Pages - Menu

Saturday 3 September 2016

அனைத்து மதத்தினரும் திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்

அனைத்து மதத்தினரும் திருமணங்களை கட்டாயமாக 
பதிவு செய்ய வேண்டும்
- A. அருள்தாஸ், M.A.; B.L.., கும்பகோணம்

இந்திய உச்ச நீதிமன்றம் 2009ம் ஆண்டிலிருந்து அனைத்து திருமணங்களையும் கட்டாயமாக பதிவு செய்யவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் அனைத்து மதத்தினரும் திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்யவேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 24.11.2009ம் தேதி முதல் இந்த உத்தரவு அமுலுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக திருமணங்களின் தலைமைப் பதிவாளர் மற்றும் பத்திரப்பதிவுத் துறைத் தலைவர் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது :-

திருமணப் பதிவு கட்டாயம் :

தமிழக அரசு தமிழ்நாடு திருமணங்களின் பதிவுச் சட்டம் 2009 இயற்றி அதன்படி கடந்த 24.11.2009 தேதியில் இருந்து தமிழகத்தில் நடைபெறும் பல மதங்களைச் சார்ந்த இந்திய குடிமக்களின் அனைத்து திருமணங்களையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. இந்து திருமணங்கள் சட்டம் 1955, இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் 1872 சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகம்மதியர்கள் ­ரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் செய்திருந்தாலும் இச்சட்டத்தின் பிரிவு 3‡ன் கீழும், கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

இலவச விண்ணப்பம் :

இச்சட்டத்தின்படி பதிவுத் துறைத் தலைவர் தலைமைத் திருமணப் பதிவாளராகவும், மாவட்டப் பதிவாளர்கள் அனைவரும் மாவட்ட திருமணப் பதிவாளர்களாகவும் மற்றும் சார்பதிவாளர்கள் அனைவரும் திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தகு திருமணப் பதிவுக்கான குறிப்பாணை படிவம் 1 மற்றும் இதனுடன் இணைக்கப்பட வேண்டிய விண்ணப்பப் படிவம் 2 இலவசமாக அனைத்து பதிவு அலுவலகங்களிலும் வழங்கப்படும்.

கட்டாய திருமணப் பதிவுக்கான விவரங்கள் மற்றும் படிவங்கள் துறையின் இணையதளத்தில் (ழழழ.மிஐreஆஷ்ஐer.ஐeமி) வெளியிடப்பட்டுள்ளன. இதனிலிருந்து விபரங்கள் அறிந்து படிவங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

90 நாட்களுக்குள் பதிவு :

திருமணப் பதிவுக்கான குறிப்பாணை படிவம் மற்றும் விண்ணப்பத்தினை இரட்டையில் (இரு விண்ணப்பங்கள்) எவ்வித விடுதல்களோ அல்லது பிழைகளோ இன்றி பூர்த்தி செய்து மணமக்கள், திருமணம் நடத்தி வைத்தவர் மற்றும் இரு சாட்சிகளின் கையயாப்பத்துடன் திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரம், இருப்பிடம் மற்றும் வயது தொடர்பாக வரையறுக்கப்பட்ட ஆதார ஆவணங்களுடன் திருமணம் நடைபெற்ற 90 நாட்களுக்குள் ரூ.100 கட்டணத்துடன் (90 நாட்களுக்கு மேற்பட்டு ரூ.150) திருமணம் நடைபெற்ற இடம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட திருமணப் பதிவாளரிடம் (சார் பதிவாளர்) அளிக்கப்பட வேண்டும். அல்லது அஞ்சல் வழியாக அனுப்பப்பட வேண்டும். மேலும் திருமணத்திற்கான சாட்சிகளின் முகவரி மற்றும் ஆளறி அடையாளச் சான்று நகல்கள் இணைக்கவேண்டும்.
இந்த விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட ஆதாரங்கள் முறையாக இருப்பின் சம்மந்தப்பட்ட திருமணப் பதிவாளர் மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். உரிய படிவத்தில் இல்லாத, ஆதார ஆவணங்கள் தாக்கல் செய்யாத, உரிய கட்டணம் செலுத்தப்படாத கோரிக்கை மனுக்கள், திருமணப் பதிவாளரால், குறை சரி செய்து, திரும்ப அளிக்க மனுதாரருக்கு திருப்பப்படும்.

மேல்முறையீட்டுக்கு வாய்ப்பு :

தமிழ்நாடு திருமணப் பதிவு விதிகளின்படி மணமக்களின் அல்லது சாட்சிகளின் அடையாளங்கள் குறித்தும், அவர்கள் அளித்த தகவல்களின் சரித்தன்மை குறித்தும் சந்தேகம் ஏற்படின், மணமக்களுக்கு வாய்ப்பளித்து விசாரணைக்குப்பின் திருமணப் பதிவாளர் திருப்தி அடையாவிட்டால் அத்தகைய திருமணப் பதிவுகள் அவரால் மறுக்கப்படும்.
இந்த மறுப்பு ஆணை மீது, சம்மந்தப்பட்ட நபர்கள், ஆணை பெற்ற 30 நாட்களுக்குள், சம்மந்தப்பட்ட மாவட்டப் பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம். அவ்வாறு செய்யப்பட்ட மேல்முறையீடு மீது, மாவட்டப் பதிவாளரால் பிறப்பிக்கப்படும் ஆணை, திருப்தி இல்லையயனில் இதன் மீது ஆணை பெற்ற 30 நாட்களுக்குள் பதிவுத் துறை தலைவருக்கு மேல்முறையீடு செய்யலாம். பதிவுத் துறைத் தலைவரின் ஆணையே இறுதியானது.

குற்ற வழக்குத் தொடரப்படும் :

தமிழ்நாடு திருமணங்கள் பதிவு விதிகள் 2009 அமலுக்கு வந்த நாளான 24.11.2009 முதல் நடைபெறும் திருமணங்களும், எந்த சாதி மற்றும் மதமாயிருப்பினும் மேற்குறிப்பிட்டவாறு உரிய நாளில் பதிவு செய்யாவிடில் அல்லது தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தால் அல்லது விதி மீறல் இருப்பின் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது குற்ற வழக்குத் தொடரப்பட்டு நிரூபிக்கப்படின் அபராதம் விதிக்கப்படும்

No comments:

Post a Comment

Ads Inside Post