Pages - Menu

Showing posts with label Tamil medicine. Show all posts
Showing posts with label Tamil medicine. Show all posts

Tuesday, 4 July 2017

இயற்கை மூலிகை மருத்துவம் . இராசரெத்தினம், ஆடுதுறை, மஞ்சள் காமாலை

இயற்கை மூலிகை மருத்துவம்
. இராசரெத்தினம், ஆடுதுறை
மஞ்சள் காமாலை 

பொதுவாக இந்நோய் ஏற்பட கல்லீரல், மண்ணீரல் குறைபாடே காரணமாகின்றது. உடலில் அதிக உஷ்ணம் உண்டாகி, உஷ்ணத்தை தாக்குபிடிக்க முடியாத நிலையில் கல்லீரல், மண்ணீரல் வெந்து விரிவடைந்து மந்தம் அடையும் நிலையே மஞ்சள் காமாலை.

இந்நோய் உள்ளவர்களின் சிறுநீர், கண், நாக்கு, உடல், நகம் இவைகள் யாவும் மஞ்சள் நிறத்தைப் பெற்றிருக்கும்.
உணவு மாவு பண்டங்களாய் இருப்போர்க்கு குடலின் உள் சுவற்றில் கழிவுகள் தேங்கி, கார்பனாகி அதன் காரணமாய் உடலின் அதிதீவிர உஷ்ணம் உண்டாகிறது. உஷ்ணத்தின் வீரியத்தால் செல்கள் அனைத்தும் வெந்து விரிவடைந்து  அந்த நிலையே மஞ்சள் காமாலை.

அதிக  உஷ்ணத்தால் பித்தம் மேலோங்கி  இரத்தத்தில் கலந்து உடல் பகுதிகளில் சதை, தோல், கண், நாக்கு இவைகளில் நிலை கொண்டு நோய் வீரியம் அடைகின்றது.

வாயில் நீர்  ஊர்தல், வாய் குமட்டல், உணவில் வெறுப்பு, உட்கொண்ட உணவு செரியாமை ஆகியவைகள் இந்நோயின் அறிகுறிகள் ஆகும்.

இந்நோய் வருவதற்கு முன்பாகவே கண்ணில் வெள்ளை   விழியும், முகம், கழுத்து, உடல் முதலியன மஞ்சளாய் இருக்கும். 
நோய் அதிகமாகும் போது நாக்கு, வாயின் மேல்பாகம், உதடு, சிறுநீர், நகம் இவைகள் மஞ்சள் நிறமாய் மாறும்.                                                                                                                                                                                                                                 
நோய் மேலும் அதிகப்படுமாயின் மூக்கு, பற்களின் ஈறு, வாய் இவைகளிலிருந்து இரத்தம் கசியும். சிறுநீர் மஞ்சள் நிறமாய் இருக்கும். வியர்வை மஞ்சள் நிறமாய் இருக்கும். 
இந்நோய் தொடக்கத்தில் சரீரத்தில்  வறட்சி ஏற்பட்டு நமச்சல் உண்டாகி தோல் பகுதிகள் சிறிது தடிப்புற்று காணப்படும். நாடி நடைகள் தளர்ந்து தூக்கம் இருக்காது.
          
இந்நோயை குணமாக்கிக் கொள்ள இயற்கையான எளிய  வழி:

                இந்நோய் கண்டவர்களுக்கு குடல் சுத்தம் செய்து மூன்று நாட்கள் உண்ணா நோன்பு இருந்து  (குடிநீர்  மட்டும் அருந்தி இருப்பது) பத்து நாட்கள் பழச்சாறுகள் மட்டும் அருந்தி  இருந்து 
(சாத்துக்குடி, திராட்சை, மாதுளை ஏதாவது ஒரு பழத்தை தோலுடன் 75 கிராம் அளவு அரைத்து 750 மி.லி குடிநீர் கலந்து வடிகட்டி 250 கிராம் தேன் சேர்த்து சிறுக சிறுக அருந்திக் கொண்டிருப்பது) பத்து நாட்கள் சமைக்காத பச்சைக் காய்கள், சாறு நிறைந்த பழங்கள் உண்டு  இருந்தால் (சமையல் உணவுகளை தவிர்த்து) குணமாகும். இளநீரில் தேன் கலந்தும் கொடுக்கலாம்.

இதுபோல் இருக்கும் காலங்களில் செய்ய வேண்டிய பயிற்சிகள்:

1. நாள்தோறும் காலை, மாலை ஒருமணி நேரம் முதுகு தண்டு தொட்டிக் குளியல் செய்யவும்.
2. நாள்தோறும் முற்பகல் 11 மணி அளவில் கீழ்க்கண்ட குளியல் பயிற்சிகளில் ஏதாவது ஒன்றை ஒருமணி நேரம் செய்து வரவும். புற்றுமண் குளியல், சந்தன மண் குளியல், மலர் குளியல், இளநீர் குளியல்.

 புற்றுமண் தயாரிக்கும் முறை:

கரையான் புற்று மண்ணைக் கொண்டு வந்து, அதனை இடித்து சலித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது.

 சந்தன மண் தயாரிக்கும் முறை:

புற்றுமண், சுங்காமண், உவர்மண் மூன்றையும் சமமாக எடுத்து இடித்து சலித்து கல், குப்பை நீக்கி பத்து சதவிகிதம் சந்தனத் தூள் கலந்தால் சந்தனமண் தயார்.

மலர் குளியல்:

ரோஸ் கலரில் உள்ள ரோஜாப்பூ, தாழம்பூ, மகிழம்பூ, ஆவாரம் பூ சம அளவாக எடுத்து அரைத்து உடல் முழுவதும் பூசி குளிப்பது.

இளநீர் குளியல்:

இளநீர் தேவையான அளவு எடுத்து 25 கிராம் சந்தனத் தூள் கலந்து உடல் முழுவதும் பூசிக் குளிப்பது.
 3.நாள்தோறும் காலை, மாலை எளிய மூச்சுப் பயிற்சி அல்லது பிராணயாமம் செய்து வரவும்.
 4. குழப்பமான எண்ணங்களைத் தவிர்த்து இறை உணர்வுடன் இருக்க வேண்டும்.

மூலிகைகளைப் பயன்படுத்தும் முறை:
* சங்கன் வேர்பட்டையை எடுத்து வந்து இஞ்சிச் சாற்றுடன் அரைத்து சாறு எடுத்து நான்கு பங்கு குடிநீர் கலந்து  ஒரு பங்கு  தேன் சேர்த்து ( 50மி.லி சங்கன் வேர் + இஞ்சிச் சாறுக்கு 200 மி.லி குடிநீர் 50 மி.லி தேன் சேர்க்க) மூன்று மணி நேரத்திற்கு ஒரு நாளைக்கு 4 வேளையாக மூன்று நாளைக்கு கொடுக்க குணமாகும்.

* குடல் சுத்தம் செய்த பின் பப்பாளிபழம் மட்டும் உணவாக உண்டு வர குணமாகும். 

* கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, வெந்தயக்கீரை, தும்பை இலை, வில்வ இலை, சங்கன் இலை, ஏதாவது ஒரு மூலிகையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சூடு ஏறாமல் அரைத்து 500 மி.லி குடிநீரில் கலந்து வடிக்கட்டி, அதிகாலை குடல் சுத்தம் செய்த பின் அருந்தி வர குணமாகும்.

* கீழாநெல்லியையும்மஞ்சள் கரிசலாங்
கண்ணியையும் சம அளவாக எடுத்து இடித்து சாறு எடுத்து தேவையான தேன் கலந்து காலை, மாலை 100 மி.லி அளவு அருந்தி வர குணமாகும்.

*மஞ்சள் கரிசலாங்கண்ணி தூள், மருதம் பட்டைத்தூள் சம அளவாக சேர்த்து இரண்டு கிராம் அளவு தேனில்  குழைத்து நக்கி சாப்பிட்டு வர குணமாகும்.

*சோற்றுக் கற்றாழை மேல் பகுதியில் அமைந்திருக்கும் தோல், முள் நீக்கி, உள்ளிருக்கும் சோற்றை மட்டும் எடுத்து, நன்கு கழுவி கசப்பு நீக்கி அரைத்து, தண்ணீரில் பெருக்கி தேவையான அளவு தேன் சேர்த்து, கவனமாக (தொண்டையில் மூக்குத்  துவராத்தில் அடைத்துக் கொள்ளும்) அருந்தி வர குணமாகும்.

*நன்னாரி வேர்த்தூள் ஒரு சிட்டிகை தேனில் குழைத்து நக்கி சாப்பிட்டு வர குணமாகும். அதிகம் உண்ணக் கூடாது.

*மஞ்சள் கரிசலாங்கண்ணி 50 கிராம், கீழாநெல்லி 50 கிராம், பொன்னாங்கண்ணி 50 கிராம், நெல்லிக்காய் 100 கிராம், நல்லெண்ணெய் 750 மி.லி, ஆமணக்கு எண்ணெய் 250 மி.லி அனைத்தையும் ஒன்று சேர்த்து நன்கு சூரிய ஒளியில் வைத்திருந்து, வடிகட்டி வாரம் ஒருமுறை தேய்த்து குளித்து வர குணாகும்.

*மருதாணியை அரைத்து கை, கால் நகக் கண்களிலும், உள்ளங்கை, உள்ளங்கால்களிலும் பற்று போட்டு வர,    
* எலும்பு நரம்புகள் வலிமை பெறும்.
* நகக் கண்களில் தோன்றும் வெடிப்பு குணமாகும்.
* சொத்தை நகம் விழுந்து நல்ல நகம் முளைக்கும்.
* உள் உறுப்புகள் பலம் பெறும்.
* கண்கள் தெளிவடையும்.
* மூளை புத்துணர்வு பெறும்.
* மூட்டு வலி, முழங்கால் வலிகள் மறையும்.

Wednesday, 3 May 2017

மூலிகை ஊமத்தை

மூலிகை  ஊமத்தை

ஆடுதுறை இயற்கை மருத்துவம் - ம. இராச ரெத்தினம்

இதை வெளிப்பூச்சு மருந்தாகவும், மேல் பற்று போடுவதற்கும் மற்றும் பலவித வெளிக்கு தடவும் மருந்தாகவே பயன்  படுத்திக் கொள்ள நமக்கு பெரிதும் உதவுகிறது.

உபயோக முறைகளில் சில 
ஊமத்தை  இலையை நல்லெண்னை விட்டு வதக்கி இளஞ் சூட்டுடன் வீக்கமுள்ள இடங்கள், வாதவலிகள், கைகால் மூட்டுகளில், வீக்கமுள்ள இடங்கள் ( நரித்தலை வாதம்) கால், கை, சேருமிடங்களில் உண்டாகும் நரிக்கட்டுகள், வாய்வு கட்டிகள், அண்ட வாய்வு,  வீக்கங்களில் வலி, தாய்ப்பால் கட்டி கொண்டதால் வலி ஆகிய நோய்களில் ஒற்றடம் கொடுத்துவர அவை தணியும். காலை, மாலை இருவேளைகள் செய்தால் போதும். இது குறிப்பாக வீக்கங்களை கரைப்பதிலும், வாய்வு வலிகளை போக்குவதிலும், பெல்லடோனா என்னும் நவீன மருந்துக்கும் மேலனதாகும். சிலவில்லாமல் எங்கும் எளிதில் கிடைக்கக்கூடியது. சீதள சம்மந்தமான  காது வலிகள் திடீரென்று  வந்து  உபாதை தாளாமல்  துடிப்பவர்கள் ஒர் இரும்புக் கரண்டியில் இதன் இலைச்சாறும் நல்லெண்ணெயும் சமமாக விட்டு காய்ச்சி, கை பொறுக்கும் அளவு சூட்டுடன் 4 துளி காதில் விட வலி பறந்து ஓடி விடும். செய்து பாருங்கள்.

