Pages - Menu

Showing posts with label Family. Show all posts
Showing posts with label Family. Show all posts

Thursday, 2 November 2017

ஒன்றாய் இருப்பார்களாக

ஒன்றாய் இருப்பார்களாக

 - நல்லை இ. ஆனந்தன், வேதியர் 

கணவனும் மனைவியும் சண்டையிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் கதவு தட்டப்பட்டது. திறந்தால் வானதூதர் நின்று கொண்டிருந்தார். உங்களில் ஒருவரை மோட்சம் அழைத்துப் போக வந்திருக்கிறேன். யாரை நான் அழைத்துச் செல்ல என்று நீங்களே முடிவு செய்யுங்கள் என்றார். உடனே மனைவி சொன்னாள். என் கணவரை தயவு செய்து மோட்சத்துக்கு அழைத்துப் போங்கள். அவர் போனால் எனக்கு வீடே மோட்சமாகிவிடும் அதற்கு கணவர் சொன்னார், இவளை நீங்கள் அழைத்துப் போங்கள் இவள் போனால் எனக்கு இந்த உலகமே சொர்க்கமாகிவிடும்  வானதூதர் திகைத்து நின்றார்.

இது கற்பனைக் கதையல்ல. நிஜத்தின் நிழல். உண்மையின் உரைகல். இருமனங்கள் ஒரு மனமாவது திருமணம் என்ற காலகட்டம் இப்போது மலையேறிவிட்டது. நான் பேச நினைப்பதெல்லதாம் நீ பேச வேண்டும், நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் என்று கணவர் மனைவியிடம் கண்டிசன் போட முடியாத காலம் இது. நீ காணும் உலகத்தை நீயே பாரு. நான் ஏன் பார்க்க வேண்டும்? என்று மனைவி எதிர்ப்புக்குரல் எழுப்பும் காலகட்டம் இது. காரணம் இந்த உலகம் எல்லாவற்றிலும் வளர்ந்துவிட்டது.

திருமணம் என்பது ஆணும் பெண்ணும் இணைந்து, ஆனந்தமாய் வாழ ஆண்டவர் ஏற்படுத்திய, அற்புத அமைப்பு. ஆனந்தக்கொடை ஆனால், நிகழ்காலத்தை விட்டுவிட்டு, கடந்தகால நிகழ்வுகளை நினைத்துப் புலம்பிக்கொண்டு, எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இழந்து இறைவன் பாதுகாப்பார் என்பதையும் மறந்து, வேதனை, விரக்தி, நிராசை, கோபம், சந்தேகம், சண்டை, சச்சரவு, குடி, அடிதடி, வன்முறைகள் என்று  குடும்பத்திற்குள்ளே ஒரு மூன்றாம் உலகப்போர் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

இரு பூசணிக்காய்களை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி வைத்தது போல ஒட்டாமல், உறவாடாமல் தம்பதியர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். விதிவிலக்காக, சில குடும்பங்கள் புளிமூட்டை போல உறவாடுவதாக ஒட்டியிருப்பதாகத் தோற்றம் அளித்தாலும், ஆழ்மனத்தில் சில புழுத்த விதைகளையும் மறைத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நூற்றில் இரண்டுபேர் விவாகரத்து பெற்றுவிடுகின்றனர். ஆனால் நூற்றில் ஐம்பதுபேர் குழந்தைகளின் எதிர்காலத்தையும் உறவினர்களின் ஞானத்தையும், கத்தோலிக்க நம்பிக்கையையும் மனதில் கொண்டு குடும்பமாக வாழ்வதாக நடித்துக்கொண்டிருக்கிறார்கள் விவாகரத்து பெறுவதை மணமுறிவு என்று பெயரிட்ட தமிழ் குடிமகன்கள். இந்த மன முறிவு பெற்ற தம்பதிகள் நிலையை மனவிலகல்  என்று புதுப்பெயரிட்டு அழைக்கிறார்கள் உலகமும், கிறித்தவமும் உட்கார்ந்து குடும்பத்தின் மாண்பு பற்றி ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் இந்த மனவிலகல் நோய் ஓர் ஆட்கொல்லி நோய். உயிர் கொல்லி நோய். இதை வளர விடுவது உலகத்தின் உயர்வுக்கே தடையாகிவிடும். உடனடியாக கவனிக்க வேண்டிய கொள்ளைநோய் இது. இந்த மனவிலகல் எதனால் ஏற்படுகிறது? குடும்பத்தில் மனைவியர் சந்திக்கும் சவால்களில்தான் இது ஆரம்பிக்கிறது.

பொறுப்பு இல்லாத கணவராக இருப்பது, மனைவியை ஓர் அடிமையாக நினைப்பது, ஊதியத்தில் நியாயமான பங்கை குடும்பத்திற்கு வழங்க மறுப்பது, குழந்தைகளைப் பற்றி  அக்கறையின்றி இருப்பது, எதற்கெடுத்தாலும் குற்றம் காண்பது, குடிபோதையில் அதிகமாக ஆழ்வது, பாலுறவில் அளவுக்கு அதிகமான நாட்டம் கொள்வது, பிற பெண்களோடு தொடர்பு கொள்வது, மனம் திறந்து பேச மறுப்பது, மனைவியின் வீட்டை மட்டம் தட்டிப் பேசுவது, சந்தேகப்படுவது, அதிகாரத் தோரணையில் அமட்டுவது, வன்முறையில் இறங்குவது, சமைப்பதைப் பற்றி குறைவாகக் கூறுவது, ஆசிட் வீசுவது, அரிவாளைத் தூக்குவது என்று உடல் ரீதியான தாக்குதல்களை கணவர் ஆரம்பிக்கும்போது மனைவிக்கு மனவிலகல் நோய் ஏற்படுகிறது.

ஆனால் கணவர்கள் குடும்பத்தில் சந்திப்பது உளவியல் ரீதியான தாக்குதல்கள். இது அதிக வலுவான தாக்குதல்கள். மற்றவர்கள் முன்னிலையில் கணவரை அவமதிப்பது, யாரோடு பேசினாலும் கண்காணிப்பது, வாழ்வின் எல்லா நேரங்களிலும் தன்னோடு மட்டுமே இருக்க  வற்புறுத்துவது, கணவரின் இயலாமைகளைச் சொல்லிக் காட்டி சிறுமைப்படுத்துவது, முட்டாள், எதற்கும் லாயக்கில்லாதவன் என்று காயப்படுத்தும் வார்த்தைகளைப் பேசுவது, தன் விருப்பப்படி நடக்கவில்லை எனில் விட்டுவிட்டு ஓடிப்போவேன் என்று மிரட்டுவது, நினைத்தது நடக்கும் வரை அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவது. கணவரின் கைபேசி, கணினிகளை ஆராய்வது வேவு பார்ப்பது, சில நேரங்களில் கையில் கிடைத்த பொருட்களால் தாக்க ஆரம்பிப்பது, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டுவது, காவல் நிலையத்தில்  போய் பொய் புகார் கொடுப்பது, குழந்தைகளை தூக்கிட்டு போயிடுவேன் என்று மிரட்டுவது, குழந்தையிடம் உன் அப்பா, ஒரு குடிக்காரன், ஊதாரி, பொறுப்பற்றவர் என்று பேசிப்பேசி குழந்தையின் மனதில் அப்பாவைப் பற்றி தப்பான கருத்தை உருவாக்குவது,...... இதுபோன்ற இன்னும் பல கணவருக்கு மனைவியோடு மனவிலகல் நோயை ஏற்படுத்தலாம்.

அடுத்த சில ஆண்டுகளில் உலகம் சந்திக்கப் போகும் ஆபத்துகளைப் பற்றி பேசி வருகிற இத்தொடரில், மனவிலகல்தான் உலகம் முழுவதும் பேராபத்தை விளைவிக்கக் கூடிய ஒன்றாகத் திகழப் போகிறது என்கிறார்கள்.  தயவுசெய்து வீட்டிலே  எதிரிகளாக நடிப்பதை விட்டுவிட்டு, நண்பர்களாகவே பிரிந்து போய் வாழுங்கள் என்று சொல்லலாம் என்றால் கடவுளின் நோக்கம், இயேசுவின் நோக்கத்திற்கு அது எதிராக அல்லவா மாறிவிடும்? இனி அவர்கள் இருவர் அல்ல, ஒருவரே, என்றும் எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக, கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருப்பாராக என்று கிறிஸ்துவத்தின் மதிப்பீடுகளுக்கு எதிராக அல்லவா போய்விடும்?

