Pages - Menu

Saturday 29 April 2017

விழாக்கள் ஒரு பார்வை

விழாக்கள் ஒரு பார்வை

விழாக்கள் அழகு நிகழ்வுகள் என்று சொல்லலாம். கிறிஸ்தவர்கள்,  தங்கள் பங்கின் பாதுகாவலரின் விழாவை தங்களின் பங்குகளில் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். கொடி¼ற்றம், நவநாள்கள், தேர்பவனி, வானவேடிக்கைகள், மேளதாளங்கள் என்று சமூக கொண்ட்டமாக விளங்குகின்றன. விழாக்கள் மக்களை ஒன்றினைக்கும் பாலங்களாக, உறவுகள் இணையும் நாள்களாக விளங்குகின்றன.

           குடந்தை மறைமாவட்டத்தில் பாஸ்கா விழா முடிந்ததும், பங்குகள், பங்கு விழாக்களை கொண்டாடுகிறார்கள். பிரான்சு நாட்டு அருள்பணியாளர்கள் 17-18-ஆம்  நூற்றாண்டுகளில் பங்குகளை வழிநடத்திய போது உயிர்த்த இயேசுவின் மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக விழாக்கள் அமைக்கப்பட்டன. பாஸ்கா விழா கோடைகால துவக்கத்தில் அமைந்து வடுவதால், விவசாயத்தில் அறுவடையயல்லாம் முடிந்து , விழாக்கள் கொண்டாட ஏற்ற காலமாகி விட்டது.  உயிர்ப்பு ஞாயிறை அடுத்த ஞாயிறுலிருந்து பங்கு விழாக்கள் ஆரம்பமாகின்றன. கீழ்காணும் ஊர்களில் பாஸ்காவிழாவுற்குப் பிறகு விழாக்கள் கொண்டாடப் படுகின்றன.

 2 ஆம் வாரம்  - புதுக்கோட்டை, இருங்களுர்
 3 ஆம் வாரம்  - விரகாலூர்,  வந்தலை
4 ஆம் வாரம்  - ஏலாக்குறிச்சி, பெரியவர்சீலி, பாளையம்
 5 ஆம் வாரம்  ‡ குலமாணிக்கம், மேகளத்தூர், அன்னமங்களம், நடுவலூர், குமிழங்குடி 
 விண்ணேற்றவிழா 40 ஆம் நாள் விழா, புள்ளம்பாடி, கொன்னைக்குடி  
விழாக்களுக்கு மக்கள் வரி கொடுக்கிறார்கள். ரூ 100 முதல் 200 வரை ஊருக்கு ஊர் அவர்களின் தேவை, வசதிக்கேற்பக் கொடுக்கிறார்கள். ஊர் தலைவர்கள்  (நாட்டன்மை, காரியக்காரர்கள்) பொறுப்பேற்று நடத்துகிறார்கள்.   லால்குடி பங்கில் 400 குடும்பங்கள் குடும்பத்திற்கு ரூ 200/- வரி. ஆனால் பூ, மேளதாளம், ஒளி ‡ ஒலி அமைப்பிற்கு தனிதனியாக சிலர் பொறுப்பேற்கிறார்கள். இந்த பங்கில் வரிபணத்தில் செலவு போக வருடம் ரூ 30000/‡ சேமிக்கிறார்கள். அதனை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்கிறார்கள். இதனை மிகவும் பாராட்ட வேண்டும். இந்த முன்மாதிரிகையை மற்ற பங்குகளில் பின்பற்றலாம். 

 சில ஊர்களில், வான வேடிக்கைகளும், மேளதாளத்தற்கும் லட்ச கணக்கில் செலவு செய்கிறார்கள். கல்வி உதவி, பொது  தேவைகள் ஆகியவைகள் பற்றி கவலைபடுவதில்லை. பல இடங்களில் மதுபானம் ஆறாக ஓடி, அதன் விளைவாக அடிதடி ஏற்படுவதுண்டு.
    
 திருவிழாக்கள் மாப்பிள்ளை பெண்பார்க்கும் நாள்களாகவும் அமைந்து விடுகின்றன. பெந்த கோஸ்தே சபையினர், நம் விழாக் கொண்டாட்டங்களை கலைவழிபாட்டின் உச்சக்கட்டம் என்பர்.
 நம் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் வெளிகாட்டுவன   திருநாள்கள். தவறுகள் நடப்பதை  தடுத்து  நிறுத்தினால் விழாக்கள் அழகிய நிகழ்வுகளாகும்.

No comments:

Post a Comment

Ads Inside Post