Pages - Menu

Saturday 2 July 2016

காமமும், காதலும், சிறுகதை

காமமும், காதலும் -  சிறுகதை

- திருமதி. கேத்ரின் ஆசா,
திருச்சி.

(திருமதி. கேத்தரீன் ஆசா அவர்களுக்கு, திருவரங்கம் இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு ‘இயற்றமிழ் செம்மணி’ என்ற விருதினை சென்ற 31 / 5 / 2016 அன்று வழங்கி பாராட்டியிருக்கிறது. அன்னையின் அருட்சுடரில் கதைகள் , கட்டுரைகள் எழுதி சிறப்பிக்கும் கேத்தரீன் ஆசா அவர்களை அன்னையின் அருட்சுடர் பாராட்டி வாழ்த்தி மகிழ்கிறது),

இரவு மணி 12. காலையில் வேலை தேடி போன கணவன் சதீஷ் இரவு 12 மணி வரை காணவில்லை என்றபோது மஞ்சக்கு நெஞ்சுக்குள் ஏதோ அடைப்பது போல இருந்தது. வரநேரம் ஆகுமென்றால், போன் செய்திருக்கலாமே. போனும் செய்யாமல், ஆளும் வராமல் இருந்தால், ஒருவேளை, அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்குமோ? ஆக்சிடென்டில் மாட்டியிருப்பாரோ? பலவாறு மனதை போட்டு குழப்பிக் கொண்டிருந்தாள் மஞ்சு. கொஞ்ச நேரம் பொறுத்துதிருந்து பார்ப்போம். அவன் செல்லுக்கு போன் செய்தால் சுவிட்ச் ஆஃப் என்று வருகிறது. ஆக்சிடென்ட் ஏதும் நடந்திருந்தால் ஆஸ்பத்திரியிலிருந்து அவன் செல்லிலிலிருந்து எனது பெயரை கண்டுபிடித்து போன் செய்திருப்பார்களே! என் நம்பரை ஹனி என்றுதானே சேவ் செய்திருக்கிறான்.

மணி 4 ஆகிவிட்டது. இன்னும் வரவில்லை. ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று மனசு சொல்லுதே. சதீ´ன் தேனான வார்த்தைகளை நம்பி  நகை, பணத்தோடு வீட்டை விட்டு இவனோடு ஓடி வந்தது, எவ்வளவு தப்பு என்று இப்போது புரிகிறது. அப்போது காதல் கண்ணை மறைத்துவிட்டதே. ஐம்பது பவுன் நகையும் போய், பணம் ஒரு இலட்சம் அப்பா பீரோவில் இருந்து எடுத்து வந்ததும் தீர்ந்து, இப்போது செலவுக்கு கையில் காசில்லாத போது சதீசும் என்னைவிட்டு ஓடிவிட்டான் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. பத்தாதத்துக்கு மூன்று மாசம் கர்ப்பம் வேற. ஐயோ! கடவுளே, நான் இப்ப என்ன செய்வேன். கடந்த ஒரு வாரமாவே சதிசோட போக்கு சரியில்லை. வேளை கிடைக்காத விரக்தியில் அப்படி செயல்படுகிறான் என்று நான் நினைத்தது எவ்வளவு தப்பு. அறிமுகம் இல்லாத இந்த ஊரில் என்ன செய்வது? எல்லாம் என்னோட அறியாமை மட்டும் இல்ல, என் அப்பாவும், அம்மாவும்தான் காரணம் என்று பழியை அவர்கள் மேல் போடத் தோன்றியது.

அப்பா அலுவலகத்தில் அவருடன் வேலை பார்க்கும் பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை தெரிந்து கொண்டு அப்பாவிடம் சண்டை போட்டுக் கொண்டு, அம்மா வீட்டை விட்டு போனது மட்டும் இல்லாமல், மின் வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் அம்மா, சென்னைக்குப் போனதும் எங்களை, என் அண்ணனையும், என்னையும் கவனிக்க ஆளில்லாமல் வாடிப்போனோம்.

