Pages - Menu

Showing posts with label Health. Show all posts
Showing posts with label Health. Show all posts

Monday, 17 April 2017

தேள் விடமா?

தேள் விடமா?

1. உப்பு + மிளகு அரைத்து கடிவாயில் பூசு.

2. நமச்சாரம் + உப்பு கடிவாயில் தடவு.

3. தேங்காய் பால் + வெல்லம் கலந்து குடிக்கவும்.

4. பிம்மத் தண்டு இலைச்சாறு கொட்டு கடிவாயில்  தடவு.

5. பழம் புளி + சுண்ணாம்பு சூட்டோடு கடிவாயில் பூசு.

6. தும்பை பூ + துளசி சம அளவு அரைத்து  வாயில் போட்டு மென்று சாப்பிடவும்.

7. நாயுருவி வேர்சாறு மென்று குடி.

8. கனியாத பூவன் வாழைப் பழத்தை குறுக்கே அரிந்து கடிவாயில் தேய்த்துப் பார். வி­ம் இறங்கும்.

9. பெருங்காயம் நீரில் குழைத்து தடவு. அனலில் காட்டவும்.
10. துளசியை மென்று கடிவாயில் தடவு.

11. வெற்றிலையில் 9 மிளகு வைத்து மென்று சாப்பிடு.

12. பப்பாளிக் காய் பால் தடவு, வி­ம் இறங்கும்.

13. வெற்றிலை + குப்பை மேனி + உப்பு கசக்கி சாறு எடு. கரண்டியில் நல்ல எண்ணெய் காய்ச்சி அதில் ஊற்று. கொட்டு வாயில் தடவி ஆவி பிடி.

14. தும்பைப் பூ + தும்பை இலை சாறு சாப்பிடு. கொட்டு வாயில் தடவு.

உடல் பருமனை குறைக்க உதவும் எளிய வழிகள்

உடல் பருமனை குறைக்க உதவும் எளிய வழிகள்

தொகுப்பு : ம. இராசரெத்தினம், ஆடுதுறை

1. அடிக்கடி டீ, காபி சாப்பிடாமல் காலை, மாலை இருவேளை மட்டுமே சாப்பிடலாம்.

2. நெய், இனிப்பு பண்டம், கேக், பிஸ்கட், பிரட், சாக்லெட், எண்ணெய் பண்டங்கள் , மசாலா உப்பு போன்றவற்றை தவிர்க்கவும், முடியாவிட்டால் குறைக்கவும்.

3. முந்திரி, பாதாம், பிஸ்தா, பருப்பு வகைகள், நிலக்கடலை, பட்டாணி, மொச்சை, காராமணி இவைகளை குறைக்க அல்லது தவிர்ப்ப நல்லது.

4. மோர் அல்லது தயிர் கூடாது.

5. ஒரு வேளை மட்டும் அரிசி உணவு, மற்ற வேளைக்கு புஞ்செய் தானியங்களை சேர்க்க.

6. காலை உணவு பலகாரங்கள் அல்ல, பழ ஆகாரமே சிறந்தது. பச்சை காய்கறிகள், சாலட் சாப்பிடலாம்.

7. காலை, மாலை சிற்றுண்டிகள் கூடாது.

8. நாக்கை கட்டுப்படுத்துங்கள்.

9. இரவு 7 மணிக்குமேல் உண்ணாதீர்கள். இரவு சாப்பிட்ட 3 மணி நேரம் கழித்து உறங்க செல்லுங்கள். தூக்கம் வரவில்லையானால் படுக்காதீர்கள்.

10. பகலில் தூங்கவே கூடாது. தூங்கினால் எடை கூடும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் மட்டும் பகலில் தூங்கலாம்.

11. சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். அளவோடு சாப்பிடுங்கள்.

12. உடல் பருமனைக் குறைக்கும் உணவுகள், வாழைத்தண்டு, கீரைத்தண்டு உணவில் அடிக்கடி சேர்க்கவும். வெதுவெதுப்பான நீரில் தேன்விட்டு சாப்பிடுங்கள். கோழிக்கீரை பருப்புடன் சமைத்து சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம்.

13. உணவுக்கு ஏற்ற உழைப்பு கட்டாயம் தேவை.
14. காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய் உபயோகிக்கவும்.

