Pages - Menu

Showing posts with label Education. Show all posts
Showing posts with label Education. Show all posts

Saturday, 3 March 2018

கல்வியால் வளரும் மனிதம்

கல்வியால் வளரும் மனிதம்

அருட்பணி. ச.இ. அருள்சாமி

மனிதர் வளர்கிறவர், உடல்அளவில் நலமுடன் வளர்வது ஒருபக்கம், மனிதரின் அறிவை வளர்ப்பது, வளர்ச்சியின் முதிர்ச்சியாகும். மனித வளர்ச்சிக்கு உரமூட்டுவதுதான் கல்வி.

உலகம் எவ்வளவோ வளர்ந்திருக்கிறது. இதற்கெல்லாம் கல்வியே காரணம் என்று சொல்லலாம். மக்கள் மத்தியில் கல்வியின் மேல் அதிக கவனம் விழுந்திருக்கிறது எனலாம். பிள்ளைகளின் கல்விக்கு அதிக விலைக் கொடுத்தாலும் பரவாயில்லை. பிள்ளைகளுக்கு தரமான கல்வியைத் தருவது தங்களது வாழ்வின் முக்கிய கடமையாக பெற்றோர்கள் கருதுகிறார்கள். பலவித வசதிகள் கொண்ட தனியார் பள்ளிகள் கொடி கட்டி பறக்கின்றன. பிள்ளைகளை நிறைய மதிப்பெண்கள் பெற செய்வதே இப்பள்ளிகளின் குறிக்கோளாக அமைந்துள்ளது.

வாழ்க்கைக் கல்வியாகவோ, தரமிக்க கல்வியாகவோ  அக்கல்வி அமையவில்லை. மனனம் செய்து, கேள்விகளுக்கு தகுந்த பதில் எழுதி, மதிப்பெண்கள் பெறுவதுதான் நம் நாட்டின் கல்வி முறையாக அமைந்திருக்கின்றது. தேர்வில் துண்டுத் தாள்களை மடித்து வைத்துக் கொண்டு காப்பி அடித்து எழுதும் வழக்கம் தொடக்க வகுப்புகளிலிருந்தே ஆரம்பமாகிறது. காப்பியடிக்கும் கலையில் வளர்வதை திறமையாக பிள்ளைகள் கருதுகிறார்கள்.
நமது அரசும் கல்வியில் ஆர்வம் காட்டாத நிலையினைப் பார்க்கிறோம். இந்திய அரசு, தனது மொத்த வருமானத்தில் சென்ற  2013-2014 இல் 4.57 சதவிகிதம் செலவிட்ட நிலையில் 2017-2018 ஆம் ஆண்டு 3.71 சதவிகிதம் செலவிட திட்டமிட்டிருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் பிள்ளைகள் சேருவதில்லை. அங்கு பிள்ளைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. பொறியியல் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்காத காரணத்தால் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கைக் குறைந்து விட்டது.

அபிகைல் ஆதாம் கூறுகிறார். ‘கற்றல் இயல்பாக நம்மிடம் வந்து சேர்வதில்லை. மாறாக ஆர்வத்துடன் தேடுதலால் வருவது’ என்கிறார். 
கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்ற யவை                                 (குறள் 400) என்கிறார் வள்ளுவர். கல்வி அழியாச் செல்வம் என்று விளக்குகிறார். மார்ச் மாதம் கல்வியின் மாதம் எனக் கருதுகிறோம். பிள்ளைகளின் தேர்வுகள் இக்காலத்தில் வருகின்றன. புனித சூசையப்பர் கல்வியின் பாதுகாவலர், என்று தனி பக்தி முயற்சிகள் செய்யப்படுவதுண்டு. பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்களின் பங்கு பெரிது. பிள்ளைகளின் தனித்திறமை அவர்களின் தனி ஈர்ப்பு ஆகியவைகளைக் கண்டு, அவர்களை வழிநடத்த வேண்டும். கல்வி பள்ளிகளோடு முடிந்து விடுவதில்லை. கற்றல் தொடர் நிகழ்வாகும். வாசிப்பிலும் செய்திகளைத் தெரிந்து கொள்வதிலும் பெற்றோர்கள் முன்னோடிகளாகத் திகழ வேண்டும். நாடு வளர, மனிதர் வளர வேண்டும். மனிதர் வளர, கல்வி அவசிய வழியாகும். அப்போது நம் நாட்டிலிருந்து அறிஞர்களும், விஞ்ஞானிகளும் நிறைய தோன்றுவார்கள்.

தமிழ்நாட்டில் அரசியல் குழப்பமும், நிரந்தரமற்ற நிலையும் நிலவுகிறது. நடிகர் கமலஹாசன், ‘மக்கள் நீதி மய்யம்’  என்ற புதிய அரசியல் கட்சியினை ஆரம்பித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்தும் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க தயாரித்து வருகிறார். காவிரிநீர் பங்கீட்டில், உச்சநீதிமன்றம் கிடைக்க வேண்டிய நீரை 1924 எம்சியிருந்து 177.25 ஆக குறைந்திருக்கிறது. உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தாமல் அடாவடி செய்திருக்கிறது கர்நாடகா அரசு.

  அனைத்துக் கட்சி கூட்டம் 22.2.2018இல் சென்னையில் நடந்திருக்கிறது. நதிநீர் பங்கீட்டில் நமது உரிமைகளை எல்லோரும் இணைந்து போராடி பெற வேண்டும் என்ற உணர்வு எழுந்துள்ளது.
  தமிழக மக்கள் தற்போது, அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பது போல் தெரிகிறது. விழிப்புணர்விலும், ஒற்றுமையிலும் தமிழகம் வளர வேண்டும்.

Tuesday, 3 October 2017

கனவுகளைத் தகர்த்த காலன் நீட்

கனவுகளைத் தகர்த்த காலன் நீட்

பேராசிரியர், முனைவர் எஸ்.பி. பெஞ்சமின் இளங்கோ னி. M.A., B.L.,M.Phil., Ph.D

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குழுமூர் காலணியில் பிறந்து வளர்ந்த, தாழ்த்தப்பட்ட வகுப் பைச் சேர்ந்த  அறிவார்ந்த மாணவி அனிதா (வயது 17), தனது பிளஸ்‡2 தேர்வில் 1200க்கு 1176 மதிப் பெண் களைப் பெற்றும்.    ‘நீட்’  (NEET - The National Eligibility cum Entrance Exam) தேர்வில்  700க்கு 86 மதிப்பெண்களைப் பெற்றதால் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வில் பங்குபெறும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கவில்லை. 

