Pages - Menu

Showing posts with label Self Improvement. Show all posts
Showing posts with label Self Improvement. Show all posts

Sunday, 8 April 2018

வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில்

- அருட்திரு. எஸ்.  ஜான் கென்னடி,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

களத்தில் கலக்கும் கோலி’; ‘கரையில் தவிக்கும் கோலி’, ஆரம்பமே கண்ண கட்டுதோ! சொல்றேன், சொல்றேன். கடந்த 2008ம் ஆண்டு, மலேசியாவில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிகட் உலகக் கோப்பை போட்டி அது. அதுவரை  ஓப்பனிங் பேட்ஸ் மேனாக அவர் களமிறங்கியதில்லை. ஆனால் அன்று களமிறங்க வேண்டிய கட்டாயம் அந்த கோலிக்கு இருந்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஆறு போட்டிகளில் 3 அரை சதங்கள் விளாசினார். அந்த தொடரில் 218 ரன்கள் குவித்து பிரமிக்க வைத்தார் கோலி. ஆனால் கோலி என்றவுடன் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் என்று நினைத்துவிட வேண்டாம். அவரை விட 42 நாட்கள் இளையவரான அதே அணியில் இணைந்து அந்த உலகக் கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தவர் தார்வார் கோலி. கடந்த 2008 ம் ஆண்டுதான் ஐ.பி.எல் போட்டிகள் பிரபலமடையத் தொடங்கியிருந்தன. நம்ம ஹீரோ தர்வார் கோலியும் ராஜஸ்தான் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதிரடி காட்ட வேண்டிய இடத்தில் சுருண்டு போனார். அந்த அணிக்காக 2 இன்னிங்ஸ்களில் வெறும் 10 ரன்கள்தான் அடித்திருந்தார். அதே சமயம் நம்ம டெஸ்ட் கேப்டன் விராட் கோலி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை அதிரடி ஆட்டத்துக்கு மாற்றத் தொடங்கியிருந்தார். 2008 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் விராட் கோலி 12 இன்னிங்ஸ்களில் 165 ரன்கள் எடுத்திருந்தார். நிதான ஆட்டத்தை கடைபிடிக்கும் தார்வார் கோலியால் ஐ.பி.எல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அடுத்த சீசனில் கிங்ஸ் லெவன் அணிக்காக தார்வார் கோலி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த முறை 2 இன்னிங்ஸ்களில் 2 ரன்களே எடுத்தார். தார்வார் கோலியின் ஐ.பி.எல்.லில் சோடை போனதால் தேர்வாளர்கள் தார்வார் பக்கம் பார்வையை திருப்பவில்லை. அதனால் தேசிய அணியில் இடம் பிடிக்கும் தார்வாரின் கனவும் சிதைந்து போனது. ஆனால் விராட் கோலி ஒவ்வொரு போட்டியிலும் தன்னை மெருகேற்றிக் கொண்டார். அடுத்த ஆண்டு டிராவிட் காலிஸ் போன்றவர்களையயல்லாம் காலி செய்த பெங்களூர் அணி, விராட்டை மட்டும் தக்க வைத்துக் கொண்டது. 

தன்னைத் தானே மெருகேற்றிக் கொள்ளும் திறன்தான் இன்று சிலரை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. தொடக்கப்புள்ளி ஒரே இடத்தில்தான். ஒரு கோலி முயற்சி மட்டும் செய்தார். இன்னொரு கோலி திறன்களை மெருகேற்றிக் கொண்டார். தற்போது 2016இல்,  20 உலகக் கோப்பை போட்டியில் தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றார். ஒருவர் ஏணியில் ஏறினார். இன்னொருவர் சறுக்கினார். நாம் எப்படி? நாம் எந்த வேலையை செய்தாலும் நம்முடைய திறன்களை மெருகேற்றிக் கொண்டால் வெற்றி நிச்சயம். பள்ளியில், அலுவலகங்களில், தொழிற் சாலைகளில் வேலை செய்பவர்கள் அவ்வப் பொழுது தங்களுடைய  அறிவை வளர்த்துக் கொண்டு திறன்களை மெருகேற்றிக் கொண்டால்தான் வேலையை தக்க வைத்துக் கொண்டு வெற்றி பெற முடியும். இது அவர்க ளுக்கு மட்டுமல்ல ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்குரைஞர்கள், விவசாயிகள், சமூக சேவகர்கள், அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள், விளையாட்டு வீரர்கள் தங்களுடைய திறன்களை மெருக்கேற்றிக்கொண்டால் வெற்றிக் கனியை சுவைக் கலாம். குறிப்பாக மாணவ மாணவியர்கள் தங்கள் திறன்களை மெறுக்கேற்றிக் கொண்டால் நல்ல மதிப்பெண்களைப் பெற்று அவர்கள் வெற்றி வாகைச் சூடலாம். ஆகவே திறன்களை மெறுகேற்றுவோம். வெற்றியாளர்களாகத் திகழ்வோம்.

விழித்துக் கொண்டிருக்கும் போதெல்லாம்
உழைத்துக் கொண்டே இரு.  ‡ கவிஞர் வைரமுத்து. 

Thursday, 1 March 2018

வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில்
வெற்றியைக் கொண்டாடுவோம்.

 அருட்திரு. எஸ்.  ஜான் கென்னடி,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

திரைப்படத்தில் வடிவேலுவின் நகைச்சுவையை ரசிக்காதோர் யாரும் இல்லை. அப்படி அனைவரும் ரசித்த ஒரு நகைச்சுவையை சொல்கிறேன். வடிவேலு போய்க்கொண்டிருப்பார். சிங்கமுத்துவும், மற்றொரு நடிகரும், வடிவேலைப் பார்த்து பேசிக்கொள்வார்கள். ‘அண்ணே! இவன் சரியா வருவானாண்ணே’ என்று ஒரு நடிகர் சொல்ல அதற்கு சிங்கமுத்து ‘யாரு? இவன் சரியா வரமாட்டான்டா’ என்று சொல்லுவார். வடிவேலு ‘யோவ் எதுக்குயா நான் சரியா வரமாட்டேன்’, சொல்லுயா என்பார். சிங்கமுத்து, ‘நான் நினைக்கிற மேட்டருக்கு நீ சரியா வரமாட்டடா போடா’ என்று சொல்லுவார். காலையில் வடிவேலு சிங்கமுத்து வீட்டின் முன் நின்று, ‘மெட்ராசுக்கு போறேன். அதுக்கு முன்னாடி ஒரு டவுட்ட கிளியர் பண்ணிட்டு போலாம்ன்னு வந்தேன். அன்னைக்கு நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டேன்னு சொன்னீங்க, நான் எதுக்கு சரிபட்டு வரமாட்டேன்னு சொல்லுங்க’ என்பார். சிங்கமுத்து ‘நீ அதுக்கு சரிபட்டு வரமாட்டடா என்று கோபத்தோடு சொல்லுவார்’. மனைவியும் ‘நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட’ என்பார். கடைசியில் வடிவேலுவின் அப்பாவும் இணைந்து நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட என்பார். வடிவேலு ‘கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டேன்கிறாங்களே, எப்ப அடிச்சாலும் அதுக்கு ஒரு காரணத்த சொல்லி அடிப்பாங்க. அது மனசுக்கு ஒரு ஆறுதலா இருந்துச்சு. இப்ப அடிச்சதுக்கு காரணமே சொல்லாம அனுப்புறாங்களே. நான் எப்படிடா ஊருல போய் பொழப்ப நடத்துறது. எந்நேரமும் மனசு உருத்துமே, எதுக்குடா நான் சரிபட்டு வரமாட்டேன் சொல்லுங்கடா,’ என்று கூறுவார். இந்த ஜோக்கை பல முறை பார்த்து பார்த்து சிரிச்சிருப்பீங்களே. 

நண்பர்களே! வடிவேலு  அவர் எதற்கு சரிபட்டு வரமாட்டார் என்பதை அறிய என்ன பாடுபடுகிறார் பாருங்கள். ஆனால்,‘உனக்கு கணக்கு வராது, ஆங்கிலம் வராது, அறிவியல் வராது, பெயிலாத்தான் போவ, மாடு மேய்க்கத்தான் லாயக்கு, பேசத்  தெரியாது, பாடத்  தெரியாது, எழுதத் தெரியாது, உனக்கு எதுவும் வராது. நீ எதுக்கும் சரிப்பட்டு வரமாட்ட’ என்று மற்றவர்கள் நம்மைப் பார்த்து சொல்லும்போது நம்மில் பலர் ஏற்றுக்கொள்கிறோம். வடிவேலைப் போல் நான் ஏன் சரிப்பட்டு வரமாட்டேன்னு கேட்க, சிந்திக்கத் துணிவதில்லை. அதற்கும் மேலாக நமது தோல்விகளைக் கொண்டாடியும் வருகிறோம். ஆம் சில இளைஞர்கள், ‘மாப்ள எனக்கு 4 அரியர்ஸ் இருக்கு, ஆங்கிலம் வராது, எங்களுக்கு எதுவுமே வராதுப்பா’ என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். சிலர், ‘எனக்கு படிப்பு வராது, படிச்சாலும் மனசுல ஏறாது, அப்படியே படிச்சாலும் பரீச்சை அன்னைக்கு மறந்திடும். எல்லாமே கஷ்டமான கேள்வியா வரும்’ என்று சொல்வார்கள். ஒரு சிலர், ‘எனக்கு எந்த நல்லதும் நடக்காது. எப்பவும் என் வாழ்க்கை கஷ்டம்தான். எனக்குன்னு யாருமில்லை. எதுவுமில்லை. எது செஞ்சாலும் தோல்வியில்தான் முடியும்’ என்று சொல்வார்கள். இவ்வாறு பேசி பலர் தங்களது தோல்விகளைக் கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் தங்களின் இயலாமையை ஏற்றுக்கொண்டு அந்தத் தடைகளை உடைத்து வெளியே வருவதற்கு பயந்து, தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி தோல்விகளை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளாத காரணத்தினால் தான் தோல்விகளைக் கொண்டாடப் பார்க்கிறார்கள். தோல்விகளைப் பற்றி ஒரு சமூகம் கைத்தட்டினால் அந்தச் சமூகம் தோற்றுவிடும். ‘தோல்விகளைக் கொண்டாடுதல்’ என்ற மனநிலையிலிருந்து வெளியே வர வேண்டும். நமது வெற்றியை நாம் எப்பொழுதும் கொண்டாட வேண்டும். எனக்கு ஆங்கிலம், பேசத்தெரியாதுன்னு சொன்னா, எனக்கு படிப்பு வராதுன்னு சொன்னா, உடனே கைத்தட்டுகிற பழக்கம் சமூகத்தில் புரையோடிக்கிடக்கிறது. இந்த மனப்பாங்கு மிக மிக தவறானது. எனக்கு வராது, வராது என்று சொல்லி தோல்விகளை ஏற்றுக்கொண்டு தப்பிக்கும் மனப்பாங்கை உடைக்க வேண்டும். அதிலிருந்து மீண்டு வரவேண்டும். ‘ஏன் எனக்கு வராது, ஏன் நான் அதற்கு சரிப்பட்டு வரமாட்டேன், ஏன் நான் அதுக்கு செட்டாகமாட்டேன் ’ என்று கேள்விகளை எழுப்புகிறவர்களால் மட்டுமே வெற்றி பெற முடியும்.  வரலாற்றில் இடம் பிடித்த வெற்றியாளர்களைப் பாருங்கள். அவர்கள் எல்லோருமே தங்கள் தோல்விகளைக் கொண்டாடவில்லை. அவர்கள் அவைகளை எதிர்த்துப் போராடியவர்கள். அந்தத் தடைக்கற்களை உடைத்தெறிந்தவர்கள்.  மற்றும் தோல்விகளை படி கற்களாக மாற்றியவர்கள். ஆகவேதான் அவர்களின் வெற்றியை அவர்களால் கொண்டாட முடிந்தது. அன்பு வாசகர்களே! இனி யார் உங்களைப் பார்த்து ‘இது வராது, அது வராது, இதுக்கு சரிப்பட்டு வரமாட்ட, அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட’ என்று சொல்லும்போது ‘நான் ஏன் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்’. நான் ஏன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்று கேள்விகளை எழுப்பி ‘எனக்கு எல்லாம் வரும், எல்லாவற்றிற்கும் சரிப்பட்டு வருவேன்’ என்ற மனப்பாங்கை வளர்த்து, தோல்விகளைக் கொண்டாடாமல் வெற்றிகளைக் கொண்டாட வாழ்த்துகிறேன். 

Don't Celebrate failures, Celebrate success

ஒருவர்  உன்னை தாழ்த்தி  பேசும்போது ஊமையாயிரு.  புகழ்ந்து  பேசும்போது செவிடனாய் இரு, எளிதில் வெற்றி பெறலாம்.     

Sunday, 3 December 2017

வெற்றி உங்கள் கையில், விந்தையைப் பிறப்பிக்கும் வித்தியாசம்

வெற்றி  உங்கள்  கையில் 

- அருட்திரு. எஸ்.  ஜான் கென்னடி,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

விந்தையைப்  பிறப்பிக்கும் வித்தியாசம்

Fatherஎது  செஞ்சாலும் Different ஆக செய்யனும். அப்பத்தான் அது Success ஆக  முடியும். இந்த வார்த்தைகளை அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பார்கள், என் குடும்ப நண்பரின் வீட்டில்  இருக்கும் நபர்கள். அவர்கள் இவ்வார்த்தைகளை  சொல்வதோடு நின்று விடாமல்  செய்தும் காட்டினார்கள். ஆம்! அவர்கள் வீட்டில் நடைபெற்ற திருமண ஒப்பந்தம் மற்றும் திருமண விழாவில் Different ஆக செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றதோடு வெற்றியும் பெற்றார்கள். அக்குடும்பத்தில் உள்ள மகனின் திருமண ஒப்பந்த விழாவிற்கும், திருமணத்திற்கும் நான் சென்றிருந்தேன். அதில் எப்படி அவர்கள் Different ஆக செய்தார்கள் என்பதை பகிர்ந்து கொள்கிறேன்.
  
