Pages - Menu

Tuesday 4 July 2017

பணிவு என்னும் இனிய பாதை அருள்பணி. மகுழன், பூண்டி மாதா தியான மையம்

பணிவு என்னும் இனிய பாதை

அருள்பணி. மகுழன், 
பூண்டி மாதா தியான மையம்

என் எழுத்தை வாசிக்கிறவர்கள் என்னிடத்தில் கேட்கிற கேள்வி, உங்கள் கதைகள் எங்கிருந்து உங்களுக்கு கிடைக்கின்றன? நான் அவர்களிடத்தில் சொல்வேன். பல கதைகள் நான் வாசிக்கும் புத்தகங்களில் இருந்து எடுப்பேன். 
(வாசிப்பது வாழ்வின் நடுப்பகுதியாக மாறும்போது வாழ்வில் மகிழ்ச்சி கூடுகிறது). ஒரு சில கதைகளை நான் கேட்டதிலிருந்து பகிர்ந்து கொள்வேன் என்பேன். அதுபோல நான் கேட்ட ஒரு கதை இது.

அந்த இளம் தம்பதி அந்த குடியிருப்புப் பகுதிக்கு புதிதாக குடிவந்தனர். காலை எழுந்தவுடன் கணவர் காபி குடித்துக் கொண்டே ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். அப்போது மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டு தன் மனைவியிடத்தில், “என்ன இந்தப்பகுதி மக்கள் சுத்தத்தை சுத்தமாக மறந்து விட்டார்கள்” என்று சொன்னார். அடுத்த நாள் காலையும் எழுந்தவுடன் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். “இந்த பகுதி மக்கள் குளிப்பதே இல்லை போலிருக்கிறது. எவ்வளவு அழுக்காக இருக்கிறார் கள்”என்று  தன் மனைவியிடத்தில் அலுத்துக் கொண்டார். மூன்றாம் நாள் காலையிலும் கணவர் எழுந்தவுடன் ஜன்னல் வழியே பார்த்தார். குப்பை கூளங்களை கண்டவுடன் அவருக்குக் கோபம் வந்துவிட்டது.  ‘இந்த மக்களைப் போல அசுத்தமான மக்களை நான் பார்த்ததே இல்லை’ என்று தன் மனைவியிடம் முறையிட்டார். அப்போது அந்த இளம் மனைவி என்னதான் நடக்கிறது என்று வந்து ஜன்னலைப் பார்த்தார். ஜன்னலைப் பார்த்தவுடன் அதிர்ந்து விட்டார். ஜன்னலின் கண்ணாடிகள் துடைக்கப்பட்டு பல மாதங்கள் இருக்கும். எங்கும் ஒட்டடை. அந்த அழுக்கான ஜன்னல் வழியாகப் பார்த்ததால் அந்த கணவருக்கு அனைத்தும் அழுக்காய் தோன்றின. உடனே ஒரு துணியை எடுத்து வந்து துடைத்தாள். அப்போது கணவன் வெளியே பார்த்து விட்டு,  “மக்கள் நன்றாக தூய்மையாகத்தான் இருக்கிறார்கள். நான்தான் தவறாக நினைத்து விட்டேன்” என்று வருத்தமுற்றார். 

பணிவு அல்லது தாழ்ச்சி என்பதன் பொருளை பலவிதங்களில் நாம் விளக்கலாம். அதில் ஒன்று பணிவு என்பது  உண்மையான வி­யங்களை, உண்மையான மனப்பான்மையோடு பார்ப்பது.
* நான் கடவுள் அல்ல, கடவுளின்  சிறு படைப்பே என்று ஏற்றுக்கொள்வது.

* என் வாழ்வில் துன்பங்கள் மட்டுமல்ல. அல்லது, என் வாழ்வில் மகிழ்ச்சி மட்டுமே நிஜமல்ல. இன்பமும், 
 துன்பமும், வெற்றியும், தோல்வியும், இருளும், ஒளியும் என் வாழ்வில் தோன்றி மறையும் என்று உணர்வது.

* நான் 100% நல்லவன் அல்ல. அறிவாளி  அல்ல. திறமை மிகுந்தவன் அல்ல. என்னிடத்தில் குறைகள் உண்டு. அதைப்போல மற்றவர்களிடத்திலும் ஏராளமான நன்மைகள் உண்டு.  (அந்த கணவரைப் போல) நாம்தான் அதனை புரிந்து கொள்வதில்லை. மற்றவர்களிடத்தில் உள்ள சிறிய குறைகளைக் கூட நாம்தான்  பெரிதுபடுத்துகிறோம்.

* என்னுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு முன்பாக கடவுளின் திட்டத்திற்கு நான் செவிசாய்க்க வேண்டும். அதற்கு நான் அவரிடத்தில் செல்ல வேண்டும். அவரோடு  பேச வேண்டும். அமைதியில் வாழ வேண்டும். 

