Pages - Menu

Wednesday 16 December 2015

பைந்தமிழ்ப் பழமொழிகளும், விளக்கங்களும்

பைந்தமிழ்ப் பழமொழிகளும், விளக்கங்களும்

எம்.சி.குமார் எம்.ஏ., பி.எட்., எம்.பில்., விரகாலூர்.

கெட்ட காலத்துக்கு நாரை, கெளிற்றை எடுத்து விழுங்கினது போல :

ஆகாயத்தில் பறக்கக்கூடிய பறவையினத்திற்கும் நீரில் நீந்துக் கொண்டிருக்கும் கெளிறு மீனிற்கும் என்ன உறவென்று நினைக்க தோன்றுகிறதல்லவா! பொதுவாக இவ்வகை மீன்கள் சேற்றுப்பகுதியில் வளைந்து நெளிந்து உந்திச் செல்வதால் கெளிறு என்ற பெறர் பெற்றிருக்கக் கூடும். சங்க காலத்தில் இம்மீனை சிறப்பற்ற மீனாகக் கருதினர் என்பதற்கு அவற்றில் காணப்பட்ட முட்களே ஆகும் என்பதனை
“முள்ளெறிற்றுப் பாண் மகளின் கெடிது சொரிந்த
அகல் பெருவட்டி நிறைய மனையோள்” (ஐங்குறு நூறு : 40)
என்ற பாடலிலிருந்து அறிவதால் இம்மீனின் சிறப்புப் பண்பே இதற்கு முட்கள் இருப்பதேயாகும்.
இம்மீனை நாம் கையில் எடுக்கும் போது அதனுடைய அடிப்புறத்தைப் பிடித்துத்தான் எடுக்க வேண்டும். அவ்வாறு கையில் எடுக்கும் பொழுது நம் விரல்களானது இம்முட்களுக்கு அருகில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல் நலம். நம் விரலை வைத்து தலையிலிருந்து வால் நோக்கித் தடவும் பொழுது, இம்முட்களானது மிகவும் மென்மை உள்ளதை நாம் உணர முடியும். அதே நேரம் மாற்றி தடவ நேர்ந்தால் நம் விரலில் குத்திவிடும். இம்மீனை நாரையானது விழுங்க நேர்ந்தால், வாய்க்குள் நுழையும் போது மேற்புற முள்ளானது நாரையின் தொண்டையில் சிக்கி கொண்டு விடும். மீனை வெளியே எடுக்க நினைத்தாலும் பக்கவாட்டில்  உள்ள முட்கள் வாயின் உட்பக்கத்தில் துறைத்து உயிர் போகும் அளவிற்கு வலியை உண்டாக்குவதால், நாரை இறக்க நேரிடும் என்பதைத்தான் இப்பழமொழி உணர்த்துகிறது.
வழக்கமாக ஒருவர் பேருந்தில்தான்; செல்வார். அன்று, அவர் பேருந்திற்காக காத்திருந்தபோது, அவருடைய நண்பர் மோட்டார் வண்டியில் வாங்க உங்களை உங்கள் அலுவலகத்தில் விடுகிறேன் என்றார். எனவே அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். ஒரு இடத்தில் மெதுவாக சென்றபோது பின்னால்வந்த பேருந்து மோதி விபத்துக்கு உள்ளாகி மருத்துசமனையில் சேர்ந்தார். இதுதான் கெட்ட காலத்துக்கு நாரை கெளிற்றை எடுத்து விழுங்கினதுபோல் என்பதன் பொருள்.

நத்தை வயிற்றில் முத்து பிறந்த மாதிரி :

சில நேரங்களில் எளியவர்களிடமிருந்து உயர்ந்தது தோன்றிவிடும். அதை குறிக்கத்தான் இப்பழமொழி எனலாம். எலியிடமிருந்து எலியும், புலியிடமிருந்து புலியும், முயலிடமிருந்து முயலும் அல்லவா பிறக்க முடியும்! ஆனால் நாம் அணியும் மதிக்க முடியாத முத்து எப்படி நத்தை என்ற உயிரினத்திலிருந்து உருவாக முடியும்?
நம்மில் ஏராளமானோர் மஐVத்துளியானது முத்துச்சிப்பிக்குள் விழுந்து முத்துவாக மாற்றம் அடைகிறதென்று நினைக்கிறோம். முத்து எவ்வாறு உருவாகின்றது என்று தெரிந்து கொண்டீர்களானால் சற்று வியப்பளிக்கக் கூடியதாகத் தான் தோன்றும். முத்து ஒரு வகை பிங்க்ட்டா வால் காரிஸ் என்ற சிப்பியிலிருந்து உருவாகிறது. நத்தை, சிப்பி ஆகிய இரண்டுமே ஒரே இனத்தைச் சார்ந்தாகும். இவைகளின் உடம்பினைச் சுற்றித் தடித்த சுண்ணாம்பு உடம்பிற்கும் ஓடுக்கும் இடையே மெல்லிய மடிப்பாலான சவ்வு போன்ற அமைப்பு காணப்படுகின்றது. இவைதான் முத்து உருவாக காரணமாயிருக்கின்றது.
ஓர் ஆயர் திறம்பட படித்தவர், மிகவும் திறமைசாலி. ஞானத்துடன் எந்த பிரச்சனையும் தீர்த்துவிடுவார். ஆனால் அவரின் தந்தை, ஒரு குருவானவரிடம் சமைப்பவராக இருந்த ஏழை. இதுதான் நத்தையில் வந்த முத்து எனலாம்.

எலி வளையானாலும் தனி வளை வேண்டும் :

நம் நாடு வளர்ந்து வருகின்ற இந்நாள்களில், தங்களுக்கென்று நல்ல வீட்டை கட்டிக்கொள்ள பெரும் முயற்சிக்கிறார்கள். கடன் பட்டாலும் பரவாயில்லை. தனி வீடு வேண்டும். வாடகை வீடு தான் லாபம். அதை உணர்வதில்லை. எனவேதான் ரியல் எஸ்டேட் தொழில் இப்போது கொடி கட்டி பறக்கிறது. எலி வளையானாலும், தனி வளை வேண்டும் என்ற பழமொழி உண்மையாகி வருகிறது.
இரும்பும், குரும்பும் இருக்க இருக்க கெடும் :

முறுக்கி வளர்க்காத மீசையும் அடித்து வளர்க்காத பிள்ளையும் சிறப்படையா என்பர். பிள்ளைகள் இயற்கையாக விபரம் தெரியாமல் விளையாடுவார்கள். வளர வளர விபரம் தெரியும். சிறுபிள்ளை ஒன்று, பிள்ளைகளின் கபடற்ற நிலை ஒன்று. குறும்பு என்பது விபரம் அறிந்தும், பொறுப்பில்லாமல்; நடக்கிற நிலை. வநதியுள்ளவர்களின் பிள்ளைகள், பெற்றோர் கொடுக்கும் கடடுக்கடங்காத செல்லத்தினால் கெடடுவிடுவர். இது ஓரளவு குறும்பு பண்பு எனலாம்.

No comments:

Post a Comment

Ads Inside Post