Pages - Menu

Wednesday 11 November 2015

22-11-2015 கிறிஸ்து அரசர் பெருவிழா

I. தானி 7 : 13 -  14 ; II. தி.வெ. 1 : 5 -  8
நற்செய்தி : யோவா. 18 : 33 -  37
               முடியரசு மறைந்து குடியாட்சி கோலோட்சும் இக்காலத்தில் இன்னும் சில நாடுகளில் பாரம்பரிய மன்னர்கள், அவர்களின் வழிமரபினர், அவர்களின் பாரம்பரியம் கவனமாகப் பாதுகாக்கப்படுகிறது. அவர்கள் காட்சிப் பொருளைப் போல வலம் வருகிறார்கள். இங்கிலாந்தின் தற்போதைய அரசி, எலிசபெத் 63 ஆண்டுகள் அரசியாக இருந்து வரலாறு படைத்திருக்கிறார். ஹாலந்து, பெல்ஜியம், ஜப்பான், தாய்லாந்து ஆகிய வளர்ந்த  நாடுகளிலும் அரச பாரம்பரியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்து அரசி, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளுக்கும் அரசியாக விளங்குகிறார். அரச வாரிசு பிறந்து விட்டால் அதனை பெரிதாக கொண்டாடுகிறார்கள். இயேசு அரசர் என்று இயேசுவின் தலைமை வழி நடத்துதலை இன்று கொண்டாடுகிறோம். முதலில் இயேசு விண்ணகம் சென்ற விழாவை கிறிஸ்து அரசர் பெருவிழாவாக கொண்டாடினார்கள். 1925இல் பதினோராம் பியுஸ் என்ற திருத்தந்தை அக்டோபர் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையில் இவ்விழாவைக் கொண்டாட ஆணையிட்டார். ஆனால் 1965இல் திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் செய்த திருவழிபாட்டு சீர்த்திருத்தத்தில் திருவருகைக் காலம் தொடங்குவதற்கு முந்தைய ஞாயிறன்று இவ்விழாவை குறித்தார்.
               இன்றைய நற்செய்தியில், பிலாத்துவின்முன் உண்மையைப் பற்றி இயேசு கூறுகின்ற விளக்கத்தைப் பார்க்கின்றோம். “உண்மையை எடுத்துரைப்பதே என் பணி, இதற்காகவே நான் பிறந்தேன், இதற்காகவே உலகிற்கு வந்தேன்.” (யோவா 18 : 37) என்கிறார் இயேசு.
யோவான் நற்செய்தியில் பல இடங்களில் இயேசு உண்மைக்குச் சாட்சியம் அளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (யோவா 5 : 33, 8 : 40 -  45, 46). இயேசுவின் சீடர்களும் அந்த உண்மையை இயேசுவிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள் (யோவா 14 : 6 ; 17 : 17 -  19). இயேசு உண்மையின் உருவம். சாத்தான் பொய்மையின் உருவம். உண்மை என்பதற்கு எபிரேயத்தில் ஏமெத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏமெத் என்றால் பிரமாணிக்கம் என்று பொருள். கடவுளுடான உறவில் உடன்படிக்கையில் உறுதியாயிருப்பது. இயேசு இறை உறவில் உறுதியாய் இருந்தார். அதே உறவில் வாழ தன் சீடர்களை அழைத்தார். எனவேதான், “என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள். உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்என்றார் (யோவா 8 : 32). நம் நாட்டின் தலைவர்கள் சுயநலத்தின் வேர்களாக விளங்குகிறார்கள். பொய்மையின் தாய்நாடாக வாழ்கிறார்கள். மருந்துவிற்கும் ஏஜெண்ட்டைப் பார்த்து, “எப்படி வியாபாரம் செய்கிறாய்?” என்று ஒருவர்¼ கேட்டார். “கையிலேயே பை, கழுத்திலே டை, வாயிலே பொய்என்றார். ஓர் ஊருக்கு அரசியல்வாதி சென்றார் அங்குஇந்த ஊருக்கு பாலம் கட்டித் தருவேன்என்றார். அவருடைய செயலர், “இங்கு ஆறே இல்லை சார்என்றார். “புதிதாக ஆறு கொண்டு வந்தால் போகிறதுஎன்றார் தலைவர். பொய்மையின் தலைநகராக விளங்குகிறார்கள் நம் தலைவர்கள். கிறிஸ்து அரசர் கொண்டு வந்த அரசு
உண்மையின் அரசு, நீதியின் அரசு. உண்மையுடன் வாழ்ந்து, இறையாட்சியை உலகில் நிலவிட செய்வோம்.

-  அருட்பணி. S.I. அருள்சாமி

No comments:

Post a Comment

Ads Inside Post