இறைக்குடும்பமும், திருக்குடும்பமும் எப்படி ஒன்றாய் இருக்கிறார்களோ அப்படியல்லவா நம் குடும்பம் இருக்க வேண்டும். முதல் குடும்பத்தில் இருந்த ஆதாம் ஏவாளைப் போல வாழவா ஆண்டவர் நம்மைப் படைத்தார்? சிறுபிள்ளைகளுக்கு அறிவுரை கூறலாம். ஆனால் கணவன் மனைவி பெற்றோர் நிலைக்கு உயர்ந்த விட்ட நிலையில் அவர்களுக்கு அறிவுரை கூறுவது என்பது சிறுபிள்ளைத் தனமானது.

புனித பவுலடியாரின் வார்த்தைகளைக் கேளுங்கள். திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள். ஆண்டவரைச் சார்ந்து வாழ்வோருக்கு இதுவே தகும். திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். அவர்களைக் கொடுமைப்படுத்தாதீர்கள் (கொலோசை 3:18-19).

அன்பான தம்பதியரே, கடவுள் முன்னிலையில் கைகளை கோர்த்துக் கொண்டு, வாக்குறுதி அளித்ததை நினைவு கூறுங்கள். உன்னை ஏற்றுக் கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும் உடல்நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாயிருந்து என் வாழ்நாளெல்லாம் உன்னை நேசிக்கவும், மதிக்கவும் வாக்களிக்கிறேன். என்ன ஞாபகம் வந்துவிட்டதா? ஏற்றுக்கொள்ளல், நேசித்தல், மதித்தல், பிரமாணிக்கமாயிருத்தல் இந்த நான்கும்தான் மனவிலகல் நோயை அழிக்கும். ஒழிக்கும். உலகமெங்கும் மிக வேகமாக பரவிவரும் மனவிலகல் நோய்க்கு உடனே முடிவுகட்டுங்கள்.

இதைச் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? 
     

Tuesday, 4 July 2017

குடும்பத்தின் மகிழ்வே, திருச்சபையின் மகிழ்வு - அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

குடும்பத்தின் மகிழ்வே, திருச்சபையின் மகிழ்வு
- அருள்பணி. அ. பிரான்சிஸ், பாபநாசம்

மனிதர் ஒரு சமூக உயிரி. மண்ணகத்தில் உதயமானதும் தாய் மடியில் கிடத்தப்படும் குழந்தை, தந்தை, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை போன்ற உறவு வட்டத்துள் வளர்கின்றது. தான் வளர்ந்து வாழும் சமூக, சுற்றுப்புறச் சூழலின் படைப்பாக ஒரு மனிதர் மாற்றம் பெறுகின்றார். இவரது வளர்ச்சியில் முதலிடம் பெறுவது இவரின் குடும்பமே. இக்குடும்பத்திலிருந்தே சமூகத்தோடு தொடர்பு ஏற்படுகின்றது. தான் வாழும் சமூகத்தில் பலரோடு கொண்டுள்ள உறவின் காரணமாகக் கோபம், மகிழ்ச்சி, வருத்தம், பயம், ஆச்சரியம், சந்தேகம், சோகம் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகின்றார். இதனையே மனிதர் உணர்ச்சிகளால் ஆளப்படுகிறார் என்று உளவியலாளர் கூறுகின்றனர்.
  
அனைவரும் விரும்பும் உணர்வு:

பல்வேறு உணர்ச்சிகளுக்கு நாம் உட்படுத்தப்பட்டாலும் அனைவராலும் விரும்பப்படுவது மகிழ்ச்சி என்ற உணர்வே. அனைவரும் தேடுவது மகிழ்ச்சியையே. நமது வாழ்வின் துக்கம் நிறைந்த அல்லது வருத்தம் தரும் நிகழ்வுகளை மறக்கத் துடிக்கும் நாம் மகிழ்ச்சியான அல்லது சந்தோ­மான தருணங்களையே நமது நினைவில் அசைப் போடத் துடிக்கின்றோம்.

தோச மில்லா சந்தோ­ம்:

தோ­ம் என்பது நமது மரபில் தீண்டத்தகாத வார்த்தையாக வாழ்வின் தீமைகளை நிறைந்திருக்கும் கருத்தியலைக் கொண்டுள்ளது. ஆனால் சந்தோ­ம் என்னும் மகிழ்ச்சியினை அனைவருமே  விரும்புகின்றனர். எங்கே மகிழ்ச்சி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்று மனித மனம் அலை மோதிக் கொண்டிருக்கின்றது. 
ஆக, மகிழ்ச்சி என்பது என்ன?

மனித உள்ளத்திலிருந்து  எழும் ஆழமான ஓர் இனிய உணர்வே மகிழ்ச்சியாம்.  இயற்கையில் கொட்டிக் கிடக்கும் கொள்ளை அழகில் லயித்து வரும்போது கிடைக்கும் மகிழ்ச்சி. மனம் விரும்பும் நண்பர்களோடு நட்பினைப் பகிர்ந்து கொள்ளும் போது கிடைக்கும் மகிழ்ச்சி. தன்னை ஆளாக்கிய பெற்றோர், ஆசான்களோடு செலவழிக்கும் நேரம் தருகின்ற மகிழ்ச்சி. ஆன்மிக ஈடுபாட்டோடு கண்களை மூடி ஏகப்பொருளோடு தியானத்தில் அமர்ந்து செபிக்கும் போது நாம் பெறும் மகிழ்ச்சி. இவையயல்லாம் நீதிமிக்க, நியாயமான, மனதுக்கு திருப்தி தரக்கூடிய மகிழ்ச்சியாகும்.

ஆனால் இன்னொரு வக்கிரமான மகிழ்ச்சியும் உண்டு. அதுதான் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலின வன்கொடுமை போன்ற அநீதி செயல்களின் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி. இறையாசீர் பெற்றுத் தருவது முந்தையது. மனிதரின் கோபத்தையும், இறை சாபத்தையும் பெற்றுத் தருவது பிந்தையது. மனமகிழ்வும், மனசாட்சியின் குடைச்சலும் ஒத்துப் போகுமா?

விவிலியம் காட்டும் மகிழ்ச்சி:

* உம் கட்டளைகள் காட்டும்  நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில் அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். திபா 119:35.
* தீங்கிழைப்பது மதி கெட்டோருக்கு மகிழ்ச்சி தரும் விளையாட்டு; ஞானமே மெய்யறிவுள்ளோருக்கு மகிழ்ச்சி தரும்           நீமொ 10:23
* ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே மாட்சியும் பெருமையுமாகும்; அதுவே மகிழ்ச்சியும் அக்களிப்பின்   மணி                முடியுமாகும்.  - சீஞா 1:11

* உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கி விட        முடியாது. - யோவா 16:22
* சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில்          திளைத்திருந்தார்கள். - திப 13:52
* ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும்         சேர்ந்து துன்புறும். ஓர் உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன்                  எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும். - 1 கொரி 12: 26


* தூய ஆவியின் கனியோ அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை. ‡கலா 5:22

மத்தேயு நற்செய்தியாளர் காட்டும் மகிழ்ச்சி 

வாழ்வு நெறி முறைகள்:

புனித மத்தேயு நற்செய்தியாளர் நமது வழிபாட்டுக்கும், வாழ்வின் மகிழ்ச்சிக்கும் இறுதியாக, விண்ணக வீடு பேற்றினை அடைவதற்கான வாழ்வியல் நெறிமுறைகளை 5,6,7 ஆகிய அதிகாரங்களில் சுட்டிக் காட்டுகின்றார்.
1. நாம் பேறுபெற்றவர்களாக வாழ்வதற்கான எட்டு அழைப்புகள் (மத் 5:3‡16)
2. கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கும் ஆறு விதமான நன்மைத்            தனங்கள் (மத் 5:17-48)

3. கடவுள் விரும்பும் மூவகை பக்திநெறிகள் (மத் 6:1‡18)
4. கடவுள் விரும்பும் பணி (மத் 6:19-29)
5. கடவுள் எதிர்பார்க்கும் நம்பிக்கை (மத் 6:25-34)
6. நமக்கு அடுத்திருப்பவரை நடத்தும் முறை (மத் 7: 1-12)
7. நமது அழைப்புக்கேற்ற வாழ்வு (மத் 7:13-27)
       
 நாம் வாழும் முறை நம் உள்ளத்திலும், மனித உறவிலும் சமூகத்திலும் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அதுவே கிறிஸ்து வழங்கும் மகிழ்ச்சியாக அமையும். 

பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள் இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசுகின்றார் (எபி 1:1,2). திருப்பலி, அருள் அடையாளக் கொண்டாட்டங்கள், திருப்புகழ்மாலை ஆகிய அனைத்தும் நிறை மகிழ்வினை நமக்குக் கொணரும் என்பது திண்ணம்.