திருமண ஒப்பந்த விழாவில் தட்டுகளைமற்றும் சடங்கினை Different ஆக செய்திருந்தார்கள். ஒரு தட்டில் மெழுகுவர்த்தியை ஏற்றி அது ஒளியாம் இறைவனை குறிப்பதாக சொல்லிக் கொடுத்தார்கள். இரண்டு தட்டுகளில்  திருமணம் செய்ய இருக்கும் இருவரின் ஆடைகளை வைத்துக் கொடுத்தார்கள். மூன்று தட்டுகளில் முக்கனிகள், நான்கு தட்டுகளில் அச்சம், மடம், பயிர்ப்பு, ஞானத்தை குறிக்கும் வகையில் இனிப்பு மற்றும் காரவகைகளைக் கொடுத்தார்கள். ஐந்து தட்டுகளில் பஞ்ச பூதங்களை  குறிப்பதாக சொல்லியும், ஆறு தட்டுகளில் அறுசுவைகளை குறிப்பதாக சொல்லியும், ஏழு தட்டுகளில் வானவில்லின் வண்ணங்களைக் குறிப்பதாகச் சொல்லியும், எட்டு  தட்டுகளில் திசைகளை மேற்கோள் காட்டியும், ஒன்பது தட்டுகளில்  நவதானியங்களை அறிவுறுத்தியும் பெண் வீட்டாரிடம் கொடுத்தார்கள். மொத்தம் 61 தட்டுகளை கொடுத்தார்கள். அவர்கள் அனைத்து பொருட்களையும் அர்த்தத்தோடு கொடுத்தார்கள். அதாவது வரப்போகும் மருமகள் எல்லா வகையான விவரங்களையும், நற்பண்புகளையும், ஆசீர்வாதங்களையும் பெற்று பிறந்த வீட்டிற்கு பெருமையையும், புகுந்த வீட்டிற்கு நற்பெயரையும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட அனைத்து தட்டுகளையும் அளித்தார்கள். அனைவரும் அவர்கள் செய்ததை மனமுவந்து பாராட்டினார்கள். திருமண விழாவிலும் ஆலயத்தில் ம்ஷ்க்ஷூக்ஷூereஐமி ஆக செய்தார்கள்.

அருட்பணியாளர்கள் பவனியாக பீடத்திற்கு வந்த பிறகு மணமகன் அவருடைய தோழர்களோடு ஆலயத்திற்கு வந்தார். பிறகு மணமகளின் தந்தை மணமகளின் கையைப் பிடித்துக் கொண்டு, பீடத்திற்கு முன் வந்து மணமகனிடம் ஒப்படைக்கிறார். திருப்பலி முடிந்தவுடன் ஆலயத்தை விட்டு வெளியே சென்று அனைவரும் மணமக்களுக்கு மலர்தூவி வாழ்த்து கூற பலூன்கள் பறக்கவிடப்பட்டு கரம் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அதேபோல் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும், அவர்கள் அளித்த திருமண விருந்திலும், திருமணத்தில் கலந்துக் கொண்டு சென்றவர் களுக்கு கொடுத்த அன்பளிப்பிலும் Different ஆக நிறைய செய்தார்கள். திருமண விழாவில் கலந்து கொண்டவர்களுள் பலர் நல் வார்த்தைகளை சொல்லி பாராட்டிச் சென்றார்கள். எப்படி அக்குடும்பத்திற்கு இப்படிப்பட்ட பாராட்டு கிடைத்தது? அவர்கள் என்னிடம் சொன்ன அதே வார்த்தைகளை நினைவுகூர்கிறேன். Different  ஆக செய்யனும். அப்பத்தான் அது Success ஆக முடியும். ஆம், அக்குடும்பத்தினர் Different ஆக செய்தார்கள். பாராட்டு மட்டுமல்ல வெற்றியும் கைக் கூடியது
. 
நமது நாட்டில் 1019.5 மில்லியன்  Mobile Connection உள்ளதாக TRAI  மே மாதம் 2017ல் அறிவித்திருக்கிறது. நாம் பயன்படுத்தும் செல்போன் பல்வேறு நாட்டிலிருந்து தயாரிக்கப்பட்டதாக இருந்தாலும், அமெரிக்க நாட்டின் தயாரிப்பான Apple  நிறுவனத் தயாரிப்பில்  வரும்  Phoneகளுக்கு உள்ள சிறப்பே தனிதான்.  எப்படி இப்படிப்பட்ட வெற்றியை அந்த நிறுவனம் பெற முடிந்தது என்றால் அந்நிறுவனத்தின் Slogan   “THINK DIFFERENT”  என்பதுதான். இந்த Sloganஐ
 Apple நிறுவனம் 1997லிருந்து 2002 வரை தனது பொருட்களை விற்பனை செய்வதற்கு விளம்பர Sloganஆக பயன்படுத்தியது.  Slogan மட்டுமல்ல தயாரிப்புகளும் Different ஆகவும் தரமானதாகவும் இருப்பதால் உலகம் முழுவதும் தனது வெற்றிப் பயணத்தை  இன்றும் தொடர்கிறது. எந்தப் பணியைச் செய்தாலும் அதில்  Different ஆக செய்பவர்கள் வெற்றியை அதிகமாக பெறுகிறார்கள். Different  ஆக பணிபுரியும் ஆசிரியர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், நாட்டுதலைவர்கள், விளையாட்டு வீரர்கள், ஆன்மீக வாதிகள், பொறியாளர்கள், மருத்துவர்கள், விவசாயிகள், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகள், சமூக சேவர்கள், திரைப்பட நடிகர்கள், மாணவர்கள் மற்றும் பல துறையை சார்ந்த பணியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றிகளை அறுவடை செய்தவர்கள் தானே. சென்ற ஆண்டில் ஏற்கனவே Different  ஆக செய்து வெற்றிக் கனிகளை சுவைத்தார்கள் மீண்டும் தொடர்ந்து சுவைக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மற்றவர்கள் Different ஆக செய்து வெற்றிப்பயணத்தை துவங்க வாழ்த்துகிறேன்.
அன்றாட வாழ்வின் சாதாரான வி­யங்களையும், அசாதாரன முறையில் செய்யும் போது உலகத்தின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்.   - George Washington Carver

Thursday, 2 November 2017

நம்பிக்கை இழந்தால் தோல்விதான்

நம்பிக்கை இழந்தால் தோல்விதான்

குத்துச்சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்த பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துகளிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார். இப்போதெல்லாம் அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை. அவரின் எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும்கூட அவரை வீழ்த்த முடியவில்லை. நல்ல உடற்பயிற்சி, சத்தான உணவு, தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாக பேணி வந்ததால், எதிரிகள் அவரை  வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள். பலவிதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள்.

ஏதாவது செய்து அவரைக் கொன்று விட்டாலும், அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழை பெற்று விடுவார். எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது. குடிப்பழக்கம் போன்ற கெட்டப் பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல்நாட்டு போதைப் பொருள்களை அவருக்கு பரிசளிக்க முயன்றபோது, அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார்.

உருப்படியாக எந்த யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள். எதையாவது செய்து அவரை போட்டியில் வீழ்த்த வேண்டும். எனவே அவரை வீழ்த்துபவருக்கு 10 லட்சம் பரிசு கொடுப்பதாக வாக்களித்தார்கள். பெரிய தொகைதான், இருந்தாலும் அவரை வீழ்த்த இதை விட அதிகமாக செலவு செய்யவும் தயாராயிருந்தார்கள். இந்த செய்தி காட்டு தீப்போல் பரவியது. இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின்  காதிலும் விழுந்தது. 10 லட்சம் பரிசுத்  தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை. இந்த நிலையில் அந்த புதிய இளைஞன்  தான் போட்டிக்கு வருவதாக முன்வந்தான். பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் போக வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான். வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார்.

போட்டியின் நாள் அறிவிக்கப்பட்டது. புதிய இளைஞன் தன் நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான். அவர்களிடம் தனக்காக உதவி செய்யும்படி சில வி­யங்களைக் கூறினான். அவன் எதற்காக அப்படி சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லை என்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராயிருந்தார்கள். அதனால் நண்பன் சொன்ன படியே செய்தார்கள்.

அதில் ஒருவன் வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான். அவரும்  சந்தோ­மாக அவற்றை பெற்றுக்கொண்டு நன்றி சொன்னார். வந்தவன் திடீரென்று ‘என்னய்யா ஆச்சு உங்களுக்கு பேசும்போதே இப்படி மூச்சுவாங்குதே. கல்லுமாதிரி இருந்தீங்களே, உடம்பை பார்த்துக்குங்க’ என்று சொல்லிக் கிளம்பினான். ‘எனக்கு மூச்சு வாங்குதா? நான் நல்லதானே பேசுறேன்’. அவருக்கு குழப்பம் வந்துவிட்டது. மறுநாள் அதிகாலையில் அவர் வீதியிலே ஓட்டப் பயிற்சியில்  ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திட்டமிட்டபடி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்பட்டு வணங்கினான். ‘ஐயா போட்டியில் கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன். நான் உங்க தீவிர இரசிகன். இப்பவும் நீங்க தான் ஜெயிக்க போறீங்க அதுல சந்தேகமே இல்ல. ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும் வலிமையும் இப்ப இல்லையே?’ என்று கேட்டுவிட்டு நகர்ந்தான்.

என்ன எல்லோரும் இப்படி கேக்குறாங்க. இப்போது சிறிதாய் பயம் துளிர்விட்டது. போட்டி துவங்கியது. அவர் வேகமாய் தாக்குதலை ஆரம்பித்தாலும் இனம் புரியாத சோர்வு அவரை மேற்கொண்டது. இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார்.  எல்லோரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும் வீரத்தையும் பாராட்டினார்கள். அவனோ நன்றி புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான். பலருடைய வாழ்விலே வந்துவிட்ட வியாதியை விட, வந்துவிடுமோ என்று பயப்படுகிற வியாதியே பலரை விழத் தாட்டி விடுகிறது. பலப்படுவோம் எண்ணங்களால். (வலையில் பிடித்தது)

வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில் 

- அருட்திரு. எஸ்.  ஜான் கென்னடி,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம் 

சிறுபிள்ளையாக இருக்கும் போது நமது தாத்தா, பாட்டியிடம் இந்தக் கதையை நாம் கேட்டு இருப்போம். என்ன கதை அது? பாட்டி வடை சுட்ட போது காகம் வடையைத் திருடிய கதை. பாட்டி மரத்தடியில் வடை சுட்டார். காகத்திற்கு பயங்கர பசி. மரத்தின் மேலே அமர்ந்திருந்த அந்த காகம் பாட்டி சுட்ட வடையைத் திருடியது. அப்பொழுது அதன் வழியே வந்த நரி காகத்திடமிருந்து வடையைப் பெற ஆசைப்பட்டது.  நரி அதனிடம் “நீ ரொம்ப அழகா இருக்க. ஒரு பாட்டு பாடேன்” என்றது காகம் “கா கா”  என்று கத்தியது. வாயிலிருந்து வடை கீழே விழுந்தது. நரி அதை எடுத்து ஓடியது. இது ஒரு நீதிக் கதை. மற்றவர்கள் புகழ்வதைக் கண்டு ஏமாறாதே, ஏமாற்றாதே ஏமாந்து விடுவாய் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தாலும் அதில் சில எதிர்மறை எண்ணங்கள் விதைக்கப்படுகிறது. பசி - திருட்டு - பொய் - ஏமாற்றுதல் - ஏமாந்துபோதல் இவைகளை இக்கதை சொல்கிறது. காகம் வடையைத் திருடுகிறது. நரி அதை ஏமாற்றுகிறது. ஏமாற்றிய நரிக்கு என்ன தண்டனை? 

ஆனால், இதே கதையை சீனாவில் எவ்வாறு சொல்லிக் கொடுக்கிறார்கள் தெரியுமா? பல கருத்துகளை உள்வாங்கும் வகையில் மாற்றி தருகிறார்கள். பாட்டி வடை சுட்டுக்கொண்டு இருக்கிறார். காகம் அங்கு வருகிறது. அது பாட்டியிடம்   “பசிக்கிறது வடை கொடு”  என்று கேட்கிறது.

பாட்டி :  விறகு ஈரமாக இருப்பதால் அடுப்பு எரியவில்லை. பொருத்திரு தருகிறேன்.

 காகம் : ( பறந்து சென்று )  தான் கட்டிய கூட்டிலிருந்து காய்ந்த குச்சிகளை எடுத்துவந்து பாட்டியிடம் தருகிறது. (உழைப்பு)
பாட்டி வடையைச் சுட்ட பிறகு காக்கைக்கு கொடுக்க மறந்து விட்டார். (முதலாளித்துவம்)

காகம் : பாட்டி! பாட்டி! நான் உழைத்த உழைப்பிற்கு கூலி கொடு. முதலில் நான் கேட்டது பிச்சை. இப்போது நான் கேட்பது   கூலி. கொடு! (தொழிலாளர் உரிமை)

பாட்டி :   மன்னித்துக்கொள் ( வடையைக் கொடுக்கிறார்)

காகம் வடையை எடுத்துக்கொண்டு  தன் உழைப்பின் பலனை அனுபவித்துக்கொண்டே பறந்தது. ஒரு மரத்தில் அமர்ந்தது.

 நரி:   (எல்லா நாடுகளிலும் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் அல்லவா) 

காக்கா! காக்கா! நீ அழகா இருக்கிறாய், பாட்டு ஒன்று பாடு. காகம் மயங்கி பாட்டு பாடியது (தொழிலாளர் பலவீனம்). வடை கீழே விழுந்தது. நரி வடையை கவ்வியது.

இந்த கதையை இத்தோடு முடிக்கவில்லை. இங்கு தான் முக்கியமான செய்தியை சொல்றாங்க. காகம் சத்தமாக கத்தியது.  (தொழிலாளர் விழிப்புணர்வு) சத்தத்தைக் கேட்டவுடன் ஓராயிரம் காகங்கள் ஒன்றுக்கூடியது. (தொழிலாளர் சங்கம்) வடை திரும்ப பெறப்பட்டது. வடையைத் திருடிய நரி காகங்களுக்கு இரையானது. இவ்வாறு பல கருத்துக்களையும், பாடங்களையும் உள்ளடக்கி கதையை திருத்தி தந்திருக்கிறார்கள்.

பசி - உழைப்பு - தொழிலாளர் உரிமை - ஏமாற்றுதல் - தொழிலாளர் விழிப்புணர்வு ஆகிய ஆழ்ந்த கருத்துக்கள், கதையை கேட்கும் பிள்ளைகளுக்கு கொண்டு  சேர்க்கப்படுகிறது. தற்போது க்ஷுலிற் மிற்ணுe   ல் Vஷ்rழியி  ஆக  பரவிவரும் வீடியோ ‘ஜிமிக்கி கம்மல்’ என்ற மலையாளப்பாடல். இதன் அர்த்தம் “அம்மாவுடையை ஜிமிக்கி  கம்மலை எடுத்துக் கொண்டுப்போய் விற்று அப்பா சரக்கு வாங்கி வருகிறார். அந்த சரக்கை அம்மா குடித்துவிடுகிறார்”. இந்த வீடியோ ஒரு கோடிக்கு மேல் பார்க்கப்பட்டிருக்கிறது. இதை பாப்புலராக்கியது நம் தமிழர்கள்தானாம். 

            இந்தப் பாடல் மக்களின் மனதில் எதிர்மறை சிந்தனைகளை விதைக்கிறது. செய்தித்தாள்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக வலைத்தளங்கள் போன்ற சமூகத் தொடர்பு சாதனங்கள் பல நேரங்களில் எதிர்மறை எண்ணங்களையும், தீய செயல்பாடுகளையும் விதைக்கிறது. வியாபாரத்திற்காக நல்ல செய்திகளையும், நேர்மறை எண்ணங்கள் கொண்ட நிகழ்ச்சிகளையும், நல்ல விழுமியங்களை எடுத்துரைத்து வாழ்ந்து காட்டுகின்ற மனிதர்களையும் பதிவு செய்ய மறுக்கிறது, மறக்கிறது, இருட்டடிப்பு செய்கிறது. இந்தச் செய்திகளையும், பாடல்களையும் நிகழ்ச்சிகளையும் பார்க்கும் சிறுவர், சிறுமியர், இளைஞர், இளம்பெண்கள், பெரியவர்கள் ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரம் இது.

