Pages - Menu

Wednesday 11 November 2015

வெற்றிக்கான கண்ணாடி

எதிர்பாராத சூழல்கள் யாருக்குமே ஏற்படும். அவற்றைக் கையாளுவதில் உங்கள் திறமை எப்படி?
    சீக்கிரமே அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வருவீர்கள் அலலது சுருண்டு விடுவீர்களா? அறிந்துக் கொள்ள கீழே உள்ள கேள்விகளில் உங்களுக்குப் பொருத்தமான பதில்களைக் கிளிக் செய்யுங்கள். இறுதியில் உள்ளன மதிப்பெண்களும், மதிப்பீடும், ஆலோசனைகளும்.
1. ஒரு பிரச்சனையை இந்த விதத்தில் சமாளித்தால் அதன் விளைவு இப்படியிருக்கும் என்பதை உங்களால் சரியாக யூகிக்க முடிகிறதா?
  • நிச்சயம்
  • குழப்பமாகத்தான் இருக்கும். வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பதை சரியாகக் கணிக்க முடியுமா என்ன?
  • ஒன்றென்ன அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் விளைவுகள் நேரலாம். அத்தனையையும் எண்ணிப் பார்த்துவிட்டுதான் பிரச்சனையை அணுகுவேன்.
2. பொதுவாக பெரும் பிரச்சனைகள் வரும்போது என்ன செய்வீர்கள்?
  • தெரிந்தவர்கள் யாரிடமாவது அதைக் கையாளச் சொல்லி கெஞ்சுவேன்.
  • நெருங்கியவர்களின் துணையுடன் அதைச் சமாளிக்க முற்படுவேன்.
  • நிதானப்படுத்திக் கொண்டு அதை எப்படித் தீர்ப்பது என்று சீரியஸாக யோசிப்பேன்.
3. வாழ்க்கையில் தவறான முடிவுகளை நீங்கள் எடுத்துவிட்டால் என்ன செய்வீர்கள்?
  • தவறான முடிவா? நானா? சான்ஸ் இல்லை.
  • அதை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைக்க முயற்சிப்பேன்.
  • தவறுகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்வேன்.
4. பிறர் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை உங்களால் சரியாகக் கணிக்க முடிகிறதா?
  • முடிகிறது, ஆனால் அதுபற்றி எனக்கு அக்கறையில்லை.
  • அதெல்லாம் எனக்குத் தேவையில்லாத வி­யம்.
  • முடிகிறது, ஓரளவாவது அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சிப்பேன்.
5. ஒரு துன்பம் வந்தால் கைகொடுக்க சிலராவது நிச்சயம் இருக்கிறார்களா உங்களுக்கு?
        அ. சந்தேகமில்லாமல்.
    ஆ. அப்படி யாரும் இல்லை என்பதுதான் வருத்தமான வி­யம்.
    இ. ஆறுதல் கூற இருக்கிறார்கள், கைகொடுப்பார்களா என்று தெரியவில்லை.
6. திடீர் முடிவுகளை உடனடியாக அமல்படுத்துவீர்களா?
    அ. பலமுறை அப்படி செய்திருக்கிறேன்.
    ஆ. சில தடவை அப்படி செய்ததுண்டு.
    இ. திடீர் முடிவுகள் தோன்றினாலும் நன்கு யோசித்த பிறகுதான் செயல்படுத்துவேன்.
7. ஒரு பெரும் பிரச்சினை உண்டானால் எப்படி உணர்வீர்கள்?
    அ. மூளையில் ஏதோ வெற்றிடம் உண்டானது போல் செயலிழந்த நிலை ஏற்படும்.
    ஆ.    அதிர்ச்சியிலிருந்து சிரமப்பட்டுத்தான் மீள வேண்டியிருக்கும்.
    இ.    சிறிது நேரத்தில் சமாளித்துக் கொண்டுவிடுவேன்.
8. வாழ்க்கையில் எதுபோன்ற லட்சியங்களைக் கொண்டிருக்கிறீர்கள்?
    அ. மிக உயர்ந்த இலட்சியங்களை.
    ஆ. இலட்சியம் என்றெல்லாம் எதுவுமில்லை.
    இ.    அடையக்கூடிய எளிதான இலட்சியங்களைத்தான் கொண்டிருக்கிறேன்.

கேள்வி எண்        மதிப்பெண்கள்
            அ        ஆ        இ
    1        1        2        3
    2        1        2        3
    3        3        1        2
    4        2        3        1
    5        3        1        2
    6        3        2        1
    7        1        2        3
    8        3        1        2
உங்கள் மதிப்பெண்கள் 12 வரை என்றால்
    பிரச்சினை என்றாலே ஓடி ஒளிவதும் இடியோசை கேட்ட நாகம் போல மிரளுவதுமே உங்கள் தன்மை. இந்தத் தன்மையே உங்கள் பிரச்சினையை அதிகமாக்கும். இதோ சில ஆலோசனைகள். மறக்காமல் படியுங்கள்.
உங்கள் மதிப்பெண்கள் 13‡லிருந்து 17 வரை என்றால்
    பிரச்சினைகளின் தன்மையை ஓரளவாவது புரிந்து கொள்ள முயற்சிக்கிறீர்கள். புரிந்து கொண்டதை செயல்படுத்துவதில் அவ்வப்போது தடுமாற்றம்  உண்டாகிறது. உங்களுக்கு இதோ சில ஆலோசனைகள் உங்களுக்கு உதவும்.
உங்கள் மதிப்பெண்கள் 17க்கு மேல் என்றால்
    பிரச்சினையே இல்லையயன்றால்தான் உங்களுக்கு ஒரு வருத்தம் ஏற்படுமோ என்னவோ! போர்க்குணம் நிரம்பிய உங்களால் எந்தப் பிரச்சினையையும் புறம் காணச் செய்ய முடியும்.
இதோ சில ஆலோசனைகள் :
    பிரச்சினை என்பதைவிட அதை சவால் என்று எடுத்துக் கொள்ளுங்கள். எதிர்கொள்ளும் தைரியம் அதிகமாகும். கடந்த காலத்தில் நீங்கள் பிரச்சினைகளைச் சந்தித்திருப்பீர்கள். அவை நிரந்தரமாக நின்றுவிடாமல் எப்படியோ தீர்க்கப்பட்டிருக்கும். இதை மனத்தில் கொண்டு வந்தாலே பாதி டென்­ன் குறைந்துவிடும்.
    தானாக அமையாவிட்டாலும், நீங்களாக முயன்றாவது ஒரு நெருங்கிய நட்பு உறவு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். பிரச்சினை என்று வரும்போது இந்த வட்டத்தின் காரணமாக மனத்தில் ஒரு தனி தெம்பு உண்டாகும். மேலும், விரைவாக பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அதிர்ச்சி, குழுப்பம் என்பதெல்லாம் உடனடியாக ஏற்படும்தான். ஆனால், இவை ஒருபோதும் தீர்வை அளிக்காது. சீக்கிரமே சீரான மன நிலையை அடைந்து பிரச்சினையை நேருக்கு நேர் சந்திக்கத் தயாராகுங்கள். சில பிரச்சினைகைள கண்டு கொள்ளாமல் விட்டால் அவையே எப்படியாவது சரியாகிவிடும். எனவே ஒரு பிரச்சினைக்கு நீங்களாகத் தீர்வு காண முயற்சிப்பதற்கு முன் இந்தக் கோணத்தையும் யோசித்து  பார்ப்பது நல்லது.
Fr. S. John Kennedy

No comments:

Post a Comment

Ads Inside Post