நாய் கடி வி­ம் தீர
  நாய்கடிக்கு, ஊமத்தன் இலை, நாயுருவி இலையைப் போலவே உபயோகமாகிறது.  நாய்கடித்த ரணங்கள் சலித்துக் கொண்டு ஆறாமல் இருப்பதற்கு ஊமத்தன் இலைகளை தண்ணீர் விடாமல் அரைத்து நல்லெண்ணெயில் வதக்கி வைத்து கட்டிவர அவை ஆறும்.
 உடம்பில் ஏறிய நாய்கடி வி­ம் முறிய, இலையின் சாற்றை 2 முதல் 4 துளிக்கு அதிகமாகாமால் நல்ல வெல்லம் கலந்து தினம் இரண்டு  வேளை கொடுக்க தீரும். ஆனால் மூன்று நாளைக்கு மேல் கொடுக்க வேண்டாம். இந்த மூன்று நாளும் கடும் பத்தியம் அதாவது பகலில் தயிர்சாதம் இரவில் பால்சாதம் உப்பு போடாமல்  சாப்பிட்டு  வர வேண்டும்.

ரணங்கள்  ஆற  பச்சை எண்ணை
                    ஊமத்தன்  இலையை இடித்து சாறு பிழிந்து கொண்டு 1/ 2  படி சாறு , 1/2 படி தேங்காய் எண்ணெய் கலந்து  1/ 2 பலம் மயில்
 துத்தம்  தூள் செய்து  கலக்கி அடுப்பில் வைத்து சிறு தீயாக வைத்து காய்ச்ச வேண்டும். சாறு சுண்டியபின்  எண்ணெய் முறியாதபடி பதமாக  காய்ச்சி இறக்கி ஆறியபின், ஒரு புட்டியில் பத்திரப்படுத்தவும். இந்த எண்ணெய்  பச்சை பசலேன்று இருக்கும். ஆகவே இதற்கு  பச்சை எண்ணெய் என்றே பெயர் வைத்து விடுங்கள். இது சகலவிதமான ரணங்கள், அடி, காயம், சிறு புண்கள், ஆறாத  நாள்பட்ட ரணம்,  சதை வளரும் புண், புரைகள் ஆகியவைகளுக்கு புண்களை வேப்பம்பட்டை கஷாயத்தால் சுத்தம் செய்து, பின் பஞ்சு எடுத்து  பச்சை எண்ணை நனைத்து ரணத்தின் மேல் வைத்து கட்டி வர யாவும் ஆறிப்போகும். இதை  உள்ளுக்கு உபயோகிக்கக்  கூடாது.
மூலிகை  ஊமத்தை

 புழுஆடுதுறை இயற்கை மருத்துவம் ‡ ம. இராச ரெத்தினம் வெட்டு நீங்கி ரோமம் முளைக்க

            ஊமத்தான் காய்:  பிஞ்சாக இருக்கும் போது ஒன்று கொண்டு வந்து  அதை ( எச்சில்) உமிழ்நீருடன் சேர்த்து நன்றாக மைபோல்  அரைத்து, புழு வெட்டு  என்ற மயிர் விழந்து சொட்டையாகி மழ மழ என்ற இடங்களில் தடவி வர மீண்டும் அந்தந்த இடத்தில் முளைக்க ஆரம்பிக்கும். இதன் காயை கண்டால் கடின சித்தமுடையவர்களின்  மனம் துணுக்குனும். இளகிய மனம் படைத்தவர்கள் அச்சம்  கொள்வார்கள். இந்த காயின் மேல்  பட்டு வரும் காற்றை சுவாசிக்க பேய், பில்லியம், சூனியம் வைப்பு ஆகியவைகள் விட்டு விலகிப் போகும். மாந்தரீகர்களுக்கும் பார்வை சேஷ்டை விலக, திருஷ்டி கழிப்பு சுற்றி எடுக்க, இதன் காய் மிக முக்கியமாக உபயோகமாகின்றது.

ஆஸ்மா புகைத்தூள்
                   ஊமத்தன் இலை, பூ, விதை மூன்றையும் 5 பலம் எடுத்து  ஒரு வாய் அகன்ற ( சட்டி) மண் பாத்திரத்தில் அரைக்கால் படி   பசும்பால் விட்டு  அதன் வாயை ஒரு மெல்லிய துணிடியக் கட்டி அதன்மேலே ஒரு  சட்டியை மூடி அடுப்பில்  வைத்து வேக வைத்து எடுக்க வேண்டும். இது பிட்டவியல் எனப்படும். பின்பு வெயிலில் நன்றாக காய வைத்து, ஒன்றிரண்டாக இடித்து தூள் செய்து , ஒரு புட்டியில்  அடைத்து வைத்துக் கொள்ளவும். சுவாச காச (ஆஸ்துமா) நோயாளிக்கு எதிலும் தீராமல் எந்தவிதமான இன்சக்­ன் மருந்துகளும் பயனற்றுபோய், சுவாச இறைப்பினால் மரணவஸ்தை பட்டுக் கொண்டு இருக்கும் சமயம், ஒரு பீடியை எடுத்து  அதில் உள்ள புகையிலை  யாவும் கீழே கொட்டி விட்டு புட்டியில் எடுத்து வைத்த இந்த தூளை  அதற்குள் நிரப்பி   பற்றவைத்து புகையை பீடிபோல பிடிக்க செய்ய, எமனுடன் வாதாபிக் கொண்டிருக்கும், ஆஸ்துமா நோயாளியின் பிராணன் பூலோகத்துக்கு திரும்பும் என்பதில் ஐயமில்லை.
.

Friday, 10 February 2017

இயற்கை மூலிகை மருத்துவம்

இயற்கை மூலிகை மருத்துவம்

-ம.இராசரெத்தினம், ஆடுதுறை

முகப் பருவைத் தவிர்க்கலாமே!

முக அழகைக் கெடுக்கும் முகப்பருவைத்  தடுப்பதே  சிறந்த வழி. வந்த பின் தீர்ந்தது  என்றால் அது குறைபாடானதாகும். எனவே முகப்பருக்களைத் தடுக்க சில வழிமுறைகளைக் காண்போம்.

13 வயது தாண்டும்போதுதான் முகப்பரு தோன்றும். அந்த வயதில் தினசரி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் இளம் சூடான நீரில் இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடியைக் கலந்து அதனை பஞ்சினால் நனைத்து முகத்தில் அழுத்தத் துடைத்து வர முகப்பருக்கள் தோன்றும் காரணங்கள் விலகும்.

கொழுப்புப் பதார்த்தங்களான முட்டை, இறைச்சி, மீன், மசாலா பொருட்களை மிதமான அளவில் உண்பது நல்லது.

கொள்ளு ரசம், பூண்டு ரசம், தினசரி உணவில் சாப்பிடுவது நல்லது. இளநீர், மோர் பருகுவது நல்லது.

பப்பாளிப் பழம், சோற்றுக் கற்றாழை ஆகியவற்றை வெட்டினால் மேற்புறம் உறைந்து கிடக்கும் மெல்லிய சோற்றினால் முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெந்நீரில் கழுவி வர முகப்பரு வராது
.
கீரைகளையும், இங்கிலீஷ் காய்கறிகளையும் சாப்பிடலாம். நொறுக்குத் தீனிகளை கைவிடுவது, காபி பருகுவதை நிறுத்துவது நல்லது.

இராசாயன களிம்பு, முகப்பூச்சுகளை பூசாமல், மேற்கண்டவற்றை மட்டும் பின்பற்றி வர முகப்பரு வராது தடுக்கலாம்.

புற்றுநோய் எதிர்ப்புணவு பட்டியல்

இந்தியாவைப் பொறுத்தவரை ‘புற்றுநோய்’ பாதிப்பு தவறான உணவுப் பழக்கம், போதை  மருந்துகளால் மட்டுமே ஏற்படுகின்றது. புகையிலை நஞ்சினால் நுரையீரல்புற்று, கன்னப்புற்று, அதிக காரம், அதிக புளிப்பு உண்பதால் வயிறு மற்றும் மலவாய் புற்றுநோய்கள் உண்டாகின்றன.

மகளிரைப் பொறுத்தவரை சுகாதார உணர்வின்றி அசுத்தமாக கருப்பையை வைத்திருப்பதால் மிகுதியாக புற்றுநோய்  ஏற்படுகின்றது. அத்துடன் ‘தாய்ப்பால்’ தரும் வழக்கம் குறைந்து வருவதால் மார்பகப் புற்றுநோயும் வருகின்றது. இவற்றை, வருவதற்கு முன் தடுக்கும் முறையே சிறந்ததாகும். அதற்கு “புற்றுநோய் எதிர்ப்புணவு”  உறுதுணையாகும்.

சார்கோமா மற்றும் கார்சினோஜின் ஆகிய வகை சார்ந்த புற்றுநோய்களை வராமல் தடுக்கக் கீழ்க்கண்ட அன்றாட உணவிலோ அல்லது அடிக்கடியோ உண்டுவர அந்த வகைப் புற்றுநோய்களிலிருந்து முற்றிலும்  உடம்பைப் பாதுகாக்கலாம்.

காரட் :

தினசரி காரட் 1 எடுத்து அத்துடன் வெங்காயம் 1 வெட்டி மோருடன் கலந்து உப்பின்றி பச்சடிபோல் சாப்பிடுவது நல்லது. இதிலுள்ள ‘பீடா கரோட்டின்’ சத்து, புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலை ஊக்குவிக்கின்றது. இவ்வாறு கல்லீரல் இத்தகைய பாதிப்பிலிருந்து பாதுகாப்பு பெறும்.

தூதுவளை துவையல் :

தூதுவளை இலைகளை வாரம் 3 நாட்கள் நெய்யில் வதக்கி (புதினாவுடன்) புளி சேர்க்காமல் துவையல் செய்து 1 பிடி சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டு வர புகையிலை காரணமாக புண்ணாகிவிடும் நுரையீரலை சீர்படுத்தி நுரையீரல் புற்றுநோய் வராமல் செய்யலாம்.

மாங்காய் பச்சடி :

மாங்காய் பச்சடி பெருங்குடலில் வரக்கூடிய புற்றுநோயை, வராமல் தடுக்கும். சுண்டைக்காய், வற்றல், மாதுளை சர்பத் 

Sunday, 30 October 2016

இயற்கை மருத்துவம், - ம. இராஜரெத்தினம், இயற்கை மருத்துவச் சங்கம், ஆடுதுறை

இயற்கை மருத்துவம்

- ம. இராஜரெத்தினம், 
இயற்கை மருத்துவச் சங்கம், ஆடுதுறை

உணவில் சேரும் இரசாயன நச்சுக்கள்

அன்றாட நமது வாழ்க்கையில் ஆரோக்கியம் என்பது நமக்கு புரியாத புதிராகவே உள்ளது. ஏன்? எதற்காக நோய் வருகிறது? என்ற நமது கேள்விகளுக்கு நமக்கு சரியான பதில்கள் கிடைப்பதில்லை. காரணம் உண்மை தெரிந்தவர்கள் (மருத்துவர்கள்) சொல்வதில்லை. சொல்வதற்கு நேரமும் இல்லை. அவர்கள் கூற நாம் அனுமதிப்பதும் இல்லை. மேலும் அவர்கள் சொல்ல விரும்பும் வி­யங்கள் அவர்களுக்கு முழுமையாகத் தெரிவதில்லை. இக்காரணங்களால் ஆரோக்கியம் என்பது புரியாத புதிராக உள்ளது. அந்த புதிரை அவிழ்க்கும் சிறிய முயற்சி இந்தக் கட்டுரை. முதலில் நமது உணவுகளில் நாம் அறியாமலேயே எவ்வாறு நச்சுக்களால் பாதிக்கப்படுகிறோம் என்பதை அறிவோம்.

