Pages - Menu

Thursday 6 April 2017

ஏப்ரல் மாத புனிதர்கள்

ஏப்ரல் மாத புனிதர்கள்  

 அருட்சகோ.G.பவுலின்மேரி , FSAG
கும்பகோணம்
ஏப் . 5  புனித வின்சென்ட் பெரர் - மறைபணியாளர் (1350 - 1419)

இவர் ஸ்பெயினில் வலன்சியா நகரில் கி.பி 1350 இல் பிறந்தார். புனித தோமினிக் சபைத் துறவிகளுள் ஒருவராகி,  இறையியல் கற்றுக் கொடுத்தார். பல மாவட்டங்களுக்கும் சென்று , மறையுறைகள் நிகழ்த்தி , மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தினார். தவறான கொள்கைகளுக்கு எதிராக உறுதியுடன் வாதாடினார். இவர் கடுந்தவ முயற்சிகள் மேற்கொண்டார். ஒவ்வொரு நாளும் 4 மறையுறைகள் நிகழ்த்துவார்.சில நேரங்களில் 3 மணி நேரம் தொடர்ந்து உரையாற்றுவார். மறையுறைகளுக்கு நன்கு தயார் செய்வார். 1419 ‡ ல் ஏப்ரல் 5 - ஆம் நாள் பிரான்சு நாட்டில் வான் என்னும் இடத்தில் போதிக்கும் போது இறந்தார்.

ஏப் . 7  புனித ஜான் பாப்டிஸ்ட் ‡ மறைபணியாளர் (1651 - 1719)

  பிரான்சு நாட்டில் ரெய்ம்ஸ் நகரில் கி.பி. 1651 இல் பிறந்தார். மறைபணியாளராகிய பின், முக்கியமாக இளைஞர்களுக்குக்  கிறிஸ்தவ கல்வி புகட்டுவதற்கென்றும்,  ஏழைச் சிறுவர்களுக்காகப் பள்ளிகளை நிறுவதற்கென்றும்,  தம்மை முழுவதும் அர்ப்பணித்தார். தம்முடன் உழைத்த தோழர்களையயல்லாம் துறவற சபையினராக ஒன்றுசேர்த்தார். இச்சபையை ஏற்படுத்துவதற்காக பல்வேறு இன்னல்களைச் சந்தித்தார். இவரின் சபை உலகெங்கும் சபை பரவியது. நம் நாட்டிலும் இச்சபை பணியாற்றுகிறது.1719‡ல் பிரான்சில் ரூவான் என்ற இடத்தில் இறந்தார்.

 ஏப் . 11  புனித தனிஸ்லாஸ் ‡ ஆயர் , மறையாட்சி (1030 - 1079)

   போலாந்து நாட்டில் ஜெசப்பனாவில் கி.பி 1030 இல் பிறந்தார். பாரீஸ் நகர் சென்று படித்தார். பெற்றோர் இறந்ததும்  உடமைகளை விற்று  ஏழைகளுக்கு வழங்கிவிட்டு குருப்பட்டம் பெற்று ஊர் ஊராகச் சென்று நற்செய்தியை அறிவித்தார். 1071 இல் ஆயரானார். ஒரு நல்ல ஆயராய் இருந்து , திருச்சபையை வழிநடத்தினார். ஏழைகளுக்கு உதவினார். தம்மால் கண்டிக்கப்பட்ட போலஸ்ஸால் மன்னரால் 1079 இல் இவர் கொலை செய்யப்பட்டார்.

ஏப் . 13  புனித மார்ட்டின்  ‡ திருத்தந்தை, மறைசாட்சி (656)

இத்தாலியில் உம்பிரியா மாவட்டத்தில் உள்ள டோடி என்னுமிடத்தில் பிறந்தார். உரோமையின் மறைப்பணியாளர்களுள் ஒருவராகி , திருதந்தையாக கி.பி.649‡ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதே ஆண்டில் உரோமையில் ஒரு திருசங்கத்தைக் கூட்டி இயேசுவிடம் மனித இயல்பு இல்லை என்ற தவறான கொள்கையை கண்டித்தார். அதனால் இவரின் மன்னரால் 653 இல் சிறைப்படுத்தப்பட்டார். பின்பு கிரிமியாத் தீவில் உள்ள கெர்சோனுக்கு  நாடுகடத்தப்பட்டு அங்கு 656 இல் இறந்தார்.

