Pages - Menu

Showing posts with label Small stories. Show all posts
Showing posts with label Small stories. Show all posts

Saturday, 7 October 2017

கல்யாணம் எதற்காக? அரை பக்க சிறுகதை

கல்யாணம் எதற்காக? 

அரை பக்க சிறுகதை

ச.இ.அ.

முகிலன் ஓர் ஆசிரியர். முற்போக்கு சிந்தனை உடையவர். கடின உழைப்பாளி. வீட்டிற்கு ஒரே பிள்ளை. இவர் ஆசிரியர் பணியில் நிரந்தரம் ஆனதும் இவர்களின் குடும்பம் சற்று உயர்ந்தது. பெற்றோர், பையனுக்கு வயதாகி விட்டது. திருமணம் செய்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து பையனிடம் கூறினார். ‘நம்ம உறவுக்காரப் பொண்ணு, அவ பேங்கில வேலை செய்றா, பொறுத்தமா இருக்குமென நினைக்கிறோம். என்னப்பா சொல்ற?’ என்று அம்மா கேட்டாள். முதல்ல என்னுடைய கருத்தை சொல்றேன். என் திருமணம் சீர்திருத்த கலியாணமா, ஆடம்பரமில்லாம கோவில் முறைப்படி எளிமையா நடக்கனும். மேளதாளம், வரவேற்பெல்லாம் வேண்டாம். அத்தோடு ஐந்து  ஏழை தம்பதிகளுக்கும் நம் செலவிலேயே அன்றைக்கு திருமணம் நடக்கனும், என்றான் முகிலன். பொண்ணு வீட்டில கேட்டு சொல்கிறேன் என்று சொன்ன தாய், சிலநாள்களில்,  ‘உன்னுடைய கருத்துக்கு பொண்ணு வீட்டில ஒத்துக்கலப்பா. சகல ஆடம்பரங்களுடன் திருமணம் நடந்தா சரிங்கராங்க’  என்றார்.  

இடையில் முகிலன் படித்து ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற்றான். கலெக்டர் வேலைக்கு ஆர்டர் வந்து விட்டது. இப்போது  பெண் வீட்டார் திருமணத்தை மாப்பிள்ளை விருப்பப்படியே வைத்துக் கொள்ளலாம் என்று முன் வந்தனர். ‘அடுத்த மாதம் 15 ஆம் தேதி அனாதை பெண்ணுடன் திருமணம் நடக்கப் போகிறது என்பதை அவர்களுக்கு சொல்லுங்கள்’ என்றான் முகிலன். ஆடம்பரத்திற்காக கல்யாணம் அல்ல. குடும்பத்திற்காக தான் திருமணம் என்பதை புரிவதில்தான் திருமணத்தின் சிறப்பு என்றான் முகிலன்.

Thursday, 5 October 2017

உனக்கு நீயே....

உனக்கு நீயே....

எஸ்.தீபிகா, திருஇருதய ஆண்டவர் செவிலியர் கல்லூரி, குடந்தை.  
 (புதிய எழுத்தாளர் தங்கையின் கன்னி முதற்கதை)

கனிமொழி 12ம் வகுப்பு மாணவி, தொடர்ந்து எல்லா  தேர்வுகளிலும் குறைந்த மதிப்பெண் வாங்குபவள், எப்பொழுதும் சோர்ந்து காணப்படுவாள். தனிமையிலேயே வாழ்பவள். ஒருநாள் வகுப்பு ஆசிரியர் கதிரவன் தமிழ் புத்தகம் யாரேனும் வைத்திருந்தால் தாருங்கள் என்றார். இவளோ தன் புத்தகத்தை கொடுத்தாள். அதன் முதல் பக்கத்திலேயே  ‘எனக்குனு யாருமே இல்ல’ என்று எழுதியிருந்தது. அதைப் பார்த்த ஆசிரியரோ மெல்லியதாய் புன்னகைத்து விட்டு பாடத்திற்குள் சென்றார். நாட்கள் கழிந்தன. அந்த மாத இறுதித் தேர்விலும் கனிமொழி குறைந்த  மதிப்பெண்ணோடு, இரண்டு பாடங்களிலும் தோல்வியுற்றாள் 
(இயற்பியல், வேதியியல்). இரண்டு ஆசிரியர்களும் இவளை கடிந்து கொள்ள தனது கோபத்தை மதிய உணவில் தினம் சாப்பிடாததால் மயங்கி விழுந்தாள் கனி. 

சக மாணவிகள் தமிழ் ஆசிரியரிடம் நடந்ததைக் கூற, அவரோ கனிமொழியை தனது அறைக்கு வரச் சொன்னார். கனி வந்தாள். மதிய வணக்கம் அவள் கூற, நாற்காலியில் அமரச் சொன்னார். தனது ய்யிழிவிவ ல் இருந்து வீeழி யை எடுத்து உற்ஸ்ரீ ல் ஊற்றி அவளிடம் குடி  என்று கூறினார். அவளோ ‘வேண்டாம் சார்’ என்றாள். ‘பரவா இல்ல குடி’ என்றார். அவளும்  குடித்து முடிக்க.  ‘உனக்கு என்னாச்சு ஏன் தமிழ் ணுலிலிவல அப்படி எழுதியிருந்த?’ என்றார். இவளோ என்ன என்பதுபோல் புருவத்தை சுருக்க, ‘ம் எனக்கு யாருமே இல்லனு எழுதியிருந்தல்ல அத பத்திதான் கேட்கிறேன்’ என்றார். ‘உண்மை அதான சார் எனக்குனு  இங்க யாருமே இல்ல, ஒரு நல்ல தோழி கிடையாது, கூட சேர்ந்து படிக்க, விளையாட, சிரிக்க, சாப்பிடனு யாருமே இல்ல சார்’ என்றாள் விரக்தியாய்.  ‘அப்ப இதுதான் உன் பிரச்சனையா?’ என்று அவர் கேட்க, ‘ம், நா தனிமைய உணருரேன் சார். எனக்கு இங்க இருக்க பிடிக்கல, யாரையுமே பிடிக்கல, எனக்கு ஒத்து போற மாதிரி இங்க யாருமில்ல’  என்று நிறைய குறைகள கூறி விட்டு, ‘நான் படிக்காம இருக்கறதுக்கும் இதுதான்  சார் காரணம்’ என்று முடித்தாள் கண்ணீரோடு.  ‘சரி நான் உனக்கு ஒரு வழி சொல்லுறேன். ஒரு வாரம் இத செய், அதன் முடிவுல உன்னோட இந்த யாருமே இல்ல என்கிற உணர்விற்கு பதில் கிடச்சிடும்’ என்று கூறினார். ‘என்ன சார்’என்று அவள் கேட்க, ‘இந்த ஒரு வாரம் முழுவதும் உன்னைச் சுற்றி நடக்கும்   எல்லா வி­யங்களையும் கவனித்துப்பார் உன்னிப்பாக’ என்றார். இவளோ சரி என்று கூறிவிட்டு சென்றாள். 

அதேபோல் ஒவ்வொன்றையும் கவனிக்கத் தொடங்கினாள். தன்னைச் சுற்றி இருக்கும் தோழிகளுக்குள்ளேயே சண்டை, சச்சரவு, மனஸ்தாபம், எரிச்சல், பேசாமல் செல்வது, ஏமாற்றுவது என எல்லாவற்றையும் பார்த்தாள். இவதான் என் உயிர்ததோழி என்று கூறிய ஒரு பெண் இன்று ச்சீ, அவ என்னோட தோழியே கிடையாது என்று தூற்றியதையும் காதாரக் கேட்டாள். மிகவும் மன வருத்ததுடன், அந்தத் தமிழ் புத்தகத்தை எடுத்துக் கொண்டு, தமிழாசிரியரின் அறைக்குச் சென்றாள். ஆசிரியரோ  ‘வாம்மா’, என்றார். அவளோ அவரிடம் தனது புத்தகத்தை நீட்டினாள். அதனை வாங்கி பார்த்தவருக்கு மகிழ்ச்சி. ஏனென்றால் அதில் எனக்கு யாருமே இல்லை என்பதை அடித்து விட்டு அதற்குக் கீழாக ‘உனக்கு நீயே’ என்று எழுதியிருந்தது. ‘என்ன? திடீர் மாற்றம்’ என்று ஆசிரியர் கேட்க, ‘சார் எனக்கு யாரும் வேணாம் சார்’ என்று நிகழ்ந்தவற்றை, கண்டவற்றை, கேட்டவற்றை எல்லாத்தையும் கூறிமுடித்து விட்டு ‘எனக்கு நானே போதும் சார்’ என்று கூறிவிட்டாள். ஆசிரியரோ ‘அப்படி இருப்பது சரிதான் ஆனால் முற்றிலும் துறந்துவிடக்கூடாது. எல்லாரிடமும் சகஜமாகப் பேசிக் கொண்டிரு, ஆனால் யாரையும் நம்பி, அவர்களை சார்ந்து வாழ்ந்து விடாதே’ என்றார்.  கனிமொழியும் வாழ்க்கையை சந்தோ­த்துடன் தொடர்ந்தாள்.
உனக்கு நீயே...
யாரும் உன் அருகில் இல்லையயன்று வருந்தாதே
அனைவரும் உன் அருகில் இருந்து
உன்னை துன்புறுத்தி கொல்வதை விட
யாருமே இல்லாமல் அனாதையாக வாழ்வதே நல்லது.
கண்ணீரைத் துடைக்க யாருமில்லை  என்று கலங்காதே
கண்ணீரைத் துடைக்கும் கரங்களே 
நாளை உன்  கண்ணீருக்கு காரணமாய் நிற்கும்
சாய்ந்து கொள்ள ஒரு மடியும்  அனைத்துக் கொள்ள
இரு கரங்களும் இல்லையே என்று ஏங்காதே
எந்நேரத்தில் விட்டுவிட்டு சென்று 
விடுவார்கள் என்று தெரியாது.
கடைசி வரைக்கும் யாருக்காகவும் ஏங்காதே
உன் கண்ணீரைத் துடைக்க, உன் விரல்களும்
உன் துன்பங்களை நீக்க, உன் தன்னம்பிக்கையும்
உன்னை மகிழ்விக்க, உன் வெற்றியும் காத்திருக்கிறது
தொடர்ந்து போராடு தனி ஆளாக நின்று.

Friday, 29 September 2017

புரிதல் தரும் பணிதல் சிறுகதை திருமதி. க. சந்தோசம் லியோ, விரகாலுVர்

புரிதல் தரும் பணிதல் 
 சிறுகதை

 திருமதி. க. சந்தோசம் லியோ, விரகாலுVர் 

‘தேவி எழுந்திரும்மா காலேஜ்க்கு நேரமாகி விட்டது. கிளம்பி சாப்பிடவாம்மா’ என்ற படி சமையலறையில் உற்சாகமாக அன்பையும் பாசத்தையும் சேர்த்து சமைத்துக் கொண்டிருந்தாள் அம்மா வேணி.

தூக்கம் தேவியின் கண்கள் திறக்க ஒத்துழைக்கவில்லை. ஒருவழியாய் கஷ்டப்பட்டு எழுந்து வந்தாள். ‘தூங்கும் பொழுது ஏன் கத்திக்கொண்டே இருக்க’ என்று கோபத்தோடு தாய் வேணியை எதிர்த்து பேசினாள்.

வேணிக்கு முழு உலகமும் தன் மகள் தேவிதான். எப்பொழுதும் கடவுளிடம் பிராத்தனை செய்யும் பொழுது மகளுக்கு நல்ல ஞானத்தை கொடு என்றுதான் கேட்பாள்.

ஆனாலும் என் கணவர் இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டு மகளை படிக்கவைக்கிறேன். என் கஷ்டத்தை உணராமல் பொறுப்பின்றி இருக்கிறாளே என்று வேணியின் மனதுக்குள் ஒரு வருத்தம் இருந்துகொண்டேதான் இருந்தது. 

காலம் கடந்து போனது. தேவியின் கல்லூரியின் மூன்றாமாண்டு நிறைவு வந்தது. அப்பொழுது கல்லூரியிலிருந்து சுற்றுலா செல்வதாக தாய் வேணியிடம் தேவி கூறினாள். அதற்கான கட்டணம் ரூ.2,000 எனவும் சொன்னாள். அவ்வளவு பணத்திற்கு என்ன செய்வது தேவி ரூ. 2000 மட்டும் இல்லாம இன்னும் செலவுக்கும் பணம் தேவைப்படும் அல்லவா என்றபடி தனது நிலையை நினைத்து வருந்தினாள் தாய் வேணி. ஆனால் தேவியோ முடியவே முடியாது நான் சுற்றுலா போய்தான் தீருவேன் என்று அடம்பிடித்தாள். வேறு வழியின்றி பக்கத்து வீட்டில் ரூ.3000 கடன் வாங்கி அனுப்பி வைக்கிறாள். தாயின் கஷ்டத்தை உணராமல் தேவி சந்தோ­மாக சுற்றுலா செல்ல முடிவு செய்து கல்லூரிக்கு சென்று தனது பெயரை பதிவு செய்கிறாள். அப்பொழுது கல்லூரி பேராசிரியர் மாணவிகளைப் பார்த்து...
.
‘மாணவிகளே சுற்றுலாவில் அதிகமாக நாம் காணப்போவது மாதா கோவில்கள்தான். எனவே நாம் செல்வதற்கு முன் மாதாவைப்பற்றிய ஒரு சில வி­யங்களை உங்களுக்கு சொல்கிறேன்’ என்றபடி பேராசிரியர் ஆரம்பித்தார்...