அனிதாவின் தந்தை திரு.சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவரது தாயார் ஆனந்தி சில ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையயய்திய துன்பச்சூழலில் ‘நீட்’ தேர்வை இரத்து  செய்துவிட்டு  பிளஸ்‡2  மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த வேண்டுமெனக்கோரி அனிதாவும் மற்றும் சில மாணவ மாணவியரும் சென்னை உயர்நீதி மன்றத்திலும், டெல்லி உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருந்தனர். தீர்ப்பு சாதகமாக இல்லாததால் மனமுடைந்த அன்புச்சகோதரி அனிதா தனது நான்கு சகோதர்கள், தந்தை, பாட்டி ஆகிய யாரும் வீட்டில் இல்லாத போது தூக்கிட்டுத் தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

மாநில அரசு இந்த ஓராண்டுக்கு விலக்கு அளிக்கக்கோரி மத்திய அரசுக்கு அனுப்பிய சட்ட வரைவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்காததாலும், உச்சநீதி மன்றத்தின் ஆனையாலும் ‘நீட்’ தேர்வு கட்டாயமானது. இந்தப் பேரிடியைத் தாங்கமுடியாத அனிதா விரக்தியின் உச்சக் கட்டத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது மத்தியில் கூட்டாச்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கூட்டாட்சித் தத்துவத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காணச்செய்துள்ளது.

அனிதாவின் தற்கொலை தமிழகத்தை மட்டுமல்ல, மனசாட்சியுள்ள அனைவரையும் ஒட்டுமொத்தமாக உலுக்கியது. விளைவு, அரசியலில் எதிர்கட்சியினரும், அனைத்துக் கல்லூரிகளின் மாணவச் சமுதாயமும் இந்தச்  சமூக அநீதியை அறவே ஒழிக்க அறப்போராட்டங்களை நடத்திவரும் வேளையில் உச்சநீதிமன்றம் ‘நீட்’ தேர்வை எதிர்த்து சட்டம் ஒழுங்கு கெடும் அளவிற்கு மறியலோ, ஆர்ப்பாட்டங்களோ நடத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளது.

வேலூரில் 1918ல் தொடங்கப்பட்ட உலகப் புகழ்வாய்ந்த மருத்துவக் கல்லூரியான வேலூர்  சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி, தனது கொள்கையாக, சமூக அக்கறையுடன் குழுக்களாகப் பணியாற்றும், தன்னலமற்ற ஏழை எளிய மாணவ, மாணவியர் கிராமங்களில் சேவை செய்யும் வேட்கையுடன் மருத்துவப் பணியைத் தொடரத் தனியாக தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்த அனுமதிகோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். ஆகவே இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையைத் தற்காலிமாக நிறுத்தி வைத்து, அடுத்த மாதம் (அக்டோபர்) 11ந் தேதி உச்சநீதிமன்றத்தில் தாங்கள் ஏற்கெனவே தொடர்ந்த வழக்கில் வரவுள்ள தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

உலகிலேயே மிகச்சிறந்த மருத்துவர்களை உருவாக்கிய, தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகள் இருப்பது தமிழகத்தில்தான். மாவட்டந்தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு அதிக அளவில் மருத்துவக் கல்விக்கான  இடங்களைக் கொண்டதும் தமிழகம்தான்.

சி.பி.எஸ்.இ. அமைப்பால் நடத்தப்படும் ‘நீட்’ மருத்துவக்கல்லூரி நுழைவுத்தேர்வு, தமிழகத்தைப் பொறுத்த வரையில், தமிழ்வழிக் கல்வி, மற்றும் தமிழகப் பாடத்திட்டம், மேலும் மெட்ரிக்குலேசன் பள்ளிப்பாடத் திட்டங்களுக்குக் கீழே படிக்கும் அறிவார்ந்த தமிழக மாணவச் சமுதாயத்தின் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது. எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் எப்படியும் தமிழக  அரசும் இந்த வருடம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்குப் பெற்றுத் தந்துவிடும் என்ற நம்பிக்கையும், அனிதா உட்பட ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்தையும் வஞ்சக வலையில் வீழ்த்தியுள்ளது. திடுமென வந்த சுனாமிப் பேரலை உயிர்களைக் காவு வாங்கியதுபோல ‘நீட்’ தேர்வு முடிவுகள், தமிழகத்திலுள்ள மாணவ மாணவியர், ஆசிரியர் சமுதாயம், பெற்றோர்கள், கல்வியாளர்கள் ஆகிய அனைவரின் நெஞ்சங்களையும் சுக்குநூறாக்கி விட்டது.  

பதவி பறிபோகும் பயத்துடன், துணிச்சலற்ற, ஏனோதானோ அலட்சியப் போக்குக்கொண்ட மாநில அரசும், அதிகார  மமதையோடு, மாநில அரசை அடிபணியவைக்கும் நோக்கோடு ஒவ்வொரு காயையும் நகர்த்தும் மத்திய அரசும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆணிவேரான கூட்டாச்சித் தத்துவத்தையே கூறுபோட்டுள்ளன.

‘வடக்கு வாழ்கிறது ! தெற்குத் தேய்கிறது’ என்ற பேரறிஞர் அண்ணாவின் கூற்றை மத்திய மாநில அரசுகளின் மெத்தனச் செயல்பாடுகள் மெய்ப்பிக்கின்றன.  பெரியார், அண்ணா, காமராசர் அமைத்த சமதர்ம பூமியில் இடஒதுக்கீட்டுக் கொள்கை திட்டமிட்டுத் தவிடுபொடியாக்கப்பட்டு வருகின்றதோ என்ற பெருங்கவலை சமுதாய நலச் சிந்தனையாளர்களை ஆட்கொண்டுள்ளது.

‘நீட்’ தேர்வால் விளையும் நன்மைகள் ஏராளம் என்று எக்காளமிடுவோர், இந்தியா பல்வேறு மொழிகள், கலாச்சாரம், சமயங்கள், சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உள்ளடக்கிய பன்முகத் தன்மைக்கொண்ட நாடு என்பதை எள்ளளவும் மறந்து விடக் கூடாது. அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள தமிழகத்தில், நம்  தமிழக கிராமப்புற ஏழை மாண மாணவியர். அதிகளவில் தலைசிறந்த மருத்துவர்களாகும் அரிய வாய்ப்புகளைப் பிற மாநிலத்தவர்க்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் அரசியல் சூழ்ச்சியாக ‘நீட்’ அமைந்து விட்டது. தமிழகத்தின் தலைவிதி ! ‘நீட்’ தேர்வுக்கு கோச்சிங் என்ற பெயரில் கல்வி வியாபாரிகள் பல லட்சங்களைக் கல்லாக் கட்ட சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.  ‘ஏழைசொல் அம்பலம் ஏறாது’ என்ற சூழ்நிலையில் பல்லாயிரக்கணக்கான கிராமப்புற முதல் தலைமுறை மாணவர், மாணவியரின் M.B.B.S., BDS மருத்துவப்படிப்பு  எட்டாக்கனியாகிவிடும். தமிழகத் திலுள்ள பணமில்லாத, ஆனால் திறமை மட்டும் உள்ள ஏழை மாணவ மாணவியர் மருத்துவர்களாக முடியாத நிலை நிரந்தரமாகும் அபாயத்தைத் தமிழகம் எதிர்நோக்கியுள்ளது !