ஏப் . 20 புனித ஒன்பதாம் சிங்கராயர் (1002 - 1059)

 இவர் தம் 25- ஆம் வயதில் ஆயராகி 20 ஆண்டுகள் மறைமாவட்டத்தை வழிநடத்தும் போது பல சவால்களை சந்தித்தார். தற்செயலாக திருயாத்திரையாக உரோமைக்குச் சென்ற போது, இவரை பாப்புவாக தேர்ந்தெடுத்தார்கள். திருச்சபையின் நலனுக்காக பல நாடுகளுக்குச் சென்று கிறிஸ்துவுக்கு எதிரான தவறான கருத்துகளை மறுத்து உண்மை கொள்கைகளை நிலைநாட்டினார். தகுதியற்ற குருக்களை பணியிலிருந்து நீக்கினார். பல நாடுகளின் ஆயர்களை ஒன்று சேர்த்து ஒரு திருசங்கத்தைக் கூட்டினார். அவரின் உரையை மக்கள் ஆர்வமுடன் கேட்டனர். எதிரிகள் இத்தாலி நாட்டின் மீது  படையயடுத்து வந்த வேளையில் இவரையும் கைது செய்து 9 மாதங்கள் சிறையில் வைத்தார்கள். விடுதலைப் பெற்றபின் பலர் இறந்திருப்பதை எண்ணி மிகவும் வருந்தினார். புனித இராயப்பர் பேராலயத்தின் நடுப்பீடத்தின் முன் உயிர் நீத்தார்.

ஏப் . 25  புனித மாற்கு - நற்செய்தியாளர்:

 இவர் பர்னபாவுக்கு நெருங்கிய உறவினர். திருத்தூதரான புனித பவுலின் முதல் மறை பயணத்தில் அவரோடு கூடச் சென்றவர். அவரின் மூன்றாம் பயணத்திலும் உரோமை வரையிலும் சென்றிருக்கின்றார். இவர் பேதுருவின் சீடர் என்ற பாரம்பரியம் உண்டு. எகிப்தில் உள்ள அலெக்ஸாந்திரியா நகர் திருச்சபையை இவர் நிறுவினார் என்ற பாரம்பரியமும் உண்டு. காப்டிக் தல திருச்சபையும் புனித மாற்குவின் விழாவை இன்று கொண்டாடுகின்றது.

ஏப். 29 புனித சியான்னா கேத்தரின் ‡ கன்னியர், மறைவல்லுனர் (1347-1380)

  இப்புனிதை இத்தாலியில் சியான்னா நகரில் கி.பி 1341 இல் பிறந்தார். சிறுவயதிலேயே பக்தி முயற்சிகளில் ஆர்வம் கொண்டிருந்தார். புனித தோமினிக்கின் 3‡ ஆம் சபையில் சேர்ந்து இறையன்பு, பிறரன்பு ஆகியவைகளில் சிறந்து விளங்கினார்.  
திருச்சபையின் ஒற்றுமைக்காக பெரிதும் உழைத்தார். திருத்தந்தையின் தலைமையை அனைவரும் ஏற்று வழிநடக்க வலியுறுத்தினார். இவரின் ஆன்மீகக் கருத்துகளை இவர் வாய்ப்பட சொல்லி , பிறகு அவை நூலாக அச்சிடப்பட்டன. இவரின் ஆழ்ந்த இறையியல் கருத்துகளுக்காக மறைவல்லுநர் என்ற பட்டம் இவருக்குத் தரப் பட்டது.1380 இல் உரோமையில் இவர் இறந்தார்.

ஏப்.30  புனித ஐந்தாம் பயஸ் ‡ திருத்தந்தை (1504-1572)

           இவர் இத்தாலியில் அலெக்சாந்திரியாவுக்கு அருகில் கி.பி. 1504இல் பிறந்தார். புனித தோமினிக்கன் சபையில் சேர்ந்து இறையியல் கற்றுக்கொடுத்தார். ஆயராகவும், கர்தினாலாகவும் 1566 இல் திருத்தந்தையாகவும் உயர்த்தப் பெற்றார். திரிதெந்தின் திருசங்க திருச்சபையில் தொடங்கிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தினார். மறைபரப்புப் பணியை ஊக்குவித்து, திருவழிபாட்டு முறைகளை சீர்படுத்தினார். 1572 இல் இப்புனிதர் இறந்தார். 

No comments:

Post a Comment

Ads Inside Post