Pages - Menu

Tuesday 1 May 2018

பாஸ்கா காலம் 6 ஆம் ஞாயிறு

பாஸ்கா காலம் 6 ஆம் ஞாயிறு

திப 10: 25,26,34,35,44-48; 1யோவான் 4:7-10;   யோவான் 15: 9-17
06-05-2018
பாளை ஜெமி
அன்பா? அறிவா?
உலகையே சிரிக்க வைத்தவர் சார்லி சாப்லின்! அவர் உண்மையான நண்பர் யாரென்பதற்கு இவ்வாறு விளக்கம் தருகிறார். ‘எவனொருவன் மழையிலே நனைந்தவாறு அழுகின்ற நண்பனின் கண்ணீரை மழை நீரிலிருந்து வித்தியாசப்படுத்தி, அத்துன்ப வேளையில் துணை நிற்பாரோ அவரே உண்மையான நண்பன்’ என்கிறார். நண்பகர்ளுக்கு மத்தியில் அன்பு இருத்தல் வேண்டும். அந்த அன்பு உள்ள இடத்தில் துன்பம் இருத்தல் வேண்டும். அப்போதுதான் அந்த அன்பு உண்மையானது எது என நீருபனமாகும். அத்தகைய உண்மை அன்பை வெளிப்படுத்திய உயிர்த்த ஆண்டவரைப் பற்றிய இன்றைய  இறைச்சிந்தனை, ‘இயேசுவின் அன்பில் நிலைத்திருக்க வேண்டும்’ என்பதாகும்.

அன்பிற்கு இலக்கணமாய் பெற்றத்தாயை விட வேறு யாரையும் ஒப்புமைப்படுத்த இயலாது. ஆனாலும் அத்தாயினும் மேலாக (எசாயா 49:15) நான் உன்னை அன்பு செய்கிறேன் என்று தன் உயிரை நமக்காக கொடுத்து வாழ்ந்துக் காட்டியவர் ஆண்டவர் இயேசுகிறிஸ்து. யோவான் 4:16இல் கடவுள் அன்பே உருவானவர் என்றுள்ளது. அதாவது இறைவன் அனைத்து விதமான அன்பின் வெளிப்பாடாக இருப்பதை அது சுட்டிக்காட்டுகிறது. இறைவன் ஒரு தந்தையின் நிலையில், ஒரு தாயின் நிலையில், நமக்கு மிகவும் நெருக்கமானவர்களின் நிலையில் பொருத்திக் காட்டினாலும் இன்றைய நற்செய்தியில், ஒரு நண்பனின் அன்பிற்கு தன் அன்பை இணைத்துக் காட்டுகிறார் இயேசு.

