Pages - Menu

Saturday 2 July 2016

சர்க்கரை நோய்க்கு இயற்கை மருத்துவம்

இயற்கை மூலிகை மருத்துவம்

-ம.இராசரெத்தினம்.ஆடுதுறை.
இயற்கை மருத்துவ சங்கம்.

சர்க்கரை நோய்க்கு இயற்கை மருத்துவம்

தண்ணீர் குடித்தல் :

சர்க்கரையே சொல்லுமடா கரை என்னை என்று
நீ அக்கறையோடு கரைத்திட்டால் உன் குறை என்ன?
சர்க்கரைதான் கரைத்திட்டால் கரையாதோ?
கரைந்திட்டால் உன் குறை யாது?

காலை எழுந்தவுடன் 1 லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் குடித்து வந்தால் மருந்தில்லாமல் சர்க்கரை நோய் தீரும். காலை 4 1/2 அல்லது 5 மணிக்கு குடிக்கவும்.

தண்ணீர் குடிக்கும் முறை சித்தர் பாடல் :

1.தண்ணீர் அண்ணாந்துண்டால் சாரும் செவி மந்தம்
கண்ணக் குனிந்துண்டால் காசமுண்டாம் ‡ தண்ணீர்
குடிக்க வென்றால் பாத்திரத்தை வாயால்
கடிந்து அருந்த துன்பம் அரும் காண் ‡ சித்தர் பாடல்

2. ஆசார கேணி நீர் அருந்திட
வீசு சூடு பசி மெய்காந்தல் மாசூளை
மெய்யுள்வலி இடைதுளைப்பான் வீழ்
மயக்கம் - சோவை பித்தம்
பைய வரம் ஈனையாகும் போம் - அகஸ்தியர்

3. தூங்கி எழுந்தவுடன் சுத்தோதம் அருந்த
ஏய்கி நின்ற பித்தம் ஒழிவதன்றித் தேங்கும்
மலம் மூத்திரம் தங்கா வாதாதி தத்தம்
தல மாத்திரம் உலவும் காண் - தேரையர்.

சுத்தோதம் : சுத்தமான தண்ணீர்
 வாதாதி : வாத, பித்த, சிலேத்துமம் (மூன்று நாடி)
அதிகமான அளவு தண்ணீர் குடிக்க சர்க்கரை நோய் தீரும்.

4. சர்க்கரை நோய்க்கு ஆரைக்கீரை : தின்றாலும் உருசிதரும் தீராப்பயித்தியத்தை
பொன்றாத நீரழிவைப் புண்ணீரை என்றும் இந்த ஊராரைச் சாராமல் ஓட்டுவிடும் - நாலிதழார்
நீராரைக் கரையது நீ

இந்த கீரை வயல்களில் கிடைக்கும். நீராரைக் கீரை நீரைக் கட்டும் குணமுடையது. சத்து மிகுந்த கீரை. உடலுக்கு உரம் தரும். அதிக தாகம் தீரும். குடித்த நீரெல்லாம் சிறுநீராகசன கழியும். அடிக்கடி சிறுநீர் போகும். பித்தரோகம் கபாலத்தைப் பற்றிய நோய்கள் போகும். உடல் உஷ்ணத்தை குறைக்கும். சிறுநீரில் இரத்தம் போதலைக் கட்டுப்படுத்தும். சர்க்கரை வியாதிக்கு மிகவும் நல்லது. அதிக சிறுநீரைக் குறைத்து அளவோடு போக செய்யும். தேக புஷ்டியை உண்டாக்கும். நாவிற்கு இனிப்பாக இருக்கும். பைத்தியத்தை குணமாக்கும். நீரழிவு நோய் உள்ளவர்கள் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக குணமாகும். இலையை பச்சையாகவோ, சமைத்தோ சாப்பிடலாம். பொடி செய்தும் சாப்பிடலாம். பச்சையாக, சமைக்காமல் சாப்பிடுவது நல்லது.

நாவல் கனிகளை சாப்பிடலாம். கொட்டையை பொடி செய்து காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிடடு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும். மேலும் வெந்தயம் - 500 கிராம், ஓமம் ‡ 200 கிராம், காட்டுசீரகம் ‡ 100 கிராம், கருஞ்சீரகம் - 100 கிராம், பிளவு சீரகம் ‡ 50 கிராம் (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்). அவற்றை வெயிலில் காய வைத்து பொடியாக இடித்து காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் எட்டு நாளில் சர்க்கரை நோய் குணமாகும். பொடியை வாயில் போட்டுக் கொண்டு 1/2 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.

சர்க்கரை நோய்க்கு வல்லாரைக்கீரை :

அக்காரை நோய் அகலும் வயிற்றிழவு
தக்க ரத்தக்கடுப்பு தானேகும் பக்கத்தில்
வல்லாரையும் மருந்து என்றேயுரைத்து தன் மனையுள்
வல்லாரையை வளர்த்து வை

சர்க்கரை நோய் அகலும், வயிற்றுப்போக்கு தடுக்கும்
இரத்தக்கடுப்பு தானே போகும். ஞாபக சக்தி வளரும். இதற்கு சரஸ்வதி மூலிகை என்று பெயர்.

No comments:

Post a Comment

Ads Inside Post