யோசேப்பும் அன்னை மரியாவும் மண ஒப்பந்தம் ஆனவர்கள். திருமணத்திற்கு முன்பு அன்னை மரியாள் கருவுற்றிருப்பதை தெரிந்து யோசேப்பு மரியாளை ஒதுக்கிவிட நினைத்தார். அப்பொழுது தூதரானவர் தோன்றி

 “ யோசேப்பே தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்” (மத்தேயு 1:20) என்று சொன்னார். ஆனால் யோசேப்பு மனைவி மரியாளை முழு மனதோடு ஏற்றுக்கொண்டார். அதுமட்டுமல்ல மாணவிகளே வானதூதர் மரியாளுக்கு தோன்றி “அருள்மிகப் பெற்றவரே வாழ்க !  ஆண்டவர் உம்மோடு இருக்கிறார். இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்” : அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். என்று வானதூதர் கூறியவுடன் “ஆகட்டும்”  என்ற ஒரே வார்த்தையில் தமது சம்மதத்தை தெரிவித்தார் அன்னை மரியாள். மாணவிகளே இங்குதான் நீங்கள் சிந்திக்க வேண்டும் ஒரு பெண் பேசும்பொழுதும், செயல்படும்பொழுதும் எவ்வளவு நிதானமாக பதில் பேச வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர்தான் அன்னை மரியாள். திருமணமாகாத ஒரு பெண் கருவுற்றால் அந்த சமுதாயம் அவரை எவ்வளவு ஏளனம் செய்திருக்கும். அப்படியயாரு கஷ்டத்திலும் இறைமகன் இயேசுவை பெற்றெடுத்தார் என்றால், அவர் கடவுளின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்தார் என்பது தான் உண்மை. மாணவிகளே அன்னை மரியாவைப் போல் இதுவரை எந்த ஒரு பெண்ணும் பிறந்ததில்லை, இனி இவ்வுலகில் பிறக்கப்போவதும் இல்லை. எனவேதான் பெண்கள் பணிவுடனும், தன்னம்பிக்கையுடன் வாழ அன்னை மரியாளைப் பின்பற்றுகின்றனர். அவர் வழியாக இறைவனிடம் பிராத்தனை செய்கின்றனர் என்று பேராசிரியர் கூறியவுடன் தேவியின் உள்ளத்தில் ஒரு தெளிவு  கிடைத்தது. என் அம்மா, என்னை, அப்பா இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாள். அதை உணராமல் கடன் வாங்கி சுற்றுலா செல்வதற்கு ஆசைப்பட்டுள்ளேனே என்று தன் தவற்றை உணர்ந்தாள். தாய் மரியாளின் பொறுமையும், நிதானமும் எனக்கு இல்லாமல் போய்விட்டதே ! கடவுளுக்கு அவர் கீழ்படிந்ததால் தான் இன்று உலகமே அவரை பின்பற்றி வாழ ஆசைப்படுகிறது. இனி என் தாய்க்கும், பெரியோருக்கும் கீழ்படிந்து பெருமை சேர்ப்பேன்.      சுற்றுலா சென்று கிடைக்கும் மகிழ்ச்சியைவிட என் தாய்க்கு கீழ்ப்படிந்து அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே நிலையானது என நினைத்து தாயிடம் செல்கிறாள். 

அம்மா ! என்று ஆசையோடும் பணிவோடும் அழைக்கிறாள். நான் சுற்றுலா செல்லவில்லை. வாங்கிய கடனை திருப்பி கொடுத்து விடுங்கள். நாம் பணம் சேர்த்து வைத்து இருவரும் சேர்ந்து சென்று வரலாம் என்று தன் தாயின் மடியில் தலைசாய்த்து அன்னை மரியாவின் தியாக வாழ்வை தனது தாய் வேணிக்கும் எடுத்துச் சொல்கிறாள். அம்மா அன்னை மரியாவைப் பற்றி சொல்ல வார்த்தையில்லை ! ஆனால் அவளைப் போல் கீழ்படிந்து, பணிவுடன் வாழ்ந்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம் ! அவளைப் பற்றி இன்னும் சொல்ல வேண்டுமானால் அவள்.......
தாழ்ச்சியின் மணிமகுடம்
தியாகத்தின் உயிர் வடிவம்
கருணையின் பிறப்பிடம்
தூய்மையின் வாழ்விடம்
ஞானத்தின் ஆழ்கடல்
வெற்றியின் சிகரம்
வாழ்க்கைக்கு உதாரணமானவர் !
அனைவருக்கும் தாயானவள் !
நம்மை தாங்கி நடத்தும் இறைவனின் தாயானவள் !
என்று தேவி வருணிக்கும் பொழுதே ! அன்னை மரியாளிடம் வேணி நன்றி கூறினாள் !.
தன் பிள்ளைக்கு கொடுத்த ஞானத்திற்காக !
        வளர்வோம் ! வாழ்வோம் ! அன்னையின் வழி தொடர்வோம்.

Tuesday, 4 July 2017

தப்புத்தாளங்கள், சிறுகதை : கேத்தரின் ஆசா,திருச்சி

தப்புத்தாளங்கள்-  சிறுகதை :
கேத்தரின் ஆசா,திருச்சி

ஞாயிற்றுக்கிழமை பூசை, கோவில்  நிரம்பி வழிந்தது. பைபிள் ரீடிங் முடிந்து சாமியார் பிரசங்கத்தை ஆரம்பித்திருந்தார். அன்றைய பைபிள் வாசகத்தின் கருத்தைத்தான் பிரசங்கத்தில் விபரமாக சொல்வார்கள். ஆனால், சாமியார் முற்போக்குவாதி. தடம்புரண்டு சம்மந்தம் இல்லாத கருத்துக்களை விளக்கமாக சொல்லிக் கொண்டிருந்தார். இடையிடையே  அரசியல் தாக்கம் வேறு. கிறிஸ்துவர்கள் அமைதியானவர்கள். அகிம்சைவாதிகள், கொடூரம் நிகழ்ந்தாலும் மெளனமாக மெழுகுவர்த்தி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் அன்புள்ளம் கொண்டவர்கள். கிறிஸ்துவ நெறிமுறை தவறாதவர்கள். ‘இந்த சாமியார் ஏன் சமூக எழுச்சி, அரசியல் விழிப்புணர்வு பற்றி பேசுகிறார்’ என்று விசுவாசிகள் அவரை வினோதமாக பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள்.

பழமைவாதி  உத்திரியம் தாத்தா பிரசங்கத்தி லிருந்து லேசான உறக்கத்திற்கு சென்று விட்டார். ஸ்டெல்லா அக்கா எத்தனை முறைதான் தன் முக்காட்டை சரி செய்வதுபோல் புதிதாக அணிந்திருக்கும் மி´ன் கட்டிங் வளையல்களை எல்லோரும் பார்க்கும்படி தம்பட்டம் அடித்துக் கொண்டிருப்பார். கையே வலித்துவிட்டது. பிரசங்கம் ஓய்ந்தபாடில்லை.

அன்னமேரி பாட்டிக்கு உட்கார சேர் கிடைக்காத தால் கீழே சம்மணம் போட்டு உட்கார முடியாமல்  சேரில் அமர்ந்திருக்கும் இளம் பெண்ணை மனதில் திட்டிக்கொண்டே அமர்ந்திருந்தார். இளம் பெண்கள் கீழே உட்காரக் கூடாதா? தங்கள் சுடிதார் அழுக்காகிவிடக்கூடாது என்று கவனமாக இருந்தார்கள்.

அழகான கலகங்தா அணிந்து கொண்டு வந்திருந்த  யஹலன் அடிக்கடி தன் கவனத்தை இறக்கையில்  அமர்ந்திருக்கும் ஸ்டீபன் தன்னை பார்க்கிறானா என்ற ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். பூசை நேரத்திலும் ஜெபமாலை உருட்டி கொண்டிருக்கும் சகாயமேரி அத்தை,  இன்றைக்கு சொல்லும் தேவ ரகசியம் சரிதானா? என்று நினைவுபடுத்தி பார்த்துக்கொண்டே ஜெபமாலை உருட்டுவதில் கவனமாக இருந்தார். இவர் பூசையிலும் கவனம் செலுத்தவில்லை. தன்னை மற்றவர்கள்
பக்திவான் என்று நினைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தார். 

சினிமா ஹீரோ போல் உடை அணிந்து கொண்டு வெடுக்கான் வெடுக்கானாக எலும்புகூடு போல் (நினைப்பு தனக்கு பிடித்த ஹீரோ போல் இருப்பதாக நினைப்பு) பியானோ வாசித்துக் கொண்டிருக்கும் பெலிக்சின் கவனம் சர்ச்சில் நடுப்பகுதியில் அமர்ந்திருக்கும் ஜுலி  மேலேயே இருந்தது. தன்னை ஒரு பெரிய இசைக்கலைஞனாக கற்பனை செய்துக் கொண்டு  சாமியார் இன்னும் அதிக நேரம் பிரசங்கம் செய்வதால்தான் அதிக நேரம் ஜுலியை பார்க்கலாம் என்று   பிரசங்கத்தை சூப்பர் என்ற மனோபாவத்தை  முகத்தில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். 

  தான் இரண்டு நாளாக தயாரித்த இலக்கிய, அரசியல், சமூக சம்மந்தமான பிரசங்கத்தை மக்கள் ஏன் ஆவலோடு கேட்கவில்லை?  முடித்துவிடலாமா? அல்லது தயாரித்த முழு உரையையும் படித்து முடிப்போமா என்ற எண்ண ஓட்டத்தில்  நின்றிருந்தார்  சாமியார்.   
  திடீரென்று ஒரு பெண்மனி எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும் விதமாக சர்ச்சின் உள்ளே நடுபாதையில் விடுவிடுவென்று நடந்து பீடத்துக்கு எதிரே முழந்தாளிட்டு  இரண்டு கைகளையும் விரித்து உரத்த குரலெடுத்து அழுது கொண்டிருந்தாள். 

ஜெபமாலை ஸ்பெஸலிஸ்ட் சகாயமேரி எழுந்து, அந்தப்பெண் அருகே சென்று“ஏப்புள்ள இப்படி நைட்டி போட்டுக்கிட்டு சர்ச்சுக்கு வரக்கூடாது தெரியுமா,  இப்படி பீடத்துக்கிட்ட கத்தி அழுவவும் கூடாது, எந்திருச்சி வெளியே  போ”  என்று  அதட்ட அந்தப் பெண் எதையும் சட்டை செய்யாமல் சகாயமேரியை பார்த்து ஒரு புன்னகை செய்து விட்டு நல்லா சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டது.

எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு. பெண்களில் சிலர் நைட்டுக்கு போடும் நைட்டியை போட்டுக் கொண்டு தெருவில் அலைகிறார்களே... நைட்டிக்கு  ம்ழிதீ ழிஐd ஹிஷ்ஆஜுமி  என்று பெயர் வைக்கலாமா என்ற எண்ணம் உண்டு. 

சம்மணம் போட்டு அமர்ந்த பெண் அழகாக இருந்தார். வணப்பு மிகுந்த  உடல்வாகு. சரியா படிக்காமல் வீட்டிற்கும் அடங்காமல் திரிந்தவராக இருக்க வேண்டும் என்று தோன்றியது.
இளவட்டங்களின் கழுகு பார்வை அவளை மொய்த்துக் கொண்டிருந்தது. ஓரக்கண்ணால் அந்த பெண்ணை அளவெடுத்து  விட்டு நல்லவன் போல் பெலிக்ஸ் ஜுலியைப் பார்க்க, அவள் அவனை முறைக்க இருவருக்கும் இடையே ஒரு சிறு  ஊடல்  ஓடிக்கொண்டிருந்தது. நிறைமாத கர்ப்பிணிப் போல தோற்றம் உள்ள அந்தப் பெண்ணைப் பார்த்து, இதற்கு யார் காரணமாக இருப்பார்? இவளுக்கு கல்யாணம் நடந்துவிட்டதா? நடக்கிலியா? தவறிப்போனவளா?  யாருக்கும் அதுப் பற்றி அவளை தெரியவில்லை.

சம்மணமிட்டு உட்கார்ந்திருந்த  பெண் மீண்டும் எழுந்து நின்று கத்த ஆரம்பித்தது, அவளின் சிரிப்பும், அழுகையும் வித்தியாசமாக இருந்தது. மனநிலை பாதிக்கப்பட்டவள் போல அவளது நடவடிக்கை இருந்தது. 
        கடைசி பெஞச் ஆரோக்கியம் அண்ணன், எங்கிருந்தோ ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு ஓடி வந்து,
            “இந்தாம்மா ஏந்திரி... கண்டது கடையதும் வீணாப்போனதும் கோவிலுக்குள் நுழைஞ்சி அழிச்சாட்டியம் பண்ணுது, ஓடு... வெளியே போ”... என்று சொல்லிக் கொண்டே குச்சியால் நெட்டித்தள்ளினார்.
குச்சியால் நெட்டி தள்ளிவிட்டதும் அவள் கெட்ட வார்த்தைகளால் வசை பாட ஆரம்பித்தாள்.

“ஒழுக்கம் கெட்டவ வார்த்தையை பார்... வெளியே ஓடு நாயே”  என்று ஆரோக்கியம் அண்ணன் அவளை விரட்டிக் கொண்டு ஓட பூசை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஒவ்வொருவரும் அவர் அவர் பார்வையில் விமர்சித்துக் கொண்டிருந்தார்கள்.  எல்லோருடைய முடிவும் அவள் கெட்டுப்போனவள் என்பது தான். மனநிலை பாதிக்கப்பட்டவள், கெட்டுப்போனவளா? எதையும் முழுவதும் தெரிந்து கொள்ளாமல் தீர்ப்பளிப்பதுக்கு இவர்கள் யார்? இப்போது பைபிள் சம்பவம் ஒன்றுதான் நினைவுக்கு வந்தது. பாவம் செய்த பெண்ணை கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்று சொல்லும்போது இயேசு கிறிஸ்துவின் சிந்தçனையும் தீர்ப்பும் எப்படி இருந்தது என்று நினைத்தேன். இந்த தீர்ப்புத்தான் இவர்களுக்கும் பொருந்தும் என்பது எனது முடிவு.