இந்த உலகில் வாழும் மனிதருள் பெரும்பாலும் (90 சதவீதத்திற்கு மேல்) ஆணவம்தான் அவர்களை ஆட்சி செலுத்துகிறது. ஆனால் ஒரு சில நேரங்களில் தாழ்வுமனப்பான்மையும் ஒரு சிலரை  ஆட்டிப் படைக்கிறது. எனக்கு திறமை இல்லையே, என்னிடத்தில் எல்லாவிதமான பாவங்களும் இருக்கின்றனவே, என்னை யாரும்  அன்பு செய்வதில்லையே என்று ஒரு சிலர் தம்மை தாழ்வாகக் கருதி பிறரை உயர்வாக எண்ணி வாழ்வார்கள். இவர்கள் செய்யும் மிகவும் தீமையானக் காரியம், இவர்களும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். மற்றவர்களையும் மகிழ்ச்சியாக இருக்கவிட மாட்டார்கள். கட்டாயம் நாம் அனைவரும் பாவிகள். நாம் அனைவரும் தவறு செய்கிறோம். நாம் பாவத்தை விலக்குவதற்கு சிரமப்படுகிறோம். நம்மிடத்தில் நல்லப் பண்புகள் அதிகம் இல்லை. நாம் ஒரு சிலரைப் போன்று திறமையானவர்கள் இல்லை.

ஆனால் இவை நம்மை நாம் தாழ்வு மனப்பான்மை என்னும் படுகுழியில் தள்ளுவதற்கு  (றீeயிக்ஷூ- க்ஷிற்துஷ்யிஷ்ழிமிஷ்லிஐ)   அழைத்து செல்லக் கூடாது. மாறாக இவை  உண்மையான தாழ்ச்சிக்கு (க்ஷிற்துஷ்யிஷ்மிதீ) அழைத்து செல்ல வேண்டும். கடவுளின் அருள் இருந்தால்தான்  நாம் முழுமை அடைவோம் என்ற புரிதலுக்கு நம்மை அழைத்துச் செல்ல வேண்டும். என்னோடு வாழ்பவர்கள் எனக்கு முக்கியம். அவர்களோடு நல்உறவோடு நான் வாழ வேண்டும். அவர்களின் நல்வாழ்விற்கு என்னால் இயன்ற உதவிகளை நான் புரிய வேண்டும் என்ற நல்மனப்பான்மைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.     
      
           “குழந்தாய், பணிவிலே நீ  பெருமை கொள். உன் தகுதிக்கு ஏற்ப உன்னையே நீ மதி. தங்களுக்கு எதிராகவே குற்றம் செய்வோரை நீதிமான் காண யார் கணிப்பர்?” தங்கள் வாழ்வையே மதிக்கத் தெரியாதவர்களை யார் பெருமைபடுத்துவர்?   ( சீஞா 10: 28‡29).

ஜான் கிறிஸ்டர் என்னும் அறிஞர் இவ்வாறு கூறுகிறார். பணிவு அல்லது தாழ்ச்சி என்பதின்  ஆங்கில பதம் “க்ஷிற்துஷ்யிஷ்மிதீ”,“க்ஷிற்துஷ்யிஷ்மிதீ” என்ற ஆங்கில வார்த்தை “க்ஷிற்துற்வி”என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து வருகிறது. க்ஷிற்துற்வி    என்றால் “நிலம்” என்று பொருகள். நிலம் தம்மை மிகவும் உயர்வாக எண்ணுவதில்லை. தம்மையே மிகவும் தாழ்வாகவும் கருதுவதில்லை. அதைப்போல பணிவு உள்ளவர்கள் அவர்களாக நடந்துகொள்வார்கள். அவர்கள் தங்களைப் பற்றி மகிழ்ச்சி  கொள்கிறார்கள். எனவே எப்படிப்பட்ட குழுவிலும் அவர்கள் மகிழ்ச்சியோடு உறவாட முடியும். ஏனென்றால் அவர்களுக்கு அவர்களைப்பற்றி  நன்குத் தெரியும். அவர்களைப்பற்றி  அவர்களுக்கு நன்குத் தெரிவதால் அவர்கள் வாழ்க்கை இலகுவாக இருக்கிறது. அதுமட்டுமல்ல அவர்கள் மற்றவர்களின் வழிகாட்டுதலுக்கு, மற்றவர்களின் கருத்துகளுக்கு திறந்த மனத்தோடுக் காத்திருக்கிறார்கள்.
          
   பணிவு மிக்கவர்களோடு சேர்ந்து  வாழ்வது ஓர் இனிய அனுபவம். ஏனென்றால் அவர்கள் வேடம் போடும் பரிசேயர்கள் அல்ல. மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தி தம்மை பெரியவர்களாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஒரு குழுவில் இருக்கும்போது தாங்கள் பெரியவர்கள் எனக் காட்டிகொள்வதில் கவனம் செலுத்தமாட்டார்கள். அவர்கள் அவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் அவர்களைவிடப் பெரியவர்களும் யாரும் இல்லை. சிறியவர்களும் யாரும் இல்லை. எல்லாம் சரிசமமாக கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள்.
( தொடரும்)... 

No comments:

Post a Comment

Ads Inside Post