  நண்பர்களே! நமது சிந்தனையில் நேர்மறை எண்ணங்கள் வெளிப்படுத்தப்படட்டும், நமது பார்வையில், சொல்லில், செயலில் நல்ல விழுமியங்கள் செயல்படுத்தப்படட்டும். நமது உள்ளத்தில் நல்ல நீதிக்கதைகள் பதிவு செய்யப்படட்டும். அப்போது தனி ஒருவனுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயத்திற்கே வெற்றி உண்டு! வெற்றி உண்டு!   வெற்றி உண்டு!

“வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே,
என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய்,
செய்வதை விரும்பிச் செய்,
செய்வதை நம்பிக்கையோடு செய்”.                                                                - 
- Will Rogers

Monday, 2 October 2017

வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில் 

அருட்திரு. எஸ். ஜான் கென்னடி
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

முழுக்கவனமும்  புதிய சிந்தனையும்


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதன் பெயரை தெரியாதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு மரம் நட வேண்டும்  என்றாலும் அல்லது மரத்தை பிடுங்க வேண்டும் என்றாலும்  இந்த  Machine  இல்லாத இடமே இருக்காது. எவ்வளவு கோடி செலவு செய்து கட்டிடம் கட்டினாலும் இதன் பங்கு 1% ஆவது இருக்கும். என்ன  Machine என்று கண்டுபிடித்து விட்டீர்களா? 
Correct M.  சொல்றீங்க. ஆமாங்க JCB Machine தான். எப்படி இந்தப் பெயர் வந்தது?  Joseph Cyril Bamford என்ற பெயரை தான் சுருக்கமாக மூளீய  என்று சொல்கிறோம். ஏன்னா இந்த Machine யைford கண்டுபிடித்தவரே அவர்தான். அதனால் அவர் பெயரையே வைச்சுட்டாங்க.    Joseph Cyril Bamford  இங்கிலாந்து நாட்டில்  Uttoxeter என்ற இடத்தில்  ஜீன் 21, 1916ல் ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். இவரது குடும்பம் நல்ல ஒரு கத்தோலிக்க குடும்பம், இவர் படித்தது Buisness Management . ஆனால் Engineering  துறையில் அதிக ஆர்வம் இருந்தது. இவர் ஒரே நேரத்தில்  JCB Machine யை கண்டு பிடிக்கவில்லை. சின்ன சின்ன கண்டுபிடிப்புகள் மூலமாகத்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார். 1944ல் Electric Welding யை கண்டு பிடித்தார். 1945ல் அக்டோபர் மாதத்தில் இங்கிலாந்து நாட்டின் Uttpxeter  என்ற இடத்தில்  JCB  நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை நிறுவினார். 1951ல் அவர் தயாரித்து அனைத்து கருவிகளுக்கும் மஞ்சள் நிற வர்ணம் இருக்க வேண்டும் என்ற திட்டத்தை நிறைவேற்றினார். தற்போது கூட எல்லா JCB  Machineம் மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். ஏன் மஞ்சள் நிறம்? மஞ்சள் நிறம் அனைவரின் கவனத்தையும் விரைவாக ஈர்க்கும் சக்தி கொண்டது. மனிதர்கள் தாங்கள் பார்க்கும் பொருட்களில் மஞ்சள் நிறப்பொருளைத்தான் முதலில் பார்ப்பார்கள். சிவப்பு நிறத்தை விட மஞ்சள் நிறத்தை ஒளி குறைவான இடத்திலும் நமது கண்கள் கண்டுபிடிக்கும் என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். அதற்கும் மேலாக பாதுகாப்புத் தன்மைக்காகவும் இந்த நிறம் பயன்படுத்தப்படுகிறது. நம் நாட்டிலும் கூட பள்ளி ஊர்திகள் அனைத்தும் மஞ்சள் நிறத்தில் உள்ளதர்க்கும் இதுதான் காரணம். 1953 ஆம் ஆண்டு JCB யின் Logo உருவாக்கப்பட்டது. 1979இல் நம் இந்திய நாட்டில் JCB Company  ஆரம்பிக்கப்பட்டது.

  JCB நிறுவனம் 22 தயாரிப்பு நிறுவனங்களை ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களில் நிறுவியிருக்கிறது. 150 நாடுகளுக்கு மேலாக இதனுடைய உற்பத்தி கருவிகளை வியாபாரம் செய்கிறது. 10,000 ஏக்கர் நிலப்பரப்பில் தனது தலைமை அலுவலகத்தை செயல்படுத்தி 11,000 பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பினை அளித்து வருகிறது. 300 விதமான கருவிகளை தயாரிக்கிறது. இந்த நிறுவனம் அமெரிக்க நாட்டு இராணுவத்திற்கு தேவையான கருவிகளை உற்பத்தி செய்து தருகிறது. உலக அளவில் அரசு சார்ந்த நிறுவனம் JCB  மட்டும்தான். இன்னும் ஒரு முக்கியமான விசயம். மூன்று தோண்டும் கருவிகளை ஒருவர் வாங்கினால் அதில் ஒன்று JCB  நிறுவனத்தின் கருவியாக இருக்கும். அந்த அளவிற்கு இதன் தாக்கம் உலகெங்கும் பரவியிருக்கிறது. உலக அளவில் Construction Machine தயாரிப்பில்  முதல் இடத்தில் இருக்கும்  இந்நிறுவனத்தின் தலைவர் Joseph Cyril Bamford  மார்ச் 1, 2001 ம் ஆண்டில் 84 ஆம் வயதில் இயற்கை எய்தினார். தற்போது அதனுடைய தலைவராக அவரின் மகன்  Antony Bomford  சிறப்பாக செயல்படுகிறார். எப்படி இப்படிப்பட்ட சாதனையை செய்து இந்நிறுவனம் வெற்றி நடைபோடுகிறது என்று சிந்தித்து பார்த்தால் Joseph Cyril Bamford  அவரின் மந்திர  சொற்கள் தான் காரணமாக அமைகிறது.  Focus on What you do best and be Innovative  இவ்வார்த்தைகள் தான் அவரை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.

‘எதை மிக நன்றாக செய்ய முடியுமோ அதில் முழு கவனத்தையும் செலுத்தி புதிய சிந்தனைகளோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்’.Joseph Cyril Bamford  வியாபாரம் சம்பந்தப்பட்ட படிப்பை படித்திருந்தாலும் பொறியியல் துறையில் மிக நன்றாக செயல்பட முடியும் என்று உணர்ந்து கவனத்தை செலுத்தினார். புதிதாக சிந்தித்து பல கருவிகளை உருவாக்கினார். JCB நிறுவனத்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்று வெற்றி வீரராக மாறினார். நம் வாழ்விலும் நாம் எதை மிக நன்றாக செய்யமுடியும் என்பதை கண்டுணர்ந்து அதில் கவனத்தை செலுத்தி புதிய சிந்தனைகளை புகுத்தினால் வெற்றி நம் வசப்படும். அப்போது உங்கள் பெயரையும் இந்த உலகம் வாசிக்கும். சரித்திரமும் அதை பதிவு செய்யும்! நீங்களும் வெற்றி வீரர்களாக வலம் வரலாம்!
 “தளராத இதயம் உள்ளவனுக்கு
 இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை”          - புக்கன்ஸ். 

Saturday, 23 September 2017

அலைபேசியும் கொஞ்சம் ஆன்மீகமும்

அலைபேசியும் கொஞ்சம் ஆன்மீகமும்

- நல்லை ஆனந்தன்

அப்பா, எனக்கு ஒரு ஸ்மார்ட் போன் வேணும். எட்டாவதுதான் முடிச்சிருக்க அருண். பத்தாவது  முடிச்சதும் கண்டிப்பாக வாங்கித் தருவன். சுரேஷ், கோபி, சுந்தர், மாலதி, ரோசரி, அமலா எல்லாரும் போன் வச்சிருக்காங்கப்பா...... உங்கப்பாம்மா வாத்தியாருத்தான. நீயும் கேட்டு வாங்குடானு கேவலமாகப் பேசுறாங்கப்பா.

இப்போ உனக்கு அது தேவையில்லை அருண். அதில் படிக்கக் கூடாததைப் படிப்பீங்க. பார்க்ககூடாததைப் பார்ப்பீங்க. அதனால படிக்கிற வேலையை மட்டும் பாரு.  அப்ப..... அம்மாவும் நீங்களும் போன் வச்சீருக்கீக........ அது எதுக்கு?

இதற்குபின் அந்த வீட்டில் நடந்ததை உங்கள் உலகத்திற்கு விட்டுவிடுகிறேன். அடுத்த நாள் மாலை பெற்றோர்கள்  வீடு வந்து பார்த்த போது அவர்களது செல்ல மகன் அருண் பிணமாக தூக்குப் போட்டுக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தான். 
இதைப் படிக்கும் உங்களிடம் மூன்று கேள்விகள் கேட்கலாமா?

1.  அருணின் பெற்றோர் செய்தது சரியா? தவறா?
2. அருண் இறந்ததற்கு காரணம் என்ன?
3. ஏன் இந்தக்காலப் பிள்ளைகள் செல்‡வராசுகளாகவும், செல்வராணிகளாகவும் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள்?

கொடைக்கானலில் மலைவிளிம்பில் நின்று செல்பி எடுத்த இளைஞர் கால் வழுக்கி, பாதாளத்தில் விழுந்து நொறுங்கிப் போனார்.காதில் இயர்போன் மாட்டிக் கொண்டு தண்டவாளத்தைக் கடந்த  மல்லிகா எக்ஸ்பிரஸ் ரயிலில் மோதி சுக்கு நூறானார். இதே போல ஆயிரம் உதாரணங்களை நீங்கள் படித்திருப்பீர்கள். கேட்டிருப்பீர்கள். பார்த்திருப்பீர்கள்.

அலைபேசியால் நன்மைகளும் உண்டு. ஜனவரியில் மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டுப் புரட்சி முழுக்க அலைபேசியின் ஒத்துழைப்பிலே சாத்தியமாயிற்று. மாதா பிதா குரு தெய்வம் என்ற நிலைமாறி மாதா பிதா கூகுள் தெய்வம் என்றாகிவிட்டது. குரு கற்று தராததை, குருவிடம் கற்க முடியாததை, கூகுள் இன்று விரல் தடவலில் கற்றுத் தருகிறது. 

கத்தி கொண்டு காயை வெட்டலாம். கையையும் வெட்டலாம்? எது அறிவுடைமை? காயை வெட்டுவதா? கையை வெட்டுவதா? அருண் விசயத்திற்கு வருவோம். அருணின் பெற்றோர் மகனுக்கு ஸ்மார்ட் போன் வாங்கித் தந்திருக்க வேண்டும். அத்தோடு அதை எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். தங்களிடம் போன் இருப்பதை மறந்து, அருணுக்கு மறுத்து, ஒரு பதிமூன்று வயது இளைஞன் வாழ்வை பாழடித்து விட்டார்கள்.

கணினி உலகில் சுந்தர் பிச்சைபற்றி நான் கூறத் தேவையில்லை. உலக அரங்கிலே அருண் என்ற தமிழனும், சுந்தர் பிச்சையாக வந்து உயர்ந்திருக்கலாம். கெடுத்து விட்டார்கள் பாவிகள். தண்ணீர் பற்றியும், தண்ணீர் ஈஈஈ பற்றியும் பலர் பலவிதமாக எழுதலாம். ஆனால் வேதியராக இருப்பவர் தமது கட்டுரையில் கொஞ்சம் ஆன்மீகமும் கண்டிப்பாக எழுத வேண்டும் என்று ஆலோசனை வழங்கிய திருச்சி தமிழரசியின் கருத்துக்கு மதிப்பளித்து ஒரு நாலுவரி ஆன்மீகம். 
அலைபேசியில் யாராவது கூப்பிட்டால் அவர் பெயர் போட்டு  காலிங் என்று காட்டும். நாம் அக்செப்ட் பட்டனை அழுத்திப் பேசலாம். அல்லது கேன்சல் பட்டனை அழுத்தி அழைப்பவரை புறக்கணிக்கலாம்.

ஆண்டவரும் நம்மை அனுதினமும் அழைக்கிறார். மரியா முதல் திருத்தூதர்கள் வரை அக்செப்ட் பட்டனை அழுத்தினார்கள். பணக்கார இளைஞனும், பண ஆசை பிடித்த யூதாசும் கேன்சல் பட்டனை அழுத்தி விட்டார்கள்.

அலைபேசி சிறப்பாகச் செயல்பட அது பேட்டரி சார்ஜ் செய்யப்பட வேண்டும். செல்போன் டவர்க்கு அருகில் இருந்தால் கவரேஜ் சிறப்பாகக் கிடைக்கும்.

திருப்பலியில் நற்கருனை வழியாக நமது ஆன்மா சார்ஜ் ஆகிறது. செல்போன் டவர்போல ஆலய டவருக்கு அருகில் சென்றாலே கவரேஜ் சிறப்பாகக் கிடைக்கும். கடவுளோடு தெளிவாகப் பேச முடியும்.

சில நேரங்களில் நாம் தொடர்பு கொள்ளும்போது இந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து எண்களும் உபயோகத்தில் உள்ளன. தயவுசெய்து காத்திருக்கவும் என்ற குரல் கேட்கும். சில நேரங்களில் கடவுளிடம் நாம் விண்ணப்பிக்கும் போது, காத்திருந்துதான் அவரோடு பேசமுடியும். அவரிடம் வாங்க முடியும். (என்ன ஏதாவது புரிகிறதா?).

மத்தேயு நற்செய்தியில் இயேசு, உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் வலக்கை உங்களை பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி எறியுங்கள் என்கிறார் (காண்.மத் 5: 27-32) கண்ணையும் காலையும் இழந்தாவது விண்ணகம் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தவே இப்படிச் சொன்னார். அலைபேசி விசயத்திலும் எனது கருத்தும் அதுவே. கண்ணும் கையும் பாவத்தில் விழச் செய்தால் அதை பிடுங்கி எறியுங்கள் அல்லது வெட்டி எறியுங்கள். அலைபேசியை நிறுத்தி வையுங்கள்.

