Pages - Menu

Sunday 13 December 2015

துணுக்குகள் 1

வலையில் பிடித்தது
1. ஒருவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வரும்போது... இன்னையருவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வந்தால், அந்த உறவை விட இந்த உலகத்தில் பெரிய உறவு இல்லை...

2. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல...
அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

3. எதுவும் இல்லாத போது சமாளிக்கும் திறமையும்...எல்லாம் உள்ளபோது நீ நடந்து கொள்ளும் 
முறையும்...வெற்றியை தீர்மானிக்கிறது.

4. தேவை முடிந்தவுடன் விலகும் நண்பர்கள்... சொத்து இருந்தால் உறவாடும் சொந்தங்கள்... பணம் இருந்தால் பாசம் காட்டும் பந்தயங்கள்... இவர்களுடன் நான் இருப்பதைவிட, நான் அனாதையாக வாழ்வது மேல்.

நம் நாட்டு அநாகரிக சவுடால்

5. ஜப்பானுக்கு சுற்றுலா சென்ற நம் நாட்டுக்காரர் ரயிலில் பாக்க தோ­த்தில் எதிரே உள்ள சீட்டின் மேல் கால்போட்டு சொகுசாக அமர்ந்தபடி பயணம் செய்தார். இதை கண்ட ஒரு ஜப்பானியர் அவர் சீட்டைவிட்டு எழுந்துவந்து, நம்ம ஆளின் காலை சீட்டிலிருந்து எடுத்து தன் மடி மேல் வைத்துக் கொண்டார். நம்ம ஆளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. உடனே நம்ம ஆள் ஏன் இப்படி செய்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு ஜப்பானியர் சொன்னார், நீங்கள் சீட்டின்மேல் கால் போட்டு வந்தது எங்கள் நாட்டின் சொத்தை அவமதிப்பது போல் இருந்தது. இருந்தாலும் நீங்கள் எங்கள் நாட்டின் விருந்தினர். அதனால் உங்கள் செளகரியத்துக்காக என் மடி மேல் உங்கள் காலை வைத்துக் கொண்டேன் என்று சொன்னார். நம்ம ஆள் கூனிக்குறுகி, அவரிடம் தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரினார். அதற்கு அந்த ஜப்பானியர், இங்கு மடடுமல்ல, உங்கள் நாட்டிற்கு சென்றாலும் பொது சொத்துக்களை சேதப்படுத்தவோ அல்லது அடுத்தவருக்கு இடையூறு கொடுக்காமலும் நடந்து கொள்ளுங்கள் என்று சிரித்த முகத்துடன் அறிவுறுத்தினார்.
நீதி : இந்த தேசத்தை சுத்தமாக வைத்திருப்பதோ அல்லது அலங்கோலப்படுத்துவதோ நம்முடைய கையில் மட்டுமே உள்ளது.

6. பெற்றோரை வணங்குவோம் :
பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்து வந்தது. பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக் முடியாத நிலைக்கு வந்தவிட்டால், அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான மலைகளின் மேல் வைத்துவிடடு வந்துவிடுவார்கள். எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில் வாடி வதங்கி மடிவார்கள்.
இப்படியான சூழ்நிலையில், ஓர் இளைஞன் முதுமையடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் மலை உச்சியை நோக்கி நடந்து கொண்டிருந்தான். தாய் ‡ மகன் இருவருமே எதுவும் பேசவில்லை! ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார், ஏதோ ஒருவித மணம் கொண்ட மரங்களின் சின்னசின்ன கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான்.
உடனே, அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்? என்று கேட்டான்.
அதற்கு தாயார், மகனே நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு திரும்பும்போது, வழி தெரியாமல் திண்டாடக் கூடாதல்லவா?
இங்கே போடப்பட்டுள்ள கிளைகளை கவனித்து நடந்தால் வழி தவறாமல் நீ பாதுகாப்பாக வீடு போய் சேரலாம். அதற்காகவே கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன் என்றாள். வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டச் சென்றாலும், மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் இந்த தாயை மீண்டும் தன் வீட்டுக்கே கொண்டு வந்து பாசத்துடன் பராமரிக்கலானான்.
அதன்பின்பு அந்தக் கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது. இந்த கதை சொல்ல வரும் கருத்து நம் வாழ்வுக்கு மிக முக்கியம்...நீ நல்லவனா, கெட்டவனா என்று தெரிவதற்கு முன்னாலேயே தன் வயிற்றில் இடம் கொடுத்தவள் உன் தாய். எத்தனை ஜென்மம் சம்பாதித்தாலும் நீ இருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாது என்றால் அது உன் தாயின் கருவறை என்பதை மறந்து விடாதே.
எத்தனையோ கஷ்டங்கள், நஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள், அசிங்கங்கள், அவமானங்கள் கடந்த பிறகும் ஒன்றுமே தெரியாதது போல் காட்டிக் கொண்டு, குடும்பத்தின் மத்தியில் சிரித்துக் கொண்டிருக்கும் தந்தைக்கு நிகரான நம்பிக்கை ஊட்டும் புத்தகம் இந்த உலகில் வேறெதுவுமில்லை.
நம் பெற்றோர்கள் எப்போதும் நம் நலன் நினைப்பவர்கள். அவர்களை கண் போன்று பாதுகாப்போம்.

No comments:

Post a Comment

Ads Inside Post