15. இரவில் படுக்க போகும்முன் திரிபாலா முன் ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம்.

16. வாரம் இருமுறை கசப்பு உணவு சாப்பிடவும்.

17. காலை 11 மணிக்கும், மாலை 4 மணிக்கும் கொஞ்சம் உலர்ந்த திராட்சை சாப்பிடலாம்.

18. உணவில் ஒருநாள் மட்டும் தேவைப்பட்டால் புலால் உணவு. நோயாளிகள் கட்டாயமாக மாமிச உணவு உண்ணக்கூடாது.

20. முட்டை உணவில் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும். பிராய்லர்  கோழி முட்டை சாப்பிடுவது நல்லதல்ல.

21. விதையில்லாத பழங்களை சாப்பிடக்கூடாது. அதில் உயிர் ஆற்றல் இருக்காது.

22. துவர்ப்பு உணவு தினமும் சேர்த்துக்  கொள்வது நல்லது.

23. அமிலத்தன்மையுள்ள உணவுகளை சேர்க்காமல் இருப்பது மிக மிக நல்லது.

24. மாவு பண்டங்கள் சேர்க்காமல் இருப்பது நல்லது. மாவு நோயைத் தரும். மலச்சிக்கல் உண்டாக்கும்.

25. உடல் பருமனைக் குறைக்க உடற்பயிற்சி செய்யவும். தொந்தி  குறைய பெல்ட் போடவும்.

26. யோகாசனம் உடல் பருமனுக்கு ஏற்றது. உடல் பருமனைக்  குறைக்கும் முறை  மூலம் உழைப்பாளிகளும் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

27. தினமும் சாப்பிடும் முன் வெந்நீர் குடிப்பது உடல் எடையைக் குறைக்கும்.

28. தினமும் அதிகாலை நடந்து, செல்வது நல்லது. “நடை நோய்க்குத் தடை”.

29. தேன் + பூசணிச் சாறு + எலுமிச்சை பழச்சாறு சாப்பிடலாம்.

Friday, 30 September 2016

ஆன்ம ஆரோக்கியம் நல்கிடும் அக்டோபர் மாதம்

ஆன்ம ஆரோக்கியம் நல்கிடும் அக்டோபர் மாதம்

- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

அக்டோபர் மாதம் கோடையின் வெப்பம் தணிந்து இளங்குளிர் பொழிந்து உடலையும், மனதையும் உவப்புள்ளதாக்கும் மாதமாகும். நலம் தானா? நலம் தானா? உடலும், உள்ளமும் நலம் தானா? இந்த வரிகள் நலம் என்பது உடல், மனம் இரண்டையும் ஒன்றாக இணைக்கின்றன. நலம் என்பது தீமை கலவாத அல்லது நோய், நொடியில்லாத நிலை. இந்நிலையே ஆரோக்கியம் எனப்படுகின்றது.

ஆரோக்கியம், ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதன் முழு அர்த்தத்தினை வெளிப்படுத்தும் வார்த்தை. ஆராக்கியம் அல்லது நலம் நிறை வாழ்வு என்பது இன்றைய காலக்கட்டத்தில் பன்முக பரிமாணங்களைக் கொண்டு விளங்குகின்றது. அவை முறையே :

1.சமூக நலன்
2.உணர்வு நலன்
3.ஆன்மீக நலன்
4.சுற்றுச்சூழல் நலன்
5.தொழில் அல்லது கடமை நலன்
6.அறிவுசார் நலன்
7.உடல் நலன்

மேற்கூறப்பட்ட ஏழு பரிமாணங்களும் ஒன்றாக இணைந்து எவ்வித தொய்வுமின்றி செயல்படுகின்ற சமூகத்தில் வாழும் மனிதரே முழுமையாக ஆரோக்கிய வாழ்வு வாழ்பவராவார். எதிர்வரும் மாதங்களில் மேற்கூறப்பட்ட நலன்களை விளக்கியே எனது கட்டுரைகள் வெளியாகும். இந்த அக்டோபர் மாதத்தில் ஆன்ம நலன் பற்றிய கருத்துக்களை முன்வைக்கிறேன்.

ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் அவர் சார்ந்திருக்கும் சமயம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. அவரின் சமயக் கொள்கைகள், பழக்கங்கள் அவரின் ஆன்மீக வாழ்வுக்கு அடித்தளமாயமைகின்றன. எனவே உடல் நோயினால் நலிவுற்றிருக்கும் வேளையில் நோயாளியின் ஆன்மீகப் பயிற்சிகள் இறை நம்பிக்கையினையும் குணப்படுத்தும் ஆற்றலையும் வழங்குகின்றன.

புகழ்பெற்ற உளவியலார் விக்டர் ப்ராங்கிள், ‘மனிதர் துன்பத்தினால் அழிக்கப் படுவதில்லை. மாறாக, துன்பத்தின் அர்த்தம் புரியாததனாலேயே அழிகின்றார்’ என்கின்றார். இந்த நிலையில் நோயாளியின் சமய நம்பிக்கை அவரின் துன்பத்திற்கு அர்த்தத்தை மட்டுமல்ல, இது பற்றிய கவலையையும் குறைக்கின்றது. துன்பத்தினை தாங்கும் மனப் பலத்தையும், நேர்மறையான சிந்தனையினையும் வளர்த்து இறை நம்பிக்கை மூலம் முழு சுகத்தையும் அளிக்கின்றது.

உடல் அழிவுக்குட்பட்டது. ஆன்மா அழிவில்லாதது. அழிவற்ற ஆன்மா தூய்மையில் நிலைத்திருக்கும்போது முழு ஆன்மீக நலன் பெற்றதாகத் திகழ்கின்றது.

அன்னை தெரசாவின் ஆன்மீகநலன் : 

நாம் வாழும் நாட்களில் வாழ்வது இயேசுவான இயேசுவின் அன்புக்குச் சான்று பகர்ந்து மரித்திட்ட அன்னை தெரசா ஆன்மீக வளமையோடு வாழ்த்திட்டார். எனவேதான் இவரது வாழ்க்கையில் எதிர்பட்ட துன்பங்கள், வேதனைகள் அனைத்தும் இவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. 
‘அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால்
இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே’
என்ற தாயுமானவரின் வாக்கு அன்னை தெரசாவின் வாழ்வானது. எனவேதான் இந்த அன்னை 
‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்’ 
என்ற திருக்குறளின் வைர வரிகளுக்கு அர்த்தம் தந்து விட்டார்.

சொக்கத் தங்கம் : 

ஆன்மீக நலன் மிகுந்தோர் புடம்போட்ட சொக்கத் தங்கத்தைப் போன்றவர்களாயிருப்பர்.
சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிழும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
என்னும் பொய்யாமொழிப் புலவரின் அருளாயுதம் ஆன்மீக நலன் மிகுந்தோரிடம் நிதர்சனமாகிடும்.

ஆன்மீக நலன் நிறைந்திட :

நிகழாண்டு செப்டம்பர் 04ஆம் நாள் புனிதர் நிலையினுக்கு உயர்த்தப் பெற்ற அன்னை தெரசாவின் நற்செய்தி வாழ்வே நமது மேல்வரிச் சட்டமாகட்டும்.
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”....
என்ற வள்ளுவர் வாய்மொழி காட்டும் வழிகாட்டு நெறியில் சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி அனைத்தையும் விட்டு விட்டு (லூக் 5 : 28) இயேசுவின் பின்சென்றது போல் நாமும் அனைத்தையும் விட்டுவிடல் வேண்டும். எதற்காக? கடவுளின் வார்த்தையைக் கற்பிப்பதை விட்டு விடாது (தி ப 6 : 2) இருப்பதற்காக.
ஆன்மீக நலனிற்கு செல்லும் வழி எது தெரியுமா? இயேசுகிறிஸ்துவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகின்றேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன் (பிலி 3 : 8) என்ற பவுல் அடிகளாரைப் போன்றே ஆன்மீக நலனில் சிறக்க விரும்புவோர் செயல்பட வேண்டும்.

தனி மனித வாழ்வினுக்கு ஆதாயமாய் இருப்பவையனைத்தும் இழப்பே (பிலி 3 : 7). ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும், தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? (மத் 16 : 26).