ஆலயத்திற்குள் வந்தவுடன் அலைபேசியை நிறுத்துங்கள். அடுத்தவர்களோடு அல்ல, ஆண்டவரோடு மட்டுமே ஆலயத்தில் தொடர்பில் இருக்கவும். படைத்தவரோடு தொடர்புகொள்ள ஆலயம் வரும்போது படைப்புகளோடு நமக்குத் தொடர்பு தேவையில்லை. 
வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசாதீர்கள். தோளில் செல்போனை வைத்துக் கொண்டு, தலைசாய்த்து காதை அதில் வைத்து கழுத்து சுளுக்கு வந்தவர்போல வாகனம் ஓட்டுபவர் ஒன்று காயம் படுவர் அல்லது மற்றவரை காயப்படுத்துவர். வாகனம் ஓட்டும்போது அழைப்பு வந்தால் ஓரமாக சென்று வாகனத்தை நிறுத்திவிட்டுப் பேச வேண்டும். சிலநேரங்களில் வண்டி ஓட்டும்போது நமக்கு வரும் அழைப்பு எமனிடமிருந்து வந்ததாகக் கூட இருக்கும்.

அன்புப் பெற்றோரே ! வயலும் வாழ்வும் காலத்திலே இருக்காதீர்கள். உங்கள் பிள்ளைகளின் திறமைகளை குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். அன்பு இளையோரே! உங்கள் பெற்றோர் உங்களை உருவாக்க உழைக்கிறார்கள். அவர்களோடு ஒத்துழையுங்கள். பெற்றோரும் பிள்ளைகளும் மனந்திறந்து உரையாட வேண்டிய அவசரமான அவசியமான நேரம் இது. தவறினால் விபரீத விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.

  வாழ்க்கை என்பது இறைவன் கொடுத்த கொடை. அதை அழகுபடுத்தாவிட்டாலும் சரி. அசிங்கப்படுத்திவிடாதீர்கள்  என்று கேட்டுக் கொள்வதன்றி வேறொன்றறியேன் பராபரமே!

முதியோரே... இளையோரே இதைச் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? 

Saturday, 9 September 2017

வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில் 
- அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,

“உன்னால் முடியும் தம்பி, தம்பி. உனக்குள் இருக்கும் உன்னை நம்பி”  என்ற திரைப்படப்பாடல் வரிகளை கேட்டு ரசித்து இருப்பீர்கள். இவ்வரிகள் நம் சிந்தனையைத் தூண்டி சரித்திரம் படைக்கவும் உதவுகிறது.‘I think I can’ என்ற ஆங்கில சொற்றொடரின் தமிழ் அர்த்தம் “நான் நினைக்கிறேன், என்னால் முடியும்”  என்று நான் நினைத்தால் அது நன்றாக முடியும். என்னால் முடியாது என்ற மந்திரச் சொல்லால்தான். திரு.உதயமூர்த்தி அவர்கள் தனது புத்தகத்தில் ‘உன்னால் முடியும்’ என்ற சக்தி வாய்ந்த வார்த்தைகளை மையமாக வைத்து எழுதி இளைஞர்கள் வெற்றிகளை குவிக்க வழிவகுத்தார்.

அன்பு வாசகர்களே ! வரலாற்றில் நடந்த நிகழ்வினை உங்கள் முன் படைக்க விழைகிறேன். உலக அளவில் நடைபெறும் ஒரு மைல் தூர ஓட்டப்பந்தயத்தில் 4 நிமிடங்களுக்குக் குறைவாக யாராலும் ஓடமுடியாது என்ற எண்ணம் அனைத்து வீரர்களின் மத்தியில் இருந்தது. 1945ம் ஆண்டு 4 நிமிடங்களுக்குக் குறைவாக ஒரு மைல் தூரத்தை கடக்க முடியாது என்ற குறியீட்டை (Record) அனைத்து வீரர்களும் நம்பினர். சுவீடன் நாட்டைச் சார்ந்த  Guder Hagg  என்பவர் 1945 இல் 4 நிமிடங்கள் 1.4 விநாடியில் ஒரு மைல் தூரத்தை கடந்து வெற்றி பெற்ற குறியீடே இறுதியாக இருந்தது. அதை யாரும் முறியடிக்க முடியவில்லை. ஏனென்றால் எல்லோர் மனதிலும் 4 நிமிடங்களுக்கு குறைவாக யாராலும் கடக்க முடியாது என்ற எண்ண ஓட்டம் இருந்தது. இந்த சமயத்தில் தான் 1950 இல் ரோஜர் பெனிஸ்டர் ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்கள் ஒரு நொடியில் ஓடி முடிக்கிறார். அதன்பிறகு ரோஜர் 1954 ஆம் ஆண்டு மே 6இல் அந்தத் தூரத்தை 3 நிமிடங்கள் 59.4 விநாடிகளில் ஓடிச்சென்று புதிய சாதனையைப் படைக்கிறார். அவருக்கு அடுத்த நிலையில் வந்த சார்லஸ் லேண்டி என்பவர் 4 நிமிடங்கள் 2 விநாடியில் கடந்து இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

இதனை சற்று ஆழமாக சிந்தனை செய்வோம். கடந்த பல ஆண்டுகளாக ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்களுக்குள் கடக்க முடியாது என்ற  Mind set  வீரர்களிடையே இருந்தது. ஆனால் ரோஜர் அந்த இறுக்கமான எண்ணத்தை, அபிப்பிராயத்தை உடைத்தெறிந்தார். ‘என்னால் முடியும்’ என்ற மந்திரச்சொல்லால் தகர்ந்தெறிந்தார். புதிய குறியீட்டை  (Record) படைத்தார். இன்னும் பல முக்கிய சாதனைகளையும் நீங்க படிக்க போறீங்க. 2ஆம் இடத்தை பிடித்த சார்லஸ்  லேண்டி 56 நாட்களுக்குப் பிறகு 3 நிமிடங்கள் 57 விநாடிகளில் அந்தத் தூரத்தைக் கடந்தார். இவருக்கு யார் Special Training கொடுத்தாங்க? இல்லை; யாரும் கொடுக்கவேயில்லை. 4 நிமிடங்களுக்குள் ஓட முடியும் என்ற எண்ணத் தடை ரோஜரால் உடைத்தெறியப்பட்டதால் சார்லஸீக்கு தன்னால் முடியும் என்ற எண்ணம் எழுந்தது; முடியாது என்ற எண்ணத் தடை வீழ்ந்தது; சாதனையும் படைக்கப்பட்டது; வெற்றியும் பெற முடிந்தது. மற்றொரு செய்தியையும் சொல்கிறேன், படியுங்கள். 1957இல் உலகம் முழுவதும் 16 வீரர்கள் 1 மைல் தூரத்தை 4 நிமிடங்களுக்குள் ஓடி சாதனைப்புரிந்தார்கள். இதுவரை 18 முறை ரோஜர் பெனிஸ்டரின் சாதனை முறியடிக்கப்பட்டிருக்கிறது. 1999இல் மொரோக்கோ நாட்டைச் சார்ந்த   Hichan el Guerrou என்பவர் 3 நிமிடங்கள் 43:13 விநாடிகளில் ஒரு மைல் தூரத்தை கடந்து புதிய சாதனையையும் படைத்திருக்கிறார். என்னால் முடியும் என்று ரோஜர் பெனிஸ்டர் சாதனைப்புரிந்தவுடன் மற்ற வீரர்களும் அவர்களால் முடியும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டு சாதனை படைத்தார்கள் ! வெற்றியும் கண்டார்கள்.

அன்பர்களே! எது தடை? நம் எண்ணமே நமக்கு தடை. என்னால் முடியாது என்ற எண்ணம் வெற்றிபெற தடையாக இருக்கிறது. மாணவ, மாணவிகள் பலர் “எனக்கு கணிதம், ஆங்கிலம், அறிவியல் பாடங்கள் வராது”  என்ற எண்ணத்தில் படிப்பர். அது அவர்களுக்கு வரவே வராது.ஆனால் அந்தப் பாடங்கள் எனக்குப் பிடிக்கும் என்ற எண்ணத்தில் படித்தால் நன்றாக படிக்க முடியும். அது போல இளைஞர்கள், இளம் பெண்கள் கூட என்னால் முடியாது என்ற எண்ணத் தடையை வளர்த்துக்கொண்டு வாழ்வதனால் வெற்றிக்கனி எட்டாக்கனியாக மாறிவிட்டது. ஆகவே அன்பு மாணவச்செல்வங்களே !  இனிமைமிகு இளையோரே ! பெருமைமிகு பெரியோரே ! என்னால் முடியாது என்ற எண்ணத்தடையை எடுத்தெறிந்து, என்னால் முடியும் என்ற எண்ணத்தை விதைத்து வெற்றிகளை அறுவடை செய்யுங்கள்.

உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு  காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயேஅறிவும்,   ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.              - Goethe                                                                                                                                               

Friday, 18 August 2017

.வெற்றி உங்கள் கையில், அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,

வெற்றி உங்கள் கையில் 

 அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,
வாழ்வில் வெற்றி பெறத் துடிக்கும் யாவரும் ஒருமுறை வாட்ஸ்அப்பின் கதையை படித்துவிடுவது நல்லது. அதில் அத்தனை பாடங்கள் உள்ளன. 2007 ஆம் ஆண்டில் யாகூவில் இருந்து இரண்டு இளைஞர்கள் விலகுகிறார்கள். அவர்கள் அமெரிக்காவின் தென்பகுதியை நோக்கி ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
“கிரியேட்டிவிட்டி இருந்தா, இப்படியும் லாபம் அள்ளலாம்!”  - எதையும் ரீமாடல் செய்யும் இளைஞர் பிரையன் அக்டன் (Brian Acton), ஜான் கோம் (Jan Koum) என்ற அந்த இளைஞர்கள் அந்தப் பயணத்திற்குப் பிறகு‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்று பெரிய இலக்கை நோக்கி முயல்கிறார்கள். 2008-ன் இறுதியில் அமெரிக்காவில் வைரலாகப் பரவிக் கொண்டிருந்த  ஃபேஸ்புக்கில் வேலைக்கு விண்ணப்பித்தார்கள். ‘நிராகரிக்கப்பட்டது’ என்று பதில் வந்தது. அந்த வருடத்தில் வேறு எந்த வேலைக்கும் முயலவில்லை. அவர்களின் ப்ரோபைலுக்கு நிச்சயம் ஐடி நிறுவனங்கள் வேலை கொடுக்க தயங்கப்போவதில்லை. இருந்தபோதும் கிடைத்த வேலைக்கு சென்று வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள துடிக்கவில்லை. என்ன செய்தால் பெரிய வெற்றியாக இருக்க முடியும் என்று ஆராய்ந்தார்கள்.

அந்த சமயத்தில் ஐஃபோன் அமெரிக்காவின் இளைஞர்களின் நவயுக அடையாளமாக சென்று சேர்ந்திருந்தது.AppStore ல் மற்றவர்களும் ஆப் செய்து வெளியிட திறந்துவிடப்பட்டது. அது அவர்களை கவர்ந்தது. அலெக்ஸ் பிஷ்மேன்  (Alex Fishman) என்ற இன்னுமொரு நண்பரையும் அழைத்து ஆலோசிக்கிறார்கள். மக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்க ஒரு மொபைல்  ஆப் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதற்கு ஐபோன் டெவலப்பர் ஒருவர் வேண்டும். இவர்கள் சர்வர் உள்ளிட்ட பின்புல தொழில்நுட்பத்தில் வல்லவர்கள். பிஷ்மேன் ஒரு ரஷ்யாவைச் சேர்ந்த மொபைல் ஆப் தொழில்நுட்ப வல்லுனரை கண்டுபிடிக்கிறார். எல்லாம் தயார். பிறகென்ன ஜான்கோம் தன் கையில் இருந்த சேமிப்பை வைத்து வாட்ஸ்அப் என்று பெயர் வைத்து தங்கள் ஸ்டார்ட்அப்பை பதிவு செய்கிறார்.  நினைத்ததுபோலவே நடந்துவிட்டால் வாழ்வில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது? இவர்களது ஆப் எக்கச்சக்க பிழைகளைக் கொண்டு அடிக்கடி நின்று விட்டு செம்மையா கடுப்பேற்றும். ஒருகட்டத்தில் இதை நிறுத்தி விட்டு மீண்டும் வேலைக்கே சென்றுவிடலாமா என்று ஜான்கோம் நினைத்ததுண்டு. ஆனால் நண்பர் ப்ரையன் அக்டன்

இரு... அவசரப்படாதே. இன்னும் சில மாதங்கள் பல்லை கடித்துக்கொண்டு  பொறுத்திருப்போம். நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்றாராம். இதுதான் எல்லா ஸ்டார்ட்அப்பிலும் பொதுவாக நடக்ககூடியது. சிலர் மீண்டும் வேலைக்கு திரும்பி இருக்கிறார்கள். சிலர் தங்களது கடந்த கால தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டும் வந்திருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் ஆப்பிள் ப்ளே ஸ்டோரில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்துகிறார்கள். அதுதான் Push Notification உங்கள் வாட்ஸ்அப்புக்கு அல்லது மெயில் ஐடிக்கு ஒரு மெசேஜ் வந்தால் டொயிங்  என்ற சத்ததுடன் ஒரு சின்ன ஐகான் வருமே அதுதான். உடனே அந்த நுட்பத்தை தங்கள் ஆப்பில் கொண்டுவருகிறார்கள். வாட்ஸ்அப்2.0  இந்த வசதியுடன் கூடிய மெசேஜ் ஆப்பாக வருகிறது. வெளியிட்ட சில நாட்களில் 250000 பயனாளர்கள் பயன்படுத்த தொடங்க வேகம் எடுத்தது வாட்ஸ்ஆப். ஆக்டன் தனது யாகூ நண்பர்களின் துணை கொண்டு 250,000$  டாலர் முதலீட்டை திரட்டுகிறார். இன்னும் சிலரை வேலைக்கு எடுக்கிறார்கள். ப்ளாக்பெர்ரி போனுக்கும் இந்த ஆப்பை கொண்டுவருகிறார்கள்.

நிறையபேர் உள்ளே வந்து லோடு அதிகமாகி, சர்வர் பழுதாகாமல் இருக்க இலவச ஆப்பாக இருந்ததை கட்டணமாக மாற்றுகிறார்கள். அப்படி இருந்தும் பயனர்களின் வரத்து குறையவில்லை. 2011 ஆண்டுவாக்கில் ஆப்பிள் ப்ளேஸ்டோரில்     வீலிஸ்ரீ20க்குள் வருகிறது.   இப்போது முதலீட்டாளர்களின் கவனம் படுகிறது. கம்பெனியின் 15 சதவீத பங்கிற்கு 8 மில்லியன் டாலர்கள் முதலீடு  கிடைக்கிறது. இன்னும் சிலரை வேலைக்கு எடுத்து மற்ற ஆண்டிராய்ட், நோக்கியா சிம்பியன் உள்ளிட்ட பிற மொபைல் செயலிகளுக்கும் வாட்ஸ்அப்  வெளிவருகிறது. அந்த ஒரு வருடத்தில் மட்டும் இருபது கோடி பயனாளர்கள் உள்ளே வருகிறார்கள். ஏற்கனவே முதலீடு செய்த செக்குயர் கேபிட்டல், என்னும் நிறுவனம் இன்னும் 50 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்யவே மீண்டும் இலவச சேவையாக மாற்றுகிறார்கள்.  போட்டோ, வீடியோக்களை ஷேர் செய்யும் வசதி வர, ஒரு பெரும் கூட்டம் அதில் களம் இறங்குகிறது. வேற யாரு? எல்லாம் நம்ம இந்திய மக்களே. உலகிலேயே வாட்ஸ்அப்பை அதிகம் பயன்படுத்தும் தேசம் இந்தியா தான். இருபது நிராகரிக்கப்பட்டவுடன் தலைகுனிந்து கீழே பார்ப்பதுதான் இழப்பு. மேலே பார்த்தால் அங்கே ஓர்  அருமையான வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது.