மனநிலை பாதிக்கப்பட்டவள் ஏதோ ஒரு நிலையில் தெளிவாக இருக்கிறார்களே அது எப்படி? மனநல  மருத்துவரைத்தான் கேட்க வேண்டும். கெட்ட வார்த்தைகள் பேசுவது என்பது ஒரு மனிதனின் ஒழுக்கம் தொடர்பானதா? அது எப்படி ஒழுக்கத்துக்கான அளவுகோளாக மாறும்? அப்படி பேசாதவர்கள் உத்தமர்களா? சக மனிதரை மனத்தளவில் உணர்வுகளில் நோகடிக்கிற, அவரை சரிநிகராக நடத்தாத எப்படிப்பட்ட  வார்த்தையும் கெட்ட வார்த்தைதான்.

எந்த சொல் நம்மை காயப்படுத்துகிறதோ, நம்மை இழிவுபடுத்துகிறதோ,  கோப்படுத்துகிறதோ அந்த சொல்லை மற்றவர்கள்  மீது நாம் பிரயோகிக்கும் முன் யோசிக்கிறோமா? தயங்குகிறோமா? அந்த சூழ்நிலையில் நாம்  எல்லோரும் தவறு செய்கிறோம் என்பதுதானே பொருள்.

குச்சியால் நெட்டித் தள்ளியதால் கீழே விழுந்த அந்தப் பெண் ரோட்டிலே பிரசவித்துவிட்டாள். சுற்றி நின்று கூட்டம் நல்ல கிறிஸ்துவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சக மனிதர்களின் பச்சாதாபம் அவள்மேல் விழவில்லையா?. தாயின் பெருமையை வாய்கிழிய பேசும் நாம், வாட்ஸ் அப்பில் நூறு கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் நாம், பேஸ்புக்கில் லைக்குக்காக தாயின் புகழ்பாடும் நாம், இந்த தாயை எப்படி ஏற்றுக் கொள்ளாமல் போகிறோம். அந்த குழந்தை இந்த  தாயை போற்றுமா? தூற்றுமா?.
தாய்மை புனிதமானது... அவளின் இந்த நிலைக்கு காரணம் யார்? என்று தெரியாது. அவளின் உணர்வில்லாமல் பெற்ற இந்த குழந்தை என்ன பாவம் செய்தது? சமுதாயத்தில் எதிர் கொள்ளப்போகும் பிரச்சினை எவ்வளவோ? அவளது அழகுதான் அதற்கு காரணம் என்றால் அவள் குற்றமற்றவர், இந்த சமுதாயம் தான் மாற வேண்டும்.

Monday, 27 February 2017

திருடன்- சிறுகதை

திருடன்

- சிறுகதை

- எம். பீட்டர் டேமியன் ஆசிரியர், 
விரகாலூ 

பிப்ரவரி மாதம் துவங்கிவிட்டது. பனிரென்டாம் வகுப்பு அரசுத் தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. சிமுழிது ய்eழிr என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அது ‡ மாணவர்களுக்கு இருக்கிறதோ, இல்லையோ, ஆசிரியர்களுக்கு அதுவும் குறிப்பாக பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு நிறையவே  உண்டு.

லியோ +2 படிக்கும் மாணவன். எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டான். விவசாய கூலிகளான அவனின் பெற்றோர்கள் அவனைப் படிக்க வைக்க படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. பெற்றோர்கள் அவனிடம் படிக்கும்படி கெஞ்சுவார்கள். பள்ளியிலேயே எல்லாவற்றையும் படித்துவிட்டேன் என அவர்களின் கெஞ்சலை அலட்சியப்படுத்துவான். ஒவ்வொரு தேர்விலும் இரண்டு, மூன்று பாடங்களில் பெயிலாவான். பெற்றோரிடம் அடம் பிடித்து அலைபேசி  ஒன்றையும் வாங்கிவிட்டான். எப்போதும் அதிலேயே  முழு கவனத்தையும் செலுத்தி  பொழுதை போக்கினான். விடுமுறை நாட்களில் வீட்டுக்கு சாப்பிட, தூங்குவதற்கு மட்டுந்தான் வருவான். மீதி நேரமெல்லாம் வெளியே  நண்பர்களோடு சேர்ந்து ஊரை சுற்றுவான். இதில் புகைப்பிடிக்கும் பழக்கம் வேறு. தான் கேட்கும்போது பெற்றோர்கள் பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் ஒரே ரகளைதான்.

லியோ படிக்கும் பள்ளியில் அன்று இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. லியோ ¼தேர்வு எழுதும் அறையில், அவனது  வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் மும்முரமாக தேர்வு எழுதிக் கொண்டிருந்தார்கள். ஆசிரியர் குனிந்து ஒவ்வொருவர் விடைத்தாளிலும் கையயாப்பமிட்டுக் கொண்டிருந்தார். லியோ மெதுவாக தனக்கு முன்னால் நன்றாக படிக்கும் அருள்ராஜின் காலை தனது காலால் சுரண்டினான். திரும்பிப் பார்த்த அருள்ராஜிடம் ஒரு மதிப்பெண் மற்றும் இரண்டு மதிப்பெண் வினாக்களுக்குரிய விடைகளை காட்டுமாறு சைகை செய்தான். முடியாது என்று மறுத்தவனை நாக்கை கடித்து  மிரட்டினான். வேறு வழியில்லாமல் அரை மனதாக சம்மதித்த நண்பனை எட்டிப் பார்த்து வேக வேகமாக பதில்களை காப்பியடித்தான். அவ்வப்போது  ஆசிரியரையும் பார்த்துக் கொண்டான். கையயழுத்திட்டு முடித்த ஆசிரியர், நிமிர்ந்து பார்த்த பார்வையில் லியோ காப்பியடிப்பது அப்பட்டமாக தெரிந்தது. மெதுவாக அவனருகில் சென்ற ஆசிரியர் அமைதியாக அவனது விடைத்தாளை எடுத்து வைத்துக் கொண்டு, புதிய விடைத்தாளை கொடுத்து எழுதுமாறு சைகையால் கூறினார். உள்ளுக்குள் வெல வெலத்துப் போன லியோ, நடுங்கியவாறு அதே சமயத்தில் எல்லோருக்கும் முன்பாக தனது மானத்தை கப்பலேற்றாமல் விட்டு விட்டாரே என்று சந்தோ­த்தோடு  தனக்கு தெரிந்ததை அரை குறையாய் எழுதி வைத்தான். ஒரு வழியாக தேர்வு முடிந்தது. மாணவர்கள் வரிசையாக தங்களது விடைத்தாளை ஆசிரியரிடம்  ஒப்படைத்துவிட்டு வெளியே சென்று கொண்டிருந்தனர். லியோவும் தனது விடைத்தாளை ஆசிரியரிடம் தந்துவிட்டு வெளியே செல்ல எத்தனித்தான். ஆசிரியர் மெதுவான குரலில் அவனை மட்டும் சற்று நேரம் காத்திருக்குமாறு கூறினார்.

படபடத்த இதயத்தோடு, பயந்தவாறு ஓர் ஓரமாக நின்றான். எல்லா மாணவர்களும் வெளியே சென்ற பிறகு அவனை அழைத்த ஆசிரியர், “தம்பி, நான் நினைச்சிருந்தா எல்லோர் முன்னாலேயும்  உன் தவறை சுட்டி காட்டியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல் உன்னை தனியாக நான் அழைத்ததற்கு காரணம், மற்ற மாணவர்கள் முன்னால் நீ அவமானபடக்கூடாது, நீ திருந்த வேண்டும் என்பதுதான்.  ஒவ்வொரு தேர்விலும் நீ காப்பியடிக்க முயற்சி செய்கிறாய். ஆசிரியர்கள் பலமுறை உன்னை எச்சரித்தும் நீ தொடர்ந்து அதே தவறை செய்து கொண்டுதான் இருக்கிறாய். திருடர்களில் பலவகை உண்டு. நீயும் ஒரு வகையில் திருடன்தான். சிலபேர் வயிற்றுப் பிழைப்பிற்காக திருடுவார்கள், சிலபேர் ஆடம்பர வாழ்க்கை வாழ திருடுவார்கள். இன்னும் சிலபேர்  உழைக்க மனமின்றி திருடுவார்கள். நீ மூன்றாவது வகை.  கடினமாக உழைத்துப் படிக்க மனமில்லாமல், உன்னுடைய சோம்பேறிதனத்தால் மற்ற மாணவர்களின் உழைப்பைத் திருடி தேர்வு எழுத நினைக்கிறாய். உன் பெற்றோர்களை எனக்கு நன்றாகத் தெரியும். விவசாய கூலிகள். அவர்கள் உழைப்பில் உன் உடம்பை வளர்க்கும் நீ, ஒருவகையில் அவர்கள் உழைப்பை திருடும் திருடன்தான். நம் பள்ளியின் விருதுவாக்கு, “கடின உழைப்பு வெற்றியை விளைவிக்கும்”. அதாவது  உனக்கு தெரியுமா? இதன் பொருளை உணர்ந்திருக்கிறாயா? “உழைக்காதிருப்பின் உண்ணலாகாது” இது பைபிளில் பவுல் அடிகளார் நமக்கு போதித்த போதனை.

“உழைக்கும் வயதில் நீ உறங்க நேரிட்டால்
உறங்கும் வயதில் நீ  உழைக்க நேரிடும்”.
யோசி தம்பி! மற்றவர் உழைப்பை திருடும் திருடனாக இருக்க விரும்புகிறாயா? அல்லது நேர்மையுள்ள மாணவனாக நிமிர்ந்து வாழ விரும்புகிறாயா? மறுபடியும் சொல்கிறேன், உன்னைத் தண்டிக்க விரும்பவில்லை, உன் தவறை திருத்தவே விரும்புகிறேன், நீ போகலாம்” என்று கூறிய ஆசிரியர் வெளியே சென்று வெகுநேரமாகியும் லியோ அதே இடத்தில் சிலையாக நின்றான். கண்களில் கண்ணீர். நான் திருடனில்லை! திறமையானவன். அதை வரும் தேர்வுகளில் நிரூபிப்பேன். கண்ணீரைத் துடைத்தவன் நம்பிக்கையுடன் நட

Friday, 10 February 2017

கதையல்ல நிஜம், அவளும் பெண் தானே

கதையல்ல நிஜம்
அவளும் பெண் தானே

- திருமதி. ஆரோக்கியமேரி

(தான் பார்த்த நிகழ்ச்சியை நம் கண்முன் வைக்கிறார் ஆசிரியை. இதே போன்று நிங்கள் கண்ட உருக்கமான நிகழ்வுகளை எழுதி அனுப்புங்கள்)

கண் துஞ்சாது, கடும் குளிரில் பனிக்காற்று. இதோடு போட்டியிட்டு, இந்திய நாட்டின், மக்களுக்காக இந்திய எல்லையோர பகுதியில் இராணுவ வீரராக, காவல் புரியும் ஆறுமுகம், கம்பீரமான தோற்றம் உடையவர். யாரிடமும் இனிமையாக பழகும் பண்புள்ளம் கொண்டவர். அவருடைய அப்பா, ஒரு கம்பெனியில் பணிபுரிபவர். தன் மகனை நல்லதொரு பள்ளியில் சேர்த்து படிக்க வைத்திருந்தார். பையனும்  நன்றாகத்தான் படித்துக் கொண்டிருந்தான். பள்ளி பருவத்திலே காதலும் மலர ஆரம்பித்து விட்டது. அதே ஊரைச் சேர்ந்த வெங்கடாசலத்தின் மகள் மணிமாலாவும் படித்தாள். இந்த மணிமாலாவுக்கும் அந்த ஆறுமுகத்துக்கும் சின்ன வகுப்பிலே முளைத்த காதல்,  உயர்நிலைப் படிப்பு வரை தொடர்ந்தது. இந்த பையன் இராணுவத்தில் சேர்ந்து சில ஆண்டுகள் கழித்து, தன் தந்தையிடம் தன் காதலை தெரிவிக்கிறான். அவளும் தன் பெற்றோரிடம்  தெரிவிக்கிறாள். இருவருக்கும் திருமணம் நடந்தது. குடும்பம் சந்தோ­மாக, இறக்கைக் கட்டி பறக்க ஆரம்பித்தது. அதன் விளைவாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனந்தப் பூங்காவிலே ஒரு நாள் புயல் வீசத் தொடங்கியது. கணவனின் தொண்டையில் கேன்சர் கட்டி. எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் குணம் பெறவில்லை. இராணுவத்தை விட்டு வெளியேறி, வேறு ஊரில் குடியிருந்தனர். குடும்பம் வறுமையில் வாடியது. தன்னுடைய கணவனையும், குழந்தையையும் விட்டு விட்டு இன்பத்தை நாடி, உல்லாச வாழ்க்கையைத் தேடி, வேறு ஓர் ஆடவனுடன் காதல் பச்சைக்கிளி பறந்து போய் விட்டது. இராணுவ வீரர் அவருடைய அக்கா ஆதரவிலிருந்து கொஞ்ச ஆண்டுகள் கழித்து இறந்து விட்டார். ஆசைநாயகனின் இறப்பைக் கேள்விப்பட்டும், ஆசைநாயகி எட்டிக்கூடப் பார்க்காத நிலை. பெண்களை தெய்வத்திற்கும், பாரத தாய்க்கும் ஒப்பிடுவார்கள். நளவெண்பாவில்  எல்லோரும் படித்திருக்கிறோம்.. தொழுநோயால் உள்ள தன் கணவனை கூடையில் வைத்து தூக்கிச் சென்றாள் நளாயினி என்று இவள் பிறந்ததும் இந்த பாரத மண்ணில் தான். வேறு ஓர் ஆடவனுடன் ஓடிய மணிமாலா பிறந்ததும் இந்த பாரத மண்ணில் தான்.