அப்பா தனது புது உறவுடன் சந்தோ­மாக ஊர் சுற்ற வீட்டின் நிலைமை தலைகீழாகனது. எங்கள் வீட்டுக்கு பேப்பர் போடும் சதீ´டம் எனக்கு ஈர்ப்பு வந்ததும், அவன் என் மேல் காட்டிய பரிவும், அன்பும் என்னை ஏமாற வைத்தது. கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு அவனுடன் வாழலாம் என்று முடிவெடுத்தபோது என்னை தடுக்கவோ அறிவுரை சொல்லவோ யாருமே இல்லாததால், தன்னிச்çயாக நானே முடிவெடுத்து, வீட்டிலுள்ள பணம், நகைகளை எடுத்துக் கொண்டு கேரளா சென்று புதுவாழ்க்கை தொடங்கலாம் என்ற முடிவு  இப்போது பாதியிலேயே அறுந்து போனபோது என்னை தேற்ற யாரும் இல்லை.

நேரம் போய்க் கொண்டிருக்கிறது. அப்பேது என்ன செய்யலாம் என்று எனது மனம் குழம்பியது. அண்ணன் ஆனந்துக்கு போன் செய்து உதவி கேட்கலாம் என்றால், அவனது செல் நம்பரும் மாறியிருக்கிறது. அவன் எனக்கு முன்பே, டாக்டரான அவனுடன் வேலை பார்க்கும் முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்து கொண்டு போய்விட்டான். இப்பேது என்ன செய்வது? என்ற சிந்தனையோடு எழுந்தேன்.

காலையிலிருந்து சாப்பிடாமல் சிந்தித்துக் கொண்டெ இருந்ததால் களைப்பாக இருந்தது. இன்னொரு உயிருக்கும் நான் உணவூட்டும் நிலையில் இருந்ததால் என் நிலைமை இன்னும் மோசமானதால் என் கையிலுள்ள பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே சென்று சாப்பிடலாம் என்று எழுந்து நடந்தேன். உலகமே சுத்துவதுபோல் ஓர் உணர்வு, நான் கண் விழித்துப் பார்க்கும்போது ஒரு மருத்துவமனையின் கட்டிலில் படுத்திருந்தேன். 

எனக்கு என்ன நடந்தது, நான் கண்விழித்தபோது என்னருகில் நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் பார்வதிசேச்சி அமர்ந்திருந்தாள். அவர்களை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.
‘என்ன மோளே! சுகமில்லையோ! எங்கே நிண்ட பாரியான் சதீஷ்’ அவர்கள் கேட்கும் முன் என்னை அறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது. என் நிலைமை நான் சொல்லாமலே அவர்களுக்கு புரிந்து இருக்கும். வயதானவரின் அனுபவ அறிவு என் கதையை சொல்லாமலே புரிய வைத்துவிட்டது போலும். ‘கரிய வேண்டாம் மோளே, யானே சதீஷ்யை பற்றி உன்னிடம் சொல்லனும்ன்னு நினைச்சது. நேற்றே அவன் வீட்டு அட்வான்ஸ் பணம் 50 ஆயிரத்தையும் கொடுக்கச் சொல்லி கேட்டுது. வீடு காலி செய்யப் போறதா சொன்னது. நான் இன்று வீடு காலி செய்த பின்னே கொடுக்கலாம் என்று வீட்டை பார்த்து போக வந்தப்ப நீ கீழே விழுந்து கிடந்ததை பார்த்து ஆஸ்பத்திரியில சேர்த்தது’.

‘மேலும் ஒரு துக்க விசயம் மோளே! டாக்டரம்மா உன்னோட குழந்தை கரைஞ்சிப் போயிட்டதா சொன்னா! சோகம் வேண்டாம் எல்லாம் நல்லதுக்கே. பெரிய டாக்டர் இப்பவரும்ன்னு சொல்லி இருக்க, அவர் வந்து உன்னோட தேக சுகம் பற்றி சொன்னபிறகு போகலாம்’.

“சரி சேச்சி, நான் செஞ்ச தப்புக்கு இது சரியான தண்டனை”. “இதோ பெரிய டாக்டர் வர்றார்”. பெரிய டாக்டராக வருவது தனது அண்ணன் ஆனந்த் என்பதை மஞ்சுவால் நம்ப முடியவில்லை. இப்படி ஒரு நிலைமையில் தன் தங்கை மஞ்சுவை பார்ப்போம் என்று ஆனந்தும் நினைக்கவில்லை.

