Pages - Menu

Sunday 13 December 2015

திகைப்பூட்டும் திருமருந்து திரிபாலா

திகைப்பூட்டும் திருமருந்து திரிபாலா

சகோ.வ. யூஜின் அமலா, முனைவர் ம.ஜெயராஜ், உயிர் வேதியியல் துறை.
அரசினர் கலைக்கல்லுVரி (தன்னாட்சி), கும்பகோணம் - 612 001

(நம் நாட்டின் பாரம்பரிய ஆயுர்வேத மருந்துகளை, அறிவியல் முறைப்படி ஆராய்ந்து, அதன் பலன்களை கண்டுபிடிக்கும் முயற்சியை தனது முனைவர் படிப்பில் செய்து வருகிறார் சகோதரி. யூஜின் அமலா)
விஞ்ஞானம் விண்ணை முட்டி வளர்ந்தாலும், ஒருக்காலும் சித்தர்களின் ஞானத்திற்கு ஈடாகாது. பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாசமிகுதியால், அனைத்து உணவுகளையும் வகைவகையாய் செய்து கொடுத்து குழந்தையின் வயிற்றைக் கெடுத்து விடுவாள். ஆனால் திரிபாலாவோ வயிற்றில் உள்ள கழிவுகளை வெளியேற்றி பிறவிப்பயனை நீட்டிக்கும்.
திரிபாலா என்பது அமிர்தா அல்லது அமிர்தம் எனப்படும் கடுக்காய், ஆயுர்வேதத்தில் அனைத்து மருந்துகளிலும் பயன்படும் நெல்லிக்காய், அகசம், அக்கம் என பெயர்பெறும் தான்றிக்காய் ஆகிய மூன்றும் சமஅளவு கலந்த அற்புதமான மருந்து. மூர்த்தி சிறிதா இருந்தாலும் கீர்த்தி பெரிது என்பதற்கேற்ப ஆயுர்வேத மருத்துவர்களால் உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாக பயன்படும் இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் பயன்படுகிறது. சர்வ சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் திரிபாலாவைப் பற்றி ஆச்சரியமாக எந்த வியாதியையும் தீர்க்கும் அற்புதமான சக்தி இதில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வேதிப்பொருட்கள் :
திரிபாலா சூரணத்தில் கேலிக் அமிலம், செபுலாஜிக் அமிலம், செபுலினிக் அமிலம், எலார்ஜிக் அமிலம், பாலிபீனால், லினோலியிக் அமிலம், டேனின், பிளேவனாய்ட், கிளைக்கோசைட், வைட்டமின் சி, கரோட்டின், அல்கலாலய்ட், பிளேவனாய்ட், எத்தில் கேலேட், மேனிட்டால், குளுக்கோஸ், பிரக்டோஸ், கேலக்டோஸ், ரேம்னோஸ் மற்றும் பல உயிர் சத்துக்களும் உள்ளன.
பயன்கள் :
திரிபாலா சூரணம் நோய்க்கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்க, உடல் கழிவுகளை வெளியேற்றி செரிமானக் கோளாறுகளை சீர்படுத்த, கொழுப்பைக் கரைக்க, மூல நோய்க்கு மருந்தாக, இருதயத்தை பலப்படுத்த, இரத்தத்தை சுத்திகரிக்க, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களைப் பாதுகாக்க தடுப்பு அரண்களைத் தாண்டி உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆன்டிபயாடி என்னும் நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்ய, உடலுக்கு புத்துணர்வு அளிக்க, உடல் எடையை குறைக்க, என்றும் இளமையாக இருக்கச் செய்ய, தேவையற்ற வாயுக்களை வெளியேற்ற, பசியைத் தூண்ட மற்றும் நோய் வராமல் காக்க, உணவே மருந்து, மருந்தே உணவு என்பதற்கேற்ப உணவாகவும், மருந்தாகவும் இம்மூலிகைக் கலவை பயன்படுகிறது.
விவசாயத்தில் பூச்சிகளை அழிக்க பயன்படுத்தும் பூச்சிக் கொல்லிகளில் டீ.டீ.டி.பென்சீன் யஹக்ஸா குளோரைட் மற்றும் இமிடகுளோபிரிட் போன்ற மருந்துகளின் பாதிப்பு விவசாயிகளுக்கு ஒரு பாதிப்பாக இல்லாமல் இருக்க அதன் நச்சுத்தன்மையை இழக்கச் செய்து உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது என்பது எமது ஆய்விலிருந்து புலனாகிறது. பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் 

விவசாயிகள் தங்களது உடலுக்கு தகுந்த பாதுகாப்போடு குறிப்பாக முகமூடி அணிந்து, கைகளுக்கு கையுறை, கால்களுக்கு காலுறை அணிந்து தங்களது வேலைகளைச் செய்வது நல்லது. பூச்சிக் கொல்லி மருந்து அல்லது குடிநோயால் கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் திரிபாலா சூரணம் உட்கொள்ள தங்களது உடலுறுப்புகளைப் புத்துணர்வு பெறச் செய்யலாம். ஆங்கில மருந்து அதிகம் உண்பவர்கள் இதனை உணவாகவோ, மருந்தாகவோ காலை, இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மொத்தத்தில் இது ஒரு சர்வரோக 
இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மொத்தத்தில் இது ஒரு சர்வரோக நிவாரணியாக பயன்படுகிறது.
பயன்படுத்தும் முறை :
ஒரு தேக்கரண்டி அளவு சூரணத்தை இளஞ்சூடான நீரில் கலந்து அருந்தலாம். தேனில் கலந்து ஒரு சிறு உருண்டையாக உருட்டி உட்கொள்ளலாம். இரவு உணவுக்குப்பின் முக்கால் மணி நேரத்திற்குப் பின்னர் அல்லது இரவு படுக்கைக்கு செல்லும் முன் உட்கொள்ளலாம். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் தவிர மற்ற அனைவரும் இதை உட்கொள்ளலாம். இதைத் தொடர்ந்து உட்கொள்ள வாதம், பித்தம், கபம் போன்ற திரிகண தோ­ங்கள் நீங்கி முழு நலத்தோடு வாழலாம். இருப்பினும் அருகில் உள்ள சித்த மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற்றால் அவர்களின் அனுபவப்படி,
“அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நேடிதுய்க்கு மாறு” - (குறள் 943)
என்ற குறளுக்கேற்ப நோய்வரக் காரணத்தையும், அதனை பயன்படுத்தும் அளவினையும் அறிந்து கொள்ளலாம். மேலும் மலச்சிக்கலை சீர்செய்ய திரிபாலா மலமிளக்கியாக செயல்பட்டு உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் தருகிறது. ஆகவே இயற்கை மருத்துவ முறையினையும், மருத்துவத்தின் மேன்மையையும் முறையாக அறிந்து எந்த பக்க விளைவுகளும் இன்றி தேகத்தை தெம்பாக்கிட, பிணியின்றி பயணித்து நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை வாழ்க்கையாக்கிட தொடர்ந்து பயிற்சி செய்வீர் மூலிகை மருத்துவத்தை.
என் நண்பர்களை 

1 comment:

Ads Inside Post