Pages - Menu

Showing posts with label love. Show all posts
Showing posts with label love. Show all posts

Wednesday, 3 May 2017

அன்பின் ஆழம்

விவிலிய விளக்கம்:
   அன்பின் ஆழம்         

  - அருள்பணி . ச. இ. அருள்சாமி

மனித பண்பின் முதலிடம் அன்பு. மனித வாழ்வின் மாண்பு பிறக்குமிடமும் அன்புதான். “அன்பு இல்லை என்றால் நான் ஒன்றுமில்லை”  என்கிறார் பவுல் அடிகளார் ( 1 கொரி 13:2). இந்த அடிப்படை பண்பைப் பற்றி புதிய ஏற்பாட்டு நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளை இங்கு தொடர்ந்து காணலாம்.

அன்பு என்பதற்கு புதிய ஏற்பாட்டு நூல்களில் பயன்படுத்தப்பட்டுள்ள  கிரேக்க வார்த்தை, “அகப்பாவோ”  (Agapao) என்ற வார்த்தை.  இவ்வார்த்தையின் தொடர் புதிய ஏற்பாட்டு நூல்களில் 360 முறை பயன்படுத்தப்பட்டுள்ளன. “அகாப்பாவோ”  என்ற வினைச்சொல் 143 முறையும் “அகாப்பே”  என்ற பெயர் சொல் 116 முறையும் “அகப்பேதோஸ்”  என்ற  பெயர்சொல் 61 முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

புதிய ஏற்பாட்டு நூல்களில், யோவான் புத்தகங்களில்தான் (நற்செய்தி, திருமடல்கள், திருவெளிப்பாடு) இவ்வார்த்தை குழுமம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 106 முறை.

புதியஏற்பாட்டு நூல்கள் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள “அகபா”  (Ahaba) என்ற எபிரேய வார்த்தையின் பொருளை  “அகாபே”  என்ற  வார்த்தையில் மொழி பெயர்த்திருக்கின்றனர். கிரேக்க இலக்கியங்களில் அன்பைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ள “ஏரோஸ்”  (Eros), “பிலியா” (Philia)  என்ற வார்த்தைகள் புதிய ஏற்பாட்டு நூல்களில் ஒரு சில இட்ங்களில் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன.  

புதிய ஏற்பாட்டு நூல்களில், “அன்பு” என்ற வார்த்தை மனிதருக்கு இடையில் காணப்படும் அன்பு உறவை குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. மனிதரல்லாத பொருள்கள் மீது மனிதர் கொள்ளும் உறவினை “அன்பு”  என்ற வார்த்தையால் குறிக்கப்படவில்லை.

அன்பு என்பது மற்றவர் மீது ஒருவர் வைத்திருக்கும் மதிப்பையும், அவர்களை நயமோடு ஏற்றுக் கொள்வதையும் குறித்து  காட்டியது. நற்செய்தி நூல்களில் ஒவ்வொன்றிலும் மற்றும் உள்ள கடிதங்கள், திருவெளிப்பாடு ஆகிய நூல்களில் அன்பு என்பது எந்தெந்த பண்புகளின் சூழலில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை தொடர்ந்து காணலாம்.

இயேசு  “தன் நண்பருக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு இல்லை ”  என்றார் ( யோவா 14:13) 
 ( ஆதாரம் Exegetical Dictionary of the New Testament,  Vol - 1, p. 8-12) 

ஒடிசா மாநிலத்தில் நடந்த உருக்கமான நிகழ்ச்சியை 25/ 09/ 2016  செய்திதாளில் படித்தேன். ஊர் பெயர் கலாநந்தி. 75 வயது  பெண். கானாக் சத்பதி. இறந்துவிட்டார்கள். அவர்களுக்கு நான்கு பெண்கள். நால்வரும் திருமணமாகி விதவை யானவர்கள். இறந்த  தாயை அடக்கம் செய்ய, ஊர் மக்களின் உதவியை கேட்டிருக்கிறார்கள். ஒருவரும் வரவில்லை. எனவே, நான்கு பெண் பிள்ளைகளும், 
 இறந்த தாயை கட்டிலில் வைத்து, சுடுகாட்டிற்கு தூக்கி சென்றார்கள். சிதையில் வைத்து எரிப்பதற்கு விறகு இல்லாத நிலையில் தங்கள் குடிசைகளை பிரித்து அவைகளின் கூரைகளையும் கழிகளையும் வைத்து உடலை கொளுத்தியிருக்கிறார்கள். ஏழ்மையில் எழுந்த அன்பு அது.    