“அண்ணே! என்னை மன்னிச்சிருங்க. தப்புக்கு கடவுள் தண்டனை குடுத்துட்டாருண்ணே” மஞ்சு விம்பினாள். “மஞ்சு நான் எடுத்த முடிவும் தப்பா போயிடுச்சி. என்னை மதம் மாறச் சொல்லி அவளது குடும்பம், கட்டாயப்படுத்திய போதுகூட நான் கலங்கவில்லை. நம் குடும்பத்தைப் பற்றி தரக்குறைவாகப் பேசி மனச நோகடிச்சதை என்னால் தாங்கிக்க முடியல. நிம்மதி இல்லா வாழ்க்கை, அவளை பிரிஞ்சி வந்துட்டேன். என் மருத்துவ கல்லூரித் தோழனை சந்திக்க நேர்ந்தது. அவன் பொறுப்பை எங்கிட்ட ஒப்படைச்சிட்டு அவன் லண்டன் போயிட்டான். குடும்பத்தோடு அங்கேயே செட்டில் ஆயிட்டான். அவன் அவனோட அப்பா, அம்மா, அக்கா, தங்கையோட சந்தோ­மாக, சமாதானமா இருக்கிறதை நான் பார்த்தப்ப என்னோட குற்ற உணர்வு குடும்பத்தை விட்டு பிரிஞ்சு வந்தது தப்புன்னு புரிஞ்சிது. நம்ப குடும்பத்திலேயும் பொறுமையும், சகிப்புத்தன்மையும் ஒத்துமையும் இருந்திருந்தா நாமும் இப்படி பிரிஞ்சி கஷ்டப்பட்டிருக்க மாட்டோம்”.

“ஆமாம் அண்ணே! அப்பா செய்த தப்பை மன்னிச்சி குடும்ப ஒற்றுமைதான் முக்கியம், பிள்ளைகளோட எதிர்காலம் தான் முக்கியம்ன்னு அம்மா நினைச்சிருந்தா இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது”.

“ஆமாம் மஞ்சு! இதுல எல்லாருடைய தப்பும் இருக்கு”. “அப்பாவை பார்த்தீங்களா அண்ணே?” “சொல்ல மறந்துட்டேனே, அப்பா இந்த ஆஸ்பத்திரியிலத்தான் இருக்கார். பத்து நாளைக்கு முன்னாடி அப்பாவுக்கு ஸ்ட்ரோக் வந்திருச்சி. அப்பவோட இருந்த பெண் அப்பாவை விட்டுட்டு ஓடிருச்சி. அப்பா ஆபீஸ்லேயிருந்து எனக்கு போன் செஞ்சாங்க. நான் போய் அப்பாவை அழைச்சிக்குட்டு வந்து இந்த ஆஸ்பத்திரியிலேத் தான் ட்ரீட்மென்ட் குடுத்துக்குக்கிட்டு இருக்கேன்”.

“அம்மாவுக்கு தெரியுமா?” “அம்மாவுக்கும் அவுங்க ஆபீஸ் மூலமாக தகவல் குடுத்தேன். அவுங்களும் பழசை மறந்திட்டு இங்க வந்து அப்பாவை கூடயிருந்து பார்த்துக்கிறாங்க”. “அப்படியா! கேட்கவே சந்தோ­மா இருக்கு, உடனே நான் அம்மாவையும், அப்பாவையும் பார்க்கனும்”. மஞ்சு சந்தோ­த்தில் கட்டிலிலிருந்து குதிக்க, “மஞ்சு! மெதுவா வா அவசரம் இல்ல”.

“சரி அண்ணே!” “சேச்சி உங்களுக்கு ரொம்ப நன்றி. உங்க மூலமாகத்தான் என் குடும்பத்தோட சேர்ற பாக்கியம் கிடைச்சது”. “சரி மோளே! இனிமே எந்த தப்பும் செய்யாம குடும்பத்தோட சந்தோ­மாக, சமாதானமாக ஜீவிக்கனும்”.

ஆனந்தும், மஞ்சுவும், அப்பாவையும், அம்மாவையும் பார்க்க ஐசியு வார்டுக்குள் போனார்கள். வாழ்வில் காமத்திற்கும், காதலுக்கும் உள்ள பொருளினை குடும்பமே உணர்ந்துக் கொண்டது. இனி திருந்திய இந்த குடும்பத்திலே சதீசும், பானுவும் நுழைய முடியாது. இவர்கள் கூடி ஒற்றுமையாக எடுக்கும் எந்த முடிவும் தெளிவானதாகவும், அன்பானதாகவும் இருக்கும்.
“வண்ணங்களில் இல்லை வாழ்க்கை, எண்ணங்களில் தான் இருக்கிறது, ஒற்றுமையில் தான் உயர்கிறது”.

No comments:

Post a Comment

Ads Inside Post