 திருத்தந்தை பிரான்சிஸ் : 

‘சன்னல்களைத் திறந்து விடுங்கள், புதிய காற்று உள்ளே வரட்டும்’ என்றுரைத்து திருத்தந்தை 23 ஆம் யோவான் இரண்டாம் வத்திக்கான் பேரவையினைத் தொடங்கி வைத்தார். இதன் பின்னரே திரு அவை பற்றிய சரியான புரிதல் உலக அரங்கில் ஏற்பட்டது. மனம் இறங்குபவரே உண்மையான நேர்மையாளர் (திபா 37:21) என்னும் தொனியோடு 2013 ஆம் ஆண்டு நேர்மையாளர் புனித யோசேப்பு விழாவன்று திரு அவையின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார் பிரான்சிஸ். இவர் மானுடம் தனது இதயங்களைத் திறக்க வேண்டும் என்பதனை தனது முழக்கமாக்கி வருகின்றார். மேற்காணும் சிந்தனைதான் இவரின் சுற்று மடல்களிலும், திருத்தூது  ஊக்க உரைகளிலும் மையமாக உள்ளது. இரக்கமுள்ள அன்பில் நம்பிக்கை வைத்துச் செயல்பட நம்பிக்கையின் ஒளி  என்னும் சுற்று மடல். இயற்கை இறைவனின் கொடை. அதை அன்பு செய்து பராமரிப்பது நமது கடமை என்பதனைச் சுட்டிக் காட்டும் இறைவா உமக்கே புகழ்  என்ற சுற்று மடல். நற்செய்தியின் மகிழ்ச்சி  என்னும் திருத்தூது  ஊக்க உரை. இரக்கம் உள்ளவராய் வாழ்வதே உண்மையான நற்செய்திப் பணி என்னும் கருத்தியலை வலியுறுத்துகிறது.

இரக்கத்தின் முகம் என்ற ஆணை மடல். இதன் மூலம் இரக்கம் என்பது தந்தையின் செயல்பாடு மட்டுமன்று. அவருடைய உண்மைப் பிள்ளைகள்  யார் என்பதை உறுதிப்படுத்தும் அளவுகோலாகவும் அது உள்ளது. (எண்:9) போன்ற செயல்பாட்டுச் சிந்தனைப் பெட்டகம். குடும்ப வாழ்வு எங்கெல்லாம் நிறைவுற்று, மகிழ்ச்சியிலும், அமைதியிலும் குறைவுற்று உள்ளதோ அங்கெல்லாம் பரிவிறக்கம், உறவு நெருக்கம் ஆகியவற்றின் மூலம் இறையன்பினைச் சுவைத்து  அந்த அன்பினை இயற்கையிலும், மானுடம் முழுமையிலும் குறிப்பாகக் குடும்ப வாழ்விலும் வெளிப்படுத்திடல் வேண்டும். இந்தக் கருத்து திருத்தந்தையின்  அன்பின் மகிழ்ச்சி  என்னும் திருத்தூது ஊக்க உரையின் வழியாகத் தெளிவாக்கப்படுகின்றது.

 பொது நிலையினரின் ஈடுபாடு:

பொது, பொதுமை - சமத்துவத் தன்மை. நில் என்ற வார்த்தையிலிருந்து எழும் நிலை. நிலைத்த என்னும் பொருள். ஆக பொது நிலையினர் என்ற சொல்லுக்கு சமத்துவத்தில் நிலையாயிருப்போர் என்று அர்த்தமாகும். இதன் பின்னணியில்தான் பொது நிலையினர் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.  நமது மறை மாவட்டத்தில் பங்குப் பேரவை, நிதிக்குழு போன்றவையும் பொது நிலையினரின் ஈடுபாட்டினை அதிகரிக்கும் விதமாக அன்பியங்கள் பக்த சபைகள் போன்ற அமைப்புகளும் அதிகம் உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில் இறைமக்களே திருச்சபை. மக்களைக் கொண்டு, மக்களாலே, மக்களுக்காகச் செயல்படும் திருச்சபையாக நமது திருச்சபை மாற்றம் காண வேண்டும்.

அருள் வாழ்வு ஊற்றெடுக்கும் குடும்பம்:

மனிதர், தான் உணரும் தனிமையைப் போக்கக் கூடிய தனக்குத் தகுந்த துணையைத் தேடியதாக
விவிலியம் கூறுகிறது (தொநூ 2:18 ‡20). அவன் பெறும் உயர்ந்த கொடையாக அவனுடைய ஏற்ற துணை கருதப்படுகின்றார் (சீஞா 36:24).  இருவரும் இணைந்து உருவாக்கும் குடும்பத்தில் அவர்கள் உடலும், உள்ளமும் நெருக்கமாய் இருப்பது போன்று இணக்கத்துடன் இருப்பார்கள். இவ்வாறு அவர்கள் ஓருடலாய் மாறுகின்றனர். குடும்பத்தில் பெற்றோர் அடித்தளம் என்றால் குழந்தைகள் அக்குடும்பத்தின் உயிருள்ள கற்கள் போன்றவர்கள். இவர்கள்தான் குடும்பத்தின் தொடர்ச்சியான அடையாளமாக உள்ளார்கள்.

திருமணத்தைப் பிள்ளை பேற்றுடன் மட்டுமே இணைத்துப் பார்ப்பது தவறு. திருமணத்தின் முறிவுபடாத் தன்மையை தங்கள் மீது சுமத்தப்பட்ட நுகத்தடியாகத் தம்பதியர் கருதலாகாது. உண்மையான அழகு என்பது உடல் சார்ந்த அல்லது மனம் சார்ந்த கவர்ச்சியிலிருந்து வேறுபட்டது. அது அடுத்தவரின் புனிதத்தைப் போற்றச் செய்வது. அதனால் இல்லறத்தில் மகிழ்ச்சி ததும்பிட நன்றி - தயவு செய்து  - வருந்துகின்றேன் ஆகிய வார்த்தைகள் அவசியம் தேவை.
குடும்பம்தான் சமுதாயம் சார்ந்த செயல்பாடு களுக்கான முதன்மைக் களம். தொழில் நுட்ப வளர்ச்சியின் வேகத்தால் ஆதிக்கம் செய்யப்படுகின்ற நமது காலச் சூழலில் விமர்சனப் பார்வையோடு விழுமியச் சிதைவுகள் இன்றி பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டும். மேலும் இல்லம் என்பது இறை நம்பிக்கையின் பொருளையும், அழகையும் பாராட்டவும், இறைவேண்டல் செய்திடவும், அடுத்தவர் களுக்குத் தொண்டாற்றிடவும் கற்றுக் கொடுக்கும் இடமாக அமைய வேண்டும்.

மகிழ்ச்சி நிறை குடும்பமே, மகிழ்ச்சி நிறை சமுதாயம் படைக்கும். அதனைப் போன்றே மகிழ்ச்சி நிறை குடும்பமே. திருச்சபையின் மகிழ்வு.

Saturday, 3 September 2016

குடும்பம் சமுதாயத்தின் உயிர்நிலை
புலவர் இ. அந்தோணி, ஆசிரியர் (ஓய்வு),
சிறிய மலர் மே.நி. பள்ளி, கும்பகோணம்.               

குடும்ப  உறவு  வளர பத்து வழிகள்
எங்கோ பிறந்த ஒரு இளைஞனும், எங்கோ பிறந்த ஒரு பெண்ணும் ஒன்றாக இணைவதே குடும்பம் என்ற மண்ணகத்தின் விண்ணகம். ஆனால் ஆணும் ‡ பெண்ணுமாக ஒன்றித்து நிற்றல் இன்றைய காலக்கட்டத்தில், இக்கட்டான அனுபவமாக திகழ்கிறது. பாரதிதாசன், ஒருவர் தன் மனைவியின் செயல்பாடுகளைப் போற்றி மகிழ்வதாக எழுதுகிறார்.
           “தையல் என்றன் வீட்டில் - நீ      
             சமையல் செய்யும் போதுக்
              கையழகு பார்த்து - நான்
              களித்திடுவேன் பெண்ணே
              விட்டுப் பிரியாதே - எந்த
              வேலையிலும் மாதே
              ஆறுதலைச் செய்வாய் ‡ என்
             அண்டையிலிருந்தே”

அத்தகைய ஒன்றிப்பை வளர்க்க தமாரா பாசி என்பவர் பத்து இரகசியங்களைக் கூறுகிறார். அவைகள் நம் குடும்பங்களுக்கு பயனளிக்கும். அந்த இரகசியங்களின் கருத்துக்கள் கீழ்க்காண்பவை :
1. ஒருவர் மற்றவருக்காக செபிக்க வேண்டும். செபத்தால் மனம் ஒன்றிக்கும்.

2. பிள்ளைகள், நண்பர்கள் மற்ற உறவினர்களுடன் பேசும்போது, உங்களின் மனைவியைப் பற்றியோ, கணவனை பற்றியோ உயர்வாகவே பேசுங்கள்.

3. மற்றவர்களுடன் உங்கள் மனைவியையோ, கணவனையோ ஒப்பிட்டு குறைவாக பேசாதீர்கள்.

