்தவன் தண்டல்காரங்கறது போய், கத்தியயடுத்தவன் கொத்தியயடுக்கும் நாட்டாமை என்பதை போல ஆகியிருச்சு.
நம் நாட்டு பிரதமர் இதற்கெல்லாம் வாயைத் திறக்காம, உலகம் சுற்றிட்டு இருக்காரு.
அமெரிக்காவுக்கு இப்ப பிரதமர் போனப்ப இந்திய வம்சத்தினர் பல இடங்களில் எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க.
அதெல்லாம் அவருக்கு எறும்பு கடிக்கிற மாதிரி.
இலங்கையில் தமிழர்களை கொடுமையா அழித்தற்கு ஐக்கிய நாட்டு சபை கொண்டு வந்த தீர்மானம் புஷ்வானமா போயிருச்சே!
ஆமான்டியம்மா கொலை செஞ்சவன, அவன் அண்ணனே நீதிபதியா தீர்ப்பிடுவது மாதிரி ஆகுது.
இலங்கை நீதிபதிகளை இலங்கை படுகொலையா விசாரிப்பாங்களாம்.
எல்லாம் நம்ப பலகீனம். சேலத்தில, நடிகை நயன்தாரா வந்தப்ப அவங்கள பார்க்க இளைஞர் அவ்வளவு கூட்டமா!
விஜய்யின் புலி படத்தைப் பார்க்க அவ்வளவு போட்டியாம். ஒரு காட்சி ரத்து செய்யப்பட்டதற்காக, பெரிய போராட்டமா!
ஆமா, இப்படி கண்மூடிதனமா வாழ்ந்தா, நம்மல ஏமாளினு நம் தோள்மேல் உக்காந்து நம்மள ஓட்டுவான்.
ஏங்க, தனி நாடு என்று கேட்கும் அளவுக்கு உரிமைக்கு முதலில் போராடினார்கள்.
இப்போது கடிதம், அறிக்கை, நடிகனின் அடிமைகள் என்று விபரமில்லாம வாழ்ந்தா, தமிழருனா ஏமாந்த பேக்கானு தான் எல்லாம் செய்வாங்க.
நம்ம தமிழ்நாட்டு பஸ்யஸல்லாம் தேர்மாதிரி வலம் வந்த காலம் மாறி, இப்ப ஓட்ட வண்டியா ஓடுது.
நாகர்கோவில் பக்கத்தில ஓடும் பஸ்ஸின் ஓட்டையிலிருந்து ஒரு அம்மா கீழே விழுந்திருக்கு.
மழை பெய்யும்போது பஸ் உள்ளேயே குடைபிடித்து போகும் நிலையிருக்கு.
ஏங்க இலவசங்கள் இப்ப யோர்தான் நதிபோல ஓடிகிட்டு இருக்கு.
அம்மா ஸ்வீட் ஸ்டாலு, கேக் 10ரூ, பப்ஸ் 10ரூ என்று குடந்தை பஸ் ஸ்டான்டுல, பறக்குது.
தேர்தலுக்கு இதெல்லாம் முன்னோட்டம்.
தேர்தலுக்குப்பிறகு அவங்க காலுல நாம விழனும்?
செட்டிபட்டியில, ஒரு பொண்ணு ஒரு பையனோட ஓடி போயிருச்சாம். ஏற்காட்டிற்கு வண்டியில போனப்ப கீழே விழுந்து பெருங்காயம் ஆயிடுச்சாம். அத பங்கு சாமியாருகிட்ட விசாரிக்க வந்தாங்களாம்.
அது பொண்ண இழுத்துக்கிட்ட போன பையனுக்கு எதிர்ப்பா இருந்ததாம். அதனால, அன்னைக்கு இராத்திரியில மற்ற பையன்களை அழைச்சிட்டு வந்து பாதர அடிச்சி இருக்காங்க.
கொள்ளை அடிக்கிறவங்களுக்கு அடிமையாகவும், பணி செய்கிறவங்களை இப்படி அவமானமா அடிக்கிறதும். நம் தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் ஊறிப்போச்சு.
பசிக்குதடி, சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணு.
இதோ நம்ம மகள் சாப்பாடு கொண்டுவற்ரா.
எல்லாம் முன்னேற்பாடு செய்திருக்கிறேன். உங்கள பசியிலெல்லாம் சாகடிக்க மாட்டேன்.
நமது அலசலை பிறகு தொடர்வோம்.
- வாயாடி  வண்ணக்கிளி

Ads Inside Post