Pages - Menu

Sunday 13 December 2015

அக்டோபர் மாத புனிதர்கள் வரலாறு

புனிதர்கள் வரலாறு

அக்டோபர் 1 : குழந்தை இயேசுவின் புனித தெரசாள்.
பிறப்பு : பிரான்சு நாடு, அலென்சோவில் 1873 ஜன 2 பிறந்தார்.
பெற்றோர் மற்றும் குடும்பம் : தந்தை லூயிஸ் ஜோசப், தாய் செலீகெரின். 9வது கடைக்குட்டி பிள்ளை. அனைவரின் அன்பைப் பெற்று வளர்ந்தவர் சிறு வயதிலேயே சிறு தவறுக்கும் மன்னிப்பு கேட்பார்.
வாழ்வில் வந்த சோதனை : அன்னையின் இறப்பு 1877 ஆகஸ்ட் 28. அக்கா பெளலின் துறவறம் சென்றதால் பாதிப்பு. 1882 அக்டோபர் 15, கடும் நோயால் தாக்கப்பட்டார். 1884இல் புன்னகை அன்னையின் காட்சியால் புத்துயிர் பெற்றார்.
புதுநன்மை : 1884 மே 8, இயேசுவின் முதல் முத்தம் என்கிறார்.
துறவற அழைப்பு : 16 வயதில் திருத்தந்தையின் சிறப்பு அனுமதியுடன் கர்மேல் மடம் சென்றார்.
திருவுளம் : 1889 ஜன 10 ; துறவற வார்த்தைப்பாடு 1890 செப் 8.
கிறிஸ்துவே என் அன்பு ; அவரே என் நிறை வாழ்வு என்று வாழ்ந்தார்.
சிறப்பு குணங்கள் : எளிதில் வளைந்து இறைவனிடம் தன்னை முழுவதும் கையளித்தார்
இறப்பு : 1897 செப் 30இல் இறைவா உம்மை அன்பு செய்கிறேன் என்று கூறி இறந்தார்.

அக்டோபர் 2 : காவல் துVதர்கள்
விழா : 1582 பிப்ரவர் முதல் கொண்டாடப்படுகிறது.
பணி : 1. இறைவனை துதிப்பது (தூயவர, தூயவர்)
2. இறைவனின் செய்தி தொடர்பாளர்கள் வி. ப. 23: 20, 21.
3. மனிதர்களை கண்காணிப்பது மத் 18 : 10
தி.பா. 91 : 11
நமது பணி : தூதர்களை மதிப்புடன் காண்பது, நம்பிக்கை வை, அன்பு செய், ஆபத்து, துன்பம், சோதனை நேரம் பாதுகாப்பு வேண்டி அவர்பக்கம் திரும்பு ‡ புனித பெர்னார்து. 
  
அக்டோபர் 4 : புனித பிரான்சிஸ் அசிசி
பிறப்பு : இத்தாலி அசிசி நகர். தந்தை : பீட்டர் பெர்னார்டோன், துணி வியாபாரி. தாய் : பீக்கா.
இளமைப்பருவம் : ஆடம்பர வாழ்வு, நடை உடை பாவனையில் பெருமிதம். ஆனால் ஏழை எளியவர்கள்மீது பரிவு காட்டினார். கையேந்தி கேட்ட பிச்சைகாரருக்கு, தந்தை உதவி செய்யாததால் தேடி சென்று அன்றைய 
வருமானம் முழுவதும் கொடுத்தார். மக்கள் பாராட்டினர். பெற்றோர் திட்டினர்.
1201இல் போர் வீரரானார். கைதியாகி சிறையில் அடைக்கப்பட்டு, பின் விடுதலை. 1204இல் நோயுற்றார்.
துறவற அழைப்பு : உள்ளத்தில் ஆன்மீக தேடலினால் தனிமையை நாடினார். செபித்தார். காட்சியில் என் ஆலயத்தைப் பழுதுபார் என்று இயேசு கூறினார்.
மத் 10 : 9 மறையுரையில் தெளிவு பெற்று, பிச்சை எடுத்து, ஏழைகளுக்கு உதவினார்.
புதிய சபை உருவாக்கம் : இடிந்து விழும் ஆலயத்தை தாங்கி நிற்பது போன்று கனவுக்கண்டார். ஒரு சபையை நிறுவி திருத்தந்தை 3ஆம் இன்சென்ட்டால் அனுமதி பெற்றார்.
அசிசியில் பிரான்சிஸ் ஆற்றிய உரையால் கவரப்பட்டு பின்தொடர்ந்த கிளாராம்மாள் துணையுடன் கிளாரம்மாள் ஏழை மகளிர் சபையை பெண்களுக்குத் தொடங்கினார். அவர் செபித்த முறையை பார்த்த அநேகர் பின்பற்றினர்.
இறப்பு : தொடர்ந்து ஏழையாக  வாழ்ந்து எளிமையை போதித்து, இயற்கையை நேசித்து 1226 அக் 3 இல் இறந்தார்.
புனிதர் நிலை : 1228, ஜீலை 16இல் திருத்தந்தை 9ஆம் கிரகோரி புனிதராக்கினார்.