தத்துவவியல் அறிஞர் ஹராலிக்டஸ் என்பவர், ‘மாற்றம் என்பது உண்மையே, ஒவ்வொரு நொடிபொழுதும் மாறிக் கொண்டேயிருக்கின்றன’ என்ற கருத்தினை, ‘யாரும் ஓடுகின்ற ஒரே தண்ணீரில் கால் வைக்க இயலாது’ என்கிறார், (No one can step into the same water). மாற்றமும் என்பது நியதியாயினும் ஆண்டவர் இயேசு நம்மில் வைத்திருக்கின்ற அன்பிலே எந்த விதமான மாற்றம் இல்லை. ஆகவே தான் யோவா 15:9 இல் எனது அன்பில் நிலைத்திருங்கள் என்று அன்போடு கூறுகிறார். 
உண்மையான அன்பு விலை போகாது. 
போலியான அன்புக்கோ   சாயம் பொய்த்துப் போகும். 
அன்பு உள்ள இடத்தில் தியாகம் இரட்டைக்கிழவி. 
அத்தியாகம் இல்லா அன்பு முற்றும்  (ஒற்றை) பிழை ‡ இத்தகைய அன்பினை வெளிப்படுத்தவே இன்றைய நற்செய்தி வாசகத்தில், ‘நான் உங்களைப் பணியாளன் என்று சொல்லமாட்டேன். காரணம் தலைவன் செய்வது இன்னதென்று பணியாளனுக்கு தெரியாது? அவர்கள் இருவருக்குமிடையே அன்பு என்ற பிணைப்பு இடம் பெறாத நிலை. நானோ உங்களை என் நண்பர்கள் என்றேன். இரு நண்பர்களுக்கிடையே அன்பு இருப்பது போல, நான் உங்கள் மீது கொண்ட அன்பினை என் உயிரை ஈந்து உறுதிப்படுத்தியுள்ளேன்.’ அதனைத்தான் வாழ்க்கை அனுபவத்தின் வாயிலாக யாரிடம் எப்படி பேசுவது என்று பெரியோர்கள் கூறுவதுண்டு. 
‘தாயிடம் அன்பாகவும், தந்தையிடம் பண்பாகவும், சகோதரியிடம் பாசத்தோடும், சகோதரனிடம் அளவோடும், குழந்தைகளிடம் செல்லமாகவும், கடவுளிடம் மெளனமாகவும், நண்பர்களிடம் மனம் விட்டும் பேச வேண்டும்’ என்று கூறுவார்கள். அவருடைய நண்பர்களாகிய நம்மிடத்தில் எதிர்பார்ப்பது, அவர் நம்மை அன்பு செய்வதுபோல, பிறரை நாம் அன்பு செய்ய வேண்டுமென்பதே. இதனையே புனித அன்னை தெரஸா, ‘கண்ணுக்கு தெரிந்த மனிதரை அன்பு செய்யாவிட்டால், ஊனக் கண்களுக்குத் தெரியாத கடவுளை அன்பு செய்தும் பயனில்லை’ என்று கூறுகிறார். 
இரண்டாம் வாசகமும் (1யோவா 4:7‡10) ‘அன்பு செய்பவர்கள் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்’ என்று குறிப்பிடுகிறது. இயேசுவும் நம்மிடத்தில் கூறுவது இதுதான். நீங்கள் என்னை அன்பு செய்கிறீர்கள் என்றால், என் கட்டளைகளைக் கடைபிடியுங்கள் இதிலேதான் அன்பிற்கும், அறிவிற்கும் இடையே உள்ள வேறுபாடு விளக்கம் பெறுகிறது. என் தாய் தந்தையை நான் அறிவேன் என்பது எனக்குள்ள அறிவு. ஆனால் அவர்களின் நிலையறிந்து, வயது முதிர்ந்த காலத்திலே அவர்களுக்கு உறுதுணையாய் இருந்து அவர்களை காப்பாற்றுதல் என்பது எனது கடமையும், அதனினும் மேலான அன்புமாகும். அதுபோன்று, இயேசுவை நான் அறிந்திருப்பது மற்றவர்களைப் போல நானும் பெற்றிருக்கின்ற அறிவு அது. ஆனால் அவர் சொல்கின்றவாறு அவரது கட்டளைகளைக் கடைபிடிப்பது அவர்மீது நாம் கொண்டுள்ள அன்பு.
  ஆக, இந்த அன்பு எங்கே ஆரம்பிக்கிறது? எப்படி தொடங்குகிறது என்ற கேள்விக்கு, புனித அன்னை தெரஸாவின் பதிலே, பொருத்தமாக அமையும்.அன்பானது நமது வீட்டிலே, குடும்பத்திலே ஆரம்பிக்கின்றது. நாம் ஒன்றாக கூடி செபிப்பதிலேதான் அன்பு வலுப்பெறுகின்றது என்று கூறுகிறார். மேலும் ‘அன்பு செலுத்து என்று யாரோ கட்டளை இட்டது போல் குரல் கேட்கிறது’ என்று 17 வயதான ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல், தனது குடும்பத்தால் திருமணத்திற்கு வற்புறுத்தப்பட்டபோது, ‘என் மனதில் ஒரு விதை விழுந்திருக்கிறது, அதற்கு விடை கிடைத்தப் பின்னரே, திருமணம்,  என்று கூறி செபத்தின் வழியாக, ‘அன்பு செலுத்துங்கள்... காலம் குறைவாகவே இருக்கிறது’, என்று தேவாலய சுவரில் இருந்த வாசகம் அவரை சிந்திக்க வைத்தது. 
வாழ்க்கையில் அன்பான உறவு கிடைப்பது முக்கியமல்ல, வாழ்நாள் முழுவதும் அன்பாக இருக்கிறதே முக்கியம். ஆக, நம்மில் அன்போடு நிலைத்துள்ள ஆண்டவர் இயேசுவின் அன்பில் நிலைத்திருக்க ஒருவரையயாருவர் அன்பு செய்வோம். 

‘ஒருவரிடம் உள்ள சிறந்த பண்புகளை வெளிக்கொணர உதவுபவனே சிறந்த நண்பன்’ ‡ யஹன்றி போர்டு

‘நீ நீயாகவே வாழ அதற்குறிய சுதந்திரத்தை தருபவரே உற்ற நண்பர்’ ‡ ஜிம்மோரின்

‘உன் தோல்விகளை பொருட்படுத்தாது உன் வெற்றிகளை தாங்கி நிற்பவர்தான் உயர்ந்த நண்பர்’ ‡ கடக் லார்சன்

No comments:

Post a Comment

Ads Inside Post