இந்த அக்டோபர் மாதம் புனித டோமினிக் வழியாக அன்னை மரியா தந்திட்ட இறையருள் பொழியும் செபமாலையின் மறையுண்மைகளை அதிகம் செபிக்கும் நாட்களாகும். செபமாலை இறைவனின் அருளினை நிறைவாகப் பெற்று ஆன்மீக நலனில் நிறைந்திடச் செய்யும் ஓர் உன்னத அருள்மாலை. இயேசுவின் வாழ்வோடு நமது வாழ்வுப் பயணத்தின் தடுமாற்றங்களையும், தடைகளையும் ஒன்றிணைத்து இயேசுவின் உயிர்ப்பில் பங்கேற்போம்.

இறுதியாக ....

ஆன்மீக நலனுக்கு வலுவூட்டிட
அ. பாவம் செய்து கடவுளின் மேன்மையினை இழந்து விடக்கூடாது. (உரோ 3 : 23).
ஆ. இறைவனை அறிந்து கொள்ளும் தகுதியை இழந்து விடக்கூடாது (உரோ 1 : 28).
இ. எதிர் நோக்கினை இழந்து விடக்கூடாது (கொலோ 1 : 23).
ஈ. கிறிஸ்துவிடம் விளங்கிய நேர்மையையும், தூய்மையையும் இழந்து விடக்கூடாது (2 கொரி 11 : 3)
உ. எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்துவுடன் உறவையும், அருளையும் இழந்து விடக்கூடாது (கலா 5 : 9).

Saturday, 3 September 2016

அமெரிக்கக் கடிதம் கவனம் காக்கும் நலம் - சவரி, கேரி, வடகரோலினா

அமெரிக்கக் கடிதம்
கவனம் காக்கும் நலம்
- சவரி,
கேரி, வடகரோலினா

அமெரிக்கர்கள் தங்களின் உடல் நலத்தைப் காப்பாற்றுவதில் மிகக் கவனமாயிருக்கின்றனர். நோய்கள் உருவாகாமல் இருக்கவும், அவை பரவாமல் இருக்கவும் அரசும் மக்களும் விழிப்புடன் செயல்படுகின்றனர். மருத்துவ மனையில் ஒருவரை சந்திக்க வேண்டுமென்றால் அதற்குரிய அனுமதி பெற்று, உடலை மூடிய உடை அணிந்துதான் செல்ல வேண்டும். ஜீரம், இருமல், என்றால் ஒதுங்கி வாழ வேண்டும்.

ஒவ்வொரு ஊரிலும் நடைபயிற்சிக்கு ஏற்ற மரங்கள் நிறைந்த பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எத்தனை தூரம் நடக்கிறார்கள் என்பதற்கு ஆங்காங்கு குறிப்புக்கள் இருக்கும். அங்கேயே உடற்பயிற்சி செய்ய வாய்ப்புகள் உண்டு. குளங்கள் இருந்தால் அவைகளை சுற்றிலும் நடைபயிற்சி செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊரிலும் விளையாட்டு உள் அரங்கம், விளையாட்டு மைதானம், நீச்சல் குளங்கள் என எல்லாவித வாய்ப்புகளும் அமைந்துள்ளன. எனவேதான், அமெரிக்கர்கள் ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வெல்கிறார்கள். அதிக பதக்கங்கள், மக்களின் ஆழ்ந்த உடல்நலத்தைத்தான் காட்டுகின்றன.

மருத்துவம் சற்று இங்கு அதிக செலவுக்குரியது. காப்பீட்டு முறைபடுத்தப்படவில்லை. மக்களிடையே இதைப்பற்றி இன்னும் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால், அரசில் அல்லது ஒரு நிறுவனத்தில் பணி செய்பவர்களுக்கு அந்த நிறுவனமே மருத்துவ காப்பீடு செய்கிறது. மருத்துவர்கள் மருந்து கொடுக்குமுன், நோயாளர்களிடம் அதை விளக்கிவிட்டுத்தான் கொடுக்க வேண்டும். மருத்துவர் தவறான மருத்துவம் செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, தவறு செய்திருந்தால் அபராதம் விதிப்பார்கள்.