4. உங்கள் உடல்நலத்தை கவனமாக காப்பாற்றுங்கள். பலம் தரும்  உணவு, நல்ல  உடற்பயிற்சி, தேவையான உறக்கம் ஆகியவைகளால் உடல்நலத்தை பேணுங்கள். நல்ல உடல்நலம், மேன்மையான உணர்வுகளை பெற்றுதரும்.

5. உங்களின் உணர்வு சிக்கல்களுக்கு நீங்கள்தான் காரணம் என்று உணருங்கள். மற்றவர்கள் மீது குறைகளை சுமத்தாதீர்கள். நீங்கள் மனந்தளர்ந்து போயிருந்தாலோ, சோகமாக இருந்தாலோ, அவைகளை உணர்ந்து கொண்டு அதிலிருந்து விடுபட நீங்களே முயலுங்கள்.

6. சிறு காரியங்களிலிருந்துதான் கணவன் ‡ மனைவி இவர்களுக்குள் பெருத்த கருத்து வேறுபாடு தோன்றுகிறது. எனவே, வீடு சுத்தம் செய்தல், பில்களை சரியான நேரத்தில் கட்டுதல்,  உடைகள் வெளுத்தல் ஆகியவைகளில் கவனமாக அவரவர் பங்கினை செய்ய வேண்டும்.

7. திருமண வாழ்வில் ஒன்றித்து மகிழ்ச்சியாக வாழ்பவர்களுடனும், திருமண வாழ்வை சிறப்பாக கருதுபவர்களுடனும் பழகுங்கள். தன் கணவனை குறைகூறும் மனைவி ஒருவருடன் ஒரு பெண் நட்புக் கொண்டால், தன் கணவரைப் பற்றி குறைகூறும் பழக்கம் அவருக்கும் உண்டாகும். அதே போலதான் ஆண்களும், திருமண வாழ்வை  எள்ளி  நகையாடும் நண்பர்  கூட்டத்தில் சேர்ந்தால், தன் குடும்ப வாழ்வைப் பற்றிய கசப்பு அவருக்கு உண்டாகும். உணர்வுகள், தொற்றிக் கொள்ளும் வியாதியைப் போன்றவை.

8.           உங்களின் அன்பை செயலில் காட்டுங்கள். மனைவி சமைக்கும்போது, கணவர் வீடு கூட்டுவதை பார்த்திருக்கிறேன். வீட்டுப் பணிகளை இணைந்து செய்யும்போது, கணவன் மனைவி ஒன்றிப்பு வளரும்.

9. உங்களின் அன்பை வார்த்தைகளிலும் வெளிப்படுத்துங்கள். நல்லவைகளை பாரக்கும் போது மனமாற பாராட்டுங்கள். சமையல் நன்றாக இருக்கும் போது, வீடு அழகுபடுத்தப்பட்டிருக்கும் போது, வேலைகளில் பிறரின பாராட்டை பெற்றிருக்கும்போது, மனந்திறந்து பாராட்டுங்கள்.

10. குடும்பம் ஒரு குழுவினர் செயல்பாடு என்பதை ஒன்றித்து செயல்படுங்கள். குழுவினர் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் குழுவின் குறிக்கோள், நோக்கம் நிறைவாகும்.
ஆதாரம் : இணையதளம், தமாரா பாசி

   www.whyigetup.blogspot.com
புரிதலின் திருமணம்

ஒரு பெரிய அரங்கம். 25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதியைத் தேர்ந்தெடுத்து  ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது. நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்து கொண்டார்கள். அதில் ஒரு மனைவி, அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்ல சொல்ல கேட்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க என்றபடி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தார்! கொஞ்ச நேரத்தில் போட்டி தொடங்கிறது. கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்வி கேட்டார்கள். கலந்து கொண்டவர்களில் பெரம்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதில்களை சொன்னார்கள். அதில் ஒரு தம்பதி சொன்ன பதில்கள் அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும், பரஸ்பர புரிதலும் விட்டு கொடுத்தலும் நிறைந்திருந்தது. அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண் 100 / 100. எல்லோருக்குமே தெரிந்து விட்டது அவர்கள்தான் ஜெயிக்க போகிறார்கள் என்று.   எல்லோரிடமும் கேள்வி கேட்டு முடித்த பின் நூறு மதிப்பெண்கள் வாங்கிய அந்த சிறந்த தம்பதியையும், மிகக் குறைவாக பூஜ்யம் மதிப்பெண் வாங்கிய ஒரு தம்பதியையும் மேடைக்கு அழைத்தார்கள். பூஜ்யம் வாங்கியது வேறு யாரும் இல்லை. வரும்போதே சண்டை போட்டுக் கொண்டு வந்தார்களே அவர்கள்தான். இரண்டு தம்பதிகளும் மேடைக்கு வந்தார்கள். 

ஜீரோ மதிப்பெண் பெற்ற தம்பதியை அழைத்து காதல் திருமணமா என்று கேட்க, இல்லை ழிrrழிஐஆed துழிrrஷ்ழிஆe என்றார்கள். எத்தனை குழந்தைகள் என்றதற்கு, நான்கு என்றார்கள். திருமணம் ஆகி எவ்வளவு வருடங்கள் ஆகிறது என்றதற்கு 35 வருடங்கள் என்று சொல்ல எல்லோரும் சிரித்து விட்டார்கள். 35 வருடங்களாகியும் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ளவில்லை என்று ஏளனமாய் கேலி பேசினார்கள். அவமானம் தாங்க முடியாமல் அவர்களுக்கு அழுகைவர கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார்கள். ஆனால் போட்டியின் நடுவர் இந்த போட்டியில் கலந்துக் கொண்ட தம்பதிகளில் மிக சிறந்த தம்பதி இவர்கள்தான் என்று அறிவித்து ஜீரோ மார்க் வாங்கிய தம்பதிக்கு காரை பரிசளித்தார்.
காரணம் .... எல்லாவிதமான பொருத்தங்களோடும் 25 வருடங்கள் வாழ்வது பெரிய வி­யம் கிடையாது. எந்த ஒரு மன ஒற்றுமையும் புரிதலும் இல்லாவிட்டாலும் 35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்களே இதுதான் உண்மையிலேயே மிகப் பெரிய வி­யம் என்று பாராட்டினார். இருவரும் ஆனந்த கண்ணீரோடு கார் சாவியை வாங்கிக் கொண்டு செல்ல எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.
சிறிது நேரத்தில் எல்லோரும் கலைந்து செல்ல, தூரத்தில் யாரோ சண்டை போடுவதுபோல சத்தம் கேட்டது. எல்லோரும் திரும்பி பார்க்க, காரை சுற்றி சுற்றி வந்தபடி அந்த மனைவி : நானும் எத்தனையோ நாள் தலைபாட அடிச்சிக்கிட்டேன், சும்மா இருக்கிற நேரத்தில ஏதாவது உருப்படியா பண்ணுங்கன்னு. டிரைவிங் கத்திருந்தாலாவது இந்நேரம்  உபயோகமாக இருந்திருக்கும். உங்கள கட்டிகிட்டு என்ன சுகத்தை கண்டேன்.... என திரும்ப, கணவனும் பின்னாலேயே சுற்றிவர, எதுக்கு இப்படி குட்டி போட்ட பூனை மாதிரி சுத்தரீங்க? உங்களுக்குத்தான் மூட்டு வலி இருக்க இல்ல .... பேசாம ஒர் இடத்தில உட்காருங்க. அப்புறம் ராத்திரி பூரா லட்சுமி, லட்சுமின்னு பொளம்புவீங்க, நான்தான் என்னவோ, ஏதோன்னு எண்ணெய் தேச்சி விடனும். எனக்குன்னு பார்த்து கட்டி வச்சான் பாரு எங்கப்பன். சீமையிலே இல்லாத மாப்பிள்ளைய, அவன சொல்லனும் என்றபடி காரை சுற்றி சுற்றிவர வேடிக்கைப் பார்த்த தம்பதிகள் புன்னகையோடு விரல் கோர்த்து நடந்தார்கள். அன்பையும், காதலையும் வெளிப்படுத்த அழகான வார்த்தைகள்தான் வேண்டும் என்று யார் சொன்னது? மானங்கெட்ட கேள்வியிலும் மறைந்திருக்கும் காதல்.