சீனி : 

நிலத்தில் இருந்து கிடைக்கும் கரும்புச்சாறில் 75லிருந்து 80 சதவீதம் நீர்ச்சத்தும், 8லிருந்து 15 சதவீதம் சுக்ரோசும் மற்றும் குளுக்கோஸ், பிரக்டோஸ், மெழுகு, ரெசின், சோடியம், பொட்டாசியம், கால்சியம், சிலிகா, குளோரைட் பாஸ்பேட் போன்ற நமது உடம்பிற்கு தேவையான கனிமச் சத்துக்கள் உள்ளன. சீனி தயாரிப்பில் கரும்புச்சாறு பிழியப்படும் முதல் நிலையில் பால்மாலின் அல்லது பிளிச்சிங்பவுடர் அல்லது குளோரின் அல்லது அம்மோனியா பை புளுயீடு பேக்டீரியா கன்ட்ரோலாக உபயோகப்படுத்தப்படுகிறது.

2வது நிலையில், பிழிந்த சாறு 60 - 70 டிகிரி செல்சியஸில் பாஸ்போரிக் ஆசிட் 200 மில்லிகிராம் / லிட்டர் வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. பாஸ்போரிக் ஆசிட் அழுக்கு நீக்கி அல்லது கிளினிங் ஏஜெண்டாக பயன்படுகிறது.

3வது நிலையில் வினைபுரிகலனில் சுண்ணாம்பு நீர் (0.2% ) அளவு சேர்த்து, பின் சல்பர்டை ஆக்ஸைடு வாயுவை செலுத்துகிறார்கள். வெண்மைநிறம் சுண்ணாம்பால் பெறப்படுகிறது.

4வது நிலையில் 102 டிகிரி செல்சியஸ் ஹீட்டரில் (கொதிகலனில்) கொதிநிலை அளவிற்கு சூடுபடுத்தப்படுகிறது. இப்போது நாம் நல்ல விட்டமின்களை இழக்கிறோம். செயற்கை சுண்ணாம்பு அளவுக்குமீறி சேர்ந்துவிடுகிறது.

5வது நிலையில் சாறு தெளிவடைய பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை சேர்ந்த பொருள் பிரித்தெடுக்கப்பட்டு, தெளிந்த சாறு கிடைக்கிறது.

6வது நிலையில், சுண்டுகலனில் காஸ்டிக்சோடா, வா´ங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த சாறு தயாராகிறது.

7வது நிலையில் மறுபடியும் சல்பர் டை ஆக்ஸைடும், சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்ந்து படிகநிலைக்கு வருகிறது. சல்பர் டை ஆக்ஸைடு (கந்தக அமிலத்தின் பகுதி பொருள்) நஞ்சு மறுபடியும் சீனியில் சேருகிறது.

8வது நிலையில் சென்டரி பியூசிங் அல்லது சுழற்சி முறையில் சீனி தனியாகவும் மொலாசஸ் (சாராயச் சர்க்கரை) தனியாகவும் பிரித்து எடுக்கப்படுகிறது. மொலாசஸில் நமக்குத் தேவையான சத்துக்கள் சென்றுவிடுகின்றன. இறுதியில் வெள்ளைநிறச் சீனியாக எஞ்சியிருப்பது கார்பன் எனும் கரியே ஆகும். இதனுடன் மாட்டின் எலும்புச் சாம்பல் சேர்த்து நாம் பயன்படுத்தும் சீனி விற்பனைக்கு வருகிறது. மேலும் சீனி 6 மாதங்களுக்கு உபயோகப்படுத்தாமல் இருந்தால் சல்பர் டை ஆக்ஸைடால் மஞ்சள் நிறமாகி வீரிய நஞ்சாகி விடுகிறது.

தீமைகள் : 

1. சீனி சீரணத்தின் போது, அதில் கரி மட்டுமே எஞ்சியிருப்பதால் நமது உடலில் உள்ள நல்ல வைட்டமின்கள், தாது  உப்புக்கள் மற்றும் பி காம்பளக்ஸ் சத்துக்களை திருடிவிடுகிறது. இதனால் கல்லீரல், கணையம், இதயம் ஆகியவற்றின் செயல்திறன் வீரியம் குறைகிறது. இதன் காரணமாக ஆண்மைக் குறைவு ஏற்பட்டு மனிதன் மிகுந்த பலவீனத்திற்கு உள்ளாகிறான்.

2. உடல் உழைப்பு இல்லாமல் வெள்ளைச்சீனி கலந்த பண்டங்களை அதிகம் சாப்பிடுவதால் தேவையற்ற உடல் எடை கூடி, உடல் பருமன் ஆகி நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. சுவாசக்கோளாறு, சளித்தொல்லை, மூக்கடைப்பு வருகிறது.
3. ஆஸ்துமா நோயாளிகளுக்கு, வெள்ளைச்சீனி பிராண சக்தியை குறைத்து விட்டமின்களையும் திருடிவிடுவதால், இதயநோய், மாரடைப்பு, சிறுநீரக நோய்களுக்கு வித்திடுகிறது.
4. சீரணத்தின் போது பாஸ்பரஸ், இரும்புச் சத்து, தியமின் போன்ற பொருட்கள் குறைவதால், குடல்புண், இரத்தசோகை ஏற்படுகிறது. இளமை திசுக்கள் விரைந்து அழிய ஆரம்பிக்கின்றன. முகம் பொலிவிழந்து கட்டிகள், முகப்பரு ஏற்பட இதுவே காரணமாய் அமைகிறது.
5. காபி, டீ அதிகம் அருந்துவதால், வெள்ளைச்சீனி அதிகம் சேர்ந்து பலருக்கு பசி என்பதே என்னவென்று தெரிவதில்லை. வயிற்று  உபாதைகள் ஏற்படுகின்றன; நரம்புகள் தளர்ந்து விடுகின்றன. மேலும், கடையில் விற்கும் நாட்டுவெல்லத்தில் சோடியம் பை கார்பனேட் சேர்க்கப்படுவதால் உடலுக்கு ஊறு ஏற்படும். எனவே, இனிப்பிற்கு பனைவெல்லம் (கருப்பட்டி), தேன், இரசாயனம் கலக்காத நாட்டுவெல்லம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

டீ :
இதில் தியோ புரோமின் என்ற இரசாயனம் கலந்துள்ளது. டீ தயாரித்த பாத்திரத்தின் உள்ளே கருப்பாக இருப்பது தியோ புரோமின்தான். மேலும் நாம் இங்கு குடிப்பது Dust Tea. வெளிநாட்டில் தியோ புரோமின் நீக்கப்பட்ட சுத்தமான டீ‡ஐ பயன்படுத்துகின்றனர். தியோ புரோமின், குடல் பகுதியில் ஒரு லேயர் உண்டாக்குகிறது. இது மலச்சிக்கலை உண்டாக்கி, உள்ளுறுப்புகளை சூடாக்குகிறது. இதனால் இரத்தச்சோகை ஏற்பட்டு, உடலின் எதிர்ப்புச்சக்தி குறைகிறது. ஆவாரம்பூ, தாமரை கலந்த இயற்கை மூலிகை டீ‡ஐ பயன்படுத்த வேண்டும்.

காபி :

இதில் கஃபின் என்னும் கொடிய நஞ்சு கலந்துள்ளது. 
இதன் தீமைகள் : 
குழந்தைகளின் உறக்கத்தை தடுத்து வளர்ச்சியை தடைப்படுத்துகிறது. பித்தத்தை அதிகரித்து வாந்தி, மயக்கம், தலைசுற்றல், அஜீரணம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. உடலில் உள்ள கால்சியத்தை திருடி விடுகிறது. மேலும், உடல் எலும்புகளிலுள்ள தாதுக்களின் (Bone Mineral Density) அடர்த்தியைக் குறைத்து, அவற்றை வலுவிழக்கச் செய்கிறது. இதனால் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படும். இரைப்பையில் அமிலத்தை அதிகப்படுத்தி புண்களை ஏற்படுத்தும். இரத்தத்தில் கொழுப்பை அதிகரிக்கிறது. மன பதட்டம், மன இறுக்கம் போன்ற நரம்பியல் வியாதிகளை ஏற்படுத்துகிறது. சிறுநீரக பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இதயத்தை வலுவிழக்கச் செய்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படுகின்ற வலி மற்றும் மார்பக வலிக்கு கஃபினே முழுக்காரணம்.

Saturday, 3 September 2016

இயற்கை மூலிகை மருத்துவம், -ம.இராசரெத்தினம்.ஆடுதுறை

இயற்கை மூலிகை மருத்துவம்

-ம.இராசரெத்தினம்.ஆடுதுறை.
இயற்கை மருத்துவ சங்கம்.

அனுபவ வைத்திய முறைகள்

1. வயிற்றைக் கவனித்து வாயைக் கட்டினால் வைத்தியன் தேவையில்லை. புளிப்பு சுவை அதிகமா? அமிலதன்மை, வலி, புண், வாயு  உணர்ச்சி  மிகும்.
அஜீரணம் ‡ ஜீரகம் 10, மல்லி 10, இந்துப்பு 5 (பொடி) + இஞ்சி 50 + லெமன் சாறு.

2. அஜீர்ணபேதி - ஓமம் + மிளகு + சர்க்கரை மூன்றும் கலந்து காலை, மாலை ஒரு டீஸ்புன்.
குடற்புழு ஒழிய ‡ ஓமம் + பணங்கற்கண்டு கலந்து காலை, மாலை சாப்பிடு.
வயிற்றுவலி போக ‡ ஓமம் +  இந்துப்பு வெந்நீரில் கலந்து பருகவும்.

3. சத்து பற்றாக்குறையால் உடல்நிலை மிகவும் பாதிக்கப்படுகின்றது. நீங்கள் தொடர்ந்து விரும்பி உண்ணும் உணவுகளே பின்னர் நோய் தரும். மூன்று வேளை உண்பதைவிட அடிக்கடி சிறிது சிறிதாக உண்பதே நல்லது.

4. ஆயுளை நீடிக்கச் செய்யும் உணவுகளைத் தேடி, தெரிந்து உண்ணுங்கள். ஊட்டச்சத்து உணவுகளே உடலிலுள்ள உயிரணுக்களை வளர்க்கின்றது. ஜீனியைக் குறை, கால்சியம் உணவுகளைக் கூட்டி எலும்புகளை பராமரிக்கவும்.

5. யோகா, உடற்பயிற்சி மூலம் உட்புற, வெளிப்புற கழிவுகளை வெளியேற்றுக. கழிவுகளைத் தரும் உணவுகள் உடலுக்கு சக்தி தராமல் சோர்வையே தரும். பித்த மயக்கத்தின் பிதற்றலே பேய், பிசாசு என்கின்றது மருத்துவ ஆய்வு.

6. அன்னம், நா, பல், உதடு, குறி, கண்கள், மூளை, கைவிரல்கள், பாதம் ஆகிய பாகங்களில் உணர்வு மிகுதி  உண்டு.
சிறுநீர் போகும் போது வலியா? இரவில் பார்லி கஞ்சி உபயோகியுங்கள். வெய்யிலில் அலையும்போது குளிர்ச்சிக்கு வெள்ளரி சாப்பிடுங்கள்.

7. வயிற்று வலியா? - கசகசாவை அரைத்து பசும்பாலில் கலக்கி பருகவும். 
தேமல் போக - ஜாதிக்காயுடன் நாயுறுவி இலையை அரைத்துத் தடவுங்கள். 
வழுக்கையா? - கீழாநெல்லி வேரை தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தடவுங்கள்.