அக்டோபர் 5 : புனித பவுஸ்தினா கோவாஸ்கா
பிறப்பு : போலந்து 1905, ஆகஸ்ட் 25.
பெற்றோர் : ஸ்தனிஸ்லாஸ், மரியன்னா.
தொழில் : தச்சுத் தொழில், விவசாயி, அன்பும், பக்தியும் , இரண்டு கண்கள்.
அழைப்பு : 7 வயதில் நற்கருணை ஆண்டவர் அழைப்பதை உணர்ந்தார். 16 வயதிலும் அனுமதி கிடைக்கவில்லை. இயேசு, காட்சியில் மடத்தில் சேருமாறு கட்டளையிட்டார். தெரியாமல் தொடர்வண்டி ஏறி வார்சா வந்தார். போதிய கல்வியறிவு இல்லை. நிபந்தனையின் அடிப்படையில் சேர்க்கப்பட்டார்.
பணி : சமைப்பது, தூய்மைப்படுத்துவது, தோட்டங்களைப் பராமரிப்பது.
திருவுடை : 1926 , ஏப்ரல் 30.
பெயர் மாற்றம் : பவுஸ்தினா ‡ ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று பொருள்.
சிறப்பு : 1931, பிப்ரவரி 22இல் இயேசு இறை இரக்கத்தின் அரசராக காட்சி அளித்தார். வெள்ளை உடை இதயத்திலிருந்து வெள்ளை, சிவப்பு நிற ஒளி பாய்ந்து வந்தது.
இறப்பு : 1938 அக்டோபர் 5இல் இறந்தார். 2000 ஏப்ரல் 30இல் புனிதர் பட்டம் 21ஆம் நூற்றாண்டின் முதல் புனிதர்.

அக்டோபர் 6 : புனித புருனோ
பிறப்பு : ஜெர்மனி கோலோன் நகர். சிறுவயதில் அன்பு செயலில் ஈடுபட்டு இறைவனின் மகனாக வாழ்ந்தார்.
அழைப்பு : 25 வயதில் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். தனது பேச்சாற்றலால், மெய்யியல் கருத்துக்கள், இறையியல் கருத்துகளால் மாணவர்கள் மனதை கவர்ந்தார்.
பணி : நீம்ஸ் மறைமாவட்டத்தின் தலைமை செயலராக செயல்பட்டார்.
இவர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு ஒரு சிறிய வீடு அமைத்து தங்களை எந்நேரமும் செபத்தில் ஈடுபடுத்தி எளிமையாக வாழ்ந்தவர். இவரது மாணவர் 2ஆம் அர்பன் என்ற பெயரில் திருத்தந்தையானார். அவருக்கு ஆலோசகராகவும், திருப்பாடல், பவுலின் கடிதங்களுக்கு விளக்கவுரை எழுதினார்.
இறப்பு : 1101 அக்டோபர் 6இல் இணைவனில் இணைந்தார்.
புனிதர் பட்டம் : 1621 பிப்ரவரி 7 திருத்தந்தை 15ஆம் கிரகோரியால் கொடுக்கப்பட்டது.