அதேபோல நம் முயற்சியில் நினைத்தது நினைத்ததுபோல நடக்கவில்லை என்றால் தோல்வி அல்ல. ‘அதைவிட இன்னும் சிறப்பாக நினை’ என்று உங்கள் வாழ்க்கை சொல்கிறது என்று யோசியுங்கள். பிராமாண்டமான வெற்றி அங்கு தான் கிடைக்கும்.

ஆகவே உங்கள் வாழ்க்கையில் படிக்கின்ற போது, பணிசெய்கின்றபோது, வாய்ப்புகளை தேடிச்செல்லும் போதும் உங்களைப் பலர் நிராகரிக்கலாம். அப்போது வாட்ஸ்அப் ஆரம்பித்த இளைஞர்களை நினைவுப்படுத்திக்கொள்ளுங்கள். நிராகரிப்பு அருமையான வாய்ப்புக்கு அழைத்துச்செல்லும். அதில் வெற்றிக்கண்டு சரித்திரம் படைத்திட வாழ்த்துகிறேன்! வாழ்க வளமுடன்!

“நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது”   - ப்ரெமர்.

Tuesday, 4 July 2017

வெற்றி உங்கள் கையில், அருட்திரு. எஸ். ஜான் கென்னடி

வெற்றி உங்கள் கையில்
அருட்திரு. எஸ். ஜான் கென்னடி

 கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் ஒலித்த வார்த்தை “TET”  (Teachers Eligibility Test) (ஆசிரியர்  தகுதித்தேர்வு).  ஒருவர்  D.TEd மற்றும்  B.Ed முடித்திருந்தாலும்  TED தேர்வில் குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றால்தான் ஆசிரியர் ஆவதற்கான தகுதியை அவர் பெறுகிறார்.  “தகுதி” என்கிற வார்த்தை ஆசிரியப் பணி செய்வதற்காக மட்டுமல்லாமல் எந்த துறையில் வேலைக்கு சென்றாலும் தகுதி என்பது முக்கியமான ஒன்றாக அமைகிறது. குழந்தைகள் Pre KG, LKG, UKG என்கிற நிலைக்கு படிக்கச் செல்லும்போது  தகுதி தேவைப்படுகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிப்பதற்கும் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிப்பதற்கும், தகுதி தேவைப்படுகிறது. கல்லூரி படிப்பை தொடர்வதற்கும், வேலைவாய்ப்பினை பெறுவதற்கும் தகுதி என்பது இன்றியமையாத ஒன்று. பதவி உயர்விலும் தகுதி என்பது  தேவையானதாக இருக்கிறது. இப்படி தகுதி என்பது நம் வாழ்வில் எல்லா நிலைகளிலும் தேவைப்படுகிறது. தகுதி என்ற மூன்றெழுத்தில்  மூன்று முத்தான வாழ்க்கை தத்துவம் அமைந்துள்ளது.

த’என்பது தன்னம்பிக்கையை குறிக்கிறது.
கு’என்பது  குறிக்கோளை  குறிக்கிறது.
தி’என்பது திறமையை குறிக்கிறது.

ஒருவர் தன்னம்பிக்கையோடு குறிக்கோளை நோக்கி தேவையான அளவு திறமையோடு பயணித்தால் வெற்றியை பெறலாம். ஆகவே வெற்றியை அடைய தகுதி மிக மிக முக்கியமானதாகும். அமெரிக்கா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் இந்திய நாட்டிற்கு வருகை தந்தபோது நிருபர்கள் அவரிடம் “பலர் உங்களோடு புகைப்படம் எடுக்க ஆசைப்படுகிறார்கள். நீங்கள் யாருடன் இணைந்து புகைப்படம் எடுக்க விரும்புகிறீர்கள்?” என்று கேட்டபொழுது,  “இந்திய நாட்டின்  இளைஞர்களை ஒட்டுமொத்தமாக தூக்கி பிடித்து வழிநடத்தும்  A.P.J அப்துல்கலாம் அவர்களோடு எடுக்க விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.  பாருங்கள்! இந்திய மக்களின் மனதில் இடம்பிடித்த மறைந்த மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் தகுதிதான் பில்கிளிண்டனை இவ்வார்த்தைகளை  சொல்லவைத்தது.  கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டபொழுது அப்துல்கலாமை பார்த்து ஒரு மாணவன் கேட்ட கேள்வி,  “வாழ்வில் வெற்றிபெற என்னசெய்ய வேண்டும்?”. அதற்கு அப்துல்கலாம் சொன்ன பதில் “If you want to be successful, don’t chase success. Chase EXCELLENCE, success will automatically follow you” வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கான தகுதியின் உச்சத்தைத் தொட்டால், தானே ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும். ஆம் தகுதியை வளர்த்துக்கொண்டால் வெற்றி தானாக தேடி வரும். மதுரை தமிழ்ச்சங்கம் சிறுவர்களுக்கான கவிதைப்போட்டி ஒன்றை நடத்தியது. அதல் மூன்றாம் பரிசுக்கு கிடைத்த கவிதையின் வரிகள் இதோ,

 “செந்தமிழ் நாடென்னும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே”.  நீங்கள் கவிஞரை கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆம்! மூன்றாம் பரிசை பெற்றவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். முதல் பரிசு, இரண்டாம் பரிசு பெற்றவர்கள் பற்றி இப்போது யாரும் பேசுவது இல்லை. யாருக்கும் தெரியாது. ஆனால் பாரதியார் மூன்றாம் பரிசைப்பெற்றாலும் தனது தகுதியை வளர்த்துக்கொண்டார். நம் உள்ளங்களைக் கொள்ளைக்கொண்டார்.  வெற்றியையும் தக்கவைத்துக் கொண்டார். சில சமயங்களில் நமக்கு ஒரு சந்தேகம் எழலாம். தகுதி இல்லாதவர்கள் வெற்றி பெறுகிறார்கள், தகுதி உள்ளவர்களால் வெற்றிபெற முடியவில்லையே என்று. ஆனால் உண்மை என்னவென்றால் தகுதியில்லாதவர்கள் வெற்றி பெறலாம்.  ஆனால் அதை தக்கவைத்துக் கொள்ள முடிவதில்லை. தகுதி உள்ளவர்களால் மட்டுமே வெற்றியை தக்கவைத்துக் கொள்ளமுடியும். அனைத்து வெற்றியாளர்களின் வாழ்வை சீர்தூக்கிப்பார்த்தால் இந்த உண்மை புலப்படும். அன்பு வாசகர்களே! நீங்களும் உங்கள் வாழ்வில் தகுதியை வளர்த்துக்கொண்டு வெற்றியை தக்கவைத்துக்கொள்ள வாழ்த்துகிறேன்!.

Wednesday, 28 June 2017

அறிஞர் வாய்ச் சொல், உழைப்பு

அறிஞர் வாய்ச் சொல்
உழைப்பு

கடின உழைப்பு மூன்று தீமைகளிலிருந்து  நம்மை காப்பாற்றுகின்றது.
வறுமை, சோர்வு, தீயயாழுக்கம்     - வால்டர்.

எல்லா செல்வங்களும் உழைப்பினால் பிறந்தவையே.
  - ஜான் லாக்.

 உழைக்க விரும்புகிறவர்கள் எல்லா விதத்திலும் வெற்றி பெறுவார்கள். -  மார்ட்டின் லூத்தர்.

 சிக்கல்கள் மனதை உறுதிபடுத்துகின்றன
 உழைப்பு உடலை பலப்படுத்துகிறது.                                                                          - செனேக்கா.

உழைப்பு போன்ற செல்வம் மனிதரிடத்தில் வேறு இல்லை.                          - பெர்சி பைஸ் ய­ல்லி.

 உலகத்தில் உள்ளது எல்லாம் உழைப்பினால் வாங்கப்பட்டதுதான்.      - டேவிட் ஹேனு.

உழைப்பின் பயன்தான் இனிமையானது, அனைத்திலும் இனிமையானது.
- லூக் தெ கிளாமியர்.

அடுத்தவனின்  சிந்தனையால் கூட உயரலாம்
 உழைப்பு  நிச்சயம் உன்னுடையதாக மட்டுமே இருக்க வேண்டும்

மடிமை குடிமைக்கண் தங்கின் ஒன்னார்க்கு
அடிமை பகுத்திவிடும் (குறள்)

மன்னிப்பு

 மன்னிப்பு

 மன்னிப்பு என்பது மருந்து.
மனப்புண்களை ஆற்றும்,
 மன்னிப்பு என்பது  உறவின் உயிர்.
உறவுகளை வளர்க்கும்.
மன்னிப்பு என்பது  மனிதத்தை புரிந்து கொள்வது.
அது நம்மையே புரிந்து கொள்ள உதவுவது.
மன்னிப்பு என்பது  துரோகத்திற்கு
கொடுக்கப்படும் அறுவைசிகிச்சை.

Tuesday, 20 June 2017

வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில்

- அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

ஸ்டீவ் ஜாப்ஸ் ஒர் அதிர்ஷ்டசாலி. அவர் எதை விரும்பினாரோ அதைச் செய்வதற்கான வாய்ப்பு அவருக்கு 20 வயதாகும் போது கிடைத்தது. அவருடைய நண்பரான நிலிகு வோடு சேர்ந்து  “ஆப்பிள்”  நிறுவனத்தை ஆரம்பித்தார். அவர்கள் கடினமாக உழைத்ததால் அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு பேராக இருந்த நிலையிலிருந்து நான்காயிரம் பேராகவும், இரண்டு பில்லியன் டாலர்கள் வருமானம் கொண்ட நிறுவனமாகவும் வளர்ச்சி அடைந்தார்கள். அந்தக் கால கட்டத்தில்தான் அவர்களது ஒப்பற்ற படைப்பான  “மெக்கின்டாஷ்ஐ”  சந்தையில் அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் அந்த  நேரத்தில்தான் அவர் நிறுவிய நிறுவனமே எதிர்மறையாக அவரை வெளியேற்றியது.
          
அவர் வெளியேற்றப்பட்டவுடன் சில மாதங்கள் அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவர் டேவிட்  பாக்கார்டையும், பாப் நோயிஸையும் சந்தித்து மன்னிப்பு கேட்க முயற்சித்தார். சமூகத்தில் அவர் தோல்வி அடைந்தவராகப் பார்க்கப்பட்டார். சிலிக்கன்வேலியை விட்டே ஓடிப்போய்விடலாமா என்று கூட நினைத்தார். ஆனால் ஏதோவொன்று அதையயல்லாம் செய்யவிடாமல் அவரை தடுத்தது. நடந்த நிகழ்வுகள் ஆப்பிளில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர் நிராகரிக்கப்பட்டார். ஆனால், அவருக்குள் இருந்த  உத்வேகம் அப்படியே இருந்தது. எனவே புதிதாக ஒன்றை ஆரம்பிக்கலாம் என நினைத்தார். வெற்றி என்கிற உக்கிரத்தை, ஆரம்பம் என்கிற  மென்மை மாற்றி அமைத்தது. 

அவர் இதை அப்போது நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். ஆனால், ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலக்கப்பட்டது அவரை அதிக படைப்பாற்றல் கொண்டவராக மாற்றியது. அடுத்த ஐந்தாண்டுகளில் அவர் “ ஹிeமுமி”   என்கிற நிறுவனத்தையும்“Pஷ்முழிr” என்கிற நிறுவனத்தையும் ஆரம்பித்தார். “வீலிதீ விமிலிrதீ”  என்கிற பெயரில் உலகத்திலேயே முதன் முறையாக, கம்ப்யூட்டர் அனிமேட்டர் முழு நீளத் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிடப்பட்டது. அதற்கு  அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால் ஆப்பிள் நிறுவனமே  “ ஹிeமுமி” ஐயும் வாங்கியது. அவரும் ஆப்பிளுக்குத் திரும்பினார். “ ஹிeமுமி” நிறுவனத்தில் அவர்கள் உருவாக்கிய தொழில் நுட்பம்தான் ஆப்பிள் நிறுவனத்தின் இன்றைய மறுமலர்ச்சிக்கான இதயமாக இருக்கிறது.
          
   ஸ்டீவ் ஜாப்ஸ் நமக்கு சொல்லும் வார்த்தைகள், நான் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து நீக்கப்படவில்லை எனில் மேலே சொன்ன எதுவும் நடந்திருக்காது. மருந்து கசப்பாகத்தான்  இருக்கும். ஆனால் நோயாளி குணம்பெற அது தேவை. சில சமயங்களில் வாழ்க்கை உங்கள் தலையில் சம்மட்டியால் அடிக்கும். அதற்காக நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். நான் எதை செய்தேனோ, அதை நேசித்தேன். அதுதான் என்னை முன்னோக்கி இட்டுச் சென்றது. நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதை கண்டறியுங்கள். உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை உங்கள் வேலை எடுத்துக் கொள்ளும். எனவே அதில் முழு திருப்தி அடைவதற்கு நீங்கள் உங்கள் வேலையை நேசியுங்கள். அப்படி எதுவும் உங்களுக்கு இதுவரை அமையவில்லை என்றால் தொடர்ந்து தேடிக் கொண்டே இருங்கள். அது வரை          “செட்டில்”  ஆகாதீர்கள். நீங்கள் எப்போது அதை கண்டடைவீர்கள் என்பதை உங்கள் இதயம் காட்டிக் கொடுக்கும். எந்தவொரு உறவுமுறையும் ஆண்டுகள் செல்லச் செல்ல சிறப்பாக அமையும். எனவே நீங்கள் தேடுவது கிடைக்கும் வரை ஓய்ந்துவிடாதீர்கள். தேடிக் கொண்டே இருங்கள்.

அன்பான வாசகர்களே, ஸ்டீவ் ஜாப்ஸின் இரண்டாவது அனுபவத்தை வாசித்தோம். ய்னி ரேடியோவில் சொல்லப்படுவது “கேளுங்க, கேளுங்க, கேட்டுக்கிட்டே இருங்க” . ஆனால் நமக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் சொல்வது “தேடுங்க, தேடுங்க, தேடிக்கிட்டே இருங்க”. இயேசுவின் வார்த்தைகளை ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்வாக்கினார் எனலாம்.  ‘தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்’ ( மத்தேயு 7: 7). சாதிக்கத் துடிக்கும் சாதனையாளர்களே! வெற்றிக்கான வேட்கையில் ஓடும் வேந்தர்களே! வாய்ப்புகளைத் தேடி, சிக்கெனப் பிடித்து வெற்றிகள் பல பெற்று சரித்திரம் படைத்திட வாழ்த்துகிறேன்.
வெற்றி நமதே!
                      வெற்றி என்பது நிரந்தரமல்ல;
                      தோல்வி என்பது இறுதியானதுமல்ல! 
                                                                  - பில்கேட்ஸ்.