8. ஆஸ்துமாகாரர்கள் தினமும் பூண்டு உபயோகிப்பது மிகவும் நல்லது. அயோடின் அதிகமுள்ள மூலிகை ‡ மஞ்சள் கரிசாலை, பொண்ணாங்கண்ணி
அதிக பிராணசக்தி கிடைக்க தினமும் சிறிது நேரமாவது சிரிக்கவும்.

9. தோல் நோயா? - இலுப்பை / இலுவ இலையை அரைத்துப் பற்று போடுங்கள். 
வயிற்றில் வாயுவா - இலட்சக்கட்டுக் கீரையை உணவில் சேர்க்கவும்.
தேள்கடி? - மாங்காய் காம்பு பால் தடவு / சுக்கை இழைத்து பற்றுப்போடு.

10. உடல் குண்டு குறைய ‡ வாரம் இருமுறை கொல்லு ரசம் உபயோகியுங்கள்.
நெஞ்செறிவு ‡ வெறும் வயிற்றில் லெமன் ஜீஸ் சாப்பிடுங்கள்.
நாய்கடி - மணித்தக்காளி சாறு தடவி, சக்கையை காயத்தில் வைத்து கட்டு.

11. சளி, கபத்திற்கு சுண்டைக்காயை சாப்பாட்டில் பயன்படுத்துவது நல்லது. வயதானவர்கள் உடல் வலுப்பெற கொல்லுக்கஞ்சி சாப்பிட வேண்டும். படுக்கையில் சிறுநீர் போகின்றதா? எள், முள்ளங்கி உபயோகியுங்கள்

தமிழ் இலக்கியத்தில் ஆரோக்கிய அருமருந்து

தமிழ் இலக்கியத்தில் ஆரோக்கிய அருமருந்து


- அருள்சகோ. விமலி fihm, 
இதயா மகளிர் கல்லூரி, குடந்தை

நமது  ஆரோக்கிய அன்னை தனக்கு அறிவிக்கப்பட்ட கடவுளின் திருஉளத்தை முழுமன சுதந்திரத்தோடு ஏற்று தன்னை முழுமையாக அர்ப்பணித்தாள். அன்னை மரியாள் தன் வாழ்வில் சுதந்திரத்தை வாழந்துக்காட்டினார். மரியாள் தனது அகசுதந்திரத்தை  பயன்படுத்தி  ஆண்டவரின் குரலுக்கு “ஆகட்டும்” என்றார். நாமும் நாம் பெற்றிருக்கின்ற புறசுதந்திரத்தை அகசுதந்திரத்தோடு வாழ்ந்தோம் என்றால் நாமும் மகிழ்ச்சியாக இருப்போம், பிறரையும் மகிழ்ச்சியாக வாழ வைப்போம். நமது நாட்டின் விடுதலைக்காக தியாகம் செய்து, போராடிய மாபெரும் தலைவர்கள் எல்லாம் முழுமன சுதந்திரத்தோடு, துன்புறும் வாழ்வை தேர்ந்து கொண்ட,  தாய் நாட்டின் விசுவாசிகள் அல்லவா? நாட்டு மக்களை நேசித்த தியாகிகள் அல்லவா? அன்றைய தலைவர்கள் சுதந்திர கானமாக “அன்னியனே வெளியேறு” என்பதை தேசிய சிந்தனையாக வெளியிட்டு, மக்கள் மனங்களை நிரப்பியதால்தான், அடிமைகளாய் இருந்த போதே சுதந்திர கீதம் பாடினார்கள், ஆடினார்கள்

இன்றோ ஆளுகின்றவர்கள், தம்மை தேசியவாதிகள் என்று கூறிக் கொண்டு, நாட்டின் வளர்ச்சிக்காக என்று சொல்லிக் கொண்டு ”அன்னியர்களே வாருங்கள் எங்கள் நாட்டின் வளங்களை, பொருளாதாரத்தை கொள்ளையடியுங்கள்” என்று கூவிக்கூவி அழைக்கிறார்கள். இதுதான் இவர்கள் பெற்ற சுதந்திரமோ? ஆதலால்தான் இந்திய தேசத்தின் சிறுபான்மை இனங்களை வெளியேறுங்கள் என்று கூப்பாடு போடுகிறார்களோ? எந்த வழியில் பயணமாகிறது நாம் பெற்ற சுதந்திரம்? இதே போன்றுதான் நமது மருத்துவமும் நமது மொழியும்.

“செம்மொழி” என்னும் சிறப்பினைப் பெற்றுச் செம்மாந்து நிற்கின்றது நம் தமிழ்மொழி. கலை, நாகரீகம், கல்விநிலை, இலக்கியச் சுவையுணர்வு, பிறமொழிச் செல்வாக்கு, செங்கோண்மை அடிப்படையில் அருமையுற அமைந்த மனித உடலைப் பேணிக்காத்திடும் அறிவுரைகளையும், மருத்துவத்தையும் தம்முள் தாங்கி நிற்கின்றது நமது தமிழ் மருத்துவம்.

மருத்துவத் தமிழ் :

தமிழ் இலக்கிய மருத்துவத்துவத்தின் தந்தையயன போற்றத்தக்கவர் திருமூலர். உலகம் வியக்கும் வண்ணம் அரிய மருத்துவ முறைகளைப் பண்டையத் தமிழர்கள் அனுபவத்தின் பயனாக உலகிற்கு அளித்து உள்ளனர். சித்தர்களின் உயரிய மருத்துவப் பாடல்கள், நான்காம் தமிழாக உருவெடுக்கிறது. இவ்விலக்கியங்களை ஆராய்ந்தால் இன்று குணப்படுத்த முடியா பல நோய்களுக்கு சரியான மருத்துவ முறைகளைக் கண்டு அறியலாம்.

மருத்துவ முறையின் கூறுகள் :

மருத்துவ முறையின் கூறுகளை வகுத்துக் கூறுகின்றார் வள்ளுவர்.

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்” (948)

என்ற குறளில் மருத்துவர் நோயாளிக்கு கண்டிருக்கும் நோயை அதன் குறிகளால் இன்னது என்று ஆராய்ந்து, பின்பு அந்நோய் வந்த காரணத்தை ஆராய்ந்து, அந்நோயைத் தீர்க்கும் உபாயத்தை ஆராய்ந்து மருத்துவம் செய்தல் வேண்டும் என்கிறார்.

“பயன் மரம் உள்ளுர் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்”

மருந்து மரமானது காற்று நிழல், கொழுந்து, தளிர் இலை, அரும்பு, போதமலர், பிஞ்சு, காய்கள், பட்டை, பால் விழுது, வேர், நரம்பு, காம்பு, சருகு, கொட்டை, நரம்பு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுன்றது. மருந்துகள் மனிதனுக்கும் உச்சி முதல் உள்ளங்கால் வரை நோயைப் போக்கி நல்வாழ்வு வாழ  பயன்படுகின்றன. மருந்தால் நோய் தீருமென்பதையும், சில நோய்கள் தீராதென்பதையும் இன்ன நோய்க்கு இன்ன மருந்து பயனளிக்கும் என்பதையும் புறநானூறு தெளிவாகக் கூறுகிறது
.
“பசிப்பிணி மருத்தவ னில்லம்
அணித்தோ சேய்த்தோ கூறுமி னெமக்கே” (புறம் 173)

இயற்கை முறையில் நோய்களைத் தீர்ப்பதில், பூமி, நீர், தீ, காற்று போன்ற பொருள்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. நவீன வைத்தியத்தில் நோய் அறிகுறிகளைக் கண்டறிந்து நோயைக் குணப்படுத்துகிறோம். அதனால் உண்மையான காரணம் என்ன என்பதை முழுவதும் கண்டறிவதில்லை. கொடுக்கப்படும் பக்க விளைவுகளால் உடல் மேலும் பாதிக்கப்படுகிறது. உட்கொள்ளும் மருந்துகளும், பசியின்மையை ஏற்படுத்துகின்றன. சீரணத் தன்மையும்குறைகின்றன. அந்த மருந்துகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் உடல் பலவீனமடைந்து விடுகிறது. ஆரோக்கியத்தைத் திரும்பப் பெறும் சக்தி மருந்துகளில் இல்லை. இயற்கையில்தான் உள்ளது என்ற கருத்தினை நற்றிணை பாடல் உணர்த்தியுள்ளது.

மருந்துகளின் தந்தையாகிய ஹிப்போகிராட்ஸ் “நோயைக் குணப்படுத்துவது இயற்கைதான். வைத்தியன் அல்லன்” என்கிறார். பண்டைய காலத்தில் போர் வீரர்கள் மேனியில் பட்ட வெட்டுக் காயத்துக்குத் தும்பைச் சாற்றை மருந்தாகப் பயன்படுத்தியுள்ளனர். செல்வக் கடுங்கோ வாழியாதன் போர்ப் பாசறையில் அம்புபட்ட புண்ணுக்கு மருந்தாக சந்தனம் பூசி இருந்த செய்தியை கபிலரின் பாடலில் காண முடிகிறது.

“உண்டிமெய் யோர்க்கு உறுபிணி எளிது”

என்ற வரிகள், அளவுக்கு அதிகமான உணவு வகைகளை உண்பவர்களுக்கு அளவற்ற நோய்கள் உண்டாவது எளிது.

தேம்பாவணியில் வீரமாமுனிவர் மூலிகைகளையும், பச்சிலைகளையும், வேர்களையும் மருந்தாகப் பயன்படுத்தும் உத்தியை கூறியுள்ளார். “பெளத்தம்” அம்புபட்ட அன்னப் பறவைக்கு புத்தர் பச்சிலைச் சாறு எடுத்து மருத்துவம் செய்துள்ளார். வள்ளற்பெருமான் அவர்கள் 135 ஆண்டுகளுக்கு முன்பே 485 வகையான மூலிகைகளையும் அவற்றின் மருத்துவ குணங்களையும் அட்டவணையிட்டு எழுதி வைத்துள்ளார்.

பச்சிலைகளில் எளிதில் கிடைக்கக் கூடிய கரிசலாங்கண்ணி, பொற்றாலைகையாந்தரை, தூதுவளை, புளயாரை, பொன்னாங்கண்ணி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு வள்ளற் பெருமான் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

கரிசலை - பாண்டுமர்த்ததனி ‡-என்கிறார்.

தினமும் கரிசலாங்கண்ணி இலையை பச்சையாகவோ, சமைத்தோ சாப்பிட்டு வந்தால் இரத்த விருத்தி உண்டாகி சோகை நோய் வராது.

“சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் துன்னுநல்தவம் ....
ஆற்றிலே கரைத்த புளி என்போம்”

என வள்ளலார் அறுதியிட்டுச் சொல்கிறார். பசித்தபின்பு உண்ண வேண்டும். ஒரு பிடி குறைவாகவே சாப்பிடுவது ஆரோக்கியம். வயிற்றில் அரை பங்கு உணவு, கால்பங்கு தண்ணீர் கால்பங்கு வெற்றிடம் இருக்கும்படி உண்ணப் பழக வேண்டும்.

முதன்மையாக மருத்துவக் கண்ணோட்டத்தில் நமது முன்னோர் உணவின் சுவையினை ஆறுவகைகளாகப் பயன்படுத்தினர். ஒரே நேரத்தில் ஆறுவகைச்சுவை  உணவையும் வயிறுபுடைக்க உண்ண வேண்டும் என்பது கருத்தல்ல. உடலின் நலனறிந்து ஆறுவகைச் சுவையினையும் பயன்படுத்தினால் உடல் நோயனுகாத இயல்பு புகுந்த முழுமையான ஆரோக்கியத்தை பெற முடியும் என்பது நமது முன்னோர்களின் சிந்தனையாக இருந்தது.

