Pages - Menu

Monday 7 December 2015

சுதந்திர பார்வை

ஆசிரியர் பேனா
சுதந்திர பார்வை
பாதுகாப்பது ஒரு சாதனை
பெற்றோர் சேர்த்ததை
சில பிள்ளைகள் அழித்துவிடுவதை
வேதனையுடன் பார்க்கிறோம்.
பெற்ற சுதந்திரத்தைப்
போற்ற வேண்டும், பாதுகாக்க வேண்டும்.
தான் பெற்ற சுதந்திரத்துடன், “தன் பொறுப்பை
உணர்ந்து வாழ்பவன்தான் வீரன்” என்கிறார்
பாப் டைலன் என்பவர்.
“சுய கட்டுப்பாடில்லா சுதந்திரம் உண்மையான
சுதந்திரம் அல்ல” என்கிறார் மோர்டிமெர் என்பவர்.
குடந்தையில் ஓர் ஆட்டோவின் பின்னால் எழுதியிருந்தார்கள்.
இந்தியாவின் தேசீய விளையாட்டு “ஊழல்” ! என்று
பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ்,
வருமானச் சான்றிதழ் ஆகியவற்றைப் பெற
மக்கள் படும் அவதி கொஞ்சம் நஞ்சமா?
குடும்ப அட்டை பெறுவது குதிரை கொம்பாக அல்லவா உள்ளது.
ஊழல் பெரிய இடங்களில் மலைபோல் குவிந்து கிடக்கிறது.
நம் மக்களின் மனநிலையில் ஊழல் பொதிந்து கிடக்கிறது.
ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் என்று ஓட்டுப் போட வாங்கிக் கொண்டு
உரிமைகளுக்கு கல்லறை கட்டிக் கொள்கிறோம்.
இந்த சுதந்திர தின விழாவில் பணம் வாங்காமல் ஓட்டுப் போடுவேன்.
குழுவாகச் சேர்ந்து உரிமைக்காகப் போராடுவேன்
என்று உறுதிமொழி எடுத்தால் அதுவே சிறந்த சுதந்திர தின கொண்டாட்டமாகும்.
 உடுமலை என்ற ஊரில் ஓர் இளைஞர் குழுவை சந்தித்தேன்.
அவர்களின் கொள்கை லஞ்சம் யாருக்கும் தரக்கூடாது. என்பது
அதனை சாதித்துக் காட்டுகிறார்கள்.
ஆனால் அவர்கள் சந்திக்கும் சவால்கள் ஏராளம்! ஏராளம் !!
அவர்கள் தான் உண்மையான விடுதலை வீரர்கள் என்று சொல்லலாம்.
நம் தலைவர்கள் தியாகத்தால் பெற்றுத்தந்த சுதந்திரத்தை தியாகத்தால் பாதுகாப்போம்.
 சுதந்திரம் தரும் வலிமையால் வளர்வோம், வளர்க இந்தியா. வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திரு நாடு. வந்தே மாதரம்.

No comments:

Post a Comment

Ads Inside Post