Monday, 27 February 2017

அமெரிக்கக் கடிதம்

அமெரிக்கக் கடிதம்

- சவரி, கேரி

இந்த வாரம் உங்களுடன் பெண் சுதந்திரத்தை பற்றி பேச விரும்புகிறேன். இங்குள்ள மக்கள் பெண் குழந்தைகளுக்கும், ஆண் குழந்தைகளுக்கு நிகராக கல்வியூட்டி, விளையாட்டில் ஆர்வம் இருந்தால், நல்ல பயிற்சி அளித்து, தன்னம்பிக்கையுடன் வளர்க்கிறார்கள். இதனால்தான் ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களைவிட பெண்கள் நிறைய தங்கங்களை அள்ளி வருகிறார்கள். கால்பந்து போட்டிகளிலும், கைபந்து போட்டிகளிலும் அமெரிக்க பெண்கள் அணி உலக அணிகளில் சிறந்த அணியாக சிறந்து விளங்குகிறது. வேலை வாய்ப்புகளில் தகுதியானவர் யாராக இருந்தாலும் ஆண்/பெண் வேறுபாடின்றி வேலை தரவேண்டும் என்று அமெரிக்க அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டம் அரசு நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதனால் நல்ல வேலை வாய்ப்பை பெற்று ஆண்களுக்கு நிகராக, பெண்கள் எல்லா துறைகளிலும் தலைசிறந்து விளங்குகிறார்கள். பெண்கள் நுழையாத துறையே இல்லை. எல்லா துறைகளிலும் கால்பதித்து ஆண்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து, பாரதி கண்ட புதுமை பெண்ணாய், பெண் இனத்துக்கு பெருமை சேர்க்கிறார்கள். சமீப காலத்தில் ராணுவத்தில் துரையில் இறங்கி, போர்களை உள்படுத்தும் கடின பணியிலும், அரசாங்கத்துடன் சண்டையிட்டு நுழைத்து விட்டார்கள்.

இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து, அமெரிக்காவில் வாழும் பெண்கள் பலரிடம், அமெரிக்க நாட்டில் அவர்களுக்கு பிடித்தது என்ன? என்று கேட்டால், பெரும்பாலானவர்களின் பதில் இங்குள்ள சுதந்திரமும், பெண்கள் தன்னிச்சையாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் என்றும் பதில் வரும். அலுவலகத்துக்கும், கடைகளுக்கும் சென்று வர கணவன் துணையோ, மற்ற ஆடவர் துணையோ தேவையில்லை. இங்குள்ள கார்கள் பெண்களும் ஓட்டும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன. எல்லோரும் சாலை விதியை மதிப்பதால் சாலைகளில் கார் ஓட்டுவது எளிதாக உள்ளது. றூPறீ என்ற கருவியில் செல்லும் இடத்தின் முகவரியை கொடுத்துவிட்டால், கையை பிடித்து கூட்டி செல்வது போல், ஒவ்வொரு வளைவுகளிலும் சரியான திசையில் திரும்ப சொல்லி சரியான இடத்துக்கு சரியான நேரத்துக்கு கூட்டி சென்று விடுகிறது. இதனால் பெண்கள் இங்கு தன்னிச்சையாக அலுவலகங்களுக்கும், மற்ற இடங்களுக்கும் செல்ல முடிகிறது.

இந்த பெண் சுதந்திரத்தை போராடி தான் பெற்றுள்ளார்கள். 1920‡இல் தான் பெண்கள் ஓட்டுபோடும் உரிமையை பெற்றார்கள். ஒரு பெண் அமெரிக்க அதிபராக வேண்டும் என்ற கனவு பலருக்கும் உள்ளது. கடந்த வருட தேர்தலில் ஹில்லரி கிளின்டன் இந்த கனவை நனவாக்கி விடுவார் என்று பலரும் நம்பினார்கள். ஆனால் அது நிறைவேறவில்லை. கூடிய விரைவில் இன்னொரு பெண் இதை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம் நாட்டிலும், பெண்கள் பல துறைகளிலும் வெற்றி வாகை சூடி வருகிறார்கள். நமது அரசும், நமது சமூகமும் பெண்களின் திறமைகளை மதித்து, அதை வெளிக்கொணர்ந்து, அவர்கள் வாழ்வில், செய்யும் வேலைகளில் வெற்றி வாகை சூட வழிவகைகளை செய்ய வேண்டும். பாரதி கண்ட புதுமை பெண்கள் நம் நாட்டில் எங்கும் உயிர்பெற வேண்டும்.

பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம் 
எட்டு மறிவினில் ஆணுக்கிங் கேபெண்
இளைப்பிள்ளை காணென்று கும்மியடி
                                                             - பாரதியார்

Saturday, 25 February 2017

வெற்றி உங்கள் கையில்...

வெற்றி உங்கள் கையில்... 

- அருட்திரு. எஸ். ஜான் கென்னடி
,பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

விழித்தெழுந்த விழுமியங்கள்

இந்த உலகமே தமிழ்நாட்டை திரும்பி பார்க்க வைத்தார்கள் நம் இளைஞர், இளம்பெண்கள். ஆம் ஜனவரி 17ஆம் தேதி நம் இளைஞர்கள், இளம் பெண்கள் ஆரம்பித்த அறவழிப் போராட்டம் ஜல்லிக்கட்டு விளையாட்டு நிரந்தர சட்டமாக ஆக்கப்பட்டதற்கு அடிப்படை காரணமாக இருந்தது. இலட்சக்கணக்கான மாணவ, மாணவியர்கள் கூடிய அந்த அமைதி  போராட்டத்தில் எந்தவித வன்முறையும் நிகழவில்லை. அவர்கள் கைகளில் தடியோ, அரிவாளோ, கத்தியோ, துப்பாக்கியோ, வெடிகுண்டோ, கற்களோ இல்லை. ஆனால் மனதில் இலட்சியம் இருந்தது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்பட்டது. விழுமியங்கள் விண்ணை தொடும் அளவிற்கு அவர்கள் இதயத்தில் இடம் பிடித்திருந்தது. அவர்களின் வெற்றிக்கு காரணம் அவர்கள் செயலில் வெளிப்படுத்திய அறவழி மதிப்பீடு னிலிrழியி Vழியிற்eவி என்பதை யாருமே மறுக்க முடியாது. யார் இதை அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள்? யார் இவைகளை அவர்களுக்கு வழங்கினார்கள்? ஆம்! நம் பெற்றோர்களும், ஆசிரியர்களும், உறவினர்களும், நண்பர்களும் என்று சொன்னால் அது மிகையாகாது.  இந்த போராட்டத்தினால் நாம் பெற்றுக்கொண்ட வெற்றி கனிகள் பல. அவற்றுள் சிலவற்றை உங்கள் முன் படைக்கின்றேன்.
வீட்டில் அம்மாக்கள் “உன் இடத்தை  சுத்தமா வெச்சுக்க மாட்டியா” எனக் கேட்ட பொழுது எளிதாக எடுத்துக்கொண்ட இளைஞர்களும், இளம்பெண்களும், சாப்பிட்டு  போட்ட  குப்பைகளை அப்புறப்படுத்தினார்கள். டிராபிக் போலீஸ் மாதிரி டிராபிக்கை ஒழுங்கு செய்தார்கள். போராட்டக் களத்தில் “தண்ணி இந்தாங்க சிஸ்டர்”, “சாப்பாடு இந்தாங்க பிரதர்னு” சகோதரத்துவத்தை வளர்த்தாங்க. பீட்சா கார்னர்களில் செல்ஃபிகள் எடுத்த இந்த இளைய தலைமுறை இன்று அந்த செல்ஃபிகளை நினைத்து வெட்கப்படுகிறது. ‘இனி  உங்கள் வாசலை மிதிக்க மாட்டோம்’ என்ற சூளுரை வேறு. இரவு பகல் பார்க்காமல் பனி, வெயில் பார்க்காமல் கொசுக்கடியில் தூங்கி எழும் ஒவ்வொருத்தரும் வீட்ல அம்மா மறந்து போய் ஆல்‡அவுட் ஆன் பன்னலைன்னாக்கூட கொசுக்கடிக்காக கடிந்து கொள்ளும் கோபக்காரர்கள்தான். பெண்களைப் பாதுகாத்த விதம் ஆயிரம் இல்லை ... இல்லை... எண்ணிக்கைக்கு அடங்காத லைக்ஸ் அவர்களுக்கு, ஒரு ராயல் சல்யூட்டும் கூட. உணவு பொட்டலங்களை முதல்ல அவங்க சாப்பிடறேன்னு சொல்லாம, சில இளைஞர்களை அழைத்து “உள்ளே இருப்பவர்களுக்கு கொடுத்துட்டு வந்திடலாம் வாங்க ப்ரோ” என்றனரே, வளரும் குழந்தைகளிடையே பகுத்துண்ணும் பழக்கத்துக்கு காக்கையை எடுத்துக்காட்டா சொல்லாதீங்க. இந்தப் பசங்களைச் சொல்லுங்க. அந்நிய குளிர்பானங்களை புறக்கணிப்புச் செய்யனும்னு வாய் வார்த்தையா சொல்லாம, களத்துக்குள்ள செய்தும் காட்டியது இந்தப்படை.
பீச்சில் கூடையில் பிஸ்கெட், சுண்டல், சோளம் எல்லாம் இலவசமாகவே தந்த பாட்டித் தாத்தாக்களும், வரும்போதே 4 பிஸ்கெட் பாக்கெட் வாங்கிட்டு வந்து பக்கத்துல இருக்கிறவங்களுக்கும் கொடுத்த தாய்க்குலங்களும், பெண்களுக்கு தேவைப்படுதுன்னு எங்கிருந்தோ கொண்டு வந்து மொபைல் டாய்லெட் வைத்தவர்களும், பச்சிளங் குழந்தையோடு வந்தவர்களுக்கு குடையும், போர்வையுமாய் ஆதரவு தெரிவித்து ரெஸ்ட் எடுக்க வைத்த தம்பிகளும் ... அட ... அட ... அட ... நம்ப ஊறா இதுன்னு புல்லரிக்க வெச்சிட்டாங்க. இது எழுச்சிப்போராட்டம் என்பதைத்தாண்டி இது ஒரு நெகிழ்ச்சிப் போராட்டம் என்று உண்மையிலேயே உணர வச்சிட்டாங்க. மேற்கண்ட நிகழ்வுகளில் எல்லாம் இந்தப் போராட்டம் வெற்றியை பதிவு செய்தது. நாமும் அந்தப் படையோடு இணைந்து விழுமியங்களை விதைப்போம். வெற்றிகளை அறுவடை செய்வோம்.

Friday, 10 February 2017

பணிவு என்னும் இனிய பாதை 9. கீழ்ப்படிவோம்!

பணிவு என்னும் இனிய பாதை

9. கீழ்ப்படிவோம்!

 அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியாள மையம்

பணக்காரர் ஒருவர் இருந்தார். அவர் பெரிய பண்ணை வைத்திருந்தார். அவருக்கு ஒரே மகன். அவனை விவசாயக் கல்லூரியில் படிக்க வைத்தார். மகனும் படிப்பை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினான்.

பணக்காரர் மகனுக்கு ஒரு சோதனை வைக்க விரும்பினார். எனவே தன் மகனிடத்தில், நம் பண்ணையில் கிழக்கே இருக்கும் பத்து ஏக்கரில் சோளம் விதை என்றார். அவன் விவசாயக் கல்லூரியில் பயின்றதை நினைவிற் கொண்டு மண்ணை நன்கு சோதனை செய்துவிட்டு அங்கு சோளம் நன்கு விளையும் என்று உணர்ந்து சோளம் விதைத்தான். சில நாட்கள் கழித்து அந்த பணக்காரர் மகனிடத்தில் மேற்கே இருக்கும் பத்து ஏக்கரில் கரும்பு நடு என்றார். மகன் மீண்டும் மண் பரிசோதனை செய்தபிறகு அந்த மண் கரும்பிற்கு ஏற்றது என்று அறிந்து கரும்பு நட்டான். மீண்டும் அந்த பணக்காரர் தன் மகனை அழைத்து வடக்கே உள்ள பத்து ஏக்கரில் எள் பயிரிட சொன்னார். மகனும் சளைக்காமல்  மண் பரிசோதனை செய்து அந்த நிலம் எள்ளிற்கு ஏற்றது என்று தெரிந்து எள் பயிரிட்டான். பணக்காரர் மீண்டும் மகனை அழைத்து தெற்கில் உள்ள பத்து ஏக்கரில் கடலை பயிரிட சொன்னார். மகன் மண்ணை பரிசோதித்தான். மண் கடலைக்கு ஏற்றதல்ல என்று அறிந்தான். உளுந்து பயிரிட்டால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என் அறிந்து உளுந்து பயிரிட்டான்.

சரி, உங்களுக்கு ஒரு கேள்வி. அந்த மகனின் கீழ்ப்படிதலுக்கு எவ்வளவு மார்க் கொடுப்பீர்கள்? 75 மார்க். இல்லை, பூஜ்யம் தான் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவன் தன் தந்தையின் சொற்களில் பூஜ்யம் சதவீதம்தான் நம்பிக்கை வைத்திருந்தான். அந்த மகனின் அறிவார்ந்த நடவடிக்கைகளை நாம் பாராட்ட வேண்டும். ஆனால் இன்னும் ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் அந்த மகனுக்கு தந்தையிடம்  உள்ள நம்பிக்கை குறைவாக இருந்ததால்தான் அவரிடம் கீழ்ப்படிவதற்குமுன் சோதனையில் ஈடுபட்டான்.

இந்த உலகில் வாழ்வது ஓர் அழகான கலை. அந்த கலையில் ஒன்றுதான் மற்றவர்களின் சொற்களுக்கு செவிமடுப்பது. மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பது. மற்றவர்களின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிவது. பழைய காலத்தில் குருமட பயிற்சியின் போது ஒரு சோதனை வைப்பார்களாம். ஒரு செடியை தலைகீழாக நடவேண்டும் என்று சொல்வார்களாம். தலைகீழாக நட்டால் குருமடத்தில் நீடிக்கலாம். அல்லது குருமடத்தை விட்டு அனுப்பி விடுவார்களாம். (இது எவ்வளவு  உண்மை என்று தெரியவில்லை).

