Pages - Menu

Friday 4 May 2018

காவிரி நீரா? கானல் நீரா?

காவிரி நீரா?  கானல் நீரா?

பேராசிரியர், முனைவர் எஸ்.பி. பெஞ்சமின் இளங்கோ ., M.A.; B.L.; M.Phil.; Ph.D.

இந்தியாவையே காவிரிமயமாக்க கார்ப்பரேட்டுகளின் அனைத்து நிதியுதவியோடு அசுர முயற்சிகளில் இறங்கியுள்ள பாரதிய ஜனதா கட்சியின் வருவாய் கடந்த இரண்டு நிதியாண்டுகளில் 81.18 விழுக்காடு அளவாக, அதாவது ரூ.1034.27 கோடியாக உயர்ந்திருப்பதுதான் அக்கட்சியின் ஒப்பாரும் மிக்காரும் இல்லா சரித்திர சாதனை! அதே நேரத்தில் விவசாயிகள், சிறுபான்மையினர், தலித்துகள், ஒடுக்கப்பட்ட அடித்தள பாட்டாளிகள், வறுமைக்கோட்டிற்கு கீழே வாடி வதங்கும் வறியோர், ஆதரவற்றோர், முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்களுக்காகவும், மத நல்லிணக்கம், மதச்சார்ப்பின்மை, இந்தியாவின் பன்முகத் தன்மை ஆகியவற்றைப் பாதுகாக்க  பாடுபடும் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் வருவாய் 14 விழுக்காடு. அதாவது ரூ.225.36 கோடியாகக் குறைந்துள்ளது. இத்தகைய சூழலில்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் பல்வேறு முட்டுக்கட்டைகளை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு ஏற்படுத்தி வருகின்றது.

