Pages - Menu

Wednesday 16 December 2015

மனம் செம்மையாக

ஆசிரியர் பேனா
செபம் நம் அன்றாட உணவு

காலையும் மாலையும் நன்மறை ஓதா
அந்தணர் என்போர் அனைவரும்; பதரே
 - வெற்றி வேற்கை

செபம், வாழ்வின் நங்கூரம். எனவேதான் காந்தியடிகள், ஒவ்வொரு நாளையும் திறக்கும் திறவுகோளும், நாளின் இறுதியில், அந்நாளை நிறைவு செய்வதும் செபம் என்கிறார்.கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் செய்த காந்தி அடிகளின் பெரிய ஆயுதம் செபம். தியானம், பஜன் என்று அவர/து ஆசிரம வாழ்வு செபத்தின் வல்லமையால் நிறைந்திருந்தது. அக்டோபர் மாதம் ஜெபமாலை மாதா, மாதம் என்று செபத்திற்கு முக்கியத்துவம் அளித்து கொண்டாடுகிறோம். ஒருவர், பகுத்தறிவாளர், அவர் கேட்டார். திரும்ப, திரும்ப ஒரு செபத்தை சொல்வதால் கடவுள் நம் செபங்களை கேட்டிடுவாரா? என்றார். அவருக்கு கிர்கோர் என்ற புகா;பெற்ற தத்துவ அறிஞர் கூறுவார். நாம் செய்யும் செபம் கடவுளை மாற்றுவதில்லை. ஆனால் நாம் செய்யும் செயல்கள் நம்மை மாற்றுகின்றன என்கிறார்.

நம் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களும் செபத்தின் வல்லமையைப் பற்றி பேசுகிறார். நம்மை படைத்தக் டவுள், பலவிதமான திறமைகளையும், வல்லமைகளையும் நம்மில் புதைத்து வைத்திருக்கிறார். செபம் அவைகளை வெளிக்கொணரும் பெரிய கருவி என்கிறார். இப்பொழுது பல வீடுகளில் பூஜை அறை என்று அமைத்திருக்கிறார்கள். அங்கு வெகுநேரம் தியானமும் செய்கிறார்கள். நமக்கு நல்ல கோவில்கள் உண்டு. வார்த்தைகளை சுருக்கி செபம் செய்தல் எனக்கு தெரியாது என்பர் சிலர். அவிலா தெரசம்மாள் கூறுவார்கள். இறைவனுடன் நட்பில் இணைந்து நிற்கிற நேரம்தான் செபம் என்பார்கள்.

மார்ட்டின் லூத்தர், செபம் செய்யாத கிறிஸ்தவன் மூச்சில்லாத மனிதருக்கு சமம் என்பார். என்னை பொறுத்தவரை, செபம் என்ற அனுபவத்தில் புகுந்தவர் மாறிய மனிதராகத்தான் வெளிவருவார். இராம்குமார். சிங்காரம் என்பவர் வெற்றிக்கான வழிகளின் ஒன்றினை குறிப்பிடுகிறார். மனிதர் மனதிற்குள்ளேயே அதிகமாக பேசிக் கொள்கின்றனர். அவர்கள் நேர்மறையாக பேசினால் வாழ்வு நேர்மறையாக அமையும். நேர் எதிராக பேசினால் வாழ்வும் நேர் எதிராக அமையும். எனவே உள்ளத்திற்கு நேர்மறை தொடர்புடன் வாழுங்கள் என்கிறார். செபம், இந்த உள்ளாந்திர நேர்மை உணர்வு பெற பெரிதும் உதவும். செபம் வழியாக, இறைவனுடைய பிரசன்னத்தை நம் வாழ்வில் உணர முடியும். இரண்டாவதாக மனதில் குழப்பங்கள், கசப்புக்கள், பழிவாங்கும் வெறிகுணம், பொருளை பெருக்க வேண்டும் என்ற பேராசை ஆகியவையயல்லாம் மாறும். மூன்றாவதாக, புதியதெளிவும், வெளிச்சமும் நமக்குக் கிடைக்கும். ஜெபமாலை, திரும்ப திரும்ப சொல்லி ஆன்மாவின் அடிநிலைக்கு நம்மை அழைத்து செல்லும் பாரம்பரிய செபம்.

ஒரு பெரிய விவிலிய வல்லுநர், நான் சொல்லும் செபம் ஜெபமாலைதான் என்று சொல்லுவார். சிலர் திருப்பலி நேரங்களிலும் ஜெபமாலை சொல்லுவார்கள். அது தேவையில்லாதது. திருப்பலி, பெரிய அடையாள வழிபாடு. வழிபாட்டின் நிகழ்வுகளில் பொருளடன் பங்குபெறுதல்தான் சிறந்தது. ஜெபமாலையில் விவிலியம் பொதிந்திருக்கிறது என்பதை குறிப்புகளுடன் ஒரு கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. விலைவில் தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க போகிறது. அரசியல் கட்சிகள் மக்களை எப்படி ஏமாற்றி ஓட்டுகள் பெறலாம் என்பதில் பலவித திட்டங்கள் செய்து செயல்பட்டு வருகிந்ளன. நமக்கு அதியம் அதிகமாக அரசியல் விழிப்புணர்வு வேண்டும். அரசியல்; சாக்கடை, அதன் நாற்றம் நம்மில் பட வேண்டாம் என்று ஒதுங்கிவிடக்கூடாது. நம் வாழ்க்கையை மிகவும் பாதிப்பது அரசியல். ஒன்று கூடி, நல்லவைகளுக்கு ஒத்துழைப்பும், தவறானவைகளுக்கு எதிர்ப்பும் காட்ட கடமைப்பட்டிருச்சிறோம். செபம், வெறுமையான ஆன்மீக அனுபவம் அல்ல. வாழ்க்கையை செம்மைப்படுத்தும், வாழ்வில் இறைவனை சந்தித்து அவருக்கு சாட்சியம் அளித்து வாழ நம்மை உறுதியுள்ளவராக்குவது. தினமும் செபத்திற்கு நேரங்களை அர்ப்பணிப்போம். செபத்தினால் என்றும் புத்துணர்வு பெறுவோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post