C.B.S.E. (Central Board of Secondary Education)  பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவ மாணவியர் ‘நீட்’ தேர்வில் அதிக அளவில் தேர்ச்சிபெற்று அதிக மருத்துவக்கல்லூரி இடங்களைக் கைப்பற்றியதும், திடீரென்று தாங்கள் பார்த்திராத, படித்திராத  C.B.S.E..  பாடத்திட்ட அடிப்படையில் கேட்கப்பட்ட ‘நீட்’ கேள்விகள், தமிழக மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த ஏழை மற்றும் நடுத்தர தமிழக மாணவர் மாணவியருக்கு எதிர்பாராத ஏமாற்றங்களை அளித்ததற்குத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறையும், பாடத்திட்டக் குழுவும், தமிழக அரசுமே தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். பல ஆண்டுகளாகப் பள்ளிப் பாடத்திட்டம்  C.B.S.E.. பாடத்திட்டத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் மாற்றப்படாதது வேதனைக்குரியது. இனியாவது உலகத்தரம் வாய்ந்த,    C.B.S.E..  பாடத்திட்டத்தையும் விஞ்சும் அளவுக்குத் தமிழக  மாநிலப் பாடத்திட்டம், தொடக்க நிலையிலிருந்து தரம் உயர்த்தப்பட வேண்டும்,  ‘நீட்’ தேர்வு வினாக்கள் மாநில மொழிகளில் ஒரே மாதிரியாகக் கேட்கபடவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆகவே 2018ல் ஒரே மாதிரியான வினாத்தாள் இந்தியா முழுவதும் அந்தந்த மாநில மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு ‘நீட்’ தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி, வைக்க ஏழை எளிய மாணவச்சமுதாயம்  சமூகநீதிபெற,  காந்தி, அம்பேத்கார், பெரியார், காமராசர், அண்ணா ஆகிய உத்தமர்களின் உண்மையான உழைப்பு, தியாகம், வீண்போகாமல் பலனிக்க, கல்வியை மத்திய அரசின் பட்டியலிருந்து முன்பு போலவே மாநில அரசுகளின் பட்டியலுக்கு மாற்றுவதே இந்திய ஜனநாயகக் கூட்டாச்சிக்குப் பொருந்தி வலுசேர்ப்பதாகும்.

கல்லூரி உதவிப்பேராசிரியர் பதவி நியமன தகுதித்தேர்வான  (SET - State Eligibility Test) தேர்வைத் தமிழக அரசே நடத்தி  வருகின்றது. ‘நீட்’ தேர்வை மட்டும் சி.பி.எஸ்.இ. நடத்துவது திட்டமிட்ட சதியாகத்தான் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மீண்டும் தமிழக ஏழை கிராமப்புற மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட ‘நீட்’ தேர்வுமுறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி மத்தியில் கூட்டாச்சியும், மாநிலத்தில் சுயாட்சியும் பாதுகாக்கப்பட்டு ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்’ என்ற சமதர்ம சமூகநீதி உயிர்வாழும்.

‘நீட்’ தேர்வு நடந்த தேர்வு மையங்களில், கண்காணிப்பாளர்களின் மிரட்டல் தொனியும், கனிவற்ற போக்கும் இளவயது பள்ளி மாணவ மாணவியரைப் பெரும் அச்ச உணர்வோடு தேர்வை எதிர்நோக்க வைத்ததால் மிரட்சியுற்ற அனிதா போன்ற அறிவார்ந்த மாணவ மாணவியர் கூட ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற இயலாமல் போனது மிகப்பெரிய கொடுமை. பெரும்பாலும் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் உயர்தர அரசு மருத்துவக் கல்லூரிகளின் பெரும்பாலான மருத்துவ இடங்கள் வேற்று மாநில மாணவ மாணவியருக்குப் போவதற்குத் தமிழக மக்கள்,  ஏன் செலவழிக்க வேண்டுமென்ற நியாயமான சமூகநீதிக் கேள்வியையும் மேனாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எழுப்பியுள்ளது பெரிதும் சிந்திக்கத்தக்கது. எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் ஏழை, நடுத்தர தமிழக மாணவ மாணவியர்க்கு ‘நீட்’ தேர்வு எமனாகவே அமைந்துள்ளது.

Tuesday, 4 July 2017

உத்தாணியில் ஒரு கல்வி இதயம்

நேர் காணல்.
உத்தாணியில்  ஒரு கல்வி இதயம்

அருள்பணி. ஏ.ஆர். சின்னப்பன் 72  அகவையில் நிற்பவர்கள். குடந்தை மறைமாவட்டத்தில், ஜெயங்கொண்டம்,  பாபநாசம், மாத்தூர், கும்பகோணம் ஆகியப் பங்குகளில் சிறப்பாக பணியாற்றியவர். குடந்தை மறைமாவட்ட முதன்மை குருவாகவும் ஏழு  ஆண்டுகள் பணி செய்தவர். இப்போது தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே உத்தாணி என்ற உட்கிராமத்தில் அனாதை பெண் பிள்ளைகளுக்கு இலவசமாக தங்குமிடத்தை தந்து, கல்வி கூடங்களுக்கு சென்று கல்விகற்க ஏற்பாடு செய்திருக்கிறார். கல்லூரி படிப்பு (6 பேர்) மருத்துவ செவிலியர் படிப்பு (4) என்று இங்கிருந்து படித்து  வேலை வாய்ப்பு பெற்று வாழ்க்கையில் பலர் அமர்ந்திருக்கின்றனர். ஜாதி, மதம் பாராது, தந்தை/ தாயை இழந்த  பெண் பிள்ளைகளுக்கு வாழ்வு தந்திருக்கிறார். இதுவரை மொத்தம் 146 பெண்கள் இந்நிலையத்திலிருந்து வாழ்வு பெற்றிருக்கிறார்கள். அதோடு சிறிய மருத்துவமனை, முதியோர் இல்லத்தையும் நடத்தி வருகிறார். இச்சாதனை பல எதிர்ப்புகள், சோதனைகள் நடுவில் தான்  நடைமுறையாயிருக்கிறது.

இத்தகைய தெய்வீக எண்ணம் எப்படி உண்டானது என்று கேட்டபோது, மாத்தூர் பங்கு பணியின்போது தனிப்பட்ட ஓர் பணியினை உபயோகமான முறையில் செய்ய வேண்டும் என்ற உந்துதல் ஒரு செப நேரத்தில் உதித்தது. அதை செயலாக்கினேன். உதவியாளர்களின்  உதவியோடு 13 ஏக்கர் நிலம் வாங்கி இந்த கல்விநிலையத்தை துவங்கியிருக்கிறார்.

ஜெயங்கொண்டம் பங்கில் இருந்தபோது நரிகுறவர் குழந்தைகளுக்கு கல்விகற்கும் நிலையம் உருவாக்கி, பல குழந்தைகளின் கல்விகண்களைத் திறந்தார். தற்போது உடல்நிலை குன்றிய நிலையிலும், தற்போதைய நிலையும் இறைவனின் கொடை என்று நம்பிக்கையோடு நேர்மறையாக கூறுகிறார்.

           தற்போதைய கிறிஸ்தவர்களின் மனநிலைகள் மாற வேண்டும். அருட்பணியாளர்களை மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தினை தன் அனுபவத்தின் வெளிபாடாக கூறினார். நம் நாட்டு ஊழல் நிலைகளை எளிதாக ஒழிக்க முடியாது. மக்களின் மனம் மாறினால் தான் ஊழல் ஒழியும் என்ற கருத்தை முன்வைத்தார். சமூக வலைதளங்களால் நன்மையும் உண்டு, தீமைகளும் உண்டு. கவனமாக நாம் அலைகளை பயன்படுத்த வேண்டும் என்றார்.

