Pages - Menu

Thursday 3 December 2015

3. வெற்றி நம் கையில்

3. வெற்றி நம் கையில் ......
அருட்திரு. எஸ்.ஜான் கென்னடி, 
பூண்டி புதுமைமாதா கல்வியியல் கல்லூரி, 
சமயபுரம், திருச்சி.
வீடுகளில் சேரும் பழைய பொருட்களை எடைக்கு வாங்கி விற்பதற்கென்றே ‘குப்பவண்டி டாட் காம்’ என்ற இணையதளத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர் திருச்சியை சேர்ந்த எம்.பி.ஏ.பட்டதாரி இளைஞர்கள்.
வேஸ்ட் பேப்பர் மற்றும் பயன்பாடு இல்லாத பிளாஸ்டிக் கழிவுகள், எலக்ட்ரானிக் பொருட்கள் எல்லோருடைய வீட்டிலும் ஏதாவது ஓர் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் இருப்பவர்கள் தங்கள் வீட்டில் சேரும் பழைய பொருட்களை விற்பதற்கு ஏதுவாக இருக்கிறது. ‘குப்பவண்டி டாட் காம்’ எம்.பி.ஏ.பட்டப்படிப்பு முடித்த நண்பர்களின் வித்தியாசமான யோசனையில் உருவானது.
இவர்களின் முயற்சியில் 2012‡ம் ஆண்டு சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட குப்பவண்டி டாட் காமில் இப்போது ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்கள், திருச்சியில் கே.கே.நகர், கருமண்டபம், தில்லைநகர், எ.புதூர் என ஏரியா வாரியாக தெருப்பெயர்கள் டாட் காமில் இருக்கின்றன. என்ன விலைக்கு பழைய பொருட்களை வாங்குகிறார்கள் என்ற விலைப்பட்டியல் மற்றும் குறிப்பிட்ட ஏரியாவுக்கு குப்பவண்டி வரும் கிழமை குறித்த தகவலும் இடம்பெற்றுள்ளது.
திருச்சி நகர மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள ‘குப்பவண்டி டாட் காம்’ குறித்து ‘தி இந்து’விடம், சந்திரகுமார் கூறியதாவது, “நியூஸ் பேப்பர் போடுவது உள்ளிட்ட பகுதிநேர வேலை பார்த்து அதன் மூலம் படித்தவன் நான். அப்போது பழைய பேப்பரை எடைக்கு போட்டு கொடுக்கும்படி பலர் என்னிடம் தருவார்கள். அப்படிதான் இந்த ஐடியா எனக்கு வந்தது. நண்பர்களிடம் இது குறித்து தெரிவிக்க, குப்பவண்டி டாட் காம் உருவானது. ஆரட்பித்தபோது மக்களிடம் பெரிதாக வரவேற்பு இல்லை. அதனால் சனி, ஞாயிறு மட்டும் இருசக்கர வாகனத்தில் சென்று பொருட்களை சேகரித்து வருவோம்.  மற்ற நாட்களில் வேறு வேலைக்கு சென்றுவிடுவோம்.
கடந்த 2 ஆண்டுகளில் இணைய தள பயன்பாடு அதிகரித்ததன் விளைவாகவும், எங்களிடம் ஒரு முறை வாடிக்கையாளராக பயனடைந்தவர்கள் தங்களுக்கு தெரிந்த பலரை அறிமுகம் செய்து வைத்ததாலும் கொஞ்சம் கொஞ்சமாக குப்பவண்டி டாட் காம் திருச்சி மக்களிடையே பிரபலமானது. தற்போது, பார்த்த வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக இந்த தொழிலில் பிஸியாக இருக்கிறோம்.
திங்கள் முதல் ஞாயிறு வரை ஒவ்வொரு நாளும் ஒரு ஏரியாவுக்கு குப்பை வண்டியை எடுத்துச் செல்கிறோம். இப்போது சரக்கு ஆட்டோவில் எடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். இது தவிர திருச்சியில் 2 இடங்களில் கிடங்குகள் உள்ளன.
எங்களுக்கு லாபம் கிடைப்பது ஒருபுறம் இருந்தாலும் எங்களால் முடிந்த வரை பிளா1ஸ்டிக்கை மறுசுழற்சி செய்ய மற்றும் சுற்றுச்சூழலைக் காக்க சிறு முயற்சி செய்கிறோம் என்பது மனதுக்கு நிறைவாக உள்ளது. எந்த தொழிலையும் இன்றைய நவீன காலத்துக்கு தகுந்தாற்போல் மாற்றி மக்களிடம் கொண்டு சேர்த்தால் நிச்சயமாக சாதிக்கலாம்” என்றார்.
ஆ.டீ.யு. மாணவர்கள் மட்டுமல்ல, நாமும் மாற்றி யோசித்தால் வெற்றியை பெறலாம்.  மாணவர்கள் மட்டுமல்ல, நாமும் மாற்றி யோசித்தால் வெற்றியை பெறலாம். நம் வீடுகளில் கிரைண்டர் பயன்படுத்துகிறோம். முன்பு ஆட்டுக்கல் சுற்றாமல் ஒரே இடத்தில் இருக்கும். குளவிக்கல் சுற்றியது. ஆனால் இப்போது குளவிக்கல் அப்படியே இருக்கிறது. ஆட்டுக்கல் சுற்றுகிறது. மாற்றுசிந்தனைதான் புதிய கிரைண்டர் வடிவடைக்க உதவியது. அறிவியல் ஆராய்ச்சியாளர் எடிசன் பல்பை கண்டுபிடிக்க ஆயிரம்முறை மாற்றி சிந்தித்ததால்தான் வெற்றி  கிடைத்தது. பாடங்களை கற்க, கற்பிக்க,  இன்றைய உலகில் வியாபாரத்தில் கூட சற்றே வித்தியாசமாக சிந்தித்தால்தான் பொருட்களை விற்க முடிகிறது. அதில் விற்பனையாளர்கள் வெற்றியும் பெறுகிறார்கள். நம்நாட்டு கிரிக்கெட் வீரர் டோனி, தன் வித்தியாசமான அனுகுமுறையால் பல கோப்பைகளை பெற்று தந்திருக்கிறார். இயேசுபெருமான் பழைய ஏற்பாட்டு சட்டத்திட்டங்களை மாற்றி, புதிய சிந்தனைகளையும் சட்டத்திட்டங்களையும் கொடுத்தார். (எ.கா. கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் - (பழைய ஏற்பாடு). உன் பகைவனையும் அன்பு செய்  (புதிய ஏற்பாடு). அவமானமாக கருதப்பட்ட சிலுவையை வெற்றியின் சின்னமாய் அவர் மாற்றினார். நாமும் வெற்றியாளர்களாக மாற, சிந்தனையில் மாற்றம் வேண்டும். வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களை செய்வதில்லை. ஆனால் செய்வதை வித்தியாசமாக செய்கிறார்கள். அதுபோல வர இருக்கின்ற கிறிஸ்துபிறப்பு விழாவிலும், புத்தாண்டிலும் மாற்று சிந்தனையால் மறுமலர்ச்சிக்கண்டு வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

No comments:

Post a Comment

Ads Inside Post