Tuesday, 26 July 2016

குடும்பம் சமுதாயத்தின் உயிர்நிலை

குடும்பம் சமுதாயத்தின் உயிர்நிலை

தாய்மையின் தியாகம்

- புலவர். இ. அந்தோணி, 
சிறியமலர் மேனிலைப்பள்ளி (ஓய்வு) ஆசிரியர், 
குலமாணிக்கம்


பெண் குடும்பத்தின் விளக்காகிறாள். விளக்கு இருளை விலக்கி பொருளைக் காண்பிக்கிறது. பெண் ஓர் அணுசக்தியைப் போன்றவள். இரண்டு கிலோ அணுபொருள் ஒரு கப்பலை பல வருடங்களுக்கு இயக்கும் வல்லமைக் கொண்டது. அதேபோல பெண்ணில் ஆழ்ந்த சக்தி புதைந்துள்ளது. அந்த சக்தியை இயங்க அனுமதித்தால்தான் குடும்பங்கள் செழிக்கும். கிராமங்களிலும், ஏன் பணி செய்கிற பெண்களும் தங்களைவிட தன் குடும்பம்தான் அவர்களின் எண்ணங்களில் முழுமையாக ஓடிக்கொண்டிருக்கும். அவள் குடும்பத்திற்காக பம்பரமாக சுற்றுகிறாள். எனவேதான், மற்றவர்கள் எழுமுன், பெண் எழுந்து தான் வாழும் வீட்டினை தூய்மைப்படுத்துகிறாள். குடும்பத்தவர்க்கு தேவைப்படும் உடல் சக்தியான உணவை கவனமாக தயார் செய்கிறார். பிள்ளைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். கணவர் பணிக்குச் செல்கிறார் என்றால் அவர்களைப்  பற்றிய எண்ணமே அவளின் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கும். எனவேதான் பாரதிதாசனார் பெண்களின் குடும்ப ஈடுபாடு கொண்ட ஆர்வத்தைக் கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறார்.

பள்ளிக்குச் சென்றிருக்கும் பசங்களில்
சிறிய பையன் துள்ளிக் குதித்து 
         மான்போல் தொடர்ந்தோடி வீழ்ந்தானோ என்று
உள்ளத்தில் நினைத்தாள். ஆனால் 
        மூத்தவன் உண்டென்றெண்ணி தள்ளினாள்
அச்சம் தன்னை தாழ்வாரம் சேர்ந்தாள் நங்கை
        ஒட்டடைக் கோலும் கையும் உள்ளமும் விழியும் சேர்த்தாள் 
    கட்டிய சிலந்திக்கூடு கரையானின் கோட்டையயல்லாம்                தட்டியே பெருக்கி தூய்மை தனியரசாளச் செய்து
 சட்டைகள்தைய்ப்பதற்கு தையலைத் தொட்டாள் 

தையல் பெண்களின் ஈடுபாட்டு சக்தியைப் புரிந்துக் கொண்டு அவர்களுடன் நல்லுறவுக் கொண்டு, அவர்களின் முழு வல்லமையையும் வெளிக்கொணர்வதுதான் கணவரின் திறன்.

இல்வாழ்க்கை என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை” (குறள் 41).
ஒரு பெண் மனைவியாகவும் தாயாகவும் விளங்குகிறாள். இவ்விரண்டு பணிகளையும் செய்யும் ஆற்றல் பெற்றவளாக விளங்குகிறாள்.
தாய்க்குப் பிறகு நற்றாரமெனச் சொன்ன 
அவ்வாய்க்கு பெருமை வழங்குகின்றார் - வாய்க்கும் 
கனிமரத்தைப் பேணும் கடமை போல் கொண்ட
மனைநலம் பேணல் மதி - ஜெகவீர பாண்டியனார்.

கனிமரத்தை பேணுதல் போல் மனைவியை போற்றுதல் வேண்டும் என்கிறார் கவிஞர்.

பெண்கள் செய்யும் பெரும் பணிகளை உணராது சிறுமையாக நினைப்பதுதான் இல்லறத்தை வாளாலருக்கும் கொடுமையாகும்.

Friday, 1 July 2016

அன்பின் மகிழ்வு

அன்பின் மகிழ்வு

AMORIS LAETITIA. The Joy & Love

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதிய திருத்தூது மடலில் காணப்படும் கல்வியியல் கூறுகள் :
(சென்ற இதழ் தொடர்ச்சி)

- அருட்பணி. பிரான்சிஸ், பாபநாசம்

7. மேய்ப்புப்பணி செயல்பாடுகள் (199 - 258) :

இறைத்திட்டத்தின்படி உறுதியான பலனளிக்கும் குடும்பங்கள் உருவாக்கப்படல் வேண்டும். இந்த ஆறாம் அதிகாரம் குடும்பம் பற்றிய இரு பேரவை அமர்வுகளின் கருத்துக்கள், திருத்தந்தையர் பிரான்சிஸ் மற்றும் ஜான் பால் ஆகியோரின் மறைக்கல்வி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். குடும்பம் ஒவ்வொன்றும் தன்னையே நற்செய்தியாக்கிப் பிறருக்கும், நற்செய்திப் பணியாற்ற வேண்டும். எண் 202இல் அருள் பணியாளர்கள் குடும்பப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான பயிற்சியில் குறைந்து காணப்படுகின்றனர் என்று வருத்தத்தோடு திருத்தந்தை குறிப்பிடுகின்றார். ‘குருமாணவர்களின் பயிற்சி மனங்களை தீர்வு காணும் முறையிலும், தேர்ச்சி பெறும் முறையிலும் அமைந்திருக்க வேண்டும்’ (எண் : 203) என்று குறிப்பிடுகிறார்.
இல்லற வாழ்வின் ஓட்டத்தில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சனையிலிருந்தும் ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்கின்றோம். இத்தகு பின்னிணியில் குடும்பத்தில் உறவுப் பாலங்கள் உருவாகாது கருத்துப் பரிமாற்றத்தின் மூலம் மனங்கள் ஒருங்கிணைந்து வாழவேண்டும். எனவே திருமணத் தயாரிப்பு மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
பெருகி வரும் திருமண முறிவுகள் பற்றி கவலை கொண்டுள்ள திருத்தந்தை, சிறுகுழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படாதிருத்தலின் நிமித்தமாக திருமண முறிவு பற்றிய ஒரு சில நடைமுறை மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார்.
மணமுறிவு மாபெரும் தீமை. இது எண்ணிக்கையில் பெருகுவது வருத்தம் தரக்கூடியது. எனவே தம்பதியரிடையே அன்பின் பிணைப்பினை வலுவாக்குவதும், இவர்களின் மனக்காயங்களுக்கு மருந்திடுவதுமே மேய்ப்புப்பணியின் மேன்மையான அலுவல் ஆகும் (எண் : 246). கத்தோலிக்கர் மற்றும் கத்தோலிக்கரல்லாதோர், கத்தோலிக்கர் மற்றும் பிற மதத்தைச் சார்ந்தவர் மத்தியில் உருவாகும் திருமண உறவு நீடித்திருக்கவும் ஆவண செய்திடல் வேண்டும்.

8. குழந்தைகளுக்கான மேம்பாட்டுக் கல்வி நோக்கி (எண் 259 - 290) :

அறநெறிப் பயிற்சி, கட்டுப்பாடு, பொறுமைமிகு காத்திருப்பு, பாலினக் கல்வி, ஒருபாலினத்தோரிடையே திருமணம் போன்றவற்றில் தற்காலக் கல்வி முக்கிய பங்காற்றிட வேண்டும். சிறு குழந்தைகளின் மனதில் பாலியல் வல்லுறவு, வன்முறை, ஆகிய தீயன கண்டு அஞ்சிடும் மனப்பாங்கு என்ற, ஒரே திசை காட்டும் கருவியாக இன்றைய கல்வி அமைந்திருத்தல் அவசியமானதாகும். செக்ஸ் பற்றிய குற்றங்கள் பெருகிக் கொண்டே வருகின்றன. எனவே செக்ஸ் கல்வி, கல்விக் கூடங்களில் மிகவும் அவசியமாகக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அன்பிற்கான கல்வி மற்றும் பரஸ்பர தற்கையளிப்பு போன்ற பண்புகள் பரந்து விரிந்த மனப்பாங்கினை உருவாக்கும். இதுவே உன்னதக் கல்வியாகும் (எண் : 280). பாதுகாப்பான பாலுறவு இயற்கையான மக்கட்பேற்றினுக்கெதிரான சிந்தனை உருவாகிட வழிவகுக்கும். இது தொடர்ந்தால் சுய இன்பம் மற்றும் அடக்கி ஆளும் சக்தி போன்றவை ஏற்புடையினுக்கெதிராக மாற்றம் பெறும் (எண் : 283).

