Pages - Menu

Saturday 3 September 2016

வெற்றி உங்கள் கையில் ...

வெற்றி உங்கள் கையில் ...
- அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,
M.A., M.Ed; M. Sc; M. Phil; PGDCA, NET; Ph.D.
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்
ஒரு மனிதன் எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும், அவன் வெற்றி பெறுவது என்பது ஏதாவது ஒரு குறிப்பிட்ட நிகழ்வினால் ஏற்பட்ட திருப்புமுனையால் மட்டுமே நிகழ்த்தப்பட்டதாகும். அந்த திருப்புமுனை துன்பத்தின் உச்சக்கட்டத்திலோ அல்லது இன்பத்தின் உச்சக்கட்டத்திலோ, உயர்விலோ அல்லது தாழ்விலோ நிகழலாம்.

இந்த திருப்புமுனைதான் ஒவ்வொருவரின் வாழ்வை புரட்டிப்போட்டு வெற்றிகரமான வழியை தீர்மானிக்கும். இப்படி தன் வாழ்வில் ஏற்பட்ட திருப்புமுனையால் வெற்றி பெற்று, சாதனை படைத்த ஒருவரை நாம் பார்ப்போமா?

பாகிஸ்தான் நாட்டில் கோவிந்தபுரர் ஊரில் 1929 நவம்பர் 20இல் பிறந்தவர் தான் மில்காசிங். 1947இல் பாகிஸ்தான், இந்தியா பிரிவினையில் வன்முறை வெடித்தது. முஸ்லிம் அல்லாதவர்களை பாகிஸ்தான் நாட்டிலிருந்து விரட்டி அடித்தார்கள். மில்காசிங்கின் உறவினர்கள் அந்த வன்முறையில் உயிர் இழந்தனர். அவருடைய தந்தை சாகும் தருவாயில் சொன்ன வார்த்தைகள், “BHAAG MILKHA”  இந்த ஹிந்நி வார்த்தைக்கு ஆங்கிலத்தில் RUN FOR YOUR LIFE, MILKHA. இதற்கு தமிழில் “மில்கா , உன் வாழ்க்çக்காக ஓடு” என்பது பொருளாகும்.

தன் வாழ்க்கைக்காக பாகிஸ்தானில் இருந்து இந்திய நாட்டின் தலைநகரான டெல்லிக்கு ஓடினார். அங்கு இருந்த அகதிகள் முகாமில் சேர்ந்தார். அவரது ஓடும் திறமையை பார்த்த முகாமில் இருந்தவர்கள் அவரை ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற கேட்டுக் கொண்டார்கள். அவரும் சம்மதித்து மூன்று முறை ராணுவத்தில் சேர முயற்சி செய்து தோல்விகண்டார். இறுதியில் வாய்ப்பை பெற்றார். பிறகு ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதற்கான சிறப்புப் பயிற்சியை பெற்றார். 1958ஆம் ஆண்டு டோக்கியோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்திலும், 400 மீட்டர் ஓட்டத்திலும் தங்கப்பதக்கங்கள் வெள்றார்.

மீண்டும் 1962இல் ஜகார்த்தா ஆசிய விளையாட்டுப் போட்டியில், 400 மீட்டர், 4 $ 400 தொடர் ஓட்டத்திலும் தங்கப்பதக்கங்களை குவித்தார். இவர் பதக்கங்கள் பெறுவதற்கு திருப்பு முனையாக இருந்தது, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு ஓடி வந்ததுதான் என்று தனது சுய சரிதையில் மில்காசிங் கூறியிருக்கிறார். 1960ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஓட்டப்பந்தயம் நடைபெற்ற போது மில்காசிங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் அதில் பங்குபெற மறுத்துவிட்டார். ஆனால் முன்னாள் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு மில்காசிங்கிடம் விரும்பி கேட்டுக்கொண்டதால் பாகிஸ்தான் சென்றார். ஏழாயிரம் பார்வையாளர்கள் பாகிஸ்தான் நாட்டு வீரர் அப்துல் காலிக் என்பவரை கரம்தட்டி வெற்றி பெற வாழ்த்துக் கூறினார்கள். ஆனால் இறுதியில் மில்காசிங்தான் விரட்டப்பட்ட பாகிஸ்தான் நாட்டில் மண்ணின் மைந்தரையே தோற்கடித்து வெற்றி வாகை சூடினார். அப்போது பாகிஸ்தான் ஜனாதிபதியாக இருந்த ஜெனரல் அயூப்கான் மில்காசிங்கை பாராட்டி சொன்ன வார்த்தைகள்,  “He did not run but flew”. அதற்கு பொருள் “அவர் ஓடவில்லை, பறந்தார்”. மேலும் “அவர் பறக்கும் சீக்கியர்” என்ற பட்டத்தையும் அளித்து பெருமைபடுத்தினார். இந்திய நாட்டுக்கு பெருமை சேர்த்து வெற்றி வீரராக வலம் வந்தவர் தான் மில்காசிங்.

மில்காசிங்கைப் போல உங்கள் வாழ்விலும் திருப்புமுனை வரலாம். நீங்களும் அதை சிக்கென பிடித்து வெற்றி வீரர்களாக வலம் வர வாழ்த்துகிறேன்.

நம்பிக்கையோடு உன் முதல் அடியை எடுத்து வை. முழுப்படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் முதலில் ஏறு ‡ மார்டின் லூதர் கிங்

No comments:

Post a Comment

Ads Inside Post