உடலின் அடிப்படையான ஆறு தாதுக்கள் என்பன இரத்தம், எலும்பு, தசைக்கொழுப்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஆறும் அடிப்படையான தாதுக்கள். மூளை என்பது உடலின் மற்ற தாதுக்களை ஆட்டிப்படைக்கும் தன்மை பெற்றிருப்பதால் அதை தலைமைத்தாது என்று பிரித்து விட்டால் மிச்சமிருப்பவை ஆறு தாதுக்களாகும். இந்த ஆறு தாதுக்கள் தான் ஆறு ஆதாரங்கள் எனப்படும்.

இவ்வாதாரங்கள் அரவே இல்லாது,  ஆக்கும், அழிவு வேலைகள் அதிகமாக அரங்கேறுகின்றது. நம் நாட்டில் அதன் வெளிப்பாடுதான், இன்று, இந்தியாவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன வாருங்கள் என அன்னிய (மருந்து)களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் நபர்களாக நமது தலைவர்கள் இருக்கின்றார்கள். இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து அரசியல் விடுதலை பெற்ற 69‡ஆம் ஆண்டு இது. நாட்டு விடுதலைக்காக செய்யப்பட்ட தியாகங்களை நினைத்துப் பார்ப்பதும் தியாகிகளைப் போற்றுவதும் பொருத்தமானவையே. சுதந்திர இந்தியாவின் முதல் கொடியை ஏற்றிய ஜவஹர்லால் நேரு அந்த நடுநிசியின் புதிய விடியல் பற்றிக் குறிப்பிடும்போது, அது விதியை நாம் நேருக்கு நேர் சந்திக்கும் தருணம் என்றார். விதியையே எதிர்த்து நின்று வரலாறு படைப்போம் என்னும் நம்பிக்கை அவரது உரையில் இருந்தது. எனவே தமிழர்களின் வியத்தகு மருத்துவ முறையினை முறையாக ஆராய்ந்து சரியான மருத்துவ தன்மையினை முழுமையாக உலகிற்கு வெளிப்படுத்த வேண்டியது நம் கடமையாகும்.

அவநம்பிக்கையின் அச்சம் தவிர்க்கும் மருந்தான
நம்பிக்கையின் உச்சம் தொடுவோம்!

Wednesday, 27 July 2016

இயற்கை மருத்துவம்

இயற்கை மருத்துவம்
 ம. இராசரெத்தினம், 
இயற்கை மருத்துவ சங்கம், ஆடுதுறை


சித்தர் பாடல் : தேரையர் கூறும் தேர்ந்த மருந்து
ஒற்றைத் தலைவலிக்குத் தைலம்

பார்த்துமே தலை நோய்க்கு தைலம் கேள்
ஆர்த்து வெள்ளுள்ளி உரிய வலம்புரி
கோத்து மாசிக்காய் குறிக்கும் லவங்கமும்
தீர்த்து சமனெடை தீர வெடுத்திடே
எடுத்துக் கொம்பரக் கெழியாக வல்லிடை
உடுத்துமே பசும்பாலில் அரைத்துமே
தொடுத்துமே வெண்ணெய் தோன்றக் கலக்கியே
காடுத்து முத்தியும் கூற யயறக்கிட
எறக்கி மாய னெழிலடி போற்றியே
உறக்க மண்டல முற்று முழுகிட
திறக்கக் கபால சூலை வலியுறும்
பறக்கு மென்றால் லோ பாடினான் தேறனே

ஒற்றைத் தலைவலி வந்து அவதிப்படுபவர்கள் கீழ்க்கண்ட தைலத்தை தயாரித்து வாரம் இருநாள் தலைமுழுகி வர கபால குத்தல், கபால சூலை காரணமாக வரும் ஒருபக்க தலைவலி ஒரு மண்டலத்திற்குள் விலகும் பூசணிக்காய், புடலங்காய், முள்ளங்கி, தக்காளி, இளநீர், எலுமிச்சம் பழம் ஆகியன சாப்பிடக் கூடாது.

செய்முறை :
வெள்ளைப்பூண்டு - 50 கிராம்
வலம்புரிக் காய் - 50 கிராம்
மாசிக்காய் - 50 கிராம்
லவங்கம் - 50 கிராம்
கொம்பாக்கு - 50 கிராம்
இவைகள் அனைத்தும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

இவற்றை பசும்பாலில் அரைத்து 1 கிலோ நல்லெண்ணெய் கலக்கி காய்ச்சி முறுகுபதத்தில் இறக்கி ஆற வைத்து எண்ணெய் தேய்த்து குளிக்கவும். பெண்கள் வெள்ளிக்கிழமையும், செவ்வாய் கிழமையும், ஆண்கள் புதன் கிழமையும், சனிக்கிழமையும் குளிக்கவும் (ஒரு மண்டலம் = 48 நாட்கள்)
குழந்தைகள் பிணியின்றி இருக்க வேண்டுமா?
கிறந்த குழந்தைக்கு முதல் மூன்று நாட்கள் கட்டாயமாக தாய்ப்பால் அளிக்கவும், மஞ்சள் நிறமாக கசியும் தாய்ப்பால் மிகவும் நோய் எதிர்ப்பாற்றலைக் குழந்தைகளுக்குத் தரக்கூடியதாகும். கொலஸ்ட்ரால் எனப்படும் இந்த சத்துப்பொருள் தாய்ப்Vலைத் தவிர மிகச்சிறப்பாக எதிலும் கிடைப்பதில்லை. இது குழந்தையின் நோய் 
எதிர்ப்பாற்றலை ஊக்குவித்து தீவிரமான நோய்கள் வராமல் காக்க உதவுகின்றன.

தொப்பையை கரைக்கும் அன்னாசி :

அன்னாசி பழத்தில் வைட்டமின் பி உயிர்ச்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் இரத்தத்தை விருத்தி செய்யவும், பலத்தை தரவும் செய்கிறது. பல வியாதிகளை குணப்படுத்தும் மருந்தாக இருக்கிறது. தேகத்தில் போதுமான இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசி பழம் சிறந்த டானிக் ஆகும்.

நன்றாக பழுத்த அன்னாசியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் தூசிபடாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை அரைமணி ஊறவைத்து படுக்கும் முன் குடிக்க வேண்டும். இப்படி ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். அனைத்து விதமான உடல் உபாதைகளும் நீங்கும். அன்னாசிப் பழச்சாற்றை தொடர்ந்து குடித்து வர முகம் பொலிவு பெறும். இளம் பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.

ஒரு அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி 4 தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாக கிளறி ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கி இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். மறுநாள் காலையில் அதை பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடிக்கவும். அப்படி 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் தொப்பைக் கரையத் தொடங்கும்.
இஞ்சிச் சாற்றை பாலில் கலந்து சாப்பிட உடல் எடை குறையும். ஊற வைத்த அவலை காலையிலும், இரவிலும் சாப்பிட்டு வர உடல் எடை குறையும். 300 கிராம் கருணைக் கிழங்கை தினமும் மதிய உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும். பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு சேர்த்து அவித்து கடைந்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக் குறையும். காசிணிக் கீரையை உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

Saturday, 2 July 2016

சர்க்கரை நோய்க்கு இயற்கை மருத்துவம்

இயற்கை மூலிகை மருத்துவம்

-ம.இராசரெத்தினம்.ஆடுதுறை.
இயற்கை மருத்துவ சங்கம்.

சர்க்கரை நோய்க்கு இயற்கை மருத்துவம்

தண்ணீர் குடித்தல் :

சர்க்கரையே சொல்லுமடா கரை என்னை என்று
நீ அக்கறையோடு கரைத்திட்டால் உன் குறை என்ன?
சர்க்கரைதான் கரைத்திட்டால் கரையாதோ?
கரைந்திட்டால் உன் குறை யாது?

காலை எழுந்தவுடன் 1 லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடித்து வந்தால் மருந்தில்லாமல் சர்க்கரை நோய் தீரும். காலை 4 1/2 அல்லது 5 மணிக்கு குடிக்கவும்.

தண்ணீர் குடிக்கும் முறை சித்தர் பாடல் :

1.தண்ணீர் அண்ணாந்துண்டால் சாரும் செவி மந்தம்
கண்ணக் குனிந்துண்டால் காசமுண்டாம் ‡ தண்ணீர்
குடிக்க வென்றால் பாத்திரத்தை வாயால்
கடிந்து அருந்த துன்பம் அரும் காண் ‡ சித்தர் பாடல்

2. ஆசார கேணி நீர் அருந்திட
வீசு சூடு பசி மெய்காந்தல் மாசூளை
மெய்யுள்வலி இடைதுளைப்பான் வீழ்
மயக்கம் - சோவை பித்தம்
பைய வரம் ஈனையாகும் போம் - அகஸ்தியர்

3. தூங்கி எழுந்தவுடன் சுத்தோதம் அருந்த
ஏய்கி நின்ற பித்தம் ஒழிவதன்றித் தேங்கும்
மலம் மூத்திரம் தங்கா வாதாதி தத்தம்
தல மாத்திரம் உலவும் காண் - தேரையர்.

சுத்தோதம் : சுத்தமான தண்ணீர்
 வாதாதி : வாத, பித்த, சிலேத்துமம் (மூன்று நாடி)
அதிகமான அளவு தண்ணீர் குடிக்க சர்க்கரை நோய் தீரும்.

4. சர்க்கரை நோய்க்கு ஆரைக்கீரை : தின்றாலும் உருசிதரும் தீராப்பயித்தியத்தை
பொன்றாத நீரழிவைப் புண்ணீரை என்றும் இந்த ஊராரைச் சாராமல் ஓட்டுவிடும் - நாலிதழார்
நீராரைக் கரையது நீ

இந்த கீரை வயல்களில் கிடைக்கும். நீராரைக் கீரை நீரைக் கட்டும் குணமுடையது. சத்து மிகுந்த கீரை. உடலுக்கு உரம் தரும். அதிக தாகம் தீரும். குடித்த நீரெல்லாம் சிறுநீராகசன கழியும். அடிக்கடி சிறுநீர் போகும். பித்தரோகம் கபாலத்தைப் பற்றிய நோய்கள் போகும். உடல் உஷ்ணத்தை குறைக்கும். சிறுநீரில் இரத்தம் போதலைக் கட்டுப்படுத்தும். சர்க்கரை வியாதிக்கு மிகவும் நல்லது. அதிக சிறுநீரைக் குறைத்து அளவோடு போக செய்யும். தேக புஷ்டியை உண்டாக்கும். நாவிற்கு இனிப்பாக இருக்கும். பைத்தியத்தை குணமாக்கும். நீரழிவு நோய் உள்ளவர்கள் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக குணமாகும். இலையை பச்சையாகவோ, சமைத்தோ சாப்பிடலாம். பொடி செய்தும் சாப்பிடலாம். பச்சையாக, சமைக்காமல் சாப்பிடுவது நல்லது.

நாவல் கனிகளை சாப்பிடலாம். கொட்டையை பொடி செய்து காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிடடு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும். மேலும் வெந்தயம் - 500 கிராம், ஓமம் ‡ 200 கிராம், காட்டுசீரகம் ‡ 100 கிராம், கருஞ்சீரகம் - 100 கிராம், பிளவு சீரகம் ‡ 50 கிராம் (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்). அவற்றை வெயிலில் காய வைத்து பொடியாக இடித்து காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் எட்டு நாளில் சர்க்கரை நோய் குணமாகும். பொடியை வாயில் போட்டுக் கொண்டு 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.