9. வழிகாட்டுதல், தேர்ந்தளித்தல் மற்றும் பலவீன ஒருங்கிணைப்பு (எண் : 291 - 312) :


இந்தப் பகுதியில் மேய்ப்புப்பணி புரிவோர் மேற்கொள்ள வேண்டிய இரக்கம் பற்றிக் குறிப்பிடுகிறது. இதனை விளக்குவதற்கு வழிகாட்டுதல், தேர்ந்து தெளிதல் மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற வழிமுறைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. இவை செயலாக்கம் பெற திருச்சபை ஒரு நடமாடும் மருத்துவமனை போல் செயல்பட வேண்டும் (எண் : 291). இல்லற வாழ்வு பற்றி திருச்சபை போதிக்காத நல்ல கருத்துக்கள் எங்கிருந்து வந்தாலும் திருச்சபை அதனை ஒதுக்கித்தள்ளிவிடலாகாது (எண் : 292). இறைவன் இரக்கம் மிக்கவர். நிபந்தனையற்ற விதத்தில் தகுதியற்ற நிலையிலிருந்தாலும் எல்லையில்லா அளவுக்கு நாம் இரக்கம் காட்ட வேண்டும் (எண் : 291).
மணமுறிவு அளித்து மறுமண வாழ்வினைத் தேர்ந்து வாழும் திருமுழுக்குப் பெற்றோர் முழுமையுமாகக் கிறிஸ்துவ குழுக்களில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். பிறருக்குத் தவறான முன்னுதாரணவாதிகளாகிய இவர்கள், தங்களின் செயல்பாடு தவறு எனப் புரிந்து, கத்தோலிக்கத் திருச்சபையோடு இணைந்து வாழத் துடிக்கும் இவர்கள் மீது, குழந்தைக்குரிய கரிசனையினை வெளிப்படுத்தி, கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்க்க, அருள்பணியாளர்கள்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் (எண் : 299). மேலும் திருமண உறவில் இணைந்திருப்போர், மணமுறிவு நிலைக்குத் தள்ளப்படாதவாறு அவர்களை அன்புக்கயிற்றால் பிணைத்து வாழச் செய்ய ஆவண செய்திடல் வேண்டும்.

10. இல்லற ஆன்மீகத்தில் வேரூன்றுதல் :

இல்லற வாழ்வில் ஏற்படும் இன்பம், துன்பம், விழாக்கள், மனமகிழ்வு நேரங்கள் ஏன் உடலின்ப அனுபவங்கள் கூட இயேசுவின் உயிர்ப்பில் முழுமையுமாகப் பங்கேற்க கூடியதாகத் திகழ்ந்திடல் வேண்டும் (எண் : 317). இறைவனின் பிரமாணிக்கத்திலும், நம்பிக்கையிலும் வேரூன்றி, உயிர்ப்பின் ஒளியில் குடும்பத்தில் ஏற்படும் அனைத்து அனுபவங்களும் ஆன்மீகத்தில் திளைத்திடும் வாய்ப்புக்களாகத் கருதி மூவொரு இறைவனில் இணைந்திருக்க வேண்டும். குடும்பங்களில் அன்பு புரிவதில் வளர்ச்சியும், முதிர்ச்சியும் நிறைந்திருத்தல் அவசியம். இதனால் விண்ணருளால் ஒன்றிணைந்த குடும்ப உறுப்பினர்கள் எந்த நிலையிலும் பிரிந்திடாதிருக்க முடியும். நான், எனது குடும்பம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து விலகி, பக்கத்து வீட்டாரையும் அன்பால் பிணைத்து உயரிய உன்னதமான நிலையினை அடைய வேண்டும் என்பதனைச் சிந்தையில் இருத்தி, ஒவ்வொருவரும் வாழ்ந்திடல் வேண்டும். நமது மனித பலவீனங்களைப் புறந்தள்ளி, அன்பின் முழுமையும் நிறைவுமான ஒரே பரம்பொருள்மீது முழுக்கவனத்தையும் இருத்தி வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம் (எண் : 325). உண்மை அன்பில் ஊறித் திளைக்கும் குடும்பமே நம்பிக்கையில் எழும் அனுபவ மொழியாகத் திகழும்.
இறுதியாக ... இன்பம் அளிப்பது அன்பு. அன்புள்ளம் கொண்ட மக்களாக நாளைய சமுதாயத்தினைப் படைக்கும் பொறுப்பில் உள்ளோர் கீழ்க்காணும் கருத்துக்களை கல்விக் கொள்கையாகப் பெற்றிருத்தல் பாராட்டினுக்குரியது.

1. மனசாட்சியின் குரலுக்குச் செவிசாய்க்க வைக்கும் கல்வி.

2. குடும்பத்தின் மாண்பினைக் கட்டிக் காக்கச் செய்வது கல்வி.

3. மனித மாண்பினையும், பாலின நிகர் நிலையினை முன்னிறுத்தும் கல்வி.

4. செக்ஸ் பற்றிய முதிர்ச்சியும், நல்புரிதலும் கொண்டது கல்வி.

Tuesday, 31 May 2016

புதுமையான தாய்மை

குடும்பம் சமுதாயத்தின் உயிர்நிலை
புதுமையான தாய்மை

புலவர் இ. அந்தோணி, ஆசிரியர் (ஓய்வு)

ஆண்டவனின் ஒப்பற்ற புதுமைப் படைப்பு தாய்மை இதயம். ஒரு பெண் பிள்ளையை பெறும்போது இயல்பாக உதயமாகும் பேராறு அது. எனவேதான் அன்னையை புகழாத அறிஞர்கள் இல்லை, கவிஞர்கள் இல்லை. ‘அன்னையின் இதயத்துடிப்பு மனிதனை மயக்கும் முதல் கவிதை’ என்கிறது ஒரு புதுக்கவிதை. ‘அம்மாவுக்கு என்று தனியாக கவிதை வேண்டாம். அன்பாக பழகிப்பார், அம்மாவே கவிதைதான்’ என்கிறது மற்றொரு கவிதை. பட்டினத்தார் என்ற சித்தர், இல்லாமையைப் பற்றி பாடுகிறவர் அவர் தன் தாயின் பிரிவை உள்ளுருகிப் பாடுகிறார். ‘பட்டியிலும், தொட்டியிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து ‡ முட்டச் சிறகிலிட்டு காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ விறகிலிட்டு தீ மூட்டுவேன்?’

விவாகரத்து பெற்று விட்ட அன்னையர், பெறும் பெரிய மன உளைச்சல், பெற்ற தன் பிள்ளையை பிரிந்து வாழ்கின்ற கொடுமைதான். எனவேதான், மேல்நாடுகளில், விவாகரத்து பெருகிவிட்ட நிலையில், அன்னையர் பெரும்பாலும் பெரிய மன நோய்களுக்கு உள்ளாகிறார்கள். வெள்ளமாக ஓடிவரும் தாய்பாசத்தை கணவன் - மனைவி பிரிவு என்ற வி­த்தால் உருவமற்றதாக மாற்றி விடுகிறார்கள். பாரதிதாசன் அவர்களும் தாயின் அன்பை உருக்கமுடன் பாடுகிறார்.

ஒப்புரைக்க முடியாத அன்னை என்னை
ஒருக்கணித்து மார்பணைத்து மேனியயல்லாம்
கைபுறத்தில் ஆம்படிக்குத் தழுவி என்றன்
கண் மறைக்கும் கரிகுழலை மேலொ துக்கி
மலர் வாயால் குளிர் தமிழால் கண்ணே
என்று செப்பி முத்தமிட்டாளே
அன்புள்ளாளின் செந்தாமரை
முகத்தை மறப்பேனோ நான்
என்கிறார்.

அன்னையின் பாசம் காயப்படுத்தப்படும் காலமும் உண்டு. பிள்ளைகள் வளர்ந்த பின்பும், அவர்கள் தனி குடும்பமாக மாறிய பின்பும், தாயின் அன்பு மாறுவதில்லை. முதியவர் இல்லத்தில் தாய் தள்ளப்படும்போதும், பெற்ற பிள்ளைகள், வளர்ந்த வயதில் தன்னை கண்டுக்கொள்ளாத போதும், அன்னையரின் பாசம் காயப்படுத்தப்படுகிறது. பிள்ளைகளை வளர்த்து, அவர்களைத் தனித்துவிட்டு அவர்கள் சிறப்பாக வாழ்வதைப் பார்த்து மகிழ்ந்திருப்பதுதான் சிறப்பு. தாயிடம் ஏன் இத்தகைய அன்பு ஏற்படுகிறது என்று கேட்டால், அது தொப்புள் கொடி உறவு. தாயின் இரத்தம்தான் பிள்ளையிடம் முதலில் ஓடியது. அதனின் வளர்ச்சிதான் இப்போது இருப்பது. சனோபர்கான் என்பவர் கூறுகிறார். ‘என் அன்னை ஒளிதரும் கதிரவன். அந்த சூரியனை, நான், தீய்ந்துபோகாமல் தொட முடியும், முத்தமிட முடியும்’ என்கிறார். கபியாரினிமனா என்பவர் கூறுகிறார் ‘அன்னையின் இதயத்தைப் போன்ற விண்ணகம் ஒன்று இல்லை’ என்கிறார். ஓர் அன்னையிடமிருந்து பிறந்தவர்தாம் நாம் அனைவரும். வானத்திலிருந்து நேரடியாக குதித்தவர்கள் அல்ல. நம் அன்னையை வணங்குவோம், அன்பு வழியும் அன்னையின் இதயத்தை போல், நம் உள்ளங்களையும் அன்பாலும், தியாகத்தாலும் நிரப்புவோம்.

