Pages - Menu

Saturday 25 February 2017

வெற்றி உங்கள் கையில்...

வெற்றி உங்கள் கையில்..

- அருட்திரு. எஸ். ஜான் கென்னடி
,பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

விழித்தெழுந்த விழுமியங்கள்

இந்த உலகமே தமிழ்நாட்டை திரும்பி பார்க்க வைத்தார்கள் நம் இளைஞர், இளம்பெண்கள். ஆம் ஜனவரி 17ஆம் தேதி நம் இளைஞர்கள், இளம் பெண்கள் ஆரம்பித்த அறவழிப் போராட்டம் ஜல்லிக்கட்டு விளையாட்டு நிரந்தர சட்டமாக ஆக்கப்பட்டதற்கு அடிப்படை காரணமாக இருந்தது. இலட்சக்கணக்கான மாணவ, மாணவியர்கள் கூடிய அந்த அமைதி  போராட்டத்தில் எந்தவித வன்முறையும் நிகழவில்லை. அவர்கள் கைகளில் தடியோ, அரிவாளோ, கத்தியோ, துப்பாக்கியோ, வெடிகுண்டோ, கற்களோ இல்லை. ஆனால் மனதில் இலட்சியம் இருந்தது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்பட்டது. விழுமியங்கள் விண்ணை தொடும் அளவிற்கு அவர்கள் இதயத்தில் இடம் பிடித்திருந்தது. அவர்களின் வெற்றிக்கு காரணம் அவர்கள் செயலில் வெளிப்படுத்திய அறவழி மதிப்பீடு னிலிrழியி Vழியிற்eவி என்பதை யாருமே மறுக்க முடியாது. யார் இதை அவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள்? யார் இவைகளை அவர்களுக்கு வழங்கினார்கள்? ஆம்! நம் பெற்றோர்களும், ஆசிரியர்களும், உறவினர்களும், நண்பர்களும் என்று சொன்னால் அது மிகையாகாது.  இந்த போராட்டத்தினால் நாம் பெற்றுக்கொண்ட வெற்றி கனிகள் பல. அவற்றுள் சிலவற்றை உங்கள் முன் படைக்கின்றேன்.
வீட்டில் அம்மாக்கள் “உன் இடத்தை  சுத்தமா வெச்சுக்க மாட்டியா” எனக் கேட்ட பொழுது எளிதாக எடுத்துக்கொண்ட இளைஞர்களும், இளம்பெண்களும், சாப்பிட்டு  போட்ட  குப்பைகளை அப்புறப்படுத்தினார்கள். டிராபிக் போலீஸ் மாதிரி டிராபிக்கை ஒழுங்கு செய்தார்கள். போராட்டக் களத்தில் “தண்ணி இந்தாங்க சிஸ்டர்”, “சாப்பாடு இந்தாங்க பிரதர்னு” சகோதரத்துவத்தை வளர்த்தாங்க. பீட்சா கார்னர்களில் செல்ஃபிகள் எடுத்த இந்த இளைய தலைமுறை இன்று அந்த செல்ஃபிகளை நினைத்து வெட்கப்படுகிறது. ‘இனி  உங்கள் வாசலை மிதிக்க மாட்டோம்’ என்ற சூளுரை வேறு. இரவு பகல் பார்க்காமல் பனி, வெயில் பார்க்காமல் கொசுக்கடியில் தூங்கி எழும் ஒவ்வொருத்தரும் வீட்ல அம்மா மறந்து போய் ஆல்‡அவுட் ஆன் பன்னலைன்னாக்கூட கொசுக்கடிக்காக கடிந்து கொள்ளும் கோபக்காரர்கள்தான். பெண்களைப் பாதுகாத்த விதம் ஆயிரம் இல்லை ... இல்லை... எண்ணிக்கைக்கு அடங்காத லைக்ஸ் அவர்களுக்கு, ஒரு ராயல் சல்யூட்டும் கூட. உணவு பொட்டலங்களை முதல்ல அவங்க சாப்பிடறேன்னு சொல்லாம, சில இளைஞர்களை அழைத்து “உள்ளே இருப்பவர்களுக்கு கொடுத்துட்டு வந்திடலாம் வாங்க ப்ரோ” என்றனரே, வளரும் குழந்தைகளிடையே பகுத்துண்ணும் பழக்கத்துக்கு காக்கையை எடுத்துக்காட்டா சொல்லாதீங்க. இந்தப் பசங்களைச் சொல்லுங்க. அந்நிய குளிர்பானங்களை புறக்கணிப்புச் செய்யனும்னு வாய் வார்த்தையா சொல்லாம, களத்துக்குள்ள செய்தும் காட்டியது இந்தப்படை.
பீச்சில் கூடையில் பிஸ்கெட், சுண்டல், சோளம் எல்லாம் இலவசமாகவே தந்த பாட்டித் தாத்தாக்களும், வரும்போதே 4 பிஸ்கெட் பாக்கெட் வாங்கிட்டு வந்து பக்கத்துல இருக்கிறவங்களுக்கும் கொடுத்த தாய்க்குலங்களும், பெண்களுக்கு தேவைப்படுதுன்னு எங்கிருந்தோ கொண்டு வந்து மொபைல் டாய்லெட் வைத்தவர்களும், பச்சிளங் குழந்தையோடு வந்தவர்களுக்கு குடையும், போர்வையுமாய் ஆதரவு தெரிவித்து ரெஸ்ட் எடுக்க வைத்த தம்பிகளும் ... அட ... அட ... அட ... நம்ப ஊறா இதுன்னு புல்லரிக்க வெச்சிட்டாங்க. இது எழுச்சிப்போராட்டம் என்பதைத்தாண்டி இது ஒரு நெகிழ்ச்சிப் போராட்டம் என்று உண்மையிலேயே உணர வச்சிட்டாங்க. மேற்கண்ட நிகழ்வுகளில் எல்லாம் இந்தப் போராட்டம் வெற்றியை பதிவு செய்தது. நாமும் அந்தப் படையோடு இணைந்து விழுமியங்களை விதைப்போம். வெற்றிகளை அறுவடை செய்வோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post