Pages - Menu

Tuesday 4 July 2017

ஒற்றுமையே உயர்வின் வழி, அருட்பணி. ச.இ. அருள்சாமி

ஒற்றுமையே உயர்வின் வழி
அருட்பணி. ச.இ. அருள்சாமி

வாட்ஸ் அப்பில் ஓர் அற்புதமான காட்சியைப் பார்த்தேன். காட்டில், காட்டெருமை கன்று ஒன்றை பல சிங்கங்கள் சேர்ந்து பிடித்துவிட்டன. கன்றின்தாய் மற்ற காட்டெருமைகளை அழைத்து வருகிறது. காட்டெருமைகள் சிங்கங்களையும் முட்டி தூக்கியயறிகின்றன. அதனால் இளம் கன்று குட்டியை மீட்டு வருகின்றன.
நம் உடலின்பலம், நம் உடலின் பல உறுப்புகளும் ஒன்றிணைந்து செயல்படுவது. மனிதர் ஒன்றினைந்தால் எல்லையில்லா வல்லமையைப் பெறமுடியும். கோடிக்கணக்கான துகல்கள் இணைந்ததுதான் ஒருபாறை. துகல்கள் பிரியும் போது அது மணல்.

ஐரோப்பிய நாடுகள் இரண்டு உலகயுத்தங்களால் சீரழிந்தன. இப்போது ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து, ஐரோப்பிய ஒன்றியத்தை ஏற்படுத்தி, ஒரே நாணயம், திறந்த வர்த்தகம் என்று வெற்றி நடைப்போடுகிறார்கள். இங்கிலாந்து, இந்த ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்துக்கொண்டு, பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. 

ர´யாவின் கூட்டாள்ச்சி உடைந்து பலநாடுகளாகச் சிதைந்து, ர´யா தனது வல்லரசின் பெருமையை இழந்து நிற்கிறது. ஆசிய நாடுகள் ஒன்றிணைந்த இயக்கங்கள் உண்டு. ஆனால் போட்டிப் போட்டுக் கொண்டு பகைமையுடன்தான் வாழ்கின்றனர்.

இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, மியனமார்  ஆகியவை ஒருமித்த நாடுகளாக விளங்கலாம். ஆனால் ஒன்றிணையும் வாய்ப்புகளை ஏற்படுத்தாது, இராணுவத்திற்கு நிறைய செலவு செய்து, வளர்ச்சிப்படியில் செல்ல முடியாமல் நிற்கின்றன. மறைந்தத் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர், ‘குடும்பங்களைப் போல்தான் அவர்களின் நாடும் அமையும்’ என்கிறார். ஒற்றுமையின் ஆரம்பம் குடும்பங்களே. கணவன்‡ மனைவி - பிள்ளைகள் ஒருவரையயாருவர் புரிந்துக்கொண்டு ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாக வாழ முன்வர வேண்டும். குடும்பங்களில் நாம் பெறுகின்ற ஒற்றுமைதான் நாம் செல்லும் இடங்களிலெல்லாம் வெளிப்படும்

இந்தியா பலமொழிகளையும், வேறுபட்ட கலாச்சாரத்தையும் உள்ளடக்கிய நாடு. ஒன்றாக நிற்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். ஆனால் ஒற்றுமை உணர்வை சிதைக்கும் செயல்பாடுகள் நாட்டில் இடம் பெற ஆரம்பித்திருக்கிறது. நம் நாட்டின் ஒற்றுமை, வேற்றுமையில் நிற்கும் ஒற்றுமை. தனித்தன்மைகளுடன் இணையும் ஒற்றுமை. தனித்தன்மைகளை சிதைத்து, சுதந்திரத்தை புதைத்து ஒற்றுமையை காணும் தவறான சித்தாந்தத்தை

  ‘மாடுகளை இறைச்சிக்காக விற்கக் கூடாது’ என்ற வேண்டாத சட்டங்களை கொண்டுவந்து தங்களின் மதவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்த சூழ்ச்சியுடன் செயல்படுகிறது. இதனால் கேரளாவில் திராவிடம் என்றெல்லாம் பிரித்து பேச வாய்ப்பு ஏற்பட்டுவிட்டது. மதவாத கொள்கைக் கொண்டவரை இந்தியாவின் ஜனாதிபதியாக நிறுத்தி, நடுநிலையான நபரை நமதுநாட்டின்  முதல் மனிதராக பார்க்கமுடியாத அளவில் செய்து விட்டது மத்திய அரசு.

வேற்றுமையில் ஒற்றுமையில்தான் அழகே அமர்ந்துள்ளது என்கிறார், பெலிக்ஸ் மென்டை சோன். நமது கிராமங்களில் விழாக்கள் வழக்கமாக கலை கட்டுகின்றன. விழாக்கள் ஒற்றுமையின் மேலோட்டமான வெளிப்பாடு. நம் நாட்டின் பெரிய சாபக் கேடாக விளங்கும் ஊழலை, மக்களின் ஒற்றுமையினால்தான் வீழ்த்த முடியும். 

ஒற்றுமையை விளக்கும் ஒரு சிறு கவிதை  
மனிதா நீ என்னதான்
நாடு வீடு என்று பிரித்தாலும்
நம்மை தாங்கி நிற்பது பூமித்தாயே

No comments:

Post a Comment

Ads Inside Post