அதே ஊரில் மற்றொரு குடும்பம். செல்வ செழிப்போடு வாழும் குடும்பத்தில் 3 அண்ணன்கள், 2 அக்காக்கள், கடைக்குட்டியாக பிறந்தவள்தான் கோமதி. கூட பிறந்த எல்லோருக்கும் திருமணம் ஆனவுடதன் கடைக்குட்டி கோமதிக்கும் திருவண்ணாமலையில் வசிக்கும் வேலாயுதத்தின் ஒரே பையன் சுந்தருக்கும் திருமணம் முடிந்தது. வாழ்க்கைச் சக்கரங்கள் இன்பத்தில் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால், குழந்தைச் செல்வம் இல்லை. சில ஆண்டுகள் கழித்து, குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது. கணவன் சுந்தர் விபத்தில் இறந்து விட்டார். மாமனார், மாமியாரை விட்டு விட்டு, தான் பிறந்து வளர்ந்த, தன் வசதியான தன் அப்பா குடும்பத்திற்கே சென்றிருக்கலாம். கோமதியின் பெற்றோர்கள் வேறு ஒரு திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். அவற்றை எல்லாம் வேண்டாமென்று கூறி, மறுமணம் செய்து கொள்ளவில்லை. தன் வயதான மாமனார், மாமியாரை காப்பாற்றுவதிலேயே ஒரே குறிக்கோளாக இருந்தாள் கோமதி.

தினந்தோறும் கூலி வேலைக்குச் (சித்தாள் வேலை) சென்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்தே, அவர்களைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறாள். தன் சுகத்தை மறந்து பெற்ற தாய், தந்தையைப் போல், மாமனார், மாமியாரை காப்பாற்றிக் கொண்டு வருகிறாள். “தன் சுகத்தைத் தேடி ஓடிய மணிமாலாவும் ஒரு பெண் தான். தன் சுகத்தை மறந்து, பெற்ற தாய் தந்தையைப் போல் மாமியாரை மாமனாரை பாதுகாத்துவரும் கோமதியும் ஒரு பெண் தானே”.

“கண் தெரியாத தாய் தந்தையை கூடையில் வைத்து, தூக்கிச் சென்றான் சரவணன் என்று இராமாயணத்தில் படிக்கின்றோம். வயதான மாமனார், மாமியாரை கண்ணின் இமைப்போல் காத்து வருகின்றாள் இந்த கோமதி”.

Saturday, 3 September 2016

சாட்டை - சிறுகதை
- எம். பீட்டர் டேமியன், ஆசிரியர்
விரகாலூர்

பிரகாசம் கடந்த சில நாட்களாகவே மிகவும் உற்சாகத்துடனும், சுறுசுறுப்புடனும் இருந்தார். காரணம், ஒவ்வொரு வருடமும் குடும்பத்தினரோடு அன்னையின் திருவிழாவில் கலந்து கொள்ள நடந்தே வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக செல்வது போல், இந்த வருடமும் செல்ல தயாராகிக் கொண்டு இருந்தார். பிரகாசத்தின் மனைவி ரோசி, 8ஆம் வகுப்பு படிக்கும் மகன் டொனால்டு, 5ஆம் வகுப்பு படிக்கும் மகள் மெல்வினா. இதுதான் அவர்கள் குடும்பம். அவர்கள் வசிக்கும் கிராமத்திலிருந்து வேளை நகருக்கு நடைபயணமாக செல்வதென்றால் மூன்று நாட்கள் ஆகும். இப்படி பாதயாத்திரையாக செல்லும் இவர்கள், குறைந்த பட்சம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கி, விதவிதமாக ருசியாக சமைத்து சாப்பிட்டு விட்டுத்தான் வருவார்கள்.

பிரகாசம் தன்னுடைய வீட்டின் திண்ணையில் அமர்ந்து மூன்று நாட்களுக்கு வேண்டிய மளிகை சாமான்களை பட்டியலிட்டார். யோசித்து, யோசித்து எழுதி, தான் எழுதியதைப் படித்துப் பார்த்து திருப்திபட்டுக் கொண்டார். பின்னர் தன் மனைவியை சப்தம் போட்டு அழைத்தார்.

“ரோசி, ரோசி”
“என்னங்க”, சமையல் அறையிலிருந்து மனைவியின் குரல் கேட்டது.
“வா, வா இந்த  லிஸ்ட கொஞ்சம் பாரு”

ரோசி தன் கணவன் பிரகாசம் எழுதியதை வாசித்துப் பார்த்தாள். பின் தன் கணவரிடம், “எல்லாம் சரியா இருக்குங்க, ஆனா இந்த  மிளகு மட்டும் மிளகு தூளாகவே வாங்கிடுங்க, ஏன்னா அங்க போயி நம்மளால அரைச்சுகிட்டு இருக்க முடியாது” என்றாள்.

பிரகாசம், “அதுசரி! போன தடவ  நாம வேளாங்கண்ணிக்கு போனப்ப மீனும்,  நண்டும் மட்டும்தான் எடுத்து சமைச்சோம். ஆனா இந்த தடவ இறாலும் சேர்த்து வாங்கி சமைச்சிடனும்!”

“ஆமாங்க வரு­த்துக்கு ஒரு தடவ போறோம், நல்லா சமைச்சு ருசியா சாப்பிட்டுட்டு, தினமும் சாயந்தரம் கடலுக்கு போயி குளிச்சிட்டு வருவோம்”.

“சரி, சரி நாளைக்கு ஒருநாள்தான் இடையில இருக்கு. அரிசி மட்டும் 3 நாளைக்கு தேவையானதை  எடுத்துக்கோ! மற்றபடி மளிகை சாமான்கள், விறகு எல்லாம் வழக்கமான இடத்திலேயே வாங்கிக் கொள்வோம். நாளைக்கு நமக்கு, நம்ப பிள்ளைகளுக்கு தேவையான துணிமணியயல்லாம் எடுத்து வச்சிடு! என்ன சரியா?” என்றார் உற்சாகமாக பிரகாசம்.

“சரிங்க!” ரோசி மறுபடியும் சமையறைக்குள் புகுந்தாள்.
இவர்களது  உரையாடலை கவனித்துக் கொண்டிருந்த பிரசாகத்தின் மகன் டொனால்டு மெதுவாக தந்தையிடம் வந்தான்.

“அப்பா” என்று அழைத்தான். மெதுவாக  திரும்பிய பிரகாசம், “என்ன?” என்றார்.
“ஒரு சந்தேகம்பா! நாம வேளாங்கண்ணி கோவிலுக்கு மாதாவ கும்பிட போறோமா? இல்ல விதவிதமா சமைச்சு சாப்பிட போறோமா?”
“என்னடா சொல்ற” உறுமினார் பிரகாசம்.

“பின்ன என்னப்பா, ரெண்டு நாளைக்கு முன்னாடி நான் ஸ்கூலுக்கு போறப்ப உங்ககிட்டே தீனி வாங்க காசு கேட்டேன்! அப்ப நீங்க என்ன சொன்னீங்க? நீ ஸ்கூலுக்கு படிக்க போறியா? இல்ல தீனி வாங்கி தின்றதுக்காக போறியான்னு கேட்டீங்க? உங்களுக்கு ஒரு நியாயம்!  எனக்கொரு நியாயமா? பரீட்சை வந்தால் நம்மை நாமே நல்லா தயாரிச்சுகிட்டு போகனும்னு அறிவுரை சொன்ன நீங்க, இப்ப மாதா கோவிலுக்கு போறதுக்கு என்ன தயாரிப்பு செஞ்சு இருக்கீங்க? விரதம் இருந்தீங்களா? அல்லது ஒறுத்தல், தானம் இது  ஏதாவது செஞ்சு உங்களை நீங்களே தயாரிச்சு இருக்கீங்களா?”

சாட்டையால் அடிவாங்கியதைப் போல பிரகாசம் தலை குனிந்தார்! தவற்றை  உணர்ந்தவர், நிமிர்ந்து மகனைப் பார்த்த பார்வையில் மாற்றம் தெரிந்தது

Tuesday, 26 July 2016

துக்காராம் (சுதந்திர தினத்திற்கான சிறப்பு சிறுகதை)

துக்காராம்

(சுதந்திர தினத்திற்கான சிறப்பு சிறுகதை)
- கேத்தரீன் ஆரோக்கியசாமி, திருச்சி

துக்காராம் .... எங்கள் தெருவில் எல்லோருக்கும் பரிட்சையமான ஒரு ஆன்மா. இவன் யார்? இவன் எங்கிருந்து வந்தான்? இவன் பேசும் மொழி என்ன? இவன் பேர் என்ன? எதுவுமே இங்குள்ள யாருக்கும் தெரியாது. எப்படி இந்த தெருவுக்குள் வந்தான் என்றும் யாருக்கும் தெரியாது.

ஒருநாள் பிச்சைக்காரனைப் போல், தெருக்கோடியிலுள்ள டீக்கடையில் புரியாத மொழியில் அவனது வயிற்றுப்பசியை வெளிப்படுத்தியபோது, கடைசி வீட்டு பங்குஜதம்மா மாமியார் லெஷ்மி பாட்டிதான் ஏதோ எல்லா மொழியும் தெரிந்தவர் போல், அவன் பசிக்கு சாப்பாடு கேட்கிறான் என்பதை உணர்ந்து, அவனை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.

லெஷ்மி பாட்டி அம்மாவாசை அன்று காக்கைக்கு சோறு வெச்சி கூப்பிட்டும் வராததால், தன் கணவரே இவன் உருவில் வந்து சாப்பாடு கேட்கிறார் என்று சந்தோ­த்தோடு அழைத்து வந்து இலைபோட்டு வடை பாயாசத்தோடு, சாப்பாடு போட்டார். அவனுக்கு துக்காராம் என்ற நாமத்தை சூட்டியதும் பாட்டிதான்.

பசியின் உக்கிரம் மொழிகளுக்கு அப்பாற்பட்டது. அதை புரிந்து கொள்ள கருணை உள்ளம் போதும். லெஷ்மி பாட்டி அவர் வீட்டுக்கு அழைத்து வந்ததிலிருந்து, அவன் இந்த தெருவுக்கு சொந்தக்காரனாகிவிட்டான். பாட்டி வழியாக  எல்லோருக்குமே  அவன் துக்காராமாகிவிட்டான்.

தினமும் லெஷ்மி பாட்டி துக்காராமை வீட்டுக்கு அழைத்து வந்து சாப்பிட ஏதாவது கொடுப்பதும், பாட்டிலில் தண்ணீர் கொடுப்பதும் வழக்கமாகிவிட்டது. ஐயர் மாமி வீட்டு காம்பவுண்டு மூலையில் வேப்பமர நிழல்தான் அவனது இருப்பிடம். அழுக்காக அவன் போட்டிருந்த வெள்ளை ஜிப்பாவும், சட்டையும் அவன் வட நாட்டுக்காரன் என்பதை உறுதிபடுத்தினாலும், அவன் பேசும் மொழி இந்தியோ, குஜராத்தியோ, மராத்தியோ இல்லை. புரியாத மொழி ஒரியாவாக இருக்கவேண்டும் என்பது ஐயர் மாமாவோட கணிப்பு. முதலில் துக்காராம், தன் வீட்டு காம்பவுண்டு ஓரத்தில் படுக்கக்கூடாது என்று சொன்னவர், என்ன நினைத்தாரோ பழைய பாய் ஒன்றை அவனுக்கு கொடுத்து படுக்க உதவினார்.

இப்போது, லெஷ்மி பாட்டி ஒரு பழைய எவர்சில்வர் தட்டை கொடுத்து சாப்பிட வெச்சிக்கோ என்று சொல்ல, அதை புரிந்தவனாக, அவன் சொன்ன பதில் பாட்டிக்கு மட்டும் புரியும். தினமும் மருமகளுடன் மல்லுக்கு நிக்கும் பாட்டி, இவனிடம் மட்டும் அதிகமான பாசத்தை காட்டுவது புரியாத புதிர்.

டீக்கடை நாயர், இவனுக்கு தினமும் பேப்பர் கப்பில் ஒரு டீ குடுத்துவிடுவார். பதிலுக்கு அவன் சொல்லும் நன்றி புரியாவிட்டாலும், புன்னகையை பதிலாக்கி தன் வேலையில் மூழ்கிவிடுவார்.
மேரி டீச்சரும் தன் பங்குக்கு, வீட்டில் மிச்சமாகும் டிபன், சாப்பாட்டை கொடுக்க தவறுவதில்லை. கிறிஸ்மஸ் வந்தபோது மேரியும், அவள் கணவர் தியோடரும், அவனுக்கு புது ஜிப்பாவும், சட்டையும் வாங்கி கொடுத்து போட சொன்னபோது, அவனுக்கு பிடித்த உடை இதுதான் போல. ஒருவேளை இவன் சேட்டாக இருப்பானோ என்று டீச்சர் சொன்னபோது எல்லோருக்கும் ஒருமித்த கருத்து இருந்தது உண்மை. இவன் ஒரு கிறிஸ்துவனா இருக்கக்கூடாதா என்று மேரி டீச்சருக்கு மனசுக்குள் ஒரு ஆசை.

அவன் யாராக இருப்பான் என்ற ஆவல் எல்லோர் மனதிலும் இருந்தது.  ஜங்­னில் டிபன் கடை நடத்திவரும் ஜெய்ப்பூர் இந்திக்காரர்களுக்கும் துக்காராம் என்ன மொழி பேசுறாருன்னு புரியலன்னு சொல்லிட்டாங்க.

காலையில் கோலமாவு வித்துக்கிட்டுப் போகும் கந்தன், துக்காராமோட நண்பன். அவன் கொடுக்கும் கோலப்பொடியில் துக்காராம் வட்ட, வட்டமா போடும் கோலம் ரங்கோலியா? என்ற ஆராய்ச்சியே உண்டு. கோலம் போட்டுவிட்டு லெஷ்மி பாட்டியிடம் காட்டி அவன் சொல்லும் விளக்கம், அவர்களுக்கு மட்டுமே புரியும்.