சர்க்கரை நோய்க்கு வல்லாரைக்கீரை :

அக்காரை நோய் அகலும் வயிற்றிழவு
தக்க ரத்தக்கடுப்பு தானேகும் பக்கத்தில்
வல்லாரையும் மருந்து என்றேயுரைத்து தன் மனையுள்
வல்லாரையை வளர்த்து வை

சர்க்கரை நோய் அகலும், வயிற்றுப்போக்கு தடுக்கும்
இரத்தக்கடுப்பு தானே போகும். ஞாபக சக்தி வளரும். இதற்கு சரஸ்வதி மூலிகை என்று பெயர்.

Monday, 2 May 2016

இயற்கை மூலிகை மருத்துவம், பிணிகளை வெல்லும் கனிகள் -

இயற்கை மூலிகை மருத்துவம்

பிணிகளை வெல்லும் கனிகள்
- ம. இராஜரெத்தினம்,
இயற்கை மருத்துவச் சங்கம், ஆடுதுறை

எலுமிச்சம் பழம் :

தாகம் நக நோய் தாழாச்சிலி பாத நோய்
வேகங்களுண் மாதம் வீறு பித்தம் ‡ மாகண்ணோய்
கன்ன நோய் வாந்தியும் போம் கட்டுவாதத் தொழிலின்
மன்னெலுமிச்சங் கனியை வாழ்த்து   - சித்தர் பாடல்

எலுமிச்சம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து ஆறுமணிக்கு ஒருமுறை சாப்பிட்டு வர இரண்டு நாளில் பேதி நின்றுவிடும். தாகம், நகச்சுற்று, யானைக்கால், பித்தம், கண்நோய்கள், காதுவலி, வாந்தி முதலிய நோய்களுக்கு சிறந்தது.

இலந்தைப் பழம் :

பித்த மயக்க ருசி பேராப் பெருவாந்தி
மொத்தனில் மெல்லா முடிந்திடும் காண் - மெத்த
உலர்ந்த வெறு வயிற்றில் உண்டால் எரிவாம்
இலந்தை நறுங்கனியை பெண்...   - சித்தர் பாடல்

பகல் உணவிற்கு பின் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வர ஜீரணம் தூண்டப்படும். அக்கினி, மாந்தம், கபகட்டு, பித்தநோய் நீங்கும்.
இலந்தை பழத்தால் பித்தம், பித்த திரிதோ­ம், வாந்தி ஆகியவை போம். இதை பசி நேரத்தில் உட்கொண்டால், வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும். இலந்தைப் பழத்தை உணவு உட்கொண்ட பிறகுதான் சாப்பிட வேண்டும்.

திராட்சை (கொடி முந்திரிப்பழம்) :

வெப்பருசி தாகம் விரணம் சுவாச காய
மெய்ப்புடைய பித்தம் இரத்தம் பித்தம் செப்பு
மடி மந்த மேகமும், போம். சின்னக்
கொடி முந்திரிக் கனிக்குக் கூறு   - சித்தர் பாடல்

உலர்ந்த திராட்சைப் பழத்தை தேனில் ஊற வைத்து தினசரி பாலுடன் ஒரு ஸ்புன் சாப்பிட்டு வர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.
சிறிய கொடி முந்திரிப் பழத்திற்குச் சுரம், தாகம், பித்த நோய்கள் தவிர வி­ம், உன் மத்திரம், மூத்திர நோய் ஆகியவை நீங்கும். உடல் குளிர்ச்சியடைந்து கண்களுக்கு பார்வையை உண்டாக்கும். விந்துவை அதிகப்படுத்தும்.

நாரத்தம் பழம் :காரைப் பழம் :

சீத கசப்புஞ் செறியிரத்தக் கடுப்பும்
மோதுமதி சாரமும் போகம் உண்மையே - மேது கட
னீரைப் பருகி முகினேரகை மின்கொடியே
காரைப் பழத்திற்கு காண்.  - சித்தர் பாடல்

குத்துச் செடியாக இருக்கும். இதில் முள் அதிகமாக இருக்கும். இதன் பழம் இனிப்பாக இருக்கும். எலும்புகளுக்கு உறுதியை கொடுக்கக் கூடியது. பசியைத் தூண்டும். செரிமானத்தைச் கொடுக்கும். இருமலுக்கும், நெஞ்சு வலிக்கும் நல்லது.
காரைப் பழம், சீத இரத்தக் கடுப்பும், இடை விடாத பேதியையும் குணப்படுத்தும். இதன் இலையை மைபோல் அரைத்து ஒரு புன்னைக்காய் அளவில் மோரில் கலக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட எட்டு நாட்களில் சர்க்கரை நோய் குணமாகும்.

கோவைப் பழம் :

கண்ணுக்கு குளிர்ச்சி பெறும் காசமோடு வாயு மாறும்
புண்ணும் சிரங்கும் புரண்டோடும் ‡ நண்ணுடலாம்
மீதிலார் வெப்பம் அகலும் வீழா நீர்கட்டு ஏகும்
கோதிலா கோவைக்கே

கோவைப்பழம் தினமும் இரண்டு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது. சிறுநீரகத்தை துப்புரவு செய்வதில் சிறப்புடையது.

மாதுளம் பழம் :

கடுகடுக்கும் முகம் மாதுளம் பழத்தைக் கண்டால் புன்னகை பூக்கும்.
வெடித்து வீழ் பாகத்தை வாங்கி மெல்லிய சீலைக் கட்டிக்
கடுக்கெனப் பிழிந்து கொண்டு கண்டு சர்க்கரையும் கூட்டி
குடித்திட வெப்ப மாறும் குளிர்ந்திடும் அங்கமெல்லாம்
வடித்த நன்மொழியினளே மாதுளம் பழத்தின் சாறே - தேரையர்.

உடலுக்கு மட்டுமல்லாமல் உள்ளத்திற்கும் குளிர்ச்சி தரும். ­ய ரோகிகள், சர்க்கரை நோயாளிகள், ஜீரண உறுப்புகள் சரியாக வேலை செய்யாமல் மந்தமுடையவர்கள், அதிக உஷ்ணத்தால் குடல் பலகீனமாகி பேதியில் கொண்டு வந்துவிடும். நோயாளிகள் உடல் உஷ்ணம், பித்தம் அதிகரித்து, வாந்தி, விக்கல், வாய்நீர் சுரப்பு, வெப்பம், கண் எரிச்சல் முதலிய தொந்தரவு உடையவர்களும், காதடைப்பு, சுரம், மயக்கம், குமட்டல், நெஞ்சு எரிவு, கபால வெப்பம் உடையவர்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டால் சரீர வனப்பும், அழகும் உண்டாகும். இதை சொர்க்கத்தின் பழம் என்பார்கள்.

Sunday, 21 February 2016

இயற்கை மூலிகை மருத்துவம், ம.இராசரெத்தினம்.ஆடுதுறை.

இயற்கை மூலிகை மருத்துவம்

ம.இராசரெத்தினம்.ஆடுதுறை.
இயற்கை மரு-த்துவ சங்கம்.

உஷ்ணத்தால் முடி உதிர்ந்து வழுக்கையாகி விட்டதா - கண்ணே
உன் பாட்டி நானிருக்கேன். மருதாணிப் பூவை
தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து வெயிலில் காய வைத்து
தேய்த்து வர வழுக்கை தலையில் முடிவளரும்

உன் மூலம் போகும் என் மூலம் - கண்ணே
வன்மூலம் போகும் என் உரை மூலம்
நின்மூலம் போகும் நீர்மூலம் (தண்ணீர் குடித்தால்)
நீ ஆவாய் நிர்மூலம்

தூங்கி விழித்தவுடன் தண்ணீர் அருந்த - கண்ணே
ஓங்கு நின்ற பித்தம் ஒழிவதின்றித் தேங்கும்
மலம் மூத்திரம் தங்கா வாதாதி தந்தம்
நல மாத்திரம் உலவும் (சித்தர் தேரையர்)

ஒருநாள் முழுவதும் வயிறு உப்பிக் கொண்டதா - கண்ணே
சிறுநீர் கழிக்கவில்லையா? பயப்படாதே
வெள்ளரி விதையை பாலில் அரைத்துக் கொடுக்கட்டுமா?
மண்பட்டி அடிவயிற்றில் போடவா? நீர் அடைப்பு குணமாகும்

படையைப் பற்றி கவலைப்படாதே - கண்ணே
பொன்னாவரை வேருடன், சந்தனம் சம எடை கூட்டி
அரைத்து படைகள் மேல் தடவி வந்தால்
ஆறு நாளில் படை உதிர்ந்து மறைந்துவிடும்

தண்ணீரை அண்ணாந்து குடித்தால் சாரும் செவி மந்தம் - கண்ணே
கண்ணக்குனிந்து உண்டால் காசம் உண்டாகும் - தண்ணீரைக்
குடிக்க வென்றால் பாத்திரத்தை கோதரவே
இடித்து அருந்த துன்பம் அறும்

படுக்கமுறை தைரியம் வேண்டும் - கண்ணே
காலை நீட்டி படுக்கவும் குடதிசை தலையை வைத்து (மேற்கே)
குணதிசை காலை நீட்டி தென் திசை இலங்கை மாநகர் பார்த்து
வடதிசை புறங்காட்டி படுக்கவும் (குண திசை - கிழக்கு)

உண்ணத் தகுந்த காய்கறி பழங்களை - கண்ணே
வண்ணச் சுடரில் வைத்து சமைக்காமல் - உண்ணத்
தொல்லைத் தரும் வியாதிகள் அனைத்தும்
மெல்லப் போகும்

வாதவலி போக்கும் வற்றிய பால் சுரக்கும் - கண்ணே
மாதருது அழுக்கை மாற்றிவிடும் ‡ வயிற்றில்
தப்பாது தட்டை கிருமியறும்
பப்பாளியை உண்டு பார்

சுண்டி இழுக்கும் பொடி இருமலுக்கு - கண்ணே
சண்டி முருங்கை சாறுடன் தேன் கலந்து கொடுக்கவா?
இருதினங்கள் சாப்பிட்டால் போதும்
பொடி இருமல் நொடியில் போகும்

கை, காலில் படரும் கருமேகத்திற்கு - கண்ணே
கை பக்குவமாக துத்தியிலை சாறுடன் பால் கலந்து
கொடுக்கட்டுமா? பத்து நாட்களில் கருமேகம், வெடிப்பு
காணாமல் மறைந்து விடும்

கலகலப்பாக இருந்த நீ - கண்ணே
கப வாந்தி எடுக்கிறாயா - திருநீற்றுப்
பச்சிலைச் சாறு இருபத்தைந்து மி.லி குடித்தால்
கபவாந்தி சாந்தியாகிவிடும்

மூத்திர எரிச்சலா? நீர் கடுப்பா? மூலக் கொதிப்பா - கண்ணே
ஆத்திரப்படாதே ‡ நன்னாரி சாறு தரட்டுமா
நாள்பட்ட நோயாக இருந்தாலும்
நன்னாரி சாறுபட்டதும் தீரும்

நாயுருவி கட்டை (தண்டினால்) பல் விளக்கி வந்தால் - கண்ணே
நாட்பட்ட பல்வலி தீரும்
முகவசீகரமும், கவர்ச்சியும் உண்டாகும்
உடல் ஆரோக்கியம் உண்டாகும்

நாவல் வித்தை பாலில் அரைத்து உண்டால் - கண்ணே
நீரிழிவு, மூலக் கட்டிகள், கிரானி போக்கு தீரும்
நாவப்பட்டை சூரணத்தை எருமை தயிரில் உண்டால்
காசநோய் தீரும்

புத்தாண்டுதனில் புத்துணர்வோடு
முத்தாம் கிருத்துவத்தையும்
இயற்கை மருத்துவத்தையும் இணைத்து
முறையாக அறிவோம்.