Saturday, 29 April 2017

அன்பு எல்லையில்லா சுவையானது

அன்பு எல்லையில்லா சுவையானது

ஒரு இளைஞன் வெளியூர்  சென்று திரும்பும் போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரைக் கண்டான். ஆவலுடன் ஓடி சென்று நீரை பருக்கியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான். குடிமக்களை சிறந்த   முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரைக் கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல்பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான். நான்கு நாட்கள் பண முடிவில் தன்னுடைய ஊரை  சென்றடைந்தவன். அரண்மனைக்குச் சென்று அந்த நீரின் அருமை பெருமைகளைக் கூறி, உலகிலேயே இதுபோல சுவையான நீர் இருக்க முடியாது என்று கூறி அதை அவருக்கு அளித்தான். மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.

          இதை அருகே அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பட்டத்துராணி, எனக்கும் கொஞ்சம் அந்த நீரைக் கொடுங்களேன். எனக்கும் அதை குடிக்க ஆசையாயிருக்கிறது என்று கூறி, அவர் கூறியதை காதில் வாங்கிக் கொள்ளாமல் மொத்த நீரையும் குடித்து முடித்து விட்டான் மன்னன். பிரமாதம் உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒரு நீரை நான் இதுவரை என் வாழ்க்கையில் அருந்தியதே இல்லை உனக்கு எவ்வாறு நன்றி சொன்னாலும் தகும். நீ நீடூழி வாழ்க என்று வாழ்த்தி பரிசுகள் வழங்கி அனுப்புகிறார். இளைஞன் தனது மன்னனுக்கு அந்த அதிசய நீரை கொடுத்த சந்தோ­த்தில் விடைபெற்று சென்றான். அவன் சென்ற பிறகு, ராணி இருந்தாலும் உங்களுக்கு இத்தனை சுயநலம் ஆகாது. அந்த நீரை எனக்குக் கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்த போய் விடுவீர்கள்? என்றாள்.

              இல்லை ராணி........... நான் மொத்த நீரையும் குடிக்கவில்லை. அதில் கொஞ்சம் நீர் இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் நீ கொஞ்சம் குடித்து பாரேன்.

             அரசன் சொல்ல, ஆர்வமுடன் எடுத்து குடிப்பவள், ஒரு வாய் குடித்ததும்......... சே......சே...... என்ன தண்ணீர் என்ன இப்படி நாற்றமடிக்கிறது? என்று கூறி அந்த நீரை உடனடியாக துப்பி விடுகிறாள். தேவி நீ நீரைதான் சுவைத்தாய்.  ஆனால் நான் அவன் என்மீது வைத்திருந்த அன்பை சுவைத்தேன். பாலைவனத்தில் தாகமெடுத்து அலைந்து திரிந்த அவனுக்கு ஒரு சாதாரண சுனை நீரே தேவாமிர்தம் போல இருந்திருக்கிறது. அதை மன்னனாகிய எனக்குக் கொடுக்க வேண்டும் என்று கருதி தனது தோல்பையில் நிரப்பிக் கொண்டு வந்தான். எனவே, தோலின் வாடையும் நீரில் ஏறிவிட்டது.  நீரின்  சுவை முற்றிலும் மாறிவிட்டது.

அவன் இருக்கும்போது நீரை உனக்குக் கொடுக்காத்திருந்தால் நீ இப்போது செய்ததை போலவே அவன்முன்பு செய்திருப்பாய். அவன் மனம் வேதனைப் பட்டிருக்கும், அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை.

Ads Inside Post