Pages - Menu

Tuesday 26 July 2016

11. வெற்றி உங்கள் கையில்...

11. வெற்றி உங்கள் கையில்...

 அருட்திரு. எஸ். ஜான் கென்னடி,
M.A., M.Ed., M.Sc, M.Phil, PGDCA, NET, Ph.D,
பூண்டி புதுமை மாதா கல்வியியல் கல்லூரி, சமயபுரம்

சிரித்தால் சிறப்பு வரும்

நகைச்சுவை உணர்வு மனித குலத்துக்கு இறைவன் கொடுத்த பெரும் கொடை. ஏன் மற்ற உயிரினங்களுக்கு இது இல்லை? மனம்  என்பது  மனித  இனத்திற்கு மட்டும் தான் உண்டு. இதற்கு ஆதாரம்  சிந்திக்கும் சக்தி. சிந்திக்கும் சக்திக்கு ஆதாரம் பகுத்தறிவு. இந்த  பகுத்தறிவு  மனிதனுக்கு மட்டுமே உண்டு. பகுத்தறிவு கத்தியைப் போன்றது. அதனால் நல்லதையும் செய்யலாம் கெட்டதையும் செய்யலாம். ஒருவருக்கு நல்ல குணம் மேலோங்கி இருந்தால் நல்லவர் எனவும், கெட்ட குணம் மேலோங்கி இருந்தால் கெட்டவர் எனவும் அழைக்கிறோம். இப்படி நல்லதும், கெட்டதும் கலந்திருக்கும் மனிதர் தனது கெட்ட குணத்தால் பல துன்பங்களுக்கு ஆளாகிறார். அத்துன்பங்கள் மனதில் இறுக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த இறுக்க நிலையில் இருந்து எப்படி மீள்வது? அதற்குத்தான் கடவுள்  மனிதனுக்கு நகைச்சுவை  உணர்வைக் கொடுத்து  இருக்கிறார். ஒருவர் அழகான தோற்றத்தோடு ‘உம்’ என்று இருந்தால் யாரும் அவரை விரும்ப மாட்டார்கள். அதே சமயம் தோற்றப்பொலிவு இல்லாமல் நன்றாக, நகைச்சுவையாக பேசுபவர்களை கவனியுங்கள். அவர்களுக்கு நிறைய நண்பர்கள், தோழர்கள், தோழிகள் இருப்பார்கள். மற்றவர்களை எளிதாக கவர்ந்து வாழ்வில் வெற்றி பெறுவார்கள். இனிமையாய் பழகுவதற்கு முதல் ஆயுதம் நகைச்சுவை தான். இதனைச் சரியான நேரத்தில் பயன்படுத்துவோர் வாழ்வில் வெற்றி காண்பர்.

நாம் சிரிக்கும்போது 43 தசைகள் இயங்குகின்றன. அதிலும் இரத்த நாளங்கள் அகலப்படுத்தப்படுகின்றன. ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் உடலில் ஒவ்வொரு செல்லுக்கும் அனுப்பப்படுகிறது. இதன் மூலம் உடல் ஆரோக்கியம், மன தைரியம், ஆன்மீக பலன், உறவுகள் பலப்படுத்தப்படுதல் போன்றவைகள் நிகழ்கின்றன.

பெரும்பான்மையோர் பல கவலைகளால், தொல்லைகளால் பெரும்பாலும் இறுக்கமாக இருப்பார்கள். மருந்துக்குக் கூட சிரிக்க மாட்டார்கள். இவர்களுக்கு வெற்றி கனி கிடைப்பது அரிது.

உங்களுக்கொன்று தெரியுமா? மனித இனங்களிலேயே யூத இனத்திற்கு தான் நகைச்சுவை உணர்வு அதிகம். அவர்களுடைய ஜோக்குகள் புத்திசாலித்தனமாகவும், அர்த்தமுள்ளதாகவும் பிறர் மனதை புண்படுத்தாததாகவும் இருக்கும். இதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? உலகத்தில் உள்ள பல இனங்களில் யூத இனம் தான் மிகவும் கஷ்டப்பட்ட இனம். அந்த துன்பத்தையும், துயரத்தையும், மன இறுக்கத்தையும் குறைக்க அவர்கள் கையாண்ட யுத்திதான் நகைச்சுவையுடன் பேசுவது. இந்த  நகைச்சுவை  உணர்வு மட்டும் இவ்லையயன்றால் அவர்கள் இனம் எப்போதோ அழிந்திருக்கும்.

நண்பர்களே! சார்லி சாப்ளின் மற்றும் னிr.பீன் தங்களின் நகைச்சுவை உணர்வு மூலம் உலக அளவில் வெற்றியாளர்களாக வலம் வந்தவர்கள். இவர்கள் தங்களின் நகைச்சுவையால் மக்களின் மனதில் இடம் பிடித்தவர்கள். அதேபோல் நம் தமிழ்நாட்டிலும் கலைத்துறையைச் சார்ந்த சந்திரபாபு, தங்கவேல், நாகேஷ், சுருளிராஜன், என்னத்த கண்ணைய்யா, மனோரமா, கோவைசரளா, ஜனகராஜ், குமரிமுத்து, கவுண்டமணி, செந்தில், வடிவேல், விவேக், புரோட்டா சூரி, சந்தானம் இவர்கள் தங்களின் நகைச்சுவையால் மக்களின் இதயத்தில் குடிகொண்டவர்கள். இவர்களின் நகைச்சுவை உணர்வே வெற்றியின் ரகசியமாகும். பட்டிமன்றப் பேச்சாலும், தங்களின் நகைச்சுவை உணர்வாலும் மக்கள் மனதை கொள்ளைகொண்ட நகைச்சுவை பேச்சாளர்களான ‘நகைச்சுவை தென்றல்’ திண்டுக்கல் ஐ.லியோனி, சாலமன் பாப்பைய்யா, சுகிசிவம், ராஜா, பாரதிபாஸ்கர் போன்றவர்கள் மக்கள் மனதில் இடம் பிடித்து வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள்.

கலைத்துறையில் மட்டுமல்ல நம் அன்றாட வாழ்வில் பள்ளிகள், கல்லூரிகள், குடும்பம் போன்ற இடங்களிலும் கூட தங்களுடைய வெற்றிக்கு முக்கிய காரணம் நகைச்சுவை உணர்வு தான் என்று கூறுகிறார்கள்.

வீடுகளிலும் மக்கள் இயந்திரத்தனமான வாழ்க்கையில் நகைச்சுவை  உணர்வை பெற ஆதித்யா, சிரிப்பொலி, போகோ, நிக் போன்ற தொலைக்காட்சி சானல்களை விரும்பி பார்க்கிறார்கள்.

நாமும் நம் அன்றாட வாழ்வில் மன இறுக்கத்தை  குறைத்து  நகைச்சுவை  உணர்வை  அதிகப்படுத்தி வெற்றியாளர்களாக  வலம் வருவோம். “உன் மனம் வலிக்கும்போது சிரி, பிறர் மனம் வலிக்கும்போது சிரிக்க வை” ‡ சார்லி சாப்ளின்.
நாநலம் என்னும் நலனுடமை அந்நலம்
          யாநலத்து உள்ளதூம் அன்று (குறள் 641)

No comments:

Post a Comment

Ads Inside Post