அன்பின் மகிழ்வு AMORIS LAETITIA. The Joy & Love

அன்பின் மகிழ்வு

AMORIS LAETITIA. The Joy & Love

- அருட்பணி. பிரான்சிஸ், பாபநாசம்


திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதிய திருத்தூது மடலில் காணப்படும் கல்வியியல் கூறுகள் :

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2014 அக்டோபர் 5 முதல் 19 வரையிலும், 2015 அக்டோபர் 4 முதல் 25 வரையிலும் வத்திக்கான் நகரின் குடும்பங்களுக்கான மாமன்றப் பேரவையினைக் கூட்டினார். இப்பேரவையில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் திருச்சபையின் போதனையினை தொகுத்து மார்ச் 19, 2016 அன்று புதுலிrஷ்வி ஸிழிeமிஷ்மிஷ்ழி என்ற தலைப்பில் திருத்தூது மடலாக வெளியிட்டார்.
இது 325 பத்திகளையும், 9 அதிகாரங்களையும் கொண்டுள்ளது. இதில் காணும் கல்வியியல் கூறுகளை நாம் தேர்ந்து தெளிவோம்.

1. இறைவார்த்தை ஒளியில் :

இந்தத் திருமடலின் முதல் அதிகாரம் இறைவார்த்தையின் வெளிச்சத்தில் நமது வாழ்வினைச் செம்மைப்படுத்திக் கொண்டோம் என்ற அழைப்போடு தொடங்குகிறது. யூதத் திருமணச் சடங்குகளிலும், கிறிஸ்தவத் திருமண வழிபாடுகளிலும் மக்கள் பயன்படுத்துவது திருப்பாடல் 128. ‘ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும், நலமும் பெறுவீர்! உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடி போல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! நீர் உமது பிள்ளைகளின் வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! நீர் உமது பிள்ளைகளின் நன்மைகளைக் காண்பீராக! இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக’ (திருப்பாடல் 128). இல்லற வாழ்வில் அடியயடுத்து வைக்கும் தம்பதியினர் வேண்டி விரும்பி எதிர்ப்பார்க்கும் நற்பேறுகள் இவை தானே!

விவிலிய நூல்களில், பல காதல் கதைகள், பிறப்புக்கள், குடும்ப வரலாறுகள் மற்றும் குடும்ப உறவுகள், சிக்கல்கள் போன்ற எதார்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன (எண் : 8). குடும்பம் என்பது புரிந்து கொள்ளப்படாத புதிர் அல்ல; மாறாக நடைமுறை எதார்த்தமே. தொடக்கம் முதலே, குடும்ப உறவுகள் பாவத்தோடு முரண்பாடு கொண்டதாகவே சுட்டிக்காட்டப்படுகிறது (எண் : 19). எனவே இறைவார்த்தை புரிந்து கொள்ளப்பட முடியாத புதிர்களைக் கொண்டதல்ல. மாறாக இல்லறத்தின் இனிமை மற்றும் தோழமை உணர்வு கொண்டு வாழும் போது ஏற்படும் உரசல்களைச் சுட்டிக்காட்டி, இவ்வுலக  பயணத்தின் இலக்கினைத் தெளிவாக்கும் கலங்கரை விளக்காக இறைவார்த்தை திகழ்கிறது (எண் : 22).

2. குடும்பங்களின் அனுபவங்களும், சவால்களும் :

விவிலியப் பிண்ணணியில் இன்றைய குடும்ப நிலைகளை அலசி ஆய்கின்ற போது கீழ்க்காணும் சிக்கல்கள் வெளிப்படுகின்றன (எண் : 56).

அ. பாலின சமத்துவமின்மை.

ஆ. கடவுளின் படைப்புத் திறனில் பங்கேற்பதற்கெதிரான சிசுக்கொலை.

இ. மகளிர் மற்றும் சிறார் மீதான வன்முறை.

ஈ. சட்டங்களை சுயநலத்துக்கான ஆதாயமாக்கிக் குடும்பகளைச் சீரழித்தல்.

உ. மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோரை இழிவாகக் கருதுதல்.

ஊ. சமூகத்தில் காணும் வல்லுறவு.

குடும்பங்களின் அன்றாட உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை மறுத்து ஏற்றுக் கொள்ளாத நிலையில், திருச்சபை இனிய இல்லற வாழ்வினுக்கு வழிகாட்ட இயலாத (எண் : 31). தாண்மை உணர்வு, தன்னல மறுப்புக்கும், தியாக வாழ்வுக்கும் எதிரானது (எண் : 33). இந்நிலையில் தூய ஆவியாரின் ஏவுதலுக்கும் செவி சாய்க்க முடியாது.

3. மனசாட்சியை மையமாகக் கொண்ட கல்வி :

ஒவ்வொரு தனி மனிதருக்கும் இறைவனின் குரலாகத் திகழ்வது அவரது மனசாட்சி. நன்மை, தீமையை பகுத்தாய்ந்து நலமானதைத் தேர்ந்து, செயல்பாட்டுச் சிந்தனையினை உருவாக்குவதே உண்மையான கல்வியின் நோக்கமாகத் திகழ முடியும். வாழ்வுக்கு ஒவ்வாத இறையியல் மற்றும் கருத்துத் திணிப்பு மனசாட்சியைக் குழப்பத்திற்குள்ளாக்கி தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்கிறது. மனசாட்சி மையக் கல்வி இன்றைய காலத்தின் கட்டாயமாகும் (எண்கள் 36 ‡ 38).

4. குடும்பத்தின் அழைப்பு :

இத்திருத்தூது மடலில் எண்கள் 58 ‡ 88 வரையுள்ள கருத்துக்கள் குடும்பத்தின் மாண்புமிக்க அழைப்பினை வெளிப்படுத்துகின்றன. குடும்பம் ஒரு குட்டித் திருச்சபை. இந்தக் குடும்பத்திலிருந்துதான் உத்தமக் குடிமக்கள் உருவாக்கப்படுகின்றார்கள். நலமிக்க சமூகத்தின் வேர்களே குடும்பங்கள். எனவே ஒவ்வொரு குடும்பமும் இயேசுவை உற்றுநோக்கி இறைவார்த்தை என்னும் விதைகளை தமது குடும்பத்தில் விதைக்க வேண்டும். இந்த விதைகள்தான் பிறசமயங்கள், கலாச்சாரங்கள் மற்றும் இலக்கியங்களில் காணும் பலன் அளிக்கும் தன்மை கொண்டவை. இவையே பொறுப்புள்ள, அன்பும் ‡ பண்பும் மிகுந்த, பிறரை மதிக்கின்ற, தியாக உணர்வுள்ள குடிமக்களை உருவாக்கும். இதுவே இறைவனின் விருப்பமாகும்.

5. திருமணத்தில் அன்பு (89 - 164) :

1 கொரி 13 : 4 - 7ல் பவுல் அடியாரின் அன்பின் பண்பு நலன்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. எதிரும், புதிருமான உளவியல் உணர்வுகள் இளந்தம்பதியினரை காம உணர்வினுக்கும், அதன் இன்பத்திற்கு மட்டுமே இட்டுச் செல்கின்றன. உனக்கு நான், எனக்கு நீ. நீயும், நானும் ஒன்று. ஓருடல், ஈருயிர் என்ற சிந்தனை வளர்ந்து, தன்னலம் மறுத்து, தியாகம் மிகுந்து காணப்படும் குடும்பமே சீரிய செம்மைமிக்க அனைவராலும் மெச்சத்தக்க குடும்பமாகத் திகழும். கிறிஸ்துவும், திருச்சபையும் ஒன்றே. இந்த ஒன்றிப்பு நிலையினை  அனைவராலும் மெச்சத்தக்க குடும்பமாகத் திகழும். கிறிஸ்துவும், திருச்சபையும் ஒன்றே. இந்த ஒன்றிப்பு நிலையினை குறைவுபட்ட மனிதர்களிடம் முழுமையாக எதிர்ப்பார்ப்பது ஏற்புடையதல்ல. அதே வேளையில் இறைவனின் கொடைகளை தம்பதியர் உணர்ந்து இல்லற இன்பமிகு உறவினைப் பகிர்ந்து ஒன்றுபட்டு வாழ்ந்திட முனைதல் சாலச் சிறந்தது (எண் : 123).