அது சரிங்க, நாம் ஏன் மற்றவர்களின் சொற்களுக்கு கீழ்ப்படிய மறுக்கிறோம்? அதற்கு முதல் காரணம், மற்றவர்களை நமக்கு மேலாகக் கருதுவதில்லை. மற்றவர்களுக்கு என்னத் தெரியும்? என்ற எண்ணம் நம்மில் மேலோங்கி இருப்பதால்தான். நான் பத்தாவது படிக்கும் போது, ஒருமுறை பேருந்தில் பயணம் செய்தேன். பஸ் ஒரு நிறுத்தத்தில் நின்றது. எல்லோரும் இறங்கிய பின்பு பஸ் கிளம்பியது. அந்த சமயத்தில் நான் வெளியே எச்சில் துப்பினேன். அப்போது எனக்கு பின்னே அமர்ந்திருந்த ஒரு பெரியவர் தம்பி, பஸ் ஓடும்போது எச்சில் துப்புவதை தவிர்க்கலாமே! என்று மிகவும் தன்மையாக சொன்னார். ஆனால் நானோ பஸ் நின்றபோதுதானே துப்பினேன் என்று என்னையே நியாயப்படுத்தினேன். அதைப் போல சில சம்பவங்கள் என் வாழ்க்கையில் நடந்துள்ளன. நான் நியாயப்படுத்திய நிகழ்வுகளை நினைத்து பின்பு வருந்தியுள்ளேன். அதைப் போலவே இப்போது நான் இருக்கின்ற பொறுப்பில் எனக்குக் கீழே இருப்பவர்களிடம் சில தவறுகளை சுட்டிக்காட்டும் போது அவர்கள் செய்யும் பெரிய தவறு (எனக்குக் கொஞ்சம் கோபத்தை ஏற்படுத்தும் தவறுதான்) அவர்கள் தங்களை நியாயப்படுத்துவதுதான். மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களை அவர்கள் கோணங்களிலிருந்து பார்க்கத் தவறும்போது, நம்மையே நாம் நியாயப்படுத்த விரும்புகிறோம். யார் என்ன சொன்னாலும் அதிலே சிறிதளவாவது உண்மை இருக்கும் என்று நம்புவோம். அதனால் அதனை கடைபிடிக்க முயற்சி செய்வோம்.

இரண்டாவதாக மற்றவர்களின் சொற்களுக்கு  நாம் கீழ்ப்படிய மறுக்கும் மற்றொரு காரணம் நாம் தவறு செய்யவே மாட்டோம் என்ற ஆழ்ந்த நம்பிக்கைதான். சார், கொஞ்சம் நில்லுங்க, நீங்கள் மட்டும்தான் நீங்கள் நினைப்பதெல்லாம் சரி, நீங்கள் செய்வதெல்லாம் சரி என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். (மற்றவர்கள் நீங்கள் செய்யும் தவறுகளை பலரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொறுத்துக் கொண்டு இருக்கிறார்கள்). இந்திய அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் சில நேரங்களில் என்னை ஆச்சரியப்படுத்தும். அபத்தம் என்று 90% பேர் நினைப்பதை அழுத்தமாக சொல்வார்கள். நாம் தவறு செய்ய இயலாதவர்கள் என்று நினைத்தால் நம்மைவிட அறியாமையில் உள்ளவர்கள் யாரும் இல்லை என்றே சொல்ல வேண்டும். அதைப் போல நம் முடிவுகள், தீர்ப்புகள் எப்பொழுதும் சரியாக இருக்கும் என்று நினைத்தீர்கள் என்றால், உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். எனவே பிறர் சொல்லும் சொ;ற்களில் உள்ள உண்மையை, நியாயத்தை உணர்ந்து கொள்ள முன்சார்பு எண்ணங்களை தவிர்த்து கொஞ்சம் இறங்கி வாருங்கள். பிறகு பிறரின் சொற்களை, கொள்கைகளை, கட்டளைகளை ஏற்றுக் கொள்வது அவ்வளவு கடினமாக இருக்காது.

மூன்றாவதாக, நீங்கள் கீழ்ப்படிதலை காட்ட வேண்டிய ஒரு முக்கியமான நபர் இருக்கிறார். அவர்தான் நம்மை படைத்த, நம்மை பராமரிக்கிற, நம்மை பார்க்கிற தேவன். அவர் நம் மனச்Vட்சியின் வழியாக, இறைவார்த்தையின் வழியாக, சில நிகழ்வுகளின் வழியாக நமக்கு வழிகாட்டுகிறார். கடினமான இதயத்தை கைவிட்டு, தன்னல வாழ்வை தள்ளி வைத்துவிட்டு, சில அர்ப்பணங்களையும், தியாகங்களையும் மேற்கொண்டு இறைவனின் தூண்டுதல்களுக்கு செவிமடுப்போம். கீழ்ப்படிவோம். அப்பொழுது நம் வாழ்வு மேன்மை பெறும். இனிமை பெறும். (தொடரும்).

Saturday, 4 February 2017

வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில் 

 இசையை தன் வசமாக மாற்றிய ராசா

 அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

அவர் பெயர் ராசய்யா. ஏழைக்குடும்பத்தில் பிறந்தார். எட்டாம் வகுப்பு வரைதான் படித்தார். நன்றாகப் பாடுவார். மெட்டெடுத்துப் பாடுவதில் வல்லவர். அதற்கு ஒரு  உதாரணம் :

“குமரிப்பெண்ணின் உள்ளத்திலே
 குடியிருக்க நான் வரவேண்டும்
 குடியிருக்க நான் வருவதென்றால்
 வாடகை என்ன தர வேண்டும்”. 

இது ஒரு பிரபலமான திரைப்பட பாடல். அதை ராசய்யா பழனி முருகன் பக்தர்களிடம் இவ்வாறு பாடினார்.

“முருகப்பெருமான் கோயிலிலே
 முடியயடுக்க நான் வரவேண்டும்
 முடி எடுக்க நான் வருவதென்றால்
 காணிக்கை என்ன தரவேண்டும்?”

பொதுவுடைமைப் பாடல்களை கச்சேரிகளில் பாட வாய்ப்பு கிடைத்தது. கச்சேரியில் பாடி கலக்கினார். டேய், ராசய்யா உம் பாட்டு அருமையாக உள்ளது. நீ சினிமாவில் பாடு, சென்னைக்குப் போ என்று பலர் அவரிடம் சொன்னார்கள். ராசய்ய சென்னைக்குச் சென்றார். வீதி வீதியாய் அலைந்தார். எட்டு வருடம் கடந்துவிட்டது. பட்டினி, பழக்கப்பட்ட ஒன்றாயிற்று. ஆனால் அவர் மனம் உடைந்து போகவில்லை. மெல்லிய காற்று அவர் மீது வீசியது. ஆம் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் அழைத்து அவரது இசைக்குழுவில் இசைக்கருவிகளை வாசிக்க வாய்ப்புக் கொடுத்தார். ஆரம்பத்தில் ராசய்யாவிற்கு நாட்டுப்புற இசை மட்டுமே தெரியும். பின்னர் கர்நாடக சங்கீதம். அதன்பின் மேற்கத்திய இசை, இந்துஸ்தானி இவ்வாறு இசைத்துறையில் கற்று தேர்ந்தார். பிறகு, சினிமா துறையில் தனி இடம் பிடித்தார். இந்தியாவில் ஸ்டீரியோ போனிக் இசையை முதன்முதலில் புகுத்தியது ராசய்யா தான்.

1983ஆம் ஆண்டு பிரான்ஸ் சென்று  உலகப்புகழ் பெற்ற மெல்லிசை அரசர் பால்மரியாவை சந்திக்க வாய்ப்பு கேட்டார். பால்மரியாவும் அவருக்கு ஐந்து நிமிடம் மட்டுமே ஒதுக்கினார். கர்நாடகா சங்கீதத்தையும், மேற்கத்திய இசையையும் ஒருங்கிணைத்து அமைத்த இசைப்பேழையை பால்மரியாவுக்கு இசைத்துக் காண்பித்தார். இரண்டு மணிநேரம் கடந்தது. இது இந்திய சங்கீதமல்ல, சர்வதேச சங்கீதம் என்று பால்மரியா புகழ்ந்தார். லண்டனில் உள்ள இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்குச் சொந்தமான ஃபில்ஹார்மோனிக் இசைக்குழுவிடம் இருந்து ராசய்யாவுக்கு அழைப்பு வந்தது. ஜான் ஸ்காட் தலைமையில் 81 இசைக்கலைஞர்கள் இசைக் கருவிகளை இசைத்தனர். அதில் ராசய்யாவின் சிம்பொனி இசை மட்டுமே முழுமையாக இசைக்கப்பட்டது. அந்த இசைக்கலைஞர்கள் அனைவரும் இசைக்கருவியை கீழே வைத்துவிட்டு கைதட்டி வாழ்த்துக் கூறினர். ராசய்யாவுக்கு மேஸ்ட்ரோ பட்டம் வழங்கப்பட்டது.

என்னங்க, ராசய்யா யாருன்னு நீங்களே கண்டுபிடிச்சிருப்பீங்களே!!! ஆமாங்க அந்த ராசய்யா தான் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி படத்திற்கு வாயால் பாடி, கையால் மேசையில் தாளம்போட்டு பஞ்சு அருணாசலத்திடம் வாய்ப்பு கேட்டவர். இன்றைக்கு அவருடைய வளர்ச்சியைப் பார்த்தீர்களா? கிடைத்த  வாய்ப்புக்களை வெற்றிப் படிக்கட்டுகளாக்கி தன்னிடம் இருந்த அறிவையும், திறமையையும் அகலப்படுத்தி, ஆழப்படுத்தி இந்த அகிலத்தையும் தன்வசமாக்கிய இசைஞானியின் வாழ்வு நமக்கும் பாடமாக அமையட்டும். வாய்ப்புக்கள் நம்மைத் தேடி வந்து கதவைத் தட்டாது. நாம் தான் வாய்ப்புக்களைத் தேடி ஓட வேண்டும். அப்போது ஏற்படும் ஏமாற்றங்களை ஏணிப்படிகளாக மாற்றி, துன்பங்களை துரத்திவிட்டு, வேதனைகளை வேரெடுத்து, சங்கடங்களுக்கு சவுக்கடி கொடுத்து, தோல்விகளைத் தோற்கடித்து, சவால்களை சந்தோ­மாய் சந்தித்து சக்திமானாய் மாறுவோம். வெற்றியாளர்களாக வலம் வருவோம்.

வியர்வைத் துளிகளும்
கண்ணீர் துளிகளும்
உப்பாக இருக்கலாம்.
ஆனால், அவை தான்
வாழ்வை  சுவையாக மாற்றும்.

Thursday, 1 December 2016

பணிவு என்னும் இனிய பாதை

பணிவு என்னும் இனிய பாதை

மிக மோசமான வார்த்தை நான்
.
 அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியாள மையம்

குருத்துவ வெள்ளி விழா காணும் இரண்டு குருக்களின் வாழ்வை உங்கள்முன் வைக்கிறேன். யாருக்கு பணிவு இருக்கிறது என்று சொல்லுங்கள் பார்ப்போம். 

குரு 1 : 

என் குருத்துவ வாழ்வில் அர்த்தம் இல்லை. என் மக்கள் என்னை புரிந்து கொள்ளவுமில்லை. ஒவ்வொரு பங்கிலும் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்துவிட்டேன். அதற்கு பலக் காரணங்கள் உண்டு. இந்தப் பகுதி மக்கள் இப்படிதான் நடந்து கொள்வார்கள். என் பங்கில் எனக்கு உதவி செய்வதற்கு நம்பிக்கையான நபர்கள் இல்லை. எனக்கு முன்னால் இருந்த குருக்கள் தவறுகள் செய்ததால் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனவே நிம்மதி இல்லை.

குரு 2 :

கடந்த 25 ஆண்டுகளாக நான் நிறைவான குருத்துவ வாழ்வு வாழ்ந்து வந்துள்ளேன். என்னை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். என் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறார்கள். மக்கள் கேட்டபோதெல்லாம் பணத்தை அள்ளிக் கொடுத்தார்கள். என் மக்கள் என்னை மதிக்கிறார்கள். அன்பு செய்கிறார்கள்.

இந்த இண்டு குருக்களிடையே யாரிடம் பணிவு இருக்கிறது என்று சொல்ல முடியுமா? என் கருத்துபடி இந்த இரண்டு குருக்களிடமும் பணிவு இல்லை. அவர்கள் சிந்தனையில், சொற்களில், செயல்பாடுகளில் “நான்”, “என்”, “என்னை”, “எனக்கு” போன்ற தன்னல வார்த்தைகள்தான் அதிகம் தென்படுகின்றன. குருத்துவ வாழ்வை பணிவாழ்வு என்று அழைக்கிறோம். ஏனென்றால் குருத்துவ வாழ்வு  குருக்களை சார்ந்த  வாழ்வு அல்ல. அது மக்களை சார்ந்த வாழ்வு. இந்த  இரண்டு  குருக்களிடத்திலும் அவர்களை சார்ந்த வாழ்வுதான் மிகுந்திருக்கிறதே தவிர மக்களை சார்ந்த வாழ்வு இல்லை.

சரிங்க, இந்த உலகத்தில் மிகச் சிறந்த மூன்று வார்த்தைகள் கொண்ட வாக்கியம் எது? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். “ஐ  லவ்  யு”  என்று நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. இந்த உலகில் மிகச் சிறந்த மூன்று வார்த்தைகள் கொண்ட வாக்கியம் “உங்கள் கருத்து என்ன?” இந்த  உலகில் மிகச் சிறந்த இரண்டு வார்த்தைகள் கொண்ட வாக்கியம் எது? “மிஸ் யு” என்று நினைக்கிறீர்கள். இதுதான் இல்லை. இந்த  உலகில் மிகச் சிறந்த இரண்டு வார்த்தைகள் கொண்ட வாக்கியம் “தவறு செய்துவிட்டேன்”. இந்த  உலகில் மிகச் சிறந்த வார்த்தை நாம். இந்த  உலகில் மிக மோசமான வார்த்தை நான்.

அமெரிக்காவின் மொழி எது என்பதை தீர்மானிப்பதற்காக அமெரிக்க மக்கள் மன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. ஜெர்மானிய மொழியையும், ஆங்கில மொழியையும் வைத்துக்கொள்ளலாம் என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர். இறுதிப் போட்டியில் ஆங்கில மொழியானது ஒரு ஓட்டில் ஜெர்மானிய மொழியை வென்றது. ஆங்கில மொழி இருப்பதால்தான் இன்று அமெரிக்கா முதல் நாடாக விளங்குகிறது. ஒவ்வொரு கரத்திற்கும் உள்ள மகத்தான வல்லமையைத்தான் இது காட்டுகிறது. நான் முடிவு எடுப்பதில் வல்லவன். என் தீர்ப்பு சரியாக இருக்கும் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். நம்மில் பலர் வாழ்வில் 50% அதிகமாக தவறான தீர்ப்புகளையே எடுக்கிறோம் என்று அறிவியல் கூறுகிறது.
என் தனிப்பட்ட வாழ்வில்கூட என் தீர்ப்புகள் எவ்வளவு தூரம் தவறாக இருக்கிறது என்று எண்ணி வியந்திருக்கிறேன். ஒருமுறை என் கையில் இலேசாக அரிப்பு ஏற்பட்டது. அரிப்பிற்கான காரணங்கள் என்ன இருக்கலாம்? என்று வலைதளத்தில் தேடினேன். யயிலிலிd ளீழிஐஉer ஆகவும் இருக்கலாம் என்று வந்தது. அன்று இரவு முழுவதும் எனக்கு Blood Cancer வந்துவிட்டது என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன்.