“வான் பொய்ப்பினும் தான் பொய்யாத” பொன்னி நதி என்றழைக்கப்படும் நமது காவிரி நீர் நமது கண்களுக்கு மட்டும் காட்சியளிக்கும் கானல் நீராகி போய்க்கொண்டிருக்கும் அவலநிலை நம்மை உறைய வைக்கும் உண்மைக் காட்சியாகிக் கொண்டிருக்கிறது. அரசியல் சூதாட்டம் என்ற அரக்கக் குரங்கின் கைப்பட்ட, பூமாலையாக, காவிரிப் பிரச்சினை இன்று சின்னாபின்னமாக்கப் பட்டு வருகின்றது. மக்கள் தொகையில் 55 விழுக்காடு மக்கள் தம் வாழ்க்கையின் ஆதாரமாகக் கொண்டு ள்ள விவசாயத்துறையைச் சார்ந்த தமிழக விவசாயி களின், பொதுமக்களின், பொக்கி­மாக, வாழ்வாதார மாக விளங்கிவரும் காவிரி அன்னை. இன்று சுயலாபம், ஓட்டுவங்கி, லாபம், மொழிவெறி, ஏழைகளைச் சுரண்டும் முதலாளித்துவம், வட்டார அரசியல், மனிதநேயமற்ற அதிகார ஆணவம், வடக்கு, தெற்கு என்று இந்திய ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் காவிரி மதவெறி ஆகிய சமூக விரோத சக்திகள் அனைத்தும் கைகோர்த்து, காவிரி அன்னையை கர்நாடகத்துக்குள்ளேயே சிறை வைக்கத் திட்டமிட்டு, நீதியின் குரலையும் அறவே மதிக்காமல்,  சதிராட்டம் ஆடுவது, “வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது”, என்ற பேரறிஞர் அண்ணாவின் எச்சரிக்கை சங்கநாதத்தை மீண்டும் மீண்டும் ஒலிக்கச் செய்துள்ளது. தமிழகத்தில் அனைத்து விவசாய அமைப்புகளும், எதிர்கட்சிகளும், இளையோர் அமைப்புகள், திரைப்படத் துறையினர் மற்றும் தமிழகப் பொது மக்களும் கனன்றெழுந்து, அறவழிப்போராட்டங்களையும், கடையடைப்பையும், காவிரி நதிநீர் உரிமைப் பயணம். ஐபிஎல் போட்டியை தடைசெய்ய ஆர்ப்பாட்டம், சென்னை வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டுவது என்று மத்திய அரசின் மெத்தனப் போக்கை எதிர்த்து ஒட்டுமொத்த எதிர்ப்பை தமிழகம் காட்டி வருகின்றது. கர்நாடகத்தில் சட்டப்பேரவை நடப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மேலும் கூடுதலாக 3 மாதங்கள் அவகாசம் தேவைப்படுகின்றது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற, “செயல்திட்டம்” விஉஜுeதுe ஒன்றை, 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. தமிழக அனைத்துக் கட்சி கூட்டத்தில் உடனடியாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. கர்நாடக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விதிக்கப்பட்ட 6 வார கால அவகாசம் நிறைவடைந்தது. கடைசி நாளில் மத்திய அரசின் நீர்வளத்துறை, மத்திய சட்ட அமைச்சகத்திடம் செயல்திட்டம்” (Scheme) என்பதற்கு நிறைய விளக்கங் கள் இருக்கின்றன என்றார். எனவே, “செயல்திட்டம்” (Scheme)  என்றால் என்ன என்று விளக்கமளிக்க மத்திய அரசின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் விளக்கமனு தாக்கல் செய்தார். சட்ட ஒழுங்கையும் இரு மாநில நட்புறவையும் கவனத்தில் கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமா? அப்படி அமைக்கபட வேண்டுமென்றால் உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கூடுதலாக 3 மாதங்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும், காவிரி மேலாண்மை வாரியத்தின் பணிகள் என்ன, அதன் அதிகாரங்கள் என்ன? எவ்வாறு செயல்பட வேண்டும்? காவிரி மேலாண்மை வாரியத்தின் நிர்வாக, தொழில்நுட்ப அம்சங்களை மாற்றியமைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? என்பதையும் உச்சநீதிமன்றம் தெளிவு படுத்த வேண்டுமெனவும், மத்திய அரசின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விளக்க மனுவில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த விளக்க மனுவின் கேள்விகள், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் முட்டுகட்டையாகி விடுமோ என தமிழக மக்களின் மனங்களில், நம்பிக்கையற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், பிரதமர் மோடியைச் சந்தித்து வாரியம் அமைக்க வலியுறுத்த நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி பிரதமர் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. மார்ச் 9 ஆம் தேதி மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் நடத்திய கலந்தாலோசனைக் கூட்டத்திலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தமிழக சட்டப்பேரவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தின் சார்பில் இது குறித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு மூன்று கடிதங்களும் அனுப்பப்பட்டன. தமிழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 நாட்களாக நாடாளுமன்றத்தை முடக்கினர். உச்சநீதிமன்றத் தீர்ப்பை வேண்டுமென்றே மார்ச் 29 ஆம் தேதிக் கெடுவுக்குள் மத்திய அரசு நிறைவேற்றாமல் அவமதித்து விட்டதாகவும், மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தமிழக அரசு தொடுத்துள்ளது.