Wednesday, 28 June 2017

இளையோரும் இன்றைய கல்வியும்

இளையோரும் இன்றைய கல்வியும்

- அருட்சகோ. விமலிFIHM, 
இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம்
உண்மையான கல்வி
 மனிதனுக்குள் இருக்கும்
 மனிதத்தைத் தட்டி எழுப்புவதாக
இருக்க வேண்டும்.           - சுவாமி விவேகானந்தர்.
 
2017-2018-ஆம் இக்கல்வியாண்டு இனிதே  அமைய இறைவன் அருள்புரிவாராக. தேர்வு முடிவுகளும் வந்து விட்டன. எதைப்படிக்கலாம், எங்குப் படிக்கலாம் எந்தப் பள்ளியில், கல்லூரியில் எந்தப் பாடப் பிரிவில் பயின்றால் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பது இன்றைய, மாணாக்கர் மற்றும் பெற்றோரின் ஏக்கம். “உலகை மாற்றக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த கருவி”  என்று கல்வியைப் போற்றுகிறார் நெல்சன் மண்டேலா. அந்தக் கருவியைப் பயன்படுத்தும் முன் அதைக் கூர்மையாக்கும் முயற்சிதான் இந்தக் கருத்துப் பரிமாற்றம்.  ஜீன் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. பலருக்கு புதிய இடம், புதிய ஆசிரியர்கள், புதிய நண்பர்கள், புதிய சூழமைவுகளைப் பார்த்தால் அவர்களின் பலவிதமான உணர்வுகளை நம்மால் கண்டுணர முடிகிறது. சிலர் வருத்தத்துடன், மேலும் சிலர் புத்துணர்வு கலந்த நம்பிக்கையுடன், இப்படிப்பட்ட பலவிதமான உணர்வுகளுக்கு உரிமையாளர்களாக மாணாக்கர்கள் காட்சி அளிக்கின்றனர்.  

          கல்வி இன்றியமையாதது என்பதை வளரிளம் பருவத்துப் பள்ளி மாணாக்கர்கள் உணர வேண்டும். வெறுமனே தகவல்களை மூளையில் அடுக்கி வைத்து அது செரிக்காமல், அழுகிப் போகவிடுவது கல்வி அல்ல! வாழ்க்கையைக் கட்டமைக்கவும், சிந்தனைகளை உள்வாங்கிச் சீர்தூக்கிப் பார்க்க உதவுவதாகவும் இருப்பதே உண்மையான கல்வி! வாழ்க்கையோடு போராடி வெற்றி பெற மாணவர்களுக்குக் கற்றுத் தராத, அவர்களின் குணத்தை வளப்படுத்தாத, மனித நேயத்தைப் போதிக்காத, தூய்மையான துணிச்சலைக் கற்றுத்தராத கல்வி  கல்வியும் அல்ல!. சமூக வாழ்விலும் சந்திக்கும் சவால்களைச் சமாளித்து சாதனை படைக்கும் கல்வித் திறனும், உடல் மற்றும் மனபலம் கொண்டவர்களாக இன்றைய மாணாக்கர்களை உருவாக     அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே மாணாக்கர்களே! அப்போதே நீ ஜெயித்தாய். கோடிக்கனக்கான விந்தனுக்களில் வீரியம் உள்ள விந்தணுவே கருவாகின்றது. பிறக்கின்ற ஒவ்வொரு உயிரும் வெற்றி பெற்றனவே. பிறப்பிலேயே வென்ற உயிர் நீ. பிறந்த பின் ஏற்படும் தோல்விகள் அந்த வெற்றிக்கு முன் சாதாரணமானவையே என்ற பொருளைத் தருகின்றது இப்பாடல் இன்றைய இளையோரை இன்னும் சிறப்பானவர்களாக்கும் உந்து சக்தியும் இதுவே.

விதைக்குள் தூங்கும் ஆலமரம்
கண்ணுக்குத்   தெரியாது
அது  மரமாய் வளரும் காலம்வரும்
 மண்ணுக்குள் உறங்காது.”

  கடந்த ஆண்டில் சென்னையில் மட்டும் பல மாணவர்கள் உயிரை  ஒடுக்கிக் கொண்டனர். இவர்களில் சிலர் படிப்பு சம்பந்தமாகவும், பெற்றோர்களிமிருந்துள்ள மனசம்பதமான கொடுமை மூலமாகவும் உயிர் நீத்தனர் என்று சமூக வளைய தளம் தெரிவிக்கின்றது. தற்கொலை செய்த  நபர்களில் அதிகமானவர்கள் கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும் உள்ளடங்கியுள்ளனர். படிப்பில் பின் தங்கி ‡யிருக்கிறார்கள் என்னும் காரணத்தால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கண்டிப்பதில் மனம் உடைந்துதான் பலரும் தற்கொலை வழியைப் பின்பற்றுகின்றனர் என்ற செய்திகளை ஊடகம் உடனுக்குடன் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கின்றது.

கல்வி என்பது 
திணிக்கத் திணிக்கத் திசைமாறிப் போகும்
வற்புறுத்த வற்புறுத்த வழிநழுவிச் செல்லும்
அது இயல்பாக நிகழவேண்டும்”  - இறையன்பு
          
  உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள். உங்களை நேசியுங்கள். உங்களின் வாழ்வின் மீது பற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்தால் எத்தனை முறை வீழ்ந்தாலும், எழுந்து நிற்கும் சக்தியும் தெம்பும் தானாகவே உங்களுக்கு வந்து சேரும். எந்த முடிவெடுக்கும் முன்னும் உங்களின் வளர்ச்சியின் பின்னே இருக்கும் நபர்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அந்த முகங்களின் பின்னே தெரியும் உழைப்பும், களைப்பும், வலியும், உற்சாகமும், ஆர்வமும் உங்களுக்கு எப்போதும் நினைவில் இருக்க வேண்டும்.  இப்படிப்பட்ட பிணைப்புக்களின் மூலம்தான் உங்களை நீங்கள் தோல்விகளிலிருந்து மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்துக் கொள்ள முடியும்.

      மனித வாழ்வுக்குப் பட்டறிவும், படிப்பறிவும் மிக உறுதுணையாக இருக்கின்றன. படிப்பறிவு என்பது கல்வி கற்பதின் மூலமாகவும், பட்டறிவு என்பது மனித அனுபவம் மூலமாகவும் நமக்குக் கிடைக்கின்றன. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று பார்க்கும்போது பாரதூர வித்தியாசங்கள் இருக்கின்றன. இன்றையச் சூழலில் கல்வியும், பணமும்  கைகோர்த்தே செல்கின்றன. பணம் இருப்பவர் மட்டுமே படிக்க முடிகிறது. இப்போது பணம் கட்டினால் படிப்பு (றீeயிக்ஷூ-க்ஷூஷ்ஐழிஐஉed உலிற்rவிeவி)  என்ற நிலை எல்லா கல்லூரிகளிலும் உருவாகியுள்ளன. இன்றைய நிலையில், பெரும்பாலும் படித்த படிப்பு வேறு, பார்க்கும் தொழில் வேறு என்றுதான் இருக்கிறது. எத்தனை உயர்கல்வி  நிறுவனங்கள் இருந்தும் ஆண்டுதோறும் எண்ணற்ற இளையோர் பட்டம் பெற்று வேலை தேடி அலைகின்றனர். படிக்கும் கல்வி மூளைக்கு மட்டும் தாக்கம் கொடுத்தால் போதாது. இதயத்திற்கும் தாக்கத்தைக் கொடுக்க வேண்டும்.