தள்ளு வண்டியில் வாழைப்பழம் விக்கும் கணேசனுக்கு துக்காராம் மீது ஒரு பரிவு. தினமும் அவனுக்கு பழம் கொடுக்காமல் போவதே இல்லை.  லெஷ்மி பாட்டி அழுக்கு மூட்டையாகத் திரியும் துக்காராம் குளிக்க தன் வீட்டுக்கேணியிலிருந்து தண்ணீர் இறைத்து குளிக்க சொன்னதால் பாட்டிக்கும், பேரன் ரவிக்கும் சண்டை. எல்லோரையும் வீட்டில் குளிக்க அனுமதிக்க முடியாது என்பது அவன் வாதம். ஆனால், பாட்டி பிடிவாதமாக இது என் வீடு. என் இஷ்டப்படிதான் எல்லாம் நடக்கனும். வேற ஒருத்தருக்கும் உரிமையில்லைன்னு சொல்லி அடக்கிட்டாங்க. துக்காராம் குளிச்சவுடன் விபூதி, குங்குமம் கொடுத்து அவன் ஒரு இந்துவாக மாற்றி பிள்ளையார் கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போய் சாமி கும்பிட வைத்தார்.

ரம்ஜான் நோன்பு ஆரம்பம் முதல் துக்காராமுக்கு நோம்பு கஞ்சியும், சமோசாவும் கொடுத்து உபசரித்தார் ரஹீம்பாய். ரம்ஜான் அன்று ஒரு குல்லா, கைலி, சட்டை குடுத்து போடச்செய்து மசூதிக்கு அழைத்துச்  சென்றார் ரஹீம்பாய். முஸ்லீம் போன்ற தோற்றத்தில் துள்ளி குதித்து ஓடிக்கொண்டிருந்தான் துக்காராம். அவனை ஒரு முஸ்லீமாக மாற்றுவதில், ரஹீம்பாய் முயன்று கொண்டிருந்தார்.

எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவன்தான் உலகில் வாழ்கிறான். சிரிக்க நல்ல உள்ளம் தேவை. எப்போதும் சிரித்துக் கொண்டும், உற்சாகத்துடனும் காணப்படும் துக்காராம், ஒரு மகிழ்ச்சியான மனிதன். நிறைவுள்ள குறையில்லா மனிதன். அவன் எதற்கும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவனது கடந்த காலம் அவனுக்கு தெரியுமா? எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியுமா? ஆனால், நிகழ்காலத்தில் நிறைவுள்ள முழு மனிதனாக வாழ்கிறான். தெருக்கோடியில் வாழ்ந்தாலும், ராஜபோக வாழ்க்கை அது. இந்த தெருவுக்கே அவன் ஒரு காவலாளி.

இன்று என்ன ஆச்சி? துக்காராமுக்கு தலையில் சின்ன கதர் குல்லா. கதர்சட்டை, கதர்வேஷ்டி. அவன் சட்டையில் தேசிய கொடியை குத்தியிருக்கிறான். ஓ! இன்று சுதந்திர தினம்.  தெருவில் உள்ள எல்லோருக்கும் சல்யூட் அடித்துவிட்டு ஜெய்ஹிந்த் என்று தெளிவாக சொல்கிறானே, இவன் யார்? இந்துவா? லெஷ்மி பாட்டிக்கு சொந்தக்காரனா? முஸ்லீமா? ரஹீம் பாயோட உறவா? கிறிஸ்டீனா? மேரி டீச்சரோடு பந்தமா?
துக்காராம் ஒரு இந்தியன்! சுதந்திர இந்தியாவின் குடிமகன். ஜாதி, மத, மொழி, இனத்திற்கு அப்பாற்பட்டவன். சுதந்திர இந்திய நாட்டின் குடிமகன்! எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதை உணர்த்தும் பாரத தேவியின் புதல்வன். அதில் தான் அவனுக்கு பெருமிதம்.

நான் யார்? என்பதை சொல்லாமல், சொல்லும் அவனது மொழி புதுவிதம், வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டும் பாரத தேவியின் தலைமகன் நான் என்பதை அவனது மிடுக்கான நடையும், சுதந்திர இந்திய கொடியை பெருமையுடன் பார்த்துக் கொண்டு, அவன் எல்லோருக்கும் அடிக்கும் சல்யூட், அவன் யார் என்பதை புரியவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முன்னோர்களுக்கு கடுமையான நிர்பந்தம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அந்த நிபந்தனைகளை எல்லாம் தடுத்துவிட்டனர்.
இந்தியாவில் பல மதங்கள், ஜாதிகள், மொழிகள், இனங்கள் உள்ளன. இருந்தாலும் நம்மை எல்லாம் ஒன்றுபடுத்தி வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வது என்னவென்றால் மதச்சார்பற்ற கொள்கைதான். அனைவரையும் சமமாக மதிக்கும் தன்மையும் உள்ளது. இல்லையயன்றால் நமது நாடு நிலைத்து நிற்க முடியாது. சீனாவில் 125 கோடி பேர் உள்ளனர். இவர்களில் 96 கதவிகிதம் பேர் ஒரே குரூப்பைச் சேர்ந்தவர்கள். ஆனால் இந்தியாவில் 105 கோடி பேர் உள்ளனர். இங்கு பல மதங்கள், ஜாதிகள் பண்பாடு குரூப்கள் உள்ளன. இருந்தாலும் நம்மை  எல்லாம் ஒன்றுபடுத்தி முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வது மதச்சார்பற்ற கொள்கையும் அனைவரையும் மதிக்கும் தன்மையும்தான். இந்தப் பாதையை தான் அசோகர், அக்பர் போன்ற பேரரசர்கள் காட்டினர்.

இந்த கிராமத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக  உள்ளனர். இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும் சிறுபான்மை மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை பெரும்பான்மையினருக்கு உள்ளது. சிறுபான்மை மக்கள் தாங்கள் பாதுகாப்பாக மரியாதையுடன் வாழ்வதாக  உணரவேண்டும். அவர்களை துன்புறுத்தக் கூடாது. சிறுபான்மையினரை மதிப்பது என்பது நாகரீக சமூகத்தின் அடையாளம் ஆகும் என்று அத்தீர்ப்பு கூறுகிறது.

Saturday, 2 July 2016

காமமும், காதலும், சிறுகதை

காமமும், காதலும் -  சிறுகதை

- திருமதி. கேத்ரின் ஆசா,
திருச்சி.

(திருமதி. கேத்தரீன் ஆசா அவர்களுக்கு, திருவரங்கம் இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு ‘இயற்றமிழ் செம்மணி’ என்ற விருதினை சென்ற 31 / 5 / 2016 அன்று வழங்கி பாராட்டியிருக்கிறது. அன்னையின் அருட்சுடரில் கதைகள் , கட்டுரைகள் எழுதி சிறப்பிக்கும் கேத்தரீன் ஆசா அவர்களை அன்னையின் அருட்சுடர் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறது),

இரவு மணி 12. காலையில் வேலை தேடி போன கணவன் சதீஷ் இரவு 12 மணி வரை காணவில்லை என்றபோது மஞ்சக்கு நெஞ்சுக்குள் ஏதோ அடைப்பது போல இருந்தது. வரநேரம் ஆகுமென்றால், போன் செய்திருக்கலாமே. போனும் செய்யாமல், ஆளும் வராமல் இருந்தால், ஒருவேளை, அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்குமோ? ஆக்சிடென்டில் மாட்டியிருப்பாரோ? பலவாறு மனதை போட்டு குழப்பிக் கொண்டிருந்தாள் மஞ்சு. கொஞ்ச நேரம் பொறுத்துதிருந்து பார்ப்போம். அவன் செல்லுக்கு போன் செய்தால் சுவிட்ச் ஆஃப் என்று வருகிறது. ஆக்சிடென்ட் ஏதும் நடந்திருந்தால் ஆஸ்பத்திரியிலிருந்து அவன் செல்லிலிலிருந்து எனது பெயரை கண்டுபிடித்து போன் செய்திருப்பார்களே! என் நம்பரை ஹனி என்றுதானே சேவ் செய்திருக்கிறான்.

மணி 4 ஆகிவிட்டது. இன்னும் வரவில்லை. ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று மனசு சொல்லுதே. சதீ´ன் தேனான வார்த்தைகளை நம்பி  நகை, பணத்தோடு வீட்டை விட்டு இவனோடு ஓடி வந்தது, எவ்வளவு தப்பு என்று இப்போது புரிகிறது. அப்போது காதல் கண்ணை மறைத்துவிட்டதே. ஐம்பது பவுன் நகையும் போய், பணம் ஒரு இலட்சம் அப்பா பீரோவில் இருந்து எடுத்து வந்ததும் தீர்ந்து, இப்போது செலவுக்கு கையில் காசில்லாத போது சதீசும் என்னைவிட்டு ஓடிவிட்டான் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. பத்தாதத்துக்கு மூன்று மாசம் கர்ப்பம் வேற. ஐயோ! கடவுளே, நான் இப்ப என்ன செய்வேன். கடந்த ஒரு வாரமாவே சதிசோட போக்கு சரியில்லை. வேளை கிடைக்காத விரக்தியில் அப்படி செயல்படுகிறான் என்று நான் நினைத்தது எவ்வளவு தப்பு. அறிமுகம் இல்லாத இந்த ஊரில் என்ன செய்வது? எல்லாம் என்னோட அறியாமை மட்டும் இல்ல, என் அப்பாவும், அம்மாவும்தான் காரணம் என்று பழியை அவர்கள் மேல் போடத் தோன்றியது.

அப்பா அலுவலகத்தில் அவருடன் வேலை பார்க்கும் பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை தெரிந்து கொண்டு அப்பாவிடம் சண்டை போட்டுக் கொண்டு, அம்மா வீட்டை விட்டு போனது மட்டும் இல்லாமல், மின் வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் அம்மா, சென்னைக்குப் போனதும் எங்களை, என் அண்ணனையும், என்னையும் கவனிக்க ஆளில்லாமல் வாடிப்போனோம்.

அப்பா தனது புது உறவுடன் சந்தோ­மாக ஊர் சுற்ற வீட்டின் நிலைமை தலைகீழாகனது. எங்கள் வீட்டுக்கு பேப்பர் போடும் சதீ´டம் எனக்கு ஈர்ப்பு வந்ததும், அவன் என் மேல் காட்டிய பரிவும், அன்பும் என்னை ஏமாற வைத்தது. கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு அவனுடன் வாழலாம் என்று முடிவெடுத்தபோது என்னை தடுக்கவோ அறிவுரை சொல்லவோ யாருமே இல்லாததால், தன்னிச்çயாக நானே முடிவெடுத்து, வீட்டிலுள்ள பணம், நகைகளை எடுத்துக் கொண்டு கேரளா சென்று புதுவாழ்க்கை தொடங்கலாம் என்ற முடிவு  இப்போது பாதியிலேயே அறுந்து போனபோது என்னை தேற்ற யாரும் இல்லை.

நேரம் போய்க் கொண்டிருக்கிறது. அப்பேது என்ன செய்யலாம் என்று எனது மனம் குழம்பியது. அண்ணன் ஆனந்துக்கு போன் செய்து உதவி கேட்கலாம் என்றால், அவனது செல் நம்பரும் மாறியிருக்கிறது. அவன் எனக்கு முன்பே, டாக்டரான அவனுடன் வேலை பார்க்கும் முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்து கொண்டு போய்விட்டான். இப்பேது என்ன செய்வது? என்ற சிந்தனையோடு எழுந்தேன்.

காலையிலிருந்து சாப்பிடாமல் சிந்தித்துக் கொண்டெ இருந்ததால் களைப்பாக இருந்தது. இன்னொரு உயிருக்கும் நான் உணவூட்டும் நிலையில் இருந்ததால் என் நிலைமை இன்னும் மோசமானதால் என் கையிலுள்ள பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே சென்று சாப்பிடலாம் என்று எழுந்து நடந்தேன். உலகமே சுத்துவதுபோல் ஓர் உணர்வு, நான் கண் விழித்துப் பார்க்கும்போது ஒரு மருத்துவமனையின் கட்டிலில் படுத்திருந்தேன். 

எனக்கு என்ன நடந்தது, நான் கண்விழித்தபோது என்னருகில் நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் பார்வதிசேச்சி அமர்ந்திருந்தாள். அவர்களை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.
‘என்ன மோளே! சுகமில்லையோ! எங்கே நிண்ட பாரியான் சதீஷ்’ அவர்கள் கேட்கும் முன் என்னை அறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது. என் நிலைமை நான் சொல்லாமலே அவர்களுக்கு புரிந்து இருக்கும். வயதானவரின் அனுபவ அறிவு என் கதையை சொல்லாமலே புரிய வைத்துவிட்டது போலும். ‘கரிய வேண்டாம் மோளே, யானே சதீஷ்யை பற்றி உன்னிடம் சொல்லனும்ன்னு நினைச்சது. நேற்றே அவன் வீட்டு அட்வான்ஸ் பணம் 50 ஆயிரத்தையும் கொடுக்கச் சொல்லி கேட்டுது. வீடு காலி செய்யப் போறதா சொன்னது. நான் இன்று வீடு காலி செய்த பின்னே கொடுக்கலாம் என்று வீட்டை பார்த்து போக வந்தப்ப நீ கீழே விழுந்து கிடந்ததை பார்த்து ஆஸ்பத்திரியில சேர்த்தது’.

‘மேலும் ஒரு துக்க விசயம் மோளே! டாக்டரம்மா உன்னோட குழந்தை கரைஞ்சிப் போயிட்டதா சொன்னா! சோகம் வேண்டாம் எல்லாம் நல்லதுக்கே. பெரிய டாக்டர் இப்பவரும்ன்னு சொல்லி இருக்க, அவர் வந்து உன்னோட தேக சுகம் பற்றி சொன்னபிறகு போகலாம்’.