177.25 டி.எம்.சி. காவிரி நதிநீரை உடனடியாக தமிழகத்துக்கு வழங்கவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீட்டுள்ளது. 2007 இல் காவிரி நடுவர் மன்றம் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கிய 192 டி.எம்.சி. என்பதை  177.25 டி.எம்.சி ஆகக் குறைந்தது உச்சநீதிமன்றம். பெங்களூரின் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டும் தமிழகத்தின் நிலத்தடி நீரைக் கணக்கில் கொண்டும் தமிழகத்தின் நீர்ப்பங்கீட்டிலிருந்து 15 டி.எம்.சி. தண்ணீரை ஒப்பந்த விதிமுறைகளுக்கு மாறாக உச்சநீதிமன்றம் கர்நாடகத்துக்கு ஒதுக்கியுள்ளதாக சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர். தமிழகத்தின் நிலத்தடி நீரைக் கணக்கிட்ட உச்சநீதிமன்றம் ஏன் கர்நாடகத்தின் நிலத்தடி நீரைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது. பெங்களூர் நகரின் நீர்த்தேவை யைக் கவனத்தில் கொண்ட உச்சநீதிமன்றம் ஏன் தமிழக நகரங்களின் நீர்த்தேவைகளை அதே அக்கறையுடன் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் மர்மமாக உள்ளது. 2007 ஆம் ஆண்டில் தனது இறுதித் தீர்ப்பை முறையாக அமல்படுத்த, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகிய இரண்டும் மிகவும் இன்றியமையாதவை என்று குறிப்பிட்டுள்ளது. இதே காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, விரிவாக யாரெல்லாம் காவிரி மேலாண்மை வாரியத்தில் அங்கம் வகிக்க வேண்டும். அவர்களை நியமிக்க, அடிப்படையான அவர்களது துறைசார் தகுதிகள், அனுபவம் மற்றும் அந்தஸ்து தகுதிகள் பற்றி எடுத்துரைத்துள்ளது. ஆக காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்படவில்லை எனில் 2007 ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் வெளியிட்ட இறுதித் தீர்ப்பு வெற்றுக் காகிதமாகவே நிலைத்துவிடும் என்ற எச்சரிக்கையையும் இறுதித் தீர்ப்பு வெளியிட்டிருந்தது. “செயல்திட்டம்” விஉஜுeதுe என்ற சொல்லின் விளக்கம் “வல்லான் வகுத்ததே வாய்க்கால்” என்ற பாணியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பாதகமாக அமைந்துவிட்டால், தமிழக விவசாயம், குடிநீர்த் தேவைகளுக்குப் பயன் தரவேண்டிய காவிரி நீர், கானல் நீராக மாறிவிட வாய்ப்புகள் அதிகரித்துவிடும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைந்து விட்டால் கர்நாடகச் சட்டமன்றத்  தேர்தலில் பாரதிய ஜனநாய கட்சி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துவிடும் என்று அஞ்சி, காவிரி மேலாண்மை வாரியம் அமைவதற்கு இத்தகைய நயவஞ்சகமான குள்ளநரித்தன தயக்கத்தையும், இழுத்தடிப்பையும், காலங்கடத்தும் அரசியல் கபட நாடகத்தையும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடத்திவருவது மிகவும் கண்டனத்துக்குரியது.

மனித நேயத்திற்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும், இந்திய அரசியல் நிர்ணயச் சட்டத்தின் நெறிமுறைகளுக்கும் அப்பாற்பட்டு மத்திய அரசு சென்றுவிடாமல், இனியாவது உச்சநீதிமன்றம்  ‘விஉஜுeதுe’    அல்லது “செயல்திட்டம்” என்பது காவிரி மேலாண்மை வாரியம் தான் என்று வலுவாகத் தன் தீர்ப்பில் தெளிவுபடுத்தினால் தமிழகமே நன்றியுடன் அத்தீர்ப்பை உளமாற வணங்கி வரவேற்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. உச்சநீதிமன்றத்தின் இந்த இறுதித் தீர்பபை, “மத்திய அரசு நடைமுறைப் படுத்தாத பட்சத்தில், தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசு தலைவருக்கு தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான உத்தரவை அளிப்பதற்கான அதிகாரமும் உச்சநீதிமன்ற த்துக்கு உண்டு” , என்று உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு கூறியிருப்பதையும், தமிழக அரசு தீவிர கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர், இந்திய ஜனநாயக அமைப்பையும், கூட்டாச்சி முறையின் மாண்பையும் காக்க வேண்டிய தலையாய கடமையாக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.

1 comment:

  1. The Casino & Hotel - Mapyro
    The Casino & Hotel in 고양 출장샵 Las 영천 출장마사지 Vegas, Nevada is one of the most recognizable places 김제 출장안마 in the world. 김제 출장마사지 Located on 217 acres in the 포항 출장안마 heart of the Las Vegas Strip,

    ReplyDelete

Ads Inside Post