Pages - Menu

Monday 27 February 2017

இரட்சணிய யாத்திரிகம்

இரட்சணிய  யாத்திரிகம்

- திரு. குமார் ஆசிரியர், எம்.ஏ., எம்.பில்., பி.எட்., 
விரகாலூர்
சிலுவைப்பாடு

இறைவனது  மேலான அளவிடற்கரிய அன்பினைக் கிறித்துவ திருமறை, புதிய ஏற்பாட்டில் தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலை வாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார் (யோவான் 3 : 16). இறை மகனாகிய கிறித்துவின் அன்பினைச் சொல்லும்பொழுது, அவர்தம் மகிமையயல்லாம் துறந்து, தம்மைத் தாமே வெறுமையாக்கி தம்மை உயிர் பலியாகச் சிலுவையில் அறைவதற்கு ஒப்பிக் கொடுத்ததோடு தம்மைத் துன்புறுத்தியவர் களுக்காக, தம்மைச் சிலுவையில் அறைந்தவர் களுக்காகத் தம் தந்தையிடம் மன்றாடிய அன்பின் அறிய நிலை கூறப்பட்டுள்ளது. 

வான்புகழ் வள்ளுவரின், 
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர், அன்புடையார் 
என்பும்  உரியர் பிறர்க்கு” (குறள் 72)
என்ற வாக்கு நினைத்ததற்குரியது.

இரட்சணிய யாத்திரிகம் இறைவனாம் பிதாவின் அன்பை,

“தன்னொரு மகவைத்தந்த தற்பான் அன்புவாழி
பொன்னுலக கிழிந்து வந்த புண்ணியன் வாழி வாழி
மன்னுயிர் புரக்க வந்த மனுமகன் சரணம் வாழி
என்னையிந நிலைபாலிக்கு 
எம்பிரான் கிருபை வாழி”

(இரட்சணிய யாத்திரிகம், ஆதிபருவம், இராசதுரோகம் படலம் பா ‡ 7) என்று கூறப்பட்டுள்ளது.

கிறித்து சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து காட்சியளித்து விண்ணகம் சென்ற மீட்பின் செய்தியாகிய கிறித்துவ சமயச் செய்திகளை இரட்சணிய யாத்திரிகம் திறம்படச் சித்திரிக்கின்றது.

“மரணமே உன்கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயமெங்கே?” என பவுல் 1 கொரி 15 : 55இல் கூறுவது போல, இயேசு வள்ளல் மரணத்தின் கூர் ஒடியவும், சாத்தானின் தலைநசுங்கவும், வேத வாக்குகள் நிறைவேறவும் காரணமாக சிலுவைப்பாடு என்னும் செய்கை முற்றுமாறு கல்வாரி மலையை நோக்கிச் சென்றார் இறைமகன்.

தனி மனிதன் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ஈடேற்றம் அடைய வேண்டும் என்பது யாத்திரிகத்தின் குறிக்கோளாகும்.
யாத்திரிகன் எனத் தனி மனித நிலையில் வைத்து சொல்லப்படினும்,  உலக மக்களின் பிரிதிநிதியாகவே அவன் காட்டப்படுகிறான். அதன் காரணமாகத்தான் நூலின் தொடக்கம்

“உலகம் யாவும் புரந்தருள் உன்னதர்” (வரலாற்றுப் படலம், பாடல் - 1) என்று அமைந்துள்ளது. அத்துடன் குமார பருவத்தில் உலகை மீட்பதற்காக மனிதனாய் உருவெடுத்து அன்பினால் சிலுவையின் மேல் ஏறிய மெய்ஞான சூரியனாகிய கிறித்துவின் சிலுவைப் பாட்டைக் கூறத் தொடங்கும்பொழுது,

“உலக மகிழ்ந்த தீடேறப் பரலோக வாசிகளுக்குவகை யேற
அலகையுளந் திகிலேடி லகண்டபரி பூரணனார் அருள்மெய் வாக்கு
விலகியதாய் நிறைவேறத் துதியேற நரவுருவாய் விளங்கி அன்பால்
சிலுவை மிசை ஏறியமெய்ஞ் ஞான
சூ ரியனடியைச் சிந்தை செய்வாம்”

(இரட்சணிய  சரிதப்படலம்) எனக் கூறப்பட்டுள்ளது.
- (தொடரும்)

2 comments:

  1. Vanakam ayya! Iratchanya yatirikam la iruka siluvaipadu padalathil ulla 5 padalgalayum adhan vilakathudan neenga pota padika useful ah irukum ayya... konjam seekirama adha potingana nalladhu ayya... nandri

    ReplyDelete
  2. Will you please give us the entire explanation for the songs of siluvai paadu

    ReplyDelete

Ads Inside Post