“சரி சேச்சி, நான் செஞ்ச தப்புக்கு இது சரியான தண்டனை”. “இதோ பெரிய டாக்டர் வர்றார்”. பெரிய டாக்டராக வருவது தனது அண்ணன் ஆனந்த் என்பதை மஞ்சுவால் நம்ப முடியவில்லை. இப்படி ஒரு நிலைமையில் தன் தங்கை மஞ்சுவை பார்ப்போம் என்று ஆனந்தும் நினைக்கவில்லை.

“அண்ணே! என்னை மன்னிச்சிருங்க. தப்புக்கு கடவுள் தண்டனை குடுத்துட்டாருண்ணே” மஞ்சு விம்பினாள். “மஞ்சு நான் எடுத்த முடிவும் தப்பா போயிடுச்சி. என்னை மதம் மாறச் சொல்லி அவளது குடும்பம், கட்டாயப்படுத்திய போதுகூட நான் கலங்கவில்லை. நம் குடும்பத்தைப் பற்றி தரக்குறைவாகப் பேசி மனச நோகடிச்சதை என்னால் தாங்கிக்க முடியல. நிம்மதி இல்லா வாழ்க்கை, அவளை பிரிஞ்சி வந்துட்டேன். என் மருத்துவ கல்லூரித் தோழனை சந்திக்க நேர்ந்தது. அவன் பொறுப்பை எங்கிட்ட ஒப்படைச்சிட்டு அவன் லண்டன் போயிட்டான். குடும்பத்தோடு அங்கேயே செட்டில் ஆயிட்டான். அவன் அவனோட அப்பா, அம்மா, அக்கா, தங்கையோட சந்தோ­மாக, சமாதானமா இருக்கிறதை நான் பார்த்தப்ப என்னோட குற்ற உணர்வு குடும்பத்தை விட்டு பிரிஞ்சு வந்தது தப்புன்னு புரிஞ்சிது. நம்ப குடும்பத்திலேயும் பொறுமையும், சகிப்புத்தன்மையும் ஒத்துமையும் இருந்திருந்தா நாமும் இப்படி பிரிஞ்சி கஷ்டப்பட்டிருக்க மாட்டோம்”.

“ஆமாம் அண்ணே! அப்பா செய்த தப்பை மன்னிச்சி குடும்ப ஒற்றுமைதான் முக்கியம், பிள்ளைகளோட எதிர்காலம் தான் முக்கியம்ன்னு அம்மா நினைச்சிருந்தா இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது”.

“ஆமாம் மஞ்சு! இதுல எல்லாருடைய தப்பும் இருக்கு”. “அப்பாவை பார்த்தீங்களா அண்ணே?” “சொல்ல மறந்துட்டேனே, அப்பா இந்த ஆஸ்பத்திரியிலத்தான் இருக்கார். பத்து நாளைக்கு முன்னாடி அப்பாவுக்கு ஸ்ட்ரோக் வந்திருச்சி. அப்பவோட இருந்த பெண் அப்பாவை விட்டுட்டு ஓடிருச்சி. அப்பா ஆபீஸ்லேயிருந்து எனக்கு போன் செஞ்சாங்க. நான் போய் அப்பாவை அழைச்சிக்குட்டு வந்து இந்த ஆஸ்பத்திரியிலேத் தான் ட்ரீட்மென்ட் குடுத்துக்குக்கிட்டு இருக்கேன்”.

“அம்மாவுக்கு தெரியுமா?” “அம்மாவுக்கும் அவுங்க ஆபீஸ் மூலமாக தகவல் குடுத்தேன். அவுங்களும் பழசை மறந்திட்டு இங்க வந்து அப்பாவை கூடயிருந்து பார்த்துக்கிறாங்க”. “அப்படியா! கேட்கவே சந்தோ­மா இருக்கு, உடனே நான் அம்மாவையும், அப்பாவையும் பார்க்கனும்”. மஞ்சு சந்தோ­த்தில் கட்டிலிலிருந்து குதிக்க, “மஞ்சு! மெதுவா வா அவசரம் இல்ல”.

“சரி அண்ணே!” “சேச்சி உங்களுக்கு ரொம்ப நன்றி. உங்க மூலமாகத்தான் என் குடும்பத்தோட சேர்ற பாக்கியம் கிடைச்சது”. “சரி மோளே! இனிமே எந்த தப்பும் செய்யாம குடும்பத்தோட சந்தோ­மாக, சமாதானமாக ஜீவிக்கனும்”.

ஆனந்தும், மஞ்சுவும், அப்பாவையும், அம்மாவையும் பார்க்க ஐசியு வார்டுக்குள் போனார்கள். வாழ்வில் காமத்திற்கும், காதலுக்கும் உள்ள பொருளினை குடும்பமே உணர்ந்துக் கொண்டது. இனி திருந்திய இந்த குடும்பத்திலே சதீசும், பானுவும் நுழைய முடியாது. இவர்கள் கூடி ஒற்றுமையாக எடுக்கும் எந்த முடிவும் தெளிவானதாகவும், அன்பானதாகவும் இருக்கும்.
“வண்ணங்களில் இல்லை வாழ்க்கை, எண்ணங்களில் தான் இருக்கிறது, ஒற்றுமையில் தான் உயர்கிறது”.

மகளின் ஆசை - சிறுகதை

மகளின் ஆசை - சிறுகதை

மகிழம்பாடி. அந்தோணிசாமி

“ஜெயராணி! இங்க வா! வந்து உட்கார்!”

“ஏம்ப்பா?”

“ஒண்ணுமில்லேம்மா! எல்லாம் உன் சமாச்சாரமாத்தான்!”

“அதென்னப்பா என் சமாச்சாரம்?”

“வேற ஒண்ணுமில்லேம்மா! உன்ன ரெண்டு எடத்துலேயிருந்து பொண்ணு பாத்திட்டுப் போனாங்க. பொண்ணு எங்களுக்குப் புடிச்சிப் போயிருக்கு. ஒங்க அபிப்ராயம் என்னான்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க.

நம்பளும் கலந்து பேசி முடிவை அவுங்க கிட்ட சொன்னா தானே நல்லாயிருக்கும்” என்று கணவனின் கருத்தை ஆமோதித்துப் பேசினாள் ஜெயராணியின் தாயார்.

“கல்லூர்லேயிருந்து வந்தவங்களுக்கு ஒரே பையன். அரசாங்க வேலை. ஆளும் கதிராட்டம் செவத்த பையனா இருக்கான். சொத்து சுகம் நிறைய. வேற பிக்கல் பிடுங்கள், நாத்தி, நங்கைன்னு யாருமில்ல. வீடும் சொந்த வீடு. நல்லூர்லேயிருந்தும் வந்தாங்க. அவுங்களுக்கு ஆணொன்னு, பொண்னொன்னு. பையன் மாநிறம். பிரைவேட் கம்பெனியில வேலை செய்யிறான். ஆன்..னா.. மாமனார் இல்ல. மாமியார் மட்டும் இருக்காங்க. சுமாரான வீடு என்று இடையிடையே அடியயடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள் தாயார்.

“உன் முடிவுன்னு ஒண்ணு இருக்குல்ல. அத மீறி நாங்க செய்திட முடியுமா? அதா..ன்” என்று இழுத்தார் தந்தை.
“அப்பா! உங்க மனசு கோணுற மாதிரி நான் என்னைக்கும் நடக்க மாட்டேன். ஆனா.. என் மனசுல இருக்குறத நான் சொல்லிடுறேம்ப்பா”.

“சொல்லும்மா! அதானே கேக்குறோம். உன் முடிவு எதுவா இருந்தாலும் அத நாங்க நிறைவேத்தி வைக்கிறோம்”.

“பொறந்த பொண்ணுங்க புகுந்த வீட்ல வாழ்றதுதானேப்பா பெருமை. அம்மா இத எனக்கு அடிக்கடி ஞாபகப்படுத்துவாங்க. எனக்கு ஒரே ஒரு ஆசைதான். எனக்கு வரப்போற புரு­ன் நல்ல குடும்பத்துக்காரனா, கைநிறைய சம்பாதிக்கிறவனா எதிர்ப்பாக்குறது நல்லதுதான்”. 

“ஆனா... அதவிட நான் போற இடத்துல கோயில் இருக்குமாப்பா... நம்ப ஊருல மாதிரி நான் தினந்தோறும் கோயிலுக்குப் போயி... திருப்பலி கண்டு தினந்தோறும் கடவுளை என் உள்ளத்துல வாங்குனும்ப்பா. நான் புகுந்த எடத்துல சொத்து சுகம் இருக்கிறதவிட வசதிக்கார குடும்பமா இருக்கிறதவிட, நான் அன்னாடம் கோயில் முகத்துல விழிக்க எனக்கு உதவி செஞ்சா போதும். மீதி வசதி வாய்ப்பெல்லாம் எனக்குத் தன்னால வந்துடும்”.

“நீங்க என்னை கேணியில தள்ளிவிட மாட்டீங்க. அம்மா, அப்பா பாத்து நீங்க யாரை கட்டிக்கச் சொன்னாலும் கட்டிக்குவேன். ஆனா .... எனக்குள்ள இந்த ஒரு ஆசையை மட்டும் எனக்கு நிறைவேத்தி வைங்க”. அழாக்குறையாகக் கேட்டாள் அந்த மகள்.

“முடிவை நான் சொல்றேம்மா! உனக்கேத்த புரு­ன் நல்லூர்லதான் இருக்கான். நானும், உங்களுக்குத் தெரியாம அங்க போயி எல்லாம் விசாரிச்சிட்டு வந்துட்டேன்”.  “அங்கதான் நம்ப ஊருமாதிரி கோயில் குளமெல்லாம் இருக்கு. உன் மனசுக்கேத்த இடம் அதுதாம்மா! உடனே நல்லூர்ல இருக்குறவங்களுக்கு நல்ல முடிவா சொல்லி அனுப்புங்க. இதான் தங்கச்சிக்கேத்த முடிவு” என்று தீர்க்கமாய்ச் சொன்னான் ஜெயராணியின் மூத்த சகோதரன் ராஜ்குமார்.

Monday, 16 May 2016

குழந்தைக்காக ... (சிறுகதை)

குழந்தைக்காக ... (சிறுகதை)

அது வசதி படைத்த குடும்பம். கணவர் கணிணி அலுவலகத்தில் பணிசெய்கிறார். மாதம் மூன்று லகரம் சம்பளம், மனைவி இரயில்வேயில் வேலை. மாதம் ஐம்பதாயிரம் சம்பளம். பெரிய மாளிகைப்  போன்ற வீடு. எந்த  குறையும் இல்லை. 

ஆனால் ... 
குழந்தையில்லா பெரிய குறை. திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. குழந்தைக்காக, மருத்துவர், திருத்தலங்கள் இப்படி 
சந்தித்து விட்டு, குழந்தை ஒன்றை தத்தெடுக்கலாம் என்று முடிவு செய்தனர். இப்போது குழந்தைகளை தத்தெடுப்பதும் பெரிய சாதனையாகிவிட்டது. வீட்டிற்கு ஒன்றிரண்டு குழந்தைகள் என கடடுப்பாடாகி விட்டது. பல இடங்களில், பல நிறுவனங்களில், பல குடும்பங்களில் தத்தெடுக்க குழந்தையைத் தேடினார்கள். பயனில்லை, பலநாள்கள் மன உழைச்சலுக்கு ஆளானார்கள். பலநாள்கள் செபித்தார்கள். பிறகு ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

ஒரு குடும்பத்தில் எட்டு பெண் பிள்ளைகள். தகப்பன் இறந்து விட்டான். அதில் ஒரு பிள்ளையை தத்தெடுக்கக் கேட்டார்கள். ‘பிச்சையயடுத்தாவது என்பிள்ளைகளை காப்பாற்றுவேன். பிள்ளைகளை தத்தெடுக்கக் கொடுக்க மாட்டேன்’ என்று மறுத்ததுவிட்டாள் தாய். ‘உங்கள் குடும்பமே என் வீட்டிற்கு வாருங்கள். எங்களோடு வாழுங்கள்’ என்றார்கள் தத்தெடுக்க விரும்பியவர்கள். ‘நீங்கள் வேண்டுமென்றால் எங்களோடு தங்கி வாழுங்கள், எட்டு பிள்ளைகளோடு சேர்ந்து வாழலாம்’ என்றாள்  

அந்தத்தாய். கணவனும், மனைவியும் மாறி மாறி அந்த ஏழை குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதாக முடிவெடுத்தனர். வாழ்ந்தும் பார்த்தனர். வாழ்க்கை எவ்வளவு இனியது என்று புரிந்து கொண்டனர்.

Tuesday, 2 February 2016

இது கோயம்புத்தூரில் நடந்த ஓர் உண்மை சம்பவம் ......

இது கோயம்புத்தூரில் நடந்த ஓர் உண்மை சம்பவம் ......

