Pages - Menu

Sunday 21 February 2016

இயற்கை மூலிகை மருத்துவம், ம.இராசரெத்தினம்.ஆடுதுறை.

இயற்கை மூலிகை மருத்துவம்

ம.இராசரெத்தினம்.ஆடுதுறை.
இயற்கை மரு-த்துவ சங்கம்.

உஷ்ணத்தால் முடி உதிர்ந்து வழுக்கையாகி விட்டதா - கண்ணே
உன் பாட்டி நானிருக்கேன். மருதாணிப் பூவை
தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து வெயிலில் காய வைத்து
தேய்த்து வர வழுக்கை தலையில் முடிவளரும்

உன் மூலம் போகும் என் மூலம் - கண்ணே
வன்மூலம் போகும் என் உரை மூலம்
நின்மூலம் போகும் நீர்மூலம் (தண்ணீர் குடித்தால்)
நீ ஆவாய் நிர்மூலம்

தூங்கி விழித்தவுடன் தண்ணீர் அருந்த - கண்ணே
ஓங்கு நின்ற பித்தம் ஒழிவதின்றித் தேங்கும்
மலம் மூத்திரம் தங்கா வாதாதி தந்தம்
நல மாத்திரம் உலவும் (சித்தர் தேரையர்)

ஒருநாள் முழுவதும் வயிறு உப்பிக் கொண்டதா - கண்ணே
சிறுநீர் கழிக்கவில்லையா? பயப்படாதே
வெள்ளரி விதையை பாலில் அரைத்துக் கொடுக்கட்டுமா?
மண்பட்டி அடிவயிற்றில் போடவா? நீர் அடைப்பு குணமாகும்

படையைப் பற்றி கவலைப்படாதே - கண்ணே
பொன்னாவரை வேருடன், சந்தனம் சம எடை கூட்டி
அரைத்து படைகள் மேல் தடவி வந்தால்
ஆறு நாளில் படை உதிர்ந்து மறைந்துவிடும்

தண்ணீரை அண்ணாந்து குடித்தால் சாரும் செவி மந்தம் - கண்ணே
கண்ணக்குனிந்து உண்டால் காசம் உண்டாகும் - தண்ணீரைக்
குடிக்க வென்றால் பாத்திரத்தை கோதரவே
இடித்து அருந்த துன்பம் அறும்

படுக்கமுறை தைரியம் வேண்டும் - கண்ணே
காலை நீட்டி படுக்கவும் குடதிசை தலையை வைத்து (மேற்கே)
குணதிசை காலை நீட்டி தென் திசை இலங்கை மாநகர் பார்த்து
வடதிசை புறங்காட்டி படுக்கவும் (குண திசை - கிழக்கு)

உண்ணத் தகுந்த காய்கறி பழங்களை - கண்ணே
வண்ணச் சுடரில் வைத்து சமைக்காமல் - உண்ணத்
தொல்லைத் தரும் வியாதிகள் அனைத்தும்
மெல்லப் போகும்

வாதவலி போக்கும் வற்றிய பால் சுரக்கும் - கண்ணே
மாதருது அழுக்கை மாற்றிவிடும் ‡ வயிற்றில்
தப்பாது தட்டை கிருமியறும்
பப்பாளியை உண்டு பார்

சுண்டி இழுக்கும் பொடி இருமலுக்கு - கண்ணே
சண்டி முருங்கை சாறுடன் தேன் கலந்து கொடுக்கவா?
இருதினங்கள் சாப்பிட்டால் போதும்
பொடி இருமல் நொடியில் போகும்

கை, காலில் படரும் கருமேகத்திற்கு - கண்ணே
கை பக்குவமாக துத்தியிலை சாறுடன் பால் கலந்து
கொடுக்கட்டுமா? பத்து நாட்களில் கருமேகம், வெடிப்பு
காணாமல் மறைந்து விடும்

கலகலப்பாக இருந்த நீ - கண்ணே
கப வாந்தி எடுக்கிறாயா - திருநீற்றுப்
பச்சிலைச் சாறு இருபத்தைந்து மி.லி குடித்தால்
கபவாந்தி சாந்தியாகிவிடும்

மூத்திர எரிச்சலா? நீர் கடுப்பா? மூலக் கொதிப்பா - கண்ணே
ஆத்திரப்படாதே ‡ நன்னாரி சாறு தரட்டுமா
நாள்பட்ட நோயாக இருந்தாலும்
நன்னாரி சாறுபட்டதும் தீரும்

நாயுருவி கட்டை (தண்டினால்) பல் விளக்கி வந்தால் - கண்ணே
நாட்பட்ட பல்வலி தீரும்
முகவசீகரமும், கவர்ச்சியும் உண்டாகும்
உடல் ஆரோக்கியம் உண்டாகும்

நாவல் வித்தை பாலில் அரைத்து உண்டால் - கண்ணே
நீரிழிவு, மூலக் கட்டிகள், கிரானி போக்கு தீரும்
நாவப்பட்டை சூரணத்தை எருமை தயிரில் உண்டால்
காசநோய் தீரும்

புத்தாண்டுதனில் புத்துணர்வோடு
முத்தாம் கிருத்துவத்தையும்
இயற்கை மருத்துவத்தையும் இணைத்து
முறையாக அறிவோம்.

No comments:

Post a Comment

Ads Inside Post