விழிப்புணர்வுக் கல்வி
     விழிப்புணர்வுக் கல்வி என்பது வழக்கமாக மாணவ - மாணவியர் பெறுகின்ற கல்வியில்  இருந்து மாறுபட்டது. ஏனெனில் இக்கல்வி நாம் வாழும் சமூகத்தை அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு, சமய, கல்வி மற்றும் நலவாழ்வு ரீதியாக  பகுப்பாய்வு செய்து பார்க்க உதவுகிறது. இத்தகைய பகுப்பாய்வு சமூக உண்மை நிலைகளை நமக்குப் படம் பிடித்துக் காட்டுவதோடு, சமூக மாற்றத்திற்கு நாம் என்னென்ன முடிவுகளை எடுத்துச் செயல்பட வேண்டும் என்பதையும் நமக்கு தெளிவுபடுத்துகிறது. இன்றைய நம் நாட்டுச் சூழலில் விழிப்புணர்வுக் கல்வி எல்லா மாணவ‡மாணவியருக்கும் வழங்கப்பட வேண்டிய இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.

ஒரு மனிதரிடம் தேங்கிக் கிடக்கின்ற
ஆற்றல்கள், திறமைகள், நம்பிக்கைகள் அனைத்தையும் உணரவைத்து வெளிக் கொணர்வதே  உண்மையான கல்வியாகும் ”
 -இறையன்பு

Tuesday, 20 June 2017

கல்வியே வெல்லும்.


கல்வியே வெல்லும். 

2002 ஆம் ஆண்டு எனக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்தில் அன் ஆர்பர் என்ற பங்கில் மூன்று மாதங்கள் பணிசெய்தேன். அவ்வூரில் ஐந்து பல்கலைகழகங்கள் உள்ளன. அப்பங்கிலுள்ள நடுநிலைப்பள்ளியில் சில நாட்கள், மறைகல்வி வகுப்புக்கள் எடுத்தேன். இளம் மாணவர்கள் நிறையக் கேள்விகள் கேட்டார்கள். அதற்கு நான் கொடுத்த பதில்களே பாடமாக அமைந்தன. அதேபோல பெண்களுக்கு விவிலிய வகுப்புக்கள் எடுத்தேன். அங்கும் கேள்வி‡பதில் முறையில்தான் விளக்கங்கள் அமைந்திருந்தன. 
பவலோ பார்ரே என்பவர் கூறுவார், ‘கேள்வி எழுப்பதே கற்றலின் தொடக்கம்’ என்பார். 12 ஆம் வகுப்பு மாணவரைப் பார்த்து ‘டெல்லியின் முக்கயத்துவம் என்ன?’ என்று கேட்டதற்கு, அவனுக்கு பதில் தெரியவில்லை. ஆனால் ‘இந்தியாவின் தலைநகர் எது?’ என்று கேட்டதற்கு டெல்லி என்று பதில் கொடுத்துவிட்டார். இந்நிகழ்ச்சி மாணவர் மனப்பாடம் செய்கின்றனர்,  ஆனால் புரிந்து படிப்பதில்லை என்பதை உணர்த்துகிறது.
மாணவர்களின் மனநிலைப் போக்கினை மனதில்கொண்டு மாணவர்களை பயிற்றுவிக்க வேண்டும். பதின்ம வயதினரின் மனப்போக்கு சற்று வித்தியாசமானது. அவர்கள்தான் மேல்நிலைப் பள்ளிகளிலும் கல்லுரிகளிலும் பயில்கிறார்கள். நம்நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் மாணவர்கள் புதியவைகளை உருவாக்குகிறார்கள். மாணவர்களின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி. 

தானியார்ப் பள்ளி நிறுவனங்கள், மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதை முன்வைத்து, தங்களை பெருமைக்கரிய நிறுவனங்களாக காட்சிப் படுத்துகின்றன. பொதுவாக,  பணம் இருக்கும் இடத்தில் பண்புகள் வளர்வதில்லை. பெரும்பாலும் தனியார் பள்ளிகளில்,  வசதி உள்ளவர்களின் பிள்ளைகள் படிக்கிறார்கள். பணத்தினால் ஆடம்பரங்கள், சொகுசுகள் பெருகுகின்றன. உழைப்பு, பணிவு, உறவு ஆகிய பண்புகள் அங்கு மறைகின்றன.  அண்மையில் ஒரு மாவட்ட ஆட்சியர் தன் பிள்ளையை அரசினர் பள்ளியில் சேர்த்து படிக்கவைத்திருக்கிறார். தற்போது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலர் போதை பழக்கத்திற்கு அடிமையாயிருக்கிறார்கள்.
‘
கல்வி என்பது பண்புகளின் வளர்ப்புத் தாய்’ என்கிறார் வில்லியம் பர்ரோஸ்.

சான்றிதழ் பெறுவதற்காக கற்பது கலவி அல்ல. முழு மனிதராக வளர்வதற்கே கற்பது கல்வியாகும்.

திருச்சபை கல்விப்பணியை நற்செய்திப் பணியாக செய்து வருகிறது. தற்போது ஆங்கில வழிகல்வி பள்ளிகளுகளுக்கே  தங்கள் பிள்ளைகளை தமிழக மக்கள் அனுப்பிக்கொண்டிருக்கறார்கள். திருச்சபை நடத்தும் பள்ளிகளில் பிள்ளைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. குடந்தை மறைமாவட்டத்தில், மறைமாவட்டம் நடத்தும் பள்ளிகள் 123. இவைகளில் 1506 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இவைத் தவிர துறவர சபைகள் நடத்தும் பள்ளிகள் உள்ளன. சுமார் 30000 மாணவ மாணவியர் நம் பள்ளிகளில் பயில்கின்றனர்.

கல்லாதவரின் கண்கள் வெரும் புண்களே என்கிறார் வள்ளுவர். இவ்விதழில் கல்வியைப் பற்றிய பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கல்வியைப் பலக் கோணங்களில் இவை விளக்குகின்றன. பிள்ளைகளின் முழுவளர்ச்சியை மனதில் வைத்து கல்வியின் ஒளி தரப்பட வேண்டும்.