ஒரு பெரிய வணிக அங்காடியில், ஒரு ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் பணம் செலுத்துபவரிடம் உரையாடிக் கொண்டிருந்தான். பணம் பெறுபவர் உன்னிடம் இந்த பொம்மை வாங்குவதற்குத் தேவையான பணம் இல்லை என்று சொன்னார். அந்த சிறுவன் இந்த பணம் போதாதா? என்று வினவினான். அவர் மீண்டும் பணத்தை எண்ணி விட்டு, ‘இல்லடா செல்லம் குறைவாக உள்ளது’ என்றார். அந்த சிறுவன் அந்த பொம்மையை கையிலேயே பிடித்திருந்தான்.
நான் அந்த சிறுவனிடம் அந்த பொம்மையை யாருக்கு தரப் போகிறாய்? என்று கேட்டேன். அதற்கு அந்த சிறுவன், அது தன் தங்கைக்கு ரொம்ப பிடித்ததாகவும், அவள் பிறந்தநாள் அன்று அவளுக்கு பரிசளிக்க போவதாகவும் கூறினான். மேலும் அவன் பேச தொடர்ந்தபோது என் இதயம் நின்றுவிட்டது போல உணர்ந்தேன். அவன் கூறியது இந்த பொம்மையை என் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் என் தங்கையிடம் கொடுத்து விடுவார்கள். என் தங்கை கடவுளிடம் சென்று விட்டாள். என் அம்மாவும் கடவுளிடம் செல்ல இருக்கிறார்.
நான் என் தந்தையிடம் இந்த பொம்மை வாங்கி வரும் வரை அம்மா கடவுளிடம் செல்ல வேண்டாம் என்று கூறி விட்டுவந்தேன். எனக்கு என் தங்கையும், அம்மாவும் ரொம்ப பிடிக்கும். அம்மா கடவுளிடம் செல்லும் நேரம் வந்துவிட்டதாக கூறினான்.
மேலும் அவன் கையில் அவனுடைய புகைப்படம் ஒன்றை வைத்து இருந்தான். அதை தன் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் தன் தங்கையிடம் அதை கொடுப்பார்கள். அதனால் அவள் தன்னை மறக்காமல் இருப்பாள் என்றும் கூறினான்.
நான், என்னிடம் இருந்த பணத்தை அவனுக்கு தெரியமால் அவன் வைத்திருந்த பணத்துடன் சேர்த்து மீண்டும் எண்ணி பார்க்கலாம் என்று சொன்னேன். இவனும் இசைந்தான். நாங்கள் எண்ணிய போது போதிய பணத்திற்கு மேல் இருந்தது. அவன் கடவுளுக்கு நன்றி கூறினான்.
நான் கனத்த மனதுடன் அங்கிருந்து நகர்ந்தேன். பின்னர் உள்ளூர் தினசரி பத்திரிக்கை ஒன்றில் படித்தது என்நினைவிற்கு வந்தது. மகிழ்வுந்தில் பயணம் செய்த அம்மா மற்றும் மகள் மீது ஒரு திறந்த சரக்கு வண்டி மோதி விபத்துக்குள்ளானது என்றும், அதன் ஓட்டுனர் குடித்து இருந்ததாலேயே விபத்து நிகழ்ந்தது என்றும் வந்த செய்தி, மேலும் மகள் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும், தாய் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவர் சாகும் நிலையில் உள்ளார் என்றும் வந்த அந்த செய்தி இந்த சிறுவன் அவர்கள் மகனா? என்ற சந்தேகத்தை அளித்தது.
இரண்டு நாள் கழித்து தினசரி பத்திரிக்கையில் அந்த செய்தி, விபத்துக்குள்ளான பெண் இறந்து விட்டாள் என்று, நான் அவரது இறுதி சடங்கிற்கு சென்றேன். அச்சிறுவனின் அம்மா சடலமாக கிடந்தாள். கையில் சிறுவனின் புகைப்படமும், அந்த பொம்மையும் இருந்தன. அங்கிருந்து கனத்த இதயத்துடன் திரும்பினேன். அந்த சிறுவன் தன் அம்மாவிடமும், தங்கையிடமும் வைத்திருந்த அன்பும், பாசமும் அப்படியே உள்ளது. ஆனால் ஒரு குடிகாரன் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஒரு நொடியில் அந்த குடும்பம் சிதைந்து விட்டது.
ஆதாரம் : இணையதளம்

Sunday, 13 December 2015

குற்றம் புரிந்தவன், சிறுகதை

சிறுகதை
குற்றம் புரிந்தவன்
- மகிழம்பாடி அந்தோணிசாமி

அந்த வீட்டில் ஒரே கூட்டம். எல்லாரும் அழுதுகொண்டிருந்தனர். அந்த வீட்டின் சொந்தக்காரர் உலகநாதன் சற்று நேரத்திற்கு முன்புதான் இறந்து போனார். அவசர அவசரமாக அடுத்தடுத்த வேலைகளில் அங்கிருந்தவர்கள் ஈடுபடத் தொடங்கினார். கட்டிலில் கிடந்த அந்த சடலத்தை சரிபடுத்தும் போது, தலையணையின் உறை உள்ளிருந்து ஒரு கடித கவர் கீழே விழுந்தது. அது என்னவாக இருக்கும் என்று அதனைப் பிரித்துப் படிக்கும் பொழுது, அந்தக் கடிதத்தில் இவ்வாறு எழுதியிருந்தது.
‘நோயுடன் போராடும் நான் ஒருவேளை சாக நேர்ந்தால் அதற்காக யாரும் அழக்கூடாது. நான் சாக வேண்டியவந்தான். இந்த நோய் கடவுள் எனக்குக் கொடுத்த தண்டனை. அந்தத் தண்டனையை நான் வேண்டியவந்தான். இந்த நோய் கடவுள் எனக்குக் கொடுத்த தண்டனை. அந்தத் தண்டனையை நான் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.
எனது மகன் சேகர் ஒரு நல்ல அரசு வேலையில் இருக்கிறான். தக்கத் தருணத்தில் அவனுக்குத் திருமணம் செய்விக்கக் கடவுளிடம் வரம் கேட்டேன். அவரும் என் குடும்பத்துக்கு ஏற்ற குணவதியை மருமகளாகக் கொடுத்தார். பெயர் அமுதா!
குடும்பத்தை நடத்துவதற்கு ஏற்ப எங்களுக்குப் போதிய வசதிகள் இருந்தும், ஏனோ என் மனைவி ‘காசு’ ‘காசு’ என்று அலைந்தவண்ணமே இருந்தாள். என் மகனும், மருமகளும் நல்ல அரசு வேலையில் இருந்ததனால் மாதந்தோறும் அவர்களின் ஊதியத்திலேயே குறியாய் இருந்தாள்.
அம்மா எது சொன்னாலும் மறுபேச்சே பேச மாட்டான் என் மகன். மகனைக் கைக்குள் போட்டுக் கொண்டு தன் மருமகளை அடிமைபோல் ஆட்டிப்படைப்பாள்.
அமுதாவுக்குத் தலைப்பிரசவம். அழகான ஆண் குழந்தை. அதில் என் மனைவிக்கு கொஞ்சம்கூட சந்தோ­மே இல்லை. அமுதா, வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்துவிட்டு, குழந்தையையும் பராமரித்து விட்டுத்தான். அலுவலகம் புறப்படுவாள். பம்பரமாய்ச் சுழலும் அவளுக்கு என் மனைவி ஓர் ஒத்தாசைகூட செய்யமாட்டாள்.
அலுவலகம் சென்றபிறகு, என் மனைவி என் பேரக்குழந்தையைக் கண்டு கொள்ளவே மாட்டாள். அது பசிக்காக அழுதாலும் சரி, மலம் கழித்தாலும் சரி. சண்டைக்காரர்களிடம் பேசுவதைப் போலவே அந்த பச்சிலங் குழந்தையையும் பேசி பாவத்தை சுமந்து கொள்வாள்.
எனக்கு மகள் ஒருத்தியும் இருந்தாள். அவள் உள்ளூரிலேயே ஒருவனோடு ஓடிப்போனாள். அது எனக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. என் வீட்டுச் சொத்துக்களை எனக்குத் தெரிந்தும், தெரியாமலும் திருட்டுத்தனமாக மகளுக்குச் சேர்த்து வந்தாள். என் மனைவி என் மகளுக்கு அடுத்தடுத்து ஆண் ஒன்றும், பெண் ஒன்றும் இறந்தே பிறந்தது.
அமுதாவைப் பற்றி என் மகனிடம், என் மனைவி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி கோள் மூட்டி வந்தாள். ஒருநாள் அமுதாவை, என் மனைவி விளக்குமாற்றால் அடித்ததைக்கூட நான் தடுக்காத கோழையாய் இருந்தேன்.
இப்படி வீட்டில் அடிக்கடி சண்டை நடக்கும். ஒருநாள் ......பைசா கூட பொறாத காரணத்துக்காக அமுதாவை என் மகன் நடத்தை கெட்டவள் என முத்திரை குத்தி வீட்டை விட்டே துரத்தி விட்டான்.
புகலிடமில்லா அவள், தன் தாய்வீடு சென்று விட்டாள். அடுத்த இரண்டொரு நாள் கழித்து என் மருமகளின் பெற்றோர்கள் என் வீடு வந்து வம்பு ஒன்றும் பேசாது “சந்தோ­மாக இருங்கள்” எனச் சொல்லி தன் மகளை என் வீட்டில் விட்டுச் சென்றார்கள்.
அன்றிரவே அவளைக் காயம்பட அடித்துத் துன்புறுத்தி, என் மகன் மீண்டும் விரட்டி விட்டான். அடுத்த நாளிலேயே அவளுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டொரு நாள் கழித்து என் சம்மந்தி எங்கள் வீட்டுக்கு வந்து, ஏன் இப்படி என கண் கலங்கிப் போனார்.
அடுத்த ஒரு வாரத்திற்குள், “நான் என் கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும்” என்று அமுதாவிடமிருந்து எங்களுக்கு பதில் நோட்டீஸ் வந்தது.
மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கோர்ட் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பை எங்கள் குடும்பம் மதிக்கவில்லை. இதுதான் தலைவிதி என தன் பெற்றோருடனேயே தன் பிள்ளையுடன் வாழத் தலைப்பட்டால் அமுதா.
கடந்த மாதத்தோடு என் மகனுக்குத் திருமணமாகி 23 ஆண்டுகள் ஆகிவிட்டன. என் பேரனுக்கு 22 வயது என நினைக்கிறேன். அவன் னி.ய.ய.றீ.இரண்டாமாண்டு படிப்பதாகக் கோள்வி.
என் மருமகள் ஒரு உத்தமி. அவளை மகளைப் போல் காத்து வரவேண்டிய நான், அந்தக் கடமையிலிருந்து தவறிய குற்ற உணர்வு என்னை இப்போது உறுத்துகிறது. ஒரு நல்ல மருமகளாக வைத்துப் பராமரிக்கக் கூடிய நிலையிலிருந்து நழுவிய தன்மை, என்னைக் கண் கலங்க வைக்கிறது. ஒரு நாளிலாவது மருமகள், பேரனுக்கு பரிந்து பேச இயலாத, மனைவிக்குப் பயந்தவனாக, தைரியமும் துணிச்சலுமில்லாதவனாக நான் இருந்தேன். ஒருநாளாவது நான் போய் என் பேரனை எட்டி நின்று பார்த்திருக்கிறேனா? ஆசையாக பேசி வேண்டியதை வாங்கிக் கொடுத்திருக்கிறேனா? அவனை அஞ்சாதே! பயப்படாதே! என ஆறுதல் சொல்லி இருக்கிறேனா?
கடவுள் எவ்வளவு தான் பொறுப்பார்?
அன்றொரு நாள் ...
வயலைச் சுற்றிப் பார்க்கச் சென்ற நான் பள்ளம் எனத் தெரியாது தடுமாறி கீழே விழுந்தது தான். இடுப்பின் பின்பக்கம் படக்கென்றது. வலியால் புழுபோல் துடித்த என்னை கட்டிலில் வீட்டிற்குத் தூக்கி வந்தனர்.
நல்ல மருத்துவர்களைப் பார்த்தோம். தண்டுவடம் முறிந்து விட்டது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று அவர்கள் கை விரித்து விட்டனர். அன்று இந்தக் கட்டிலில் மல்லாந்து படுத்தவன் தான். அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திரும்பமுடியாது.
வீட்டிலுள்ள என் மனைவி உட்பட எவரும் என்னை கண்டு கொள்ளவில்லை. நாளடைவில் படுக்கைப் புண் ஏற்பட்டு புழுக்கள் நெளியத் தொடங்கின. சகிக்க முடியாத துர்நாற்றம். நான் இப்போது அழுது என்ன பயன்? இவ்வாறு அவனது மகன் கடிதத்தை படித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவர்களது வீட்டின்முன் கார் நிற்கும் சத்தம் கேட்டது. அனைவரும் வாசலையே திரும்பிப் பார்த்தனர்.
காரிலிருந்து ஒரு குருவானவரும், அவரையடுத்து ஒரு நடுத்தர வயதுடைய பெண்மணியும் , கூடவே ஒரு பையனும் இறங்கி அந்த வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இதுதான் அவுங்க மருமக.. இந்தப் பையன்தான் பேரனாய் இருக்குமென்று ஜனங்ள் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர். வீட்டிற்குள் நுழைந்த அவர்கள் அங்குள்ள நிலைமையை ஒருவாறு யூகித்துக் கொண்டனர்.
முடிவு? ( அவரவர் மனநிலைக்கே விட்டுவிடுகிறேன் )

