Pages - Menu

Friday 30 September 2016

பொதுக்காலம் 28ஆம் வாரம்

பொதுக்காலம் 28ஆம் வாரம்                     09 - 10 - 2016

2 அரச 5 : 14 - 17;     2 திமொ 2 : 8 - 13;           லூக் 17 : 11 - 19

ஒரு பெண் கல்லூரியில் படித்தாள். விடுதியில் தங்கியிருந்தாள். அவள் தன் பெற்றோருக்கு கடிதம் எழுதியிருந்தாள். அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நன்றி என்று எழுதியிருந்தாள். ‘அம்மா, எனக்காக செய்த தியாகங்களையும் அன்பையும் நினைத்துப் பார்க்கிறேன். நன்றி அம்மா’ என்று எழுதியிருந்தாள். அந்த வாக்கியத்தை வாசிக்க கேட்டதும் அம்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.

‘நன்றியுள்ளம் ஆன்மாவில் பூக்கும் உன்னதப்பூ’ என்கிறார் யஹன்றி வார்ட் பீச்சர்.
நன்றி என்பது உணர்வுகளின் நினைவு என்கிறார் Uன் பாப்டிஸ்ட் மாசியு.

இயேசு 10 தொழுநோயாளரைக் குணமாக்குகிறார். லூக் 5 : 12 ‡ 16இல் ஒரு தொழுநோயாளரைத் தொட்டு குணமாக்குகிறார். ஆனால் இன்றைய நற்செய்திப் பகுதியல் பத்து தொழுநோயளர்களைக் குணமாக்கி குருக்களிடம் உங்களை காண்பியுங்கள் என்கிறார். அவர்களில் ஒருவர் மட்டும், தான் குணமானதை அறிந்து குருக்களிடம் கூட சொல்லாமல், குணமளித்த இயேசுவிடம் வந்து முகம்குப்புற விழுந்து நன்றி கூறுகின்றார். குணமடைந்து, திரும்பி வந்து, நன்றி கூறியவர் சமாரியர் இவர் தாழ்ந்த இனத்தவராக கருதப்பட்டவர். நல்ல சமாரியர் உவமையிலும், குரு, லேவியர் ஆகியோரைவிட அன்பு காட்டும் உயர்ந்தவராக அங்குக் காண்பிக்கப்படுகிறார் (லூக் 10 : 25 ‡ 37). நன்றி என்பது மற்றவர்களிடமிருந்து நாம் பெற்றுக் கொண்ட நன்மைகளைக் காண்பது. எனவேதான், தொழுநோயாளர், ‘தம்பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு’ என்று காணுதல் என்பது அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. வள்ளுவர் கூறுகிறார் :

“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலினும் பெரிது” (குறள் 103)

சமாரியர் கடவுளின் அற்புத செயலைக் கண்டு கொண்டார். எனவேதான், ‘அவர் கடவுளைப் புகழ்ந்து கொண்டே’ இயேசுவிடம் வந்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. லூக்கா நற்செய்தியில் இறைவனின் வல்ல செயல்களை காண்பிக்கின்றவர், இறைவனை புகழ்கின்ற பண்பினை குறிப்பிடுகிறார்.

லூக் 2 : 20 மாடடை குடிலில் இயேசுவை பார்த்தப் பிறகு இடையர்கள் ‘கடவுனைப் போற்றி புகழ்ந்து பாடிக் கொண்டு திரும்பினர்’.

லூக் 5 : 25 ‡ 26 முடக்குவாதமுற்றவர் குணம் பெற்றபிறகு, ‘கடவுளைப் போற்றிப் புகழ்ந்தவாரே வீட்டுக்குப் போனார்’.

லூக் 7 : 16 நயீன் ஊர் கைம்பெண்ணின் மகன் உயிர்ப்பிக்கப்பட்ட பிறகு மக்கள், ‘கடவுள் தம் மக்களை தேடி வந்திருக்கிறார் என்று சொல்லி கடவுளைப் போற்றி புகழ்ந்தனர்’.

லூக் 13 : 13 கூன் விழுந்த பெண்ணை இயேசு குணமாக்கியபோது ‘உடனே அவர் நிமர்ந்து கடவுளைப் போற்றி புகழ்ந்தார்’.

லூக் 18 : 43  பார்வையற்றவர் ஒருவரை இயேசு குணமாக்கிய போது, ‘உடனே அவர் பார்வை பெற்று டவுளைப் போற்றி புகழ்ந்துக் கொண்டே இயேசுவைப் பின்பற்றினார்’.

லூக் 23 : 47 இயேசு சிலுவையில் மரித்தக் காட்சியைக் கண்ட நூற்றுவர் தலைவர், ‘இவர் உண்மையாகவே நேர்மையாளர் என்று கூறி கடவுளைப் போற்றி புகழ்ந்தார்’. 

போற்றி புகழ்தல் என்பதற்கு கிரேக்க மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை, ‘தொக்சா’ (dலிவகுழி) என்பதாகும். இதற்கு இணையான எபிரேய வார்த்தை ‘கபோத்’ என்பதாகும். ஒருவரின் பெருமையை, உயர்வை குறிக்கப் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும் இது. யாவேயின் பெருமையை எடுத்துரைக்க, ‘கபோத் யாவே’ என்ற சொற்றொடர் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும் இது. யாவேயின் பெருமையை எடுத்துரைக்க, கபோத் யாவே என்ற சொற்றொடர் பழைய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி என்பது ஒருவர் பெற்ற நன்மைக்கு ஒருவரின் பதில் மொழி. புகழ்ச்சி என்பது ஒருவரின் சிறந்த பண்பை எடுத்துக்கூறுதல். தொழுநோயாளர் இயேசுவுக்கு நன்றி கூறினார். கடவுளுக்கு புகழ்ச்சியும் செலுத்தினார்.

நன்றி, உறவின் ஊடகம். உறவை வளர்க்கும் புளிப்பு மாவு. முதியோர் இல்லத்தில் வாழ்ந்த முதியவர் செய்த செபம் என்று வாட்ஸ் அப்பில் வந்திருக்கிறது. ‘இறைவா முதியோர் இல்லத்தில் வாழும் இந்த நிலை என் மகனுக்கும் வந்திடக்கூடாது’ என்று செபித்தாராம். மற்றவர்களால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அவைகளை கண்டுக்கொண்டால் நன்றி பிறக்கும், நன்றி மகிழ்ச்சியை கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் பிறப்பிக்கும்.

முதல் வாசகத்தில், நாமான் என்ற சிரியா நாட்டு படைத்தலைவர் இறைவாக்கினர் எலிசா வழியாக தொழுநோயிலிருந்து குணம் பெற்றதற்காக, எலிசா வழிபட்ட இறைவனை வழிபட முன்வருகிறார். இவ்வாறு தன் நன்றியைக் காட்டுகிறார். 

இரண்டாம் வாசகத்தில், ‘நாம் நம்பத்தகாதவராயினும் கடவுள் நம்பத் தகுந்தவர்’ என்று பவுல் அடிகளார் கூறுகிறார்.

 ‘உன் வாழ்வில், ‘நன்றி’ என்பதுதான் உனது ஒரே செயல் என்றால் அதுவே உன் வாழ்விற்குப் போதுமானது’ - மைஸ்ட்டர் எக்கார்ட்.

No comments:

Post a Comment

Ads Inside Post