குழம்பியுள்ள தமிழக அரசியலைத் தனக்கு சாதகமாக மத்தியஅரசு முயல்கிறது. வெளிப்படையாக பொதுக்கூட்டங்களில் தமிழக அரசை சாடுவதும் , பல வழிகளில் அரசை பயமுறுத்தியும் மத்திய அரசு செயல்படுவதை காணமுடிகிறது. தமிழகத்தில் ஆங்காங்கே ஏரிகள் துVர்வாரப்படுவதை பார்க்கும்போது ஆறுதலா -யிருக்கிறது. ஆனால் மணல் குவாரிகள் மீண்டும் திறக்கப்பட்டு, இயற்கையின் கொடை அழிக்கப்படுவதை பார்க்கும்போது மனம் கொதிக்கிறது. எம் மணல் என்ற புதிய வழிகளைப் பயன்படுத்தி  

ஆறுகளில் மணல் அள்ளப்படுவது சுத்தமாக நிறுத்தப்பட வேண்டும். கருவவேலி மரங்கள் அகற்றப்படுவதும் சிறந்தப் பணி. தற்போது தமிழக மக்கள் விழிப்பாயிருந்து நல்லத் தலைவர்களை உருவாக்க வேண்டும்.

Tuesday, 31 May 2016

வாழ்வின் வேர், கல்வி, அருள்பணி. ச. இ. அருள்சாமி

வாழ்வின் வேர், கல்வி

நீரும், உரமும் இல்லையயன்றால் தாவரங்கள் வளரச்சிக் காணமுடியாது. முயற்சியும், உறுதியும் இல்லையயன்றால் வாழ்வில் உயர்வு இல்லை. மனிதர் வளர்பவர்கள். அவர்கள் வளர்க்கப்பட வேண்டியவர்கள். அறிவியல் வல்லுனர்கள், பெரும் தலைவர்கள், மற்ற அறிஞர்கள் அனைவரும் கல்வியால் வளர்ந்தவர்கள். அனுபவத்தால் தனிமுயற்சியால் தங்களை வளர்த்துக் கொண்டவர்கள். திரு. அபதுல்கலாம் கல்லூரிகளில் கல்வி கற்கவில்லையயனில், அறிவியல் மேதையாக வளர்ந்திருக்க முடியாது. அறிவியல் அறிஞர் திரு. அண்ணாதுரை அவர்கள், இஸ்ரோ நிறுவனத்தின் தலைவராக முடியாது. 
ஒரு காவல் அதிகாரி மாணவர்களுக்கு சொற்பொழிவாற்றும்போது கூறினார். ‘படிக்கவில்லை யயன்றால் உடல் உழைப்பையே நம்பி ஒருவர் மாடாக உழைத்து ஓடாக தேய வேண்டியதுதான். பணக்காரர்களின் மாளிகையில் பிறக்கின்றகுழந்தைகளின் கால்களைக்கூட தாங்குவதற்கு தோள்கள் காத்திருக்கின்றன. ஆனால் ஏழைகளின் குடிசையில் பிறக்கின்ற  குழந்தைகளின் தோள்களுக்கோ சுமைகள் காத்திருக்கின்றன. பணக்கார வீட்டிலே பிள்ளைகள் வளர்ந்து பிறக்கிறார்கள். ஏழைகளுடைய குடிசையிலே பிள்ளைகள் பிறந்து வளர்கிறார்கள். வளர்ந்து, பிறப்பது வாரிசுரிமை, பிறந்து வளர்வதே பிறப்பின் பெருமை’.
கல்வியை, சான்றிதழுக்காக, படித்தால் அது பயனற்றது. தியோடர் ரூஸ்வெல்ட் கூறுவார், ‘அறநெறியின்றி  கல்வி கற்பிக்கப்படும் என்றால், அது, சமுதாயத்திற்கு பேராபத்துக்களை உருவாககும் பயிற்சியாகும்’ என்றார். ‘உண்மையான கல்வியின் நோக்கம் அறிவின் வளர்ச்சி அல்ல, ஒருவரை செயல்பாட்டில் உருவாக்குவது’ என்கிறார் யஹர்பர்ட் ஸ்பென்ஸர் என்பவர்.
ஜீன் மாத தொடக்கத்திலிருந்து கல்வி ஆண்டு தொடங்குகிறது. கோடைக்கால விடுமுறைக்கு பிறகு பிள்ளைகள் பள்ளிகளுக்கு செல்ல ஆரம்பிப்பர். தனியார் பள்ளிகள், தேர்வில் பெரும் மதிப்பெண்களை பெற்றுதரும் நிறுவனம் எங்களது என்று விளம்பரம் செய்கிறார்கள். வளரும் பிள்ளைகளில் அவர்களுடைய மனநிலைகள் மாறும். பிள்ளைகளில் விளையாட்டுக் குணம், இளைஞர்களுக்கு பாலியல் குழப்பங்கள், குறும்பு எண்ணங்கள் ஆகியவை எழுந்துவரும். இந்த மனநிலைகளை ஆசிரியர், பெற்றோர் புரிந்துக் கொண்டு அவர்களுக்கு வாழ்க்கை பயிற்சி அளிக்க வேண்டும். ‘கல்வி என்பது ஒருவரின் அறியாமையை அதிகம் அதிகமாக தெரிந்து கொள்வதாகும்’ என்கிறார் வில் புரான்ட் என்பவர்.
இவ்விதழில் கல்வியை மையமாக வைத்து பல கட்டுரைகள் அமைந்துள்ளன. பூண்டியில் அன்னை தெரசாவைப் போல பணியாற்றிய அருள்பணி. லூர்து சேவியர் அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவதற்கு முறையான செயல்பாடுகளை குடந்தை மறைமாவட்டம் ஆரம்பித்திருக்கிறது. பூண்டியில், நவநாள் செபங்களில், ‘அருள்பணி. லூர்து சேவியருக்கு புனிதர் பட்டம் கிடைக்க வேண்டுமென்றும்’ இணைத்து சொல்லப்பட்டது. இன்று அது நனவாக மாறும் காலம் வந்திருக்கிறது. இயேசுவின் போதனைகளை வாழ்வாக்கி சாட்சியம் அளித்தவர்களின் வாழ்வை பரிசோதித்தே. அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது. இப்போது அருள்பணி. லூர்து சேவியர், இறை அடியார் என்று அழைக்க திருச்சபை அனுமதித்திருக்கிறது. இனி அவரது வாழ்வும், அவரின் பரிந்துரையால் பெறப்பட்ட அற்புதங்களும் சோதிக்கப்பட்டு, வணக்கத்திற்குரியவர் நிலைக்கும், பிறகு அருளாளர் நிலைக்கும், பிறகு புனிதர் நிலைக்கும் உயர்த்தப்படுவார். ‘நான் சிறுபிள்ளையாக இருக்கும்போது என் அம்மா, பூண்டிக்கு என்னை அழைத்து சென்றார். அருள்பணி. லூர்து சேவியர் அவர்கள்  ஆலோசனைகள் கூறியதையும், மாதாவின்முன் ஆசீர்வதித்ததையும் நேரடியாக பார்த்திருக்கிறேன். புனித வாழ்வு வாழ்ந்த அருள்பணி. லூர்து சேவியர் அவர்களுக்கு விரைவில் திருச்சபை புனிதர் பட்டம் கொடுத்து சிறப்பு செய்யும் என்பதில் சந்தேகமில்லை’.
தமிழ்நாட்டிலும், கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்து முடிவுகளும் வெளிவந்துவிட்டன. அம்மாவின் ஆட்சி தமிழத்தில் மீண்டும் தொடர இருக்கிறது. தரமான கல்வி மக்கள் எல்லோருக்கும் எளிதாக கிடைக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் திட்டங்களை உருவாக்கவும், விவசாய மக்களின் தேவைகளை அறிந்து ஆவன செய்யவும், மது மோகத்தை மக்களிடமிருந்து அகற்றவும், கிறிஸ்தவர்களில் தாழ்த்தப்பட்டவர். பின்தங்கியவர் ஆகியவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பெற்றுதரவும், மதசுதந்திரத்தை காக்கவும், கிறிஸ்துவ பள்ளிகளை அங்கீகரித்து அவைகளுக்கு அரசின் முழு உதவிகள் கிடைக்கவும், அம்மாவின் அரசு ஆவண செய்யும் என நம்புகிறோம். வளமான ஆட்சி அமைய அம்மாவின் ஆட்சியை வாழ்த்துக்கிறோம். 

