Pages - Menu

Friday 30 September 2016

வெற்றி உங்கள் கையில்

வெற்றி உங்கள் கையில் 

-அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,
M.A., M.Ed; M. Sc; M. Phil; PGDCA, NET; Ph.D.,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்


“ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி” என்கிற டயலாக்கை கேட்ட மாதிரி  இருக்கா? ஆமாங்க, வைகைப்புயல் வடிவேல் ஒரு திரைப்படத்தில் இந்த டயலாக்கை பேசியிருப்பார். ஆம் வெற்றியாளருக்கு மிகவும் தேவையான ஒன்று ரிஸ்க் எடுத்தலே. அதைப்பற்றி சிந்திப்போம்.

நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் விளையாட்டில், இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் நான்காம் இடத்தைப் பிடித்தார். இன்று ப்ரோடுனோவா வால்ட்டை எளிதாக கடக்கும் தீபாவின் ஆரம்பகால ஜிம்னாஸ்டிக் வாழ்வு அவ்வளவு பிரகாசமாக இல்லை. ஆரம்பத்தில் தற்போதைய பயிற்சியாளர் பிஸ்வேஸ்வர் நந்தியின் மனைவி, சோமா, அகர்தலாவில் உள்ள சிறு பயிற்சி மையத்தில் வைத்து தீபாவுக்கு ஜிம்னாஸ்டிக்கில் பாலபாடம் எடுத்தார். தீபாவின் அர்ப்பணிப்பைப் பார்த்து, இனி இந்த பெண்ணுக்கு நானே சொல்லி கொடுக்கிறேன் என பிஸ்வேஸ்வர் பொறுப்பேற்றுக் கொண்டார். “ஆரம்பத்தில் தீபாவை நான் கண்டுக்கொள்ளவில்லை. நாளாக நாளாக அவரது அர்ப்பணிப்பும், கடின முயற்சியும், அயராத உழைப்பும் என்னை பிரமிக்க வைத்தது. அடிக்கடி சீனியர் வீராங்கனைகளை காட்டி நானும் ஒரு நாள் அதுபோல் வருவேன் என்பார். அந்த நிலைப்பாடுதான் தீபாவுக்கு என்னை பயிற்சியளிக்க வைத்தது” என்கிறார் பிஸ்வேஸ்வர். அவர்தான் அன்று முதல் இன்றுவரை தீபாவின் பயிற்சியாளர். எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் கொல்கொத்தாவிலிருந்து வந்த டாக்டர், தீபாவின் பாதங்கள் தட்டையாக இருப்பதைப் பார்த்து “இந்தப் பொண்ணு ஜிம்னாஸ்டிக்குக்கு சரிப்பட்டு வரமாட்டா” என்றார். ஜிம்னாஸ்டிக்கை கைவிட தீபாவுக்கு மட்டுமல்ல அவரது பயிற்சியாளருக்கும் இஷ்டமில்லை. தட்டையான பாதங்களில் வளைவு ஏற்படுவதற்காக மட்டுமே தினமும் ஆறுமணி நேரம் பயிற்சி செய்தார். அதன்பிறகு பலமணி நேரம் ஜிம்னாஸ்டிக் பயிற்சியை தொடர்ந்தார். வெகுசீக்கிரமே அதற்கு பலனும் கிடைத்தது. ஈரோட்டில் நடந்த தேசிய சாம்பியன்´ப் தொடரில் பல்வேறு பிரிவுகளில் நான்கு தங்கம், ஒரு வெள்ளி வென்றபோது தீபாவின் வயது 16. அதே சூட்டோடு பள்ளிகள் அளவிலான தேசியப் போட்டியில் நான்கு தங்கம், இரண்டு வெள்ளி வென்றதோடு தேசிய ஜுனியர் சாம்பியன்´ப்பில் மூன்று தங்கம், இரண்டு வெள்ளி அள்ள “யாரு இந்த தீபா?” என ஜிம்னாஸ்டிக் உலகம் கேள்வி எழுப்பியது. இது போதாது என சர்வதேச அளவில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்த தீபாவுக்கு டெல்லியில் நடந்த 2010 காமன்வெல்த் போட்டி சறுக்கலாக அமைந்தது. முதல் சர்வதேசப் போட்டியில் அடைந்த தோல்வி ரொம்பவே கசந்தது. “பரவாயில்லை, அடுத்த காமன்வெல்த் போட்டியில் பார்த்துக் கொள்ளலாம்” என தேற்றிய பயிற்சியாளர் பிஸ்வேஸ்வர் கூடவே ஒரு வி­யம் சொன்னார். “உலகம் உன்னை கவனிக்க வேண்டுமெனில் ரிஸ்க் எடுக்க வேண்டும்”. உடனே தீபா “நீங்க என்ன சொன்னாலும் செய்ய தயார்” என்று சொல்லி துள்ளி எழுந்தார். அந்த துணிச்சலுக்குப் பதிலாக 2014 கிளாஸ்கோ காமன்வெல்த்தில் தீபாவின் கழுத்தில் வெண்கலப்பதக்கம் மின்னியது. காமன்வெல்த்தில் பதக்கம் எல்லாம் ஒரு விசயமே அல்ல. ஒலிம்பிக்கில் ஜெயிச்சா ஆயுசுக்கும் பேர் என அடுத்த இலக்கை நிர்ணயித்தார் தீபா. உயிரை பணையம் வைத்து ‘ப்ரோடுனோவா’ வால்ட்டில் தடம் பதித்து, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வெற்றியாளராக வலம் வந்தார். மேலும் அவர் கூறியது. இன்னும் நான்கு ஆண்டுகளில் தங்கப் பதக்கத்தை கட்டாயம் வெல்வேன். டோக்கியோ 2020  ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே என் இலட்சியம் என்றார். தீபா கர்மாகர் தன் வாழ்வில் ரிஸ்க் எடுத்தார். வெற்றியும் கொண்டார். ஒட்டு மொத்த இந்தியாவும் இவரது சாதனையைப் பாராட்டியது. இந்திய ஜிம்னாஸ்டிக்கை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான முதல்படி, என்று சமூக வலைதளங்கள் அவரை பாராட்டுகின்றன. மத்திய அரசும் அவரைப் பாராட்டி கேல்ரத்னா விருதை வழங்கி கவுரவித்தது.