ஒரு நல்ல பங்குத்தந்தைக்கு சிறந்த அடையாளம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளகூடிய அமைப்புகளை ஏற்படுத்துவது. பங்குப் பேரவை, அன்பியங்கள் போன்ற பங்கேற்பு அமைப்புகள் பங்குத்தந்தையின் செயல்பாடுகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவும், மக்களின் கருத்துக்களை பங்குத்தந்தை அறிந்துகொள்ளவும் சிறந்த வழிகளாகும். எனக்குத் தெரிந்த ஒரு அருள்தந்தை உண்டு. அவர் நல்லவர். மக்களுக்காக தன் சொந்த பணத்தை செலவழிக்க தயங்காதவர். ஆனால் மக்கள்; அவரின் சேவையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனென்றால் அவர் எடுத்த முடிவுகளாகும். மக்களின் கருத்திற்கு அவர் மதிப்புக் கொடுக்கவில்லை. குடும்பத்தில், சமூகத்தில், நட்பில், ஊரில்  உங்கள் கருத்து என்ன? என்று தினமும் ஒருமுறையாவது கேட்டுப் பாருங்கள். உங்கள் உறவுகள் சிறக்கும்.

என் கருத்து என்ன? என்று பதிவு செய்வதில் ஆர்வம் காட்டாமல், உங்கள் கருத்து என்ன? என்று கேட்டு வாழ்ந்தால் வாழ்க்கைப் பயணத்தில் இனிமை கூடும்.

(தொடரும்)

Tuesday, 29 November 2016

வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில் 

- அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,

பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

தோல்வி ... தோல்வி ... எனத்  தோல்விகளால்

மட்டுமே துரத்தி அடிக்கப்பட்டவரின் முதல் வெற்றியே ... கின்னஸ் சாதனை! டேனியல், சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் தொடர்ந்து 100 மணி நேரத்துக்கு மேல் நின்றுகொண்டே 7000 துணிகளுக்கும் அதிகமாக அயர்ன் மாரத்தான் செய்திருக்கிறார். இந்தச் சாதனையை செப்டம்பர் மாதம் 2016இல் நிகழ்த்தியிருக்கிறார். வெற்றி நாயகனின் வார்த்தைகளை வாசிப்போமா! “ஒண்ணுமே இல்லாத பய நான். தோத்தாங்குளினு சொல்வாங்க ... அப்படி வெறும் உடம்பை மட்டும் சுமந்துட்டு உலகத்துக்கு பாரமாத்தான் இருக்கேன்னு நினைப்பேன். சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டார். ரொம்ப ஏழ்மையான குடும்பம். பத்தாவது முடிச்சதும், வேலைக்குப்  போக வேண்டிய சூழல். மேஸ்திரி வேலை. துணி விற்கிறதுனு சில வேலைகள் செஞ்சேன். அப்பதான் துணிகளை அயர்ன் பண்ணும் சிலரை சந்திச்சேன்.

அயர்ன் தொழிலில், ஒரு நாளைக்குக் குறைந்தது 1000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்னு சொன்னாங்க. வழிப்போக்கனுக்கு எங்க ஒதுங்க இடம் கிடைச்சாலும் ஒதுங்குற மாதிரி ... நானும் இனி இதுதான் நம்ம வேலைன்னு ஒரு லாண்டரி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்துட்டேன். 50 துணிகளைக் கொடுத்தாலும் சும்மா சட்டு சட்டுன்னு பக்காவா அயர்ன் செஞ்சுடுவேன். கம்பெனியில் குட்பாய்னு பேர் வாங்கினேன்.

எனக்கு தெரிஞ்சது அயர்ன். அதுல ஏதாவது ஒரு சாதனை செய்தால் எல்லோரும் திரும்பிப் பார்ப்பாங்க என்பதால் அயர்ன் செய்த சாதனையாளர்கள் லிஸ்ட்டை தேடினேன். லயன்ஸ் கிளப் உறுப்பினர், முரளி  என்பவர் கின்னஸ் சாதனை செய்ய வழிகாட்டினார். அவரிடம் சாதனையாளர்கள் லிஸ்ட் கொடுத்தேன். முதன் முதலில் 1999இல் சுவிட்சர்லாந்துக்காரர் 40 மணி நேரம் தொடர்ந்து அயர்ன் பண்ணினார். 2015ஆம் வருடம் இங்கிலாந்து நாட்டுக்காரர் றூழிreமிஜு றீழிஐderவி தொடர்ந்து 100 மணி நேரம் அயர்ன் செய்து 2000 துணிகளை அயர்ன் பண்ணினார். “அப்போ நீங்க இதையும் தாண்டி அயர்ன் பண்ணனும்னு” முரளி சார் சொன்னார். அவர் சில டெஸ்ட்கள் வச்சார். மூனுநாள் ஒரே இடத்துல உட்கார வச்சு அங்கேயே இருக்கேன்னு கேமரா வைச்சு டெஸ்ட் பண்ணினாங்க. மனசு முழுக்க கின்னஸ் வெறி இருக்கும் போது தூக்கம் எப்படி எட்டிப் பார்க்கும்?

கனவு நனவாகும் தருணம் கைகூடி வந்தது. 26 மணி நேரம் 30 நிமிடத்துலேயே 2,000 துணிகளை அயர்ன் பண்ணி முதல் சாதனை பண்ணிட்டேன். தொடர்ந்து மூன்று நாட்கள் என்னை உற்சாகம் செய்யும் விதமா இழுக்க ஆரம்பிச்சுடுச்சு. அசரலை. 90 மணி நேரமும் நெருங்கிட்டேன். எங்கே இருக்கேன்கிற உணர்வே இல்லை. அடுத்த 10 மணி நேரமும் கையில அயர்ன் பாக்ஸ் இருந்தது. ஆனா, ஒரு ரோபோ மாதிரி அயர்ன் பண்ணிட்டே இருந்தேன். முன்னாடி செஞ்ச சாதனையை முறியடிக்கும் விதமா 100 மணி நேரத்தைத் தாண்டிட்டேன். ஆனாலும் கூடுதலாக 2 மணி நேரம் அயர்ன் பண்ணச் சொன்னாங்க. கடைசி 26 நிமிடம் சுத்தமா முடியல. பசங்க என் மேல் தண்ணிய ஊத்தினாங்க. எப்படியோ நினைவு வந்து சரியாக 102 மணி நேரம் 30 நிமிடம் 7,104 துணிகளை அயர்ன் பண்ணி கின்னஸ் சாதனை பண்ணிட்டேன். வேகமாக அயர்ன் செய்தது. அதிக நேரம் அயர்ன் செய்தது என இரண்டு சாதனைகள். ஒரு தோத்தாங்குளிக்கு முதன் முதலில் வெற்றிப் பட்டம் கிடைச்சது. அங்க இருந்தவங்க என்னை தூக்கிக் கொண்டாடினாங்க. நிற்க கூட முடியாம கீழே விழும்போதுதான் தோனுச்சு, வாழ்க்கையில் வெற்றி எவ்வளவு முக்கியம்னு”. வெற்றி களிப்பில் கண் கலங்கியபடியே கைகுலுக்குகிறார் டேனியல்.

அன்பு குழந்தைகளே! பண்பான இளைஞர், இளம்பெண்களே! அருமை பெற்றோர்களே! பாசமுள்ள வாசகர்களே! உங்களைப் பார்த்து பலர் “நீங்கள் தோத்தாங்குளிகள், ஒன்றுக்கும் உதாவாதவர்கள், ஒன்றும் தெரியாதவர்கள், திறமையற்றவர்கள், தேவையற்றவர்கள், சாதிக்க முடியாதவர்கள், பயனற்றவர்கள், வாழத்தெரியாதவர்கள்” என்று பட்டியல் இடும்போது இதயத்தில் வெற்றி நெருப்பை பற்ற வைத்து வாழ்க்கை ஓட்டத்தில் சாதனையை கைவசப்படுத்தி கின்னஸில் இடம் பிடித்த அயர்ன் மேன் டேனியலை சற்று நினைத்துக் கொள்ளுங்கள். நீங்களும் சாதனைகள் புரிந்து வெற்றியாளராக ஜொலிக்கலாம். அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! புதிய ஆண்டு வெற்றியின் ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன்.

“நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப்படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில்  ஏறு”

Sunday, 30 October 2016

பணிவு என்னும் இனிய பாதை 8. திறந்த வாழ்வு வேண்டும்

பணிவு என்னும் இனிய பாதை

8. திறந்த வாழ்வு வேண்டும்

 அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியாள மையம்


வாழ்வில் வெற்றியின் இரகசியங்கள் பல உள்ளன. அதில் ஒரு முக்கியமான இரகசியம்: நீங்கள் உங்கள்மீது கொண்டுள்ள அபிப்பிராயத்திற்கும். மற்றவர்கள் உங்கள்மீது கொண்டிருக்கும் அபிப்பிராயத்திற்கும் வித்தியாசம் அதிகம் இருக்கக்கூடாது. அப்படியயன்றால் உங்களை நீங்கள் நன்கு அறிந்து வைத்துள்ளீர்கள். உங்களை நீங்கள் நன்கு வெளிப்படுத்தியுள்ளீர்கள். மற்றவர்கள் உங்களை விமர்சிக்கும்போது அதில் உள்ள உண்மையை கண்டறிந்து உங்களை மாற்றிக்கொள்ள முன்வந்துள்ளீர்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் உங்கள் வாழ்வு ஒரு திறந்த புத்தகமாக உள்ளது. அதற்குத் தேவையான பணிவு உங்களிடம் உள்ளது. உளவியலில் ஜோஹேரி வடிவம் மிகவும் பிரபலம். ஜோ மற்றும் ஹேரி என்னும் இரண்டு உளவியல் நிபுணர்கள் இதனை கண்டுப்பிடித்ததால் இதற்கு இந்தப் பெயர். இந்த வடிவத்தின்படி நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் நான்கு பகுதிகள் உள்ளன.

1. திறந்தப் பகுதி : எனக்குத் தெரிந்தவை மற்றவர்களுக்கும் தெரிந்தவை.
2. குருட்டுப் பகுதி : எனக்கும் தெரியாதவை, மற்றவர்களுக்கும் தெரியாதவை.
3. மறைத்தப் பகுதி : எனக்குத் தெரிந்தவை, மற்றவர்களுக்குத் தெரியாதவை.
4. மறைந்த பகுதி : எனக்குத் தெரியாதவை, ஆனால் மற்றவர்களுக்குத் தெரிந்தவை.

உதாரணமாக மறைந்த பகுதியை எடுத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் நண்பரோடு ஒரு ஹோட்டலுக்கு உணவருந்த செல்கிறீர்கள். உங்கள் முகத்தில் உணவின் சிறுபகுதி ஒட்டிக்கொண்டு இருக்கிறது. உங்களுக்கு அதனைப்பற்றி தெரியவில்லை. ஆனால் உங்கள் நண்பர் அதனை கவனிக்கிறார். அதனை உங்களிடத்தில் சொல்கிறார். நீங்களும் முகத்தைத் துடைத்துக் கொள்கிறீர்கள். அதாவது உங்கள் குறை உங்களுக்குத் தெரியவில்லை. உங்கள் நண்பருக்குத் தெரிகிறது. அதனை அவர் சுட்டிக்காட்டுகிறார். நீங்களும் திறந்த மனதோடு அதை சரிசெய்கிறீர்கள். நம் கோபம், நம் விவேகமின்மை, நம் வைராக்கியம், நம் நடுநிலையின்மை பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை. திறந்த மனதோடு இருந்தால் மற்றவர்கள் சுட்டிக்காட்டும்போது நாம் மாற்றிக் கொள்வோம்.

திறந்தப் பகுதி குறைவாக இருக்கும்போது மற்றவர்களின் மதிப்பைப் பெறுவது மிகவும் கடினம். நாம் சொல்வதை பிறர் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் முதலில் அவர்கள் நம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் நல்லவர்கள், நாம் சொல்வதில் உண்மை இருக்கும் என்ற நம்பிக்கையை நாம் ஏற்படுத்தி இருக்க வேண்டும். அதனால்தான் ஒரே வி­யத்தை சொல்லும்போது மறுப்பு சொல்லுகின்ற நாம், அதே வி­யத்தை நமக்குப் பிடித்தவர் சொல்லும்போது ஏற்றுக்கொள்கிறோம்.

நம் சொற்களில், நம் செயல்களில், நம் மதிப்பீடுகளில், நம் அணுகுமுறையில் நாம் எப்படிப்பட்ட மனிதர் என்பதை வெளிப்படுத்த வேண்டும். ஒரு சிலர் மர்ம மனிதர்களாக இருப்பார்கள். மர்ம மனிதர்களாக இருப்பது வாழ்வின் ஒரு சாதூர்யம் என்றுகூட நினைத்துக் கொள்வார்கள். அது தவறான அணுகுமுறை. உண்மையான சாதூர்யம் மிக்கவர்கள். தங்களை வெளிப்படுத்த அஞ்சமாட்டார்கள், தயங்க மாட்டார்கள். பிறரின் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் பெறுவதற்கு சிறந்த வழி நாம் நல்லவர்களாக வாழ்வது மட்டுமல்ல, நாம் நல்லவர்கள் என்பதை பிறருக்கு தெரிவிப்பதும்கூட. உங்களைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்ற ஒரு கருத்துக்கணிப்பு வைத்தால் ஒரே விதமான கருத்துக்கள் வருமா? அல்லது மாறுபட்ட கருத்துக்கள் வருமா? என்பதை பொறுத்து நாம் எவ்வளவு திறந்த வாழ்வு வாழ்கிறோம் என்பதை கண்டுபிடிக்க முடியும். உதாரணமாக நல்ல குணங்களைப் பற்றி மற்றவர்களிடத்தில் கேட்டால், முதலில் அவர்கள் சொல்வது, யார் மனதையும் புண்படுத்தாதவர் (எனக்குப் பணிவு கொஞ்சம் வேண்டுமென்று நினைக்கிறேன் என்பது).

திறந்த வாழ்வின் இன்னொரு முக்கியமான அம்சம் நம் பொறுப்பில் உள்ள நிறுவனத்தின், பங்கின், குடும்பத்தின் வரவு செலவுகளை வெளிப்படையாக தெரிவிப்பது. நீங்கள் உண்மை உள்ளவர்களாக இருந்தால் மட்டும் போதாது, நீங்கள் உண்மை உள்ளவர்கள் என்பதை நிரூபிக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும். உங்களுக்கு கீழே இருப்பவர்களிடத்திலும் நீங்கள் கணக்குக்காட்டத் தொடங்கிவிட்டீர்கள் என்றால் பணிவு என்னும் இனியப் பாதையில் சிறப்பாக பயணம் செய்கிறீர்கள் என்று அர்த்தம். (தொடரும்)

Ads Inside Post