Pages - Menu

Tuesday 3 October 2017

புனித ஜெபமாலை மாதா

புனித  ஜெபமாலை மாதா

கேத்தரீன் ஆரோக்கியசாமி, திருச்சி

(ஜெபமாலையைப் பற்றிய வரலாற்றை அழகாக அருட்பணி. பிரான்சிஸ் அவர்களின் கட்டுரை விளக்குகிறது. இங்கு திருமதி கேத்தரின் அவர்கள் தனது ஜெபமாலைமாதா பங்கினைப் பற்றியும் தன் சொந்த ஜெபமாலை ஆன்மீக அனுபவத்தையும் தருகிறார்)

ஜெபமாலை என்பது மரியாவை புகழும் சங்கீதமாகும். இறைவனின் சங்கமமாக ஓர் எளிய வழிமுறையாகும். வானவனின் வார்த்தையை 150 முறை சொல்லி ஜெபிக்க கூடிய ஒரு ஜெபம், எவ்வாறு தாவீது பாடிய பாடல்கள் 150 உள்ளனவோ, அதே போல் இறைமகன் இயேசுவின் வாழ்வை சித்தரிக்கும் ஒரு வழிமுறையாக தோன்றியதுதான் இந்த ஜெபமாலை.

உலக மக்கள் அனைவரையும் ஜெபமாலை ஜெபிக்க புனித 5ம் பத்திநாதர் அழைத்தார். இவரே ஜெபமாலையின் முதல் தந்தை என்று அழைக்கப்படுகிறார். 1572 ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்களுக்கும், துருக்கியர்களுக்கும் நடந்த போரில் கிறிஸ்தவர்கள் வெற்றி பெற்று விழாவாக கொண்டாடினர். 1572ல் 13ஆம் கிரகோரி ஜெபமாலை திருவிழாவை உருவாக்கி அதை அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஞாயிற்றுக் கிழமையில் கொண்டாடச் செய்தார். அதையே நாமும் அக்டோபர் மாதத்தை ஜெபமாலை மாதாவின் மாதமாக பாவித்து முதல் வார ஞாயிற்று கிழமையில் திருவிழாவாக கொண்டாடுகிறோம்.

திருச்சியில் சின்ன ரோமபுரி என்று வர்ணிக்கப்படும், புனித ஜெபமாலை ஆலயம்தான் மிகமிக பழமையான புனித தளமாகும். புனித வியாகுல மாதா ஆலயம், புனித ஜெபமாலை மாதா ஆலயம், பழைய கோயில்  என்று மக்களால் அழைக்கப்படும் இந்த கோவிலில்தான் புனித ஜெபமாலை அன்னை வீற்றிருந்து அனைவர்க்கும் அன்னை இயேசுவின் அருள் புரிந்து வருகிறார்.

அன்னை மரியாள் லூர்து நகரில் 3 சிறுமிகளுக்கு காட்சி கொடுத்த போது அவர்களுக்கு ஜெபம் செய்யவும், ஜெபமாலை செய்யவும் கற்றுக் கொடுத்தார்கள். ஆனால், அந்த ஜெபமாலையையே கையில் ஏந்தி மக்களுக்கு எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்பதை கற்பிப்பது போல் அன்னை வீற்றிருக்கிறாள் என்றால், அது பழைய கோவில் என்று எல்லா மதத்தினராலும் அழைக்கப்படும் புனித ஜெபமாலை அன்னை ஆலயம் தான்.

நான் சிறுமியாக இருக்கும்போது கன்னியர்களும், குருக்களும் தமது இடுப்பில் உள்ள கயிற்றில் ஜெபமாலையை அணிந்திருப்பதை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். இது அவர்களின் அடையாளம் என்று கொண்டாடியிருக்கிறேன். காலப்போக்கில் இந்த பழக்கம் புடவை கட்டுவதில், பேண்ட், சட்டை போடுவதிலும் அழிந்துவிட்டது என்பது உண்மை.

வரலாற்றை புரட்டிப்பார்க்கும் போது இந்த பழமையான கோவில்தான் முதன் முதலாக திருச்சியிலே கட்டப்பட்ட தேவலாயம் என்று சொல்லப்படுகிறது. கி.பி. 18ம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் வந்து இந்த ஊரில் இறைப்பணி ஆற்றினார் என்பது வரலாறு. இவரின் பெரும் முயற்சியால் திருச்சி செங்குளத்திற்கு அருகில் உள்ள இடத்தை குறுநில மன்னரான சந்தாசாகீப் அன்பளிப்பாக கொடுத்த இடத்தில் இயேசுசபை குருவான அருள்திரு.பெர்டினான்ட் மெடல் என்பவரால் எழுப்பப்பட்ட இவ்வாலயம், சில நாட்களில் தீக்கிரையானதால், அதே இடத்தில் 1748ல் மற்றொரு ஆலயம் கட்டப்பட்டது. 1780ம் ஆண்டு பத்திரவாத சபை குருக்கள் மீண்டும் பணியாற்றினர். 1838ம் ஆண்டிலிருந்து இயேசு சபை குருக்கள் மீண்டும் பணியாற்றினர். 1938ம் ஆண்டிலிருந்து பழைய கோவில் பணி பொறுப்பு திருச்சி மறை மாவட்ட குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.

சுற்று வட்டார கிராம, நகர்புற மக்கள் ஜெபமாலை அன்னையின் புதுமைகளை உணர்ந்து அன்னையிடம் அருள்  பெற வேண்டி ஒவ்வொரு வருடமும் ஜெபமாலை மாதா திருவிழாக்கு திருயாத்திரையாக வந்து அருள் பெற்று செல்கின்றனர். பல ஆண்டுகளாக குழந்தை இல்லாதவர்கள் அன்னையிடம் வரம் வேண்டி, குழந்தை வரம் கிடைக்கப் பெற்றதால், பிள்ளைக்குட்டிமாதா என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

ஒவ்வொரு வருடமும், நான் அன்னையிடம் வேண்டும் வரங்களை தவறாமல் கிறிஸ்துவிடமிருந்து பெற்று தந்து என்னை ஒரு எழுத்தாளியாக உயர்த்தி அவரது புகழை என் எழுத்துக்களில் வடிக்க கருணை புரிந்திருக்கிறார் என்பது உண்மை.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னை வீற்றிருக்கும், இந்த ஆலய திருவிழாக்களை பங்கு மக்களின் பெரும்  பங்களிப்புடன் பங்கு தந்தையர்களும், புனித வியாகுல மாதா மடத்து கன்னியர்களும், பங்கு பேரவை, இளைஞர் பேரவை, மற்றும் உள்ள அனைத்து சபைகளுடன், திரு.ஜோன்ஸ் ஆண்ட்ரூ பாடகர் குழுவின் இனிமையான குரல்களின் பங்களிப்புடன் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஜெபமாலை அன்னையின் வரலாற்றை தெரிந்து கொள்ள எனக்கு வழிகாட்டிய  அந்துவான், முன்னால் பங்கு தந்தை          ஜோசப் தற்போதைய பங்கு தந்தை அவர்களுக்கும், திரு.பிலோமின்ராஜ், முன்னால் மேலாளர் இருதயபுரம், கூட்டுறவு வங்கி, இருதயபுரம் அவர்களுக்கும் ஜெபமாலை மாதா பற்றிய வரலாற்று குறிப்புகளை தந்துதவியதற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கிறிஸ்தவர்கள் நாம் அனைவரும் இறை அன்பில் ஒன்றுபடுவோம். ஜெபமாலை அன்னையின் அருள் பெற்று

No comments:

Post a Comment

Ads Inside Post