ரிஸ்க் எடுத்தால்தான் இந்த உலகம் நம்மை உற்றுப்பார்க்கும், அறிந்து கொள்ளும், அறிமுகப்படுத்தும், அணைத்துக்கொள்ளும், ஆரவாரப்படுத்தும், துன்பங்கள், துயரங்கள், சவால்களுக்குப் பயந்தால் ரிஸ்க் எடுக்கவே முடியாது. பயத்திலிருந்து விலகிச் செயல்பட்டால்தான் வாழ்வில் ரிஸ்க் எடுக்க முடியும்.

“நம்மால் முடியும்” என்ற தாரக மந்திரம் நம் உடலில், உள்ளத்தில், உணர்வில், உறவில் ஒலிக்க வேண்டும். அதுதான் ரிஸ்க் எடுப்பதற்காக தூண்டுகோலாக அமையும். படிக்கின்ற மாணவ, மாணவியர் முக்கியமாக 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படிக்கும் போது ரிஸ்க் எடுத்தால்தான் வாழ்வில் வெற்றி பெற முடியும். இளைஞர்கள், இளம்பெண்கள் எதிர்கால வாழ்வில் வேலைவாய்ப்பைப் பெற்று நலமோடும், வளமோடும் வாழ்ந்திட ரிஸ்க் எடுக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நல்வாழ்வு பெற்று வெற்றியடைய நல்லவற்றைக் கற்றுக்கொடுப்பதில் ரிஸ்க் எடுக்க வேண்டும். சுதந்திரம், பாசம், நேசம் என்ற பெயரில் அவர்கள் தவறான பாதையில் செல்ல அனுமதிக்கக் கூடாது. எனவே எந்தப் பணியை செய்பவராக இருந்தாலும் வாழ்வில் வெற்றி பெற ரிஸ்க் எடுத்தே ஆக வேண்டும். இலவசமாக கிடைக்குமா? எளிதாக கிடைக்குமா? குறுக்கு வழியில் கிடைக்குமா? போன்ற கேள்விகளை ம்eயிeமிe செய்துவிட்டு அனைவரும் யூஷ்விவ எடுத்து வெற்றியின் பாதையில் சிஐமிer ஆவோம்.
“Take risks in your life. If you win you can lead. If you lose you can guide”. - Swami Vivekananda

No comments:

Post a Comment

Ads Inside Post