இங்கு 108 ஆம்புலன்சைப் போல அமெரிக்காவில் 911 ஆம்புலன்ஸ் உண்டு. அவர்கள் அவ்வளவு வேகமாக செயல்படுவர். மிகவும் ஆபத்தான நோயாக இருந்தால், யஹலிகாப்டரில் நோயாளிகளை ஏற்றி செல்வர். தற்போது சைக்கிள் கலாச்சாரத்தை முன்வைக்கின்றனர். சைக்கிளில் செல்வதால், உடற்பயிற்சி கிடைக்கிறது. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைகிறது. எரிபொருள் தேவை குறைகிறது, வாகனங்களின் புகையினால் வரும் மாசு குறைகிறது. லண்டனிலும், ஹாலண்டிலும், பிரதம மந்திரிகளே சைக்கிளில் அலுவலகத்துக்கு வருகின்றனர்.

இந்தியாவில் சென்ற மாதம் எனது நான்கு பிள்ளைகளுடன் சுற்றுப்பயணம் செய்தேன். எங்கு பார்த்தாலும் இருந்த குப்பைகளைப் பார்த்து பிள்ளைகள் மூக்கைப் பிடித்துக் கொண்டு சென்றார்கள். தூய்மையற்ற நிலையினால் பிள்ளைகளுக்கு ஜுரம் ஏற்பட்டது.

சுவர் வைத்துதான் சித்திரம் வரைய வேண்டும். உடல்நலமில்லையயன்றால் எவ்வளவு வசதிகள் இருப்பினும், நமது வாழ்க்கை சக்கரமில்லா வண்டியினைப் போல் ஆகிவிடும். கவனமுடன் உடல்நலத்தைக் காப்போம். வாழ்வின் நிறைவைப் பெறுவோம்

மூன்று உறவுகள்

மூன்று உறவுகள்

ஒருமுறை காவல் நிலையத்திற்கு சென்றிருந்தேன். தலைமைக் காவலர் என்னிடம் பகிர்ந்துக் கொண்டார். ‘அலை அலையாக இங்க வருகிறாங்க சார்’ என்றார். ஊர்களில் அவ்வளவு கருத்து வேறுபாடுகள், சண்டைகள், குழப்பங்கள். இப்போது மருத்துவமனைகளிலும் அதே நிலைதான் என்று சொல்லலாம்.  அலைமோதுகின்ற மக்கள் கூட்டம். மருத்துவமனைகள் வணிகக் கூடங்களைப் போல் ஆகிவிட்டன. ஒரு சிரிப்பு எழுதியிருந்தார்கள். ஒரு டாக்டர், தன் மருத்துவமனையில் வட்டிக்கடையும் வைத்திருந்தார். ஏனென்று கேட்டதற்கு, பணமில்லாதவர்கள் உடனடியாக அடகுவைத்து பணம் பெறுவதற்குதாதன் இந்த வழி என்றாராம்.

‘வலிமை வாய்ந்த தலை ஒருபோதும் வலிக்காது’ என்பது ஒருபழமொழி. ‘உடல் நலமும் உற்சாகமும் ஒன்றை ஒன்று பெற்று தரும்’ என்பது மற்றொரு பழமொழி. செப்டம்பர் மாதத்தில் நம் கண்முன் நிற்பது செப்டம்பர் 8இல் கொண்டாடப்படும் ஆரோக்கிய மாதா திருவிழா. நோய்களிலிருந்து விடுதலைப் பெற்று பூரண உடல் நலத்துடன் வாழ மாதாவின் துணையை வேண்டி மக்கள் அலை அலையாக வேளை நகர் நோக்கி செல்கிறார்கள்.

இறைவனின் உதவியை, நலனுக்காக தேடுகின்ற வேளையில், நலன் உண்டாக நம்மால் முடிந்தவைகளையும் செய்ய வேண்டும். உணவு, உடற்பயிற்சி, உற்சாகம் ஆகிய மூன்று உறவுகளை வளப்படுத்தினால் உடல்நலம் பலமாக நமக்குக் கிடைக்கும். வள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் பத்து பாடல்களில் ஆறுபாடல்களில் உணவு அருந்துதல் பற்றி கூறுகிறார். 
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி கூணின் (குறள் 242).

முன்னால் உண்டது செரித்த பிறகு மீண்டும் உண்டால் மருந்து மாத்திரை தேவையில்லை என்கிறார். பசிக்காக உண்பதை விட ருசிக்காக சாப்பிடுவது பெருகி வருகிறது. இதனால் உடல்பருமன் பெருத்து வாழ்பவர்கள் பெருகி வருகிறார்கள். அமெரிக்க, சீனாவை அடுத்து அதிக  உடல்பருமன் உள்ளவர்கள் இந்தியாவில் பெருகி வருகிறார்கள் என்கிறது கணக்கெடுப்பு.