அக்டோபர் 7 : தூய செபமாலை அன்னை
கூடி செபிக்கும் வழக்கம் தொடக்கத் திருச்சபையில் இருந்தது. திருப்பாடல்கள் ஒருபகுதி ஒருவர், மற்றொரு பகுதி மற்றொருவர் என மாறி மாறி சொல்லி செபித்தார்கள். இறந்தவர்களுக்காக 150 திருப்பாடல்கள், படிக்காத துறவிகள் 50 முறை பரலோக மந்திரம் செபித்தார்கள்.
அன்னையை போற்ற, இடையிடையே விண்ணப்ப இணைப்புடன், கபிரியேல் தூதர் மங்கள வார்த்தை சொன்னதை ஒரு செபமாலையாக செபித்தனர்.
செபமாலையின் திருத்தந்தை என்று 13ஆம் சிங்கராயர் அழைக்கப்படுகிறார்.
பாவிகள் மனம் திரும்புதல், பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மீது இரக்கம் காட்டுதல்,
மீட்பு வரலாற்றை மூன்று கட்டமாக பிரித்தார். இஸ்ராயல் மக்கள் காலம், இயேசுவின் காலம், திருச்சபையின் காலம்.
இறப்பு : கி.பி.74.

அக்டோபர் 19 : புனித சிலுவை பவுல்
பிறப்பு : இத்தாலி, ஓவாதாவில் 1694 ஜனவரி 3இல் பிறந்தார்.
தந்தை, தாய் : லூக் டேனனி, அன்னா மரியா மாசாரி.
சிறப்பு : சிலுவையே புத்தகம், சிலுவையே முன்மாதிரியாக வைத்து வாழ்வது. அதிக நேரம் நற்கருணை ஆண்டவர் முன் அமர்ந்து செபித்தல்.
துறவற சபை உருவாக்குதல் : இயேசுவின் பாடுகள் மூலமே இறைவன் அன்பை முழுமையாக சுவைக்க முடியும் என்றுணர்ந்து புதிய சபையை உருவாக்கினார்.
இறப்பு : 1775இல் அக்டோபர் 18.

அக்டோபர் 22 : புனித இரண்டாம் யோவான் பவுல்.
பிறப்பு : போலந்து நாடு வோடா நகர் 1920, மே 18.
பெற்றோர் : கரோல், எமிலியா.
இளமைப்பருவம் : அன்னை மரியாள் பக்தி நற்கருணை மீது பக்தி அதிகம்.
1929, ஏப்ரல் 13இல் தாயின் இறப்பு.அண்ணன் மருத்துவம் படித்தார். தொற்றுநோயால் உயிர் நீத்தார்.
படிப்பு மற்றும் திறமைகள் : 1938இல் மெய்யியல் படித்தார். கிரேக்கம், இலத்தீன், ஜெர்மனி மொழிகளை கற்றார். சிறந்த அறிவுடையவராய் இருந்தார். கால்பந்தாட்டம், பனிசறுக்கு, நீச்சல், நாடகம் எழுதுதல், நடிப்பில் சிறந்து விளங்கினார். இறைவனால் ஈர்க்கப்பட்டு குருமடம் சென்றார்.
குருத்துவ அழைப்பு : 1942இல்
அருட்பொழிவு : 1946, நவம்பர் 1
முனைவர் பட்டம் : 1948இல்
சிறந்த மறையுரையால் மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தார்.
துணை ஆயர்நிலை : 1958, செப் 28இல்
திருத்தந்தை பட்டம் : 1978, அக்டோபர் 16
1985, மே 13இல் சுடப்பட்டார். பிழைத்துக் கொண்டார்.இறப்பு : 2005,, ஏப்ரல் 2இல் இறந்தார்.

அக்டோபர் 24 : புனித மரிய கிளாரட்
பிறப்பு : ஸ்பெயின், கட்ட போனியா என்ற இடம். 1807 டிசம்பர் 23இல் பிறந்தார். நெசவு தொழிலாளியின் மகன்.
அழைப்பு : 1829இல் விக் என்ற இடத்தில் இருந்த மடத்தில் சேர்ந்தார்.
அருட்பொழிவு : 1835
இறையியல் பட்டம் : 1839
சிறப்பு : ஏழைகளின் மனம் கவர்ந்தவர்.
பணி : 1849இல் கிளரிசியன் சபையை தொடங்கினார்.
சமயம் சார்ந்த நூலகம் அமைத்தார். ஸ்பெயின் அரசியின் பரிந்துரையால் பேராயரானார். குருமடத்தை சீர்செய்தார். குருக்களின் ஒழுக்க முறைமைகளை சரிசெய்தார்.
இறப்பு : 1915இல் அக்டோபர் 24இல்.


2 comments:

  1. புனித பவுஸ்தினா அம்மாளே எங்களுக்காக வேண்டி கொள்ளும்

    ReplyDelete
  2. எல்லா தகவல்களும் நன்று! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Ads Inside Post