Sunday, 13 December 2015

திகைப்பூட்டும் திருமருந்து திரிபாலா

திகைப்பூட்டும் திருமருந்து திரிபாலா

சகோ.வ. யூஜின் அமலா, முனைவர் ம.ஜெயராஜ், உயிர் வேதியியல் துறை.
அரசினர் கலைக்கல்லுVரி (தன்னாட்சி), கும்பகோணம் - 612 001

(நம் நாட்டின் பாரம்பரிய ஆயுர்வேத மருந்துகளை, அறிவியல் முறைப்படி ஆராய்ந்து, அதன் பலன்களை கண்டுபிடிக்கும் முயற்சியை தனது முனைவர் படிப்பில் செய்து வருகிறார் சகோதரி. யூஜின் அமலா)
விஞ்ஞானம் விண்ணை முட்டி வளர்ந்தாலும், ஒருக்காலும் சித்தர்களின் ஞானத்திற்கு ஈடாகாது. பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாசமிகுதியால், அனைத்து உணவுகளையும் வகைவகையாய் செய்து கொடுத்து குழந்தையின் வயிற்றைக் கெடுத்து விடுவாள். ஆனால் திரிபாலாவோ வயிற்றில் உள்ள கழிவுகளை வெளியேற்றி பிறவிப்பயனை நீட்டிக்கும்.
திரிபாலா என்பது அமிர்தா அல்லது அமிர்தம் எனப்படும் கடுக்காய், ஆயுர்வேதத்தில் அனைத்து மருந்துகளிலும் பயன்படும் நெல்லிக்காய், அகசம், அக்கம் என பெயர்பெறும் தான்றிக்காய் ஆகிய மூன்றும் சமஅளவு கலந்த அற்புதமான மருந்து. மூர்த்தி சிறிதா இருந்தாலும் கீர்த்தி பெரிது என்பதற்கேற்ப ஆயுர்வேத மருத்துவர்களால் உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாக பயன்படும் இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் பயன்படுகிறது. சர்வ சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் திரிபாலாவைப் பற்றி ஆச்சரியமாக எந்த வியாதியையும் தீர்க்கும் அற்புதமான சக்தி இதில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வேதிப்பொருட்கள் :
திரிபாலா சூரணத்தில் கேலிக் அமிலம், செபுலாஜிக் அமிலம், செபுலினிக் அமிலம், எலார்ஜிக் அமிலம், பாலிபீனால், லினோலியிக் அமிலம், டேனின், பிளேவனாய்ட், கிளைக்கோசைட், வைட்டமின் சி, கரோட்டின், அல்கலாலய்ட், பிளேவனாய்ட், எத்தில் கேலேட், மேனிட்டால், குளுக்கோஸ், பிரக்டோஸ், கேலக்டோஸ், ரேம்னோஸ் மற்றும் பல உயிர் சத்துக்களும் உள்ளன.
பயன்கள் :
திரிபாலா சூரணம் நோய்க்கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்க, உடல் கழிவுகளை வெளியேற்றி செரிமானக் கோளாறுகளை சீர்படுத்த, கொழுப்பைக் கரைக்க, மூல நோய்க்கு மருந்தாக, இருதயத்தை பலப்படுத்த, இரத்தத்தை சுத்திகரிக்க, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களைப் பாதுகாக்க தடுப்பு அரண்களைத் தாண்டி உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆன்டிபயாடி என்னும் நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்ய, உடலுக்கு புத்துணர்வு அளிக்க, உடல் எடையை குறைக்க, என்றும் இளமையாக இருக்கச் செய்ய, தேவையற்ற வாயுக்களை வெளியேற்ற, பசியைத் தூண்ட மற்றும் நோய் வராமல் காக்க, உணவே மருந்து, மருந்தே உணவு என்பதற்கேற்ப உணவாகவும், மருந்தாகவும் இம்மூலிகைக் கலவை பயன்படுகிறது.
விவசாயத்தில் பூச்சிகளை அழிக்க பயன்படுத்தும் பூச்சிக் கொல்லிகளில் டீ.டீ.டி.பென்சீன் யஹக்ஸா குளோரைட் மற்றும் இமிடகுளோபிரிட் போன்ற மருந்துகளின் பாதிப்பு விவசாயிகளுக்கு ஒரு பாதிப்பாக இல்லாமல் இருக்க அதன் நச்சுத்தன்மையை இழக்கச் செய்து உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது என்பது எமது ஆய்விலிருந்து புலனாகிறது. பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் 

விவசாயிகள் தங்களது உடலுக்கு தகுந்த பாதுகாப்போடு குறிப்பாக முகமூடி அணிந்து, கைகளுக்கு கையுறை, கால்களுக்கு காலுறை அணிந்து தங்களது வேலைகளைச் செய்வது நல்லது. பூச்சிக் கொல்லி மருந்து அல்லது குடிநோயால் கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் திரிபாலா சூரணம் உட்கொள்ள தங்களது உடலுறுப்புகளைப் புத்துணர்வு பெறச் செய்யலாம். ஆங்கில மருந்து அதிகம் உண்பவர்கள் இதனை உணவாகவோ, மருந்தாகவோ காலை, இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மொத்தத்தில் இது ஒரு சர்வரோக 
இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மொத்தத்தில் இது ஒரு சர்வரோக நிவாரணியாக பயன்படுகிறது.
பயன்படுத்தும் முறை :
ஒரு தேக்கரண்டி அளவு சூரணத்தை இளஞ்சூடான நீரில் கலந்து அருந்தலாம். தேனில் கலந்து ஒரு சிறு உருண்டையாக உருட்டி உட்கொள்ளலாம். இரவு உணவுக்குப்பின் முக்கால் மணி நேரத்திற்குப் பின்னர் அல்லது இரவு படுக்கைக்கு செல்லும் முன் உட்கொள்ளலாம். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் தவிர மற்ற அனைவரும் இதை உட்கொள்ளலாம். இதைத் தொடர்ந்து உட்கொள்ள வாதம், பித்தம், கபம் போன்ற திரிகண தோ­ங்கள் நீங்கி முழு நலத்தோடு வாழலாம். இருப்பினும் அருகில் உள்ள சித்த மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற்றால் அவர்களின் அனுபவப்படி,
“அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நேடிதுய்க்கு மாறு” - (குறள் 943)
என்ற குறளுக்கேற்ப நோய்வரக் காரணத்தையும், அதனை பயன்படுத்தும் அளவினையும் அறிந்து கொள்ளலாம். மேலும் மலச்சிக்கலை சீர்செய்ய திரிபாலா மலமிளக்கியாக செயல்பட்டு உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும் தருகிறது. ஆகவே இயற்கை மருத்துவ முறையினையும், மருத்துவத்தின் மேன்மையையும் முறையாக அறிந்து எந்த பக்க விளைவுகளும் இன்றி தேகத்தை தெம்பாக்கிட, பிணியின்றி பயணித்து நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை வாழ்க்கையாக்கிட தொடர்ந்து பயிற்சி செய்வீர் மூலிகை மருத்துவத்தை.
என் நண்பர்களை 

Monday, 7 December 2015

இயற்கை மருத்துவம், மூலிகைத் தாலாட்டு

இயற்கை மருத்துவம்
மூலிகைத் தாலாட்டு
இராசரெத்தினம், இயற்கை மருத்துவச் சங்கம், 
ஆடுதுறை..

சளி தொந்தரவு அடிக்கடி வருகிறதா? கண்ணே
துளசி சாறு, தூதுவலைச் சாறு, தேன், சுக்குத்தூள்
கலந்து காலை, மதியம், இரவு 5 அல்லது 10 மிலி சாப்பிட
மூச்சி இரைப்பு, சளி, தூக்கமின்மை சரியாகும் - கண்ணே

கழுத்து சுளுக்கிக் கொண்டதா? - கண்ணே
தலையை திருப்ப முடியவில்லையா?
முருங்கைக் கீரை சாற்றை கழுத்தில் தடவவும்
படியை கழுத்தில் வைத்து படுக்க குணமாகும் ‡ கண்ணே

சிறுநீருடன் விந்து அணு வெளியாகிறதா? - கண்ணே
ஜாதிக்காய்பொடி, பாதாம் பருப்பு பொடி, சீரகப் பொடி
சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து
குடிக்க விந்தைப் பெருக்கும் சிறுநீரில் வெளிவராது - கண்ணே

சாப்பிட்ட உணவு செரிமானமாகவில்லையா? கண்ணே
ஜாதிக்காய் பொடி, சுக்குப்பொடி, சீரகப் பொடி சேர்த்து
கொதிக்க வைத்து உணவுக்குமுன் குடிக்க
செரிமானம், தூக்கமின்மை, வலி, வாயு தொல்லை தீரும் - கண்ணே

குழந்தைக்கு வயிற்றுப் போக்கு வந்துவிட்டதா? - கண்ணே
இருசிட்டிகை மாதுளம்பூ பொடி, ஒரு சிட்டிகை மிளகாய்ப் பொடி
ஒரு ஸ்பூன் பசு நெய், வெல்லம் கலந்து
நெல்லிக்காய் அளவு கொடுக்க குணமாகும் - கண்ணே

வயிற்றுப்புண் ஆறவேண்டுமா? - கண்ணே
அகத்திக்கீரை, முருங்கைக்கீரை சேர்க்கலாம்
பூண்டு, வெங்காயம், அதிமதுரத்தூள் 10 கிராம் சீரகம்
கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க புண் ஆறும் - கண்ணே
(அகத்தி, முருங்கை இரவில் சாப்பிடக்கூடாது)

கண்ணில் நீர்வடிகிறதா? எரிச்சலா? கண்ணே
சோற்றுக் கற்றாழை 50 கிராம், புளித்த தயிர் 50 கிராம்
சேர்த்து சாப்பிட கண்ணில் நீர் வருவது சரியாகும்
பப்பாளிக்காய் கூட்டு சாப்பிடுவது நல்லது - கண்ணே

வாயுத் தொல்லை அதிகமாக இருக்கிறதா? கண்ணே
பூண்டு + ஓமம் நீரில் கொதிக்க வைத்து
குடிக்கலாம் ஐந்து நாளில் குணமாகும்
பூண்டு, ஓமம், கருப்பட்டி கலந்து சாப்பிடலாம் - கண்ணே

பூச்சிக்கடி, காணாங்கடியா, சிறுவண்டுகடியா? - கண்ணே
ஏழு மிளகு, இரு வெற்றிலை மென்று தின்றால் போதுமே
மிளகு பொடியும், சர்க்கரையும் கலந்து சாப்பிடலாம்
பத்து மிளகு சேர்ந்தால் பகையாளி வீட்டிலும் சாப்பிடலாம் - கண்ணே

இடுப்பு வலி, மூட்டு வலி தாங்க முடியவில்லையா? - கண்ணே
சுரைக்காய் சேர்த்துக் கொள் உப்பைக் குறைக்கும்
மூட்டு வலி, முடக்கு வாதம் வராது தினம் ஒரு கீரை சாப்பிடு
பிரண்டை, மிளகு, சீரகம், புளி சேர்த்து துவையல் சாப்பிடு - கண்ணே

அடிக்கடி பய உணர்வு, பிரசவ பயமா? கண்ணே
ஐந்து எருக்கன்பூ, ஐந்து மிளகு, கொஞ்சம் சீரகம்
அரைத்து பட்டாணி அளவு எடுத்து தேன் கலந்து உண்ண
பயம் போய்விடும் தைரியம் வரும் - கண்ணே
(எருக்கன்பூவின் நடுவில் நட்சத்திரம் போல் உள்ள பகுதியை நீக்க வேண்டும்)
ஓடும் திரி தோ­ம் ஓங்காது வெள்ளை ஆடை அணிந்தால் - கண்ணே
கூடும் திரு அழகு வியர்வை விலகும்
ஆயுசுவிருத்தியாகும் வனப்பு, மகிழ்ச்சி
அறிவு, பலம், ஆரோக்கியம் உண்டாகும் - கண்ணே