அருள்பணி. ச. இ. அருள்சாமி

Tuesday, 15 March 2016

ஆசிரியர் பேனா, வளர்ச்சியை சொல்லும் மொழி, கல்வி


ஆசிரியர் பேனா
வளர்ச்சியை சொல்லும் மொழி, கல்வி

நம் மக்கள் மத்தியில் நிறைய விழிப்புணர்வு உண்டாகியிருக்கிறது பிள்ளைகளின் கல்வியை கண்ணென நினைத்து, எவ்வித தியாகம் செய்தும் பிள்ளைகளை கல்விக்கூடங்களுக்கு அனுப்புகிறார்கள். அரசினர் பள்ளிக்கூடங்களைத் தவிர, தனியார் பள்ளிகள் எங்கும் பூத்துக்குலுங்குகின்றன. கூலி வேலைக்குப் போனாலும், தன் பிள்ளைகளுக்கு டைகட்டி, U போட்டு, பள்ளி வாகனத்தில் அனுப்பி வைத்து, மக்கள் அழகுப் பார்க்கிறார்கள். அரசும், கல்வியின் தரத்தை உயர்த்த பல நெருக்கடிகளை பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் தருகிறார்கள். நெறிகெட்ட வாழ்விற்கும், நம் நாட்டின் வறுமைக்கும் காரணம், தகுந்த கல்வியில்லாமைத்தான் என்று சொல்லலாம். மது அருந்தும் மாணவர்கள், பிஞ்சிலே பழுப்பதைப் போன்று, மாணவர்களின் காதல் தப்புத் தாளங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவை நாம் இன்று சந்திக்கின்ற சவால்கள்.

சி. எஸ். லெவிஸ் என்பவர் கூறுகிறார், ‘சரியான பண்புகளை, மதிப்பீடுகளை கற்பிக்காத கல்வி, திறமையான பேய்களையும், சாத்தான்களையும் தான் உருவாக்கும்’ என்கிறார். ‘நல் அறிவு, நல் மனித பண்புகளை மாணவரிடத்தே உருவாக்குவதே கல்வியின் நோக்கம்’ என்கிறார் மார்ட்டின் லூத்தர் கிங் என்பவர். ‘மாணவர்கள் எதை சிந்திக்க வேண்டும் என்று கற்றுத் தருவதல்ல, மாறாக எப்படி சிந்திக்க வேண்டும் என்று கற்றுத் தருவதே கல்வி’ என்கிறார் மார்கிரேட் மெட்.

இம்மாதம் மார்ச் மாதம், புனித சூசையப்பரை சிறப்பாக நினைவு கூறுகிற மாதம். கல்வியின் பாதுகாவலர் என்று அவர் அழைக்கப்படுகிறார். சில பள்ளிகளில் மார்ச் மாதத்தின் புதன் கிழமைகளில் சூசையப்பருக்கு தனி வணக்கம் செலுத்தி வழிபாடு செய்வார்கள். விரைவில் அரசு பொதுத் தேர்வுகள் வர இருக்கின்றன. மாணவர்கள் மன உலைச்சலுக்கு ஆளாகும் நேரம் இது. மாணவர்களின் மனஉலைச்சலைவிட பெற்றோர்கள், ஆசிரியர்களின் மன உலைச்சல் அதிகம்.

பெரும்பாலான பிள்ளைகள், இளம் வயதின் தாக்கத்தினால், வருங்காலத்தைப் பற்றி கவலையின்றி வழக்கமாக பள்ளிக்குச் சென்று வருவர். பெற்றோர்கள்தான் பிள்ளைகளின் வருங்காலத்தை, தங்களின் வருங்காலத்தைப் போலக் கருதி, பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் வாங்குவதைப் பற்றி நினைவுப்படுத்தி, பிள்ளைகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவர். பெற்றோர்களும் ஆசிரியர்களும், பிள்ளைகளின் இயல்பான மன ஓட்டங்களைப் புரிந்துக் கொண்டு, அதற்கேற்றார்போல் கற்பிக்க வேண்டும். முக்கியமாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் தங்களின் பிள்ளைகளை வடித்தெடுக்கும் சிற்பிகள் என்றுணர்ந்து தங்களின் வாழ்வை நல்ல பண்புகளால் வடித்தெடுக்க வேண்டும். யூதர்களின் பிள்ளைகளை எப்படி கருவிலிருந்தே கவனமாக வளர்த்து உயர்ந்தவர்களாக்குகிறார்கள் என்று ஒரு கட்டுரை இந்த இதழில் இடம் பெற்றிருக்கிறது. மனிதர்களை தரமானவர்களாக வளர்ப்பது கல்வி. எனவே தரமான கல்வியை பிள்ளைகளுக்குத் தருவதில் ஆர்வம் காட்டவேண்டும்.
கல்வி என்பது மனிதரை செதுக்கும் உளி - அது
வாழ்விற்கு வெளிச்சம் தரும் ஒளி - அதுவே
வளர்ச்சியை சொல்லும் மொழி.

குடந்தையில் மகாமகம் என்ற மகா நிகழ்ச்சி பிப்ரவரி 13 முதல் 22 வரை நடைபெற்றது. பத்து நாள்களும் மக்கள் அலை அலையாக மகாமக குளத்தை சந்தித்து, அங்கிருந்து 20 தீர்த்தங்களை தலையில் ஊற்றிக் கொண்டு சென்றார்கள். இந்நிகழ்ச்சியில் இரண்டு செய்திகளை நான் கவனித்தேன். கங்கை. யமுனா, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, தாமிரபரணி  போன்ற ஆறுகள் மகாமகத்தன்று மகாமககுளத்தில் இணைகின்றன என்பது நம்பிக்கை. எனவே இந்தியாவின் ஆறுகளை இணைத்தல் என்பது புனித செயல் என்ற கருத்து இங்கு வெளிப்படுகிறது. இரண்டாவது, மகாமக குளத்தில் குளிப்பதால், தாங்கள் செய்த பாவ அழுக்கு மறைந்து போகிறது என்பதும் மக்களின் நம்பிக்கை. தாங்கள் செய்த தீமைகள், அழுக்கானவை அழிவை தருகின்றவை என்ற எண்ணமும் மக்களிடம் மறைந்திருக்கிறது. மேற்கண்ட நல் எண்ணங்கள் மக்கள் மனதில் தோன்றினவா? என்பது கேள்விக்குறி! வழக்கம், வாடிக்கை என்ற கொண்டாட்டமாகத்தான் மகாமகம் மக்கள் மனதில் உண்டாயிருக்கும். வழக்கங்களிலும் வாழ்வின் பொருளை இணைத்துப் பார்த்தால் உயர்வும், சிறப்பும் உண்டாகும்.

