Pages - Menu

Friday 30 September 2016

செல்லரித்த பூக்கள்

செல்லரித்த பூக்கள்
- ரா. பெர்ணத், 
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி
சமயபுரம்
மனமெனும் மர்மப் பெட்டகத்தில
மயங்கி இருக்கும் போதும்
சோற்றுக்காக சோர்வுற்று
சோம்பி இருக்கும் போதும் ‡ எம்
இளையப் பாரதமே
செல்லரித்த பூக்கள் தான் நீ

உழைப்பு என்னும் சொல்
உன் உள்ளத்தை
உருவகப்படுத்தாத போதும்
செல்லரித்த பூக்கள் தான் நீ
சமூகத்தில் காணும்
அவலங்களை கண்டும் காணாமல்
உணர்வற்று ஊமையாய்
இருக்கும் போதும் - எம்
இளைய பாரதமே
செல்லரித்த பூக்கள் தான் நீ

கற்புக்கரசி பிறந்த நாட்டில்
கற்பை களவாடும் போதும்
கண்ணாமூச்சி ஆடும் கண்மணிகளை
காமக் கொடூரன்களின் வலையில்
சிக்கித் தவிக்கும் போதும்
சீறியயழும் வேங்கையாய் இராமல்
சிற்பமாய் நிற்கும் போதும் - எம்
இளைய பாரதமே
செல்லரித்த பூக்கள் தான் நீ

நிழலை நிஜமென்கின்றாய்
நிஜத்தை நிழலென்கின்றாய்
தெளிவில்லா உன் மனச் சிந்தனையால்
சிந்தித்தும் செயல்பட மறுக்கின்றாய்
அதிர்ஷ்டம் என்னும் ஆறாம்விரல்
என் வீட்டுக்கதவை தட்டவில்லையயன்று
சொல்லும் போதும் - எம்
இளைய பாரதமே
செல்லரித்த பூக்கள் தான் நீ

உன்தாயின் கருவறை
உவகை கொள்ளாத போதும்
உன் பிறப்பு அர்த்தமற்றுப் போகும்போதும்
செல்லரித்த பூக்கள் தான் நீ - எம்
இளைய பாரதமே
செல்லரித்த பூக்கள் (தானா) நீ
சிந்தித்துப் பார்
செல்லரித்த பூக்கள் (தானா) நீ?

No comments:

Post a Comment

Ads Inside Post