Pages - Menu

Sunday 13 December 2015

துணுக்குகள் 2


எல்லாம் பயனுடைத்து

முனிவர் ஒருவர் தன் சீடரிடம் “பயனற்ற பொருள் ஒன்றை எடுத்துவா” என்றார். தேடி, தேடி பார்த்தார் சீடர். எல்லாமே ஒருவிதத்தில் பயனுள்ளதாய் இருந்தது. காய்ந்த சருகைக் கண்டான். அதுகூட எரும்பு தண்ணீரில் மிதக்க உதவிசெய்தது. “பயனற்ற பொருள் ஒன்றும் காணமுடியவில்லை” என்று சொன்னான் சீடன். “பயனற்றது எதுவும் இல்லை. எனவே அனைத்தையும் மதிக்கக் கற்றுக் கொள்” என்றார் முனிவர்.

நீங்க லவ் லெட்டர் கொடுத்தது வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சு.
உங்க தங்கச்சிக்குமா?

 அஜீரணம் என்பது ஆதிநோய்.
மற்றதெல்லாம் மீதிநோய்.

 அடுத்தவர்மீது அக்கறை கொண்டால் வாழ்வில் குறைகள் குறையும்.

 மனவெறுமையில் தோன்றுவது வெறுப்பு, அது அன்பின் குறைவு - ச. இ. அ

 பணிவு
கனிவைத் தரும்
துணிவைத் தரும்
மகிழ்வைத் தரும்
துறவில் பிறப்பது பணிவு - ச. இ. அ

.
ஏழ்மைக்கு வாழ்த்துக் கூறு
அது உன்னை வாழவைக்கும்.


 காதல் போதையில் சொல்கிற வி­யங்களை நம்பினால் நாம் பேதைகளாகிவிடுவோம்.

 இறை அழைத்தலின் விழுதுகள்
அழைத்தலின் இலை - இழத்தல்
அதனின் விளைவு - கலத்தல்
அது தருவது - கொடுத்தல்

 மாணவர்களின் புதுவிளக்கம்

தேர்வு - அறிந்தும் அறியாததும்
சேர்மன் - வசூல்ராஜா
வகுப்பு - புரியாத புதிர்

 ஆற்றாமை
மணல் லாரியில் விழுந்தவனும். பெண் சாரியில் விழுந்தவனும் பொழச்சதில்லை.

 இறைவன் கீழே இறங்கிவர ஏழ்மை என்ற ஏணியைத்தான் பயன்படுத்துகிறார். அந்த படியில்தான் விடியலைக் காணமுடியும்.

சேர்த்து வைக்கும் இருப்பில், உண்மையின் இல்லாமை காணப்படும்.

 பிறர் முகம்பார்த்துச் சிரிப்பவர்களை விட தன் மொபைலைப் பார்த்துச் சிரிப்பவர்கள் அதிகம்.

 வாழ்க்கையில் தோற்றவர்கள் இருவகை :
ஒன்று, யார் பேச்சையும் கேட்காதவர்கள்.
இரண்டு, எல்லோர் பேச்சையும் கேட்பவர்கள்.


 எவ்வளவு அன்போடு அணைத்தாலும் கத்திக்கு வெட்டத்தான் தெரியும். அது போல்தான் சில உறவும். எவ்வளவு அன்பாக நாம் இருந்தாலும் காயப்படுத்தி விடுவார்கள்.

 அங்கீகாரமும், அகங்காரமும்....
ஏழைக்கு கிடைக்காத எள்ளுருண்டைகள்..

 எல்லா சாமிகளை விடவும் “ஆமாம் சாமி” நிறைய வரம் தருது...

 சிரிப்பை மலிவானதாகவும், கோபத்தை விலை உயர்ந்ததாகவும் மாற்று. வாழ்க்கை எளிதாகி விடும்.

 தூக்கி எறியப்படும் தருணங்களில்தான்,
சிறகை விரிக்கிற வாய்ப்பு அமைகிறது.

 அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக் கொடுக்க முடியாது. அதற்கு பல தோல்விகளும், சில துரோகிகளும் தேவை.

 கல்யாணம் ஆன ஆண்கள் எல்லாருமே சிங்கங்கள் தான்!
ஆனால், வீட்டுக்கு போன உடனே தான் சிங்கத்து மேல காளி அம்மன் உட்கார்ந்து இருக்கும்!

 இமைகள் திறந்து நேசிப்பதை விட, இதயம் திறந்து நேசித்துப் பாருங்கள். உயிர் பிரிந்தாலும் உறவுகள் நீடிக்கும்...

 மோடி ஆட்சியின் 300 நாட்கள்
600 மத கலவரங்கள்
49 பேர் மரணம்
மனித உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள் அதிர்ச்சி அறிக்கை.

 ஜாதியின் பெயரில், மதத்தின் பெயரில் கொலை செய்யும் இயக்கங்களுக்கு ஒரு அதிர்ச்சி அளிக்கும் செய்தி!
ஆம், கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கொடகரை கிராமத்தில் உள்ள தலீத் இனத்தைச் சேர்ந்த கூலி வேலை செய்து தன் குடும்பத்தை வழிநடத்தும் சுப்ரன் சகுந்தளா தம்பதியின் மகளான, காயத்திரி சுப்ரன் நாட்டில் முதன் முதலாக தலீத் சமூகத்தை சேர்ந்த இவர் விமான ஓட்டியாக தேர்வு பெற்றிருக்கிறார்.

30. Don’t Compare yourself with anyone in this world...
if you do so, you are insulting yourself.


No comments:

Post a Comment

Ads Inside Post