Friday, 26 February 2016

வளர்ச்சியை சொல்லும் மொழி, கல்வி


வளர்ச்சியை சொல்லும் மொழி, கல்வி

     நம் மக்கள் மத்தியில் நிறைய விழிப்புணர்வு உண்டாகியிருக்கிறது. பிள்ளைகளின் கல்வியை கண்ணென நினைத்து, எவ்வித தியாகம் செய்தும் பிள்ளைகளை கல்விக்கூடங்களுக்கு அனுப்புகிறார்கள். அரசினர் பள்ளிக்கூடங்களைத் தவிர, தனியார் பள்ளிகள் எங்கும் பூத்துக்குலுங்குகின்றன. கூலி வேலைக்குப் போனாலும், தன் பிள்ளைகளுக்கு டைகட்டி, U போட்டு, பள்ளி வாகனத்தில் அனுப்பி வைத்து, மக்கள் அழகுப் பார்க்கிறார்கள். அரசும், கல்வியின் தரத்தை உயர்த்த பல நெருக்கடிகளை பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் தருகிறார்கள். நெறிகெட்ட வாழ்விற்கும், நம் நாட்டின் வறுமைக்கும் காரணம், தகுந்த கல்வியில்லாமைத்தான் என்று சொல்லலாம். மது அருந்தும் மாணவர்கள், பிஞ்சிலே பழுப்பதைப் போன்று, மாணவர்களின் காதல் தப்புத் தாளங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவை நாம் இன்று சந்திக்கின்ற சவால்கள்.

சி. எஸ். லெவிஸ் என்பவர் கூறுகிறார், ‘சரியான பண்புகளை, மதிப்பீடுகளை கற்பிக்காத கல்வி, திறமையான பேய்களையும், சாத்தான்களையும் தான் உருவாக்கும்’ என்கிறார். ‘நல் அறிவு, நல் மனித பண்புகளை மாணவரிடத்தே உருவாக்குவதே கல்வியின் நோக்கம்’ என்கிறார் மார்ட்டின் லூத்தர் கிங் என்பவர். ‘மாணவர்கள் எதை சிந்திக்க வேண்டும் என்று கற்றுத் தருவதல்ல, மாறாக எப்படி சிந்திக்க வேண்டும் என்று கற்றுத் தருவதே கல்வி’ என்கிறார் மார்கிரேட் மெட்.

இம்மாதம் மார்ச் மாதம், புனித சூசையப்பரை சிறப்பாக நினைவு கூறுகிற மாதம். கல்வியின் பாதுகாவலர் என்று அவர் அழைக்கப்படுகிறார். சில பள்ளிகளில் மார்ச் மாதத்தின் புதன் கிழமைகளில் சூசையப்பருக்கு தனி வணக்கம் செலுத்தி வழிபாடு செய்வார்கள். விரைவில் அரசு பொதுத் தேர்வுகள் வர இருக்கின்றன. மாணவர்கள் மன உலைச்சலுக்கு ஆளாகும் நேரம் இது. மாணவர்களின் மனஉலைச்சலைவிட பெற்றோர்கள், ஆசிரியர்களின் மன உலைச்சல் அதிகம்.

பெரும்பாலான பிள்ளைகள், இளம் வயதின் தாக்கத்தினால், வருங்காலத்தைப் பற்றி கவலையின்றி வழக்கமாக பள்ளிக்குச் சென்று வருவர். பெற்றோர்கள்தான் பிள்ளைகளின் வருங்காலத்தை, தங்களின் வருங்காலத்தைப் போலக் கருதி, பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் வாங்குவதைப் பற்றி நினைவுப்படுத்தி, பிள்ளைகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவர். பெற்றோர்களும் ஆசிரியர்களும், பிள்ளைகளின் இயல்பான மன ஓட்டங்களைப் புரிந்துக் கொண்டு, அதற்கேற்றார்போல் கற்பிக்க வேண்டும். முக்கியமாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் தங்களின் பிள்ளைகளை வடித்தெடுக்கும் சிற்பிகள் என்றுணர்ந்து தங்களின் வாழ்வை நல்ல பண்புகளால் வடித்தெடுக்க வேண்டும். யூதர்களின் பிள்ளைகளை எப்படி கருவிலிருந்தே கவனமாக வளர்த்து உயர்ந்தவர்களாக்குகிறார்கள் என்று ஒரு கட்டுரை இந்த இதழில் இடம் பெற்றிருக்கிறது. மனிதர்களை தரமானவர்களாக வளர்ப்பது கல்வி. எனவே தரமான கல்வியை பிள்ளைகளுக்குத் தருவதில் ஆர்வம் காட்டவேண்டும்.
கல்வி என்பது மனிதரை செதுக்கும் உளி - அது
வாழ்விற்கு வெளிச்சம் தரும் ஒளி - அதுவே
வளர்ச்சியை சொல்லும் மொழி.

குடந்தையில் மகாமகம் என்ற மகா நிகழ்ச்சி பிப்ரவரி 13 முதல் 22 வரை நடைபெற்றது. பத்து நாள்களும் மக்கள் அலை அலையாக மகாமக குளத்தை சந்தித்து, அங்கிருந்து 20 தீர்த்தங்களை தலையில் ஊற்றிக் கொண்டு சென்றார்கள். இந்நிகழ்ச்சியில் இரண்டு செய்திகளை நான் கவனித்தேன். கங்கை. யமுனா, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, தாமிரபரணி  போன்ற ஆறுகள் மகாமகத்தன்று மகாமககுளத்தில் இணைகின்றன என்பது நம்பிக்கை. எனவே இந்தியாவின் ஆறுகளை இணைத்தல் என்பது புனித செயல் என்ற கருத்து இங்கு வெளிப்படுகிறது. இரண்டாவது, மகாமக குளத்தில் குளிப்பதால், தாங்கள் செய்த பாவ அழுக்கு மறைந்து போகிறது என்பதும் மக்களின் நம்பிக்கை. தாங்கள் செய்த தீமைகள், அழுக்கானவை அழிவை தருகின்றவை என்ற எண்ணமும் மக்களிடம் மறைந்திருக்கிறது. மேற்கண்ட நல் எண்ணங்கள் மக்கள் மனதில் தோன்றினவா? என்பது கேள்விக்குறி! வழக்கம், வாடிக்கை என்ற கொண்டாட்டமாகத்தான் மகாமகம் மக்கள் மனதில் உண்டாயிருக்கும். வழக்கங்களிலும் வாழ்வின் பொருளை இணைத்துப் பார்த்தால் உயர்வும், சிறப்பும் உண்டாகும்.

Ads Inside Post