வாழ்வு முழுவதும் ஒரே விதமான, மன உணர்வோடு வாழ்வது அரிதான ஒன்றுதான். ஆனால் இல்லற இணைப்பு என்பது அழகு குறைந்தாலும், முதுமை அ டைந்தாலும், கவர்ச்சி மங்கினாலும் என்றுமே இளமை எண்ணம் கொண்டு வாழ்தலே சீர்மிகு தம்பதியரின் சிறப்பான பண்பாகும் (எண் : 163). இன்றைய கல்வி மேற்காணும் பண்புகளை பிஞ்சு மனங்களில் விதைக்கக் கூடியதாகத் திகழ்ந்திடல் வேண்டும்.

6. பயன் விளைவிக்கும் அன்பு (எண்கள் : 165 - 198) :

ஐந்தாம் அதிகாரம் அன்பின் கனிகள் மற்றும் குழந்தைப் பேறு பற்றிய கருத்துக்களை முன்வைக்கிறது. புதிய வாழ்வினை வரவேற்கும் இளம்தம்பதியர் மக்கட்பேற்றினை அடைந்து, தாய், தந்தை என்னும் நிலையினை அடைகின்றபோது இவர்கள் ஆன்மீக மற்றும் உளவியல் முதிர்ச்சி பெறுகின்றனர்.  குழந்தைப் பேற்றுக்குப்பின் மாமன் ‡ அத்தை , சித்தப்பா, பெரியப்பா, தாத்தா, நண்பர்கள் போன்ற புதிய உறவுகள் முளைவிட்டுத் துளிர்க்கின்றன. திருமண அருட்சாதனம் இளையோர், முதியோர், சகோதர, சகோதரிகள் மற்றும் பிறருடனான உறவுகளை உறுதிப்படுத்தும் சமூகப் பணிபினையும் வளர்க்கின்றது.
                                  - தொடரும்.

Wednesday, 4 May 2016

குடும்பம் சமுதாயத்தின் உயிர்நிலை

குடும்பம் சமுதாயத்தின் உயிர்நிலை

- புலவர். இ. அந்தோணி, எம்.ஏ. பி.எட்., எம்.ஃபில்,
சிறிய மலர் மேனிலைப்பள்ளி (ஓய்வு),
கும்பகோணம்

அண்மையில் படித்த செய்தி, கணவனை அவரின் மனைவி, ‘குண்டு யானை’ என்று கூறியதற்காக கணவன் விவாகரத்து பெற்றிருக்கிறார். அதேபோல், கணவன் தன் மனைவியை, ‘தேவாங்கு’ என்று கூறியதற்காக, மனைவி, தன் கணவரை விட்டு பிரிந்திருக்கிறார். தமிழ்நாட்டில் 8.8 சதவிகிதம் விவாகரத்து நடந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக  விவாகரத்து நடைபெறுவது தமிழ்நாட்டில்தான் என்று கணக்கெடுப்பு கூறுகிறது. குடும்ப அமைப்பு மிகவும் சிதைந்து வருகிறது. ஆனால் குடும்பம்தான் சமுதாயத்தின் உயிர்நிலை. வெளிநாடுகளில் சென்று வாழ்கின்ற இந்தியர்களின் பிள்ளைகள் மிகவும் அறிவு திறமை பெற்றவர்களாக வளர்வதைப் பற்றி செய்தித்தாள்களில் படிக்கிறோம். இந்தியர்கள் குடும்ப பாரம்பரியத்தை பாதுகாப்பதே இதற்குக் காரணம் என்கிறார்கள்.

வெளிநாடுகளில் குடும்ப இணைப்பு பயங்கரமாக  உடைந்து நிற்கிறது. கணவன் - மனçவி பிரிவு பிள்ளைகளில் வளர்ச்சியிலும், கணவன் - மனைவி மன அமைதி நிலையிலும் பெரிய பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது.

விவிலியத்தில், கடவுள் ஆணும் - பெண்ணுமாக மனிதரை படைத்தார் என்று கூறப்பட்டுள்ளது (தொ நூ 1 : 27). மனித பண்புகளை பெற்றவர் ஆண் - பெண் என்ற இருபாலர். ஆனால் அவர்களின் உடல் அமைப்பிலும், உணர்வு நிலைகளிலும் வேறுபட்டு நிற்கிறார்கள். வேறுபாடுகளை புரிந்து கொண்டு, வேறுபாடுகள் ஒன்றன் மற்றொன்றின் நிறைபாடு என்பதை ஏற்று கொண்டு வாழ்வதுதான் குடும்பத்தின் உண்மைப்பண்பை உயிர்மைப்படுத்துவதாகும்.

இந்து சமயத்தில் அர்த்தநாதீஸ்வரர் என்ற உருவில், உரே உடலில் ஆண் பாதி பாகமும், பெண் பாதி பாகமும் அமைந்திருப்பதை காணமுடிகிறது. அதாவது ஆணில் பெண்ணின் பண்பு மறைந்திருக்கிறது.  பெண்ணில் ஆணின் பண்பு புதைந்திருக்கிறது என்பது பொருள். ஆனால் ஆண் ‡ பெண் ஆகியவர்களின் தனித்தன்மையையும்  மறந்துவிடக்கூடாது. ஆண் ‡ பெண் ஆகியவர்கள் சமத்துவ நிலையில் பணி செய்கின்ற வேளையில், மற்றவர்களால் முடியாததை செய்து நிறைவு செய்வதே ஆண் ‡ பெண் வேற்றுமையின் நோக்கமாகும்.

பெண்ணின் தனிப்பண்பை பாரதிதாசன் இப்படி அழகாக எழுதியிருக்கிறார்.

இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை
இரவிபோர்த்த இருள்நீங் கவில்லை ஆயினும்
கேள்வியால் அகலும் மடமைபோல் நல்லிரவு
மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்தது
தொட்டி நீலத்தில் சுண்ணாம்புக் கலந்த
கலப்பென இருந்தன் கட்டுக்குலைந் தது
புலர்ந்திடப் போகும் பொழுது கட்டிலில்
மலர்ந்தன அந்த  மங்கையர் விழிகள்
என்கிறார் பாரதிதாசன்.

ஆம் பின்தூங்கி முன் எழுபவள் அல்லவா பெண். அதிகாலை எழுந்து குளித்து இறையை வேண்டி கணவனுக்கும், பிள்ளைகளுக்கும், பெரியவர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து தானும் அலுவலகம் செல்லும் பெண்.

அதாவது  குடும்பத்தை தாங்குபவள் மனைவி என்று விளக்குகிறார். ஒவ்வொருவரையும் புரிந்துகொண்டு செயல்படுபவள் பண்பான மனைவி என்றும் விளக்குகிறார் பாரதிதாசன்.

கொண்டவர்க் கெதுபிடிக்கும்? குழந்தைகள் எதை விரும்புவர்?
தண்மூன்றி நடக்கும் நன்மாமன் மாமிக்குத் தக்கதென்ன?
உண்பதில் எவர்உடம்புக்கு எதுஉதவாது  என்றெல்லாம்
கண்டனள் கறிகள் தோறும் உண்பவர் தமமைக் கணடாள்

கீழ்க்காண்பவை ஆண் - பெண் ஆகியவர்களின் முக்கிய உணர்வு வேறுபாடுகள். இவை ஆராய்ச்சியில் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

1. பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பண்பினால் பெண்கள் வீணாக எதிலும் ரிஸ்க் எடுக்கமாட்டார்கள். எதிர்காலத்தைப் பற்றி விளையாட்டாக நினைக்க மாட்டார்கள்.

2. ஆண்கள் ரிஸ்க் எடுக்க விரும்புவர். மாற்றம், சவால், இவைகளை எதிர்கொள்ளவும் விரும்புவர். பெரும்லாபத்திற்காக ஆபத்துகளை சந்திக்க துணிவர்.

3. பெண்களுக்கு துணிச்சல் குறைவு. ஆனால் பாதுகாப்பு, உறவு, போதுமென்ற மனம் பெண்களுக்கு அதிகம்.

4. குடும்பத்தில் பெண்கள், ஆண்களின் வீணான துணிச்சலை கட்டுப்படுத்துவார்கள். ஆண்கள், பெண்களின் வீணான பயத்தை அகற்ற உதவுவார்கள்.

5. பெண்கள் வீடுகளின் வசதி, குடும்ப வாழ்வு இவற்றைப் பற்றி கவலைப்படுவர்.

6. விளையாட்டுப் போட்டிகளில் ஒரு வெறிதனத்தை ஆண்கள் காட்டவார்கள். பெண்கள் அதனை ஒரு பொழுதுபோக்காக மட்டும்  கருதுவர்.

ஒன்றுக்கொன்று உதவுவதற்காகவே வேறுபட்ட பண்புகளுடன் இறைவன் படைத்திருக்கிறார். ஒன்னும், ஒன்னும் இணைவதுதான் குடும்பம். ஒன்றை மற்றொன்னை அழிப்பது குடும்பத்தின் நோக்கமல்ல.  
 (இன்னும் வரும்)

Ads Inside Post