Wednesday, 9 December 2015

செக்குமாடு

செக்குமாடு
- கேத்தரீன் ஆரோக்கியசாமி, திருச்சி.
மழை இன்னும் நின்றபாடில்லை. ஜன்னல் ஓரத்தில் வடியும் நீரை கையில் பிடித்து விளையாடும் சுகம் அலாதி. மழைநீரில் விளையாடுவதை பார்த்தால் அம்மா சத்தம் போட்டு காதைத் திருகி இழுத்துக் கொண்டு போய் ரூமில் அடைத்து படிக்கச் சொல்லும்போது மனசை வருத்தும் வருத்தம் சொல்லிமாளாது. என் எண்ணச் சிதறல்கள் ஐம்பது வருடத்துக்கு முன்னோக்கிச் சென்றது. அம்மா வீட்டில் உள்ள இதே ஜன்னல் வழியாக பார்த்தால் பின்னால் ஒரு செக்கும் அதை இழுக்கும் செக்குமாடும் “ஹேய், ஹேய்” என்று சொல்லிக் கொண்டு செக்கை ஓட்டும் செட்டியாரும் என் கண்முன்னே தெரிவார்கள்.
செட்டியார் செக்கை மெதுவாக டொடக்,டொடக் என்று ஓட்டும்போது அந்த மாடு அக்கம் பக்கம் பார்க்காமல் சுத்தி சுத்தி வரும். மதியத்துக்குப் பிறகு செட்டியார் தூங்கிக் கொண்டே ஓட்டினாலும் மாடு எந்த சலனமும் இல்லாமல் தன் வேலை சுத்தி வருவது மட்டுமே என்பது போல, எந்த உணர்வும் இல்லாமல் செக்காட்டுவது மட்டும்தான் தன்னோட வேலை என்பதுபோல் சுற்றும்போது, இந்த மாடு என்ன எந்த உந்துதலும், எதிர்ப்பும் இல்லாமல் சுமையைத் தாங்கிக் கொண்டு சுற்றுவது அனிச்சை செயலாகத்தான் எனக்கு தோன்றும்.
இன்று என்னுடைய நிலையும் செக்குமாட்டைப் போலத்தானே இருக்கிறது. வயது முதிர்ந்துவிட்டால் நமக்கு என்று எந்த எதிர்ப்பார்ப்பும், மரியாதையும் தேவை இல்லையா? காலையில் என் மகனுக்கும், எனக்கும் நடந்த உரையாடல்தான் என்னை இப்படி சிந்திக்க வைக்கிறது. என்னை என் அம்மா வீட்டுக்கு அழைத்து வந்திருப்பதும் அந்த வி­மான வார்த்தைகள்தானே? எவ்வளவு வயதானாலும் தாயின் அன்புக்கும், ஆதரவுக்கும் ஈடு இணை வேறில்லை.
கிறிஸ்மஸ் வரப்போகிறது, ஆன்ம காரியங்களோடு, உலக காரியங்களிலும் நடைமுறை வழக்கங்களிலும் நாம் நமது கவனத்தை செலுத்த வேண்டியதும் நமது கடமை என்ற உணர்வுடன்தான் எனது பையனிடம் பேசினேன். “வரும் கிறிஸ்மஸ்க்கு உன் தங்கச்சி லீனாவுக்கும், அவளது குழந்தைகளுக்கும் துணி எடுத்திடு. கிறிஸ்மஸ் லீவுக்கு பிள்ளைகளோட நம்ம வீட்டுக்க வரச்சொல்லிடுப்பா”.
“அம்மா! எனக்கு எல்லாம் தெரியும். ஒவ்வொரு வரு­மும் நாம தானே வாங்கிக் குடுக்கிறோம். இந்த வரு­ம் அவுங்களே வாங்கிக்கிடட்டும். கிறிஸ்மசை அவுங்க வீட்டிலேயே கொண்டாடட்டும். இங்க வந்துதான் கொண்டாடனும்மா?” எரிச்சலுடன் என்னைப் பார்க்க,
“ஏண்டா! ஒரே தங்கச்சி, அஞ்சாறு பேரா இருக்காங்க. வரு­த்துக்கு ஒருநாள் வர கிறிஸ்மஸ்க்கு புதுத்துணி வாங்கிக் குடுக்கக் கூடாதா? அஞ்சாறு நாள் வந்து தாய் வீட்ல பிள்ளைகளோட தங்கிட்டுப் போகக் கூடாதா? இதுல நீ என்ன குறைஞ்சிப்போற? என் வீடு. இந்த உரிமைகூட அவளுக்கு இல்லியா? நான் இருக்கும்போதே இந்த நிலைமைன்னா நான் போனதுக்கு அப்புறம் அவளோட நிலைமை என்ன ஆகுமோ தெரியலையே?” என் மனக் குமுறலைக் கொட்ட,
“அம்மா! இப்ப என் நிலைமை சரியில்லை. தொடர்ந்து மழை பெஞ்சதாலே வியாபாரம் ரொம்ப டல்லா இருக்கு”.
“அதனால சாப்பிடாமா இருக்கோமா?”
“சாப்பாடு தேவையானதும்மா, பண்டிகையை கொண்டாடுறது ரொம்ப அவசியம் இல்ல”.
“இப்படி சொன்னா எப்படி?”
“சரிம்மா! உங்க பென்­ன் பணத்தை சேர்த்து வெச்சிருக்கீங்க இல்ல, அதுல லீனாவுக்கு வேண்டியதை செய்யுங்க. நான் வேணாம்னு சொல்லல”.
“என்னடா சொன்ன? என் பென்­ன் பணத்தில் செய்ய நீ சொல்லனுமா? எனக்குத் தெரியும். எம் பொண்ணுக்க என்ன செய்யிறதுன்னு”.
“உங்க பொண்ணுக்கு என்ன செய்யணும்ன்னு தெரியுமில்ல. என்னை தொல்லை பண்ணாதீங்க”.
“இது தொல்லையா இருக்கா? எம் பொண்ணுக்கு இதுவரைக்கும் என்ன பெரிசா செஞ்சிட்ட? கல்யாணம் பண்ணி வெச்சியா? சீர் செஞ்சியா? பிள்ளைபேறு பாத்தியா? எல்லாம் நானும் உங்க அப்பாவும்தான் செஞ்சோம். உனக்கு எந்த பொறுப்பும் வைக்கல.
சொல்லும்போதே மூச்சிரைக்கிது. பாழாப்போன இந்த ஆஸ்மா மழைக்காலம் வந்தா பாடா படுத்துது. பேசக்கூட முடியல”.
“அம்மா! உங்களுக்கு வயசாயிடுச்சி. ஆஸ்மா வேற இந்த பனிக்காலத்தில ஜாஸ்தி ஆயிடும். பேசாம ரெஸ்ட் எடுங்க. உங்க வேலையை பாருங்க. சாப்பிட்டோமா, மாத்திரை மருந்தை எடுத்துக்கிட்டோமா, தூங்கினோமா, கோவிலுக்கு போனோமா, கடைசி காலத்தில நல்ல சுகத்தை குடுன்னு கடவுள்கிட்ட வேண்டினோமான்னு இல்லாமா, எல்லாம் உங்களாலத்தான் நடக்கிறமாதிரி உடம்பை வறுத்திக்கிட்டீங்கன்ன, உங்களுக்கும் தொல்லை, எங்களுக்கும் தொல்லை.
உங்களுக்கு நான் தொல்லை தாண்டா!”
“எல்லாம் வந்தவ செய்யிற வினை. யாரை குத்தம் சொல்றது. எனக்கு சோறு போடுறதையே பெரிசா நினைச்சி பேசுறீயா? அந்த தொல்லை இல்லாம நான் போறேன் எங்க வீட்டுக்கு. என் அண்ணன் இன்னும் எனக்கு வேண்டியதை செய்வாரு.”
பெரிய வீராப்புடன் பேசிவிட்டு தாய் வீட்டுக்கு வந்த என்னை பெரிதாக வரவேற்கவில்லை எனது அண்ணியார். அம்மா அவர்கள் இறுதிநாளை எண்ணிக் கொண்டிருக்கும் ஜீவன். இருந்தாலும் என்னைப் பார்த்தவுடன் அவர்களது கண்ணில் ஒரு குளிர்ச்சி. ஆரத்தழுவிய அவர்களது அரவணைப்பு எனது துக்கத்தை எங்கோ கூட்டிக் கொண்டு போய்விட்டது. ஜன்னல் அருகே பழைய நினைவுகளில் முழ்கி இருந்த என்னை என் அண்ணனின் வரவு அழுகையை வரவழைத்தது. தேக்கி வைத்திருந்த என் மன புழுக்கத்தை கொட்டித் தீர்த்தேன். எனக்கு அந்த வீட்டில் எந்த மரியாதையும் கிடையாது. என் கணவருக்குப் பின்னால் நான் உயிரோடு இருப்பதே தேவையில்லாததுன்னு தோனுதுன்னு சொன்னபோது என் தாயாரின் கண்களில் கண்ணீர். என் கோபம் தேவையில்லாதது, பேரன் சொல்வதில் தப்பில்லை. இனிமேல் நாம் நம் வாழ்க்கையை மட்டும் பார்த்துக் கொண்டு வாழ்ந்தால் போதும் என்று என் தாயார் சொன்னபோது எனக்கு உடன்பாடில்லை. ஆனால் என் அண்ணன் “தங்கா! இங்க வா. உனக்கு  புரிய வைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே நாங்கள் இருவரும் சிறு வயதில் ஒன்றாக நின்னு வேடிக்கை பார்க்கும் ஜன்னல் அருகே அழைத்துச் சென்றார். இதோ பாரும்மா, இந்த ஜன்னல் வழியாக  நாம ரெண்டு பேரும் செட்டியார் செக்கை ஓட்டுறதப் பார்ப்போம். செட்டியார் செக்காடி முடிஞ்சோன எள்ளு புண்ணாக்கைத் தருவாரு. சுடச்சுட இருக்கிற புண்ணாக்கு வாசமா ருசிக்கும், ஞாபகம்இருக்கா?”
“இருக்குண்ணே! அதுக்கென்ன?”
“அந்த செக்குமாட்டை பார்த்திருக்கியா? எந்த இலக்கும் இல்லாம அதுபாட்டுக்கு சுத்திக்கிட்டு இருக்கும். கால் வலிச்சா நிக்கும். செட்டியார் குச்சியால அடிச்சா திரும்ப நடக்கும். இனிமே நமக்கு வாழ்க்கையில எந்த இலக்கும் இல்லை. நம்ப புள்ளைங்க பாத்துக்குவாங்க. நீ உன்னோட உடம்பை பார்த்துக்க. உன்னால முடிஞ்சதை செய். கிறிஸ்மஸ் புதுத்துணி போட்டாத்தான் கொண்டாட்டமாகாது. பிறக்கப்போற இயேசு பாலன் உன் பையனுக்கு நல்ல வியாபாரம் நடக்க உதவி செஞ்சி தன் தங்கச்சியை பார்த்துக்கிற மனச குடுக்கனும்னு வேண்டிக்க. உன்னோட பணத்தை அவனுக்கு குடுத்து உதவுவது தப்பில்லை. மனதில் வறியவர்களா இருக்கக் கூடாதுன்றதுதான் இயேசு பாலனோட எதிர்பார்ப்பு. நீங்க எல்லாரும் என் வீட்டுக்கு வாங்க. குடும்பத்தோட கிறிஸ்மஸ் கொண்டாடுவோம்”.
“சரிண்ணே!”
“இப்ப நமக்கு எதுக்கு கோப தாபங்கள்! கடவுளோட இணைவதுதான் நமக்கு தேவை. நம் ஓட்டம் முடியும்போது இன்பமயமான எதிர்காலம் நமக்காக காத்திருக்கும்”.


Monday, 7 December 2015

சின்னஞ்சிறு கதை, என் எளிய சகோதரனுக்கு செய்ததெல்லாம் ..

சின்னஞ்சிறு கதை
என் எளிய சகோதரனுக்கு செய்ததெல்லாம் ..
- லியோ ஜோசப்
திரு லியோ ஜோசப் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. இவர் சிறந்த கதை எழுத்தாளர். மீண்டும் அன்னையின் அருட்சுடரில் அவரை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.   
வழக்கமாக திருப்பலி தொடங்குவதற்கு 5 நிமிடங்கள் இருக்கும் போது கோவிலுக்கு வரும் லூர்துசாமி , சற்று முன்னதாகவே கோவிலுக்கு வந்து விட்டார். கோவிலுக்குள் வந்ததும் அவர் கண்ணில் பட்ட முதல் காட்ச, புனிதா மண்டியிட்டபடி மாதா சுரூபத்தை நோக்கி நடந்து போவது தான். மாதா சுரூபத்தை நெருங்கிவிட்ட அவள் கால் வலித்ததோ என்னவோ, விழுந்து விட்டாள்.
லூர்துசாமி அவளிடம் போனார். ‘என்னம்மா செய்யிற? ’ என்று கேட்Vர்.
 ‘வேண்டுதல் ஐயா’ என்றாள் புனிதா.
 ‘என்ன வேண்டுதல்?’
 ‘எனக்கு மூணு பெண் பிள்ளை இருக்கு. ஆண் குழந்தை ஒன்னு கூட இல்ல. அதுக்காகத் தான் வேண்டுதல்.’
 ‘செய்வது பாவம். அப்புறம் வேண்டுதல் எப்படி பலிக்கும்?’
 ‘நான் என்ன பாவம் செய்தேன்?’
 ‘அந்த அன்னம்மா நெலத்த எழுதி வாங்கிக் கிட்டியே, அது பாவம் இல்லையா?’
 ‘அது .... வட்டிக்குப் பணம் குடுத்திருந்தேன். வட்டியும் குடுக்கல, முதலும் குடுக்கல. அதான் நெலத்த எழுதி வாங்கினேன். இது எப்படி பாவமாகும்?’
 ‘அந்தம்மா பாவம் ! அந்த நெலத்த வச்சுத்தான் அது பிழைச்சுக்கிட்டு இருந்தது. அது பொழப்புல மண்ணப் போட்டுட்ட. அது பாவம் இல்லையா?’
 ‘அப்பறம் குடுத்த காசை எப்படிங்க வசூல் பண்றது?’
 ‘இயேசு என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?’  ‘என் எளிய சகோதரனுக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தாய்’ னு சொல்லியிருக்கார். அந்த அன்னம்மா பாவம் ஏழை ! அந்தம்மா வயித்துல அடிச்சுட்டு நீ வேண்டுதல் வச்சா, கிடைக்குமா?  ‘எந்த அளவையால் அளப்பீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்’னும் சொல்லியிருக்கார். பாத்துக்கோ!
 ‘நான் யோசனப் பண்றேங்க ஐயா !’
தன் அறிவுரை வேலை செய்யும் என்பது லூர்துசாமிக்குத் தெரியும்.

Ads Inside Post