‘அளவின்றி உண்டு குடிப்பதில் களி கூரா¼த் இதனால் ஏற்படும் செலவு  உன்னை ஏழையாக மாற்றிவிடும்’ என்கிறது சீராக் ஞானம் 18 : 32. ஆண்களில் ஐந்துக்கு ஒருவரும், பெண்களில் ஏழிற்கு ஒருவரும் இந்தியாவில் அதிக  உடல் பருமனாக விளங்குகிறார்கள் என்கிறது கணக்கெடுப்பு. உணவு ருசிக்காக செய்யப்படும்போது தேவையில்லாத இரசாயன பொருள்களை சேர்க்கிறார்கள். அதிர்ச்சி தரும் ஒரு தகவலை அண்மையில் படித்தேன். பாக்கட் பால் நிறையவே கிடைக்கிறது. ஆனால் பாக்கட் பாலில் 20 அல்லது 30 சதவிகிதம் தான் உண்மையான பால். மற்றவை 50 சதவிகிதம் சோயா பால், ஸ்டார்ச், டிட்டர்ஜன்ட், சோடியம் ஹைட்ராக்சைடு, கொஞ்சம் யூரியா இப்படியாக மாடு வளர்ப்பு குறைந்த காலத்தில் பாக்கட் பால் கொடி கட்டி பறக்கிறது.

உடற்பயிற்சிக்காக, யோகா, ஜிம் என்றெல்லாம் செல்கிறார்கள். ஆனால் வீட்டு வேலைகள், தோட்ட வேலைகள், விவசாயம் ஆகியவை பயிற்சிகளை தரும். அவைகளை மதிப்பு குறைவானதாக ஒதுக்கி வைக்கிறோம். மண்வெட்டி, களைகொத்தி ஆகியவைகளை கையில் எடுத்தால் தாழ்ந்த நிலையினர் என்று கருதுகிறோம்.

நல்ல உணவும், உடற்பயிற்சியும் சேர்ந்தால் நல்ல உடல்நலம் பிறந்து, உற்சாகத்தில் வளர்வோம். அண்மையில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. இந்தியா இரண்டு பதக்கங்களை போராடி பெற்றிருக்கிறது. இந்த இரண்டு பதக்கங்களும், பெண்கள் பெற்றிருக்கிறார்கள். சிங்கமான ஆண்கள் தலையில் துண்டுபோட வேண்டியதாயிற்று. செழுமையான மரம்தான் நிறைய கனிகள் தரும். வளமில்லா மரம் கனிதர வாய்ப்பில்லை. விளையாட்டுத் துறையில், மற்ற துறைகளில் உள்ளது போலவே கொடுமையான ஊழல் ஊஞ்சலாடுகிறது. சரியான நபர்களை இளமையிலேயே தேர்வு செய்வதில்லை. முறையான பயிற்சி இல்லை. பள்ளிகளிலும், கிராமங்களிலும் விளையாட தேவையான விளையாட்டு திடல்கள் இல்லை.

நார்மன் கசின் என்பவர் கூறுகிறார், ஒவ்வொருவரும் தனக்குரிய மருத்துவரை தங்களுக்குள்ளேயே வைத்திருக்கின்றனர் என்கிறார்.

அன்னை மரியாவின் பிறப்பு சூரியனுக்கு முன் வரும் விடிவெள்ளியைப் போல. தீமைகளைப் போக்கி நன்மைகளை உலகில் உதிக்க செய்யும் வழியைக் காட்டினார் இயேசு. அந்த வழியின் முன்னோட்டமான மரியாவின் பிறப்பு விழாவை மகிழ்வுடனும், திடமுடனும் கொண்டாடுவோம்.

நம் முயற்சிகள் என்ற கரங்களைக் குவித்து
உடல் உள்ள நலனுக்காக மன்றாடுவோம்.
அப்போது நம்மில் புதைந்திருக்கும் நலன்களை
விண்ணின் மழை, எழுந்து வாழ செய்யும்

Ads Inside Post