Pages - Menu

Saturday 3 September 2016

அமெரிக்கக் கடிதம் கவனம் காக்கும் நலம் - சவரி, கேரி, வடகரோலினா

அமெரிக்கக் கடிதம்
கவனம் காக்கும் நலம்
- சவரி,
கேரி, வடகரோலினா

அமெரிக்கர்கள் தங்களின் உடல் நலத்தைப் காப்பாற்றுவதில் மிகக் கவனமாயிருக்கின்றனர். நோய்கள் உருவாகாமல் இருக்கவும், அவை பரவாமல் இருக்கவும் அரசும் மக்களும் விழிப்புடன் செயல்படுகின்றனர். மருத்துவ மனையில் ஒருவரை சந்திக்க வேண்டுமென்றால் அதற்குரிய அனுமதி பெற்று, உடலை மூடிய உடை அணிந்துதான் செல்ல வேண்டும். ஜீரம், இருமல், என்றால் ஒதுங்கி வாழ வேண்டும்.

ஒவ்வொரு ஊரிலும் நடைபயிற்சிக்கு ஏற்ற மரங்கள் நிறைந்த பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எத்தனை தூரம் நடக்கிறார்கள் என்பதற்கு ஆங்காங்கு குறிப்புக்கள் இருக்கும். அங்கேயே உடற்பயிற்சி செய்ய வாய்ப்புகள் உண்டு. குளங்கள் இருந்தால் அவைகளை சுற்றிலும் நடைபயிற்சி செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊரிலும் விளையாட்டு உள் அரங்கம், விளையாட்டு மைதானம், நீச்சல் குளங்கள் என எல்லாவித வாய்ப்புகளும் அமைந்துள்ளன. எனவேதான், அமெரிக்கர்கள் ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வெல்கிறார்கள். அதிக பதக்கங்கள், மக்களின் ஆழ்ந்த உடல்நலத்தைத்தான் காட்டுகின்றன.

மருத்துவம் சற்று இங்கு அதிக செலவுக்குரியது. காப்பீட்டு முறைபடுத்தப்படவில்லை. மக்களிடையே இதைப்பற்றி இன்னும் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால், அரசில் அல்லது ஒரு நிறுவனத்தில் பணி செய்பவர்களுக்கு அந்த நிறுவனமே மருத்துவ காப்பீடு செய்கிறது. மருத்துவர்கள் மருந்து கொடுக்குமுன், நோயாளர்களிடம் அதை விளக்கிவிட்டுத்தான் கொடுக்க வேண்டும். மருத்துவர் தவறான மருத்துவம் செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, தவறு செய்திருந்தால் அபராதம் விதிப்பார்கள்.

இங்கு 108 ஆம்புலன்சைப் போல அமெரிக்காவில் 911 ஆம்புலன்ஸ் உண்டு. அவர்கள் அவ்வளவு வேகமாக செயல்படுவர். மிகவும் ஆபத்தான நோயாக இருந்தால், யஹலிகாப்டரில் நோயாளிகளை ஏற்றி செல்வர். தற்போது சைக்கிள் கலாச்சாரத்தை முன்வைக்கின்றனர். சைக்கிளில் செல்வதால், உடற்பயிற்சி கிடைக்கிறது. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைகிறது. எரிபொருள் தேவை குறைகிறது, வாகனங்களின் புகையினால் வரும் மாசு குறைகிறது. லண்டனிலும், ஹாலண்டிலும், பிரதம மந்திரிகளே சைக்கிளில் அலுவலகத்துக்கு வருகின்றனர்.

இந்தியாவில் சென்ற மாதம் எனது நான்கு பிள்ளைகளுடன் சுற்றுப்பயணம் செய்தேன். எங்கு பார்த்தாலும் இருந்த குப்பைகளைப் பார்த்து பிள்ளைகள் மூக்கைப் பிடித்துக் கொண்டு சென்றார்கள். தூய்மையற்ற நிலையினால் பிள்ளைகளுக்கு ஜுரம் ஏற்பட்டது.

சுவர் வைத்துதான் சித்திரம் வரைய வேண்டும். உடல்நலமில்லையயன்றால் எவ்வளவு வசதிகள் இருப்பினும், நமது வாழ்க்கை சக்கரமில்லா வண்டியினைப் போல் ஆகிவிடும். கவனமுடன் உடல்நலத்தைக் காப்போம். வாழ்வின் நிறைவைப் பெறுவோம்

No comments:

Post a Comment

Ads Inside Post