தவமிருந்து பெற்ற குழந்தையா? - கண்ணே
கோரைப்பாயில் படுக்கவை
கோரைப் பாயினால் அக்கினி மந்த சுரம் நீங்கும்
தேகம் குளிர்ச்சியும், சுக நித்திரையும் உண்டாகும் - கண்ணே

பெற்ற குழந்தைக்கு பட்டாடை உடுத்திபார் - கண்ணே
பித்தம், கபம் அகலும். மகிழ்ச்சி தரும்
புத்தியும் மிகும். வியர்வை அகலும்
சாந்தியது உண்டாகும் வனப்பு பெருகும் - கண்ணே

மேகப்படை, கண்டு கண்டாக தடிக்கிறதா? - கண்ணே
சொறிந்தால் தூள் சிந்துகிறதா?
பொன் ஆவாரை இலையை அரைத்து தடவு
நமச்சல், காணாக்கடி, சொறி யாவும் தீரும் - கண்ணே

உடல் மினுமினுப்பாக இருக்க வேண்டுமா? கண்ணே
இரவில் படுக்க போகும் முன்
தேன், குங்குமப்பூ, மஞ்சள் அரைத்து பட்டாணி
அளவு மண்டலம் சாப்பிட்டு வரலாம் - கண்ணே

உடல் வனப்பாக, நிறம் பளப்பளப்பாக வேண்டுமா? - கண்ணே
அவுரி இலையை தூளாக்கி தினம் 5 கிராம்
காலை உணவுக்கு முன் சாப்பிடலாம், முருங்கை பிசின் பொடி
அரை ஸ்பூன் பாலில் கலந்து குடிக்கலாம் - கண்ணே

இல்லற வாழ்க்கை திருப்தி இல்லையா? - கண்ணே
கொல்லை ஒன்றும் போகவில்லை
அத்திப்பழம் சாப்பிடு அப்பழம் காம பெருக்கியாகும்
பத்து நாள் சாப்பிட்டு பார் நலம் பெறுவாய் கண்ணே

குழந்தைகளுக்கு 6 முதல் 12 மாதம் வரையில் - கண்ணே
தாய்ப்பாலுடன் ஆட்டுப்பால் பழச்சாறு கொடு
குழந்தைகளின் தாழ்வு மனப்பான்மையை நீக்கும்
அப்துல்கலாம் ஐந்து வயது வரை பால் குடித்தாராம் - கண்ணே

இந்தாண்டு வெயில் அதிகமாக இருக்கிறதா? - கண்ணே
அக்கி வந்து விடாமல் பார்த்துக் கொள்
ஆலம் விழுதை சாம்பாலாக்கி நல்லெண்ணெயில்
குழைத்து தடவி வந்தால் அக்கி குணமாகும் - கண்ணே



Wednesday, 2 December 2015

இயற்கை மூலிகை மருத்துவம்

இயற்கை மூலிகை மருத்துவம்

மூலிகையின் மாமணியாம்  கண்ணே
முன்னோர்கள் மருத்துவத்தை
அருட்பணி.ஆயர் அந்தோனிசாமி பெயர் சொல்லி
ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்திலிருந்து எழுதுகிறேன் - கண்ணே

உப்பு அதிகம் சேர்த்தால் - கண்ணே
உன் முடி நரைக்கும்
புளி அதிகம் சேர்த்தால் - கண்ணே
உன் மேனியில் திரை (தோல் சுருக்கம்) உண்டாகும்

உடல் மெலிந்து தூக்கமின்மையால் அங்கம் எரிகிறதா?
உன் ஆத்தாள் நான் இருக்கேன் - கண்ணே
ஆவாரை பஞ்ச சூரணம் தரட்டுமா? (இலை, பூ, காய், வேர், பட்டை)

சுடுகாட்டில் உன் உடல் வேக நாளாகுமென்று
வெண் சுருட்டில் (சிகரெட்) வெந்து போக விரும்புகிறாயா - கண்ணே
நுரையீரல் நொந்து போகும் நரம்புகள் தளர்ந்து போகும்

ஆண்மையும் குறைந்து போகும் - கண்ணே
வெட்டைநோய் உன்னை விளம்பரப்படுத்தும்
வேண்டாமே இந்த சிகரெட்.

பசியைத் தூண்ட இலந்தை பழம் தரட்டுமா?
புண்களை அகற்ற வாழைப்பழம் தரட்டுமா?
காசத்துக்கு மாதுளம் பழமும் - கண்ணே
கண்ணொளிக்கு முந்திரிப் பழமும் தரட்டுமா?



சத்தான மூலிகையைச் சுருக்கி சுத்தி செய்து சாப்பிட்டால்
மண்டலம்தான் கண்ணே
மத்தான மன்மதன் போல் மேனியாகும்
மாசற்று வாழ்வாய்

முள்ளங்கி சாப்பிட்டால் - கண்ணே
வாயுத் தொல்லை நீங்கும், வாய் நாற்றம் போகும்
கல்லீரல் வீக்கம் கரையும் ‡ கண்ணே
காமாலைக்கு நல்லது, சிறுநீர் அடைப்பு அகலும்

காதில் சீழ் வடிகிறதா - கண்ணே
மூன்று கிராம் உப்பு, 12 கிராம் தேன் கலந்து துணியால்
திரியாக்கி தினமும் இருவேளை காதுக்குள் வைக்க
இருநாளில் நன்றாக குணமாகும்

வெண்குஷ்டமா? வேதனைப் படாதே - கண்ணே
வறுத்த கருஞ்சீரகத்தைப் பொடியாக்கி
வடித்த கஞ்சியில் கலந்து களிம்பாக்கி
வெண்புள்ளிகள் மீது நான்கு மாதம் தடவிவர குணமாகும்

கருஞ்சீரகத்தை பொடியாக்கி தேனில் கலந்து - கண்ணே
இருவேளை ஒரு டீஸ்பூன் அளவு தினமும் சாப்பிட
ஓரிரு மாதங்களில் வெண்குஷ்டம்
இருந்த இடம் தெரியாமல் நிரந்தரமாகக் குணமாகும்

இரண்டு கிராம் சீரகத்தை ஒரு டம்ளர் நீரில் - கண்ணே
கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்தால்
தடைப்பட்ட மாதவிலக்கு வெளியேறும்
பித்தப்பை, சிறுநீரகப்பை கற்களையும் கரைக்கும்

நூறு கிராம் கருஞ்சீரகத் தூளை அரை லிட்டர் நல்லெண்ணெய் - கண்ணே
கொதிக்க வைத்து வடிகட்டி இடுப்பு வலி, மூட்டு வலி,
மூட்டு வாதம், கை, கால் குடைச்சலுக்குத் தடவ குணமாகும்.

இரத்தத்தை சுத்தம் செய்து வீக்கங்கள் கரைய - கண்ணே
தோல் வியாதிகளும் நீங்கி பசியின்மையைப் போக்கி
செயலிழந்த சிறுநீரகங்களை செயல்படச் செய்ய
நிலவேம்பு சூரணம் அரை ஸ்பூன் சாப்பிடலாம்

அடிக்கடி நோய் வருகிறதா? - கண்ணே
நோய் எதிர்ப்பு சக்தி இல்லையா?
அருகம்புல் சாறை காலையில் வெறும் வயிற்றில்
அரை அவுன்ஸ் சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி கூடும் - கண்ணே

ஆறா புண்கள், சொறி, சிரங்கு ஆற - கண்ணே
அரசன் பட்டையை வறுத்து கரியாக்கிய பொடியை
தேங்காயயண்ணையில் குழைத்துப் போட
ஆறே நாளில் ஆறி விடும்.


முக்கி மலம் கழிக்கிறாயா - கண்ணே
மூல நோய் வந்து விட்டதா?
முள்ளங்கி கலந்து ஒரு டீஸ்புன் இருவேளை கொடுக்கட்டுமா?
மூலநோய் குணமாகும்

Wednesday, 11 November 2015

இயற்கை மூலிகை மருத்துவம்

மருத்துவ தாலாட்டு

சடையப்பன் மகளான உனக்கு -  கண்ணே
சடை போட முடியில்லையா?
முடக்கத்தான் கீரையுடன் தேங்காய் பால் விட்டரைத்து
தலைமுழுக முடி முளைத்து விடும் -  கண்ணே

என்றும் இளமையோடு வாழ -  கண்ணே
முதுமை அடையாமல் இருக்க
முறையா யோகாப் பயிற்சி அளிக்கட்டுமா?
முதுமையிலும் நீ இளமையோடு இருப்பாய் -  கண்ணே

கையால் கண்ணைக் கசக்குகிறாயா -  கண்ணே
கண்வலி வந்துவிட்டதா?
ஒற்றை நந்தியாவட்டை பூவை நான்கு எடுத்து கசக்கி
ஒரு சொட்டு விட்டால் போதும் -  கண்ணே

உள்நாக்கு வளர்ந்திருக்கிறதா -  கண்ணே
உணவு உண்ண முடியலையா?
உப்பும், புளியும் வைத்து தேய்க்கட்டுமா?
ஒரே நாளில் குணம் அடைவாய் -  கண்ணே

காதில் சீழ் வடிந்து கொண்டே இருக்கிறதா -  கண்ணே
கலங்காதே கல்லாட்டம் பாட்டி நான் இருக்கேன்
திருநீற்றுப் பச்சிலை கசாயம் பத்து தினங்கள்
இருவேளை சாப்பிட்டால் போதும் -  கண்ணே

நெருப்பைத் தொட்டு விட்டாயா -  கண்ணே
எரிச்சல் தாங்க முடியவில்லையா
தேனைத் தடவட்டுமா? வலி குறையும்
தீக்கொப்பளங்கள் வராது -  கண்ணே

தலையை அரிக்கிறதா -  கண்ணே
எடுக்கமுடியாத அளவுக்கு ஈறும், பேனும் இருக்கிறதா?
சீத்தா இலையைப் பொடியாக்கி (அல்லது) சப்போட்டா விதையை
தலையில் தேய்த்து குளித்தால் போதும் -  கண்ணே

சொட்டு சொட்டாக சிறுநீர் கழிக்கிறாயா? -  கண்ணே
கொட்டைப் பாக்களவு துளசியுடன் தேங்காய் பால் வைத்து
மூன்று நாள் கொடுத்தால் போதும்
முகம் மலர்ந்து சிரித்திடுவாய் -  கண்ணே

ஆணா? பெண்ணா? என்று ஆய்வு செய்யாதே -  கண்ணே
ஆணாக இருந்தால் என்ன? பெண்ணாக இருந்தால் என்ன?
அனைவரும் சமம் தானே -  கண்ணே
வீட்டிற்கு விளக்கேற்ற பெண் வேண்டும்

பாலூட்ட பெண் வேண்டும், சீராட்ட பெண் வேண்டும்
சோறு சமைக்க பெண் வேண்டும் ஆனால்
பெண் குழந்தை மட்டும் வேண்டாமா?
என்ன வினோதம் பார் -  கண்ணே

பெண் குழந்தை பிறந்தால் -  கண்ணே
அதற்கு உணவு கள்ளிப்பாலும் நெல்லுமா?
கொடுத்துக் கொல்லனுமா? வேண்டாம்
பாவச் செயலைச் செய்யாதே - கண்ணே

சிரிக்கத் தெரிந்தவன் மனிதன் தானே -  கண்ணே
வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்
சிரித்து பேசினால் ஜீரண உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்கும்
ஆயுட்காலம் அதிகமாகும் - கண்ணே
 - ம.இராசரெத்தினம்.ஆடுதுறை.
இயற்கை மருத்துவ சங்கம்.

Ads Inside Post